Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 8

அத்தியாயம் 8

அபய் அதி இருவரும் சிற்பிகா மயக்கத்திலிருந்து வெளிவரும் வரை அங்கேயே இருப்பதென முடிவெடுத்து கெஸ்ட் ஹௌஸிலேயே தங்கிவிட்டனர்..

இங்கு வந்தாலே அவர்களின் பொழுதுகள் நீச்சல் குளத்தில்தான் கழியும்.. இன்றும் அதேபோல் இருவரும் தங்களை மறந்து அந்த மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள.. நீச்சல் குளத்தில் மூழ்கியிருந்தனர்..

அதி நீந்துவதற்கு இலகுவாய் வெண்மை நிற பிகினியும் அதன் மேலே வெண்மை நிற சல்லடையாலான துணியணிந்து.. கீழே தொடையை இருக்கி பிடித்த ஷார்ட்ஸுடன் கவர்ச்சியாய் இருக்க.. அபய் அவளுக்கு போட்டியாக கருப்புற நிற தொடையை இறுக்கிப்பிடித்த ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து தன் கட்டுடலை காட்டியவாறு இருந்தான்…



Advertisement

இருவரும் போட்டிபோட்டு நீச்சலடித்துக் கொண்டும்.. இடையிடையே அங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த உயர்ரக மதுவை காலிசெய்துக் கொண்டும் இருந்தனர்..

அபயின் ஒரு கரம் அதியின் தோளில் இருந்தது.. அதேபோல் அதியின் ஒரு கரம் அபயின் தோளில் இடம்பெற்றிருக்க மறுகரத்தில் இருவரும் தங்களின் மதுக்கோப்பையை வைத்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே நீச்சல் குளத்தில் குதித்து மீனைப்போல் நீந்திக் கொண்டிருந்தனர்.. சரியாக அந்நேரம் அங்கு வந்த சிற்பிகா இவர்களின் நெருக்கத்தை கண்டு திகைத்து.. அப்படியே நின்றுவிட்டாள்..

சிறிது நேரமுன்புவரை சந்தோஷத்தில் அடித்துக்கொண்ட அவளது மனது.. இப்பொழுது பதட்டத்திலும் அச்சத்திலும் அடித்துக்கொண்டது.. சிற்பிகா அதியை அபயின் காதலியோ இல்லை மனைவியோ என நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாள்.. இவ்வளவு நேரம் தன்னவனைக் காணும் உற்சாகத்தில் அவளின் சோர்வும்.. மயக்கத்தின் சொச்சமும் பின்னே தள்ளியிருந்தது.. ஆனால் அவற்றை விட ஆயிரமடங்கு அதிர்ச்சியை.. அவளவன் தரவும்.. அதன் தாக்கம் தாங்காது அவளின் தேகம் வீழும் தருணம் அவளைக் கண்ட அபய்… சட்டென்று தண்ணீரிலிருந்து வெளியே வந்து அவளை பாய்ந்து காப்பாற்றினான் என நீங்கள் நினைத்தால் அது தவறு..

Advertisement

அபய் அதி இருவருமே சிற்பிகா மயக்கம் கொண்டு கீழே விழப்போவதைக் கண்டும் எந்த வித எதிர்வினையும் புரியாமல் நீந்திக்கொண்டிருந்தனர்… சிற்பிகா நீச்சல் குளத்தின் அருகே நின்றிருந்ததால் அவள் தண்ணீரிலியே வீழ்ந்தாள்.. சுவாசிக்க முடியாமல் அவள் திணறுவதையும் நீரினுள் மூழ்குவதையும் எவ்வித உணர்வுமின்றி பார்த்துக்கொண்டிருந்தவன்.. கடைசி நொடியில் அவளை தூக்கிக் கொண்டு கரையேறினான்..

Advertisement

நீரினுள் மூழ்கியெடுத்த ரோஜாப்பூவாய் இருந்தவளை சற்று நேரம் வெறித்த அபய்.. அவள் வயிற்றில் தன் வலுமையான கரத்தைக் கொண்டு அழுத்தம் கொடுத்து.. வயிற்றுனுள் இருந்த நீரை வெளியேற்றிவன்.. அவள் விழிக்கும் தருணம் நீர்முத்துக்கள் கொண்டு அலங்கரித்த தேனுரும் இதழை தன் அதரமெனும் சிறைக்கொண்டு அழுத்தப்பற்றினான்.. அவளுக்கு மூச்சை கொடுக்கிறானா இல்லை அவளின் மூச்சை தன் இதழ்க்கொண்டு இழுக்கிறானா என்பதை அவன் மட்டுமே அறிவான்..

