Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 16.2

“என்ன பாத்தா பொறுக்கி மாதிரி தெரியுறேனா?” கூர்மையாய் வந்தது அவன் வார்த்தை. ஒரு ஆணாய் அவள் செயல் அவனுடைய அகங்காரத்தை கேள்வி கேட்டது.

கோவில் மாடாய் தலை ஆட்டியவள், “ஐயோ இல்ல… நீங்க என் கால தொடுறது தப்பு சார்”

அகன்று விரிந்த அந்த ஈரம் போர்த்திய கண்களை தீர்க்கமாக பார்த்தவன், “நானும் சாதாரண மனுஷன் தான் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” அவனுக்கு மறுப்பு தெரிவிக்காமல் கையை விலக்கியவள் அவன் வேலையை தொடர அனுமதித்தாள்.

சிறிதும் யோசிக்காமல் அவள் கால்ச் சட்டையை அவன் தூக்க யாழினிக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. அவள் கால்களில் இருந்த ரோமங்கள் அவளை அவன் முன்னே தாழ்த்தியது. என்றும் அதனை அகற்ற அவளுக்கு தோன்றியதில்லை ஆனால் இன்று அதை நினைத்து தன்னையே கருவிக்கொண்டாள்.



Advertisement

அவளுக்கு தெரியவில்லை அவன் அவளது வெளி தோற்றத்தில் அவளிடம் சரியவில்லை அவளது குணத்தில் அவளிடத்தில் ஆழ்ந்து விழுந்திருக்கிறான் என்று. உதய் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவள் முழங்காலில் வடிந்த ரத்தத்தை துடைத்து காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தான். மருந்தின் எரிச்சலும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு துளியும் தெரியவில்லை…

“பாருங்க எப்படி ஆழமா காயம் இருக்குன்னு. இல்ல தெரியாம தான் கேக்குறேன் ஒரு வேலை செஞ்சா அதுல கவனம் இருக்குமா இருக்காதா??நடக்குறப்ப மேல கீழ பாத்து நடக்கணும். ஒவ்வொரு தடவையும் உங்க கூட ஒரு ஆள் வந்துட்டே இருக்க முடியுமா?”

அவன் பேச பேச சுயத்தை அடைந்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது… எதற்காக இவ்வாறு அவள் மீது அக்கறை காட்டி அவன் பக்கம் மேலும் இழுக்கிறான்? இவ்வாறு இருந்தால் அவளால் எப்படி அவனை விட்டு செல்ல மனம் வரும்?

Advertisement

வலியில் தான் அழுகிறாள் என்று நினைத்தவன் அவளை ஏறிட்டு பார்க்க அவளோ அவனை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்… ஒரு நொடி தான் அதில் விழுந்து எழுந்தவள் இமைகளை தாழ்த்தி, “நா வேலைய ரிசைன் பண்ணிற்றேன் சார்”

Advertisement

அவளது கூற்றின் அர்த்தம் தெரிந்தும் சிறிதும் களங்காதவன் சிரித்துக்கொண்டே, “லீவ் வேணும்னா கேளுங்க யாழினி இந்த சின்ன அடிய சாக்கா வச்சு எஸ்கேப் ஆக பிளான் போட்டுட்டீங்க?”

கண்களை அழுந்த துடைத்தவள் தலை அசைத்து, “இல்ல சார் நா வேலைல இருந்து நின்னுடறேன்”

அமைதியாக அவள் கைகளை பற்றி அதிலிருந்த சிறைபுகளுக்கு ஃக்லிசரினை தடவியவன், “ஏன்?” என்று அவளை பார்க்காமலே கேட்டான்.

Advertisement

“ஒழுங்கா வேலை செய்ய தெரியாதவங்களுக்கு எதுக்கு சார் நீங்க தேவ இல்லாம சாளரி குடுக்கணும்? நா போயிறேன் சார்”

“ம்ம்ம் பரவால்ல நல்ல முடிவு தான்”

‘என்ன நல்ல சாப்புடுனு போற போக்குல சொல்ற மாதிரி சொல்றாரு’ என்று எண்ணியவள் மீண்டும் மீண்டும் வழிந்துகொண்டே இருந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கினாள்.

