Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 7.2

குரல் வந்த கதவின் திசை நோக்கி அனைவரும் பார்க்க அங்கே கருப்பு நிற முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து, வெள்ளை நிற பாண்ட் அணிந்து முகத்தில் இருக்கும் கோவத்தை மறைக்க சிரிப்பெனும் ஆபரணம் அணிந்து நின்றான் ஆதி. ஆதி கேசவன்.

வந்தவனை ஆதவன் ஆச்சிர்யத்தின் உச்சியில் நின்று பார்க்க ஆதியின் கண்கள் ஒரு நொடி அவன் மேல் பட்டு மீண்டு உதய்யை நோக்கி சென்றது.

ஆதியை வெளியில் அனுப்பும் பொருட்டு ஜெயன் அவனை நோக்கி “யார் நீ? பெர்மிசன் இல்லாம இங்க எல்லாம் வர கூடாது வெளிய போ” என்று ஜெயன் அவனை வெளியே அனுப்ப எத்தனிக்க உதய் அவனை தடுத்தான்,

“வெயிட் பண்ணுங்க ஜெயன். சி யு ஆல் இன் நெக்ஸ்ட் மீட்டிங் (See you all in next meeting)” என்று தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு மறைமுகமாக கட்டளையிட்டவன் அவன் முன் நிற்பவனை விழி அகற்றாமல் பார்த்தான்.



Advertisement

ஆச்சிரியம், அவன் இத்தனை வருடங்கள் தன் முன் தோன்றாமல் இன்று எதற்காக அதிலும் இவ்வளவு அவசரம் ஏன்? அதே நேரம் அந்த கோவம் நிறைந்த கண்களை பார்த்து அதன் காரணத்தை அறிய இயலவில்லை அவனால்.

சம்மந்தமே இல்லாமல் ஒருவன் தங்கள் அலுவலகத்தில் நுழைந்ததை  பார்த்த ஹரி மற்றும் விஷ்ணுவிற்கு அவன் நிற்கும் தோரணை சற்றும் புரியவில்லை, புடிக்கவும் இல்லை. யார் வந்தாலும் பார்த்துக்கொள்வேன் என்று தெனாவெட்டோடு நிற்கும் தோள்கள், யாருக்காகவும் அஞ்சுபவன் நாள் அல்ல என்று நேராய் நிற்கும் கண்கள்.

அவனை கடந்து செல்பவர்களை பொருட்படுத்தாது அவன் பார்வை உதய்யின் மீதே படிந்திருந்தது. அதில் ஒரு கோவம், இனம் புரியா கோவம் அந்த கோவத்தை கட்டுப்படுத்த அவன் படும் பாடு அவன் கண்களிலே தெரிந்தது. எதற்கு இந்த கோவம்? அதுவும் உதய்யை நோக்கி?

Advertisement

என்ன நடக்கின்றது இங்கே, சாதாரண ஒரு வேலையை பற்றி பேசும் பொழுது கூட தனக்கு கீழே இருப்பவர்களிடம் பேச நேரம் இல்லாமல் இருப்பவன் உதய். இன்று தனக்கு சற்றும் அறிமுகம் இல்லாத நபரிடம் ஒரு சிறு கேள்வியும் இன்றி பேச தயாராக இருப்பது அவர்களுக்கு ஆச்சிர்யமே. என்ன தான் ஒருவன் அவசரமாக இருந்தாலும் அநாகரிகமாக அனுமதியே இல்லாமல் ஒரு அறையினுள் நுழைவது அவன் மேல் ஒரு ஏளன பார்வையை பாதிக்க வைத்தது.

Advertisement

உதய்யின் உத்தரவில் அதிர்ச்சி அடைந்த ஜெயன் அவனை விட்டு விலகி நிற்க அந்த அறையில் இருந்த அனைவரும் சென்ற பின்பு மீதம் இருந்தது உதய்யின் மாமா, ஹரி, விஷ்ணு, ஆதவன், ஜெயன், யாழினி மட்டுமே.

அதை உணர்ந்து, “விஷ்ணு மாமாவை உங்க பழைய கேபினுக்கு கூட்டிட்டு போ”

“அண்ணா எதுவும் ப்ராப்லமா. நாங்க வேணும்னா கூடயே நிக்கவா? அவன பாத்தாலே எனக்கு சரியா படல” என்று ஹரி.

