Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 10.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 10

 

மதி மயங்கித் தான்

போகிறேன் உன் கண்கள்



Advertisement

பாடும் காவியத்தில்!!!

 

காலங்கள் மாறினாலும் அனைவரின் வாழ்க்கையும் மாறாமல் இருக்க பெரியவர்களுக்கு தான் வேதனையாக இருந்தது. தருமர் என்ற ஒருவரின் ஆதிக்கத்தால் அனைவரின் வாழ்க்கையும் முடங்கி கிடந்தது. அதை மீட்டெடுக்க யாருமே முயல வில்லை.

Advertisement

 

Advertisement

அமர் ஏதாவது செய்திருக்கலாம் என்று சகுந்தலா நினைக்காத நாள் இல்லை. மகனிடம் சொல்லியும் இருக்கிறாள். அதற்கு அவன் சொன்ன ஒரே பதில் “என் கூட இருந்தா அவ சந்தோஷமா இருக்க மாட்டா மா. உன் புருஷன் இருக்க விட மாட்டார். என் காதல் அவளைக் கொன்னுறக் கூடாது”, என்பது தான்.

 

காரைச் செலுத்திக் கொண்டிருந்த ரதிக்கோ மனம் ஏனோ அமரை அதிகம் தேடியது. அவள் எண்ணத்தை இன்னும் அதிகரிப்பது போல ஒரு காதலர்கள் வண்டியில் நெருக்கமாக சென்றார்கள். அவர்களைப் பார்த்தவுடன் ரதியின் எண்ணங்கள் பின் நோக்கிச் செல்ல ஆரம்பித்தன.

Advertisement

 

தலையை அசைத்துக் கொண்டு “அவற்றை எல்லாம் நினையாதே மனமே என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள். ஏனென்றால் நினைக்கும் போது ஆழமான காயத்தை மயிலிறகு வருடுவது போல சுகமாக தான் இருக்கும். அதற்கு பிறகு அதன் வேதனை தாங்க முடியாததாக இருக்கும்.

 

சும்மா இருந்தால் அவனைப் பற்றி நினைவு அதிகம் வரும் என்று எண்ணி பாடல்களை ஓட விட அந்த காதல் பாடல்களும் அவனது நினைவைத் தான் தந்தது. ஆனால் இசை அவள் மனதை கொஞ்சம் மயக்கியது என சொல்லலாம்.

 

மனிதன் அவனுடைய எண்ணங்களையும் மனதையும்  கட்டுப் படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் அது என்ன எளிதா? அதனால் எண்ணங்களை அதன் போக்கில் விட்டவள் பாடல்களில் லயித்திருந்தாள்.

 

என்ன தான் சமாதானம் சொன்னாலும் அவனை நினைக்காதே என்று மனதுக்கு கட்டுப்பாடு போட்டாலும் அவளால் அவனை நினைக்காமல் இருக்க முடிய வில்லை. அவன் நினைவிலே காரைச் செலுத்தினாள். அவள் மனது போலவே கார் வேகம் எடுத்தது.

 

அன்று மாலை ஆறு மணிக்குச் சென்னை சென்றவளுக்கு மகளுக்கு என்று என்ன வாங்க என்று ஆயிரம் யோசனை ஓடியது. அவள் சம்பாதிப்பதே பிள்ளைகளுக்கு தானே?

 

போன முறை வந்த போது அவந்திகா காலில் கொலுசு இல்லாதது நினைவு வந்தது. உடனே நகை கடைக்குச் சென்றவள் அதிக சலங்கை வைத்த கொலுசை வாங்கிக் கொண்டாள். அதற்கு பின்னும் அவளுக்கு என உடைகள் பொம்மைகள் என எல்லாம் வாங்கிக் கொண்டு பார்க் சென்று அமர்ந்து விட்டாள்.

