Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.2

அவனுக்கு கொஞ்சம் பயமாகவும் கலக்கமாகவும் இருந்தது , எப்படி தங்குவாள் இப்பொழுதே ஒன்றும் சாப்பிட முடியவில்லை மிகவும் சோர்ந்து விடுகிறாள் , இதில் தனிமையும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும் என்று யோசனையாகவே இருந்தது.

அவள் விரும்பி செய்யாமல் இருப்பானா , கிஷோரின் தாயிடம் கூற அடுத்த நாளே பெட்டி நிறைய ஆன்ஞலி சக்கையோடு வந்துவிட்டார் அவளை பார்க்க.

இரு தினங்கள் இங்கயே இருந்து விட்டு சென்றார் , மருமகளையும் பார்த்த போல ஆயிற்றே .

ஷ்யாமா அவளுக்கு அதிகம் கொடுக்கவில்லை மிக மிக சிறிதாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தார் , அதன் விதைகளை கூட வறுத்து உண்ணலாம் அதுவும் கொஞ்சமாக கொடுத்தார்.



Advertisement

இது பலா பழத்தின் வேறு ஒரு வகை மிக சிறிதாக இருக்கும் , உள்ளே திராட்சை போல பழங்கள் கொத்து கொத்தாக இருக்கும் ஆரஞ்சு நிறத்தில், மிகவும் சுவையானது மருத்துவ குணங்கள் நிறைந்தது.

காலை வேலை அவளுக்கு மசக்கை படுத்தி எடுப்பதால் மாலை இருவரும் கோவில் சென்று வந்தனர் , அழகான பேபி பிங்க் நிறத்தில் பட்டியாலா உடை இளம் சிகப்பு நிற எம்பிராய்டரி பூக்கள் சிதறி கிடந்தது.

தளர பின்னல் இட்டு மல்லிகை சூடி நெற்றியில் சந்தனத்தோடு குங்குமம் என்று மனதை கொள்ளை கொண்ட மனைவியை மடியில் இருத்தி “தும்பி கவனமா இருந்துபிய்யா” என்க.

Advertisement

“ம்ம்” என்றாள் குரலே வராமல் , அதற்க்கு மேல் என்ன சொல்ல அவளிடம் , அவனுக்கு தெரியவில்லை பிறை நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து அமைதியாக சில மணித்துணிகள் கடந்தது.

Advertisement

காரில் ஏறுபவனை நிறையவா வழியவா என்ற விழிகளோடு அனுப்பிவைத்தாள் ,அவன் சென்று ஒரு வாரத்தை அழுகையில் கரைத்தாள் , தூணிலும் துரும்பிலும் அவன் எனும் நிலை , மெல்ல மெல்ல தன்னை தேற்றிக்கொண்டாள்.

அவன் அழைப்புகளுக்காக காத்திருந்து ஆசையாக பேசினாள் , மருத்துவர் கூறியதை மிக சிரத்தை எடுத்து செய்தாள் , அனைவரும் அவளை ஒரு ராணியை போல தாங்கினார் , கொஞ்சம் மசக்கை பிரச்சனை நின்றதும் ரூபாவுடன் மறுவாழ்வு மையத்திற்கு செல்ல தொடங்கினாள்.

கிஷோர் அல்லது  ராஜீவ் அழைத்து சென்று மீண்டும் அழைத்து வந்தனர், அங்கு மேற்பார்வை அனைத்தையும் ஒரு கட்டத்தில் அவளே கவனிக்க தொடங்கினாள்.

Advertisement

கணவனுக்கு காண்பிக்க புகைப்படங்களை சேகரிக்க தொடங்கினாள், குழந்தை முதல் முறை உதைத்தும் அந்த நொடியை குறித்துவைத்தாள், இந்த நாளில் இப்படி நடந்தது என்று அதை புகை படமாக பத்திரப்படுத்தினாள்.

