அத்தியாயம் – 4.2
தான் அழைத்து முக்கால் மணி நேரங்களுக்கு பிறகு வந்தவன் சிரித்துக்கொண்டே வந்ததை பார்த்து முறைத்த கெளதம், “ஏண்டா உனக்கு நான் கால் பண்ணி ஒரு மணி நேரம் ஆச்சு இப்ப வர?”
“சரி அது தான் வந்துட்டேன்ல இப்ப கெளம்பு”அவன் மனம் அந்த வண்டியுடன் அவள் முறைத்து சென்றதை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது. அவன் முகத்தில் இருக்கும் அந்த புன்னகைக்கும் அது தான் காரணம்.
“கெளம்பித் தொலையிறேன் ஆமா இப்ப எதுக்கு நீ எவ்ளோ கேவலமா சிரிக்கிற?”
கௌதமின் சட்டை பட்டனை நோண்டிக்கொண்டே, “அது வந்துடா நான் ஒரு பொண்ண பாத்தேனா…”
Advertisement
“கருமம் வெக்க பட்டு தொலையாத உனக்கு என்ன பொண்ணுகளை பாக்குறது புதுசா என்ன?”
‘அட!! ஆமா!! நமக்கு இது என்ன புதுசா ரொம்ப யோசிக்காதடா ஆதி’ தன்னையே சமாதான படுத்திக்கொண்டே, “உனக்கு நேரம் ஆகல?” என்றான் கௌதமை பார்த்து.
“கிளம்பிட்டேன். போன நோண்டிட்டே இருக்காம வரவங்களுக்கு வேணும்கிறத ஒழுங்கா எடுத்து குடுடா”
Advertisement
“ஆமா இவங்க அப்புடியே டைட்டன் ஷோரூம் வச்சிருக்காங்க. கூட்டம் அல்லி குமியிரத்துக்கு போடா வெண்ண” என்று வழக்கம் போல் கைபேசியை எடுத்து அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
Advertisement
சிறிது நேரம் கழிய ஒரு மாதுளை சாற்றை வாங்கி குடித்துக்கொண்டே அலைபேசியை பார்த்தவன் தலையை கண்ணாடி மேசையில் வைத்து கைபேசியை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வேண்டுமென்றே அதற்கு செவி சாய்க்காதவன் போல் இருந்தான் மீண்டும் அந்த சத்தம் கேட்பதை உணர்ந்து தலையை நிமிர்த்துகையில், “அங்கிள்” என்ற அந்த சொல்லை கேட்டு அதிர்ச்சியில் பார்த்தவனுக்கு கோவம் கலந்த ஆச்சர்யம்.
“ஏய் யாரை அங்கிள்னு சொல்ற பல்ல ஒடச்சிருவேன்” என்றான் சீரிய சினத்தோடு. நின்றது மணிமேகலை தான்.
“நீங்க படுத்து இருகப்ப டக்குனு அங்கிள்லோனு நெனச்சேன் ” என்றாள் சிறு நக்கல் சிரிப்புடன்.
Advertisement
“ஏது என் மண்டைய பாத்தா வெள்ளை முடியும் வழுக்கை மண்டையும் தெரியுதா உனக்கு?” என்றான் கோவதோடு.
ஆமாம் என்று தலையை ஆட்டியவள் அடக்கிவைத்த சிரிப்பை இதற்குமேல் கட்டுப்படுத்த இயலாமல் சிரித்து விட்டாள்.
“ஓவரா சிரிச்சனு வச்சுக்கோ உன் வண்டிய ஒடச்சு அடையாளம் தெரியாம மாத்திடுவேன் பாத்துக்கோ” அவன் மிரட்டலில் அமைதியானாள், “எதுக்கு இங்க வந்துருக்க?” என்றான்.
“சண்டை போட வந்தேன்” இது வரை இருந்த சிரிப்பு மறைந்து கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைத்தாள்.
“எதுக்கு?”
“அத உங்க மொதலாளிய வர சொல்லுங்க உங்ககிட்ட சொல்ல மாட்டேன்”
“அவர் என் முதலாளி இல்ல சொல்லு அவர் என் அப்பா தான்”
கையில் இருந்த கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்தவள், “அந்த டயல்ல பாருங்க” கோணல் மாணலாக சில இடங்களில் உடைத்து இருந்தது.
