Skip to content
Post Views: 3,267
அன்பு – 21
“டாக்டர்!!! அந்த பேஷண்ட் கண்ணு முழிச்சிட்டாங்க!!! சீக்கிரம் வாங்க!!!” என செவிலியர் வந்து தகவல் சொல்ல,
Advertisement
தன் அறையில் இருந்து விரைவாகக் கிளம்பினார் அந்த நரம்பியல் மருத்துவர்.
Advertisement
“எப்போ முழிச்சாரு?? பேசினாரா ஏதாவது??” என கேட்டுக்கொண்டே அவர் வேகமாக நடைபோட,
Advertisement
அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்த செவிலியரும்,
Advertisement
“வைட்டல்ஸ் நோட் பண்ண போனேன் டாக்டர்!! அப்போவே கண்ணு முழிக்க டிரை பண்ணாரு.. பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்.. ஆனா பேசலை”
இருவரும் அந்த அறையை அடைந்திருக்க,
அங்கே இருந்த படுக்கையில், உருக்குலைந்த ஓவியமாய் படுத்துக்கிடந்தான் பிரபஞ்சன்.
அவன் கண்களைத் திறக்க சிரமப்படுவதும், பின் மூடுவதுமாக இருக்க, அவனை நெருங்கி பரிசோதனை செய்த மருத்துவர்,
“ஹாய் ஜென்டில்மேன்!!! நான் பேசுறது கேட்குதா???”
“கேட்டா கையை மட்டும் லைட்டா அசைங்க!!!” என்று பிரபஞ்சனிற்கு கேட்குமாறு அழுத்திச் சொன்னார் மருத்துவர்.
அவரின் பேச்சு ஏதோ அதளபாதாளத்தில் இருந்து கேட்பது போல் பிரபஞ்சனிற்குத் தோன்ற, மெதுவாய், அசைக்க ஒத்துழைக்காத கைகளுடன் மிகவும் போராடி அவன் இரண்டு விரல்களை மட்டும் அசைக்க,
“வாவ்!!! வெரி குட் மிஸ்டர்!! நல்ல இம்ப்ரூவ்மன்ட்!! கூடிய சீக்கிரமே உங்களுக்கு கம்ப்ளீட்டா க்யூர் ஆகிடும்.. யூ ஆர் கெட்டிங் பெட்டர்!!!” என நோயாளியிடம் எப்போதும் போல் நேர்மறையாகவே மருத்துவர் பேச,
விரல் அசைக்கவே அதிக சிரமம் மேற்கொண்டதால் மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டான் பிரபஞ்சன்.
அதைக்கண்ட மருத்துவர்,
“இவரை தொடர்ந்து மானிட்டர் பண்ணிட்டே இருங்க!! விட்டு விட்டு கான்சியஸ் வரும்!! அப்போலாம் இவர்கிட்ட ஏதாவது பேச்சு கொடுத்திட்டே இருங்க.. ஃபுல்லா கண் முழிக்க இன்னும் டூ த்ரீ டேஸ் ஆகலாம்.” என செவிலியருக்கு அறிவுறுத்தி விட்டு, அங்கிருந்து கிளம்பிவிட,
செவிலியரும் அவ்வப்போது வந்து பிரபாவை கவனித்துவிட்டுச் சென்றார்.
மருத்துவர் சொன்னதைப் போல, பிரபா முழுதாய் நினைவு திரும்பி கண் விழிக்க மூன்று நாட்கள் ஆகிவிட்டது!!!
உடலெல்லாம் ஏதோ பெரிய மலையைத் தூக்கி சுமப்பதுபோல் அவ்வளவு வலித்தது பிரபஞ்சனிற்கு. ஒரு விரலை அசைப்பதே பிரம்ம பிரயத்தனமாக இருக்க, திறக்க மறுத்த இமைகளை கடினப்பட்டு அவன் பிரிக்க, அவன் முன் புன்னகை முகமாக நின்றிருந்தார் மருத்துவர்.
மங்கலாகத் தெரிந்த அவரின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாக, அவனின் கண்கள் அவனின் கவியைத் தேடி சுழன்றது!!
“ஹலோ ஜென்டில்மேன்!! எப்படி இருக்கீங்க?? நான் பேசுறது கேட்குது தானே?? ” என இன்முகமாக அவனின் நலம் விசாரித்தார் மருத்துவர்.
