Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 22.1

அதிகாலை கொஞ்சம்  அழகாகத்தான்  விடிந்தது சீதாவிற்கு மகனின் அழைப்போடு , “அம்மா எல்லாம் ஒகே தான” என்று காலையிலே அழைத்து விசாரித்துவிட்டான்.

“ஒன்னும் பிரச்சனை இல்லப்பா நீ கவலைப்படாம வந்து சேரு , என் புள்ளய கல்யாண கோலத்துல பாக்க கண்ணெல்லாம் பூத்து இருக்கு”  என்ற வார்த்தைகள் தான் இறுதியாக மகனிடம் அவர் பேசியது.

“நீ இந்த மாதிரி பொம்பளைன்னு நாங்க நினைக்கல,  எவ்ளோ நாளா இப்படி பண்ணிட்டுருக்க”  என்ற சங்கரன் நாயர் குரலில் அனைவரும் தரவாடு வீட்டின் முன்னே கூடினர்.

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டார் , என்ன தான் வேணும் இவர்க்கு” சுறு சுறு என்று ஏறிய கோபத்தோடு அங்கே வந்தார் சீதா



Advertisement

அங்கு முன்பே சங்கரனின் ஆட்கள் சிலர் நின்றனர்  “என்ன பிரச்னை நான் இப்போ என்ன பண்ணேன்” என்று முன்னே வந்தார்.

“என்ன பன்னியா ?  இவனுக்கு இங்க என்ன வேல” என்றார் அங்கு சங்கரனின் ஆட்களின் பிடியில் இருந்த ஒருவனை காட்டி.

“யார் இவன்” என்றார் சீதா.

Advertisement

“நல்லா  நடிக்குறியே , இவன் யாருனு உனக்கு தெரியாது அத நாங்க நம்பணும்ல!!” என்க.

Advertisement

விழிகளை இறுக மூடியவர் தன்னை சமன்படுத்தி “வளவளன்னு பேசாம என்ன விஷயம் சொல்லுங்க” என்று சீதா எரிச்சலை காண்பிக்க.

“இவன் இப்போ உன் வீட்ல உங்க ரூம்ல இருந்து கதவை தொறந்துட்டு வரான் , உன் புருஷன் வீட்ல இல்ல , பாதி நாள் வேலைக்கு போயிட்டு ராத்திரி வரதில்ல அப்போ அடிக்கடி இது நடக்குதா ? இந்த கதவு கூட அப்படி தான் உடைஞ்சதா” என்க.

சீதாவிற்கு சர்வமும் நடுங்கியது “என்ன பேசுகிறான் இவன்” என்று.

Advertisement

“என்ன பேசுற சங்கரா யோசிச்சு பேசு” என்று சத்தம் இட்டார் ஷ்யாமா.

“நான் என்ன தப்பா சொல்றேன் , இந்த  ரவி அந்த ரூம்ல இருந்து வெளில வந்ததை இவங்களும் பார்த்தாங்க” என்றான் அவனுடன் நின்றவர்களை காண்பித்து.

அதில் ராஜீவும் இருந்தான் , உண்மையில் அவன் வந்தபோது  சீதாவின் அறையில் இருந்து ஒருவன் வெளிவருவதை பார்த்தான்.

ஆனால் அதில் எத்தனை உண்மை என்று அவனுக்கு தெரியவில்லை, சீதாவை தப்பாக அவனால் நினைக்க முடியவில்லை , அவர் அப்படி இல்லையே  இதில் ஏதோ தவறு உள்ளது என்று அவனிற்கு தோன்றியது.

“சித்தப்பா என்னனு விசாரிக்கலாம் தெரியாம ஏன் பேசணும்” என்றவனை தடுத்துவிட்டு அலறிக்கொண்டிருந்தார் சங்கரன் , யாரையும் பேசவே விடவில்லை .

“போதும் நிறுத்துங்க , மரியாதை கெட்டுரும் என்ன பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு உங்களுக்கு”  என்ற சீதாவின் குரலை தடுத்தது நீலவேணியின் குரல்.

“என்னடி நடிக்கிற , உன் பவுசுதான் அங்கேயே தெரிஞ்சுதே எனக்கு , என் புள்ள வீட்ல இல்லாத நேரம் இதைத்தான் செய்ற , என்னையும் அதனாலதான் இவ்ளோ நாள் இங்க வர விடல”.

“ஐயோ என் மகன் இப்படி ஏமாந்து போனானே” என்று அவர் பங்கிற்கு பேச.

எங்கும் கூச்சல் குழப்பம் , கதவை உடைத்தது சங்கரன் தான் , வேலை நடக்கும்போதே கதவை எளிதாக திறக்க வழி ஏற்படுத்தினான் , அதன் வழி அதிகாலை உள்ளே நுழைந்த சங்கரனின் ஆள் அவன் போன் செய்து வர சொன்ன நேரம் வெளியில் வந்தான்.

மொத்தத்தில் சீதாவை தப்பானவளாக காண்பித்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் , பிரகாஷ் தனக்கு  எதிராக  ஏதேனும் வழக்கு தொடர்ந்தால் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதை எளிதாக உடைத்துவிடலாம் , இதை தான் சங்கரன் யோசித்தது.