“உடைஞ்சு இருக்கு. என்ன வண்டில இருந்து கீழ விழுந்தப்ப ஒடஞ்சிருக்கும் மாத்தி தரவா?”
“என்ன மாத்தி தரவானு கேக்குறீங்க? எப்படி இப்புடியெல்லாம் கேக்க மனசு வருது உங்களுக்கு? எவ்ளோ அமௌன்ட் குடுத்து வாங்கியிருக்கேன் தெரியுமா? அப்பாக்கு தெரிஞ்சது அவ்வளோ தான் என்ன கொன்னு போட்ருவாங்க. உங்ககிட்ட தான் வாங்குனேன் நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. இது இனிமேல் பிரேக் ஆக கூடாது அப்டி இருக்க மாதிரி நீங்க தான் ரெடி பண்ணி தரணும். மௌண்டைன் டாப்ல இருந்து போட்டா கூட அது உடையாம இருக்கனும் சொல்லிட்டேன் அவளோ தான் ”
பொறிந்தவள் ஒரு பெருமூச்சு விட்டு, “சரி சொல்லுங்க எப்ப வந்து வாங்கிக்க? ப்ளீஸ் கேன் யு கிவ் இட் பாக் சூன்? (Please can you give it back soon?)” என்றாள்.
‘கன்பார்ம் இது லூசு தான்’ என்று நினைத்தவன், “அம்மனி நீங்க ஒன்னும் ரோல்க்ஸ் வாட்ச் வச்சிருக்கல… மலைல இருந்து போட்டா கூட ஒடையாம இருக்கத்துக்கு”
“இட் இஸ் ”
ஆர்வத்தில் கண்ணை சிமிட்டியவன், “ரோல்க்ஸ் ஆஹ்?”
அவள் ஆம் என்று தலை அசைக்க அந்த கடிகாரத்தை பார்த்தவன் அதில் இருக்கும் முற்களின் அமைப்பை பார்த்தவன், “இது டூப்ளிகேட்” என்றான் வேகமாக.
“ஆமா ஒரு நாள் என் வாட்சை நான் தொலைச்சிட்டேன் அதுனால அங்கிள் கிட்ட கேட்டு இந்த வாட்சை வாங்கிட்டு போனேன், ஆனா நீங்க அதை ஒடச்சி…”
அவள் தன்னை தான் சொல்ல வருகிறாள் என்று அறிந்து, “ஆ ஆ என்ன சொல்ல வந்த?” என்றான்.
ஒரு குறும்பு பார்வையோடு இதழ்களில் சிரிப்புடன், கண்களை வருட்டியவள், “நான்… நான். ஆமா நான் ஒடச்சிட்டேன்”
கைக்கடிகாரத்தை அவள் முன்னே தூக்கி போட்டவன், “இந்த வாட்ச் வாங்க ரொம்ப கஷ்டப்பட்டியோ?” அவள் ஆம் என்று தலை ஆட்ட, “உங்க அப்பா கிட்ட போய் வாட்ச் தொலைஞ்சிருச்சுனு உண்மையச் சொல்லு” என்றான்.
“அதெல்லாம் நீங்க சொல்ல கூடாது எனக்கு சரி பண்ணித்தாங்க” சிறு பிள்ளையாய் அடம் பிடித்தாள்.
“முடியாது”
“மாட்டேன். வீட்ல தெரிஞ்சதுனா என்ன கொன்னுடுவாங்க. ரொம்ப காசு… என்ன நம்பி குடுத்த மொத திங் அது தான். இப்ப நான் அதை மிஸ் பன்னிட்டேன்னு சொன்னா அப்புறம் என்ன எதுவுமே பண்ண விட மாட்டாங்க. ப்ளீஸ் ரிப்பேர் பாத்து தாங்க”
வாட்சை கையில் எடுத்தவன், “சொன்னேன்ல அவ்ளோதா இதுக்கு மேல பேச முடியாது வேணா இன்னொரு வாட்சை தேடி வாங்கிக்கோ”
கண்கள் அவன் கையில் நிலைத்து அவனை தொட்டு மீண்டும் கீழே வந்தது, “ப்ளீஸ்” என்றவள் கண்களும் குரலும் மாறி இருந்தது.
