Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்யாயம் – 8.2

தலையை ஆட்டிக் கேட்டவள் அவனுடைய பதிலுக்காக காத்திருக்க அவனோ ஒரு புன்னகையுடன் தலை அசைத்தான்… அவன் அனுமதி கிடைத்ததும் அழகாய் சிரித்துத் தொண்டையைச் செருமி அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து…

“Der Kaffee war ausgezeichnet” அவளே கூறி அவளே கை தட்டி சிரித்து, “புரிஞ்சதா” ஆசையாய் கேட்டாள் பெண்.

அவனும் தலை அசைத்து, “நல்லா தான் பேசுற சரி இப்ப வண்டில ஏறு… உன் மாமா புராணம் ரொம்ப பெருசா போகும் போலயே”

வண்டியில் ஏறி அமர்ந்தவள், “ஆமா என் மாமா அறிவு மட்டும் இல்ல பாக்கவும் ஆளு ஸ்மார்ட்டா இருப்பாரு…”



Advertisement

“ஒரு கெழவன போய் இப்டி சைட் அடிக்கிற”

“ஐயோ இல்ல மாமாக்கு உங்க வயசு தான்”

“என்னது என் வயசு தானா… ஆமா அவன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா உனக்கு”

Advertisement

ஆமாம் என்றால் அவளை பற்றி இனி சிந்திக்க கூடாதென்று யோசித்தவன் அவளுடைய பதிலில் நிம்மதி அடைந்தான்…

Advertisement

“ச்ச ச்ச இல்ல மாமாவை புடிக்கும் ஆனா லைப்ப ஷேர் பண்ணுற அளவு இல்ல… ஆனா மாமா ரொம்ப நல்லவங்க தெரியுமா ரொம்ப அமைதியா இருப்பாங்க என் சின்ன மாமா எல்லாம் ஒண்ணா இருப்பாங்க ஆனா மாமா தனியாதா இருப்பாங்க நானே அடிக்கடி அவரு தனியா இருக்கத பாத்து பீல் பண்ணிருக்கேன்… ஆனா மாமா கண்ணு அவரோட தம்பிங்க மேல தான் இருக்கும் அவ்ளோ பாசம்… ஆனாலும் நான் நல்லா சைட் அடிப்பேன் தான் மாமாவை”

“என் அளவு ஹண்ட்ஸம்மா இருப்பானா…”

“இல்ல உங்கள விட நல்லா இருப்பாங்க… ஆனா நீங்களும் நல்லா தான் இருக்கீங்க… எனக்கு உங்கள விட உங்க பைக் தான் புடிச்சிருக்கு”

Advertisement

“ஓ ஹோ… சரி அட்ரஸ் சொல்றியா ரொம்ப நேரமா இந்த ரெண்டு தெருவையே சுத்திட்டு இருக்கேன் அந்த வாட்ச்மேன் ஒரு மாதிரி பாக்குறான்”

அந்த வாட்ச்மேனை அவள் பார்க்க நிஜமாகவே அவர் அவர்களை ஒரு சந்தேக பார்வையுடன் பார்க்க அவள் அவன் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரமித்தாள்..

பின்னர் அவனிடம் அவளுடைய வீட்டு முகவரியை குடுத்து இருவரும் பேசிக்கொண்டே அவளுடைய வீட்டிற்கும் வந்து சேர்ந்தனர்… வண்டியில் இருந்து இறங்கியவள் ஒரு நன்றி கூறி கேட்டை அடைந்தவள் ஏதோ யோசித்தவளாய் அவனிடம் வந்து…

“எனக்கு ஒரு டவுட்”

“ம்ம் கேளு”

“கம்னாட்டினு நான் சொன்னது ஏன் உங்களுக்கு கோவம் வந்துச்சு? கம்னாட்டினா ஸ்டுபிட் தான?”

“அப்டினு யாரு சொன்னா”

“என்னோட புது பிரன்ட் கதிர்… போன வீக் என் பிரன்ட் கூட ஒரு கிபிட் ஷாப் போனேன் அப்ப தான் பிரன்ட் ஆனோம்”

“அவன் பிரண்ட்ஷிப்ப கட் பண்ணு மொத… தப்பா சொல்லி குடுத்துருக்கான் உனக்கு”

“அப்டியா… சரி அதோட மீனிங் என்ன?”

