Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

அத்தியாயம் -18- part-2

part-2

இருவரின் சம்பாஷணைகளும், இன்றே உலகத்தின் கடைசி நாள் என்பது போல தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.



Advertisement

இறுதியில் பேசி, பேசி களைத்து போக, அவர்களை உறக்கம் உறங்காமல் அணைத்து கொண்டது. இருவரின் நெருக்கத்தில் காதல் நெருக்கமாக அணைத்து கொள்ள, எந்த வித கலக்கமும் இல்லாது நிம்மதியாக உறங்கினர் வெற்றியும், வெண்பாவும்.

ஆதவனின் பொற்கரங்கள் பூமி மகளின் மீது, படர்ந்து அரவணைத்து கொண்ட விடியல் அழகாய் ஆரம்பமாக, விசாலாட்சி அவரது அறையில் இருந்து வெளியே வந்தார்.

Advertisement

Advertisement

இன்று என்ன சமைக்கலாம் என்று யோசித்தப்படியே அவர் நடந்து வர, அங்கே ஹாலில், கன்னத்தில் கைவைத்தப்படி, கண்ணின் இமைகளை கூட அசைக்காமல், வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நாச்சியாரை கண்டதும் ஒரு நொடி அவருக்கு பகீர் என்றாகி விட்டது.

யாரோ, எவரோ என பயந்து போனவர் அது நாச்சியர் தான் என்றதும்,

Advertisement

“ஏன் அத்தே! ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? சட்டுனு பார்த்ததும், நான் பயந்தே போயிட்டேன்” என்றதும்,

அவரை திரும்பி பார்த்த நாச்சியார் மீண்டும் முன்பு போல அமர்ந்து கொள்ள, அவரருகில் வந்த விசாலாட்சியோ,

“என்னாச்சு அத்தே? உடம்பு ஏதும் சரியில்லையா? என அவர் உடம்பை தொட்டு பார்த்தார்.

“கையை எடு டி. எல்லாம் நல்ல தான் இருக்கு” என அவர் கையை தட்டி விட, விசாலாட்சிக்கு அவர் செய்கை கோபத்தை கொடுத்தது. இருந்தும் அடக்கி கொண்டு,

“இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு? காலையில் இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா என்ன அர்த்தம்?” என அவர் சற்று கட்டமாகவே கேட்டார்.

“இந்த வீட்டில் ஏதாவது ஒரு விஷயம் நல்லதா நடக்குதா? எல்லாமே எக்கு தப்பா தான் நடக்குது” என்று நாச்சியார் புலம்ப, அவரை புரியாமல் பார்த்தார் விசாலாட்சி.

“என்ன அப்படி பார்க்கிற? எல்லாத்துக்கும் நீதான் காரணம்” என அவரை பழி சொல்ல, அவரோ 

“நானா?” நான் என்ன பண்ணேன்? என்று கேட்டார்.

“நீ எதையும் ஒழுங்கா பண்ணாததால் தான், எல்லா பிரச்சனையும். 

நேத்து தானே உன் பையனுக்கு கல்யாணம் ஆச்சு. அந்த நியாபகம் கொஞ்சமாச்சும் உனக்கு இருந்துச்சா? நீ பாட்டுக்கு தூங்க போய்ட்ட. உன் பிள்ளையும் அவன் கட்டிக்கிட்டு வந்தவளும் என்ன பண்ணாங்க தெரியுமா?”

என அவர் புலம்ப,

“என்ன பண்ணாங்க?” என அவரையே திரும்பி கேட்டார் விசாலாட்சி.

“ரெண்டு பேரும் ஒரே ரூமில் தூங்க போயிட்டாங்க. தெரியுமா உனக்கு?” என்றதும் அவருக்கோ மீண்டும் குழப்பமாக இருந்தது.