‘இதுக்குலாமா அழுகணும்?’ என்று நினைத்தவன் அவளின் அழுகையை பார்க்க விரும்பாமல், அதை மீண்டும் அவளிடம் கொடுத்தான்.
“நான் இத ரிப்பேர் பண்ணி தர மாட்டேன் வேற யார்கிட்ட வேணா போய் ரிப்பேர் பாத்துக்கோ. ஆனா சொல்றத கேளு. இப்பயே நீ இத போய் உங்க அப்பா கிட்ட சொன்னனா ஒன்னும் தெரியாது . ஆனா இந்த மாதிரி பொய்யான ஒன்ன வச்சு எவ்ளோ நாள் தான் ஏமாத்துவ? ஒவ்வொரு தடவ பாக்குறப்பயும் பயம் தான் இருக்கும். அதுக்கு ஒரு தடவ சொல்லி திட்டு வாங்கிறது பரவால்ல. அது மட்டும் இல்லாம அவங்களுக்கு உன் மேல அடுத்து நம்பிக்கை இல்லாம போய்டும் இப்படி ஏமாத்துனா. இதுக்கு மேல உன் இஷ்டம்” அவன் பேசுவதை அமைதியாய் கேட்டவள் தலையை இன்னும் குனிந்து வைத்து இருந்தாள்.
திரும்பி செல்ல இருந்தவளை பார்த்து, “குந்தவை வாட்ச்” என்றான் அவளை அழைத்து.
அவன்புறம் சோகமாக திரும்பியவள், “என் பேர் குந்தவை இல்ல, மணிமேகலை. எனக்கு அந்த வாட்ச் வேணா” ஆழ்ந்த சோகத்தில் கூறியவளின் விழிகள் சோர்த்து இருந்தன.
அதையும் தாண்டி அவளின் அந்த எதார்த்தமான மனநிலை அவனை மிகவும் கவர்ந்தது. மையிடா கண்கள் சிமிட்டும் அழகை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது. ரோல்க்ஸ் அணியும் அளவு வசதி படைத்த பெண்போல இல்லாமல் சாதாரண பெண் போலவே இருந்தது அவள் நடவடிக்கை .
ஒரு திமிர் இல்லை, சிறு ஒப்பனை இல்லை, தான் என்கின்ற அகங்காரம் எதுவும் இல்லாமல் இருந்தவளின் குணம் ஒரு நிமிடம் அவன் இதயத்தைக் குளிரூட்டினாலும் மறுகணம் அவன் இழந்ததை நினைவுபடுத்தி முள்ளாய் குத்தியது.
கனவிலிருந்து வந்தவன் அவளை மீண்டும் அழைத்தான், “கீழ விழுந்தப்ப உனக்கு எதுவும் அடி பட்டுச்சா?”
கை முட்டியை காட்டியவள், “ஆமா லைட்டா ரத்தம் வந்துச்சு, வீட்டுக்கு போய் பாக்கணும்”
“சென்னை கூட்டத்துல போனா தூசி எல்லாம் படும் இரு” என்று தன் வண்டியில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்தவன் அதில் இருந்த ஒரு பிளஸ்ட்டரை எடுத்து அவளிடம் நீட்ட அதை வாங்கி முகத்தை கோணல் மாணலாக மாறி ஒரு வழியாக அதை போட்டும் கொண்டாள், “அப்பா இதுக்கு இவ்ளோ நேரமா? இப்ப கெளம்பு”
வண்டியில் ஏறி அமர்த்த பின்பு அவனை ஒரு குறும்பு சிரிப்புடன் பார்த்தவள், “தேங்க்ஸ் அங்கிள்”
“வந்தேன் மண்டை ஒடஞ்சிரும் ஓடிரு” என்றான் பொய் கோபத்துடன் அவன் கடையை விட்டு வெளியே வருமுன் அவள் துள்ளி குதித்து ஓடி விட்டாள்.
***********************
அந்த பரபரப்பான திங்கள் கிழமைக் காலை வேளையில் ஒரு மணி நேர கடின ஒர்கவுட் முடித்து காலை உணவை கூட உண்ணாமல் மின்னல் வேகத்தில் அலுவலகத்திற்கு வந்தவன், தன் அறையை பார்த்ததும் இருந்த புத்துணர்வு நீங்கி கோவம் மட்டுமே மீதம் இருந்தது.
