Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரன் – 15

அந்தியூரான்- 15
 
விடியல் கண்டது தான் தாமதம் சிவராமன் வீட்டு அனைத்துப் பெண் பிள்ளைகளும் அந்தியூரில் ஆஜர் ஆகிவிட்டனர்.உபயம் திருமதி.சிவகாமி சிவராமன்.அன்றைய உரசலுக்குப் பிறகு விசாலாட்சி குமாரியை கொண்டு வந்து அந்தியூரில் விட்டுட்டு கிளம்பி செல்ல.சிவகாமி பதறிக் கொண்டு மகனை அழைத்து வைத்தார்.
 


Advertisement

அவனிடம் அதே அலட்சிய பேச்சும், பதிலும் கிடைக்க.மகனை கொண்டு அத்தனை கோபம் அவருக்கு, ‘நீயும் ஒரு பொண்ணை பெத்து வச்சிருக்க தணிகா இத்தனை அலட்சியம் ஆகாது சொல்லிட்டேன்.
 
அதுவும் விசாவை கொண்டு நீ ரொம்ப பண்ணி வைக்கிற பார்த்துக்கோ’ என்றவர் போனை கோபமாக அனைத்து விட்டார்.எந்த நேரத்தில் இந்த வார்த்தையை சிவகாமி சொன்னார் என்று தெரியவில்லை.சில வருடங்களுக்குப் பிறகு இதே போல் ஓர் சூழ்நிலையில் சிக்கப் போகிறான் தணிகாசலம்

Advertisement

 

Advertisement

தணிகாசலத்தின் பேச்சில் எரிச்சல் கொண்ட சிவகாமி மகள்களுக்கு அழைத்து விட்டார், “இனி நான் யாரு வீட்டு வாசல்ல போயும் நிற்க மாட்டேன். அப்படியே போனாலும் அங்கன என்ன ஆகுமோ? கழுத்தை புடிச்சு தான் தள்ளி வைப்பாங்க”
 
“ம்மா! என்னம்மா பேசுறீங்க?” பதறிக் கொண்டு வந்தால் மூன்றாம் மகள் வைரம்.

Advertisement

 
“அவ என்ன பொசுக்கு பொசுக்குன்னு எதாவது திட்டி வச்சா ‘போடுறா பல்லாக்கு பொறந்த வீட்டை பார்துன்னு’ ஓடுறா. அவன் சண்டை கட்டி வச்சா நம்பக் கிட்ட சொல்ல வேண்டியது தானே.நீங்க ரொம்பத் தான் உங்க மருமகளுக்கு இடம் தரீங்க” முகத்தைச் சுருக்கியவாறு பெரிய மகள் ராணி .
 
“அப்பா நீங்க பேச கூடாதா? அந்த முத்துப் பெரியப்பா கிட்ட பேசுங்க” இது நான்காம் மகள் அன்பு.
 
“எந்த முஞ்சைய வச்சுக்கிட்டு பேச சொல்ற? அந்தப் பொண்ணு மேல ஒரு பிராடு எடுத்து வை பார்ப்போம்” சிவகாமி இன்னும் சிலுத்துக் கொண்டார்.
 
“ம்மா! சரி இப்போ என்ன பண்ணலாம்ணு சொல்றீங்க? திரும்பக் குடும்பமா போயி அவங்க கிட்ட பேசி மன்னிப்பு கேட்டு கூட்டுட்டு வரணுமா சொல்லுங்க போவோம்”எரிச்சல் கலந்த நக்கலில் கடைசி மகள் அழகி.
 
“அப்பத்தா! விசா !…” என்று குமாரி மீண்டும் ஓப்பாரி வைக்க.
 
“இவ ஒருத்தி!” சத்தமாக ராணி முனகி விட.
 
சிவகாமிக்கு எங்கிருந்து தான் அத்தனை வேகம் வந்ததோ தெரியவில்லை “கொன்னுடுவேன் பார்த்துக்கோ மூச்சு, விசாவும் இல்லை, கிஷாவும் இல்லை ஓடு உன் அப்பங்காரன் கிட்ட இல்லையா.உன் அம்மச்சிக்காரிங்க இத்தனை பேரு இருக்காளுக அவங்க கிட்ட கேளு.
 