 

சகுந்தலா குழந்தையை தயார் செய்து தானும் கிளம்பி  வெளியே வரும் போது சரியாக அப்போது உள்ளே வந்தார்கள் தருமரும் சாணக்கியனும்.

 

“என்ன ரெண்டு பேரும் வெளிய கிளம்பிட்டீங்க?”, என்று கேட்டார் தருமர்.

 

“அது.. அது வந்து..”, என்று தடுமாறிய சகுந்தலா “என்னோட ஜூனியர் நிர்மல் இருக்கான்ல? அவன் பொண்ணுக்கு பிறந்த நாள். அதுக்கு தான் போறோம். உங்களுக்கு சாப்பாடு தயாரா இருக்கு. சாப்பிட்டுருங்க”, என்று சொல்லி விட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சாணக்கியனுக்கு இருப்பு கொள்ள வில்லை. ஏனென்றால் அன்னை நிச்சயதார்த்தம் என்று சொன்னது தான் நினைவில் இருந்தது.

 

அதனால் “அப்பா நீ சாப்பிடு. நான் பிரண்ட்ஸ் பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அன்னையின் காரை பாலோ செய்தான் சாணக்கியன். இரவு ஏழு மணி என்பதால் இருள் நன்றாகவே கவிழ்ந்திருந்தது. ஆனாலும் அன்னை காரை ஒரு பார்க்கில் நிறுத்துவது தெரிந்து அவனும் ஒதுங்கி நின்று கொண்டான்.

 

அவந்திகாவை அழைத்துக் கொண்டு சகுந்தலா செல்வது தெரிந்து அங்கே சென்றான். ஆனால் அவர்களுக்கு முன்பு அங்கே அமர்ந்திருந்த ரதியைக் கண்டு அவனுக்கு திகைப்பு தான்.

 

“ஓஹோ அம்மா குழந்தையை அவ அம்மா கிட்ட காட்ட கூட்டிட்டு வந்துருக்காங்களோ?”, என்று எண்ணியவன் சிறு புன்னகையுடன் அங்கிருந்து வந்து விட்டான்.

 

“குட்டி மா”, என்று அழைத்து அவந்திகாவை அள்ளி மடியில் அமர்த்தி ஆயிரம் முத்தமிட்டாள் ரதி.

 

சகுந்தலா சொல்லிக் கொடுத்தது போல அவளும் ரதி மா என்று வேறு சொல்ல அன்னைக்கு அந்த சந்தோஷத்தை விட வேறு என்ன இருக்கிறதாம்?

 

குழந்தைக்கு அவளை அம்மா என்றெல்லாம் சகுந்தலா சொல்லிக் கொடுக்க வில்லை. ரதி மா என்று மட்டும் சொல்லிக் கொடுத்திருந்தாள். அதுவே ரதிக்கு போதுமானதாக இருந்தது.

 

அதற்கு பிறகு அன்னையும் மகளும் பேசிக் கொண்டிருக்க அதை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா. அவந்திகா ஐஸ்கிரீம் வேண்டும் என்று அவளிடம் உரிமையாக கேட்க வாங்கிக் கொடுக்க உரிமை இருந்தும் சகுந்தலாவைப் பார்த்தாள் ரதி.

 

ஏனென்றால் குழந்தையைப் பார்த்துக் கொள்வது அவள் தானே? இவள் பெற்றதும் குழந்தையை கை கழுவியாச்சு. அப்படி இருக்க குழந்தைக்கு எது சேரும் சேராது என சகுந்தலாவுக்கு தானே தெரியும்.

 

“அவ உன் பொண்ணு ரதி. என்ன வேணா நீ வாங்கிக் கொடுக்கலாம். காச்சல் எல்லாம் அவளுக்கு வராது. தினமும் அவ அப்பனும் பெரியப்பனும் எனக்கு தெரியாம ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுக்க தான் செய்யுறாங்க”, என்றாள் சகுந்தலா.

