Skip to content
Post Views: 1,756
அத்தியாயம்-11
சண்முகம் அவளை பார்த்து இப்படி கேட்பார் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவர் கேட்டது, அவள் தான் அந்த பொருளை எடுத்தாள் என்பது போல் அல்லவா இருந்தது.
Advertisement
“அப்பா,” என வாயசைத்தவளுக்கு குரல் கூட எழும்பவில்லை. அப்படியே ஸ்ம்பித்த நிலையிலேயே அவள் இருக்க, தன்னில் இருந்து அவளை பிரித்து தள்ளி நிறுத்தினார் சண்முகம். அவர் கேட்ட கேள்வி அவளை மட்டுமல்ல அங்கு நின்றிருந்த அனைவரையுமே ஸ்தம்பிக்க வைத்திருந்தது.
“என்னங்க நீங்க? இவங்க தான் ஏதோ உளறுறாங்கன்னா, நீங்களும் நம்ம பொண்ணை சந்தேகப்பட்டு பேசுறீங்களே!! இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது” என கண்ணீர் வடித்தார் கனகவல்லி.
Advertisement
Advertisement
“கனகா, கொஞ்சம் நீ சும்மா இரு” என மனைவியை அடக்கியவர், அனைவரையும் பார்த்து,
“அவ பண்ணது தப்பு தான். அதுக்காக, உங்க எல்லார் கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றவர் கையெடுத்து கும்பிட, அனைவருக்குமே, அவரது இந்த செய்கை கலங்க செய்தது.
Advertisement
“என்னங்க, என்ன பண்றீங்க நீங்க” என கனகவல்லி கத்த,
“மாமா இப்படியெல்லம் பண்ணாதீங்க. வெண்பாவை பத்தி எங்களுக்கு தெரியும். கையை இறக்குங்க” என கதிர்வேல் வேகமாக அவரருகில் வந்து கையை இறக்கினான்.
“ரொம்ப சந்தோஷம் கதிரு, உனக்காவது அவ மேலே நம்பிக்கை இருக்கே அதுவரைக்கும் சந்தோஷம்!! என விரக்தியாக கதிரிடம் கூறியவர்,
அங்கு நின்றிருந்த நாச்சியாரை பார்த்து,
“அவ வாழ வேண்டிய பொண்ணு, போலீஸ், ஸ்டேஷன்லாம் கூட்டிட்டு போய், அவ வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. இனி அவ இங்க வரவே மாட்டா. நான் பார்த்துகிறேன். அவளை விட்டுடுங்க”
என வேண்டி கேட்டவர், அங்கு பித்து பிடித்தது போல் நின்றிருந்த மகளை தோளோடு அணைத்தப்படி
“வா மா போலாம்” என அழைத்து கொண்டு வெளியேறினார்.
கனகவல்லி, செல்லும் அவர்களையே வேதனையோடு பார்த்தவர், நாச்சியாரின் புறம் திரும்பியவர்,
“ஏன் ம்மா, உன் மனசாட்சி தொட்டு சொல்லு, என் பொண்ணு திருடி இருப்பானு நினைக்கிறீயா?” என நேருக்கு நேர் அவர் கண் பார்த்து கேட்க, நாச்சியாரோ அவர் கேள்வியில் கொஞ்சம் திணறி தான் போனார். பதில் சொல்லாது அமைதியாக இருந்தவரை நெருங்கி நின்றவர்,
“உங்களுக்கே தெரியும், அவ இப்படியெல்லாம் பண்ணிருக்க மாட்டானு. ஆனால், நீங்களும் சேர்ந்து அவளை இப்படி பண்ணிடீங்களே!!
இதோ, பணம் வச்சு இருக்காங்களே இவங்க சொல்றது தான் உண்மை, காசு இல்லாதவங்க நாங்க சொல்றது பொய்னு நம்புறீங்ளே!! இது எந்த விதத்தில் நியாயம்?” என்றவர்,
“ஏன் ம்மா? அப்பா இருந்திருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பாரா?” என கேட்க, நாச்சியாருக்கு சட்டென்று நெஞ்சடைப்பது போல் இருந்தது.
கணவரை பற்றி அவருக்கு தெரியதா? அவர் எப்பொழுதும் நீதி, நேர்மை, நியாயம் என்று இருப்பவர் ஆயிற்றே!! எந்த ஒரு விஷயத்தையும் அடி முதல் நுனி வரை ஆராய்ந்து பார்த்து தானே எதையும் செய்வார்.
“இப்போ நீங்க பண்ண காரியத்தை அப்பா கூட மன்னிக்க மாட்டார் ம்மா. அவருக்கு தெரியும், சதி பண்ணி என் பொண்ணு மேலே பழி போட்டு இருக்கீங்கனு. எதுக்கு இப்படியொரு நாடகம், அவ இந்த வீட்டுக்கு வர கூடாதுனு தானே!
இப்போ சொல்றேன், நீங்க செத்தா கூட, நாங்க இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க மாட்டோம். அதேபோல நான் செத்தா கூட நீங்க வர கூடாது.
வாழ வேண்டிய பொண்ணனோட வாழ்க்கையை அழிச்சுடீங்களா!! நீங்க மட்டும் நல்ல வாழ்ந்திருவீங்களா?!! கடவுள் இருக்கான், எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கான். நீங்க செய்யுற தப்புக்கு கண்டிப்பா தண்டனை கொடுப்பான்.
