Skip to content
Post Views: 2,236
அத்தியாயம்..18.
part- 1
உயிரும் உயிரும் கலந்து, உணர்வுகள் ஆர்ப்பரித்து, ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது போல, இருவரும் அவர்களது காதலின் இசையை அரங்கேற்றி களைத்து போயிருந்தனர்.
Advertisement
வெற்றியின் மார்பில் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தவள், மெல்ல அவனை நிமிர்ந்து பார்க்க, அந்நேரம் அவனும் அவளை குனிந்து பார்த்தான்.
அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாது, வெட்கத்தில் மீண்டும் தலைகவிழ்ந்து கொண்டவளை விடாது, அவள் முகம் பற்றி தன்னை பார்க்க வைத்தவன்,
Advertisement
Advertisement
“என்னமோ கேட்க வந்தியே? என்ன அது?” என வெற்றி கேட்க,
அவளோ, இன்னும் முகத்தை அவனுள் புதைத்தப்படி, ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.
Advertisement
சட்டென்று தன் மேல் இருந்தவளை திருப்பி போட்டு, அவள் மேல் படர்ந்தவன்,
“சொல்லு, என்கிட்ட என்ன நீ மறைச்சாலும், எனக்கு தெரிஞ்சுடும், அதனால் நீயே சொல்லிடு”
என வெற்றி மீண்டும் கேட்க,
“ஒஹ்ஹ், அப்படியா? நான் என்ன நினைச்சாலும் உங்களுக்கு தெரிஞ்சுடுமா? இப்போ என்ன நினைச்சேன் சொல்லுங்க பார்ப்போம்” என செல்லமாக கேட்டாள்.
அவள் மூக்கை பிடித்து லேசாக ஆட்டியவன்,
“எனக்கு தெரியாதாக்கும்?..
இப்போ இந்த நொடி, என் கூட இருக்கிறது கனவா? நனவா?னு யோசுச்சுட்டு இருப்ப. எப்படி உன் மனசு எனக்கு தெரிஞ்சது? எப்போ எனக்கு உன் மேலே காதல் வந்துச்சு? ஏன் உன்கிட்ட சொல்லல? இப்போ இந்த திடீர் கல்யாணம் எதுக்கு? இதெல்லாம் தானே கேட்கலாமா? வேண்டாமா? யோசிட்டு இருக்க” என அவள் மனதை சரியாய் கணித்தவனை, கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்தாள் வெண்பா.
“இப்படி கண்ணை விரிச்சு பார்க்காதே! எனக்கு வேற என்னென்னமோ தோணுது. அப்புறம் நீ கேட்ட கேள்விக்கு பதில் வராது” என அவள் மூக்கோடு மூக்கு உரசியப்படி கேட்க, அவளோ இமை தாழ்த்தி கொண்டாள்.
“உன்னை எனக்கு எப்பவும் பிடிக்கும். ரெண்டு அத்தையில் கனகவல்லி அத்தே தான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க. நான் எங்க அம்மா கிட்ட இருந்ததை விட, கனகவல்லி அத்தே கிட்ட இருந்தது தான் அதிகம். அவங்க தான் என்னை வளர்த்தது.
அவங்க பொண்ணு நீ, அதே பாசம் உன் மேலேயும் இருக்கு. அத்த பொண்ணுன்ற பாசம் எப்பவும் இருந்துச்சு.
அந்த பாசம் முதன் முதலா காதலா எனக்குள் எப்போ வந்துச்சு சொல்லு பார்ப்போம்” என வெற்றி கேட்க,
“என்னை கேட்டா, நீங்க தான் சொல்லணும், எப்போ வந்துச்சு? என அவனையே திருப்பி கேட்டாள் வெண்பா.
“சரி, உனக்கு எப்போ என் மேலே காதல் வந்துச்சுன்னு சொல்லு” என கேட்டதும், அவளும்,
“அது.., நீங்க சொன்ன போல தான், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். மத்தவங்க அவ்வளவா எங்க கூட பேசி பழகாத போது, நீங்க மட்டும் அத்தனை உரிமையோடு பேசி பழகுவீங்க. அதனாலேயே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அந்த பிடித்தம் எப்போ அடுத்த கட்டத்துக்கு போச்சுன்னா” என கூறிக்கொண்டிருக்கும் போதே!
“இரு, இரு நான் சொல்றேன்”என தடுத்து நிறுத்தினான் வெற்றி.