வளைகாப்புக்கு அணைத்து ஏற்பாடுகளும் செய்து துரைசெல்வம் மிக   சிறப்பாக செய்தார் , இனி இப்படித்தான் கணவன் வேலைக்கு செல்கையில் தான் தைரியமாக இருந்து அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதை திடப்படுத்தி இருந்தாள்.

என்றாலும் வளைக்காப்புக்கு வந்துவிடுவானா என்று ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளே முணுக் முணுக் என்று ஒளிர்ந்து கொண்டிருந்தது , வரவில்லை..

வளைகாப்பு சடங்குகள் மலையாளிகளுக்கு கிடையாது, பலகாரங்கள் மட்டும் கொடுத்து பெண்ணை தாய் வீடு அழைத்து வருவர்.

இந்த சடங்குகள் அவளுக்கு புதுமையாக ஆர்வமாக இருந்தது , வெகு நாட்களுக்கு பிறகு அன்று அனைவர் முன்பும் அவள் கண்கள் கலங்கியது, அந்த நொடியில் கணவன் அருகில் இருப்பது எந்த பெண்ணும் ஏங்கும்  விஷயம் தானே ஆனால் தன்னை மீட்டுக்கொண்டாள்.

கிஷோர் புகைப்படங்களாக எடுத்து தள்ளினான் , தாய்மையின் மிளிர்வோடு கொஞ்சமாக உடல் எடை கூடியிருக்க கன்னங்கள் சிறிதாக உப்பி பார்க்கவே கொள்ளை அழகாக இருந்தாள் , அண்ணனுக்கு காண்பிக்க வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

 வளைகாப்பு முடிந்து சடங்குக்காக மாதவியுடன் ஒரு வாரம் தங்கி இருந்து மீண்டும் வீடு வந்தாள் , வந்த அடுத்த நாளே பிரசவவலி காண அந்த நாள் முழுதும் வலி விட்டு விட்டு வந்தது , வெகுவாக தன்னவனை தேடியது அவளுக்கு.

அவன் அணைப்பில் இருந்தால் போதும் இந்த வலிகள் காணாமல்  போகும் என்று நம்பியது மனது , மாலை நெருங்கும் வேலை ஆண் மகவை பெற்றேடுத்தாள்.

வீடியோ காலில் ப்ரகாஷிற்கு குழந்தையை காட்டினான் ராஜீவ், மகிழ்ச்சியில் விழிகள் நிறைந்து வழிந்தது அவருக்கு , முதலில் லக்ஷ்மியம்மாவின் கையிலே கொடுத்தனர் பிள்ளையை , அந்த முதியவரின் மனம் நிறைந்து தளும்பியது .

அம்முவை கைகளில் ஏந்திய நொடி நினைவில் வந்தது அவருக்கு, சுகப்பிரசவம் ஆகையால் மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்துவிட்டாள், தாயையும் சேயையும் அப்படி தாங்கினர் அனைவரும்.

வீடே ஆனந்தத்தில்  நிறைந்த போல குழந்தையின் அழுகுரல் அந்த வீட்டில் சங்கீதமாக , சரியாக இருப்பது நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்தான் , காரில் இருந்து இறங்கி நேரே தும்பி இருக்கும் அறைக்கு ஓடினான்.

கொஞ்சம் முன்புதான் குளித்துவிட்டு குழந்தைக்கு பசியாற்றி முடித்தாள், முடியை விரித்துவிட்டு கட்டிலில் பிள்ளையை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள் , அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க கணவனை கண்டவுடன் உயிரெல்லாம் துடித்தது .

சட்டென்று எழுந்து அமர “தும்பிமா.. பாத்துடா மெதுவா” என்று அவன் பதறி அருகில் செல்ல , அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள் இறுக்கமாக , அவனுக்கு பயமாக இருந்தது அவளுக்கு வலிக்குமோ என்று.