யார் யாரெல்லாம் என் பொண்ணு மேலே பழியை போட்டீங்களோ அவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. நாசமா தான் போவீங்க அவங்க குடும்பம் விளங்கவே விளங்காது” என சாபம் கொடுக்க, அங்கு நின்றிருந்த அமுதவல்லிக்கு திக்கென்று இருந்தது.
நடப்பது உண்மையா? பொய்யா? எதுவும் அவருக்கு தெரியவில்லை. ஆனால் கணவர் இத்தனை நேரம் வெண்பா தான் எடுத்தாள் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை அது தவறாக கூட இருக்கலாம். அதற்கு கனகவல்லி இப்படி சாபம் கொடுப்பது போல் பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. எங்கே அந்த பாதிப்பு தன் குடும்பத்திற்கு வந்து விடுமோ என்று அவருள்ளம் காரணமே இல்லாமல் தவித்தது.
“ஏய் கனகா, எதுக்கு இப்படி வாழுற வீட்டில் வந்து சாபம் கொடுக்கிற? நாளைக்கு என் பொண்ணு இங்க தான் வாழ போறா! நீ இப்படி பேசுறது உனக்கே நல்ல இருக்கா? என அமுதவல்லி கோபப்பட,
“ஏன்?.நான் சாபம் கொடுக்கிறதில் என்ன தப்பு? என் பொண்ணை இவ்வளவு நேரம் மாறி மாறி அசிங்கப்படுத்தினாங்களே அப்போலாம் வாயை திறந்திருப்பியா நீ. இப்போ மட்டும் பேசுற.
ஒஹ்ஹ், உன் பொண்ணுன்னா உசத்தி, என் பொண்ணுன்னா கிள்ளு கீரையா? இப்படி ஒரு அநியாயம் நடக்கும் போது, நீ ஒரு தாயா என்ன பண்ணி இருக்கணும்? அவளை ஆதரிச்சு அரவணைச்சு இருக்கனும். அதை விட்டுட்டு வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்த. இப்போ ஏன் குதிக்கிற?
என் பெத்த வயிறு எரியுற போல, என் பொண்ணு மேலே பழியை தூக்கி போட்ட ஒவ்வொரு பேரின் வாழ்க்கையும் எரிஞ்சு சாம்பலா தான் போக போது. நடக்கும், நிச்சயம் நடக்கும்” என ஆக்ரோஷமாக கத்தியவர், அங்கிருந்து வெளியேற, தடுமாறினார் நாச்சியார்.
பொத்தென்று அவர் இருக்கையில் அமர, அவரை பிடித்து கொண்டனர் அனைவரும்.
“அப்பத்தா, என்னாச்சு? என்ன பண்ணுது? என கதிர்வேல் கேட்க, அவரால் எதுவும் பேச முடியவில்லை. உள்ளுக்குள் கனகவல்லி கூறியது தான் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்நேரம் அம்பலவாணர் இருந்திருந்தா, அவர் தீர விசாரித்திருப்பார். தான் ஏன் அவ்வாறு செய்யவில்லை? சட்டென்று முடிவு எடுத்து விட்டேனே!!
எதற்கு அப்படி செய்தேன்? ஒரு பெண்ணோட வாழ்க்கை அல்லவா இது. விசாரித்து இருக்க வேண்டுமே!! என யோசித்து யோசித்து, அவருக்கு மனமும் உடலும் ஒரு நிலையில்லாமல் தவித்தது.
“அத்தே,… அம்மா.. என்ன பண்ணுது?” என விசாலாட்சியும், அமுதவல்லியும் பதறினர்.
“டாக்ரை வர சொல்லட்டுமா?” என கேட்ட விசாலாட்சி,
“கதிர் டாக்டருக்கு போன் பண்ணு பா” என மகனுக்கு உத்தரவிட்டார்.
“இல்ல… எனக்கு ஒன்னும் இல்ல… “
“என்னை கொஞ்சம் தனியா விடுங்க” என்றவர் அங்கிருந்து எழுந்து அறைக்குள் வந்து கதவை சாற்றி கொண்டார்.
விசாலாட்சியும் அங்கிருந்த கிஷோரையும், இளங்கோவையும் முறைத்து விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார். அமுதவல்லிக்கும் ஏனோ மனம் சரியில்லை.
“ஏங்க, நீங்க கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருக்கலாம். எனக்கு இந்த பிரச்சனை இதோட முடியுற மாதிரி தெரியல. வேற எதோ பெரிசா நடக்கும் போல தோணுது” என மனதில் பட்டத்தை கூறியவர், ராகினியை அழைத்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.
“மீனாட்சி, நீ போய் அப்பத்தா கூட இரு” என கதிர் மீனாட்சியை உள்ளே அனுப்ப, எஞ்சியிருந்தது என்னவோ, கதிரும், கிஷோரும், இளங்கோவும் தான்.
இருவரையும் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்வேல்.
“என்ன கதிர், அப்படி பார்க்கிறீங்க?” என கிஷோர் கேட்க,
“இனி இபப்டி உன்ன பார்க்க முடியாதே, அதான் பார்த்துகிறேன்” என்றவன் உள்ளே சென்று விட்டான்.
error: Content is protected !!