 

சிறு சிரிப்புடன் மகளுக்கு வாங்கிக் கொடுத்தவள் அவள் உண்ணும் அழகை ரசித்திருந்தாள். “பாப்பா எங்க திவ்யா மாதிரியே இருக்கா மேடம்”, என்றாள் ரதி.

 

“இந்த மேடத்தை விட மாட்டியா? ஆண்ட்டின்னாவது கூப்பிடு மா”

 

“அதை விடுங்க”, என்றவள் பேச்சை மற்றும் விதமாக “உங்க மூத்த பையன் எப்படி இருக்கார்? அவருக்கு எத்தனை பசங்க?”, என்று கேட்டாள்.

 

அடுத்த நொடி மடை திறந்த வெள்ளம் போல சாணக்கியன் பற்றி சொல்ல ரதி மனது பாரமாகிப் போனது. “மூத்தவனும் வாழ்க்கையை இழந்துட்டான். சின்னவனுக்கும் வாழ்க்கை இல்லை. என்ன பாவம் பண்ணினோமோ? என் பசங்க இப்படி இருக்காங்க?”, என்று புலம்பினாள் சகுந்தலா.

 

அன்னைக்கும் அவந்திகா ஐஸ்கிரீமை ஊட்டி விட ஏனோ மகளின் அந்த அனுசரணை அவளை உள்ளுக்குள் மறுகத்தான் செய்தது. “நீ சாப்பிடு டா”, என்று சொல்லி மகளை உண்ண வைத்தாள்.

 

“நல்லா இருக்கா அவி குட்டி?”, என்று அவளிடம் கேட்க, “ம்… ரொம்ப டேஸ்ட்டா இருக்கு ரதிமா… அதான் உங்களை சாப்பிட சொன்னேன்”, என்றவள் தாய்க்கும் ஊட்டினாள். ஐஸ்க்ரீம் உண்டு முடித்ததும், அங்கே இருந்த விளையாட்டுக்களில் மகளை விளையாட வைத்தாள். சீசா, சறுக்கு, ஊஞ்சல் என ஒவ்வொன்றாக அவள் விளையாட மகளுடனே இருந்தாள். சகுந்தலா அவர்களை வேடிக்கை பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

 

அனைத்து விளையாட்டுக்களிலும் ஒரு முறை விளையாடிவிட்டு, கீழே இருந்த மணலில் அவள் அமர்ந்து விளையாடத் துவங்கவே, தானும் மகளுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். சகுந்தலாவும் அங்கே வந்து அமர்ந்தாள்.

 

குழந்தைக்கு என வாங்கிய அனைத்தையும் கொடுக்க அவந்திகா முகமும் சந்தோஷமாக இருந்தது. வாங்கிய கொலுசை அவள் கையாலே அணிவிக்க “வீட்லே கொலுசு இருக்கு மா. இவ கால்ல காயம் இருந்துச்சு, அதான் கழட்டி வச்சேன். அப்புறம் போட மறந்துட்டேன்”, என்றாள் சகுந்தலா.

 

“இப்ப என்ன மேடம் என் மகளுக்கு நான் வாங்கிக் கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களா?”, என்று கேட்டாள் ரதி.

 

“எப்பா என்ன கோபம் வருது உனக்கு? உன் பொண்ணு தான். நீ வாங்கிக் கொடுக்கலாம். ஆனா யோசிச்சிக்கோ. இது எத்தனை நாளைக்கு. இப்பவே அவிக்கு நல்லா விவரம் தெரியுது. கூடிய சீக்கிரம் நீ தான் அவ அம்மானு தெரிஞ்சிரும். அவளை எப்படி சமாளிக்க போறேன்னு யோசிச்சு வச்சிக்கோ”

 

ரதி அமைதியாக இருக்க “எனக்கு உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் ரதி. நீ உண்மையை சொல்லியே ஆகணும்”, என்றாள் சகுந்தலா.

