Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 26

அத்தியாயம் 26

 

முகத்தை உர்றென்று வைத்திருந்தாள் சிற்பிகா.. கோபம் கோபம் கோபமோ கோபம்… அதற்கு காரணம் பக்கத்தில் போனில் மூழ்கியிருந்த அபய்..

 



Advertisement

சாண்டோரினி தீவில் ஐந்து நாட்கள்.. நீச்சல் குளத்திலும் மெத்தையிலும் கழிய.. ஆறாம் நாள் மட்டும் அவளை வெளியே அழைத்துக் கொண்டு சென்றான்.. அவளும் அவன் கைகோர்த்து சந்தோஷமாக சுற்றிவந்து.. பிடித்த பொருளையெல்லாம் வாங்கிகுவித்து ரூமிற்கு வந்த சில மணிநேரத்திலேயே ஊருக்கு செல்லவேண்டுமென்று சொல்ல.. பெண்ணவள் சிணுங்க.. அதனையெல்லாம் பொருட்படுத்தாமல்.. குண்டுகட்டாய் தூக்கி விமானத்தில் ஏற்றிவிட்டான்…

 

அவர்களது சொந்த விமானம் என்பதால் அபய் சிற்பிகாவோடு அவர்களின் ஊழியர்கள் மட்டும் இருக்க.. சிற்பிகாவினால் தன் கோபத்தை காட்ட முடிந்தது…

Advertisement

 

Advertisement

ச்ச.. யாராச்சும் ஹனிமூன்க்கு வந்த ஒருவாரத்துலயே ஊருக்கு போவாங்களா.. இன்னும் சில நாள் இருக்கத்தான் செய்வாங்க.. இவரு மட்டும் ஓவரா பன்றார்.. இருக்கட்டும் செல்லக்குட்டி புஜ்ஜிக்குட்டி பேபிக்குட்டி சிற்பிக்குட்டின்னு வித விதமா கொஞ்சி வித விதமா கேட்பாங்கள்ல அப்போ இருக்கு என மனதிற்குள் கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தாள்..

 

அபய் தன் போன் அழைப்பு முடிந்து.. சிற்பியின் தோளில் கைப்போட.. கோபமிகுதியில் தட்டிவிட்டாள்.. அதனைக் கண்டு இதழோரத்தில் அரும்பிய குறுநகையை மறைத்தவன்.. என்னாச்சு என் பேபிகுட்டிக்கு.. என கொஞ்சலாக கேட்டதும்தான் தாமதம்…

Advertisement

 

ஆமா இப்போமட்டும் பேபிக்குட்டி அந்த குட்டின்னு கொஞ்சுறது… ஆனா நான் எதாவது ஆசையாக்கேட்டா செய்யுறதில்லை… எல்லாமே சும்மா.. நான் கோபமா இருக்கேன்.. என்ன தொந்தரவு பண்ணாதிங்க என முகம்கோணி கண் மூடியவள்.. உடல்சோர்வின் காரணமாக விரைவிலேயே தூங்கிவிட்டாள்..

 

சிற்பியின் உறக்கத்தை பார்த்த அபி.. அவளை தன் தோளில் சாய்த்து.. படுப்பதற்கு வசதி பண்ணியவன்.. விழிகளும் மெல்ல மூடியது…

 

****************

 

விமானம் தரையிறங்கியதும்.. அபய் முழித்திருக்க… பெண்ணவளோ இன்னும் உறக்கத்திலும் அவனின் பிடியிலும் இருந்தாள்… அபய் அவளை மெல்ல எழுப்ப அரைத்தூக்கத்திலேயே விழிகளை விரித்தவள்.. அவன் தோள் சாய்ந்தவாறே நடைமுறைகள் அனைத்தும் முடிந்து வெளியேறினாள்…

 

காரில் அமர்ந்த பின்பும் தூக்கத்தை தொடர.. அபய் விடவில்லை… அப்பொழுதுதான் முழுதாக விழிகளை திறந்து… தாங்கள் வந்திருக்கும் இடத்தையரிந்து தன்னவனை மகிழ்ச்சியுடன் பார்த்தாள்…

 

இப்பொழுது அபய் அவளை பல்கேரியாவிற்கு அழைத்து வந்திருந்தான்.. ஐரோப்பா கண்டத்தின் ஓர் நாடானா பல்கேரியா இயற்கையின் அணைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது..