“என்ன சொல்றீங்க? மீனாட்சி கூட தானே வெண்பாவை தூங்க சொன்னேன். ஒரு வேளை வெற்றி லேட்டா வந்திருப்பான். அதனால் அவன் கூட தூங்க போய்ட்டா போல. சரி விடுங்க எங்க தூங்கினா என்ன? எல்லாம் நம்ம வீடு தானே!! இதுக்கா இவ்வளவு கோபப்படுறீங்க? வர வர உங்களுக்கு எல்லாத்துக்கும் கோபம் அதிகமா வருது அத்தே.  உங்க உடம்புக்கு நல்லதில்லை அவ்வளவு தான் சொல்லுவேன்” என அவர் புரியாமல் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல, தலையிலேயே அடித்து கொண்டார் நாச்சியார்.

“ஏன் டி? மூணு புள்ள பெத்தவ மாதிரியா பேசுற நீ? வெற்றியும், அவளும் ஒன்னா ஒரே ரூமில் தூங்க போய்ட்டாங்க சொல்றேன். அப்போ கூட புரியாமல் பேசுற” என மீண்டும் அதையே நாச்சியார் கூற, தற்பொழுதும் விசாலாட்சிக்கு புரியவில்லை.

“நேத்து தானே அவங்களுக்கு கல்யாணம் ஆச்சு, அதனால, வெற்றி, வெண்பா கிட்டா இனி நீ என் ரூமில் தான் தூங்கனும் சொல்லி அவளை கூட்டிட்டு போய்ட்டான். நேத்து ராத்திரி முழுக்க, அவங்க ஒன்னா தான் இருந்தாங்க. இப்பவாவது புரியுதா உனக்கு?”

என நாச்சியார் விளக்க, தற்பொழுது தான் விசாலாட்சிக்கு புரியவே ஆரம்பித்தது.

“ஆமாம்ல, இந்த விஷயம் எனக்கு நியாபகத்தில் வரவே இல்ல அத்தே. நல்ல நேரம் பார்த்து சொல்லி இருப்பேன். அதுக்குள் இவங்களா இப்படி பண்ணுவாங்கனு யோசிக்கல” என அவர் கூற,

“உனக்கு எது தான் நியாபகத்தில் இருக்கு. எல்லாமே மறந்து தான் போகுது. உன்னை வச்சுட்டு என்னத்த நான் சொல்ல?

பாரு இன்னும் ரெண்டு பேரும் எழுந்து வரல. போய் கதவை தட்டி எழுப்பி விடு. அப்படியே அவளை என்னன்னு கேளு. அவன் தான் கூப்பிட்டான்னா, இவளுக்கு எங்க போச்சு அறிவுனு கேளு. வர கோபத்துக்கு எனக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைக்கணும் போல இருக்கு”

என நாச்சியார் கோபமாய் கத்தி கொண்டிருந்தார்.

“சரி விடுங்க அத்தே! நாம யோசிச்சு செஞ்சு இருக்கணும். நாம எதுவும் செய்யல, அதனால் அவங்களே இப்படி பண்ணிட்டாங்க. இப்போ கோபப்படுறதால என்ன ஆக போகுது சொல்லுங்க. வரட்டும் நான் வெண்பா கிட்ட விசாரிக்கிறேன். இப்போ எதுவும் பேசாதீங்க, பிள்ளைங்க எழுந்து வர நேரம் இந்த நேரத்தில் இதை பத்தி பேச வேண்டாம். இருங்க நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்”

என அவரை சமாதானம் செய்து விட்டு உள்ளே சென்று விட்டார் விசாலாட்சி.

என்ன சொன்னாலும், நாச்சியார் கோபம் குறையாது தான் இருந்தார். அனைவரும் எழுந்து அவரவர் வேலைகளை பார்க்க, வெற்றியும் வெண்பாவும் மட்டும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. நாச்சியார் வேறு அடிக்கடி அவர்கள் அறையை பார்த்து பொருமி கொண்டிருக்க, இதனை கண்ட விசாலாட்சிக்கு தான் தவிப்பாக இருந்தது.