“என்ன சொல்றீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்?” என ஆச்சரியமாக கேட்க,
“நான் தான் சொன்னேனே, நீ என்ன நினைச்சாலும் எனக்கு தெரிஞ்சுடும்னு” என்றவனிடம்
“எங்க சொல்லுங்க பார்ப்போம்” என்றாள் வெண்பா.
“நீங்க பக்கத்து ஊரில் இருக்கும் போது, ஒரு தடவை வீட்டுக்கு கடன்காரங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ நானும் அப்பாவும் அங்க வந்தோம்
அப்போ நீ என்னை பார்த்ததும், ஒரு பார்வை பார்த்தியே, அப்பப்பா இன்னும் எனக்குள் அப்படியே இருக்கு அந்த பார்வை. கூட்டத்தில் காணாமல் போன குழந்தை, நமக்கு தெரிஞ்சவங்களை பார்த்ததும் ஒரு பரவசம் வருமே! அது போல இருந்துச்சு உன் பார்வை. பக்கத்தில் யாரு இருக்கா, என்ன நடக்குதுன்னு எதையும் யோசிக்காம, ஓடி வந்து கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதியே! அப்போ தான் உனக்கு என் மேலே காதல் வந்துருக்கும்” என அவன் சரியாய் கணித்து கூற, அவளுக்கோ பெருத்த ஆச்சரியம்.
கண்கள் விரிய, “எப்படி மாமா? என கேட்க
“ஏன்னா அப்போ தானே எனக்கும் உன் மேலே காதல் வந்துச்சு” என்றான் ஒற்றை கண் சிமிட்டி.
இது இன்னும் ஆச்சரியத்தை கொடுக்க, “நிஜமாவா?” என்று கேட்டாள் வெண்பா.
அவள் கன்னத்தை லேசாக நிமிட்டி விட்டவன்,
“நிஜமா தான் என் அத்த மகளே” என்றான் அத்தனை காதலுடன்.
“என்னால் நம்பவே முடியல. அது எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில், காதல் வந்திருக்கும்” என அதிசயமாக கேட்க,
“இதில் என்ன இருக்கு? நம்ம காதல் தெய்வீக காதல் போல, அதான் இப்படி ஒரே நேரத்தில் ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கும் தோனி இருக்கு” என அவன் கிண்டல் செய்ய,
“மாமா” என சிணுங்கி கொண்டாள் வெண்பா.
“நீங்க சொல்றது சரி தான். அன்னைக்கு நடந்த சம்பவம் இன்னமும் என் கண் முன்னே ஓடுது. நான் ரொம்ப பயந்து போய் இருந்தேன். அந்த நேரத்தில் உங்களை பார்த்ததும் தான் எனக்கு
உயிரே வந்த மாதிரி இருந்துச்சு. அதான் உடனே ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கிட்டேன்.
அதுக்கப்புறம் கூட, நீங்க என்னோட பயத்தை போக்க, கூடவே இருந்து ஆறுதல் சொல்லிட்டே இருந்தீங்க. அதிலிருந்து தான் உங்க மேலே எனக்கு அதிகமா பிரியம் வர ஆரம்பிச்சுடுச்சு. அந்த பிரியம் தான் போக போக காதலா மாறிடுச்சு.
ஆனால் நாளடைவில் எனக்கு தெரிஞ்சு போச்சு, நான் உங்க கூட சேரவே முடியாதுன்னு, அதனால் தான் என் மனசில் என்ன இருக்குன்னு யாருக்குன்னு தெரியாமல் பார்த்துகிட்டேன். உங்களுக்கும் ராகினிக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்கனு தெரிஞ்சதும் என்னையே என்னால் சமாதானம் செய்ய முடியல.
வாய்விட்டே கதறி அழுத்துட்டேன். ஆனாலும் இது தானே நிதர்சனம். அதனால் தான் என் மனசில் எப்படி பொத்தி பொத்தி வச்சு காதலை வளர்ந்தேனோ, அதே போல பொத்தி, பொத்தி வச்சுப்போம் தான் யாருக்கும் தெரியாமல் பார்த்துகிட்டேன். ஆனால் நீங்க எப்படி கண்டு பிடிச்சீங்க தான் தெரியல” என அவள் மனம் திறந்து அனைத்தையும் கொட்டினாள்.
