Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 4

அத்தியாயம் 4

 

ஆதவன் இன்னும் முழுதாய் மலராத வேளையில்.. பனியும் மெல்லிய மழை சாரலும் பூப்போல் பொழிந்து கொண்டிருக்கும் பொழுது.. பெங்களூரில் காலடி எடுத்து வைத்தாள் சிற்பிகா..

 



Advertisement

இங்கு தனக்கு நடக்க போகும் விபரீதங்கள் ஏதும் அறியாதவளாய் பெங்களூரின் காலநிலையை ரசித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு.. விதி இரக்கம் கொண்டது..

ராஜாங்கம் வாயெல்லாம் பல்லாக பின்னால் வர.. அவரோடு அம்பிகாவும் நீரஜாவும் வந்தனர்.. ராஜாங்கத்தின் புன்னகைக்கு காரணம்.. சிற்பிகா தன் பாதுகாப்பு வளையமின்றி தனித்து வந்திருந்தாள்..

 

Advertisement

ஆம் சிற்பிகா ரூபாலி துணையின்றி பெங்களூர் வந்திருக்கிறாள்.. விமான நிலையம் செல்லப்போகும் நேரத்தில்.. சுசிலாவின் அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஐசியூவில் வைத்திருப்பதாக போன் வர.. அவரால் வர முடியாத சூழ்நிலை..

Advertisement

 

ஜெகன்நாதன் கட்சி நிமித்தம் மேலிடத்தை சந்திக்க சென்னை சென்றுள்ளார்.. அதனால் ரூபாலிக்கு சுசீலாவை தனித்து விட முடியாத நிலை.. ஆனால் இருவருக்குமே சிற்பிகாவை அவர்களோடு தனிமையில் விட மனமில்லை.. என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களை.. சிற்பிகாதான் தன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வதாய் கூறி அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்..

 

Advertisement

அப்பொழுதும் அவர்களின் கார் டிரைவரை அனுப்பி அவள் விமானம் ஏறும் வரையிலும் அவனை அங்கனவே இருக்க சொன்னார்.. சுசீலா.

 

சிற்பிகாவையும் ரூபாலியையும் எப்படி பிரிப்பது என தெரியாமல் ராஜாங்கம் தலையை பிய்த்துக் கொண்டிருக்க.. விதியே அவருக்கு தகுந்தமான சூழ்நிலையை ஏற்படுத்தியது..

 

அதையெண்ணி சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தார்.. ராஜாங்கம்.. என்ன ஒன்று நீரஜாவும் அம்பிகாவும் வந்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. லிங்கேஸ்வரர் தொழில் பொருட்டு வரவில்லை என்று கூறிவிட்டார்.. எப்பொழுதும் நடக்கும் நிகழ்வுதான் என்பதால்.. தன் வேதனையை மனதோடு வைத்துக் கொண்டாள் சிற்பிகா..

 

ஆனால் அவளை மகிழ்விக்கும் பொருட்டு அம்பிகா வர.. ஊரை சுற்றிப் பார்க்க நீரஜா வந்திருந்தாள்..

அவர்கள் மூவரும் கால்டாக்சியில் ஏறும்பொழுது சிற்பிகாவின் மொபைல் ஒலித்தது.. அதில் தெரிந்த ரூபாலி எண்ணைக் கண்டு வேகமாக எடுத்த சிற்பி..

 

” ஹலோ.. ரூபி பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு..”

 

……

 

” ஹ்ம்ம் வந்தாச்சுடி.. இப்போதான் டாக்சில ஏறியிருக்கோம்.. இன்னும் ஒன்னவர்ல ஹோட்டலுக்கு போயிடுவோம்.. ”

 

……

 

” பங்க்ஷன் பத்து மணிக்கு ஆரம்பிக்குறாங்க.. ஈவ்னிங் தான் முடியும்னு நினைக்கிறேன்.. ”

 

…..

 

” ஓகே நீ அங்க பாரு நான்.. ஹோட்டலுக்கு போயிட்டு கால் பன்றேன்..”