“தும்பி வலிக்க போகுதுடா” என்க அவன் நெஞ்சில் டாட்டூ பகுதியில் அழுத்தமாக கடித்து வைத்தாள் , அவனும் அணைத்துக்கொண்டான்.

சில நொடிகளில் அவன் மகன் தன்னை கவனிக்கவில்லை என்று கோபம்கொண்டு சினுங்க “அச்சோ என் ராஜாவை நான் பாக்கலயா….” என்று மகனை அள்ளிக்கொண்டான்.

பால் மனம் அந்த அறையை நிறைத்தது , மகனை அள்ளி ஆசை தீர கொஞ்சினான் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் மனைவிக்கு அனைத்தையும் அவனே செய்தான் , நொடியும் அவளை பிரியாமல் முடிந்தவரை இருவரையும் அவனே பார்த்துக்கொண்டான்.

கட்டிலில் அமர்ந்து கணவனை ரசிப்பதே முழு நேர வேலையாக வைத்திருந்தாள் கார்த்தும்பி , சில நேரங்களில் கையை நீட்டி தூக்கு என்று அவள் காண்பிக்க அவளை கைகளில் அள்ளிக்கொண்டே சுற்றுவான்.

குழந்தையின் ஐந்தாம் மாதம் கிஷோர்  ரூபா திருமணம் வெகு விமர்சையாக நடந்தது , ஒரே மகளின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தி முடித்தார் துரைசெல்வம்.

கணவன் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ஊதா வண்ண பட்டில் அழகு பதுமையாக சுற்றிக்கொண்டிருந்தாள் கார்த்தும்பி , கணவனுக்கு கண்களை அவளை விட்டு எடுக்க முடியவில்லை.

கொஞ்சம் அவள் உடல் நிலை கருதி நெருங்காமல் இருக்க , பொறுமையை மிக சோதித்தாள் மனைவி , மாலை இளம் நீல நிற சில்க்க்காட்டான் புடவையில் இருந்தவளை கண்களாலே புடவையை மாற்றாதே என்றான்.

புரிந்தவள் கண்ணங்கள் செம்மை பூசியது , அவளும் பார்க்கிறாளே அருகில் வருவதும் , தயங்குவதும் , இறுக்கமாக அனைத்து நிற்பது இதழொற்றலோடு கடந்துவிடுவது என்று இருப்பதை.

இரவில் குழந்தைக்கு பசியாற்றி உறக்கியவளின் பின்னில் இருந்து அனைத்தவன்  “தும்பிமா ரொம்ப தேட வெக்குற,  எடுத்துக்கவா… உனக்கு வலிக்குமோனு பயமா இருக்குடி” என்றவனை தன்னோடு இன்னும் இறுக்கியவள்.

“எனக்கு ஒன்னும் இல்லை இப்போ எல்லாம் ஓகே, அப்படியே  வலிச்சாலும் பரவாயில்ல” என்றாள் அவன் செவிகளில்.

அதன் பிறகு அவன் அவளில் இசைமீட்ட , அவள் தங்க கொலுசின் முத்துக்கள் அதற்க்கேற்ப ராகம் இசைத்தது , நீண்ட பிரிவின் தாபத்தை இருவரும்  இரவெல்லாம் எரித்துக் கொண்டிருந்தனர்.

பத்து வருடங்களுக்கு பிறகு

“அடியே தலைவலிக்கு காப்பி கேட்டு அரைமணிநேரம் ஆச்சு , வந்த தலைவலி கூட டாட்டா காமிச்சுட்டு போய்டுச்சு இன்னும் காப்பி வரல” என்றவன் சத்தத்திற்கு சாவதானமாக கேசரியை வாயில் போட்டுக்கொண்டே திரும்பி பார்த்த ரூபா.

“அதான் தலைவலி போயிடுச்சில்ல இல்லாத தலைவலிக்கு எதுக்கு காப்பி” என்க.