இனி விசாவை கொண்டு எதுவும் என்னை கேட்க கூடாது சொல்லிட்டேன்.எனக்கு முடியல பொறந்த வீட்டுலையும் சரி, புகுந்த வீட்டுலையும் சரி ஒரு நாளும் நான் மனசு சோர்ந்து இருந்தது இல்லை.என்னை யாரும் இருக்க விட்டதும் இல்லை,
 
ஆனா நான் பெத்தத கொண்டு நித்தமும் அல்லோல படுறேன். என்னால முடியல சாமி நானும் மனுசி தானே” சிவகாமி இருந்த வேகத்துக்கு பொரிந்து தள்ளி விட்டாள்.
 
“சிவகாமி கொஞ்சம் பொறு பேசலாம்”
 
“காலம் முழுக்க வருசத்துக்கு நாலுன்னு மாச கணக்கு வச்சுப் பஞ்சாயம் பண்ணுங்க. அதுக்கே காலம் பாதிப் போயிடும் உங்க மகனுக்கு ஏற்கனவே நரை தட்டி போச்சு” என்றவர் பேச்சை நிறுத்தி தலையைப் பலமாக உலுக்கி இந்த முறை நீங்க என்ன செய்யணுமோ செய்யிங்க. இனி நான் மத்தியம் பேச வர மாட்டேன்”
 
சிவகாமி உறுதியாகச் சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்து கொள்ள.ராணி,”ப்பா! நான் தம்பி கிட்ட பேசவா?”
 
“நீ பேசி வச்சா சரியா வராது ராணி மாப்பிள்ளைங்கள விட்டு பேச சொல்லனும். அவன் மனுசுல என்னத்த எண்ணி வச்சிருக்கானு தெரிஞ்சா அந்தப் பொண்ணுக்கு நான் ஒரு வழி பண்ணி வைப்பேன்” என்றதும் பெண்கள் திடுக்கிட்டு.
 
“ப்பா! என்ன நீங்களும் இப்படி பேசுறீங்க?”
 
“உண்மை தான்மா ராணி, சிவகாமி சொல்லும் போல இது சரி வராது. அந்தப் பொண்ணு சிறுசு என் முகத்துக்குத் தான் என் நண்பன் கட்டி கொடுத்தான்.இனியும் அந்த பொண்ணுக்கு பாதகம் பண்ணி பாவத்தையும் பகையும் வாங்க விரும்பல.
 
நம்ப அஞ்சு மாப்பிள்ளைகளும் வர சொல்லுங்க.அவனை வச்சு பேச சொல்லுங்க. நீங்களே அவன் என்ன சொல்லறான்னு கேட்டு சொல்லுங்க என்றவர்,  எழுந்து கொண்டு யாரையும் வற்புறுத்தி எதுவும் பண்ண முடியாது.இனி குமாரிக்காகன்னு கூட நான் பார்க்கவும் முடியாது.எல்லாரும் பத்து மாசம் தான்” என்றவர் நிற்காமல் நடந்து விட்டார்.
 
“என்னக்கா இது?” வைரம் கவலையாகக் கேட்க.
 
“அம்மாச்சி விசா” குமாரி வேறு பயந்து நின்றாள். முதல் போல் எதுவும் சண்டை போட்டுக் கொண்டு விசாலாட்சி வர மாட்டாளோ என்று
 
“நீ வேற ஒரு பக்கம் விசா, விசானு பாட்டு படிக்காதடி. உன்னையும், உன் அப்பனையும் கொண்டு நாங்க வாங்கி கட்டிக்க வேண்டியதா இருக்கு” ராணி கொஞ்சம் குரலை உயர்த்தி குமரியிடம் பேசி வைக்க. இதுவரை தன்னை அதிர்ந்து பேசிடாத அம்மாச்சி தன்னை கடிந்து கொள்ளவும்.
 
விம்மலோடு உள்ளே ஓடி விட்டாள் குமாரி, “அக்கா யாரோ மேல உள்ள கோபத்தைப் புள்ள கிட்ட ஏன் நீ காட்டுற>” அன்பு கடிய.ராணி கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்.
 