சிற்பிகாவோ மாயவனின் செய்கையில் திகைத்து.. விழி விரித்து அவனைப் பார்க்க.. அவளின் கண்களைப் பார்த்தவாறு தன் இதழைப் பிரித்தான்.. அபயசிம்ஹா சக்சேனா..

இதழ் பிரிந்தும் திகைப்பு மாறாமல் அபயையே சிற்பிகா அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க.. அதி அவள் முன் சொடக்கிட்டு அவளின் கவனத்தை தன்பக்கம் திருப்பினாள்…

Advertisement

அதி ” நீ ரொம்ப டயர்டா இருக்கேன்னு நினைக்குறேன்.. அந்த ரூம்ல போயி பிரெஷாகிட்டு வா… ” என ஒரு அறையை காண்பிக்க.. இன்னும் அதிர்ச்சி தெளியாமல் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை போல் அதி கூறிய அறைக்கு சென்றாள்..

அவள் தலை மறையும் வரை இருவரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்..

அபய் ” என்ன நினைக்கிற அதி ”

அதி ” நீ அதிகமா மெனக்கெட வேண்டியதில்லை.. நீ வாய்விட்டு சொல்றது என்ன.. ஒரு பார்வை பார்த்தாப்போதும்.. எல்லாம் உன் இஷ்டப்படிதான் நடக்கும்.. உன் கேரக்ட்டர்க்கு இவள மாதிரி வாயில்லாப்பூச்சி பெஸ்ட் சாய்ஸ் தான்.. என கேலியாக கூறினாள்..

பூந்தூறல் ஷவருக்கு பூந்தூறல் கொட்டியது போல் ஷவருக்குஅடியில் நின்றிருந்த சிற்பிகாவிற்க்கு விழிகளை மூடினாலே.. தன் மேல் கவிழ்ந்த நிலையில் அபய் முத்தமிட்டதே வந்து இம்சை செய்தது.. முதல்முறை உணரும் ஓர் ஆணின் ஸ்பரிசமும் அவனின் இதழின் வழி வந்த எச்சிலும் அவளுக்கு அருவருப்பை தராமல் வெட்கத்தை தான் தோற்றுவித்தது.. இதுதான் காதலின் மாயமோ என எண்ணி வெட்கபுன்முறுவல் பூத்தாள் பெண்ணவள்.. ஆனால் அந்த ஸ்பரிசமும் அவளவனின் இதழமுதம் பலப்பூக்களிடம் சென்று வந்ததைப் பற்றி அறிந்தால்.. இதே காதல் அவளிடம் இருக்குமா… என்பது சந்தேகம் தான்..

ஹாலின் நடுப்பகுதியில் சுற்றிலும் சோபாக்கள் அமைக்கப்பட்டிருக்க நடுவில் பெரிய அளவில் இடம் இருந்தது.. இரு ஒற்றை சோபாவில் அதியும் அபயும் அமர்ந்திருக்க.. அங்கு வந்த சிற்பிகாவை அவர்களின் எதிர்புறத்தில் அமர சொன்னாள்.. அதி.

” வெல்.. சிற்பிகா இப்போ உனக்குள்ள பல கேள்விகள் இருக்கும்ன்னு எனக்கு தெரியும்.. அதுக்கு நான் கண்டிப்பா பதில் சொல்றேன்.. ஆனால் அதுக்கு முன்னாடி நேற்று உனக்கு என்ன நடக்க இருந்துச்சுன்னு தெரியுமா என அதி வினவவும்..

சிற்பி விழிகளில் கோர்த்த நீருடன் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.. இப்பொழுதும் சிற்பிகாவிற்க்கு அந்நிகழ்வை எண்ணினால் உடல் வெளிப்படையாய் நடுங்கத்தொடங்கியது..

