Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -3

“எஸ் மைசெல்ப்… வருண் ஜெகன்நாதன் கமாண்டர் இந்தியன் நேவி” என்று நெஞ்சை நிமிர்த்தி அவன் சொன்ன தோரணையில் நேவியில் சேர்ந்திருக்கலாமோ என்று தோன்றிவிட்டது இன்ஸ்பெக்டருக்கு.

“உங்க மேல கம்பளைண்ட் கொடுத்திருக்காங்க”.

“எதிர்பார்த்தேன்” என்றவன் அவருக்கு சோபாவை காட்டினான்.



Advertisement

“நா யாரையும் கடத்தல இன்ஸ்பெக்டர், இவங்க குடும்பத்தோட மூத்த உறுப்பினர் லக்ஷ்மிகுட்டி அம்மாவோட சம்மதத்தோடு எங்கள் திருமணம் நடந்தது, அப்படியே கம்பளைண்ட் இருந்தாலும் அச்சுதன் நாயர் மட்டும் பேசலாம்” என்க அவர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“ஆனா அதுக்கு முன்னாடி இந்த டாக்டருக்கு சொல்லவேண்டியது கேட்டுருங்க” என்றவன் டாக்டரை  பார்க்க  “சார் நா ஒன்னும் பண்ணல, இவங்க ரெண்டு பேரும் தான் அப்படி பண்ண சொன்னாங்க” என்றான் அம்முவின் பெரியப்பா மற்றும் சித்தப்பாவை காட்டி.

“எனக்கு ஒன்னும் புரியல” என்றார் இன்ஸ்பெக்டர், “தெளிவா சொல்லுங்க டாக்டர் சார்” என்றார் துறை செல்வம்.

Advertisement

“சார் ஒரு ரெண்டு வர்ஷம் முன்னாடி அந்த பொண்ண என்னோட கிளினிக் கூட்டிட்டு வந்தாங்க, ரொம்ப டிப்ரஷன்ல இருந்தா, தற்கொலை முயற்சி செஞ்சதாவும் சொன்னாங்க, கவுன்சிலிங் குடுத்தா சரி ஆயிடும் சொன்னேன், ஆனா இவங்க ரொம்ப பிடிவாதமா அந்த பொண்ணோட மூளையை செயல் இழக்க செய்யணும்னு சொன்னாங்க” என்க அச்சுதன் அதிர்ச்சியாகி சகோதரர்களை பார்த்தார்.

Advertisement

ஜெகன்நாதன் பார்வை கிருஷ்ணன் நாயரின் மேல் அழுத்தமாக பதிந்திருந்தது.

“இவங்க சொல்றத கேட்டு நடக்குற ஒரு பொம்மையா அம்மு இருக்கணும்னு நினைச்சாங்க, மனநல காப்பகத்தில ரொம்ப வைலண்டா இருக்கிறவங்களுக்கு குடுக்குற மருந்து இது, அதோட பிரைன் செல்ஸ் வேலை செய்றத கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துற மெடிசினும் குடுத்தேன், அதால அம்மு எப்போவும் ஒரு மாதிரி மயக்கத்திலே இருப்பா, முழிச்சிருந்தாலும் தன்னை சுத்தி நடக்குறது அவ மூளைக்கு சரியா போய் சேராது”.

“பிரைன் செல்ஸ் மெல்ல அழியறதால பழைய நினைவுகள் மறைய வாய்ப்பிருக்கு” என்க, இருகைகளையும் இணைத்து நெற்றியில் வைத்து அழுத்தி விழிகளை இறுக மூடிக் கொண்டான் ஜெகன்நாதன்.

Advertisement

“நீயெல்லாம் ஒரு டாக்டரா, எவ்ளோ பெரிய பாவம் பண்ணிருக்க தெரியுதா? வாழவேண்டிய பெண்ணை  இப்படி நடை பிணமா மாத்திருக்க, காசு குடுத்தா நாய் வாலக்கூட நக்குவீங்களா டா” என்றார் காவலர் உக்கிரமாக.

“அந்த பொண்ணுக்கு சரி ஆகுமா இல்லையா?” என்க, “இந்த மருந்தை குடுக்கறத நிறுத்திட்டு முயற்சி பண்ணினா மெல்ல நினைவு திரும்ப வாய்ப்பிருக்கு” என்றான்.

“உன்ன இங்க வெச்சு விசாரிக்க கூடாது, இந்தாள ஜீப்ல ஏத்துங்க” என்றவர் சகோதரர்களை பார்த்து “ஸ்டேஷன் வாங்க உங்களையும் விசாரிக்கணும்” என்றார்.