 

தென்கிழக்கு பல்கேரியாவில் உள்ள ஓர் அழகிய கிராமம் தான் ஜெரவ்னா.. இது ஒரு மலை கிராமம்.. எங்கும் வித விதமான மலர்களும்.. மரங்களும் தான் காட்சியளிக்கின்றன.. இங்குள்ள வீடுகள் மிகவும் பழமையானவை அதோடு கண்ணை கவரக்கூடியதாகவும் இருக்கும்.. அங்கு தங்கி அடுத்து அவளை க்ருஷுனா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துசென்றான்.. அடர்ந்த மரங்களுக்கு நடுவில்.. சலசலவென்று ஓடும் அந்த சிறு சிறு நீரோடைகளைக்காண ஆயிரம் கண் வேண்டும் போல் இருந்தது சிற்பிகாவிற்கு..

 

பல்கேரியாவில் இருந்த பத்து நாட்களும் அவர்கள் வெளியே சென்றனர்… ஹாட்னிட்சா நீர்வீழ்ச்சி, ரோடோப்ஸ் ஆர்ஃபியஸ் மலை, பெலோகிராட்சிக் ராக்ஸ் என பல இடத்திற்கு அழைத்து சென்றான்..

 

இந்த ஐந்து நாட்களும் சிற்பிகா அபய் தோளிலிருந்து தன் சிரத்தை எடுக்கவேயில்லை.. காற்றுக்கும் இடைவெளி கொடுக்காமல் பின்னி பிணைந்திருந்தனர்…

 

அடுத்து அபய் அவளை மாலத்தீவிற்கு அழைத்து வந்திருந்தான்.. உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலத் தீவு. சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகையும் ரொம்ப அதிகமில்லை. மொத்தமே சுமார் 4 லட்சம்தான். அபய் தனக்கு சொந்தமான தீவில் அமைந்துள்ள அண்டர்வாட்டர் ஹோட்டலுக்கு அழைத்து வந்தான்…

 

சிற்பிகாவிற்கு தண்ணீருக்குள்ளேயே மூழ்கும் எண்ணம் தான்… தண்ணீரின் நிழல் மீன்களின் ஓட்டம் என இப்படியே இருந்துவிடலாம் என எண்ணுமவிற்கு அந்த இடம் அவளின் மனதைக் கவர்ந்தது…

 

இங்கு வெளியில் செல்லும் வேலை இல்லையென்பதால் நாளோரு வண்ணம் பொழுதொருமேனி இருவரும் மற்றவருக்குள் மூழ்கியேயிருந்தனர்… இவர்களின் தேடல் தேகத்தின் தேடலாக இல்லாமல் மனதின் தேடலாக இருந்தது…

 

அபய் தரையினில் படுத்து இருகரத்தையும் சிரத்தினில் வைத்திருக்க.. அவனின் பரந்து விரிந்த மார்பில் தன் முகத்தை புதைத்து மேலே தெரியும் கடலை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்..

 

பேபிகுட்டி நான் உன்ன லவ் பன்றேன்னோ.. இல்லை பிடிச்சுருக்குனோ இதுவரைக்கும் சொன்னதில்ல… அதுல உனக்கு கோபம் இல்லையா.. என அவள் தலையை வருடியவாறு கேட்க.. சிற்பி புன்னகையோடு அவனைப் பார்த்து..