Advertisement

அவனுக்கு பதிலாய் தலை அசைத்து மறுப்பு தெரிவித்தவன், “எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க வெளிய போங்க” அவனின் வார்த்தைகளை அறிந்தவனாய் ஈஸ்வரனை அழைத்து ஹரியும், விஷ்ணுவுடன் வெளியே சென்றான்.

“என்ன சார் பயம் வந்துருச்சு போல, பெரிய மனுஷங்கள எல்லாம் வெளிய அனுப்பிட்டீங்க. பரவலா உன் தம்பிய விட ஹரி உன்ன நல்லா பாத்துப்பான் போல என்னாமா பாசம் வழியிது” என்று உதய்யை கடந்து அவனுடைய நாற்காலியில் அமர்ந்து அதன் கைபிடியை தட்டி பார்த்தான், “சும்மா சொல்ல கூடாது நல்லா மெது மெத்துன்னு இருக்கு இது. ஏன் சார் இதுல ஒக்காந்தா அடுத்தவன் குடிய எப்படி கெடுக்கணும், அவன எப்படி நிம்மதி இல்லாம வாழ வைக்கணும்-னு யோசிச்சிட்டே இருக்க தோணுமோ”

நாற்காலியின் ஒருகையில் தன் ஒரு கையும், மீசையை முறுக்கி ஒரு கையும் வைத்து யோசினையுடன் கேட்ட ஆதியை ஜெயனுக்கு அவனை துவைத்து எடுக்கும் அளவு கோவம் வர ஐந்தே அடியில் ஆதியை நெருங்கி அவன் சட்டையை பிடித்து எழுப்ப முற்படுகையில் ஆதவன் அவனை தள்ளி நிறுத்தினான்.

கண்கள் சிவக்க சிவக்க ஜெயனின் சட்டையை பிடித்து, “அவன் மேல கை வச்ச” விரலை நீட்டி எச்சரித்து தன் ஆறடி உயரத்திற்கு சரி சமமாக கண்களை இவ்வாறொரு தீயை ஜெயன் இதுவரை பார்த்ததில்லை, குறும்பு மட்டுமே இருக்கும் கண்களில் இன்று தெரிந்த கோவம் அவனை இரண்டு அடி தானாக பின்னுக்கு தள்ளியது.

அதிர்ச்சியில் உதய்யை பார்க்க அவன் தனக்கே உரிய அந்த நேர்கொண்ட பார்வையை ஆதியின் மேல் செலுத்தி கவனத்தை வேறு எங்கும் மாற்றாமல் வைத்து இருந்தான், எவனோ ஒருவன் தன் மரியாதைக்குரிய முதலாளியின் இருக்கையில் இவ்வாறு அமர்ந்து அவனையே கேள்வி கேட்பது இதுவே முதல் முறை.

“பார்ர்ரா பாடிகார்டா, அந்த தைரியத்துல தான் மத்த எல்லாரையும் வெளிய அனுப்பிருக்கிங்க ஒரு நிமிஷம் நான் கூட நீங்க தைரியமா ஆகிட்டீங்களோனு நெனச்சேன் மாதவன் சார்” – ஆதி

“டேய் ஆதி என்னடா பேசுற நீ 12 வருஷம் கழிச்சு பாக்குறப்ப இப்டி தான் பேசுவியா?” நொடியில் ஆதவனின் கோவம் எல்லாம் காற்றில் கரைந்து ஆதியை கெஞ்சலுடன் கேட்டான்.

‘என்ன 12 வருசமா? இவர்களுக்குள் என்ன உறவு? ஆனால் ஏன் இந்த நீண்ட இடைவேளை?’ – ஜெயன் மனம்.

“ஐயோ என்ன சார் நாங்க காசு இல்லனா பேச கூட உரிமை இழந்துட்டோமா? அப்றம் சார் நான் அங்க நிக்கிறாரே மிஸ்டர் மாதவன் அவர்கிட்ட தான் பேச வந்துருக்கேன்” சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன், “எப்பா என்னமா சூடு ஏறுது இந்த சீட், அப்றம் சூட்டுல நான் ஏதாவது சொல்லி, சந்தோசமா வெளிய நடிச்சிட்டு நிம்மதியா மூணு வேலை சாப்பாடு சாப்புடுற என் தங்கச்சிக்கு சம்பாதிச்சு போட கூட வழி இல்லாத மாதிரி பண்ணிட போறான் உன் பிரண்ட்”