“Bastard”

ஆச்சிரியத்தில் கண்கள் விரிந்த நிலையிலேயே சில நொடிகள் இருந்தது, “ஐயோ சாரி நான் வேணும்னு அப்டி சொல்லல அவன் தப்பா சொல்லி குடுத்துட்டான் இனி அப்டி சொல்ல மாட்டேன்… சாரி”

கண்களால் கெஞ்சியவளிடம் புன்னகையை பதிலை குடுக்க அவள் திருப்தியில் நடக்க இப்பொழுது அழைத்து ஆதியின் முறை…

“ஏய் ரோலக்ஸ்”

அவள் திரும்பி பார்த்த பார்வையில் நிலை தடுமாறினாலும்…

“சாரி”

அவ்வளவு தான் அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை நின்றாள் ஆபத்து அவனுடைய இதயத்திற்கு தான் என்று உணர்ந்து அவளை பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான்… மீண்டும் எப்பொழுது சந்திப்போம் என்றெல்லாம் எண்ணம் தோன்றினாலும் மூன்று முறை சந்திக்க வைத்த இதே விதி இன்னொரு முறை உதவி கரம் நீட்டமாலா போய்விடும் என்கின்ற நம்பிக்கையில் முகத்தில் சிரிப்போடும் அகத்தில் ஒரு ஆறுதலோடும் வீட்டை நோக்கிச் சென்றான்…

*********************

“என்னடா சொல்ற நீங்களும் ஒரு ஷேர் ஹோல்டரா சத்தியமா நம்ப முடியல” இமயமலை அளவிற்கு ஆச்சிரியத்துடன் கேட்டாள் பல்லவி.

“இப்ப நீ நம்பனும்னு யார் அழுதா… அய்யாலாம் வேற லெவல் அதான் மேல மேல போயிட்டே இருக்கேன்…” தலைக்கு கீழ் கைகளை வைத்து ஆனந்தமாக படுத்திருந்த விஷ்ணுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி… ஏதோ சாதித்த ஆனந்தம்…

ஆனால் ஹரியின் மனம் நிம்மதி இல்லாமல் சஞ்சலத்துடனே இருந்தது… காலையில் வந்த அந்த நபர் யார்? அவனிடம் இருந்த திமிரானத் தோரணை அவன் கண்களில் இருந்தக் கோவம் எல்லாம் சகோதரன் மீது மட்டுமே இருந்தது இதை அனைத்தையும் உணர்த்த உதய்யோ அவனிடம் எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருந்ததுப் பேரதிர்ச்சியாக இருந்தது…

அதையும் தாண்டி மீட்டிங் நடந்த இடத்தில் நிகழ்ந்த அசாதாரணமான சூழல்ப் பெரிதாக ஒரு சிக்கல் நடந்திருக்கின்றது என்பதை அறிந்தான்… உதய் அவனுடைய மாமனை அளந்த பார்வை பார்த்தது தனக்கு மட்டும் தான் அவ்வாறு தெரிந்ததா இல்லை உண்மையிலேயே அவன் கண்கள் ஈஸ்வரன் மேல் சென்றதா என்று புரியவில்லை… நடந்த நிகழ்வுகளை அவருடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை ஹரிக்கு இதை விஷ்ணுவிடம் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்வானா… நிச்சயம் இல்லை அவனுக்கு அவன் மாமா மேல் மரியாதையும் பாசமும் அதிகம்… நியாயமே இருந்தாலும் ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை விஷ்ணு…

கடந்த வருடம் ஈஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்தப் பொழுது ஹரியின் தாயார் அவரை சரியாக கவனிக்கவில்லை என அவர் பேசிய பேச்சு இன்றளவும் நினைவில் உள்ளது ஆனால் அதை விஷ்ணுவிடம் கூற அவனோ மாமாவிற்கே முழு ஆதரவாக இருந்தான்… அதன் விளைவாக ஒரு வார காலம் அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தையும் துண்டிக்கப்பட்டது… ஈஸ்வரன் மேல் அவ்வளவு கண்மூடித்தனமான நம்பிக்கை விஷ்ணுவிற்கு.