“ஜெயன் மொத எனக்கு ஒரு அசிஸ்டன்ட் அரேஞ் பண்ணுங்க இங்க பாருங்க இப்படியா டேபிளை ஆர்டர் இல்லாம வச்சிருப்பிங்க. அடுத்து மீட்டிங்கு தேவையான பைல்ஸ் எங்க இருக்குனு நான் இப்ப இதுல எப்படி கண்டு புடிக்கிறது?” அனலாய் கொதிக்கும் கோவத்தை அடக்கியவாறே அவனை சுற்றி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்.
“சார் மீட்டிங் லஞ்சுக்கு அப்றம் தான் சார். உங்க அஸிஸ்டண்ட்ஸ் இண்டெர்வியூ அரேஞ் பண்ணிட்டேன். இப்ப 9 மணிக்குமேல் இண்டெர்வியூ ஸ்டார்ட் ஆகிடும்”
“தயவுசெஞ்சு அத பண்ணுங்க” என்றான் தனது மடிக்கணினியை எடுத்து சோபாவில் அமர்ந்து.
“சார் உங்க அஸிஸ்டண்ட் நீங்க பாத்து செலக்ட் பண்ண தான கரெக்டா இருக்கும்”
பெருமூச்சு விட்டவன், “சரி 5 பேருக்கு மேல நான் இண்டெர்வியூ பண்ண மாட்டேன். அந்த 5 பேருக்குள்ள ஆள் கிடைக்கலனா நீ தான் எனக்கு அசிஸ்டன்ட் ஒர்க் பண்ணனும்” ஜெகனும் ஆமோதித்து தலையை அசைத்தவன் உதய்க்கு குடிக்க தேநீர் எடுக்க சென்றான்.
சரியாக 9 மணிக்கு ஜெயன் ஒவ்வொருவராக அனுப்பி வைக்க ஆரம்பித்தான். வந்தவர்களில் முதல் இரண்டு நபரும் அவன் எதிர்பார்த்ததை விடவும் திறமைசாலிகளாக இருந்தனர் இருந்தாலும் அடுத்தவரை அவன் அழைக்க ஒரு பெண் உள்ளே வந்தாள். உள்ளே வர அனுமதி கேட்கவில்லை வந்ததும் அவனுக்கு எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தவள் அந்த அறையைச் சுற்றிப் பார்க்க ஆரம்பி த்தாள். அவனின் கடினப் பார்வையும் மீறி.
“இதுக்கு முன்னாடி எத்தனை இன்டெர்வியூஸ் அட்டென்ட் பண்ணிருக்கீங்க?”
அவனின் ஆளுமையான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு அவன் மேல் கவனம் செலுத்தியவள் அவனின் பார்வையில் சிலையாகி தான் போனாள். அந்த குளிர்ந்த ஏ.சி யில் சற்றும் கலையாத அடர்ந்த கேசம், கேள்வியாய் ஆளை துளைத்தெடுக்கும் கூர்ந்த பார்வை நடுங்கவே செய்தது. கோவத்தில் சிவந்திருந்த மூக்கை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்க கண்களை சிமிட்டி சமாளித்தாள். ஆனாலும் அவன் மொத்தமாய் ஆண்களுக்கே உரிய அழகில் யாரை வேண்டுமானாலும் எளிதில் வசப்படுத்திவிடும் அழகன் போல அவள் கண்ணில் தெரிந்தான். வந்தது வேறு யாரும் இல்லை, யாழினியே தான்.
அவன் கேள்வியை கவனிக்காதவள், “சார்?” என்றாள்.
“இது உங்களுக்கு எத்தனாவது இன்டெர்வியூ?”
“22” என்றாள் நெளிந்து.
“ஏன் தெரியுமா உங்கள யாருமே எடுக்கல? உள்ள வரப்ப கதவை தட்டிட்டு வரணும்னு தெரியல, உட்காறப்ப என்னோட பெர்மிஷன் கேக்காமயே உட்காறீங்க . பாத்த ஒடனே தூக்கி வெளிய போட தான் தோணுது”
அவமானத்தில் தலையை தொங்க விட்டவள் சட்டேன்று எழுந்து நின்றாள் ‘சாரி’ என்று முணுமுணுத்தப்படி .
“ரெஸ்யூம்” அவள் கண்களில் இருந்து வழிந்து ஓட இருந்த நீரை முடிந்த அளவு தடுத்தவள் அவனிடம் அவள் பைலை கொடுக்க அதை பார்த்தவன் அவளிடம் சில கேள்விகள் கேட்ட பிறகு.