 

….

 

” ஹ்ம்ம்ம்”

 

….

 

” ஓகே நீ டிக்கெட் புக் பண்ணிடு.. ” என்று போனை கட் செய்ய.. ராஜாங்கம் முகம் மாறியது..

 

” பாப்பா யாரு போன் செஞ்சா.. ரூபாலியா.. இப்போ அவங்க பாட்டிக்கு எப்படி இருக்காம்.. ” என்று கேட்டார் அம்பிகா..

 

” ஹ்ம்ம் நல்லாயிருக்காங்களாம்.. ” என்பதோடு பேச்சை முடித்துக்கொள்ள.. ராஜாங்கம் ஆரம்பித்தார்..

 

” என்ன கண்ணு என்னமோ டிக்கட் போட சொன்ன.. ”

 

” அது.. பங்க்ஷன் முடிஞ்சவுடனே கிளம்ப சொன்னா.. அவளுக்கு அங்க தனியா மேனேஜ் பண்ண முடியலையாம்.. ஹெல்ப்புக்கு என்னைய கூப்பிட்டா.. அதான் நான் டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன்.”

 

” என்னது வந்த அன்னைக்கே போகனுமா.. நான் என்ன உன் பெரும பீத்தல பார்க்க வந்தேன்னு நினைச்சியா.. நான் ஊரை சுத்திப்பார்க்க வந்தேன்.. சோ ஒன் வீக்குக்கு நான் எங்கயும் வரமாட்டேன் ” என தன் கீச்சு குரலால் கீச்சிட்டாள் நீரஜா..

 

அம்பிகா.. பார்வையால் சின்ன மகளை எரிக்க.. அவளோ அதை கண்டுகொள்ளாமல் தமக்கையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

” அவள விடும்மா.. சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசுறா.. ஏண்டா பாப்பு ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போனா உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கும்.. இனிமே எப்போ இந்தமாதிரி வரப்போறோமோ.. ” என வாஞ்சனையுடன் கூறினார்.. அம்பிகா.

 

” இல்ல எனக்கு மட்டும்தான் டிக்கெட் புக் பண்ண சொல்லிருக்கேன்.. நீங்க எல்லாரும் ஒருவாரம் இருந்து சுத்திப் பார்த்துட்டு வாங்க.. ” என மெல்லிய குரலில் கூறியவள் தன் போனில் முகத்தைப் புதைத்தாள்..

ஆனால் இவள் கூறியவுடன் மற்ற மூவரின் முகமும் ஒவ்வொரு விதமாய் மாறியது.. அம்பிகா சிற்பிகாவின் ஒட்டாத்தன்மையை எண்ணி கவலைக் கொள்ள.. நீரஜாவோ எப்படியோ ஊர் சுற்ற எந்த தடையுமில்லை என சந்தோஷம் கொண்டாள்.. ஆனால் ராஜாங்கமோ ரூபாலியையும் சிற்பிகாவையும் கொல்லும் வெறியில் இருந்தார்..

 

” ***** அங்க இருந்துக்குட்டே இங்க எனக்கு தொல்லைய கொடுக்கிறா.. இருங்கடி இங்க வந்த விசயம் மட்டும் நல்லபடியா முடியட்டும்.. ரெண்டு **** அண்டவிடாம பன்றேன்.. ” என கொச்சை வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்..

 

ப்ளூ ரோஸ் ஹோட்டலின் வாயிலில் டாக்சி நிற்க.. அதிலிருந்து நால்வரும் இறங்கினர்.. சிற்பிகா அந்த ஹோட்டலின் அமைப்பையும் கட்டிடக்கலையையும் ரசனையுடன் பார்த்தாள்..

 

ஒவ்வொரு ரூமிற்க்கும் பால்கனியும் அதில் சில ரோஜா செடிகளும் வைலட் மற்றும் ரோஸ் வண்ண மலர்களும் நிறைந்து பார்க்கவே கண்ணை பறித்தது.. அழகும் ஆபத்தும் பிரிக்க முடியாதது என ஒரு சொல்பேச்சு உண்டு..