“சும்மா கனவு காணாம ரியாலிட்டியா யோசிச்சு பாரு ஆளே இல்லாமல் தான் நம்மள அண்ணே சேத்து விட்ருக்கு… நம்ம என்ன இதுல கத்துக்குட்டோம்னு இப்புடி பெருமை பேசிட்டு சுத்துற” – ஹரி

“அட அனகோண்டா வாயா நமக்கு என்னடா குறை” – விஷ்ணு

“இங்க பாரு லூசு மாதிரி பேசிட்டு இருந்த செருப்பாலேயே அடிப்பேன்” – ஹரி

“யாரு லூசு மாதிரி பேசிகிட்டு இருக்கா இங்க… அவன் ஆளு இல்லாம கொடுத்தது உண்மை தான், ஆனா, அதுலயும் இன்னொன்னு நீ யோசிச்சியா அவன் அன்னைக்கு நம்மள பாக்க ஆபீஸ்க்கு வந்தான்ல அதுக்கு அப்றம் தான் இந்த மாற்றமே… அதுவும் இல்லாம ஒண்ணுமே தெரியாம எவ்ளோ பெரிய பொறுப்பை குடுக்குற அளவு அவன் ஒன்னும் முட்டாள் இல்ல” – விஷ்ணு

“இவ்ளோ பேசுற நீ கம்பனிக்கு என்ன பண்ணிருக்க” – ஹரி

“அது… வந்து நான் எப்டி சொல்றது… ஆஹ் நானும் டெய்லி ஆபீஸ் போறேன்ல அதுவே கம்பனிக்கு பெரிய பிராபிட் தான் டா” – விஷ்ணு

“போடா கூறுகெட்ட குக்கரு… சரக்க உள்ள அனுப்பி ரொம்ப நாள் அச்சுல அதான் இந்த மாதிரி ஒளறுற”

“நேரா உதய் அண்ணாக்கிட்ட தான் போவேன்” – திவ்யா

நேரம் எட்டை கடந்திருக்க ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்ட் பேண்டுடன் கையில் கால்பந்தை வைத்து சோர்வாக உள்ளே நுழைந்தாள் திவ்யா… கண்களில் இருந்த கோவம் சகோதரர்களை துளைக்க பட்டென கால்பந்தை ஹரியிடம் போட்டு…

“கொன்னுடுவேன் இன்னொரு தடவ உங்களால நடு ராத்திரில என்னால அட்வைஸ் எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது… அப்புடியும் குடிக்கிறதா இருந்தா அப்டியே கேட்டுக்கு வெளியவே படுத்துகோங்க வீட்டுக்குள்ள வரணும்னு நெனச்ச மண்டைய பொளந்துருவேன்” – திவ்யா

“ப்பா என்னமா என் ராசாத்தி பேசுது… எப்ப ராசாத்தி இவ்ளோ பெருசா வளந்த” விஷ்ணு கேட்க…

“டேய் அண்ணா பேசாத… ஆமா என்னமோ ஆபீஸ்ல நடந்துச்சுனு கேள்வி பட்டேன்… ட்ரீட் வச்சிருங்கடா ரொம்ப நாள் ஆச்சு எல்லாரும் வெளிய போயி”

“அது ஒன்னு தான் குறை இங்க… போடி போய் குளி, நாறுது” மூக்கை மூடிக்கொண்டே ஹரி வெளியில் சென்றதும் விஷ்ணுவும் பின்னாலேயே வந்து…

“டேய் மாமா வீட்டுக்கு போகணும் வர்றியா?”