 

சொன்னால்தான் சொன்னால்தான்

காதலா

சொல்லாமலே சொல்லாமலே

ஒரு பாடல

கடல் மீது அலை காதலா

மரம் மீது இழை காதலா

மலரோடு தென்றல் காதலா

மனதோடு மனம் காதலா

எங்கும் எங்கும் காதல்

எதில் இல்லை காதல்

உள்ளம் எங்கும் காதல்

உலகெங்கும் காதல்

இல்லாத இடம்மில்லை

அது நுழையாத மனம் இல்லை

 

சிலரது காதல் பேசும் காதல்

சிலரது காதல் மௌனம் காதல்

சிலரது காதல் சேர்ந்திடும் காதல்

சிலரது காதல் பிரிந்திடும் காதல்

சூழ்நிலை தடுத்தால் சிலரது காதல்

ஒருதலை காதல் அன்றோம்

யோகம் இருந்தால்

சிலரது காதல் இருதலை

காதல் அன்றோம்

சொல்லாத காதல்

செல்லாத காசை ஆதலால் மனமே சொல்லிவிடு

சொன்னால்தான் சொன்னால்தான்

காதலா

சொல்லாமலே சொல்லாமலே

ஒரு பாடலா…

 

என்று பாடியே காண்பித்தவள்.. பின் குறும்புடன்.. நான் ஏன் கோபப்படனும் நீங்கதான் என்னைய பார்த்தோடனே காதலிக்க ஆரம்பிச்சுட்டிங்களே என கண் சிமிட்ட.. அபய் ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தி.. எப்படி சொல்ற.. என்றான்..

 

ஹ்ம்ம் அத்தை சொன்ன கண்டிஷனுக்காகவா என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.. உங்க ஒரு பார்வையே போதும் அத்தைய அமைதியாக்குறதுக்கு.. நான் உங்க மனசுல சின்னதா ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கேன்.. அதான் அத்தையோட கண்டிஷன காரணமா வச்சு.. என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க..

 

அப்புறம் என்கூட வாழ்ந்ததுக்கு அப்புறம் நீங்க எந்த பொன்னையும் ஏரெடுத்து பார்த்தது கிடையாது.. நான் எப்போவும் உங்க கண் முன்னாடியே இருக்கனும்னு சொல்வீங்க.. உங்களோட சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்றது எல்லாம் நான் உங்கள பத்தி மட்டும்தான் நினைக்கிறதுக்குத்தானே.. ஆனா நீங்க யாரு அபயசிம்ஹா சக்சேனாவாச்சே.. நான் ஒரு சின்ன பொண்ணுகிட்ட மயங்கிக்கிடக்குறதான்னு ஒரு எண்ணம்..

 

உங்களோட திமிர் கெத்து எல்லாம் உங்க காதல துணிபோட்டு மறைச்சுடுச்சு.. ஆனா எப்போ என் கழுத்துல ரத்தத்தை பார்த்தீங்களோ அப்போவே உங்க காதல் அணையுடைச்ச வெள்ளம் மாதிரி வெளியே வந்துடுச்சு.. என மென்முத்தம் வைக்க ஆடவன் அதில் மயங்கி போனான்…

 

இப்போ சொல்லுங்க… உங்கள இவ்வளவு புரிஞ்சு வச்சுருக்க நான்.. நீங்க வாய்வழி உங்க காதல சொல்லாததால கோபிப்பேனா.. என செல்லக் கோபத்துடன் கேட்க.. அபய் சிறுசிறு முத்தம் வைத்து அவளை சமாதானம் செய்தான்…

 