“ஒகே அப்ப நெக்ஸ்ட் எந்த ஜாப் தேடுற ஐடியா? ஓ அந்த ஸ்டார் ஹோட்டல்ல சேந்துக்க நனைக்கிறிங்களா? சூப்பர். புள் டைம் ஒர்க் பண்ணுனா நல்ல சாளரியும் கெடக்கும்” இறுதியாக அவள் கைகளை முழுமையாக ஆராய்ந்தவன் திருப்தி அடைந்தவுடன் அவள் வதனத்தை பார்க்க அது சிவந்திருந்தது அழுகையில்.

“சார்” என்றாள் விசும்பலுடன்…

அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்ய, “ம்ம்ம்” என்றான் வண்டியில் இருந்து கீழே இறங்கி.

அவளும் எழ அதை தடுத்தவன் அமர்ந்தே கூறுமாறு சைகை செய்ய மீண்டும், “நா வேற வேளைக்கு போக போறேன் சார், அந்த ஹோட்டேல்க்கு இல்ல”

அவள் கண்களை நேருக்கு நேர் ஆழ்ந்து பார்த்து நின்றவன் தனது பாண்ட் பாக்கெட்டினுள் ஒரு கையை விட்டு, “போங்க” அவ்வளவே அவன் கூறியது… ஆனால் அவன் கண்கள், ‘போய் தான் பாரேன்’ என்று சவால் விட்டது.

அந்த தீர்க்கமான பார்வையிலிருந்து வெளி வர தெரியவில்லை அவளுக்கு… என்ன அவன் நினைக்கின்றான்? எதற்காக அவளை தடுக்கிறான்?

அறியாமல் விழித்தவளுக்கு பதில் கூறும் வகையில், “ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க மூணாவது நாள் ஆபீஸ்ல என்னோட ஸ்கேட்யுளோட நா வர்றதுக்கு முன்னாடி நீங்க அங்க இருக்கனும்… ம்ம்ம்ம்?”

தன்னுடன் ராணியை போல வைத்து பாதுகாக்க நினைக்கின்றவன் எதற்காக அவளை வேறு இடத்தில் வேலைக்கு அனுப்ப போகிறான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாததால் மட்டுமே அவளிடமிருந்து சற்று தயங்கி நிற்கின்றான்… அவள் மேல் உள்ள காதலை இன்னும் ஆழமாக உணர விரும்பியே இந்த இடைவேளை அவர்களுக்குள்.

“அப்ப இன்னொரு தடவ இந்த மாதிரி என்ன திட்ட கூடாது” சத்தியம் கேட்பது போல் அவன் முன்னே கை நீட்டி கேட்டவளை அடக்கப் பட்ட சிரிப்புடன் அவளுக்கு பதில் கூறாமல் முன்னிருக்கையில் சென்று அமர்ந்து வண்டியை அவள் வீட்டிற்கு விட்டான்.

எதற்காக அவளிடம் இவ்வளவு வீழ்ந்திருக்கிறான் என்று அறியவில்லை ஆனால் இந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது… அவளை ஒரு முறையாவது ஒரு மணி நேரத்தில் பார்த்துவிட வேண்டும் அவளது சிரிப்பு சத்தத்தை கேட்டால் தானே வயிறு வலிக்க சிரிப்பதாக உணர்வு… அவள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு சலித்துக்கொண்டே வேலைக்கு இடையில் விளக்கம் தருவதும் ஒரு வித ஆனந்தம் தான் அவனுக்கு…

தெரியாமல் செய்யும் தவறுகளை மறைக்கும் பொழுது திருட்டு முழி முழிக்கும் விழிகளும் அவனை தூண்டில் போட்டு இழுக்கும் வல்லமை பெற்றது… இடை வரை நீண்டு இருக்கும் கூந்தலை வேலை செய்யும் பொழுது முன்னே போட்டு அதை பாடாய் படுத்தும் விதமும் அவளுக்கு அழகே… சிறிதும் சாயபூச்சில்லாமல் மின்னும் கூர்நாசியும் அந்த மாநிற அழகிக்கு அழகே… மொத்தத்தில் அவளிடம் தலை முதல் கால் வரை அனைத்தையும் ரசித்து ரசித்து காதலில் விழுந்தான்…

