Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 7

அத்தியாயம் 7

கதிரவன் உச்சி வேளையில் தன்னுடைய செந்நிறத்தன்னொளிகளை பரப்பும் பொழுதுதான் சிற்பிகாவின் கயல் நயனங்கள் மலரத்தொடங்கியது.. ஆனால் இமைகள் யாவும் திறப்பதற்கு முரண்டு செய்ய.. கஷ்டப்பட்டு தன் கயல் விழிகளை மலர்த்தாள்.. முதலில் சுற்றி இருப்பவையனைத்தும் மங்கலாக தெரிய.. வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் போல் இரண்டு மூன்று முறை இமைகளை மூடித்திறந்து தன்னை நிலைப்படுத்தியவளின் மெய்யும் அகமும் சற்று தெளிவடைந்ததும்.. நேற்றைய நியாப்பகங்கள் அனைத்தும் அவளின் விழிகளுக்குள் அணிவகுத்தது..

அதன் தாக்கம் தாங்காது.. சட்டென்று மெத்தையிலிருந்து எழுந்தவள் முகம் பயத்திலும் பதட்டத்திலும் வியர்த்தது.. அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் முகத்தில் வியர்வை முத்துக்களையும் தேகத்தில் நடுக்கத்தையும் கொண்டு.. தன் மேனியில் பார்வையை ஓட்டினாள்.. சிற்பிகா.. உடைதான் சற்று கலைந்து இருந்ததே தவிர நேற்றைய அடையாளங்கள் யாவும் அப்படியேயிருந்தது.. அதோடு உடலில் வேறு எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லையென அவள் உள்மனம் எடுத்துரைக்க.. அதுவரை அவளுக்கு தடைப்பட்டிருந்த சுவாசம் சீரானது..

வேகவேகமாய் மூச்சுக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தளின் விழிகள் இப்பொழுதுதான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தது.. சுற்றிலும் கண்ணாடியால் இழைக்கப்பட்ட பொருட்கள் அலமாரிகள் விலைமிக்க தண்ணீர்மெத்தை என அனைத்திலும் பணத்தின் செழுமை மிளிர.. அந்த அறையினையே ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாய் பார்த்துக்கொண்டிருந்தவளின் விழிகள் எதேர்சையாக பின்சுவற்றில் படிந்து நிலைக்குத்தி நின்றது…



Advertisement

இதழ் துடிக்க.. விழிக்கலங்க இமைமூடாது பார்த்துக்கொண்டிருந்தவளின் வதனத்தில் தான் எத்துணை எத்துணை உணர்வுகள்.. அவற்றில் தெரிந்தது அதிர்ச்சியா ஆச்சரியமா இல்லை மகிழ்ச்சியின் உச்சக்கட்டமா இல்லை விதியின் விளையாட்டினை புரிந்துகொள்ள முடியா பாவனையா என அவள் மட்டுமே அறிவாள்…

அவளின் பின்பக்க சுவற்றில் ஆளுயர அளவில்… கண்களில் கூலிங்க்ளாஸுடன் மேற்சட்டை அணியாது.. வெற்று மார்புடன் தனது உடலில் உள்ள ட்ராகன் டாட்டுக்களையும்.. விடாது செய்யும் உடற்பயிற்சியின் விளைவாக தேவையற்றச்சதை யாவும்மின்றி.. மார்புத்தசைகள் இறுகி.. ஆறரையடி உயரத்தில்.. அந்த ஆண்மை ததும்பும் முகத்தில் சிறிதும் இலக்கமின்றி பார்ப்போரை பயம் கொள்ளச்செய்யும் ராட்ஷசன் போல் நின்றிருந்தவனின் புகைப்படத்தைக் கண்டுதான் அவள் திகைத்தது..

முதன் முதலாக இப்புகைப்படத்தை யாரேனும் கண்டால்.. முதலில் அவர்களுக்கு தோன்றுவது பயம் மட்டுமே.. அதற்கடுத்துதான் ரசனை, கவர்ச்சி என அனைத்தும் தோன்றும்.. ஆனால் சிற்பிகாவின் விழிகளுக்கு.. அவன் முகத்தில் இருந்த கடுமையும் இறக்கமற்ற தன்மையும் முற்றிலும் தெரியவில்லை..

Advertisement

காரணம் நேசம் கொண்ட மனம் மங்கையின் விழியை காதல் எனும் மாயத்திரை கொண்டு மறைத்துவிட்டது.. அதனால் இதில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.. ஆனால் மாயத்திரை விலகும் நேரம் அவளின் நிலை..?

Advertisement

ஒன்பது வருடத்திற்கு முன் தன்னுடைய பதினேழாம் அகவையில் தன் வாழ்வு முடியப்போகிறது என அவள் நினைக்கும் தருணத்தில் அவளை ரட்சித்தவனை கண்டு காதல் கொண்டவளின் விழிகள்.. அடுத்து அவனை இப்பொழுது தான் காண்கிறது..

அதனால் அவள் விழிகளில் சற்று மட்டுப்பட்டிருந்த ஆனந்த நீரூற்று மீண்டும் பொங்கி அவன் நிழல்படத்தை மறைக்க… வேகமாய் கண்களை தொடைத்தவள்.. அவனை விழிவழி தன் மனதிற்குள் நிறைத்துக் கொண்டாள்..