அவளை ஒன்றும்  சொல்ல முடியாமல் பல்லை கடித்தான் , சொல்லித்தான் பாரேன் என்று கெத்தாக நின்றாள் அவள் , அவன் பின்னால் சோபாவில் அமர்ந்து டிவியில் ஒரு கண்ணும் மருமகன் மீது ஒரு கண்ணும் வைத்திருந்த தந்தையை பார்த்துக்கொண்டே.

அவன் முன்னே இஞ்சி ஏலக்காய் மணக்க நீட்டப்பட்ட சூடான டீயை பார்த்து திரும்பியவன் புன்னகையோடு நின்றிருந்த தும்பியை பார்த்து “அண்ணி தெய்வம் அண்ணி நீங்க” என்று அதை வாங்கிக்கொண்டு மனைவியை முறைத்து பார்க்க.

“போ போ” என்று சைகை செய்தாள் மனைவி , தும்பி சிரித்துக்கொண்டே துரைசெல்வத்திற்கு ஒன்று கொடுத்துவிட்டு வெளியில் சென்றாள் .

தரவாடு வீட்டின் வெளித்திண்ணையில் கல் தூணில் சாய்ந்தமர்ந்து , கால் நீட்டி விழிகள்மூடி அமர்ந்திருந்தான் ஜெகன் , அவன் வலப்பக்க தோளில் ஒரு விரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டு ஒரு கையால் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்  ஜெகன்நாதன் கார்தம்பியின் ஒன்றரை வயது குட்டி இளவரசி.

மனைவியின் கொலுசின் ஒளியில் அவள் வருகையை உணர்தவன் இதழ்கள் மெல்ல விரிய தன் வலப்பக்க கையை நீட்டினான் , அதை பற்றிக்கொண்டு அவன் அருகில் அவள் அமர மெல்ல விழிகள் திறந்து மனைவியை பார்த்தான்.

உறக்கத்தின் மிச்சம் இன்னும் விழிகளில் இருந்தது , ஆனாலும் முகம் ஒளிர்ந்தது பதினொன்றாவது திருமண நாள் இன்று அவர்களுக்கு, அதிகாலை கிருஷ்னன் ஆலயத்தில் பூஜைக்கு போய் வந்தனர்  அனைவரும்.

வெளியில் வந்த ஷ்யாமா உறங்கும் பேத்தியை வாங்கிக்கொண்டு “கொஞ்சம் நேரம் நானும் படுக்கிறேன் அம்மு, பாப்பா என்கூட இருக்கட்டும்” என்று அவர் அறைக்கு சென்றார்.

மாதவியும் ரூபா கிஷோரின் மூன்று வயது மகனை தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்கு உறங்க சென்றார் , துரைசெல்வமும் உறங்க செல்ல இளையவர்கள் மட்டும் அங்கே.

அதிகாலை நான்குமணி பூஜைக்கு சென்றதால் அனைவரும் சோர்வாக இருந்தனர் , இன்று முழுவதும் அருகில் இருந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு மூன்று வேலையும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர், ஆகையால் வீட்டின் பின்னே சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது.

இவர்களுக்கும் அதே உணவுதான் அதை ராஜீவ் மேற்பார்வை பார்த்துக்கொண்டான் , கொஞ்சம் முன்பு நடந்த சண்டை மறந்து ரூபாவும் கிஷோரும் கிச்சனில் கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

முற்றத்தில் இவர்களின் பிள்ளைகள் உறக்கத்தின் சாயலே இல்லாமல்  விளையாடிக் கொண்டிருந்தனர் , ராஜீவ் பாரதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் , ரூபா கிஷோருக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று

ஜெகன் கார்தும்பிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் , நான்காவதாக குட்டி இளவரசி, ஒரு முறைகூட அவனுக்கு மனைவியின் நிறை வயிற்றை காண வர இயலவில்லை , எந்த பிள்ளையையும் பிறந்தவுடன் அவன் கையில் ஏந்தவில்லை.