வறண்டு கிடந்த இதழ்களை மெதுவாய் பிரித்தவன்,
“க்.. க .. கவி!!!” என மெதுவாய்க் கேட்க, அதற்கே அவனின் தொண்டை வலித்து, மேலும் பேச சிரமத்தைக் கொடுத்தது.
“ஹேய் ரிலாக்ஸ்!!! ரொம்ப ஸ்டரெயின் பண்ணாதீங்க!! கிட்டத்தட்ட ஆறு மாசமா கோமாவில இருந்த உடம்பு!! டக்குனு பழைய மாதிரி ஆக முடியாது!! சோ நல்லா ரெஸ்ட் எடுங்க!!! நான் ஈவ்னிங் வந்து பார்க்குறேன்” என மருத்துவர் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பிரபஞ்சனிற்கு,
‘ என்ன ஆறு மாசமா கோமாவில இருக்கேனா? அப்போ என் கவி!!?? என் கவிக்கு என்னாச்சு???’ என அவனின் இதயம் பதற, சட்டென அவனின் உடலின் சமநிலை தவற, இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறியதில் அவன் மீண்டும் மயக்கத்திற்குள் நுழையப் போக,
“ஷிட்!! வைட்டல்ஸ் ட்ராப் ஆகுது!!! உடனே இண்டுபேட் பண்ணுங்க!!! குவிக்!! குவிக்!! சிஸ்டர் நீங்க ஃப்ளூயிட்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க!!!” என துரிதமாக செயல்பட்ட மருத்துவர்,
“ஹேய் மேன்!!! கண்ணை மூடாத!! ஓபன்!! ஓபன்!! யூ ஆர் ஆல்ரைட்!! ஒன்னும் இல்லை!! லுக் அட் மீ!” என பிரபாவின் கன்னத்தைத் தட்டிக்கொண்டே அவன் மீண்டும் மயக்கத்திற்குள் செல்லாமல் இருக்கப் போராடினார்.
சற்று நேரத்தில், பிரபாவின் உடல்நிலை சற்று சீராக, மருந்தின் உபயத்தில் பிரபா தூக்கத்திற்குள் சென்றான்.
“கேர்ஃபுல்லா பாருங்க இந்த பேஷண்டை!! ரொம்ப இமோக்ஷனல் ஆக விடாதீங்க!! அடுத்து முழிச்சா பெருசா எதுவும் பேச்சு கொடுக்க வேண்டாம்..” என செவிலியர்களுக்கு அறிவுறுத்திய மருத்துவர், ரவுண்ட்ஸ் கிளம்பிவிட்டார்.
முழுதாக மூன்று மணி நேரம் கழித்தே கண்விழித்த பிரபாவிற்கு, நடந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வர, அவன் கவியை நினைத்து நெஞ்சம் கலங்கியது!!
இருந்த ஒரு உறவையும் இழந்துவிட்டு நிற்கும் தன் நிலையை எண்ணும்போது அவனின் விழிகளில் நீர் கசிய, அவனைக் கண்காணிக்க அங்கே இருந்த அந்த வயதான செவிலியர் தான்,
“தம்பி!! எதுக்கு இந்த அழுகை!! நீ நல்லா இருக்க!! சாகக் கிடந்து கிட்டத்தட்ட எமனைப் பார்த்திட்டு திரும்பி வந்திருக்க நீ!! இனியும் அழுது உடம்பைக் கெடுத்துக்காத!! இப்போ நீ நல்லா இருக்க!! அதை மட்டும் மனசுல பதியவை!!” என அறிவுறுத்தியவர்,
“உண்மையாவே நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி தெரியுமா??” என்று கேட்க, அவனிடம் ஒரு விரக்தி முறுவல், அவனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி அவன் அறியாததா?