“மிஸ்டர்.வருண் கேஸ் சம்பந்தமா வர வேண்டியது இருக்கும், உங்க டீடெயில்ஸ் தேவை படுது” என்க.

அவனின் மாமா அணைத்து விவரங்களையும் கொடுத்தார், “நீங்க சொல்ற நேரம் என்னால வரமுடியுமா தெரியல, மாமா வருவார்” என்றான்

“ஷுயர் , என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்றேன்” என்று கைகுலுக்கி விடைபெற்றார்.

  

“நாளைக்கே ஊருக்கு போகணும் மாமா” என்றான்.

“சரிப்பா நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு , எதுனாலும் கூப்பிடு” என்றவர் பக்கத்துக்கு அறைக்கு செல்ல, ரூபா அவனிடம் “மாமா அம்முக்கு  டிரஸ் உங்க பேக்ல வெச்சுருக்கேன்” என்க  “தேங்க்ஸ் ரூபா” என்றான்.

அவள் புன்னகைத்துவிட்டு அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுவிட்டாள்.

போலீஸ் ஸ்டேஷன் சென்றுகொண்டு இருந்த கிருஷ்ணன் நாயருக்கு மகனிடம் இருந்து இதோடு முப்பது அழைப்புகள் வந்து விட்டது, அடுத்த அழைப்பை எடுத்தவர் அவனை போனிலே கடித்துக் குதற “பேசி முடிச்சுடீங்களா, இந்த தடவ என் வாழக்கையை தொலைக்க நான் தயாரா இல்ல, நா அவ கூட அவ வீட்டுக்கு போறேன், உங்கள நீங்க பாத்துக்கோங்க” என்று கூறி கட் செய்து விட்டான்.

“என்ன பேசுகிறான் இவன், இங்கு என்ன பிரச்சனை நடக்கிறது இவன் புது மனைவியின் பின்னே போகிறானே” என்று ஆத்திரமாக வந்தது.

இந்த பிரச்னையில் இருந்து எப்படி வெளியேற என்று தெரியவில்லை, இப்பொழுது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பெண்களுடன் தொடர்பிருப்பதாக கேவலமாக பேசுகிறார்கள், அதை எப்படி சரி செய்ய என்றும் புரியவில்லை.

மொத்தத்தில் மண்டை உடைகிறது, கட்டிக்காத்த குடும்ப மானம், மரியாதை கௌரவம்  அனைத்தும் கண்முன்னே சீட்டுக்கட்டு போல சரிகிறது, இப்படியே வண்டியை எங்காவது மோதி மொத்தமாக போய் சேர்ந்து விடலாமா என்று தோன்றியது.

கதவை அடைத்துவிட்டு அவளின் அருகில் வர, இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள், அருகில் அமர்ந்து மென்மையாக விரல் கொண்டு அவள் முகத்தை வருடினான், இடது பக்க காதில் கம்மலுக்கு மேலே  மிளகு ஒன்றை ஓட்ட  வைத்ததை  போல இருக்கும் மச்சத்தில் விரல்கள் நிலைக்க அதை மீண்டும் மீண்டும் வருடிக் கொண்டிருந்தான்.

மற்றவர்களை போல முதல் முறை அருகில் பார்த்தபோது அவனும், “அம்மு உன்னோட மேல் காதுல ஒரு பக்க கம்மல் தான் இருக்கு” என்க “நீங்களும் ஏமாந்துடீங்களா! அது கம்மல் இல்ல மச்சம்” என்றவள் அவன் விரலை பிடித்து அதில் வைக்க, முதல் முறை அவளை தீண்டிய உணர்வில் அவனுக்கு மேனி சிலிர்த்தது.

அவளுக்கு அதெல்லாம் இல்லை, ஒருவனின் மனதை கையேடு கொண்டு செல்வதை அறியாமல் துள்ளி ஓடினாள் புள்ளி மானாக, அதன் பிறகு எத்தனையோ முறை மச்சத்தை வருடும் போது அந்த உணர்வில் மயங்கி விழிகள் மூடி “நந்தேட்டா” என்று சங்கீதமாக ஒலிக்கும் அவள் அழைப்பில் உண்மையில் அவன் அல்லவா உருகி கரைந்து கொண்டிருந்தான்.

அவளிடம் மெல்லிய அசைவு , எப்படி எதிர்கொள்ள! என்ன கேட்பாள் என்று அவனுக்கு மனம் அடித்துக்கொள்ள தொடங்கியது, அவளை விட்டு கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தான்.