‘சனியன் தெரிஞ்சே கேக்குது பாரு’ – ஹரி

“எவன் குடி கெட்டா நமக்கு என்ன? நாம, நம்ம வேலைய பாக்கணும்னு கெளம்பிட்ட என்னடா?” ஹரி குரலில் கோவம் அப்பட்டமாக தெரிந்தது…

“தலைவரே இப்ப யாரு குடி கேட்டுச்சு” – விஷ்ணு

“ஆஹ் உன் மாமன்கிட்ட போய் கேளு அந்த ஆளு சொல்லுவாரு” கடுகடுத்த குரலில் ஹரி கூற, விஷ்ணுவிற்கு கோவம் தலைக்கு ஏறியது…

ஒரு முறை இரண்டு முறை கூறினால் பரவாயில்லை அவரை பார்க்கும் பொழுதெல்லாம் இதே பிரச்சனை மட்டுமே… தனக்கு புடித்த ஒருவருடன் அவன் உறவாட அழைக்கவில்லை ஆனால் அவரை ஒரு மனிதராக கூட மதிக்காத ஹரியின் செயல் அனலை கக்க வைத்தது…

“என்ன நானும் பாத்துட்டே இருக்கேன் நீ வரம்புக்கு மீறிப் போய்கிட்டே இருக்க… உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது அவரு என்னோட மாமா என் அம்மாகூடப் பொறந்தவரு அவருக்கு மரியாதை இல்லாம நீ பேசுறது என் அம்மாவைப் பேசுறதுக்கு சமம்… அதையும் மீறி நீ பேசுனன்னு வை அப்றம் நான்…”

அவனை இடை மரித்த ஹரி, “இதுல எதுக்குடா பெரியாம்மவை இழுக்குற… அவங்களுக்கும் உன் மாமாக்கும் ஏணி வச்சா கூட எட்டாத தூரம்… அவரு ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி ரொம்ப நல்லவரு எல்லாம் இல்ல டா திவ்யாவையும் பல்லவியையும் அவரு பேசுறது உனக்கு தெரியாது டா… எல்லா விசியத்துலையும் என் பேச்ச கேக்குற நீ ஏன் இதுல நான் சொல்லுறத காத்து குடுத்து கூட கேக்க மாட்டிக்கிற”

“நான் எதுக்குடா உன் பேச்ச கேக்கணும் நீ யாரு மொத எனக்கு…”

தனது பேச்சின் வீரியத்தை அறிந்து ஹரியின் அருகில் செல்ல ஹரி வெற்று பார்வையுடன் விஷ்ணுவிடமிருந்து ஓரடி பின்னே எடுத்து வைத்தான்…

“ஹரி” இயலாமையில் பயத்துடன் விஷ்ணு ஹரியை அழைத்தான்.

“என்ன எதுவும் பிரச்னையா” விஷ்ணுவின் பின்னிருந்து வந்தது உதயின் ஆழந்த கனமான அடிக்குரல்.

“இல்ல” – விஷ்ணு அவன் முகம் பார்க்காமல் விருப்பமின்றி கூறினான்…

தனக்கு நேரெதிரே நின்ற ஹரியின் முகமோ வேறொன்றை கூற… விடாமல்…

“ஹரி என்ன ஆச்சு” ஒரு சகோதரன் என்னும் அக்கரையில் கேட்க… இருந்த கோவத்தை எல்லாம் மடை திருந்த வெள்ளம் போல் அவன் மீதே இறக்க ஆர்மிதான் விஷ்ணு…

“அதான் ஒன்னும் இல்லனு சொல்றேன்ல எதுக்கு நீ தேவையில்லாம நடுல ஆஜராகுற… புதுசு புதுசா திடீர்னு அக்கறை வருது. இத்தன வருஷம் ஒதுங்கி தான இருந்த இப்ப என்ன புதுசா பாசம் பொதுக்குட்டு வருது அதே மாதிரி தள்ளியே இரு… இது அண்ணே தம்பிக்குள்ள இருக்குற பிரச்சனை நாங்க பாத்துக்குவோம்”

கூர்மையான கண்ணாடி சில்லை நெஞ்சில் வலிக்க வலிக்க இறக்கிய உணர்வு எழுந்தது உதய் மாதவனுக்கு… ஒரு முறை அல்ல பல முறை மீண்டும் மீண்டும் அதே வழியை உணரவைத்தான் அவன் சகோதரன் சிறிதும் மெனக்கெடாமல்… விஷ்ணுவின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க கால்கள் பசையாய் நிலத்தில் பதிந்துவிட்டது உதய்க்கு…