“அட சிரிக்காதப்பா!! நிஜமாத்தான் சொல்றேன்.. அந்தக்காட்டுக்குள்ள இருந்து உன்னைத் தூக்கிட்டு கவர்மென்டு ஆஸ்பத்திரிக்கு போகாம பக்கத்துல இந்த ஆஸ்பத்திரி இருந்ததினால இங்க வந்து சேர்த்தாங்க.. நீ எவ்வளவு சீரியசான நிலைமையில இங்க வந்த தெரியுமா?? உன்னைக் காப்பாத்துறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாங்க.. அதுவும் நீ யாரு என்னன்னு கடைசி வரைக்கும் எங்களுக்குத் தெரியலை.. உன்னைத்தேடியும் யாரும் வரலை!!! அப்போ உனக்கு வைத்தியம் பார்க்கிறதுக்கு காசு கூட கட்ட ஆள் இல்லைன்னு உனக்கு ஆபரேஷன் கூட பண்ண வேணாமுன்னு பேசிட்டு இருந்தாங்க.. ஆனா அந்தக் கடவுள் தான் அந்த வெள்ளைக்காரவுக மூலமா உன்னைக் காப்பாத்துச்சு!!” என அவர் அவன் இங்கு வந்து சேர்ந்த கதையைச் சொல்ல, அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என புரியாமல் பிரபா பார்த்திருந்தான்.
“நீ இங்க அடிபட்டு வந்தப்போ, இன்னொரு வெளிநாட்டு புள்ளையும் ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் பண்ண வந்திருந்துச்சு.. கடைசி நேரத்துல அதுக்கு இதயம் கிடைக்கலை.. அவுக அப்பா அம்மா ரொம்ப பயந்துட்டாங்க.. அப்பறம் அவங்க ரொம்ப போராடி ஒருவழியா அந்தப்பொண்ணுக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சது.. அதுனால கடவுளுக்கு நன்றி சொல்லுறவிதமா, ஹாஸ்பிடல்ல பீஸ் கட்ட முடியாம தவிக்கிற அஞ்சு பேரோட மருத்துவ செலவை அவங்க பொறுப்பேத்துகிட்டாங்க.. அதுல ஒருத்தன் தான் நீ.. அவங்க தயவுல தான் இங்க ஆறு மாசமா உனக்கு வைத்தியம் பார்த்து பொழைக்க வச்சிருக்காங்க.. அதான் சொன்னேன் நீ ரொம்ப அதிர்ஷ்டகாரன்னு!!!” என சொல்லி முடித்தவர், அவனுக்கு தினமும் செய்யும் பரிசோதனையை செய்துவிட்டு,
“எல்லாம் நல்லா இருக்கு தம்பி!!! சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்க!! சந்தோஷமா இரு!!” என கிளம்பப்போனவர்,
“ஆமா, உன் பேர் என்ன?? கேட்கவே மறந்துட்டேன் பாரேன்!!” என நினைவு வந்து கேட்க,
காய்ந்திருந்த உதடுகளைப் பிரித்து, “பிரபஞ்சன்!!” என மெதுவாய் அவன் முனக,
“நல்ல பேர்!!” என அந்த செவிலியரும் சென்றுவிட்டார்.
ஏதேதோ எண்ணங்கள் அலைமோத, தனக்கென யாருமே இல்லாத உலகத்தில், எதற்கு வாழ வேண்டும் என்று தோன்ற, சட்டென அவன் பிழைக்க காரணமாக இருந்த அந்த முகமறியா மனிதர்களின் நினைவு வர,
“ச்சே!! எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மளை காப்பாத்தி இருக்காங்க!! இனி இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது!!” என தனக்குத்தானே கூறிக்கொண்டவன், அவனுக்கு உதவியவர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்தான்.
அதன்பின், பிசியோதெரபி எல்லாம் செய்து, ஓரளவிற்கு அவன் நன்றாக நடக்க ஆரம்பித்ததும், மருத்துவமனையில் இருந்து அவனை டிஸ்சார்ஜ் செய்துவிட, அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு வெளியே வந்தவனுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது!!
எங்கு செல்ல என அவன் யோசித்தது ஒரு நொடி தான், மறுநிமிடமே, கவியை தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டால் போதும் என நினைத்து, வழியில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு கவியின் விலாசத்தை அடைந்தான்.
கவியைக் கண்டுவிட வேண்டும் என மிகுந்த எதிர்பார்ப்பில் வந்தவனை பூட்டியிருந்த வீடே வரவேற்க, சோர்ந்து போனவன்,
காத்திருக்கலாம் என்று நினைத்து அவர்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த அந்த பூங்காவிலே காத்திருக்கத் தொடங்க,
நேரம் தான் சென்றதே தவிர, அந்த வீட்டிற்கு யாரும் வருவதாகக் காணோம்.