‘இந்த பொண்ணு சீக்கிரம் எழுந்து வர கூடாது. இந்தம்மா வேற என்ன பிரச்சனை ஆரம்பிக்கும்னே தெரியலையே! என அவர் மனதோடு புலம்பி கொண்டே இருந்தார்.

வெகு நேரம் கழித்தே கண் விழித்தாள் வெண்பா. தன்னை இறுக்கி கட்டியணைத்தப்படி உறங்கி கொண்டிருந்த, வெற்றியை திரும்பி பார்த்தவள், புன்னகையுடன் எழுந்து, குளியலறைக்குள் செல்ல முனைய, வெற்றி அவளை போக விடாமல் பிடித்து கொண்டான்.

“விடுங்க மாமா, நேரமாச்சு..” என பிடியில் இருந்து விடுபட்டு நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

குளித்து முடித்த பின்னர் தான் அவளுக்கு நியாபகமே வந்தது, மாற்று உடை மீனாட்சி அறையிலே இருப்பது.

மெல்ல குளியலறையில் இருந்து எட்டி பார்க்க, வெற்றி கண் மூடி படுத்திருந்தான்.

“மாமா” என மெல்ல குரல் கொடுக்க, கண் விழித்தவன், 

“என்ன தமிழ்?” என்றதும்,

“என் ட்ரெஸ் எல்லாம்  மீனாட்சி ரூமில் இருக்கு. அதை கொஞ்சம் எடுத்துட்டு வர சொல்றீங்களா?” என தயங்கி தயங்கி கேட்க,

“அப்போ பிரீயா தான் இருக்க, நான் உள்ளே வரலாமா?” என அவன் அவளிடம் வம்பு செய்ய, வெட்கத்தில் தலைகுனிந்து கொண்டாள் வெண்பா.

“மாமா, ஏற்க்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு. நீங்க வேற வம்பு பண்ணிட்டு இருக்காதீங்க. வள்ளி அக்கா கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்லுங்க”என அவள் தவிக்க, 

“வள்ளி அக்கா எதுக்கு? நானே போய் எடுத்துட்டு வரேன்” என அவனே கிளம்பினான்.

“ஐயோ நீங்க எதுக்கு? யாராச்சும் பார்த்தா தப்பா நினைக்க போறாங்க. அம்மாச்சி மட்டும் பார்த்துட்டாங்க, நான் அவ்வளவு தான். நீ யார்கிட்டயாவது சொல்லி விடுங்க” என மீண்டும் வலியுறுத்த, அவன் காதில் வாங்கவே இல்லை.

“இதென்ன கதையா இருக்கு. என் பொண்டாட்டிக்கு நான் செய்யுறேன். மத்தவங்க என்ன சொல்றது? நான் தான் போய் எடுத்துட்டு வருவேன்”

என்றவன் அறையை விட்டு வெளிவர, நாச்சியார் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தார்.

கீழே வந்தவன், மீனாட்சி அறையின் வாசலில் நின்று,

“மீனாட்சி” என குரல் கொடுக்க, அறையை விட்டு வெளி வந்தாள் மீனாட்சி.

“என்ன அண்ணே? என்று கேட்டவளிடம்,

“தமிழோட ட்ரெஸ் பேக் இருக்குல, அதை எடுத்துட்டு கொடு” என்றதும் அவளும் உள்ளே சென்று எடுத்துட்டு வந்து கொடுத்தாள்.

அதனை வாங்கி கொண்டவன், எடுத்து கொண்டு மேலே செல்ல முனைய, நாச்சியாரோ,

“வெற்றி.., என்ன டா இது?” என அவனை தடுத்து நிறுத்தினார்.