“என் பொண்ணு இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா? அவளை எண்ணி வச்சே இந்தப் பைய வாழாம இருக்கான் போலடி.அதுக்கு நான் என்ன செய்ய? அவன் நல்ல இருக்க வேண்டி தானே.இன்னொரு கல்யாணம் பண்ணிக்க நாங்களே பொண்ணு பார்த்தோம்”
 
“ப்ச்! அக்கா! இப்போ நீ எதுக்கு அழகுற. மாமாவ வர சொல்லு.அப்படியே பவளம்,அன்பு,அழகி,என்னோட வீட்டுக்காரருக்கு தகவல் சொல்லி இங்க வரை சொல்லுவோம் ” வைரம் பெரியவளை சமாதானம் செய்து கொண்டே அடுத்து என்ன என்று செயல் பட.
 
அழகியும், “ஆமாக்கா! அப்பா சொன்னது போல அவங்க பேசி வச்சா தான் இது சரி வரும் நீ வா!.பேரன் பேத்தி எடுத்து வச்சுட்டுச் சின்னச் சங்கதிக்குக் கண்ணீர் விட்டுட்டு இருக்க”
 
“பொட்ட பிள்ளையைப் பெத்து போட்டுட்டு போயிட்டாடி வேற பொண்ணு கிட்ட அவளை விட எனக்கு எப்படி மனசு வரும். என் இடத்துல யாரா இருந்தாலும் இந்த யோசனை வரும் தானே”
 
“க்கா! தம்பியும் கொஞ்சம் பார்க்கணும் தானே.அந்த பொண்ணும் பொறுத்து தான் போகுது” என்றால் அன்பு.சக பெண்ணாக விசாலாட்சியைப் பற்றி அடிப்படையாக எண்ணி வைக்க வேண்டும் அல்லவா.நாத்தனார் என்ற பதவியோடு பார்த்து வைத்தால் விசாலாட்சி செய்தது அனைத்தும் தவறு என்ற நிலை,
 
ஆனால் சிவராமன் சிவகாமி மகள்கள் வளர்ப்பில் பேசி நிற்க வேண்டும் அல்லவா. அதனாலே ஒரு பெண்ணாக நின்று அவள் பக்கமும் யோசித்து நின்றனர்.
 
“நீ சொல்றதும் சரிதான் அன்பு” பெருமூச்சுடன் முடித்து வைத்தால் ராணி.
 
“அழகி நீ போயி சின்னவளை கூட்டிகிட்டு வா. அந்தக் குட்டி இரண்டு நாள் சரியாவே சாப்பிடலையாம்” அன்பு தங்கையிடம் சொல்ல பேத்தியை அழைத்து வர சொன்னாள்.
 
“அப்பனை கூட இத்தனை தேடி வைக்கல, ஆனா அவ இல்லாம ஒரு நாள் தள்ள முடியல” வைரம்.
 
“அதுங்க சண்டை கட்டி வச்சாலும் அக்கா, தங்கச்சி கணக்கா தான் இருக்குங்க க்கா!. அவ என்ன செஞ்சாலும் அவளுக்கு விசாலாட்சி இடம் கொடுக்குது. புள்ளைங்களுக்கு தோது கொடுத்து நடந்தா அப்போ அங்கன தான் ஓட்டும்.பிள்ளைங்க மனசு இளகி நிக்கிறது, அதுங்க குணம் கொண்டு தான்” பவளம் சொல்ல.
 
“செல்வி போன பிறப்பாடு தம்பி எங்க புள்ளைய கவனம் வச்சான். இப்போ வந்தவக் கிட்ட இருக்குற பாசம் கூட, அவ அப்பன் கிட்ட இல்லனு தான் புள்ள எண்ணி வைக்கும்”,இந்த இடத்தில் தனது தம்பியின் மீது பெரும் ஆதங்கம் கொண்டால் ராணி.
 
“அவனை மட்டுமே குத்தம் சொல்ல முடியாதுக்கா. வருஷம் போயும் செல்வியை எண்ணித்தான் நித்தமும் கிடக்கோம். அந்த பைய சிறுசுல இருந்து உசுரா இருப்பான். அப்போ அவன் மனசையும், எண்ணத்தையும் பார்த்து வைக்கணும் தானே.
 