பின்னால் அமர்ந்து, ‘திமிரு திமிரு ஒடம்பு முழுக்க திமிரு மட்டும் தான் இருக்கு. கேட்டதுக்கு பதில் வந்துச்சா பாரு. மலை குரங்கு’

ரிவ்யூ கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தே தன்னை தான் அர்ச்சித்து கொண்டிருக்கிறாள் என்று அறிந்தவன் அவள் வீடு வந்தும் அவளிடம் வார்த்தை பேசாமல் இருந்தான்…

“என் வீட்டுக்கு வரிங்களா யாழினி?” அவன் கேள்வி சட்டென அவளை எழுப்ப அதில் திடுக்கிட்டு கண்களை சிமிட்டி, “அஹ?” என்றாள் அவனை பார்த்து.

அவன் கேட்ட கேள்விக்கு இரண்டு அர்த்தம் அவனுக்கு மட்டுமே புரிந்திருக்க, ‘மக்கு’ செல்லமாக அவளை மனதில் திட்டி, “வீடு வந்துருச்சு”

ஓ என்று வாயை வைத்தவள் அமைதியாக இறங்கினால் அவனை பார்க்க சங்கடத்துடன், “தேங்க்ஸ் சார்” அவள் சிவந்த உதடுகளையே பார்த்து நின்றவனுக்கு போதை ஏறியது. அந்த உதடுகளை சுவைக்க ஆசை வளர்ந்து கொண்டே செல்ல… அதை தடுக்கும் பொருட்டு வெறும் தலை அசைப்பை மட்டும் அவளுக்கு தந்து சீறி பாய்ந்தான் அவன் ஆடி காரில்.

வீட்டிற்கு ஒரு வித நிம்மதியுடன் சென்றவனுக்கு இரவு மீட்டிங்ஸ் வரிசையாக மூன்று இருந்தது. நண்பனிடமிருந்து எண்ணத்தை திசை திருப்ப அதை அழகாய் பயன்படுத்தி கொண்டான். பொதுவாக இது போன்ற இரவில் நடக்கும் மீட்டிங்களை அவன் தந்தையும், சித்தப்பாவும் தான் பார்த்து கொள்வார்கள் ஆனால் அவர்களுக்கு ஓய்வு அவசியமாக இருக்க தானே அதையும் பார்த்து கொள்வதாக கூறி உதய்யே இன்று வரை அனைத்தையும் பார்த்து கொள்கிறான்.

இரவு இரண்டு மணியை தாண்டியும் உதய் தன்னுடைய ஆபீஸ் ரூமிலிருந்து வெளி வராமல் இருக்க ஜெயனும் தன் தூக்கத்தை தொலைத்து வெளியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். கையில் ஆதியும் விஷ்ணுவும் இருக்கும் புகைப்படம், மற்றொரு கையில் ஆதி சிறைச்சாலையில் துவண்டு கிடைக்கும் புகைப்படம்.

உள்ளே செல்லாது வெளியிலேயே மனம் பொறுக்காது காத்து நின்றான்… உதய்யின் குடும்ப லாயர்களில் ஒருவரை தொடர்பு கொண்டவன் அவரது அலைபேசி இணைக்கப்படாமல் இருக்க வேறு வழிகளை தேட ஆரமித்தான். ஆனால் இந்த நேரத்தில் உதய்யின் வழிகாட்டுதல் அவனுக்கு அவசியமாய் இருக்க செய்வதறியாது தவித்தான். நிச்சயம் ஆதியின் நிலையை பார்த்தல் துவண்டு விடுவான்…

