“வேண்டாம்” என்று வந்துவிட்டால் மறந்துவிடும் உறவா கார்தும்பி என்பவள் அவனுக்கு , அவளின் குடும்பத்தின் மீது உள்ள கோபத்தை அவளிடம் காண்பித்து விடுவோமோ என்று அவனுக்கு பயம் வந்தது.
Advertisement
தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் அவளை இதை வைத்து காயப்படுத்துவார்கள் , இப்படி பல கோணங்களில் அவன் எப்பொழுதும் அவளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
நினைவுகளில் இருந்து மீண்டவள் ஜன்னலின் வழியே காயலை பார்த்திருந்தாள் , அவளின் விருப்பப்பட்ட இடம் , முதலில் அவளின் தாயின் அறை பிறகு அவளின் நந்தேட்டனின் அறையாக இருந்த தரவாடு வீட்டின் முதல் தளத்தின் அறை.
கார்தும்பியின் சொத்துக்கள் தவிர மற்ற அனைத்தையும் முடக்கி இருக்க இப்பொழுது அனைவரும் இந்த வீட்டில் தான் இருந்தனர்.
ஜெகனை பற்றிய சிந்தனையில் இருந்தாள் , கோபம் என்று இல்லை ஒரு சின்ன வருத்தம் அவன் மேலே , தன்னை வேண்டாம் என்று விட்டு சென்றானே.
அவனை பிரிந்து அவள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் இப்பொழுது கண் முன்பே நிழலாடியது.
அம்முவிற்கு இரவு உணவை கொடுத்த ஷ்யாமா அவளை தன்னுடன் படுத்துக்க கொள்ள சொல்ல , தன் அறைக்கு போகவேண்டும் என்று கூறினாள் .
“சரி” என்றவர் அவளை மேலே அவள் அறைக்கு அனுப்பிவிட்டு , கீழே லக்ஷிமியம்மாவின் அறையில் உறங்க சென்றார் , அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் ஆனதில் இருந்து லக்ஷியம்மாவின் அறையில் தான் ஷ்யாமா உறங்குகிறார்.
ரெம்யா வேறு அறையில் உறங்க சென்றாள் , அனைவரும் சென்ற பிறகும் ஹாலிலே அமர்ந்திருந்தான் ராஜீவ்.
ஹரி மற்றும் ஜெயனின் அலைபேசிக்கு பல முறை அழைத்தும் அழைப்பு எடுக்க படவில்லை , உள்ளே குடைந்து கொண்டே இருந்தது , ஏதோ தவறாக நடக்க போவதாக அவர்களை பற்றிய தகவல் அறியாமல் உறங்க முடியும் என்று தோன்றவில்லை.
மெல்ல ஹால் சோபாவில் அறியாமல் கண் அயர்ந்த நேரம் , அவன் போன் ஒளி எழுப்பியது , புதிய நம்பரில் இருந்து அழைப்பு உடனே எடுத்துவிட்டான்.
அந்த பக்கம் கூறிய செய்தியின் அதிர்ச்சியில் விழிகள் நிலைக்குத்தியது , ஒரு நொடி என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.
பாட்டியின் அறையில் சென்று பார்க்க தாயும் பாட்டியும் நல்ல உறக்கத்தில் , யாரிடம் சொல்லி செல்ல என்ற பதட்டத்தில் இருந்தவன் யோசிக்காமல் அம்முவின் அரை கதவை தட்டினான்.
“இந்த நேரம் யார்” என்று பதட்டத்தோடு வந்து கதவை திறந்தவள், கண்டது அதீதமான பரபரப்பில் நின்ற ராஜீவை, அவள் அவனையே பார்த்திருக்க.
“அம்மு ஒரு அவசரமான வேலை உடனே போகணும், எல்லாரும் நல்லா தூங்குறாங்க காலைல நீ அம்மாகிட்ட சொன்ன போதும் நான் அப்பறம் அம்மாக்கு பேசுறேன்” என்றவன் வேகமாக திரும்ப.
“அண்ணா” என்றவள் அழைப்பில் அப்படியே நின்றான் “ஏதாவது பிரச்னையா” என்றவளை திரும்பி பார்த்தவன் , ஒரு நொடி யோசித்து “ஒன்னும் இல்லை , நீ கீழ வந்து கதவை பூட்டிக்கோ” என்றவன் கீழிறங்கினான்.
அவனின் பின்னே சென்றவள் அவன் போகும் வரை பார்த்திருந்து கதைவை அடைத்து மேலேறினாள் , என்னவாக இருக்கும் அதும் இந்த நேரம் என்று யோசனையாக இருந்தது.