ஆறுமாதமாக கோமாவில், படுத்த படுக்கையாக இருந்த உடம்பு அதற்கு மேல் ஒத்துழைக்காமல் போக, அப்படியே அங்கிருந்த பெஞ்சில் படுத்தேவிட்டான் பிரபா.
உடலெல்லாம் அடித்துப் போட்டதுபோல் வலித்தாலும், கவியைக் கண்டு, அவளின் நலத்தை உறுதி செய்துவிட மாட்டோமா என உயிரைக் கண்ணில் தேக்கி, அவள் வீட்டையே அவன் பார்த்துக்கொண்டிருக்க,
வந்ததில் இருந்தே அவனை கவனித்துக்கொண்டிருந்த அந்தப் பூங்காவின் காவலாளி,
“ஏம்பா தம்பி!! யாரு நீ!?? நானும் காலையில இருந்து பார்க்கிறேன் அந்த வீட்டையே பார்த்துகிட்டு படுத்திருக்க.. என்ன திருட்டு கும்பலா?? நோட்டம் விட வந்திருக்கியா??” என சப்தம் போட,
அதில் பதறியடித்து எழ முடியாமல் எழுந்தவன்,
“இல்லை.. இல்லை சார்!!! அது சேதுராமன் சாரைப் பார்க்கணும்.. வீடு பூட்டிருந்துச்சு.. அதான் எப்போ வருவாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன்.. திருடன் எல்லாம் இல்லை சார்” என்றான்.
“ஓஹ் அப்படியா?? உனக்கு விஷயமே தெரியாதா?? அவங்க இங்க வீட்டைக் காலி பண்ணிப் போய் மூணு மாசத்துக்கு மேல இருக்கும்.. “
அதில் அதிர்ந்தவன்,
“என்..என்ன?? மூணு மாசமா??”
“எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா சார்???” என படபடத்தவனை குழப்பமாகப் பார்த்த காவலாளி,
“அதெல்லாம் தெரியாதுப்பா!! இருட்டிருச்சு.. நான் பார்க்கை மூடணும் … கிளம்பு நீ இங்க இருந்து!!” என அவனை விரட்ட,
நகர மறுத்த உடலை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு எழுந்து சென்றவன், நாலு எட்டுக்கு மேல் வைக்க முடியாமல் தள்ளாடி கீழே விழப்போக,
“ஹேய் தம்பி!! பார்த்து பார்த்துப்பா!!” என ஓடி வந்து அவனைப் பிடித்த காவலாளி, அவனை மீண்டும் பெஞ்சிலே அமர வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுக்க,
அப்போது தான் பசி என்ற உணர்வே பிரபாவைத் தாக்கியது!! கிட்டத்தட்ட காலையில் இருந்து சாப்பிடாமலே இருந்தது, முன்பே பலகீனமாக இருந்த உடலை மேலும் மோசமாக்க, அவனுக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
அவன் நிலையை புரிந்து கொண்ட காவலாளியும் அப்படியே அவனை விட்டுவிட்டுப் போக மனமில்லாமல், அவனுக்கு உணவு வாங்கிக்கொடுத்துவிட்டு அவன் சற்று தெம்பானதும்,
“தம்பி!! இப்போவே ரொம்ப லேட் ஆயிருச்சு.. நீ கிளம்புனா நான் இதை மூடிட்டு என் வேலையைப் பார்ப்பேன்” என்று சொல்ல,
அவரை நன்றியுணர்வுடன் ஏறிட்ட பிரபா, “ரொம்ப நன்றி சார்!!!” என கையெடுத்து கும்பிட்டவன், இதற்கு மேல் அவருக்கு தொல்லை தரக்கூடாது என மெதுவாய் எழுந்து அந்த பூங்காவை விட்டு வெளியே வந்தவன், அதற்கு மேல் நடக்கத் தெம்பில்லாமல் அந்த நடைபாதையிலே சரிந்து படுத்துவிட்டான்.
அவனைக்கண்ட அந்த காவலாளிக்கு பரிதாபம் தோன்றினாலும், இதற்கு மேல் நாம் என்ன செய்வது என நினைத்து தன் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
யாருமற்ற அனாதையாக ரோட்டில் படுத்துக்கிடந்தவனின் மனமெங்கும் அவனின் கவியே நிறைந்திருந்தாள்.