 

அதற்க்கேற்றார் போல் இரவில் இங்கு தனக்கு நடக்க போகும் கொடுமைகள் தெரியவந்தால்.. இந்த அழகு ரசிக்குமோ என்னவோ..

மூன்று அறைகள் தான் முன்பதிவு செய்திருந்தார் ராஜாங்கம்.. நீரஜா தனக்கென தனியாக அறை வேண்டும் என அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.. அதனால் அம்பிகாவையும் சிற்பிகாவையும் ஒரே அறையில் தங்க சொல்ல.. ஒரு பகல் மட்டும்தான் என்பதால் சிற்பிகா சம்மதித்தாள்..

பிறகு அறைக்கு சென்று மூவரும் சற்று ஓய்வெடுத்துவிட்டு பங்க்ஷனிற்கு கிளம்பினர்…

 

***********************************************

 

” என்ன அபி இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு.. என்ன விஷயம்.. ”

 

” ம்ம்ம்ம்… ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்த ஒன்னு இன்னைக்கு கிடைச்சிருக்கு.. ” என்று கூறியவனின் விழிகள் அதீதமாய் பளபளத்தது..

அபயின் உணர்வுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்த அதிக்கு.. இந்த விழிகளின் பளபளப்பிற்க்கான காரணம் புரிந்தது.. இது ஒன்றும் சந்தோஷத்திற்க்கான ஜொலிப்பு அல்ல.. வேட்டையாடுவதற்கான ஜொலிப்பு..

 

யாரு.. என புருவம் சுருக்கி அதி கேட்டுக்கொண்டிருக்கும் போது.. டக் டக் என குதிங்கால் ஹீல்ஸ் சப்தமிக்க.. குறைவான ஆடையும் அதீதமேக்கப்புமாய் அபயின் அறைக்குள் நுழைந்தாள் சோனியா… அவன் கேர்ள் பிரென்ட்.. அபய் டார்லிங் என தன் கின்கினி குரலால் கத்தியவாறு வந்தவளின் முகம் அவன் அருகே அமர்ந்திருந்த அதியைக் கண்டு சிறுத்தது..

அபய் சோனியாவை ஓர் பார்வை பார்க்க.. அவள் முகம் மீண்டும் சுவிட்ச் போட்டது போல் மலர்ந்தது.. அவனின் ஒற்றை இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்து அவன் கழுத்தை வளைத்தவள்.. தன்னெதிரே இருந்தவளிடம் பேச்சுக் கொடுத்தாள்..

 

ஹாய் Ak.. உள்ளுக்குள் பொருமிக் கொண்டு.. வெளியில் சிரித்த முகத்துடன் இனிமையாய் பேசினாள்..

 

அதி அதை புரிந்துக் கொண்டு நக்கலாய் அவளைப் பார்த்தவாறு தலையசைத்தாள்..

 

ஹும்.. பெரிய மஹாராணி.. எங்ககிட்டயெல்லாம் பேசுனா வாயில உள்ள முத்தெல்லாம் கொட்டிடும் என உள்ளுக்குள் நொடித்துக் கொண்டு வெளியில் ஈஈஈ என இளித்து வைத்தாள்.. பின்னே வேறு வழி.. இவளிடம் முகம் கொடுத்தால்.. அபய் முகம் என்னைப் பார்க்காதே..

டார்லிங்.. என்னைய வர சொல்லிட்டு இப்படி அமைதியா இருக்கீங்க.. கிள்ளை மொழியில் கொஞ்சி.. அவன் மேல் தன் அங்கங்களை உரசினாள்..

 

ஆனால் அபயோ அதில் பாதிக்கப்படாதவனாய் அதியிடம் பேச ஆரம்பிக்க.. அவளும் இவளைக் கண்டுகொள்ளவில்லை.. எப்பொழுதும் போல் இப்பொழுதும் தனக்கு நேர்ந்த அவமானத்தை சட்டை செய்யாமல்.. விக்கிரமாதித்தன் தோளில் இருந்த வேதாளம் போல் அபயின் தோள்களைப் பற்றிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.. சோனியா.