“நான் தான் சொன்னேன்ல உன் மனசு எனக்கு தெரியும்னு. நான் உன்கிட்ட சொல்லாமல் இருந்ததுக்கு காரணம், அப்போ நீ சின்ன பொண்ணு, உங்க வீட்டில் வேற நிறைய பிரச்சனை போய்ட்டு இருந்துச்சு. அதெல்லாம் பார்த்து நீ ரொம்ப பயந்து போய் இருந்த, இதில் நான் வேற என் மனசில் இருந்ததை சொன்ன இன்னும் எங்கே பயந்து போய்டுவியோனு தான் எதுவும் சொல்லல.
அப்புறம் நாளாக நாளாக, எனக்கு உன் மனசு புரிஞ்சது. தினமும் எனக்காக தான் நீ கோவில் போய்ட்டு வரனு தெரியும். அங்க கொடுக்கிற பிரசாதத்தை, கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் பூஜை அறையில் வச்சுடுவ. அதை அப்பத்தா எனக்கு வச்சு விடும் போது உன் முகத்தில் வருமே ஒரே சந்தோஷம், அதை பார்க்க தான் தினமும் காலையில் எதிர்பார்த்துட்டு இருப்பேன்”
என்றதும், அவளது கண்களோ சந்தோஷத்தில் கலங்கி நின்றது.
“நீங்க இவ்வளவு உன்னிப்பா என்னை கவனிக்கிறேன்னே எனக்கு தெரியாது மாமா”
என்றவளிடம்,
“வேறென்ன வேலை எனக்கு? காலையில் நீ கொடுக்கிற திருநீறு. எனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு. நான் சாப்பிட்டேனா இல்லையானு மறைஞ்சிருந்து நீ பார்க்கிற விதம். வெளியே கிளம்பியதும், என்னை வழியனுப்புற போல எட்டி பார்க்கிறது, வீட்டுக்கு எவ்வளவு லேட்டா வந்தாலும், எனக்காக காத்திருக்கிறது, சாப்பிட வைக்கிறதுன்னு, நீ பண்ற எல்லாமே என் மேலே இருக்கிற காதல் தானு எனக்கு புரியாதா?
அப்புறம் முக்கியமான விஷயம், என்னை பத்தி, நீ நோட்டில் எழுதி வைக்கிறது. எதுவா இருந்தாலும் முதலில் அதில் எழுதி வச்சுடுவ போல” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்,
“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
“ஏன் தெரியாம? அன்னைக்கு உங்க வீட்டில் வந்து சாப்பிட்டு உன் ரூமில் தானே படுத்துகிட்டேன். அப்போ தான் பார்த்தேன். திரு மாமா, திரு மாமானு அவ்வளவு எழுதி வச்சு இருக்கியே”
என்றதும், அவளோ அவனை இறுக கட்டி கொண்டாள்.
“எனக்குன்னு இருக்கிற ஒரே ஆறுதல் உங்க கிட்ட சொல்ற போல அந்த நோட்டில் எழுதி வைக்கிறது தான்.
எல்லாரும் உங்களை வெற்றினு கூப்பிடும் போது, எனக்கு அந்த பெயரில் கூப்பிட விருப்பமில்ல. நான் உங்களுக்கு நெருக்கமா இருக்கணும் தான், திரு மாமானு உள்ளுக்குள் கூப்பிட ஆரம்பிச்சேன். அப்படியே பழகிடுச்சு.
எப்போ அந்த நோட்டில் எழுத்துறேனோ அப்போ எல்லாம் நீங்க எனக்கு திரு மாமா தான்”
என அவன் தாடை பற்றி செல்லம் கொஞ்சினாள்.
“நீ என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். அதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. எல்லாரும் உன்னை வெண்பானு கூப்பிடும் பொழுது நான் தமிழ் தானே கூப்பிறேன். அந்த வகையில் பெயர் தான் எனக்கு பிடிச்சு இருக்கு. நீ வாடா போடானு கூட கூப்பிடு யார் என்ன சொல்ல போற?” என்றவனை முறைத்து பார்த்தவள்,
“சும்மா இருங்க மாமா, அப்படியெல்லாம் நான் கூப்பிட மாட்டேன். எனக்கு உங்களை மரியாதையா கூப்பிட தான் பிடிக்கும்” என்றாள்.
காதலின் பொழுதுகளில் நேரமும் காலமும் உள்ளே வர அனுமதி ஏது? பொழுதுகள் போனால் என்ன? இருவரின் உரையாடல்கள் உறங்காமல் அல்லவா விழித்து கொண்டிருந்தன
error: Content is protected !!