“இதுவா அப்பத்தா, தமிழோட ட்ரெஸ்” என அவன் சாதரணமாக பதில் அளிக்க, 

“ஏன் பா, நீ போய் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்க, அவ என்ன மகாராணியா? அவ துணிமணியை அவளே எடுத்துட்டு போக முடியாதாக்கும். கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள் என் பேரனை இப்படி வேலை வாங்குறாளே!! இதை எங்க போய் சொல்லுவேன். இதுக்கு தான் நம்ம தகுதி தரம் பார்த்து கல்யாணம் பண்ணனும். இது தேவையா உனக்கு? என்றவரிடம், 

“அப்பத்தா, இப்போ என்னாச்சுன்னு இப்படி பேசுறீங்க? அவ ட்ரெஸ் இங்க இருக்கு. எப்படி துணி மாத்துவா? அதான் எடுத்துட்டு போறேன். எனக்கு தமிழை பிடிச்சதால் தான் கல்யாணம் பண்ணேன். அவளுக்கு செய்யுறதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை” என அவருக்கு பதில் கூறியவன், மேலேறி சென்று விட, நாச்சியார் செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தார்.

தன்னையே இப்படி எதிர்த்து பேசிவிட்டு போகிறானே என அவர் வேதனைப்பட்டு கொண்டிருந்தார்.

அறைக்கு வந்தவன், அவளது துணியை எடுத்து கொடுக்க, உடை மாற்றி கொண்டு வெளியே வந்தவள், அறையை விட்டு வெளி வந்தாள்.

மாடி இறங்கி கீழே வந்தவள் முதலில் கண்டது நாச்சியாரை தான். கண்களாலையே அவளை எரிப்பது போல பார்க்க, வெண்பாவிற்கோ படப்படவென வந்தது.

அமைதியாக சமையலறைகுள் நுழைந்து கொண்டாள். அங்கு விசாலாட்சி வேலை செய்து கொண்டிருக்க அவரருகில் சென்றவள்,

“மன்னிச்சுடுங்க அத்தே, நேரமாகிடுச்சு” என கூற, அவரோ,

“சரி அதெல்லாம் இருக்கட்டும். நயிட் உன்னை மீனாட்சி ரூமில் தானே தூங்க சொன்னேன். வெற்றி ரூமுக்கு ஏன் போன?.அதுக்குள் என்ன அவசரம்? நாங்க பார்த்து பண்ண மாட்டோமா?” என அவர் கேட்க, தலையை குனிந்து கொண்டாள் வெண்பா. வெற்றியை சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு 

“உங்க அம்மாச்சி நீ வெற்றி கூட போனதை பார்த்துட்டு இருக்காங்க. ஏற்க்கனவே ஆடுவாங்க. இதில் சலங்கையை வேற கட்டி விட்டுடீங்க. ருத்ர தாண்டமே இருக்கு. நான் என்ன சொல்றது? பெரியவங்க பேச்சை யாரும் மதிக்கிறது இல்லை. எல்லாம் அவங்கவங்க இஷ்டமா போச்சு. கல்யாணம், சாந்தி முகூர்த்தம்னு எல்லாம் நீங்களே முடிவு பண்ணி பண்ணிக்கிறீங்க. எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்றதில்லை.

என் கிட்ட சொன்னா, நான் என்ன செய்யாமலா போக போறேன். என் பிள்ளையையும், மருமகளையும் பிரிச்சு வைக்கவா நினைக்க போறேன். என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நல்ல நேரம் பார்த்து சொல்லி இருப்பேன். ஹ்ம்ம் என்ன பண்றது? எனக்கு எதுக்குமே கொடுத்து வைகல” என அவர் கூறி கொண்டே போக, வெண்பாவிற்கு கண் கலங்கியது.

அவர் கூறுவது எல்லாமே நியாயம் தான். அவரது ஆதங்கம் சரியானது. தவறு இவர்களுடையது தானே!! வருத்தமாக இருந்தது அவளுக்கு. கண்ணீரை உள் இழுத்தப்படி வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.