“டேய் உதய் என்னடா சொல்ல வர்றான் இவன், ஏதாச்சு பிரச்னை பண்ணியா? ஏதாச்சு பேசுடா இப்புடியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

பாண்ட் பாக்கெட்டினுள் இரு கைகளையும் விட்டு ஆதியையே பார்த்து கொண்டிருந்தவன், “இவன நான் என்னடா பண்ண போறேன், நான் என்ன வேலை வெட்டி இல்லாமயா இருக்கேன்? ஒருத்தர்கிட்ட மோதணும்னா அவங்க நமக்கு மொத தகுதியா இருக்கனும் இவன்ட்ட என்ன இருக்குனு இவனுக்கு சரி சமமா நான் சண்டை போட போறேன்?” – நக்கலாய் உதய்.

“கொழுப்பு. பணத்துலயே ரெத்தம் ஊருதுல அதான் இந்த கொழுப்பு. இதே கொழுப்பு எங்க அப்பா பேர கெடுக்குறப்ப இருந்துந்தா உன்ன பாராட்டிருப்பேன். ஆனா பாரேன் உன் நல்ல நேரம் இத்தன வருஷம் கழிச்சு நீ என்கிட்ட மாட்டிருக்க கையும் களவுமா”

“ஆதி நீ பேசுறது சரி இல்லடா… அவன் அப்டி எல்லாம் பண்ற ஆளு இல்ல நீ தேவையில்லாம ஏதாச்சு பேசிட்டு இருக்காத அவன பத்தி எனக்கு நல்லா தெரியும். பாதிலேயே விட்டுட்டு ஓடுன உனக்கு எங்கடா அவன பத்தி தெரியும்?”

“ஆஹாங் எனக்கு அவன பத்தி நல்லா தெரியாது தான் அதுக்கு இப்ப என்னங்கிற? இவன் என்ன சுபாஷ் சந்திர போஸ்சா இவன பத்தி குறிப்பு எடுக்குறதுக்கு? மிஞ்சிமிஞ்சி போனா ஒரு 20 குடும்பத்தோட வாழ்க்கைய அழிச்சிருப்பான், அதுவும் இல்லனா வச்சிருக்க காச எப்படி வீணாக்கலாம்னு க்லபுகும் பப்புகும் மாறி மாறி சுத்திட்டு இருந்துருப்பான். இல்லனா என்ன பணத்தை வச்சு பத்து பதினஞ்சு கொலையை பண்ணிருப்பான்… தலைவருக்கு வேற என்ன தெரியும்” என ஆதி கூற, ஆத்திரமாய் அவனை நோக்கி முன் நடந்தான் உதய்.

“12 வருசமா நீ இல்லாம நிம்மதியா இருந்தேன் எதுக்குடா இப்ப வந்த வீணாப்போனவனே, போனவன் அப்டியே போக வேண்டியதுதானே நீ வரலன்னு இப்ப யாரு அழுதது”

“உன்ன பாக்கணும்னு இங்க யாரும் கங்கணம் கட்டிட்டு சுத்தலை”

“வந்த வழியே அப்ப வெளிய கெளம்பு. உன்ன பாக்க பாக்க அடிச்சே கொல்லனும்-னு தான் தோணுது”

சட்டையை முடித்துவிட்டு, “என்னடா கொல்ல போறியா? கொல்லு… இப்டி எல்லாம் பேசுனா நீ பண்ணதுக்கு உன்ன கேள்வியே கேக்காம நான் போய்டணுமா?”

“டேய் அடங்குடா என்ன வந்ததுல இருந்து நான் பண்ணது நான் பண்ணதுன்னு பீட்டர் விட்டுட்டு இருக்க… என்ன உன் குடும்பத்தை நடு தெருவுல நிறுத்தின மாதிரி பேசிட்டு இருக்க”

“நீ பண்ணதுக்கு நடு தெருவுல நிறுத்திருந்தா கூட இவ்ளோ வலிச்சிருக்காதுடா எனக்கு” ஆற்றாமையுடன் வலியில் வந்தது ஆதியின் குரல்.

“என்ன தாண்டா அவன் பண்ணான், சொல்லி தொலயேன்டா” – ஆதவன்

“இவனுக்கு பழி வாங்கணும்னா என்ன என்ன வேணாலும் பண்ணவேண்டியது தான என்ன மயித்துக்கு எங்க அப்பா பேர இப்புடி ஊரே சிரிக்கிற மாதிரி பண்ணான்? நான் தான் பாவம் பண்ணிட்டேன் ஆனா என் தங்கச்சி என்னடா இவனுக்கு பாவம் பண்ணுனா?