“ஐயோ! இதை பேசுனா தராசு மாறி மாறி மனசு தடுமாறும்.சரி அன்பு நீ அம்மாவ பாரு நான் சின்னவள பார்க்குறேன்” என்ற அக்கா, தங்கைகள் வீட்டின் பெண்களாக அடுத்தடுத்து என்னவென்று செயல் படுத்திக் கொண்டிருந்தனர்.
 
சரியாக இருள் கவிழும் நேரம் வீட்டின் மாப்பிள்ளைகள் கூடி இருக்க.அவசரமாக வந்து சேர்ந்தான் தணிகாசலம்.அவனை வர சொல்லி செய்தி கிட்டியதுமே ‘போச்சுடா’ என்று தான் தோணியது கூடவே விசாவை எண்ணி கடுப்பாக இருந்தது.
 
இதோ மாமன்கள் முன்னிலையில் சங்கடமாக அமர்ந்திருந்தான் தணிகாலசம்.கந்தன் தான் பேச்சை தொடங்கினார், “என்ன மாப்பிள்ளை இது ? “
 
“என்னய்யா பிரச்சனை உனக்கு? அந்தப் பொண்ணு குணம் சரியில்லையா?” கணேசன் அதாவது பவளத்தின் கணவன்.
 
“எதுவா இருந்தாலும் சொல்லு மச்சான் பார்த்துடுவோம்” இது வைரத்தின் கணவன் பழனிச்சாமி.
 
“தேங்காய் உடைக்கிற கணக்கா உடைச்சு புடுயா” இது ரெங்கன் அன்புவின் கணவன்.
 
“மச்சான் நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல வயசுக்கு வந்த புள்ளைய வச்சிக்கிட்டு கூடி பேசி நிற்கிறது சங்கடம் மச்சான்.இது தான் செய்தின்னு உடைச்சு சொல்லிப்புடு”
 
தன்னைச் சுற்றிக் கொண்ட அன்பு மாமான்களை ஒரு நொடி பார்த்தவன்.தனது முகத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டு சில நொடிகள் மௌனம் கொண்டவன், பிறகு நிமிர்ந்து தனது முதல் முறையாக தனது எண்ணத்தையும் மனதையும் திறந்து வைத்தான்.
 
“நான் சொல்லி என்னைப் பத்தி தெரிய வேண்டியதில்லை மாமா.உங்களுக்கே தெரியும் சின்னதுல இருந்தே செல்வி எனக்கு எத்தனை முக்கியம்முன்னு.தீடீர்னு அவளை இழந்து நிற்கும் போது எனக்கு எத்தனை வலிக்கும் சொல்லுங்க?படுத்து கிடந்து அவ போயிருந்தா கூட இத்தனை வலிக்காது மாமா” என்றதும் அவனது மனநிலையும் நன்கு விளங்கியது.
 
“எல்லாம் புரியுது” என்ற கணேசன் கந்தனை பார்த்து,”அண்ணனுக்கு மட்டும் அந்த இழப்பு இல்லையா? நீ புருஷன்னா அவர் அப்பா அதுவும் பொண்ணு பிள்ளை யோசனை பண்ணி பாரு மச்சான்”
 
“எல்லாம் புரியுது, ஆனா பிடிப்பு வர மாட்டேங்குது, அப்படியே வந்தாலும் என்னால அந்த முடிவுல நிலைக்க முடியல, கவனம் வைக்க முடியல” என்றவன் தோளை ஆதரவாகத் தட்டி வைத்தார் பழனிசாமி.
 
“அந்தப் பொண்ணு எப்படி?” என்றதும் மீண்டும் ஒருமுறை மூச்சை இழுத்து விட்டவன்.
 
“அவளை எதிலுமே குறை பேசவே முடியாது.ஈரோடு போன பிறகு தான் அவ குணம் புரியுது.குமாரி நான் இல்லனா கூட இருந்துடுவா போல. அவ இல்லாம இருக்க மாட்டேங்குறா.ஒரே ரகளைத் தான் சரியா சாப்பிட்டு இரண்டு நாள் ஆகுது”
 
“பிறகு என்னய்யா நீ பேசுற விதமே சொல்லுதே உன் மனசை.உன்னை கேட்டு தானே மறுக் கல்யாணம் பண்ணி வச்சோம்?”
 