அதை அபய் அதி இருவரும் கண்டாலும்.. அவளை சமாதானம் செய்ய முயற்சிக்காமல் தங்களின் இலக்கிற்கு சிற்பிகாவை கொண்டுவர முயன்றனர்..

” நேத்து **** கெஸ்ட் ஹௌஸ்ல இருந்து என் பிரென்ட் தான் உன்னைய காப்பதினான்.. ” என்று அபயின் புறம் கைகாண்பித்து கூறினாள்.. அதி.

சிற்பிகா ஓர் நொடி நன்றியும் மனம் நிறைந்த நேசமுமாய் அபயை நோக்கிவிட்டு உடனேக் கீழே குனிந்து விட்டாள்.. மறந்தும் மீண்டும் அவன் புறம் சிற்பியின் பார்வை செல்லவில்லை.. ஏனெனில் அபயைக் கண்டாலே அவனின் இதழொற்றல் தான் நியாபகம் வந்தது.. அதனால் அவனைக் காண அவளின் இயல்பான பெண்மையின் மென்மையும் கூச்சமும் இடம்கொடுக்கவில்லை..

ஆனால் அவளின் மன்னவனோ.. பெண்மையின் இயல்பான கூச்சத்தையும் வெட்கத்தையும் புரிந்துகொள்ளாமல்.. அவள் தன்னை அவமதிப்பாய் நினைத்து உள்ளுக்குள் கருவிக்கொண்டு.. சிற்பிகாவை முறைத்துக்கொண்டிருந்தான்.. இதில் அவனைச் சொல்லி குற்றமில்லை.. ஏனெனில் அவனறிந்த பெண்களில் யாருக்கும் இந்த வெட்கமும் நளினமும் இருந்ததில்லை.. அதனால் தன் கோபத்தையெல்லாம் வார்த்தை எனும் கங்குகளைக் கொண்டு அவளை எரிக்க ஆரம்பித்தான்…

சிற்பிகா இன்னும் தலைகுனிந்து அமர்ந்திருக்க.. ஏய்ய்ய்.. என்ற ஒற்றை சிம்மத்தின் கர்ஜனைக் குரலில் தேகம் திடுக்கிட.. சத்தம் வந்த திசையை நோக்க… முழு ராட்ஷசன் போல் நின்றிருந்தான்.. அபயசிம்ஹா சக்சேனா..

என்ன தரையையே பார்த்துட்டு இருக்க.. எங்க முகத்தையெல்லாம் மேடம் பார்க்கமாட்டிங்களோ என்ற அவனின் சீரும் நக்கல் குரலில்.. ஒன்றும் புரியாது சிறுபிள்ளை போல் அவள் விழித்தாள்.. ஆனால் அவனோ அதைக்கண்டு இரக்கம் கொள்ளாது..

” இங்க பாரு இப்போ நீ என் ப்ரொபெர்டி.. என்ன புரியலையா உன்னோட நாய்மாமா அந்த மூனு ****கிட்ட உன்னைய அடகுவைச்சுட்டான்.. நான் அவங்ககிட்ட இருந்து உன்னைய மீட்ருக்கேன்… சோ இனிமே நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. ” என்று அபய் அலட்சியமாக கூற பெண்ணவள் விழிகளில் பெருகிய நீருடன் அவனையே திகைப்புடன் வெறித்துக் கொண்டிருந்தாள்..

” இன்னும் ஒன்மத்ல உனக்கும் எனக்கும் கல்யாணம்.. இனி நீ நான் சொல்றபடிதான் நடக்கணும்.. அப்புறம் இவ அதி எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானவ.. அதனால அதிக்கிட்ட எப்பவும் நீ மரியாதையாத்தான் நடந்துக்கனும்… என அதியின் தோளை அணைத்தவாறு கூற… சிற்பியின் விழிகள் இப்பொழுது அதியை வெறிக்க.. அவளோ திமிராக மற்றவளைப் பார்த்தாள்.. அதில் சிற்பிகாவின் காதல் மனம் அடிப்பட்டு போனது… அடிபட்ட மனம் ஆறும் அவகாசமின்றி தன் அடுத்த வார்த்தைகளால் அவளின் காதல் மனதை மேலும் ரணமாக்கினான்.. அபயசிம்ஹா..