எங்க அப்பா ஒரு பிராடு பிராடுனு மூஞ்சிக்கு முன்னாடி அத்தனைபேர் சொன்னப்ப ஒரு ஆம்பளையா என்னால கோவத்தை காட்ட முடியல ஆனா ஒரு பொம்பள புள்ளயால எப்பிடிடா தாங்கிக்க முடியு தன்னோட அப்பன இப்புடி ஊரு பேசுச்சுனா? தெனம் தெனம் சுருங்கி போன பூ மாதிரி அவ ஒரு மூலைல ஒக்காந்து அழுகுறத பாத்த எனக்கு மட்டும் தா அந்த வலி தெரியு. வெவரம் தெரிஞ்ச வயசில இருந்து அண்ணா அண்ணனு அவன் காலுக்குள்ள தாண்ட சுத்தி சுத்தி வருவா? அவளுக்காகவாச்சும் ஒரு சாதாரண மனுசனா நடந்துருக்கலாம்ல?”

“என்னடா உதய் இது? ஏண்டா இப்டி பண்ண?” – ஆதவன்.

ஆதவனை உதாசீனம் செய்தவன் ஆதியை நோக்கி, “உன் தங்கச்சியா பொறந்ததுக்கு அவ அனுபவிச்சு தான் ஆகணும். இல்ல தெரியாம தான் கேக்குறேன்… பெரிய உத்தமன் மாதிரியே பேசுறியே உன்ன விட நான் என்னடா பெருசா பண்ணிருப்பேன் வாழ்க்கைல” – உதய்

“ஆமாடா நான் தப்பு பண்ணே தான். அதுக்காக தான் 12 வருசமா உன் மூஞ்சில முழிக்காம நீ என்ன பண்ணாலும் கண்ணு தெரியாத கழுத மாதிரி எல்லா அடியையும் வாங்குனேன்ல அப்படியும் உனக்கு கொட்டம் அடங்கலயா. ஆனா இத்தன நாள் என்ன என்ன பன்னாலும் நான் தங்கிட்டு இருந்தேன் ஆனா இப்ப என் குடும்பத்துல நீ கை வச்சிருக்க பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” – ஆதி

“என்னடா பண்ணுவ?” அவனுக்கு நேருக்கு நேராக நின்று நக்கலாக கேட்டான் உதய்.

அவன் கண்களில் தெரிந்த நக்கலான பார்வை அவனை வேறு விதமாக சிரிக்கவைத்தது. தனக்கு பின்னே இருந்த நாற்காலியை திருப்பி போட்டு அமர்ந்தவன், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை ஆழ்ந்து இழுத்து உதய்யின் முகத்திற்கு நேராக அந்த புகையை விட்டு, “கட்டம் கட்டி அடிக்கிறது கேள்வி பற்றுக்கியா?”

“……..”

“நிக்க முடியாம, மூச்சு முட்டுற அளவு சுத்தி சுத்தி அடிப்பேன், ஏண்டா இவன்கிட்ட வச்சுகுட்டோம்னு நீ பொலம்புர அளவு சும்மா வச்சுசுசுசு… செய்வேன்”

ஆதியை போலவே ஒரு நாற்காலியில் அமர்ந்து அவனை எந்த வித கோவமோ, வெறுப்போ முகத்தில் காட்டாமல் சிறு சிரிப்பை மட்டுமே தந்தான். பின்னர் அவன் கையில் இருந்த சிகரெட்டை வாங்கி காலில் அதன் அனலை மிதித்து,

“என்ன இங்கிலிஷ் வாசிக்க தெரியாதா? இது டொபாக்கோ பிரீ கேம்பஸ். சிகரெட் புடிக்க கூடாது. அப்றம் என்னமோ ஒன்னு சொன்னியே ஆஹ்ஹ்ஹ்… கட்டம் கட்டி அடிப்பனு, ஹாஹாஹா அந்த கட்டத்தை கட்டுறதுல நா கிங்குடா, சும்மா நிக்க வச்சு விளையாடுவேன் இதுவரைக்கும் ஒருத்தன் பொழச்சு இல்ல… எனக்கே கட்டம் கட்டுவியா.. ஆனா நீ வாய் பேசுறத வச்சு பாத்தா அவ்ளோ தூரம் எல்லாம் நீ தாக்கு புடிக்க மாட்ட.