அபய்க்கே அப்பொழுது தான் சிற்பிகா மேல் தான் எவ்வளவு காதலும் உரிமையுணர்வும் வைத்திருக்கிறோம் என புரிந்தது… ஆனால் அதனை தனக்கு முன்பே தெரிந்து.. தன்னை புரிந்து வைத்திருக்கின்ற தன்னவள் மேல் மேலும் காதலும் மோகமும் பெருக.. சட்டென்று அவளை கீழே வீழ்த்தி மேலே படற ஆரம்பிக்க.. மேலே நின்றிருந்த மீன்கூட்டங்கள் இவர்களின் செயலைக் கண்டு வெட்கத்துடன் ஓடியது… ஆனால் ஒரு மீன் மட்டும் அங்கேயே நிற்க.. சிற்பிகா அம்மீனின் பார்வையில் வெட்கிச்சிவந்து தன்னவன் மார்பில் முகத்தை புதைத்தாள்…

 

******************

 

நினைவின் தாக்கமும்.. அது கொடுத்த சுகமும் பெண்ணவளை மீண்டும் தூக்கத்திற்கு கொண்டு செல்ல.. அதைப் புரிந்துக் கொண்ட அபய் சிற்பிகாவோடு உள் நீச்சலடிக்க.. பெண்ணவள் திடிக்கிட்டு விழித்து தலையை மேலே உயர்த்தினாள்..

 

மாலத்தீவிலிருந்து அவர்கள் அடுத்து சென்றது அபய்க்கு மிகவும் பிடித்தமான பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அவனின் மற்றொரு தீவிற்கு தான்.. செடிகோடிகளுக்கு மத்தியில் மலை மீது கட்டிடங்கள் கட்டப்படிருக்கும் வடிவமைப்பைக்கொண்டது.. இங்கு வருவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.. சாகசம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் இங்கு வருகை தருகின்றனர்…

 

அபய் அங்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாகவும் தனக்கென்று தனியாகவும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறான்.. முதலில் இந்த இடத்தைப் பார்த்து சிற்பிக்கு பயமே.. அவள் பார்த்த ஷார்க் மூவி.. அனகோண்டா மூவி எல்லாம் ஒரு நொடி வந்து சென்றது.. அதுவும் அந்த பாறை இடுக்கு எல்லாம் அபய் செல்ல அவள் விரும்பமாட்டாள்.. ஆனால் அவனா அவள் பேச்சைக் கேட்பான்…

 

ச்சு போதும்.. மாமு.. என்னை காட்டேஜூக்கு கூட்டிப்போங்க ஒரு மாதிரியாயிருக்கு என பெண்ணவள் சோர்ந்து கூற.. அபய் யோசனையுடன் மீண்டும் காட்டேஜிற்கு சென்றான்.. அவன் காட்டேஜ் சற்று நீண்ட மரஏணிப்படிகட்டில் ஏறி செல்ல வேண்டும்.. குறைந்தது இருபது தான் இருக்கும் ஆனால் பாதி ஏறும் போதே சிற்பி தலை சுற்றி கீழே விழப்பார்க்க பின்னே வந்த அபய் அவளை ஒருக்கரத்தால் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்..

 

அவளை மெத்தையில் படுக்க வைத்து.. ஊழியரிடம் தீவில் எப்பொழுதுமே இருக்கும் மருத்துவரை அழைத்து வரக்கூறிவிட்டு.. சிற்பியை எழுப்பும் முயற்சியில் இருந்தான்..

 

பேபி.. பேபி.. என பயமும் பத்தட்டமுமாக அவன் அவளின் கன்னத்தை தட்டும் போதே மருத்துவர் வந்துவிட்டார்..

 

அபய் பதட்டதோடு நிற்க.. அவளை பரிசோதித்த மருத்துவரின் முகத்தில் சிந்தனை கோடுகள்..

 

என்னாச்சு டாக்டர்.. எதாவது ப்ரோப்லமா.. என கேட்க.. அப்பொழுது தான் விழித்த சிற்பியும் அவரை யோசனையாக பார்த்தாள்..

 

நோ சார்.. நல்ல விஷயம் தான்.. ஷி இஸ் பிரக்னண்ட் என புன்னகையுடன் கூற அபய்க்கும் சிற்பிக்கும் எதிர்பாரா அதிர்ச்சி.. ஆனால் ஆனந்த அதிர்ச்சி..