 

” ஓகே அதி நான் கிளம்புறேன்.. ஈவ்னிங் பார்க்கலாம்.. ”

அப்பாடா சனியன் ஒலிஞ்சது.. என மனதிற்குள் நினைத்த சோனியா அதி வெளியே சென்ற நொடி அபயின் மடியில் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து அவன் இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தாள்..

அபயின் இதழும் அவளுக்கு பதிலடி கொடுக்க.. அவளை பின்புறத்திலிருந்து முத்தமிட்டவாறு தூக்கிச்சென்று.. டப்பென்று மெத்தையே அதிரும் வண்ணம் போட்டவன்.. அவள் மேலே பாய்ந்து ஆடை களையும் பொறுமையின்றி கிழித்தெறிந்து அவளுக்குள் தன்னை புகுத்தி வேட்டையாட.. சோனியா சுகவலியில் பிதற்ற ஆரம்பித்தாள்..

 

அவளை தன் இஷ்டத்திற்க்கெல்லாம் அவன் ஆட்ட.. மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் அவனிடம் மயங்கி கிறங்கிக் கொண்டிருந்தாள்..

சோனியா கட்டில் விளையாட்டில் கரைதேர்ந்தவள்.. தான் பயின்ற அணைத்து வித்தைகளையும் கொண்டு அபய்யை அவள் கைப்பற்ற முயற்சிக்க.. அவளின் அணைத்து வித்தைகளாலும் அபயின் ஆறரையடி எய்ட்பேக் கட்டுடலின் ஒவ்வொரு செல்லும் சுகத்தில் லயித்தாலும்.. அவளிடம் மயங்காமல் ராட்சஷனாய் இருந்தான்..

 

தன்னை வெல்ல முயன்றவளின் பெண்மையை துவசம் செய்து அவளைக் கதறவிட்டான்.. முழுதாய் நான்கு மணிநேரம் கட்டில் யுத்தம் நடந்தது..

 

கூடல் முடிந்தாலும்.. எந்த ப்ரயாக்கினமுமின்றி படுத்திருந்தாள் சோனியா.. அவள் உடலெங்கும் சுகவலியில் நடுங்கிக்கொண்டிருந்தது.. ஆனால் அபயோ எவ்வித பாதிப்புமின்றி தெளிவாக இருந்தான்.. அதிலும் மயங்கியிருந்தவளை சட்டை செய்யாமல் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.. சோனியா எழ எப்படியும் ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகும்..

 

************************************************

 

வெண்மை நிற சல்லடை துணியில் பூ வேலைப்பாடுகள் கொண்ட முழுக்கை மேலாடை அணிந்து.. அதற்க்கேற்றார் போல் பூ வேலைப்பாடு கொண்ட மஞ்சள் நிற மெல்லிய டிசைனர் புடவையில்.. தன் முதுகளவிலான பட்டான மென் கூந்தலை கொண்டையிட்டு அதில் மல்லிச்சரம் சூடி.. செவியில் பெரிய அளவிலான வேலைப்பாடுடைய ஜிமிக்கி மட்டும் அணிந்து மஞ்சள் நிற ரோஜா போல் பாந்தமாய் இருந்தாள் சிற்பிகா..

 

அப்பொழுது அங்கு வந்த அம்பிகா.. அவளின் அழகில் மெய்மறந்து நெட்டி முறிக்க.. அவளிடத்தில் மென் புன்னகை மட்டுமே..

அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் தான் விழா ஏற்பாடு செய்திருப்பதால்.. அவசரமின்றி பொறுமையாகவே கிளம்பினர்..