ஆனால் பல முறை இந்த வார்த்தைகளை மாமியாரின் வாயால் கேட்டவர் இப்பொழுது இத்தனை ஆட்கள் கூடி , நிற்க தன் மேல் களங்கம் சுமத்தப்பட தடுமாறி நின்றார்.

இரவு வெகு நேரம் சென்றுதான் உறங்கினாள் அம்மு  , காலையில் எழ முடியவில்லை வெளியே கேட்ட கூச்சலில் தூக்கம் களைய கீழே இறங்கிவந்தாள்.

அத்தனைபேர் மத்தியில் சஞ்சலத்தோடு நின்ற சீதாவாய் பார்த்தவள் “அம்மாயி” என்று அவரின் அருகில் செல்ல , சங்கரன் அவளை பிடித்து கன்னத்தில் அறைந்தான்.

அதில்  தெறித்து போய் அவள் விழ “அம்மு” என்று சீதாவும் அப்பொழுதுதான் எழுந்து வந்த வாஞ்சியும் அருகில் வர “என்ன பண்றீங்க” என்ற ராஜீவ் அவளை தூக்கினான்.

“அம்மு என்னாச்சு” என்று அவளின் கன்னம் பற்ற சிவந்து விரல் தடம் பதிந்திருந்தது  அங்கே.

பயத்தில் உறைந்து நின்றாள் அவள்  “என்னம்மா நடக்குது இங்க” என்றான் வாஞ்சி , அம்முவை பார்த்த சீதா  “அம்முக்குட்டி அம்மாயிய நீ நம்புறியா” என்க.

எதற்கு என்றே தெரியாமல் “ஆம்” என்று தலை ஆட்டினாள் அம்மு, உன் புருஷனையும் நண்பனையும் நல்லா பாத்துக்கோ , நீ இல்லமா என் புள்ள இருக்க மாட்டான்”.

“உன்ன நம்பி தான் போறேன்” என்க.

என்ன சொல்கிறார் என்றே புரியாமல் அவள் நிற்க , ஷ்யாமா வந்து அவளை பிடித்துக்கொண்டார் ஆறுதலாக.

சில நொடிகளில் திரும்பி வந்தார் சீதா , தண்ணீரில் முங்கி  எழுந்த போல நீர் சொட்டியது , அவர் வெளியில் வந்தபோது தான் புரிந்தது அது தண்ணீர் அல்ல திருமண தேவைக்காக வண்டிக்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோல் என்று.

“சங்கரா… நான் தப்பானவளா இருந்தா என்னோடையும் என் புருஷனோடயும் எங்க வம்சம் அழிஞ்சு போகட்டும் , நீ தப்பானவனா இருந்தா உன்னோட உன் வம்சம் அழிஞ்சு போகட்டும்” என்றவர்.

அப்படியே  கொளுத்திக்கொள்ள “அம்மா” என்று உடனே அருகில் சென்ற வாஞ்சி சீதாவை அணைத்துக்கொண்டான் .

அனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து விட  “அம்மாயி”  என்று ஓட பார்த்த அம்முவை ஷ்யாமா பிடித்துக்கொண்டார்.

நாளை திருமணம் என்பதால் உத்தமப்பாளையத்தில் இருந்து காலையிலே வந்த பிரகாஷ் பார்த்தது பெட்ரோலில் குளித்து நின்ற மனைவியை.

அருகில் செல்வதற்குள் அவர் தீ வைத்துக் கொள்ள , பிரகாஷும் மனைவியையும் மகனையும் ஓடி சென்று அணைக்க , அந்த நொடி சுழல தொடங்கினார் சீதா.

அந்த வேகத்தில் ஒரு பக்கம் மட்டும்  எறிந்த பிரகாஷ் தூணில் தட்டி தெறித்து தலை கல்லில் அடித்து விழுந்தார் , அனைத்தும் முடிந்துவிட்டது.

ஓடி வந்த பலரும் தீயை அணைக்க முயற்சிக்க , இருவரின் எறிந்த உடல் மட்டுமே மண்ணில் விழுந்தது .

சரியாக அந்த நேரம் வானம் உடைந்து சிந்தியது கண்ணீரை மழையாக.

னக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது

மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,

 

யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல

உள்ளே உயிர் சொட்டுச்சொட்டாக

கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை,

 

உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை

பிரிவு பிரிவென எல்லோரையும்

நேசித்து நேசித்து பிரியும் வதை,

 

உயிர் போவது கூட விடுதலைதான் போல், ஆனால்

யாரோ இறப்பதை சகிப்பது

இறக்கும்வரை வலிக்கும் வதை,

 

மனம் சகிப்பதேயில்லை பிரிவை

மனதிற்கு அன்பு காட்ட மட்டுமே தெரிகிறது

அன்பில்லாத இடத்தில் மனம் பாவம்

சிறுபிள்ளையைப்போல அழுது விடுகிறது,

                                                                                                                    வித்யாசாகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!