 

“கேளுங்க”

 

“உனக்கு உண்மையிலே உன் அத்தை பையன் கூட கல்யாணம் ஆகிருச்சா?”

 

“ஆமா”, என்று சொன்னதும் முகம் சோர்ந்து போனவள் “சரி உன் புருஷன் எப்படி இருக்கான்?”, என்று மட்டும் கேட்டாள்.

 

ஒரு நொடி அவரைப் பார்த்தவள் “நல்லா இருக்கார்?”, என்றாள்.

 

“ஹம் குழந்தைங்க இருக்கா?”

 

“ஒரு பையன் இருக்கான்”, என்று சொல்லி முடித்துக் கொண்டாள்.

 

சகுந்தலாவுக்கு உண்மையிலே மனது கஷ்டமாக இருந்தது. நிச்சயம் எப்படியாவது ரதி மற்றும் அமர் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற ஆசை இருந்தது. ஆனால் இனி எப்போதும் நடக்காதே என்று வேதனையாக இருந்தது.

 

வெகு நேரம் குழந்தையுடன் சந்தோஷமாக இருந்தாள் ரதி. பின் மூவரும் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார்கள். அங்கே ரதியே குழந்தைக்கு ஊட்டி விட சகுந்தலாவுக்கு ரதியின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.

 

ஒன்பதரைக்கு மேலே தான் சகுந்தலா குழந்தையை அழைத்துக் கொண்டு செல்ல ரதியும் ஊருக்கு காரை கிளப்பி விட்டாள். மகளைப் பார்த்தது ஒரு மாதிரி நெகிழ்வாகவும் இருந்தது. அவளைப் பிரிவது மனதுக்கு பாரமாகவும் இருந்தது.

 

வீட்டுக்குச் சென்றதும் அவந்திகா அன்னை வாங்கிக் கொடுத்த ஒரு உடையை எடுத்து வைத்துக் கொண்டு “ஆச்சி எனக்கு இதை போட்டு விடு”, என்று சொல்லி கொண்டிருந்தாள்.

 

“குட்டி மா, இது பட்டு பாவாடை சட்டை டா. ஏதாவது பங்சன்க்கு தான் போடணும்”

 

“இல்லை, எனக்கு இது வேணும்”

 

“நாளைக்கு போடலாம்”

 

“இல்லை இப்பவே போடணும்”, என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ண “அதை போட்டு விட்டு தொலையேன் டி. நச நசன்னுட்டு”, என்று எரிந்து விழுந்தார் தருமர்.

 

வேறு வழியில்லாமல் ரதி வாங்கி வந்ததை அவளுக்கு அணிவித்தாள் சகுந்தலா. “நான் ரெண்டு அப்பா கிட்டயும் காட்டப் போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

 

சாணக்கியன் மற்றும் அமர் இருவரும் எதையோ பேசிக் கொண்டிருக்க அங்கே அவர்களுக்கு காட்சி அழித்தாள் அவர்களின் பெண்ணரசி.

 

தங்க நிறம் இழையோடிய பச்சை வண்ணப் பட்டுப்பாவாடை அணிந்து அவள் அங்கே ஓடி வர அந்த கால்களில் இருந்த கொலுசின் சத்தம் கூட கானமாய் அந்த இடத்தை நிறைத்தது.

 

“ஹேய் பாப்பா புது டிரஷா டா?”, என்று கேட்ட சாணக்கியன் மகளை அள்ளிக் கொள்ள அவள் காலில் இருந்த கொலுசு அமர் கண்ணில் விழுந்தது.

 

“பாப்பா கொலுசு கூட போட்டுருக்கா. காலையில போடலையே? அம்மா வாங்கிக் கொடுத்திருப்பாங்களா இருக்கும்?”, என்று சொன்னான். சாணக்கியனுக்கு அது யார் வாங்கித் தந்தது என்று தெரிந்தாலும் எதுவும் சொல்ல வில்லை. என்ன சொல்ல என்றும் தெரிய வில்லை.