*********************

வாசலை மீண்டும் மீண்டும் பார்த்து நின்ற சஞ்சனாவிற்கு நிமிடம் கடக்க கடக்க பயம் கூடி கொண்டே சென்றது. ஒரு புறம் அழுகையும் சேர்ந்து கொள்ள தேற்றார் இல்லாமல் தவித்து நின்றாள். பல முறை கௌதமிற்கும் தமிழிற்கும் அழைத்து பார்த்தும் இருவரது அலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது… ஆதிக்கு அழைத்தால் நாட் ரீச்சப்பில்… தமிழ் வீட்டாரையோ, கெளதம் வீட்டாரையோ இன்னேரம் எழுப்பி அவர்களையும் பதட்ட பட வைக்க விரும்பவில்லை… ஆதியின் பழைய டைரியை தேடியவள் அதில் உதய்யின் வீட்டு எண்ணை எடுத்து அழைத்தாள்… வழக்கம் போலே தமிழ் உளறியதிலிருந்து உதய்யை சென்று பாத்திருக்கிறான் என்று அறிந்து கொண்டாள் அதனாலேயே உதய்யின் எண்ணிற்கு இந்த முயற்சி. அந்த எண் உதய்யின் பழைய வீட்டின் லேண்ட் லைன் நம்பர்…

இரவில் வாசலில் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்த ஜெயனின் எண்ணங்களை குறுக்கிட்டு அந்த ரிங் சத்தம் வீட்டின் அமைதியை குலைக்க வேகமாக அதை எடுத்தான்.

“ஹலோ” அந்த பக்கமிருந்து ஒரு பெண்ணின் பதட்டமும், தயக்கமும் நிறைந்த அழுகை குரல்.

“ஹலோ யார் நீங்க?” என்றான் ஜெயன்.

“உதய் அண்ணா கிட்ட பேசணும் ப்ளீஸ் போன்ன குடுக்குறீங்களா?” என்றாள் சஞ்சனா.

அவள் பதட்டத்தை உணர்ந்தவன், “மேடம் பதட்ட படாதீங்க. நா சாரோட பி.எ தான் சார் மீட்டிங்ல இருக்காரு இப்ப அவர் கிட்ட பேச முடியாது. நீங்க யார், என்ன விசியம்னு சொல்லுங்க நா சார் கிட்ட மார்னிங் சொல்றேன்”

“இல்ல ப்ளீஸ் நா இப்பயே பேசணும்… ப்ளீஸ் போன்ன குடுங்க முக்கியமான விசியம்”

மற்ற நேரமாக இருந்தால் இன்னேரம் அவனே உதய்யை அழைத்திருப்பான் ஆனால் இப்பொழுது அணைத்து பிரச்சனைகளுக்கு முன்னாள் ஆதியின் நிலை அவனை தடுத்தது, “மேடம் புரிஞ்சுக்கோங்க சார இப்ப பாக்க கூட முடியாது”

தனது நிலையை எண்ணி அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு. வீட்டை விட்டு இநேரத்தில் செல்லவும் முடியாமல் தொண்டை அடைத்தது வேறு வழியே இல்லாமல், “உதய் அண்ணா பிரண்ட் ஆதவன் நம்பர் இருக்கா உங்க கிட்ட?” இனி அவன் தான் இறுதி வாய்ப்பு என்று அவனது உதவியை நாட துணிந்தாள்…

ஜெயனிடமிருந்து எண்ணை குறித்து கொண்டவள் வேகமாக அவனுக்கு அழைத்தாள்… அந்த பக்கம் தூக்கத்தில் இருந்த ஆதவனோ அலைபேசியை பார்க்காமலே அன்டன் செய்து காதில் வைத்து, “டேய் புண்ணாக்கு ஆமாடா நா அந்த பைலை முடிக்கல அதுக்கு இப்ப என்ன? நாளைக்கு வந்து சைன் பண்றேன். வை டா பேமானி” என்று வசை பாடி அணைப்பை துண்டித்தான்…

சஹானாவிற்கு அவள் நிலைமை மோசமாகி கொண்டே செல்வது போன்ற எண்ணம். ஆதியின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைக்க விரும்பாதவள் மீண்டும் ஆதவனுக்கு அழைத்தாள்.