எனக்கு ஆல்ரெடி நெறய வேலை இருக்கு உன்ன மாதிரி சில்வண்டோடலாம் விளையாட எனக்கு நேரம் இல்ல. போ சமத்துபுள்ளையா வீட்டுல போய் பால் குடிச்சிட்டு கைசூப்பிட்டே தூங்கு போ” தோரணையை பேசியவனை பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஆதியால்.

“மிஸ்டர் மாதவன் ஒருத்தன் வானத்துல பறக்கணும்னு ஆசை பட்டு பலூனை புடிச்சிட்டே பறந்தானாம், வழில வர்ற காக்கா, குருவி, சின்ன சின்ன பறவை எல்லாத்தையும் வெரட்டி விட்டு சந்தோசமா பறந்தானாம்… அவன் ஆசை பட்டமாதிரி மேகத்தை எல்லாம் தாண்டி போனப்ப வந்துச்சாம் ஒரு கழுகு மத்த பறவையை மாதிரி இத அவனால விரட்ட முடியலயாம். விளைவு பலூன் ஓட்டை ஆகி அவன் அவ்ளோ உயரத்துல இருந்து…. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பாவம்” உதய்யை பார்த்து புருவத்தை அமர்த்தலாக மேல் தூக்கியவன், “ஏன் தெரியுமா?”

“…..”

“கீழ மனுஷனோட ராஜியம்னா மேல கழுகோட ராஜியம்”

சற்றுநேரம் அந்த அறையே நிசப்தமாக ஆதி மீண்டும் ஒரு சிகரெட்டை தன் உதட்டின் நடுவில் வைத்து அதை பற்ற வைக்க, அவனையே விழி அகற்றாமல் பார்த்து கை கட்டி அமர்ந்து உதய் “என்ன மிஸ்டர் ஆ.. கேசவன் சவால் விடுறிங்களோ பேஷ் பேஷ் நல்லா பண்ணுங்க இப்போ நான் கெளம்பிட்டா இல்ல உங்க கதையை கேக்க நேரம் கழிச்சு போகவா? இன்னொரு விசியம் சிகரெட் குடிக்க உங்களுக்கு மட்டும் நான் அனுமதி தரேன் ஏன்னா அப்டியாச்சும் வேகமா போய் சேருவீங்கல்ல நீங்க?”

ஆதியின் கோவம் எல்லாம் தவறே செய்யாமல் என் குடும்பம் இவனால் இவ்வாறொரு பெயருடன் இருக்கவேண்டுமா… ஆனால் உதய்க்கோ அவனை பார்க்க பார்க்க கோவமே வந்தது அவன் செய்த செயல்கள் அவன் கண் முன்னே வந்துவந்து நின்று அவனை இம்சித்தது…

ஆகமொத்தம் இவர்கள் இருவரும் அவர்களுக்கே தெரியாமல் வரப்போகும் நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பேற்க போகிறார்களென்று அறியாமல் வாக்குவாதம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போனது…

“காசு இருக்குனு நீ என்ன வேணாலும் பேசுவல… உன்னையும் மனுசனா மதிச்சுவந்து பேசிவந்த என்ன தான்டா சொல்லணும்… நீ மனுசன் இல்ல… கேவலம் ஒரு பத்து லட்சம் காசு எங்களை இப்டி நடுத்தெருவுல அனாதை மாதிரி ஊருல இருக்க எல்லாரோட பேச்சையும் கேக்க வச்சிருச்சு. அதே பத்து லட்சத்தை நான் உனக்கு இப்ப தரேன் எங்க அப்பா பேர உன்னால மறுபடியும் உசுரோட கொண்டு வர முடியுமா”

“இப்ப எதுக்கு நீ இப்புடி தைய தக்கனு குதிச்சிட்டு இருக்க… நான் பண்ணது தப்பு இல்ல ஏங்கவேனாலும் நான் சொல்லுவேன் உன்னால ஆனத பாத்துக்கோ… உங்க அப்பா ஒரு பிராடு தா..”