 

“ரதி மா வாங்கித் தந்தது”, என்று குழந்தை சொல்லும் போது சரியாக அமருக்கு ஒரு போன் வர அவன் எழுந்து சென்று விட்டான்.

 

சாணக்கியனுக்கு மட்டும் தான் அவள் சொன்னது கேட்டது. “சரி டா பட்டு, வா நம்ம போட்டோ எடுப்போம்”, என்றவன் அவளை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தான். அமர் வந்ததும் அப்பா மகள் இருவரையும் சேர்த்து வைத்து விதவிதமாக போட்டோ எடுத்து குவித்தவன் அதில் அதிக அழகாக இருப்பதை அன்னைக்கு அனுப்பி வைத்தான். அதை அப்படியே ரதிக்கு அனுப்பி வைத்தாள் சகுந்தலா.

 

இருவரையும் கண்ட ரதி ஆனந்த கண்ணீர் வடித்தாள். அவளுக்கு அவர்களுடனே இருக்க வேண்டும் போல இருந்தது. அவளுக்கு தெரியும் அமர் அவளைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. ஆனால் தருமர் என்ற ஆள் இருக்கும் வரை அவன் நினைத்தால் கூட அவர்கள் ஒன்றாக வாழ முடியாது என்று புரிந்து தான் விலகி இருக்கிறாள்.

 

அது மட்டும் அல்லாமல் அவன் வேறு ஒரு வாழ்க்கையை ஏற்று சந்தோஷமா இருக்க வேண்டும் என்று எண்ணி தான் அவளுக்கு திருமணம் ஆனது போல காட்டிக் கொண்டாள். ஆனால் அவன் தன்னை மறக்க மாட்டான் என்ற உண்மை நாள் ஆக ஆக தான் அவளுக்கு புரியவே துவங்கி இருக்கிறது.

 

அப்பா மகள் இருவரும் விளையாடுவதை வேடிக்கை பார்த்த படி இருந்தான் சாணக்கியன். ஒரு அண்ணனாக தம்பியின் வாழ்வும் முக்கியம் என்று புரிய “அமரா”, என்றான்.

 

“என்ன?”

 

“ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்கோ டா. உனக்கு ஒரு துணை தேவை இல்லைன்னாலும் குழந்தைக்கு ஒரு அம்மா தேவை”

 

“அவ என் குழந்தைக்கு அம்மாவா இருப்பாளான்னு எப்படி தெரியும்? அது மட்டும் இல்லாம என் குழந்தைக்கு அம்மா ரதி மட்டும் தான்”

 

“அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும் டா”

 

“இருக்கட்டும். அவ சந்தோஷமா இருந்தா எனக்கு சந்தோஷம் தான். நான் என் குழந்தையை வளத்துக்குவேன். நீயும் இருக்க. நாம பாத்துக்கலாம்”

“அப்பா சொல்லிட்டு இருந்தார் அமரா, நாளைக்கு ஸ்வேதாவும் அவ அப்பா அம்மாவும் இங்க வறாங்களாம். உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறது பத்தி பேச?”

 

“என்னோட பதில் நான் ஏற்கனவே சொன்னது தான் அண்ணா. என் கிட்ட பேசினா அவமான பட தான் போறாங்க”, என்றவன் வேறு எதுவும் சொல்ல வில்லை.

 

“ஸ்வேதா நல்ல பொண்ணு டா. அவ பட்டுவை நல்லா பாத்துக்குவா”

 

“யார் இல்லைன்னு சொன்னா? அந்த நல்ல பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை தான் கிடைக்கணும். நம்ம சுமையை அவ மேல இறக்கி வைக்க நினைக்க கூடாது. நம்ம அப்பனும் அவ அப்பனும் சேந்து பிளான் பண்ணுறது தமிழ்நாட்டை வளைச்சு போடணும். அதுக்கு தான் இந்த கல்யாண டிராமா எல்லாம். எனக்கு என் ரதி தான் எப்பவும்”, என்றவன் யோசனையில் ஆழ்ந்து விட குழந்தை நன்கு தூங்கி இருந்தாள்.

