Skip to content
Post Views: 687
“டேய் லூசுங்களா கொஞ்ச நாளைக்கு இப்படி பண்ணாதீங்க சொன்னேன்ல திரும்ப ஏன்டா இப்படி பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறீங்க. இப்ப கண்டிப்பா போலீஸ் நோண்ட ஆரம்பிச்சுடுவாங்க. மஞ்ச மாக்கான் மாதிரி நிற்கிறத பாரு ஏண்டா எனக்குனே வந்து தொலைறீங்க” என்று கத்திக் கொண்டிருந்தான் குமார்.
அவன் முன்பு கந்தன் பிரைவேட் பைனான்ஸ் ஏஜென்சியில் உள்ள கலெஷன் ஏஜென்ட்கள் கைக் கட்டி நின்று கொண்டிருந்தனர்.
அவர்களின் மனதினுள், “ஆமா கரெக்டா கேஷ் வரலைனா அந்த கிழி கிழிக்கவேண்டியது. அங்க போய் அவங்கள டார்ச்சர் பண்ண சொல்லி நம்மள திட்டுறதும் இவங்க தான். அதுக்கு பிறகு ஏதாவது பிரச்சனை வந்தாலும் நம்மளை தான் திட்ட வேண்டியது. உன்கிட்ட ஒரு பத்தாயிரம் சம்பளம் வாங்க என்னென்ன எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு கடவுளே” என்று புலம்பிக்கொண்டு என்றார்கள்.
“டேய் மகனே எதுக்கு கோவப்படுற அதுலாம் ஒன்னும் ஆகாது. நம்ம பண்றது எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வெளிய வராது. நம்ம என்ன பெரிய ஆளுங்களையா அப்படி பண்றோம்.சாதாரண அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படுறங்க தான. அவங்க இருக்குறதும் போகுறதும் ஒன்னு தான். அவங்களால யாருக்கும் போறஜம் இல்ல அட்லீஸ்ட் நமக்காவது கொஞ்சம் பயன்படுறாங்களே. அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் வராது. அப்படியே வந்தாலும் நமக்காக ஜெலுக்கு போக நெறைய பேர் இருக்காங்க. அதனால நீ டென்ஷன் ஆகாத டா”என்றார் அவன் அப்பா கந்தன்.
Advertisement
“உங்களுக்கு என்ன நீங்க அசால்ட்டா சொல்லுவீங்க. இத இவ்வளவு தூரம் கொண்டு வந்தது நான் தான. இங்க இருக்குற ஒவ்வொரு செங்கலும் என்னோட உழைப்பு. இது என்னோட பத்து வருஷ கனவு இத இந்த நிலைக்கு கொண்டு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா உங்களுக்கு. இதுக்காக எவன் கால எல்லாம் புடிச்சி இருக்கேன் தெரியுமா.
இது மட்டும் வெளிய தெரிஞ்சிச்சி இங்க இருக்குற ஒவ்வொருத்தனையும் தல வேற கால் வேற வெட்டி போட்டுருவேன். முக்கியமா உனக்கு தான் ஓவர் கான்ஃபிடன்டுல எதாவது பண்ண தகப்பனுக்கூட பாக்கமாட்டேன் நீ தான் முத பலி பாத்துக்க” என்று அவன் திட்டிக் கொண்டிருக்கும் போது கதவை தட்டிவிட்டு வந்த பியூன், “சார் உங்கள பாக்க இன்பெட்டார் வந்து இருக்காரு” என்று சொல்ல தன்னை முறைத்து பார்த்த மகனை பார்த்துக் கொண்டு, “வர சொல்லு”என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.அங்கே நின்ற ஏஜென்ட்களையும் வெளியே போக சொன்னார்.
அவர்கள் சொல்லும் வரை அமைதியாக இருந்தவன், அவர்கள் கதவை முடியாதும்,
Advertisement
“பாத்தியா இதோ வந்துட்டாங்க. அவங்க மட்டும் ஏதாவது கண்டுபிடிக்கட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு. சரி நான் போறேன். அவங்கள சரியா கவனிச்சி அனுப்புங்க” என்று கத்திவிட்டு வெளிய சொல்ல கதவினை திறக்க திருவும், சுப்புவும் உள்ளே வந்தார்கள்.
Advertisement
அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றவன் அவர்கள் இருவரும் உள்ளே வந்ததும் வெளியே செல்ல கதவின் அருகில் போக அவனை இருவரும் கேள்வியாக பார்க்க அவன் இருவருக்கும் அதுவும் சொல்லாமல் தன் தந்தையை பார்த்து இருவரையும் கவனிக்குமாறு சொல்லி சென்றான்.
அதை புரிந்து கொண்டவரும் இருவரையும் பார்த்து, “வாங்க இன்ஸ்பெக்டர் சார். வாங்க எஸ்.ஐ சார்.ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க. முதல உக்காருங்க என்ன சாப்பிடுறீங்க காபியா? டீயா? இல்ல ஜூஸா?” என்றார் அனைத்து பல்லையும் காட்டி வரவேற்றார்.
“என்ன மிஸ்டர்.கந்தன் வாய் எல்லாம் பல்லா இருக்கு”என்றான் திரு.