அதற்குள் வெற்றியும் தயாராகி வர, அவனையும் பிடித்து கொண்டார் விசாலாட்சி.

“ஏன் வெற்றி, கல்யாணம் தான் எங்க விருப்பப்படி பண்ணல. பொசுக்குன்னு தாலி எடுத்து கட்டிட்ட, இதுக்காவது நாங்க நாள் கிழமை பார்த்து சொல்லுவோம்ல, அதுக்குள் உனக்கு என்ன அவசரம்?” என அவர் கோபப்பட, 

“ம்மா, அப்பத்தா தான் நான் தமிழை கூட்டிட்டு போகும் போது பார்த்தாங்களே! அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கின பின்னாடி தானே நாங்க ரூமுக்கே போனோம்” என அவன் அப்படியே நாச்சியார் பக்கம் திருப்பி விட, ஒரே குழப்பமாக இருந்தது நாச்சியாருக்கு.

“என்ன? நானா? நான் எப்போ ஆசீர்வாதம் பண்ணேன்? என்ன வெற்றி உளருற? “ என நாச்சியார் கேட்க,

“ம்மா, அப்பத்தாக்கு நியாபகம மறதி அதிகமாகிடுச்சு. நேத்து நயிட் நான் வந்தேனா, தமிழ் எனக்காக காத்துட்டு இருந்தாளா, ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டோமா, அப்போ அப்பத்தா நீங்க தூக்கம் வராமல் எழுந்து வெளியே வந்தீங்க தானே!!” என கேட்க,

“ஆமாம் வந்தேன்” என்றார் நாச்சியார்.

“அப்புறம், எங்களை பார்த்ததும் உள்ளே போய்டீங்க. 

“ஆமாம் போனேன்” 

“அப்புறம் தூங்க போலாம் சொல்லும் போது, தமிழ் மீனாட்சி ரூமுக்கு போனாளா, நீங்க மறுபடியும் வெளியே வந்து பார்த்தீங்களா”

“ஆமாம் பார்த்தேன் தான்.

“அப்புறம் தமிழை பார்த்து, கல்யாணம் ஆகிடுச்சு, அப்புறம் எதுக்கு நீ மீனாட்சி ரூமுக்கு போற, வெற்றி ரூமுக்கு போனு நீங்க தானே சொன்னீங்க” என்றதும்

தொடர்ந்து அதே போல சொன்னதில்

“ஆமாம் சொன்னேன் தான்” என்று  கூறிவிட்டார்  நாச்சியார்.

“பார்த்தீங்களா! நான் சொன்னேன்ல, அப்பத்தா தான் சொன்னாங்கனு” என வெற்றி கூற,

“இல்ல.., இல்ல.., நான் எதுவும் சொல்லல”  என பதறினார் நாச்சியார்.

“இப்போ தானே நான் தான் அப்படி சொன்னேன் சொன்னீங்க” என வெற்றி கேட்க, விசாலாட்சியும்

“ஆமாம், நீங்க தானே ஆமாம் சொன்னீங்க” என்றார்.

“ஐயோ, என் மண்டையே குழம்புது” என கத்தினார் நாச்சியார்.

“ம்மா, அப்பத்தா சரியா தூங்கல, அதான் ஓவர் ஸ்ட்ரெஸா இருக்கு போல, பாருங்களேன் நேத்து ராத்திரி நடந்ததை காலையில் மறந்துட்டாங்க.

ரெண்டு பேரும் உங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குனோமே! அதையும் மறந்துடீங்களா?! என்றானே பார்க்கலாம், அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார் நாச்சியார்.

“என்னது? என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குனீங்களா?”

என அவர் அதிர்ச்சியாக,

“ஆமாம், காலில் விழுந்து தானே ஆசீர்வாதம் வாங்குவாங்க, கையிலா வாங்க முடியும்? என அனைவரையும் குழப்பி கொண்டிருந்தான் வெற்றி.