 

குழந்தையை சரியாக படுக்க வைத்தவன் ரதியைப் பற்றி எண்ண அவளிடம் இருக்கும் நளினமும் மென்மையும் இப்போது நினைத்தாலும் அவனுக்குள் சிலிர்த்துக் கொள்ளும்.

 

அதே நேரம் எல்லா வேலையும் முடித்து விட்டு அறைக்குள் வந்தாள் திவ்யா. இன்னும் பாண்டியன் வீட்டுக்கு வந்திருக்க வில்லை. ஜூஸ் கடையில் வைத்து நண்பர்களுடன் குடித்து விட்டு தாமதமாக தான் வருவான் என்று அவளுக்கு தெரியும்.

 

அதனால் ரதிக்கு அழைத்தாள். காரை ஓரமாக நிறுத்தியவள் “திவி”, என்றாள் ஆர்வமாக.

 

“அக்கா பாப்பா பாத்தியா? எப்படி இருக்கா?”, என்று கேட்க “சூப்பரா இருக்கா டி. அப்படியே உன்னை மாதிரி தான் தெரியுமா? நல்லா வளந்துட்டா. இரு இப்ப போட்டோ அனுப்பி வைக்கிறேன். என்னை ரதிமான்னு கூப்பிட்டா டி”, என்று ரதி கண்களில் கண்ணீருடன் சொல்ல அவள் நெகிழ்ந்திருக்கிறாள் என்று புரிந்தது திவ்யாவுக்கு.

 

“அக்கா அமர் மச்சான் கிட்ட பேசுவோமா? எத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் இப்படி பிரிஞ்சு பிள்ளைங்களையும் கஷ்ட படுத்துவீங்க?”

 

“ஆசைப் படுறதுக்கு கூட ஒரு குடுப்பனை வேணும் திவி. நம்ம ஆசைப் பட்டா அது நடந்திருமா? நம்ம எல்லாரையும் கொல்ல வேணா அந்த ஆள் செய்வானே தவிர நாம நினைக்கிறதை நடக்க விட மாட்டான். ஏற்கனவே பண்ணின பாவத்துக்கு தான் நல்லா அனுபவிக்கிறேன். உன்னையும் காவு வாங்கிட்டேன். இதையே என்னால மன்னிக்க முடியலை. இதுல நான் மறுபடியும் ஆசைப்பட்டு சுயநலமா ஏதாவது செஞ்சா என்ன ஆகும்ன்னு கற்பனை கூட பண்ணி பாக்க முடியலை. அப்ப சொன்னது தான் திவி இப்பவும் சொல்றேன். ஒண்ணா வாழ்ந்தா தான் காதல்ன்னு இல்லை. தனித் தனியே இருந்து அவங்களை நினைச்சிட்டு இருக்குறதும் காதல் தான்”

 

“அப்படின்னா எதுக்கு உனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு பொய் சொன்ன?”

 

“அப்படி சொன்னா தான் அமர் என் வாழ்க்கைல தலையிட மாட்டாங்க. இல்லைன்னா ஒரு கட்டத்துல அவங்க அப்பாவை கூட எதுத்து பேசிட்டு என்னைத் தேடி வரலாம். அப்படி வந்தா அந்த ஆள் சும்மா இருக்க மாட்டான். அவரால கண்டிப்பா  யாராவது ஒருத்தங்க பயங்கரமா பாதிக்க படுவாங்க. என்னால இனி யாரையும் கஷ்டப் படுத்த முடியாது. அதுவும் என் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கவே முடியாது”, என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!