வெளியில் சொல்லவில்லை என்றாலும் அந்த ஏக்கம் அவனில் இருந்தது, அவன் கார்தும்பிக்கா அது தெரியாது இரண்டாம் முறை பிள்ளை பெற்ற பிறகு “போதும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளலாம்” என்று அவன் கூற.

“முடியாது” என்று திடமாக மறுத்துவிட்டாள் மனைவி , மூன்றாம் முறையும் குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்தே வர முடிந்தது அவனால் , போர் பயிற்சிக்காக கண்டம் விட்டு கண்டம் சென்றதால் அந்த முறை அவன் பதினெட்டு மாதங்கள் கழிந்தே வந்தான்.

குழந்தை பிறப்பு அத்தனை சுலபமா என்ன , ஆனால் நான்காம் முறையும் பிள்ளை வேண்டும் என்றபோது அவன் முறுக்கிக் கொண்டான் , தானும் அருகில் இல்லாமல் ஒவ்வொரு முறையும் எவ்வளவு வலியை தாங்கி பிரசவிக்கிறாள்.

அவள் உடல் நிலையை எண்ணி அவன் மறுக்க மனைவி கண் கசக்கினாள் , “இன்னும் ஒரே ஒரு  பாப்பா , நீங்க இந்த தடவ கண்டிப்பா வந்துடுவீங்க” என்று கெஞ்சி கொஞ்சி சாதித்துக் கொண்டாள்.

அந்த முறை அவளுக்கு ஏழாம் மாதம் நடக்கும் போது வந்து சேர்ந்துவிட்டான், மூன்று பிள்ளைகள் பெற்றபோதும் மனைவி நிறைவயிறோடு ஆடி ஆடி நடப்பதை நேரில் இப்பொழுது தான் பார்க்கிறான் .

முகம் கொள்ளா புன்னகையோடு வாசலிலே நிற்க வயிற்றை பிடித்துக்கொண்டு வேக எட்டுக்களில் அவனை நெருங்கி அனைத்துக் கொண்டாள் கார்த்தும்பி.

எத்தனை வருட கனவு வெயிலும் மழையும் ஒன்றாக வந்ததை போல புன்னகையும் அழுகையும் ஒன்றாக வந்தது தும்பிக்கு , பார்த்து பார்த்து ரசித்தான் மனைவியாய் , அவள் உறங்கும் அழகை நடக்கும் எழிலை.

மிக விமர்சியாக வளைகாப்பு செய்து வைரவளையல் பூட்டி, நிறைவான நாட்கள்… அவர்கள் சொன்ன நாளுக்கு முன்னே மருத்துவமனை அழைத்து சென்று அறை எடுத்துக்கொண்டான் .

இரவெல்லாம் நடை பயின்று வெள்ளிக்கிழமை காலை பஞ்சு பொதி என்று கையில் வந்து சேர்ந்த மகளை நெஞ்சோடு அணைத்தபோது இரு துளிகள் அந்த ரோஜாவண்ண மேனியில் பட்டு தெறித்தது , நீண்ட ஒன்பது வருட ஏக்கம் அந்த நொடி தீர்ந்தது.

தன் தும்பியை போன்று மகள் தனக்கு, அதும் முதல் முறை தன் கைகளிலே வந்து சேர்ந்திருக்கிறாள் வேறு என்ன வேண்டும் அவனுக்கு, மகளுக்கு மூன்று மாதம் தொடங்கியபோது மீண்டும் வேலைக்கு சென்றான் .

அதன் பிறகு இப்பொழுது தான் வந்திருக்கிறான் , ஜெகன் பணியில் இருந்து திரும்பி வரும் நாட்களில் எப்படியாவது அனைவரும் தங்களை வேளைகளில் இருந்து விடுவித்துக்கொண்டு  எங்கேனும் சுற்றுலா சென்று வருவார்கள்.