 

சிற்பி சந்தோஷ மிகுதியில் அபயை நோக்கி கை நீட்ட.. விரைந்து தன்னவளிடத்தில் வந்தவன்.. அவளை தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.. சிற்பியும் அபயும் ஒருவரையொருவர் பார்வையால் தழுவிக்கொள்ள.. மருத்துவரின் குரல் அவர்களை நிகழ்வுக்கு திருப்பியது…

 

இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. இப்போதைக்கு இவங்க ட்ராவல் பண்றது.. மேடம் ஹெல்த்துக்கு நல்லதில்லை என்று கூற அபய் யோசனையானான்..

 

ஏற்கனவே அவர்கள் வந்து ஒன்றரை மாதம் இருக்கும்.. இப்பொழுது இன்னும் இங்கு இருக்க வேண்டுமென்றால்.. என்ற யோசனையோடு சிற்பி அபயை பார்க்க அதில் தெளிந்த அபய்.. இருநாட்களில் சகலவசதியோடு இருக்க கூடிய புது காட்டேஜை சிற்பிகாவிற்காக உருவாக்கினான்..

 

பின் அவளுக்கேயான ஒரு மருத்துவர்கள் குழு.. சமையல் ஆட்கள் வேலையாட்கள் என சிற்பியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.. சஞ்சீவ்ரதன் சிற்பியின் நிலை புரிந்து அபயை அங்கேயே இருக்க சொன்னார்.. சுஜாதா அதி இருவரும் அடிக்கடி வந்து பார்த்தனர்.. ரூபாலி அஜயோடு வந்திருந்தாள்.. அவர்களுக்கு அப்போது தான் திருமணம் முடிந்திருந்தது.. ரூபாலி முதலில் திருமணத்திற்கு ஒப்பவில்லை.. சிற்பிகா இந்தியா வந்த பிறகே திருமணம் என உறுதியாக கூறினாள்.. ஆனால் அப்பொழுதே அவளுக்கு 26 வயது இதற்கும் தாமதித்தால் கஷ்டம் என சிற்பி பலமுறை கூறி கிட்டதட்ட மிரட்டி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிறாள்..

 

ஆனால் திருமணம் முடிந்த ஒரே வாரம் ரூபாலி அஜயோடு பிலிப்பைன்ஸ் வந்திருந்தாள்.. முதலில் ஹனிமூன் என நினைத்து வாயெல்லாம் பல்லாக வந்திருந்த அஜய்.. அவள் நாள் முழுதும் சிற்பியோடு இருப்பதை பார்த்து நொந்துவிட்டான்.. அப்பொழுது தான் அவள் இங்கு வந்ததே சிற்பிகாவைக்காண என அவனுக்கு புரிந்தது..

 

அஜயின் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்ட அபய் சுவிஸ்க்கு இருவரையும் ஹனிமூன் அனுப்பினான்.. முதலில் ரூபாலி ஒப்புக்கொள்ளவில்லை.. பின் அபயின் கோபப்பார்வையில் அடங்கிவிட்டாள்…

 

அபய் அங்கிருந்தே தன் தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தான்.. முக்கியமான மீட்டிங்கிற்கு மட்டும் சென்றுவிட்டு வருவான்… அப்பொழுதெல்லாம் சுஜாதா இல்லை ரூபாலி யாரெனும் சிற்பியின் துணைக்கு இருப்பர்.. ஆறு மாதம் கடந்த போதிலும் சிற்பியால் ட்ராவல் செய்யும் அளவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவள் பிரசவம் முழுதும் அங்கே இருந்தாள்..