அருகில் இருந்த போது புரியாததெல்லாம், அவள் தனக்கு இல்லை என தெரிந்த பின் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து, அவளின் பிரிவு பூதகரமாய் தோன்றி அவனை வாட்டியது.
‘ உனக்கும் என் மேல லவ் இருக்கு!!! நீ பொய் சொல்ற!!’ என என்றோ கவி சொன்னதை இப்போது உணர்ந்து விரக்தியாக புன்னகைத்த பிரபா,
“ஆமா கவி!!! நீ சொன்னது தான் கரெக்ட்!! நான்.. நானும் உன்னை லவ் பண்றேன்.. எனக்கு நீ வேணும் கவி!!!” என மனதில் வலியுடன் கூறிக்கொண்டவனுக்கு கவியின் அண்மை இல்லாமல் ஒரு நாளே ஒரு யுகமாய்த் தோன்ற, எந்த அளவிற்கு அவள் தன் வாழ்வில் இன்றியமையாதவளாகிப் போனாள் என பிரபா இப்போது தான் முழுமையாக உணர்ந்தான்.
அன்று இரவெல்லாம் ஏதேதோ யோசித்து குழம்பியவன் முடிவில், கவி கண்டிப்பாக தனக்கு வேண்டும் என உணர்ந்து, அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என சிந்தித்தான்.
இப்போதுள்ள உடல்நிலையில் எதுவுமே சாத்தியம் இல்லை என அவனுக்குப் புரிய, முதலில் உடலைத் தேற்ற வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
மறுநாள் முடிந்தளவு அந்த தெருவில் வசிப்பவர்களிடம் கவியை பற்றி விசாரிக்க, அவர்களுக்கும் சேதுராமன் குடும்பம் எங்கே சென்றதென்று தெரியவில்லை.
அதைக்கேட்டு சோர்ந்து போனாலும், எப்படியாவது கவியைக் கண்டுபிடித்துவிடலாம் எனும் நம்பிக்கை அவன் மனதில் ஆழமாக இருக்க, முதலில் அதற்கு தன் வாழ்க்கையை சீராக்க வேண்டும் என நினைத்தான்.
அவன் நினைத்ததைப் போலவே இத்தனை மாத காலமாக அவன் வராததால், அவன் தங்கியிருந்த வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார் உரிமையாளர்.
அடுத்த நேர உணவிற்கும், ஒதுங்கிக் கொள்ள சிறு குடிசைக்கும் கூட வழியில்லாமல் இருக்கும் அவனின் தற்போதைய நிலை, அவனை மிகவுமே பலவீனமாக்க, கவியின் துணையை அவனின் மனம் மிகவும் தேடியது!!
எந்த ஒரு துன்பம் வந்தாலும், கவியின் கைபிடித்தே அதை கடந்து வந்தவனுக்கு, அவளில்லாமல் அணுவும் அசையவில்லை.
“எங்க கவி போன????” என மனதில் அரற்றியவனுக்கு, சேதுராமன் தன்னை ஏன் நண்பனாகக் கூட கவியுடன் சேர மறுத்தார் என தற்போதைய அவனின் நிலை உணர்த்தியது!!
“இப்படி ஒரு பஞ்சப்பரதேசிக்கு யாருடா அந்த தேவதைப்பொண்ணை தூக்கிக் கொடுப்பா!!” என அவனின் மனசாட்சியே அவனைக் காரி உமிழ,
முன்பு போல் என் கவி என்னுடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டாம் என அவளை விட்டு பிரிய நினைக்கவில்லை அவனின் மனது!!
மாறாக, தன் வாழ்க்கைத்தரத்தை எப்படியாவது உயர்த்தி, கவியை காலம் முழுவதும் தன்னருகில் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வைராக்கியம் பிறக்க, அடுத்து என்ன செய்வது என புது உத்வேகம் பிறந்தது அவனுள்!!!
அடுத்து வந்த நாட்கள் சாலையின் நடைபாதையே வீடாக்கி, வெயிலிலும் மழையிலும் ஒதுங்க இடம் இல்லாமல் கிடந்தவன், மிகுந்த முயற்சிக்குப் பின் ஒரு உணவகத்தில் சர்வர் வேலையில் சேர்ந்தான்.