“தாங்கள் அழைக்கும் உயர்திரு ஆதவன் தற்பொழு…” தூக்கத்தில் உளறிய ஆதவனை தடுத்து நிறுத்தியது அவள் அழுகுரல், “நா சஹானா”

அவள் குரலையும் போரையும் கேட்டது தான் தாமதம் படுத்திருந்த இடத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தவன் தொண்டையை செருமி, “சொல்லு சஹானா என்ன இந்த நேரத்துல கால் எதாவது பிரச்சனையா?”

அழுகையை கட்டுப்படுத்திய குரலில், “ஆமா அண்ணே இன்னும் வீட்டுக்கு வரல தமிழ் அண்ணா, கெளதம் அண்ணா கால் எடுக்க மாட்டிக்கிறாங்க ப்ளீஸ் எதாவது அண்ணாவை பத்தி உங்களுக்கு தெரியுமா உங்க கூட தான் இருக்காங்களா பக்கத்துல இருந்தா போன் குடுங்களேன் ப்ளீஸ்”

சிறு குழந்தையாய் சகோதரனை தேடி அழுதாள்… அவள் அழுகையை கேக்க புடிக்காதவன், “ஆதி இங்க இல்ல சஹானா நீ பயப்புடாம தூங்கு அவன் எங்கயாவது தண்ணி அடிச்சிட்டு இருப்பான் காலைல வந்துருவான்”

மறுப்பாய் தலை அசைத்து, “இல்ல அண்ணா எப்பயுமே இப்டி பண்ண மாட்டான். போதைல இருந்தாலும் வீட்டுக்கு கரெக்ட்டா வந்துருவான் அப்டியே வரலைனா எனக்கு கால் பண்ணி சொல்லிடுவான். என்னமோ தப்பா நடந்துருக்கு ப்ளீஸ் கொஞ்சம் பாருங்க. ப்ளீஸ் உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்”

“சரி அழுகாத நா பாக்குறேன் என்னனு” படுக்கியிலிருந்து எழுந்து ஒரு டீ-ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டே காரை அடைந்தவன், “உங்க வீடு அட்ரஸ் என்ன?”

திக்கி திக்கி முகவரியை கூற அவளுடன் ஆதியை பற்றி கேட்டு கொண்டே ஆதியின் வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் தேடி பார்த்தான் ஆனால் எங்கும் அவனை காணவில்லை.

“அண்ணாவை பாத்துட்டீங்களா?” ஒரு ஏக்கத்துடன் கேட்டாள் சஹானா.

“ம்ம்ஹ்ம்ம்ம் இன்னும் இல்ல”

“உதய் அண்ணா கிட்ட கால் பண்ணி கேளுங்க நா கால் பண்ணேன் பிஸியா இருக்காங்கனு சொன்னாங்க உதய் அன்னைக்கு தெரிஞ்சிருக்கும் ப்ளீஸ்” இதோடு எட்டாவது முறை இதையே கூறுகிறாள்.

“ஏய் என்னடி ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா நான் தான் அப்பயே சொன்னேன்ல ரெண்டு பேரும் சண்டை தான் போட்ருக்காங்க இன்னும் கொஞ்சி குலையிற அளவுக்கு இல்லன்னு… உன் அண்ணன் தான் இப்புடி எங்கயாவது போய் என் உயிரை வாங்குறானா நீயும் நொய்யி நொய்யின்னு ராத்திரி நேரத்துல கேள்வி கேட்டு சாவடிக்காத” என்று அணைப்பை துண்டித்து கைபேசியை அருகில் இருந்த இருக்கையில் எறிந்தான்.