 

ஏழாம் மாதம் அங்கேயே அங்குள்ளவர்களை வைத்தே வெகுவிமர்சையாக தன்னவளுக்கு வளைகாப்பு நடத்தினான்.. அப்பொழுது அவனை பற்றி நன்கறிந்தவர்கள் யாரெனும் கண்டிருந்தால் இது அபயசிம்ஹா தானா என சந்தேகம் கொண்டிருப்பார்கள்… அந்தளவிற்கு அபய் மாறியிருந்தான்.

 

அவர்களின் காதலோடு அவளின் மணிவயிறும் வளர்ந்துக் கொண்டு சென்றது.. இன்னும் இரு நாளில் சிற்பிக்கு தேதி சொல்லியிருக்க.. அவளை விட அபய் தான் அதிகம் பயந்து போனான்…

 

மாமு..

 

ம்ம்ம்

 

மாமு..

 

ம்ம்ம்.. என்னடா பேபிகுட்டி..

 

நாம நம்மோட பழைய காட்டேஜூக்கு போகலாமா.. என செல்லமாய் கேட்க..

 

ஏய்.. இந்த நிலைமைல எப்புடிடி உன்னால ஏணியேற முடியும்.. சும்மா இரு..

 

மாமுமுமு….

 

ஹுஹும்.. முடியாது.. உனக்குத்தான் அந்தப்பக்கம் ஷார்க்.. அனகோண்டா எல்லாம் வரமாதிரி தோனும்ல.. சோ வேண்டாம்..

 

இல்ல இல்ல.. எனக்கு இப்போ பயம் இல்லை.. அதான் நீங்க இருக்கீங்களா.. அதோட எனக்கு ஒன்னும் ஷார்க்க பார்த்து பயம் இல்லை.. என கெத்தாக கூற..

 

அபய் மீண்டும் சமாதானம் செய்ய முயற்சித்தான்.. ஆனால் அவளோ ஒரே பிடியாய் நிற்க.. அவளை விட அவன் தான் அதிகம் பயந்துக்கொண்டாண்டே அழைத்து சென்றான்..

 

அவள் ஏணியில் ஏற… அபய் அவள் பின்னேயே சென்றான்… அவள் மேலே வந்த பிறகுதான் அவனால் நிம்மதியாக இருக்க முடிந்தது… அவள் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்க.. அபய் என்னாகுமோ என்ற பயத்தில் அவள் பின்னோடே சுற்றிக்கொண்டிருந்தான்…

 

சிற்பிகா அவன் பக்கவாட்டில் அமைதிருக்கும் ஊஞ்சலின் உள்ளே சென்றாள்.. அது மெத்தை எல்லாம் கொண்டு இருவர் படுப்பதற்கு சற்று தாராளமாகவே இருக்கும்.. மேலும் இது அந்த நீரின் மேற்பரப்பில் இருக்கும் படி அமைத்திருந்தான்.. இப்பொழுது பெண்ணவள் அந்த ஊஞ்சலில் நுழைய முற்பட அபய் தடுத்தான்…

 

மாமு ப்ளீஸ் என அவனையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்த மெத்தையில் அமரப்போக… அபய் அவளை அமருவதற்கு வழி செய்தான்..

 

ஹ்ம்ம் செம்மையா இருக்குல்ல மாமு என கொஞ்சலாக கேட்க.. அபயும் புன்னகைத்தான்..

 

மாலை வரை அங்கேயே இருந்தார்கள்.. சிற்பிகா வரவே மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.. அபய்.. கெஞ்சி.. கொஞ்சி பார்த்து முடியாது போக.. இறுதியில் பழைய அபயசிம்ஹாவாக அவதாரம் எடுத்த பிறகே.. அங்கிருந்து சென்றாள்..

 

சிற்பிகா தன் பானை வயிற்றை காமித்துக் கொண்டிருக்க.. அபய் தன் கரத்தில் எண்ணையை எடுத்து அவள் வயிற்றில் தேய்த்தான்..