விழா அரங்கம் முழுதும் மக்கள் தலைகளால் நிறைந்திருந்தது.. அங்கு கூடியிருப்போர் அனைவரும் கர்நாடக சங்கீதம் மற்றும் பரதம் மோகியாட்டம் கதகளி போன்ற பாரம்பரிய கலைகளில் பெயர்பெற்றவர்கள்.. இந்த விழா வளரும் கலைஞர்களை ஊக்குவித்து.. அந்த துறையில் இப்பொழுது சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் விழாவாகும்.. இதில் சிற்பிகாவிற்கு பரதத்தில் நாட்டிய தாரகை விருது வழங்கப்படுகிறது..

 

வட்ட வட்டமாக அழகுற அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் சிற்பிகாவும் மற்றவர்களும் அமர்ந்தனர்.. பத்து நிமிடத்திலேயே நீரஜா வெளியே செல்ல வேண்டுமென அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.. வந்த இடத்தில் பிரச்சனை வேண்டாமென்பதால் அம்பிகா சின்ன மகளை இழுத்துக் கொண்டு வெளியேற.. ராஜாங்கமும் சிற்பிகாவும் மட்டுமே விழாவில் பங்கு கொண்டனர்..

 

சங்கீத நிகழ்ச்சி, சிறுவர்களின் பரதம் மற்றும் ஆன்றோர் சான்றோரின் பேச்சுரைகள் போன்றவற்றோடு விழா இனிதே நடந்துக்கொண்டிருந்தது..

அப்பொழுது சிறப்பிகாவிற்கான அழைப்பு வர சிறு படபடப்புடன் மேடையேறினாள்.. அதேநேரம் சரியாக அம்பிகாவும் நீரஜாவும் வந்திருந்தனர்.. கூடவே ஒரு ஜோடி விழிகள் மோக வெள்ளத்தில் அவளை அங்க அங்கமாய் அளவிட்டுக் கொண்டிருந்தது..

பரதத்தில் புகழ்பெற்ற வயதான பெண்மணி அவளுக்கான விருதைத்தர.. அவர் பாதம் பணிந்து அதனை வாங்கிக் கொண்டாள்..

 

தொகுப்பாளர் அவளை சில வார்த்தைகள் பேசுமாறு கூறினார்..

” இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இந்த விருது எனக்கானது இல்லை.. என்னுடைய அம்மாவிற்க்கானது.. எங்கம்மா துர்கா அவங்களும் டான்சர் தான்.. ஆனால் கோவில்கள்ல மட்டும் தான் ஆடுவாங்க.. என்னுடைய முதல் குருவும் அவங்கதான்.. அப்புறம் என்னோட பத்தாவது அகவையில் அவங்க இறந்துட்டாங்க.. ஆனாலும் அவங்களோட ஆசைகளுக்காக நான் பரதம் கத்துக்கிட்டேன்.. என்னோட பேருக்கும் புகழுக்கும் முழுமுதற்க் காரணமே அவங்கதான்.. அதனால் இந்த விருதை என்னுடைய அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.. என்று நெகிழ்ந்த குரலில் கூற.. அரங்கம் கரகோசங்களின் ஒலியால் அதிர்ந்தது..

 

சிற்பிகாவின் மனம் இன்று தன் தாயின் அருகாமையை மிகவும் நாடியது.. ஆனால் அது எப்பொழுதும் கிடைக்காது என்ற உண்மை முகத்தில் அறைய.. அவள் அகமும் புறமும் வேதனையில் கசங்கியது.. அப்பொழுது அம்பிகா அவளை சமாதானம் படுத்தும் பொருட்டு அவளுக்கு ஜூஸ் தர.. அதனை மறுத்தவள்.. அங்கிருந்த தண்ணீரை மட்டும் பருகினாள்..

அரைமணி நேரம் அமைதியாக கழிய.. சிற்பிகாவின் உடலில் ஏதோ மாற்றம் தோன்றியது.. விழிகள் சிறிது சிறிதாக மங்க ஆரம்பிக்க.. அவள் உள்ளம் நடுங்கியது.. எங்கோ தவறு நடந்திருக்கிறது என புரிந்தவள்.. சொருக முயன்ற விழிகளை முடிந்தளவு உயர்த்தி ராஜாங்கத்தினை காண அவர் முகத்தில் குரூரசிரிப்பு..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!