வீதியில் நடக்கும் ஒரு மூன்றாவது மனிதன் போலே பார்க்கும் அளவிற்கா நான் வேண்டாதவன் ஆகிவிட்டேன்… இனி ஒரு முறை கூட என்னுடைய சகோதரன் என்னும் எண்ணம் அவனும் வராதா… ஹரியிக்கும் விஷ்ணுவிற்கும் நடுவில் இருக்கும் அந்த சகோதரத்துவம் எனக்கும் அவர்களுக்கும் நிகழ வாய்ப்பே இல்லையா…

உதய்யின் மனம் ஒரு புறம் வேதனையில் புழுங்கிக்கொண்டிருக்க மறுபுறம் ஹரியின் நிலைமையோ அதை விட அதிகமாய் புண்பட்டிருந்தது… சகோதரன் என்னும் அளவிற்கு பார்க்காமல் ஒரு நல்ல நண்பன் என்னும் நிலைக்கு பத்து படி மேலே வைத்திருந்தான் விஷ்ணுவை. ஆனால் இன்று, வருடம் ஒரு முறை உறவு கொண்டாட வரும் அவனுடைய மாமாவிற்காக இருபத்தி நன்கு வருட அந்த நட்பை யாரென்று கேட்கும் அளவிற்கு பித்தம் பிடித்து நிக்கிறான்…

யாருக்காக தன்னுடைய தாயின் பாசத்தை முழுவதும் விட்டு கொடுத்து நின்றானோ அவனே இன்று உறவுகளை பிரித்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்… யார் தனிமையை உணர கூடாதென்பதற்காக நண்பர்களை ஒரு எல்லை கோட்டிற்கு வெளியே வைத்தானோ அவனே இன்று நீ யார் என்று கேட்டுவிட வலி நெஞ்சை பிளந்தது…

விஷ்ணுவின் சேட்டைகள் பல பிடிக்காமல் இருந்தாலும் அவனுக்காக வாங்கிய பழிச்சொற்கள், தண்டனைகள் எண்ணிலடங்கா… ஆனால் அவை அனைத்தையும் ஒரு நாளும் எண்ணாத மனது இன்று அதை வெறுத்தது…

சுதாரித்து நிலைக்கு வந்தவன் உதய்யை பார்க்க அவனுடைய நிலையம் தனக்கு ஈடாகவே இருந்தது… வலியை துடைத்த குரலில் உதய்யை நோக்கி…

“விஷ்ணுகிட்ட கேள்வி கேக்க நமக்கு எல்லாம் எந்த உரிமையும் இல்ல. அவன் எவ்ளோ பெரிய ஆளு நீங்க அவன்கிட்டயே கேள்வி கேட்டீங்கன்னா அப்றம் நீங்க யாரு உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்னு கேப்பான்… அவன் அவனோட மாமாவை பாக்க போறான் நடுவுல யார் வந்தாலும் கண்ணு மூளை எல்லாம் வேலை செய்யாம போய்டும்… என்ன விஷ்ணு கரெக்ட் தான? நீ போடா வழக்கம் போல நான் ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்கிறேன். அண்ணே… ஸ்ஸ்ஸ்ஸ் சாரி உனக்கு தாம் அவரு அண்ணன் இல்லல மறந்துட்டேன்…”

“டேய் ஹரி ஏதோ கோவத்துல…” தன் அருகில் வர எத்தனித்தவனை கை காட்டி நிறுத்தி…

“நீ எதுக்கு டா என்கிட்டே விளக்கம் குடுக்குற? நாம என்ன சொந்தக்காரங்களா இல்ல பிரண்ட்ஸ்ஸா ஒரே வீட்டை ஷேர் பண்ணுற ஹவுஸ் மேட்ஸ்… நீ உன் வேலைய பாரு நான் என் வேலைய பாக்குறேன் அவ்ளோ தான் சிம்பிள்… உன்ன இனி என் அம்மா அப்பாவும் சரி, திவ்யா, பல்லவியும் சரி யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க நான் கேரண்டீ. ஏன்னா என்ன மாதிரி எல்லாம் சிலையா நிக்க மாட்டாங்க அவங்க ஒடஞ்சிருவாங்க…”