 

அவன் தேய்க்க தேய்க்க உள்ளே இருந்த அவன் சூலும் அவன் செல்லுமிடத்தில் எல்லாம் தன் அசைவைக் கொடுத்தது… எப்பொழுதும் இது நடக்கும்மென்றாலும் இருவரும் முதல் முறை பார்த்தது போலே மகிழ்ந்தனர்..

 

என்னோட குட்டி பேபிக்குட்டி என்ன பன்றாங்க.. என செல்லம் கொஞ்ச குழந்தையின் அசைவு என்றைக்கும் விட இன்றைக்கு சற்று அதிகமே.. மெல்ல மெல்ல சிற்பியின் அடிவயிற்றில் வலி எடுக்க ஆரம்பிக்க.. சிற்பிகா அபயின் கரத்தை பற்றினாள்..

 

அவளின் முகமாற்றத்தை கவனித்த அபய் வேகமாய் டாக்டர்சை அழைக்க.. அவர்களும் பரிசோதித்து பிரசவவலிதான் என்று கூற அபயின் பதட்டம் அதிகமாகியது..

 

தந்தையை போல் முதலில் அதிகம் படுத்தியெடுத்து.. பின் விரைவாகவே வெளியே வந்தான்.. அபய் சிற்பிகாவின் புதல்வன்..

 

அபய் தன்னவள் படும் கஷ்டத்தைப் பார்த்து மகனை முறைத்தான்.. ஏண்டா கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்கலாம்ல என்பது போல்.. ஆனால் வந்த குழந்தை அழுகாமல் இருக்க மருத்துவர்கள் அவனை சோதனை செய்தனர்..

 

தலைகீழாக அவனைப் பிடித்து தட்ட.. அவர்களையெல்லாம் முறைத்துக் கொண்டிருந்த குட்டி அபய்.. இவர்கள் அழாமல் இருக்க விட மாட்டார்கள் என புரிந்து.. தன் கோபத்தை அழுகையாக காண்பிக்க.. அனைவரும் சந்தோஷமடைந்தனர்…

 

அவனின் அழுகையைக் கண்ட பிறகே சிற்பிகாவின் விழிகள் சோர்வில் மூடிக்கொண்டது.. செவிலியர்கள் அபயை வெளியே இருக்க சொல்ல.. தன்னவளின் நெற்றில் அழுத்த முத்தமிட்டவன்.. விரைவாக மற்றொரு அறைக்கு சென்று குளித்துவிட்டு வர.. குட்டிஅபயை சுத்தம் செய்து அவன் கரத்தில் தந்தார்கள்..

 

வலிக்குமோ என பயந்து.. மிகவும் மென்மையாக அவனை தூக்கியிருந்தான் அபய்.. பால்வண்ண சருமத்தோடு கொள்ளை அழகாக இருந்த குட்டி அபய் பெரிய அபயை முறைக்க.. அவன் இதழ்கள் புன்னகை சிந்தியது..

 

ஹனிமூனிற்காக வந்த சிற்பிகா தன் பிள்ளையோடு தான் மீண்டும் தாயகம் சென்றாள்.. முதன் முதலில் ராட்ஷசனாய் தன்னவனைக் கண்டு காதல் கொண்டவள்.. அவன் தன்னை கவர்ந்து வந்து மிரட்டி திருமணம் செய்ய சொன்ன போதும் சரி.. பிறகான அவர்களின் திருமண வாழ்வின் போதும் சரி.. அவன் அசுரனாகவே இருந்த போதிலும்.. பேதையவள் தன் காதல் வலிமையால் அனைத்தையும் கடந்துவந்தாள்.. அசுரனை தன் மனதின் அரசனாய் பாவித்து.. பாவையவள் ஆராதிக்க.. அதற்கேற்றார் போல் அசுரனும் பாவையவளின் காதல் புரிந்து.. அவள் விழியில் வீழ்ந்து.. தன் உயிரினும் மேலாய் தன்னவளை ஆராதித்து வருகிறான்..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!