மெது மெதுவாக முயன்று விழிகளை பிரித்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை, அந்த சூழலை உள்வாங்கவே சிறிது நேரம் தேவைப் பட்டது, தன்னுடய இடம் அல்ல, தினமும் பார்த்து பழகிய முகம் இல்லை, அழுகை வர உதடு பிதுங்கி விழிகளை நிறைத்தது கண்ணீர்.

“அம்மு” என்று அவள் அருகில் செல்ல கட்டிலின் மூலையில் ஒன்றினாள், “அம்மு என்ன பாரு, என்ன பாத்து பயப்படாத டி வலிக்குது” என்றான் குரலில் வலியை சுமந்து.

அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த விழிகள் மெல்ல மெல்ல நிதானம் கொண்டு அவன் முகத்தில் நிலைத்தது, அந்த முகத்தின் பரிதவிப்பு என்ன உணர்த்தியதோ “நீங்களே அறியோ எனிக்கு, எனிக்கு எல்லாரையும் மறந்து போய் (உங்களை தெரியுமா எனக்கு, எனக்கு எல்லாரையும் மறந்து போய்டுச்சு )” என்றவள் விழிகளில் நிறைந்து நின்ற நீர் கன்னம் தொட்டு கீழிறங்க, அவன் இதயம் விம்மியது அந்த வேதனையை அவனால் தாங்க இயலவில்லை, அவளை தன்னோடு இறுக்கி அனைத்துக் கொண்டான்.

“இந்த உலகத்துல உன்ன விட நல்லா என்ன தெரிஞ்சவங்க யாரு டி இருக்கா” என்றவன் குரல் உடைய, நெஞ்சை அடைத்தது.

தலை உயர்த்தி அவனை பார்த்தவள் “விஷக்குன்னு (பசிக்குது)” என்க முற்றிலும் உடைந்துவிட்டான்.

நிறைந்த விழிகளை துடைத்துக் கொண்டவன், உடனே உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு, அவளை பாத்ரூம் அழைத்து சென்று துணிகளை அங்கே வைத்தவன் குளிக்க சொல்ல “தலை குளிக்கனோ மேலு கழுகனோ (தலை குளிக்கனுமா உடம்பு மட்டும் குளிக்கணுமா)” என்றாள்.

மருந்தின் வீரியம் அவளின் சிந்திக்கும் திறனை குறைந்திருப்பதை உணர்ந்தவன் கை முஷ்டிகள் கோபத்தில் சுவற்றை குத்தியது, அவள் விரண்டு பார்க்க “ஒன்னும் இல்ல” என்றவன், “மேல் மட்டும் குளி, நா இங்க தான் இருப்பேன்” என்றவன் பால்கனியில் சென்று நின்றுகொண்டான்.

குளித்து வந்தவளை பார்த்தவன் வேகமாக சென்று துண்டு எடுத்து தலை துவட்டினான் “ஏண்டா? தலை குளிக்காத சொன்னேன்ல?” என்க அவன் சொல்லுவதை உள்வாங்கியவள் “மறந்து போய்” என்றாள்.

“இறைவா இன்னும் எத்தனை நாட்கள் இந்த வலியை தாங்க” என்று எண்ணியவன் மனம் தளர்ந்தது, இடியாப்பத்தை அவனே ஊட்டி விட கொஞ்சம் நன்றாக உண்டாள், பால்கனியில் கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்த்தவள் மீண்டும் சென்று படுத்துவிட்டாள்.

அவள் குடும்பத்தின் ஆண்களால் தன் வாழ்க்கையின் இன்றியமையாத இரண்டு உயிர்களை இழந்து நிற்கிறான் , ஒருவர்  நான்கு வருடமாக படுக்கையில் விழுந்து கிடக்கிறார், இன்று உயிரானவள் தன்னையே மறந்து நிற்கும் நிலை.. அனைத்தும் அவர்களால்.

“அம்முவின் இந்த நிலைக்கு நீயும் ஒரு கரணம் அதை மறந்து விடாதே” என்றது மனசாட்சி, ஆம் அவளை ஒதுக்கி வைத்தான் அவளின் குடும்பம் இழைத்த அநீதிக்கு அவளை தண்டித்தான்.

அவனுக்காக அவன் தாயிடம் தமிழ் கற்றுக் கொண்டாள், மலையாளம் கலந்து கொஞ்சி கொஞ்சி அவள் பேசும் தமிழை கேட்க உள்ளம் ஏங்கியது.

 

தனி உலகினில்…
உனக்கென நானும்…
ஓா் உறவென…
எனக்கென நீயும்…
அழகாய் பூத்திடும்…
என் வானமாய்…
நீயேத் தெரிந்தாயே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!