வலி நிறைந்த குரலில் கூறி சென்றவனின் புறம் பார்த்து நின்ற விஷ்ணுவிற்கு முதல் முறை தனி உலகின் இருட்டில் தனித்து விடப்பட்ட உணர்வு…

அனைத்து கோபத்தையும் மீண்டும் உதய்யின் மீதே திருப்பினான், “ப்பா இப்ப சந்தோசமா இருப்பியே.. உன்ன மாதிரியே நானும் யாருமே இல்லாம அனாதையா வாழனும். அதான உன் ஆசை… இப்ப சந்தோசமா இரு… நீ நடுவுல வராம இருந்திருந்தா இன்னேரம் இந்த பிரச்னை எதுவுமே இருந்திருக்காது… உன் கூட பொறந்த பாவத்துக்கு எனக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு தோணுச்சுனா தயவுசெஞ்சு இந்த அண்ணே னொண்ணேகிற உரிமைல எதுவும் பண்ணாத பிச்சை கேக்குறே உன்கிட்ட…” பற்களை கடித்து அமிலத்தை வாரி வாரி இறைத்து சென்றான் துளியும் இரக்கம் இல்லாமல்…

வலியிலும் வேதனையிலும் துடித்துக் கொண்டிருந்த இதயத்தை கட்டு படுத்த இயலாமல் இடி மின்னல் என்றும் பாராமல் தன்னுடைய வாகனத்தை எடுத்து ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில நிறுத்தியன் மழை என்றும் பாராமல் சொட்ட சொட்ட நனைந்த உடைகளுடன் வலி தாளாமல் தெருவில் மண்டியிட்டு அமர்ந்து கதறி கதறி அழ ஆரமித்தவன், மழையோடு மழையாக கரைய ஆரமித்தான் உதய் மாதவன். ஆனால் மனதில் இருக்கும் அந்த வலியை மட்டும் பொறுக்கவே இயலவில்லை…

இதயத்தை இறுக்கி புடித்த கைகள் வலித்ததே தவிர அந்த இதயத்திற்கு துளியும் வேதனை குறையவில்லை… வீட்டில் இருக்கும் வெறுமை உயிர் வரை சென்று வலியை கொடுத்தது… இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் அளவிற்க்கு வளர்த்து வைய்த்த நம்பிக்கை இன்று துளியும் இல்லாமல் காணாமல் போனது… உயிரென நினைத்த நண்பன் பழி வாங்க துடிப்பது ஒரு பக்கம்… முதுகில் குத்தும் உறவுகள் ஒரு பக்கம்… வீட்டில் தன்னை ஒரு பொருளாய் நினைக்கும் வீட்டார்…

மகிழ்ச்சியையும் பாசத்தியும் தேடித் தேடி தினம் நிம்மதியை இழந்தது தான் மிச்சம்… தோள் தட்டி அணைக்க தந்தையும் அவனிடம் அக்கறைச் செலுத்தவில்லை… தலை வருடி மடி சாய்த்து ஆறுதல் கூற தாயும் இல்லாமல் பாசத்திற்கு மட்டுமே ஏங்கும் குழந்தையாய் கரைந்து கொண்டிருந்தான்.

தன் தோளில் எவரோ கை வைப்பதை உணர்ந்தவன் திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்தான் ஆதி, கண்களில் கேள்வியோடும், கரிசனத்தோடும்… அவனை பார்த்தது தான் தாமதம் நொடி வீணாக்கவில்லை, எழுந்து அவனை கட்டி அணைத்து மீண்டும் அழுகையில் கரைந்தான்…

அவனுடைய நிலையை பார்த்த ஆதிக்கோ அவனின் அந்த நிலைக்கான காரணமும் புரியாமல் அவனை எவ்வாறு சமாதானம் செய்வதென்றும் புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்…

“நான் என் அம்மாகிட்டயே போறேன்… என்னால முடியல டா ஆதி” உடைந்து வந்த உதய்யின் குரல் ஆதியின் உயிரை மொத்தமாய் உலுக்கியது…

Comments solitu ponga paa…

How is it…???!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!