“முயற்சி பண்ணிக்கிட்டு தான் மாமா இருக்கேன்” மீண்டும், மீண்டும் கேள்விகள் ஆரம்பப் புள்ளியை கொண்டே முட்டி நிற்க அவனாலும் நிலையான பதிலை சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அவனது மனமே நிலையாக இல்லை.
 
“சண்டையில்லாத குடும்பம் இல்லை தணிகா. சின்ன, சின்ன உரசல் வந்து போகும் அதை அப்பவே அங்கையே முடிச்சுடனும் அதான் நல்லது. என்ன சண்டைன்னு கேட்க மாட்டோம் அது உங்களுக்குள்ள  இப்போ என்ன சொல்ற மச்சான்? அதை பளிச்சுன்னு சொல்லிடு?”
 
“எனக்கு மாற வேண்டி கொஞ்சம் நாள் கேட்டேன் சரினு தான் சொன்னா,ஆனா சில விஷயம் என்னால தான் மாத்திக்க முடியல” என்று குமாரி விழாவை சொல்ல.அப்போது ஆண்கள் குழுவுக்கு இந்த விடயம் தெரியவில்லை போலும்.
 
“என்னய்யா சொல்ற ? நம்மூட்டு ஆளுங்க இதை பத்தி பேசவே இல்லையே “அழகியின் கணவன் முத்துராமன் கொஞ்சம் கோபமாகவே கேட்டு வைத்தார். வீட்டின் பெண்கள் இதனை பத்தி மூச்சே விடவில்லை.
 
“இது ரொம்ப தப்பு தான் ” மருமகன் செய்யலை எண்ணி கந்தன் தலையை இடமும் வளமும் ஆட்டி கொண்டார்.
 
“அந்தப் பொண்ணு இடத்துல உங்க அக்காளை எண்ணி பாரு மச்சான்.இந்நேரம் சண்டைக்கு வந்திருப்பா”என்றார் ரெங்கன்.
 
“தப்பு தான் புரியுது மாமா” என்றவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த கந்தன்.
 
” எதையுமே யோசிக்காம வந்த பொண்ணு உனக்கு என்னனு? இல்லாம  யோசிச்சு வைக்காம செல்விக்குக் கொடுத்த அதே இடத்தைக் கொடுங்க மாப்பிள்ளை. இந்த முறை நீங்க செஞ்சது ரொம்பத் தப்பு.ஒரு மாப்பிள்ளையா உங்க தோரணை,கம்பீரம்,ரசனை ஒரு வித அலட்சியம் இதெல்லாம் புடிச்சுப் போயிதான் என் பொண்ணையே கொடுத்தேன்,
 
ஆனா அதே குணம் கொண்டு நீங்க தாழ்ந்து போறதை என்னால அனுமதிக்க முடியாது.இன்னும் இரண்டு நாள் கூட யோசிங்க நல்ல முடிவு எடுங்க.இனி ஒரு கூட்டம் இது போல கூட கூடாது.அதுவும் போக விசாலாட்சி இங்க வரலைனா நான் குமாரியை என்கூடக் கூட்டிட்டு போயிடுவேன்” என்றவனைத் தணிகாசலம் உற்பட அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.
 
“தப்பா எண்ணி வைக்காதீங்க மாப்பிள்ளை. என் பேத்தியை கொண்டு நான் சுயநலம் தான்” என்றவர் படக்கென எழுந்து கொள்ள.அவரை தொடர்ந்து நால்வரும் எழுந்து சென்றனர்.
 
அவர்கள் சென்றதும் கண்கள் மூடி அமர்ந்து விட்டான் தணிகாசலம்.ஏன்? என்று தெரியாமல் ஒரு எரிச்சல் மனம் முழுக்க பரவி இருக்க.அமர்ந்திருக்கும் இடம் முழுமையும் அனலை வாரி இறைத்தது. தவறு என்ற நிலை புரிந்தாலும் இறங்கி வர மனம் சண்டி தனம் செய்து வைத்தது.
 
அதுவும் தன்னை அன்பாக மரியாதையாக கொண்டாடிய மாமன்கள் பேசியது இன்னும் வலியை கொடுத்தது
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!