Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 7 3

“ஒரு ஆம்பளைப் பையன் கிட்ட வந்து காதல்ன்னு இப்படி விடாம டார்ச்சல் பண்ணினா அப்படி தான் பேசுவேன். நீ ஒரு கேவலமானவ, உன் குடும்பம் ஒரு கேவலமான குடும்பம்”, என்று சொன்னான். அவளைத் திட்டுவது அவனது கோபம் என்றால் அவளுடைய குடும்பத்தையே திட்டுவது கண்மணிக்காக.

“சிவா, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். பிளீஸ் இப்படி பேசாதீங்க. இன்னொரு தடவை என் குடும்பத்தை பத்தி பேசினா….?”



Advertisement

“பேசினா என்ன டி செய்வ? இங்க நின்னு பேசிட்டு இருந்தா மூஞ்சு முகரையை பேத்துருவேன். அப்புறம் நான் ஒண்ணும் இல்லாததைச் சொல்லலை. உன் அப்பன் கிட்ட போய்க் கேளு அவன் எப்படின்னு”, என்று கோபத்தில் வார்த்தையை விட்டான்.

Advertisement

தந்தையைச் சொன்னதும் கோபம் தலைக்கேற “எங்க அப்பா பத்தி பேசாத சிவா”, என்று சொன்னாள். அவளின் மரியாதை கூட அவளை விட்டுச் சென்றிருந்தது.

Advertisement

“அப்படி தான் பேசுவேன். அவன் எல்லாம்…”, என்று அவன் மேலும் பேச “சிவா”, என்று கத்தினாள் உமா.

Advertisement

“என்ன டி சிவா? வாயை மூடிட்டு போய்ரு சொல்லிட்டேன். உன் அப்பன் கிட்ட போய்க் கேளு அவனுக்கு எத்தனைக் குடும்பம்னு. எத்தனை பொண்டாட்டின்னு கேளு”

“சீ, உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பேச்சை நான் எதிர் பார்க்கலை. காதல்னு உங்களை தேடி வந்தேன்ல? எனக்கு இது தேவை தான். நானே வந்து பேசினதுனால நான் உங்களுக்கு சீப்பா போயிட்டேன்ல? இன்னும் உங்க முகத்துலயே முழுக்க மாட்டேன். எங்க அப்பா எப்படி பட்டவர்னு தெரியுமா? அவரைப் போய்.,.. இனி நீங்க யாரோ, நான் யாரோ?”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிப் போனது.

அவனை ஏக்கமாக பார்த்த படியே அங்கிருந்து செல்லப் போனாள். “ஒரு நிமிஷம்”, என்று அவன் சொன்னதும் அவனை திரும்பிப் பார்த்தாள்.

“இவ்வளவு நேரம் என் மேல இருக்குறது தெய்வீக காதல்ன்னு பினாத்துண? அதுக்குள்ள அது வெறுப்பா மாறிருச்சுல்ல? இது தான் உன்னோட காதல். இப்ப புரியுதா நான் ஏன் உன்னை நம்பலைன்னு?”

“அப்படின்னா என்னைக் கோபப் படுத்த தான் அப்படி பேசுனீங்களா சிவா? அப்பா பத்தி அப்படி பேசவும் அப்படிச் சொல்லிட்டேன். எனக்கு உண்மையிலே உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சிவா. ஐ லவ் யு. பிளீஸ் என் காதலை ஏத்துக்கோங்க”

“நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன். உன்னை…. உன்னோட காதலை நம்பவே மாட்டேன்”

“நீங்க எப்ப தான் என் காதலை நம்புவீங்க?”

“நம்ப மாட்டேன். ஒரு நாளும் நம்ப மாட்டேன். இங்க பாரு உமா எனக்குன்னு நிறைய கடமை இருக்கு. நான் என் லட்சியத்தை நோக்கி போய்கிட்டு இருக்கேன். தேவையில்லாம குறுக்க வந்து என் வாழ்க்கையை அழிக்காதே”

“நான் எங்க உங்க வாழ்க்கையை அழிக்கணும்னு நினைக்கிறேன்? என் வாழ்நாள் முழுமைக்கும் உங்க கூட பயணிக்க தான் நினைக்கிறேன்”

“அதான் நடக்காதுன்னு சொல்றேன்”

“அதான் ஏன்?”

“ஏன்னா எனக்கு உன்னைப் பிடிக்கலை”

“நான் செஞ்ச எல்லாத்துக்கும் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேனே? ஒரு வேளை உங்களுக்கு என் காதல் மேல நம்பிக்கை இல்லைன்னா நான் வேணும்னா…. என்னையே தரேனே? அப்பவாது என்னை நம்புவீங்கல்ல?”

“வாயை மூடு, நீ இப்படி பேச பேச எனக்கு உன் மேல வெறுப்பு தான் வருது. ஒரு பொண்ணுக்கு கற்பு ரொம்ப முக்கியம். அதை இழக்க நினைக்கிற உன் மேல எனக்கு எப்படி விருப்பம் வரும்?“

“கடவுளே, நீங்க இப்படி நினைச்சா நான் என்ன பண்ணுறது? அவ்வளவு முக்கியமான கற்பையே உங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிற என் காதல் ஏன் உங்களுக்கு புரிய மாட்டிக்குது. நான் என்ன தான் செய்வேன்?”

“நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். உன் அப்பன் பாக்குற பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இரு”

“முன்னாடி இருந்த உமாவா இருந்தா அப்படி செஞ்சிருப்பேன். இப்ப என் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க. நான் உங்களை பைத்தியமா காதலிக்கிறேன். நீங்க இல்லைன்னா செத்துருவேன்னு சொல்ல மாட்டேன். ஆனா என்னால வேற யார் கூடவும் வாழ முடியாது”

“நீ எத்தனை தடவை என் கிட்ட பேசினாலும் என் மனசு மாறாது”

“தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சிக்கோங்களேன். எதையுமே இது வரைக்கும் நான் கெஞ்சி வாங்கினது இல்லை. இப்ப முதல் முறையா உங்க கிட்ட உங்க காதலை பிச்சை கேக்குறேன். பிளீஸ் கொடுத்துருங்க”, என்று சொன்னவள் அவன் காலில் விழ ஒரு நொடி அவளைத் தூக்க அவன் கை நீண்டது.

அடுத்த நொடி தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் “இது என்ன பைத்தியக்காரத்தனம்? தயவு செஞ்சு இங்க இருந்து போ”, என்று சொல்லி விட்டு இரண்டடி தள்ளி நின்றான்.

அவனுடைய உதாசீனம் உமாவை பாடாய் படுத்தியது. இதற்கு மேல் கீழே இறங்கி கூட அவனிடம் பிச்சை எடுக்க அவளுக்கு சம்மதம் தான். ஆனால் அப்போதும் அவன் மலையிறங்குவான் என்று தெரியாதே.

என்ன செய்து அவன் மனதை மாற்ற என்று அவளுக்கு தெரியவில்லை. அதே நேரம் அவனை விட்டுக் கொடுக்க அவள் தயாராகவும் இல்லை.

“அப்படின்னா இது தான் உங்க முடிவா?”, என்று தீர்மானமாக கேட்டாள்.

“ஆமா. இன்னொரு தடவை என்னைப் பாக்க வறதோ காதல்னு என் கிட்ட வந்து பினாத்துறதோ இல்லாம இருந்தா என் வேலையைப் பாத்துட்டு நான் நல்லா இருப்பேன். தயவு செஞ்சு இங்க இருந்து போ”, என்று சொல்லி தலைக்கு மேல் தன்னுடைய இரு கரங்களையும் கூப்ப அதற்கு மேல் அங்கே நிற்பது அவளுக்கு அவமானமாக இருந்தது.

ஆனாலும் அங்கிருந்து செல்லாமல் அவள் அவனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு நிற்க “இன்னும் கேவலமா காதல்னு வந்து நடிக்கிற வேலையை வச்சிக்காத. இது காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை. கல்யாண ஆசை வந்துருச்சுன்னு வீட்ல சொல்லு, பண்ணி வைப்பாங்க. அப்படி இல்லைன்னா ஏதாவது ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டுட்டு என்னைக் கூப்பிடு…”, என்று அவன் சொல்ல ஏனோ அந்த வார்த்தையில் அந்த நிமிடம் அவளுக்குள் ஏதோ ஒன்று மரித்தது போல இருந்தது.

அடுத்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை அவள். ஆனால் அவள் கண்கள் “நீயா அப்படி பேசினாய்?”, என்று அவனைக் குற்றம் சாட்டியது. கோபத்தில் அவன் அதிகம் பேசி விட்டது அவனுக்கு புரிந்தாலும் இனி அவள் தன்னை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று நிம்மதியும் வந்தது. ஆனால் மனம் மட்டும் பாரமாக இருந்தது.

“இந்த அளவுக்கு யாருமே என்னை கேவலமா பேசினது இல்லை சிவா. நான் உங்க மேல வச்ச காதலை எவ்வளவு கேவலப் படுத்திட்டீங்க? அப்படி ரூம் போடணும்னு முடிவு பண்ணிட்டா நான் ஏன் உங்க கிட்ட கெஞ்சிட்டு இருக்க போறேன்? அதுக்குன்னு ஆள் இல்லாமலா போய்ருவாங்க?”, என்று அவள் கேட்க அவனுக்கு அவன் தவறு புரிந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

“இன்னொரு தடவை உங்க கிட்ட காதல்ன்னு வந்து நின்னா அது எனக்கும் அசிங்கம். அது என் காதலுக்கும் அசிங்கம். இனி அப்படி ஒரு காரியத்தை செய்ய மாட்டேன். நான் போறேன். இனி உங்க வாழ்க்கையில வரவே மாட்டேன். நீங்க எனக்கு ரொம்ப நல்ல பேர் கொடுத்துட்டீங்க. ஆனா போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் மட்டும் சொல்லிட்டு போறேன். எங்க அப்பா இந்த உலகத்துலே பெஸ்ட் அப்பா. அவரை மாதிரி யாருக்குமே அப்பா கிடைக்க மாட்டாங்க. அவரைப் பத்தி இன்னொரு தடவை ஏதாவது பேசினா கண்டிப்பா உங்களைக் கொல்லக் கூட தயங்க மாட்டேன். இப்ப இந்த நிமிஷம் அவரை நீங்க பேசினதுக்கு மன்னிப்பு கேக்கணும்”

“என்னது மன்னிப்பா?”

“ஆமா இனி நீங்க யாரோ நான் யாரோன்னு ஆனப்புறம் நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்”

“ஹா ஹா, அந்த அளவுக்கு உங்க அப்பா நல்ல அப்பாவா? இது தான் இந்த வருசத்தோட பெஸ்ட் ஜோக்? அவர் எல்லாம் மனுசனே இல்லை”

“சிவா”

“கத்தாதே. உன் ஒருத்திக்கு மட்டும் அவர் நல்ல அப்பாவா இருந்தா போதுமா? உன் அப்பா கிட்ட போய்க் கேளு. அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்குறது உண்மை. அப்புறம் இனி காதல் கீதல்னு வந்து உளற மாட்டேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. கிளம்பு போ”, என்று சொல்ல அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!