Advertisement
“என்ன சார் சிரிக்க கூடாதா. உங்கள பாத்து ரொம்ப நாளாச்சில அதான் பார்த்த உடனே மனசுக்குள்ள ஓரு சந்தோசம் அதான் சிரிச்சேன் சார். அதோட வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் சொல்லுவாங்க. சிரிக்கிறது ஒரு தப்பா சார்”
“நல்லா பேசுறீங்க கந்தன்.ஆனா மனசுல இவுங்க ஏன் வந்து இருக்கானுவ தான நெனைக்கிங்க”
“ஐயோ சார் உங்கள போய் அப்படி நெனைப்பேனா” என்று ஐஸ் வைக்க
“சரி அத விடுங்க ஆமா இப்ப போறது யாரு”
“எங்க கிளாண்ட் தான் சார். பர்சனல் லோன் பத்தி கேட்டு போறாரு. சரி நீங்க என்ன விஷயமா வந்தீங்கனு சொல்லவே இல்லையே”
“அதுவா நீங்க தான் என்ன பாக்கலைனு ரொம்ப வருத்தப் பட்டுங்க அதான் வந்தேன்”
“நான் எப்ப சார் வருத்த பட்டேன்”என்றார் பாவமாக
“நான் சொல்லல சுப்பு மிஸ்டர். கர்தருக்கு எப்பவும் விளையாட்டு தான்”
“சார் கந்தன்”
“ஓ கந்தன் இல்ல நான் கூட கர்த்தர்னு நெனைச்சிட்டேன் சுப்பு”என்று பொய்யா வருத்தப்பட
“என்ன சார் காலையில வந்து சலம்பிக் கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக வந்தீங்க”என்றார் சத்தமாக
“டேய் என்ன சவுண்ட் ஏறுது. ஏன்டா நான் ஏன் வந்து இருக்கானு உனக்கு தெரியாதா” என்றான் வேகமாக டேபிளை தட்டி எழுந்து நின்று
“சார் மரியாதையா பேசுங்க. நீங்க வெறும் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் தான். நான் நெனச்சா இந்த நிமிஷமே உங்களுக்கு என்ன வேணாலும் செய்ய முடியும். எனக்கும் டிபார்ட்மெண்ட்டுக்குள்ள எல்லாரையும் தெரியும் சார். ஒரு போன் போட்டா போதும் நீங்க இந்த ஏரியாவுல இருக்க முடியாது ”
“ ஓ சொல்லுங்க சார் உங்களுக்கு யார் தெரியும்னு நானும் பார்க்கிறேன். போன் பண்ணுங்க சார். நீங்க போன் பண்ணுங்க சார் எவன் என்னை என்ன செய்றான்னு நானும் பாக்குறேன். என்ன சார் முழிக்கிறீங்க மொபைல பேலன்ஸ் இல்லையா நான் வேணும்னா என் மொபைல தரட்டா சார்”
“ சார் வேண்டாம் ரொம்ப ஓவரா பண்றீங்க”
“ யாருடா ஓவரா பண்றது பிரைவேட் பைனான்ஸ் ஏஜென்சி சொல்லி நீ கந்து வட்டி கடை நடத்திட்டு என்ன சொல்லுவியா. கந்து வட்டி தொல்லை( அதீத வட்டி வசூல் தடை சட்டம்) (Charging Exorbitant Interest Act, 2003) தூக்கி உள்ள வச்சன்னு பாத்துக்க உன்ன வெளிய எடுக்க எவனும் வரமாட்டான். இதுல அந்த பாட்டி வேற இறந்திருக்கு. அவங்கள தற்கொலைக்கு தூண்டுனன்னு சொல்லி பத்து வருஷம் உள்ள கம்பி எண்ண வச்சிருவேன் பாத்துக்கோ”
(தமிழ்நாடு அரசு, அதீத வட்டி வசூலிப்பதைத் தடுக்க, தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம், 2003 என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, அதிக வட்டி வசூலிப்பது குற்றமாகும், மேலும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், யாராவது கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றால், தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்)
“எனக்கு யாரும் மேலையும் பயம் இல்ல. உன்னால முடிச்சத பாத்துக்க”என்று கோவமாக கத்தி விட்டு, “வாங்க சுப்பு இவனுக்கு இனி ஏழரை தான். உன்னால இந்த கேஸ்ல இருந்து வெளிய வர முடியும்னு எனக்கு தெரியும். ஆனா இனி உன்னோட ஒவ்வொரு மூவ்மென்டும் நான் வாட்ச் பண்ணிட்டு இருப்பேன். எதுலையாவது சிக்கமையா போவ இப்ப இருக்குடி உனக்கு” என்று அவரை மிரட்டி விட்டு சென்றான்.
போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவர், “ஐயோ கடவுளே என் பையன் நல்ல கவனிச்சு
அனுப்ப சொன்னான். நான் தேவையில்லாமல் பேசி சும்மா இருந்தவன சுரண்டி விட்ட மாதிரி பண்ணிட்டேன். இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சா அப்பான்னு கூட பாக்க மாட்டானே. அப்பனே கந்தா என்ன மட்டும் எப்படியாவது காப்பாத்து. உன் கோவிலுக்கு நடந்து வந்து மூடி காணிக்கை தரேன்” என்று முருகனிடம் வேண்டுதல் வைத்தார்.
“போடா எல்லா தப்பும் பண்ணிட்டு எல்லாரும் வந்து என்கிட்ட வேண்டுதல் வச்சா நான் அத சரி பண்ணி தரணுமா. போங்கடா நான் பண்ண மாட்டேன்”என்று காட் கந்தன் கோவித்துக் கொண்டு சென்றது பாவம் மிஸ்டர். கந்தனுக்கு தெரியவில்லை போல.
அவர் வேண்டுதல் வைத்து இரண்டு மாதம் கழித்து அவருக்கான முடிவு கலெக்சன் ஏஜென்ட் மூலமாக இந்திரா வீட்டு முன்பு நின்றது.
error: Content is protected !!