மூன்று வருடங்கள்!!! காணும் இடமெல்லாம் அவன் கவியைத் தேடி அலைந்து சோர்ந்து போனாலும், என்றாவது ஒருநாள் அவளைக் கண்டுபிடித்துவிடுவேன் எனும் நம்பிக்கையில் தான் உயிர் வாழ்ந்திருந்தான்.
அதிலும் இந்தப் பிரிவு, கவி மீது அவன் வைத்திருக்கும் காதலின் அளவை அவனுக்கு உணர்த்தியிருக்க, அவளில்லாத வாழ்க்கை நரகமாய்த் தோன்றியது.
எத்தனை நாள் இப்படியே இருப்பது என நினைத்தவன் கண்ணில் சிங்கிங் சேம்பியன்ஸ் போட்டியின் விளம்பரம் கண்ணில் பட, சிறிதும் யோசிக்கவில்லை!! தனக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாக அதை நினைத்தவன், எப்படியும் இந்தப்போட்டியில் கலந்து வெற்றி பெற்று வாழ்வில் ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டும் என அவனின் கவிக்காக முடிவெடுத்தவன், அதற்கான முயற்சியில் இறங்கினான்.
பல பல இன்னல்களைக் கடந்து, வெற்றிக்கோப்பையைக் கையில் அவன் ஏந்திய நொடியை விட, தன் வெற்றிக்காக கிடைத்த பணத்தைக்கொண்டு பிரபல தனியார் டிடெக்டிவ் மூலம் கவியின் தற்போதைய விலாசத்தைக் கண்டுபிடித்த போது தான் உண்மையான வெற்றியை உணர்ந்தது போல் அவ்வளவு மகிழ்ந்தான்.
ஆனால் அவன் மகிழ்வுக்கு ஆயுள் குறைவு என்பது போல், அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கும் செய்தி அவன் இதயத்தில் இடியாய் இறங்க, மொத்தமாக இடிந்து போனான்.
எதற்காக இத்தனை நாளும் ஜீவனை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தானோ, அதுவே பொய்யாய்ப் போய்விட, இதற்கு மேல் எதற்கு வாழ வேண்டும் என அவன் மிகவும் துவண்டு போன காலகட்டம் அது!! அப்போதெல்லாம் கவின் தான் அவனின் உடனிருந்து அவனைத் தேற்றி கொஞ்சம் கொஞ்சமாக இசை மீது அவனின் கவனத்தைத் திருப்பி, இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறான்.
கவி மீது இப்பொழுதும் கோபம் இல்லை அந்த கிறுக்கனுக்கு!! அவளின் குடும்பத்தைப் பற்றி அறிந்தும், எந்த நம்பிக்கையில் அவள் இத்தனை வருடம் தனக்காக காத்திருப்பாள் என நினைத்த அவன் மீது தான் அவனின் கோபமெல்லாம்.
உண்மை அறிந்த பிறகு, மாற்றானின் மனைவியை நினைக்கக் கூடாது என தனக்குள் அவன் போராடிய போராட்டம் அவன் மட்டுமே அறிந்த ஒன்று!!
நடந்ததை மறக்கவும் முடியாமல், அதை நினைக்கவும் உரிமை இல்லாமல் வேள்வியில் வெந்து சாவது போல் ஒரு நிலையில் தினம் தினம் அவள் நினைவுகளில் விழுந்து எரிந்தவனுக்கு மோட்சம் கொடுக்கவே, மீண்டும் அவன் கண்களில் தோன்றினாள் அவனின் கவி!!!
வேறொருவனுடன் திருமணம் ஆகிவிட்டது என அவன் நம்பியிருக்க, இன்னும் அவன் கட்டிய தாலிக்கயிறு அவள் இதயத்தை உரசிக்கொண்டு உறவாடி அவனுக்கு வேறு கதை சொல்ல, கவியின் வாழ்க்கையில் என்னதான் ஆயிற்று என அவன் குழம்பித் தவிக்க,
அவனோடு சேர்ந்து நாமும் கவியின் வாழ்க்கைப் புத்தகத்தில் அடுத்த பக்கத்தைப் படிக்கலாமா??
“நாயகியின் அருகாமையில் உணராத காதலை, பிரிவு அவனிற்கு உணர்த்த,
பிரிந்த காதலை எண்ணி நாயகன், தன்னைத் தொலைக்க,
தொலைந்த பொக்கிஷமாய் மீண்டும் காதல் கை வந்து சேர்ந்தால்???”
error: Content is protected !!