சிற்பிகாவின் மனம் தன்னவனை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தது.. தன் பெண்மைக்கு களங்கம் ஏற்படத்தொடங்கிய இருமுறையும் சரியான நேரத்தில் அவனை தன்னிடம் கொண்டு வந்த விதியினை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாகயிருந்தது.. இறைவனே தங்கள் இருவருக்கும் தான் முடிச்சுக்கள் போட்டிருக்கிறார் என நினைத்து நினைத்து புன்னகைத்துக் கொண்டவள் மனம் உடனே தன்னவனைக் காண உந்த.. மனம் நிறைந்த மகிழ்ச்சியில் உடலுக்குள் பாய்ந்த புதிய உற்சாகத்துடன் தன் கள்வனைக் காண சென்றாள்..

Advertisement

ஆனால் அவளவனின் மன்னவனோ அவளின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தன் சொல்லம்புகளால் நொடியில் வீழ்த்தப்போகிறான் என்று அப்பேதை பெண்ணிற்க்கு தெரியவில்லை.. அப்பொழுது அவள் காதல் மனம் சத்தமின்றி சம்மட்டியால் அடிபடப்போவதையும்… இனி வாய்விட்டுக் கதறவும் அவளுக்கு.. அந்த அசுரன் வாய்ப்பளிக்க போவதில்லை என்பதை அறியாமல் அவளிருக்க.. அறிந்த விதி அவளுக்காக பாவப்பட்டது..

************************************************

விருது வழங்கும் விழாவில்.. நீரஜா போதை பொருள் கலந்த ஜூஸை எடுத்து அருந்தியதால் மயக்க நிலைக்கு சென்றாள்.. அதனால் அபிராமியால் சிற்பிகாவை தொடர முடியவில்லை.. ராஜாங்கம் சிற்பிகாவிடம் தன் கவனத்தை வைத்திருந்ததால் முதலில் இதை கவனிக்கவில்லை.. இருந்தாலும் அவற்றையும் தனக்கு பயன்படுத்திக் கொண்ட ராஜாங்கம் அங்கு தனக்கு வேண்டிய மருத்துவமனையில் நீரஜாவை சேர்க்க ஏற்பாடு செய்து என்னவென்று அறியாது அழுத அபிராமியையும் தேற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தவர்.. பிறகு சிற்பிகாவை அக்கயவர்களிடம் கொண்டு சென்றார்..

சிற்பிகாவை விட்டுவந்த பிறகு ஹோட்டலிற்கு வந்த ராஜாங்கம் தன் கரத்தில் உள்ள இரண்டு கோடி ரூபாய்க்கான செக்கை பார்த்து பார்த்து பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.. ஆனால் அவருக்கு ஒரு கவலை.. மற்ற மூன்று கோடியும் எவ்வித பிரச்சனையுமின்றி அவர் கரத்தில் வந்துசேரவேண்டும் என்றுதான்.. அப்பணம் வரும் வரை ராஜாங்கத்தால் ஒருநிலையில் இருக்கமுடியாது..

ஹப்பா.. இப்போதான்டா நிம்மதியா இருக்கு இவ்வளவு வருஷமும் அவளை ஒன்னுமே பண்ணாம வச்சதுக்கு கை மேல பலன் கிடைச்சுருச்சு.. இனி அவள நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்… அடுத்து ஆறுமாசத்துக்கு யாரவது அவளைப் பத்திக்கேட்டா.. கொஞ்ச காலம் ஓய்வெடுக்க போயிருக்கிறதா சொல்லிக்கலாம்.. மாப்பிளை தங்கச்சிய பத்தி பிரச்சனையில்லை.. அந்த ரூபாலி மூதேவி தான் ஏதாவது பஞ்சாயத்த கிளப்பும்.. அவளை மட்டும் எப்படியாவது சரிக்கட்டனும்.. என யோசித்துக் கொண்டிருந்தார்..

அய்யோ பாவம்.. விதி அவருக்கு எதிராக சதி செய்ததைப்பற்றியும் தன் தந்திரமான குள்ளநரித்திட்டமெல்லாம் அரிமாவின் குணத்தை ஒத்தவனால் முறியடிக்கப்பட்டது பற்றியும்.. இனி தங்கை மகளின் நிழலைக்கூட தன்னால் எப்போதும்.. நெருங்க முடியாது என அவருக்கு தெரியவில்லை..

**********************************************

ஓர் மிகப்பெரிய பரப்பளவில் அதிக ஆழத்தில் நீச்சல் குளத்தை அமைத்திருந்தான் அபயசிம்ஹா.. அதுவும் நீச்சல் குளத்தின் படியோரம் ஓவல் வடிவம் கொண்ட சிறு குளமும் அடுத்து நீச்சல் குளத்தின் இடையே நடப்பதற்கு ஏதுவாக படிக்கட்டுகளும் அமைந்திருந்தது..

அபயின் ஓய்வு நேரங்களில் பாதி நேரம் இவற்றிலேயே கழிந்துவிடும்.. இப்பொழுதும் அபய் மற்றும் அதி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மீன்போல் லாவகமாய் நீந்திக்கொண்டிருந்தனர்..

தன் மனதிற்கினியவனை வெகுவருடங்கள் கழித்து பார்க்கப்போகும் எண்ணமே பெண்ணவளின் சிந்தையை மழுங்கடித்து.. அவளுக்குள் வெட்க குறுகுறுப்பை ஏற்படுத்த.. அவை தந்த சுகமான அவஸ்தையில் தன்னவனை கீழே காணாது.. வெளிவந்தவளின் பார்வையில் நீச்சல் குளமும் அங்கு நடைபெறும் காட்சியும்.. பெண்ணவளை மேற்கொண்டு நடக்க தடை செய்தது… அப்படி அவள் என்ன கண்டாள்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!