” எனக்கு எப்போவுமே வெரைட்டியா இருந்தாத்தான் பிடிக்கும்.. அதனால நான் எப்போ வேணாலும் யார்க்கூட வேணாலும் போவேன்.. இருப்பேன்.. அத நீ கண்டுக்க கூடாது.. மோர் இம்பார்ட்டண்ட் இனிமே நீ என் அனுமதியில்லாம எங்கையும் போகக்கூடாது.. என்னோட எல்லா வேலையும் நீதான் செய்யனும்.. அப்புறம் எனக்கு பெட்ல நல்லா ஈடுகொடுக்கனும் புரியுதா.. என அலட்சியமாக கூறிவிட்டுச்செல்ல…

சிற்பிகா சர்வமும் அடங்க.. மேலே செல்லும் அபயசிம்ஹாவையே திகைப்பும் அதிர்ச்சியுமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஒன்பது வருடங்கள் அவனை தன் மனமென்னும் ராஜ்ஜியத்தின் அரசனாக பாவித்து அவள் அவனை ஆராதித்துக் கொண்டிருக்க.. ஆனால் அபயோ தான் எப்பேர்ப்பட்ட அசுரன் என நொடியில் நிரூபித்தான்..

இங்க பாரு என சிற்பிகாவின் முன் விரல் சொடுக்கிய அதி.. ” அபய் உன்னை காப்பாத்துனதே அவனுக்கு நீ வேணும்ங்கிறதால மட்டும்தான்.. மத்தபடி உன்னை காப்பாத்தணுங்கிற அவசியம் அவனுக்கு இல்லை..

எப்படி இருந்தாலும் அபய் தனக்கு வேண்டியதை அடையாம விடமாட்டான்.. அதனால் அவன கல்யாணம் பண்ணிக்கோ அதான் உனக்கு நல்லது.. உன்னோட தாய்மாமனே உன்ன கூட்டிக்கொடுக்க பாக்குறான்.. அதுவும் மாசக்கணக்கா… சோ உன் வீடே உனக்கு சேப்ஃடி கிடையாது.. யோசிச்சு முடிவெடு.. புத்திசாலித்தனமா யோசிச்சா அபயசிம்ஹா சக்சேனாவோட மனைவிங்கிற அந்தஸ்து கிடைக்கும்.. முட்டாள்த்தனமா யோசிச்சா.. வேறு பேரு கிடைக்கும் பார்த்துக்கோ.. என்று அலட்சியமாக கூறியவள்.. அங்கிருந்து செல்லப்போக.. சிற்பிகா தடுத்தாள்..

ஒரு நிமிஷம் ஒரே ஒரு போன் பண்ணிக்கலாமா.. என மெல்லிய குரலில் எவ்வித உணர்வுமின்றி சிற்பிகா கேட்க.. அதி எவ்வித மறுப்புமின்றி அவளின் முகத்தை பார்த்தவாறு தன் போனை நீட்டினாள்..

சிற்பிகா போனில் சில எண்களை அழுத்தி விட்டு காத்திருக்க.. மறுமுனையிலிருந்து ரூபாலியின் குரல் கேட்க ஆரம்பித்தது…

ஹலோ ரூபி..

….

பதட்டப்படாம நான் சொல்றத கேளு ரூபி.. என்ன ஆச்சு ஏதாச்சுங்கிறதைப்பத்தி நான் அப்புறம் சொல்றேன்.. இப்போதைக்கு நான் நல்லாயிருக்கேன்.. பாதுகாப்பாயிருக்கேன்.. அப்புறம் இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்.. இத மட்டும்தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும்..

…..

ப்ளீஸ் ரூபி என்மேல உனக்கு நம்பிக்கை இருந்தா.. அடுத்து நான் போன் பண்றவரைக்கும் பொறுமையாயிரு.. இப்போ நான் வைக்கிறேன்.. என்றவள் மறுமுனையில் பதட்டமாய் ஒலித்த ரூபாலியின் குரலை சட்டை செய்யாது போனை வைத்தாள்..

அதி ” குட் டிசிஷன் சிற்பிகா.. அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடு… நாளைக்கு அபய்யோட அம்மாவ மீட் பண்ண போறோம் ” எனவும்.. கீ கொடுத்த பொம்மை போல் சிற்பிகா செல்ல.. அதி அவளையே வெற்றிக்களிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!