கோவத்தில் எகிறி ஆதி கொத்தாக அவனது சட்டியை பற்றிட, ஆதியின் சட்டையை அதே கோவத்தில் உதயும் பற்றி நிற்க கண்களில் தீ தெறிக்க தெறிக்க, “ஏஏஏய்ய்ய்ய்ய்ய்… என்னடா ****** அவரை பத்தி ஒரு வார்த்தை தப்ப சொல்றதுக்கு கூட உனக்கு அருகதை இல்ல… செத்து போனவரை எதுக்குடா உன் ஆட்டைல இழுத்த… சொந்த புள்ளையா பாத்தவருக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத அவருக்கு கொஞ்சம் கூட வலிக்காம பண்ணிட்ட. எங்க அப்பா எவ்ளோ வேகமா செத்ததுக்கு வாழ்க்கைல மொத தடவ நேத்து தான்டா சந்தோச பட்டேன்… நல்ல வேளை இருந்துருந்தாருன்னா உசுரோட செத்துருப்பாரு”

“அத்தனை பேர கொன்னுட்டு உங்க அப்பா மட்டும் எதுக்கு உயிரோட இருந்துருக்கணும்…”

‘செய்வதெல்லாம் செய்துவிட்டு எவ்வாறு இப்படி நாக்கில் நரம்பே இல்லாமல் நடந்துகொள்ள இவனால் முடிகிறது?’ என்று ஆதியின் எண்ணம் தனது பிடியை அவன் சட்டியில் இறுகியது… “உனக்கு எந்த விதமான எக்ஸ்பிளனேஷன் குடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல நீ எனக்கு யாரோ ஆகி பல வருஷம் ஆச்சு” என்று அவனும் ஆதியின் சட்டையில் இறுக்கத்தை குடுக்க, ஆதவன் தான் அவர்களை பிரித்து நிறுத்தினான்.

அவனை இடைமறித்த ஆதவன், “டேய் அவன் என்னமோ தெரியாம பன்னிட்டான்டா நான் உங்கிட்ட சாரி கேட்டுக்குறேன், நீ அநாதை இல்லடா நாங்க இருக்கோம்”

“ஊருக்கே படம் ஓட்டி காமிச்சான் உன் பிரன்ட் அப்ப என்ன தேடி வராம இப்ப எங்க இருந்துட்டு புதுசா வருது உன் பாசம்…”

ஆதவனிடம் கோவத்தை காட்டி, உதயிடம் திரும்பி, “நீ பண்ணது என் நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருக்குடா… என் அப்பக்காக நான் உன்ன கொஞ்சம் கூட பழி வாங்காம இருந்தா அது நான் அவருக்கு பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல” அதே வெறியோடு சிவந்த கண்களை துடைத்தவன் உதய்யை தீயாய் முறைத்துவிட்டு புயல் வேகத்தில் வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் வெகுவாய் சோர்ந்த மனதுடன் அமர்த்துவிட… அவனை பார்த்த ஆதவனுக்கும் ஜெயனுக்கும் தான் அவனை பார்க்க பாவமாய் இருந்தது… அவன் படும் வேதனைகள், அனுபவிக்கும் ஒதுக்கம், இரவில் நிம்மதி இல்லாத தூக்கம் எல்லாம் ஒருபுறம் இம்சிக்க பனிரெண்டு வருடங்கள் முன்னே இருந்த நட்பு மீண்டும் சந்திக்கையில் பிறகும் இன்பம் இல்லாமல் அவனுக்கு இன்னொரு வலியையே பரிசாக தர காத்திருக்கிறது… உதய்யின் முகத்தை பார்க்கையில் அவனுக்கும் சென்றவனின் இந்த அவதாரம் மனத்தால் ஏற்க முடியாமல் இருந்தது… என்ன செய்வது என்று உதய் அப்படியே அமர்ந்து விட்டான்.

“ஜெயன்”

“சொல்லுங்க சார்”

“அவனுக்கு எப்படி இந்த விசியம் தெரிஞ்சதுனுக்கு கண்டு புடிங்க”

“சரி சார்”

“ஆதவா”

“சொல்லுடா”

“அவன பதியும், அவன் தங்கச்சி பதியும் எனக்கு டீடெயில்ஸ் வேணும்”

“ஏண்டா… அடுத்து எப்படி பழி வாங்கலாம்னு யோசிக்கணுமா?” – கோபத்துடன் ஆதவன்.

அவன் கேள்வியில் தனது வழியை அடக்கி வலப்பக்க உதடு வலய சிறிதாக விரக்தியோடு  சிரித்தவன் அறையை விட்டு வெளியேறினான்.

How is chapter paa?

Comments please…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!