அதற்க்கு மேல் உறக்கம் வரும் என்று தோன்றவில்லை அறையில் நடைபழகி உடல் சோர்வடைய மெல்ல படுக்கையில் விழுந்தாள்.
காலை சூரிய வெளிச்சத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் , படியில் நின்று எட்டி பார்க்க அடுக்களையில் சத்தம் கேட்டது “பெரியம்மா எழுந்து விட்டார்கள்” என்று வேகமாக பல் துலக்கி குளித்து கீழே சென்றாள் .
அவள் வந்த அரவம் கேட்டு திரும்பி பார்த்த ஷ்யாமா “வாடா” என்று அவள் கையில் டீயை வைத்தார்.
மெலிதான புன்னகையோடு வாங்கி கொண்டவள் “பெரியம்மா , அண்ணா எங்கயோ வெளில போனார் ராத்திரி , என்னனு தெரில உங்களுக்கு அப்பறமா போன் பண்றேன் சொன்னார்” என்க அவரை மீண்டும் கவலை சூழ்ந்தது.
“இன்னும் முடியவில்லையா சோதனை” என்று மலைப்பாக இருந்தது.
“பெரியம்மா கோவிலுக்கு போயிட்டு வரவா” என்றாள் அவரிடம், கிருஷ்ணனை பார்த்தே வருடங்கள் ஆகிவிட்டது.
அவருக்கும் போகவேண்டும் என்று தோன்றியது , லக்ஷ்மியம்மா நல்ல உறக்கத்தில் இருக்க கதவை பூட்டிவிட்டு இருவரும் ஆலயம் நோக்கி சென்றனர்.
அவன் அழைத்த போது பேசமாட்டேன் என்று ஆடம் பிடித்தாள் அது அவனை வெறுத்ததாக ஆகி விடுமா.
“நந்தேட்டனை பத்திரமா என்கிட்டே கொண்டு வந்து சேர்த்துடு” என்று மட்டுமே வேண்டிக்கொண்டாள் , அவனை காண வேண்டும் என்று மனம் முழுதும் ஏக்கம் நிறைந்து கிடந்தது.
அவன் அருகில் இருந்த போது “கார்தும்பியாக” அவனுடன் இருக்க முடியாமல் போனதே என்று வருந்தினாள்.
தொழுது பிரசாதம் வாங்கி திரும்பி வீடு வர , வாசலில் நின்றது துறைசெல்வத்தின் கார் , அவர்களை எதிர்பார்க்காத ஷ்யாமா ஒடி சென்று மாதவியின் கையை பற்றிக்கொண்டு மூவரையும் பார்த்து “வாங்க வாங்க , எப்போ வந்தீங்க சொல்லவே இல்லை” என்று வேகமாக கதவை திறந்தார்.
அனைவரும் உள்ளே செல்ல அம்மு ஷ்யாமாவின் பின்னே நின்று கொண்டு அவர்களை பார்த்திருந்தாள்.
“அம்முக்குட்டி எங்களை மறந்துட்டியா” என்று மாதவியின் குரலில் அவரையயும் ரூபாவையும் மாறி மாறி பார்த்தவள் மெல்ல அவர்களின் அருகில் செல்ல , அவளை அப்படியே அணைத்துக்கொண்டார் மாதவி.
அம்முவிற்கு அழுகை வந்தது , ரூபாவையும் கட்டிக்கொண்டாள் துரைசெல்வதை பார்க்க “நல்லா இருக்கியா தாயி” என்றவர் அன்பில் விழிகள் நிறைய வேகமாக தலை ஆட்டினாள்.
“விடியக்காலையிலே கிளம்பிட்டோம் , புள்ள இங்க பத்திரமா வந்து சேர்ந்தாச்சுனு கிஷோர் போன் பண்ணி சொன்னார்” என்க ஷ்யாமாவிற்கு மனம் நிறைந்தது.
“நீக்க போய் ரெப்ரெஷ் பண்ணிக்கோங்க சாப்பிடலாம்” என்ற ஷ்யாமா அவசரமாக அடுக்களை செல்ல , அம்மு காண்பித்த அறைக்கு சென்றனர் .
சிறிது நேரத்திலே மாதவியும் ரூபாவும் கிட்சன் வந்து அவர்களுக்கு உதவ நின்று கொண்டனர் , அனைவரும் கதைகள் பேசிக்கொண்டே வேலைகளை முடித்து காலை உணவு உண்டனர்.
இடையில் லக்ஷ்மியம்மாவை பார்த்து நலன் விசாரித்து அவருடன் சிறிது நேரம் இருந்தனர்.