“இந்த ஜாப் கிடைக்கும்னு தோணுதா உங்களுக்கு?”
இல்லை என்று தலையை ஆட்டியவள், “கெடச்சா நல்ல இருக்கும்னு தோணுது”அவள் கண்ணில் இருந்து வழிந்த நீரை பார்த்தவன் அவள் கூறாமலே அவளின் வறுமையியும் வருத்தத்தையும் அறிந்தான், “இது பெர்மனெண்ட் ஜாப் இல்ல எனக்கு ஒரு 3 டு 6 மந்த்ஸ் தான் அசிஸ்டன்ட் தேவை”
“அப்ப எனக்கு ஜாப் கெடச்சிடுச்சா சார்?” அந்த சோகமான முகம் மறைந்து வெறும் ஆனந்தம் மட்டுமே அந்த நிமிடம் இருந்தது.
“இல்ல நாளைக்கு உங்களுக்கு மெயில் வரும் செலக்ட் ஆகிருந்தா” தனக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நினைத்தவள்.
அவளின் முகம் வாடியதை இறுக்கமான முகத்துடன் பார்த்தவன் அவள் கதவின் புறம் சென்று ஒரு நிமிடம் ஏதோ ஒன்று யோசித்து மீண்டும் அவன் புறம் திரும்ப அவள் பேசுவத்திற்காக காத்திருந்தான் மௌனமாக.
“வேற எதாவது வேகன்சிஸ் இருக்கா சார்? இருந்தா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க சார்” அவள் பேசியது அவனுக்கு கோவம் இருந்தாலும் ஏதோ இதற்குமேல் எனக்கு வழி இல்லை என்று அவள் கூறுவது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அது மட்டும் அன்றி தன்னிடம் உரிமையாக ஒருவர் பல வருடங்கள் பிறகு கேட்டும்பொழுது அவனால் என்ன பதில் கூறவேண்டுமென்று தெரியவில்லை.
“உங்க பேர் என்ன?”
“யாழினி”
“Yazhini you can join tomorrow morning at sharp 9. The only reason I am giving you this opportunity is for your fresher profile. If I am not satisfied with your work don’t expect me to keep you here. You may go now”
‘நல்லா பொய் சொல்ற’ அவன் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் அவன் வேலையை பார்க்க இன்னும் கதவு திறக்கும் சத்தம் தன் காதில் கேட்கவில்லை என்றதும் அவள் இன்னும் வெளியில் செல்லவில்லை என்று தெரிந்து அவன் தலையை நிமிர்ந்தான்.
உதய்யின் மடிக்கணினியின் அருகில் ஒரு சாக்லேட் வைத்தவள், “இது ஒரு சின்ன ட்ரீட் சாளரி வந்ததும் பெருசா ட்ரீட் வச்சறேன் சார். ஒரு வருசமா வாங்கி வச்ச சாக்லேட் இணைக்கு தான் யூஸ் ஆகியிருக்கு. இன்னைக்கு என்ன அந்த ராகுல் கிட்ட இருந்து காப்பாத்திட்டீங்க இல்லன்னா அவன் என்ன வம்பிழுத்தே கொண்டிருப்பான். அப்பறம் எனக்கு இன்னொரு பேர் நான் யோசிக்கிறதுல இருந்து காப்பாத்தி குடுத்துட்டீங்க. நான் அடிக்கிற அடில பால் கிரௌண்ட தாண்டி பறக்கும் பாருங்க. நன்றி சார்”
ஏதோ நினைவு வந்தது போல் மீண்டும் ஒரு சாக்லேட் வைத்தவள் “வெளிய இருக்க அந்த வெரப்பான அண்ணாக்கும் குடுத்துருங்க அவர் முகம் ராசியானது” தானாக வந்தவள் தானாக பேசினாள் அவளாகவே சென்றும்விட்டாள்.
கை எட்டும் தூரத்தில் இருந்த மிட்டாயை பார்த்தவன் சிரிப்புடன் அதை எடுத்து தூக்கி போடவும் மனம் இல்லாமல் உண்ணவும் மனம் இல்லாமல் இன்முகத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தான்.
How is it?
மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க ப்ளீஸ்…