பிறகு அவன் மட்டும் மனைவி  மக்களுடன் இங்கே சில நாட்கள் தங்குவான் இந்த முறை அவர்களின்  திருமண நாளை முன்னிட்டு அனைவருமே இங்கேயே வந்துவிட்டனர்.

தூண் அருகில் இருந்த பால் பாத்திரத்தை பார்த்த கார்த்தும்பி அவனை திரும்பி பார்க்க , அழுத்தமாக அவள் கைகளை பற்றியவன் “யாரெல்லாம்  பால் வாங்க வரீங்க” என்றவன் சத்தத்தில் பிள்ளைகள் அனைவரும் “நான் நான்” என்று ஓடி அவன் அருகில் வந்தனர்.

பால் பாத்திரத்தை ஜெகன் கார்த்தும்பி யின் மூத்த மகன் கையில் எடுத்துக்கொள்ள மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக சட்டையை பிடித்துக்கொண்டு ரெயில் வண்டியை ஓட்ட தொடங்கினர்.

ராஜீவ் பாரதி “நாங்கள் இங்கே பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் போய் வாருங்கள்” என்றுவிட்டனர் , ரூபா கிஷோர் முன்னே நடக்க பிள்ளைகளை அவர்கள் பின்னால் விட்டு ஜெகனும் கார்தம்பியும் அவர்கள் பின்னால்  சென்றனர்.

அவன் கை கோர்த்து தோள் சாய்ந்து நிறைவாக நடந்து கொண்டிருந்தாள், ரப்பர் தோட்டத்தின் முடிவில் அதே பழைய மாளிகை,  பிள்ளைகள் ஆரவாரத்துடன் கன்றுக்குட்டிகளின் பின்னே ஓட , ரூபாவும் கிஷோரும் அவர்களை கவனித்துக்கொண்டே அங்கே நின்றனர்.

ஜெகனின் பிள்ளைகள் அவனை போல பொறுப்பானவர்கள் , தந்தை தூர இருக்கிறார் தாயை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று  அத்தனை கவனம் தாயின் மீது, அன்பான குழந்தைகள் இப்பொழுது தங்கையும் வந்து விட தங்களுக்கு பொறுப்பு கூடி விட்டதாக அவர்களே பேசிக்கொள்கிறார்கள் 🙂 .

லக்ஷ்மியம்மா நான்கு வருடங்கள் முன்பு மறைந்து  விட்டார், பேத்தியையும் பார்த்த சந்தோஷத்தோடு மகனின் நிறைவான வாழ்வை பார்த்த நிம்மதியோடு பிரகாஷும் விடை பெற்று ஒருவருடம் முடிந்து விட்டது.

மனைவியை தன்னை நோக்கி திருப்பி நிறுத்தி இடையோடு கைகோர்த்து அணைத்து அவள் நெற்றி முட்டினான், இருவரின் விழிகளும் மூடிக்கொள்ள இதழ்கள் விரிந்தது

உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்…

என்றவன் உரைக்க, அவன் நெஞ்சில் இருக்கும் டாட்டூவில் அழுத்தமாக முத்தம் பதித்து அவன் மார்பில் தலை சாய்த்து விழிகள் மூடி நின்றாள், அவனின் இறுகிய அணைப்பில்.

தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு…
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா…

ஜென்மம் உண்மை இல்லை…
உன் வேர் என்ன…
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன…
அணுவெல்லாம் அணுவெல்லாம்…
நினைவென நிறைந்தாய்…

நிறைந்தாயே நிறைந்தாயே…
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்…

 

அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதனுடைய பழமானது சிறிய பலா பழத்தைப் ஒத்திருக்கும். இது நேராக வளரும் தன்மையுடையது. இது கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற பாம்புப்படகு அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டாறுதிற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது.

அயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் சிறியவுரு போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது வழக்கமான காட்சி.

பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!