சஹானா நினைவிலிருந்து மறைந்திருந்தாள் அந்த நேரம்… அவனுக்கு இப்பொழுது ஆதியை கண்களால் காண வேண்டும்… அவன் நலமாக உள்ளான் என்ற செய்தி செவிகளை எட்ட வேண்டும் அவ்வளவே. தெரு தெருவாக அந்த பகுதி முழுவதும் அலைந்து திரிந்தவனின் கண்களுக்கு தனியே நடந்து வரும் பெண் உருவம் தெரிந்தது. வண்டியின் வேகத்தை குறைத்த பொழுது தான் உணர்ந்தான் அது சஹானா என்று… எத்தனை வருடங்கள் கழிந்து பார்க்கிறான் அவளை… இருளிலும் அழுதழுது சிவந்த மூக்கும் பயத்தில் அலைபாயும் விழிகளும் அவனை கட்டி இழுக்க அவளை முழுமையாய் ஆராய்ந்தவனுக்கு அப்பொழுது தான் தெரிந்தது இளமையில் இருந்த அந்த அப்பாவித்தனம் இன்னும் அவள் முகத்தில் வசீகரத்தை குடிவைத்திருந்தது…

அவள் அருகே வந்து வண்டியை நிறுத்தியவன் மறுபுறம் இருந்த கதவை திறந்து அவளை அமர சொன்னான். அவனை சிவந்த விழிகளுடன் பார்த்தவள் அவனை கண்டு கொள்ளாதது போல் வேகமாக நடக்க துவங்கினாள்.

‘அண்ணனுக்கு இருக்க திமிரு கொஞ்சமாவது இருக்காதா பின்ன?’ மனதில் திட்டியவன் மீண்டும் அவள் முன்னே வண்டியை வளைத்து நிறுத்தினான்.

அவனை பார்க்காமல் வேறு புறம் பார்வையை செலுத்தி நிற்க, “வண்டில ஏறுடி”

மாட்டேன் என்றவள் சிறு குரலில், “நான் என் அண்ணன தேடணும் வழி விடுங்க”

“அதுக்கு தான் நானும் கூப்புடுறேன் வண்டில ஏறு”

“இல்ல நானே பாத்துக்குறேன் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”

“ம்ம்ம் நடு ராத்திரில இப்புடி தனியா ரோடு ரோடா போக போறியா?”

“ஏன் போக கூடாதா? எனக்குன்னு இருக்கது என் அண்ணன் மட்டும் தான் வேற யார்கிட்ட நான் போய் உதவி கேக்க முடியும் அப்புடியே கேட்டாலும் அவங்க உயிரை வாங்குற மாதிரி இருக்கும்”

அருவியாக கொட்டிய கண்ணீரை துடைக்க சென்ற கைகளை தன் கரத்தில் போர்த்தியவன், “சாரிடி ஆதியை காணம்னு தெரிஞ்சதுல இருந்து ரொம்ப டென்ஷனா இருக்குது”

அனிச்சையாக அவனிடமிருந்து கையை பிரித்தெடுத்தவள் பின்னே இரண்டடி சென்று, “என்ன… என்ன நீ… நீங்க டி போட்டு பேசுறி… பேசுறீங்க” அவள் ஒதுக்கத்தில் கோவம் தலை தூக்க தலையை அழுத்தி கோதி ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து, “சரி வண்டில ஏறு”

“இல்ல நா போகிறேன்”

“அம்மா தாயே என்ன இப்ப உன் கால்ல நான் விழுகணுமா? விழுந்தா வண்டில ஏறுவியா?” அவள் காலை நோக்கி இரு கையையும் குனிவதை பார்த்தவள் வேகமாக ஓடி சென்று காரினுள் அமர்ந்தாள். அவள் ஓடியதை பார்த்தவன் சுற்றும் முற்றும் எவரேனும் பார்க்கிறார்களா என்று பார்க்க ‘நல்ல வேளை யாரும் இல்ல’ மனதிலே சந்தோசம் அடைந்தவன் வேகமாக வண்டியை அவள் வீட்டிற்கு கிளப்பி பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்க கூறினான்.

“இல்ல நான் வர்றேன். உதய் அண்ணாகிட்ட எனக்கு போன் பண்ணி குடுங்க நான் ஒரே ஒரு தடவ பேசுறேன் ப்ளீஸ்”

அவளது தொல்லை தாங்காமல் உதய்க்கு அழைத்து அவளிடம் தனது தொலைபேசியை குடித்தான். ரிங் சென்று கொண்டே இருந்தது ஆனால் உதய் அழைப்பை ஏற்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தாள் அதில் பொறுமை இழந்த ஆதவன் வெடுக்கென கைபேசியை வாங்கினான்.