“ஏன் அத்தே, அதான் நீங்களே ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வச்சு இருக்கீங்களே. அப்புறம் எதுக்கு என்கிட்ட கோபப்பட்டுட்டு இருந்தீங்க. நல்ல விஷயம் தானே பண்ணி இருக்கீங்க. நான் என்ன சொல்ல போறேன்? வீட்டுக்கு பெரியவங்க நீங்க எது பண்ணாலும் நல்லதா தான் இருக்கும். நான் ஏதாவது சொல்வேனு நினைச்சு நீங்க மாத்தி சொல்லிட்டு இருக்கீங்க. 

நான் வேற வெண்பாவை திட்டிட்டேன். அவ முகமே மாறி போச்சு. வயசு ஆகிடுச்சு உங்களுக்கு. வர வர எல்லாத்தையும் மறந்து போறீங்க. சரி வாங்க சாப்பிட”

என விசாலாட்சி கூறிவிட்டு நகர்ந்து விட, நாச்சியாருக்கே சந்தேகம் வந்து விட்டது, அவர் தான் ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தாரா என்று.

யோசித்து யோசித்து பார்த்து கொண்டிருந்தார். வெற்றி அவரை கண்டு மௌனமாய் சிரித்து கொண்டிருந்தான்.

சமயலறைக்கு வந்தவர் வெண்பாவிடம், 

“ஏன் வெண்பா, நான் கேட்கும் போது அம்மாச்சி தான் இப்படி சொன்னாங்க சொல்ல வேண்டியது தானே! எதுக்கு அமைதியா இருந்த?” 

என கேட்க, அவளுக்கோ அவர் கேட்பதே புரியவில்லை.

“என்ன சொன்னாங்க?” என அவரையே திருப்பி கேட்க, அவர் பதில் கூறும் முன்பு, வெற்றியோ

“தமிழ், எனக்கு ஒரு காபி” என்று அங்கிருந்தே கேட்க, 

“ஐயோ ஆமாம் மறந்தே போயிட்டேன். அவனுக்கு காபி  தரவே இல்ல நான்” என்ற விசாலாட்சி,

“அவனுக்கு காபி போட்டு எடுத்துட்டு போ” என மருமகளுக்கு வேலை ஏவினார். வெண்பாவும் அதனை செய்ய, அடுத்தடுத்த வேலைகளில் விசாலாட்சி சொன்னது அவளுக்கு மறந்தே போனது. விசாலாட்சியும் அதற்கு மேல் எதுவும் இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை.

 அனைவரும் காலை உணவை உண்டு முடிக்க, அமுதவல்லியோ அழுது கொண்டே பெரிய வீட்டிற்குள் நுழைந்தார்.

“அம்மா, அம்மா,” என அவர் கதறியபடியே ஓடி வர, நாச்சியாரும் அவர் குரல் கேட்டதும்,

“அமுதா, என்ன மா? என்னாச்சு? ஏன் இப்படி அழுத்துட்டு வர” மகளின் நிலை கண்டு பதறினார்.

அம்மா.., அம்மா..,அவர்.. அவருக்கு.., திடீர்னு நெஞ்சுவலி வந்துடுச்சு. ஹாஸ்பிடல சேர்த்து இருக்கோம் மா. எனக்கு பயமா இருக்கு. நான் எங்க போவேன், யார் கிட்ட சொல்லுவேன் ம்மா”

என அவர் அழுது கரைய, 

“என்ன மா சொல்ற? இப்படி எப்படி இருக்கார்? என நாச்சியார் அதிர்ச்சியாக. அங்கிருந்த அனைவருக்கும் அதே அதிர்ச்சி சூழ்ந்து கொண்டது.

நீ எனக்கு என்ன

என்பதை 

நான் உனக்கு என்னவென்று

சொல்லி புரிய வைக்க

நீ என்பது

நான் மட்டுமே வாழும்

சொர்க்கம் அல்லவோ!!

கனவுகள் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!