“ப்ளீஸ் இன்னும் ஒரே ஒரு தடவ மட்டும்” கெஞ்சியவளின் அருகில் சென்று இறுக்கமான குரலில், “என்ன கல்யாணம் பண்ணிக்க போற போல?” என்றான் கோவத்தை கண்களில் தேக்கி.

சிறு வயதிலிருந்தே சஹானா என்றால் அவனுக்கு தனி பிரியம். அவனை விட ஐந்து வயது சிறியவள் ஆனால் அந்த சிறு வயதிலே அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தாள் அவளது அப்பாவித்தனத்துடன். ஆதியின் தாய் தந்தை ஆதி ஒன்பதாவது வகுப்பில் மறைந்திட அவளை பார்ப்பதும் குறைந்தது… அவளை பார்க்க வேண்டும் என்னும் சாக்கில் ஆதியை அடிக்கடி நேரில் சென்று சந்திக்க ஆரமித்தான் ஆனால் அவளது வயதை காரணமாக வைத்து சில நாட்கள் அவளை விட்டு மனதை மாற்ற நினைத்தான்…

விதி நண்பர்களை இரண்டாக பிரித்தது அதில் சஹானாவை முழுவதாக பிரியவேண்டி ஆகியது. பிறகு உதய்க்கு துணையாக லண்டன் செல்ல இரண்டு ஆண்டுகள் பிறகு தான் அவளை பார்த்தான் அப்பொழுது ஒன்பதாவது வகுப்பில் இருந்த சஹானா சிறு குழந்தையாய் இல்லாமல் குமரியாய் மீண்டும் அவன் மனதை வேறு பெண்களிடம் செல்லாமல் சிறை பிடித்தாள்.

அன்று பார்த்தது தான் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறான்… இத்தனை வருடங்கள் கழிந்து பார்பவளை எளிதாக வேறு ஒருவனுக்கு கொடுக்க துளியும் மனம் இல்லை… குறிப்பாக கூற வேண்டுமென்றால் அதை நினைக்கையில் மனதில் ஒரு இனம்புரியாத வலி… ஆதியை பற்றி எல்லாம் அவனுக்கு கவலை இல்லை அவனை எவ்வாறேனும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை ஆனால் இந்த சில்வண்டிடம் சம்மதம் வாங்குவது தான் பெருத்த சிரமம் என்பதை புரிந்து கொண்டான் பார்த்த சில நொடிகளிலே.

அவனது நெருக்கத்தில் தடுமாறியவள், “இல்… இல்ல எனக்கு தெரிய… எனக்கு தெரியல”

“ம்ம்ம்ம்… கொன்னுடுவேன் வேற எவனயாச்சும் கல்யாணம் பண்ண நெனச்சனா… ம்ம்ம் புரியுதா?”

“ஏன் இப்டி பே….”

அவளை இடைமறிக்க மீண்டும் ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்து வீட்டின் நிலைக்கதவின் அருகில் நின்றிருந்தவளின் இருபுறமும் அணையாய் கைகளை வைத்தவன், “என்ன என்னமோ சொல்ல வந்த?” என்றான் கிரங்கிய நலிந்த குரலில்…

வேகமாய் இல்லை என்று தலை ஆட்டி, “யாரவது பாக்… பாக்க போறாங்க தள்ளி நில்லு… நில்லுங்க” அவளுடன் கிடைத்த முதல் நெருக்கம் தந்த சுகத்தில் திருப்த்தி அடைந்து விலகினான்….

“ம்ம்ம் இப்ப சொல்லு… வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறியா?”

எதற்காக இவ்வாறு பேசுகிறான் என்று புரிந்தும் புரியாமலும் அவள் சுவற்றோடு ஒட்டி நிற்க அவள் முகத்திலிருந்த சந்தேகத்தை பார்த்து திருப்த்தி அடைந்தவன், “உள்ள போய் கதவை சாத்திடு படு” என்று ஆணையிட்டு வெளியில் சென்றான் ஆதியை தேடி…

MMM solunga paa chapter epdi irunthuchu?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!