Skip to content
Post Views: 5,937
“இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
மு.வ விளக்க உரை: ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.”
அவினாஷ் வீட்டிற்கு கிளம்பிய பின் தாயோடும் அக்காக்களோடும் வந்து சாருகேஷ் அமர காத்யாயினி மகனிடம்,
“என்ன டா அவனோட ரொம்ப க்ளோஸ் ஆகிட்ட?
Advertisement
உன் அண்ணனுக்கும் உனக்கும் ப்ரெண்ட்ஸே கம்மி அதிலேயும் வீட்டுக்கு எல்லாம் யாரையும் கூட்டிட்டு வர மாட்டியே?”
“ஆமா மா ஏன்னால் எங்களோட பழகுறதில் யாரும் எங்களுக்கு ப்ரெண்டா இருக்க மாட்டாங்க எங்க பேக்ரவுண்ட்க்கு தான் ப்ரெண்டா இருப்பாங்க.
அதனால தான் காலேஜில் பேசுறது வெளியில் மீட் பண்றதோட சரி.”
Advertisement
“..”
Advertisement
“பட் இவன் ரொம்ப நல்ல டைப். நம்ம ஹெச் ஆர் மேடம் மாதிரியே ரொம்ப ஸ்ட்ரிக்ட் வேற..”, என்றதில் அனைவரும் சிரித்தனர்.
“எங்க காலேஜில் இவங்க அக்கா தான் செம டெரராம். நீங்க போட்டோ காட்டின அப்பறம் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.
அதே மாதிரி தான் இவனும். ப்ரெண்ட்ஸோட வெளியில் போறது சுத்துறதுனு ஒண்ணுமே கிடையாது.
Advertisement
எல்லாம் ஒரு வேவ்லென்த் தான். எனக்கு என்னவோ இவனோட செட் ஆகுது. அதுவுமில்லாம..”
“என்ன டா பீடிகை போடுற?”
“வருங்கால சொந்தமாக போறவன் வேற. அதனால பழகலாம் தப்பில்ல.” என்றவன் கண் சிமிட்டினான்.
“டேய் எப்புடுறா?!!”, என்ற அக்காக்களின் விழி விரிப்பில் இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
“இது கூடத் தெரியாம அப்பறம் நான் டாக்டருக்கு படிச்சு என்ன யூஸ் சொல்லுங்க?”
“ஓகோ உங்க சிலபஸில் இதெல்லாம் வைக்குறாங்களா?”, என்ற காத்யாயினி மகனின் காதைப் பிடித்து செல்லமாய் திருகினார்.
“ஆ.. மாம். என்னவோ என் உள்ளுணர்வு சொல்லுது அண்ணா அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பாருனு.”
“..”
“உங்களுக்கே தெரியுமே அண்ணாவுக்கு பர்ஸ்ட்னு எதை காட்டுறோமோ அதை தான் அவர் செலெக்ட் பண்ணுவார்.
ட்ரெஸ் கார் இப்படி விஷயத்துக்கே அதை ஃபாலோ பண்றவர் இப்போ அம்மாவே சூஸ் பண்ண ஒரு பொண்ணை எப்படி மிஸ் பண்ணுவார்?”
“!!”
“எனக்குத் தெரிஞ்சு அவருக்கு ஒத்து வருமானு பார்க்குறதுக்கு தான் இந்த டைம்னு தோணுது.
ஒரு வேளை ஒத்து வந்துட்டால் ஹெச்ஆர் மேடமை எப்படியும் வழிக்கு வர வைச்சுருவார். சரியான பிஸினஸ் மேன்.
ஸ்கெட்ச் கரெக்டா இருக்கும்.”, என்றதில் பெண்கள் மூவரும் வாயைப் பிளந்து அவனைப் பார்த்திருந்தனர்.
“உன்னை போய் அண்ணா சின்ன பையன்னு நினைச்சுட்டு இருக்காரே டா?!”
“சரி சொல்லுங்க உங்களுக்கு அண்ணி ஓகே வா?”
“அம்மாவே செலெக்ட் பண்ணின அப்பறம் எல்லாரும் ஓகே மட்டும் தான் சொல்லி ஆகணும்.”, என்று மகள் கூறியதில் காத்யாயினிக்கு பெருமையாய் இருந்தது.
உண்மையில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அதிரன் அதைத் தான் செய்து கொண்டிருந்தான்.
அவளது வேலை குணம் பிறரிடம் பழகும் பாங்கு என அவளை கண்காணிக்கும் பெயரில் அவனறியாமல் அவள் மட்டும் தான் அதிரனின் மனதில் நுழைந்து நிறைந்திருந்தாள்.
சாதாரணமாக கூட யார் பக்கமும் கவனத்தை இத்தனை வருடங்களில் திருப்பியிராதவனுக்கு இப்போது ஏனோ அப்படி இருக்க முடியவில்லை.
காதலெல்லாம் அவன் வாழ்க்கையில் வாய்ப்பில்லை என்ற நிலையில் தாய் பார்த்த பெண் என்பதால் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சாதாரணம் போல் அவளை திருமண நோக்கில் பார்க்க முடிந்தது.
ஆனால் அவள் அப்படி ஒரு எண்ணத்திலேயே இல்லை என்பதை சுத்தமாய் மறந்து போயிருந்தான்.
அதிலும் தேவா பல விதத்தில் அவனுக்கு ஒத்துபோகும் ஒருத்தியாய் இருந்தாள். அவனுக்கு கிடைக்கும் சொற்ப நேரங்களும் புத்தகத்தில் தான் கழியும்.
அதே போன்று தான் அவளும் போலும் அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு முறை நான்கைந்து புத்தகங்களை அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றாள்.
எங்கோ கேள்விப்பட்ட ஒன்று, எந்த ஒரு பெண்ணால் தன்னுடைய சோகங்களை வருத்தங்களை ஒரு புத்தகம் படிப்பதன் மூலமும் ஒரு சிறு மிடறு காபியை விழுங்குவது மூலமும் இல்லையேல் அமைதியில் தன்னைத் தானே தேற்றிக் கொள்வது மூலமும் சரி செய்து கொள்ள முடியுமோ அவளின் உறுதியை உடைப்பது என்பது எவராலும் முடியாதது என்று.
தேவா அதற்கு மிக கனக் கச்சிதமாய் பொருந்திப் போனாள். மனிதர்களை அளவிடுவதில் அதிரன் கில்லாடி தான்.
அப்படிபட்டவனிடம் தேவாவிற்கான அளவீடு மிக நல்ல விதமாகவே இருந்தது.
அன்றைய தொழிற்சாலை நிகழ்விற்கு பின் அவள் தன்னைப் பார்க்கும் போது அவள் விழியில் தெரியும் சிறு பதட்டம் அவனுக்கு ரசிக்கும் படியாய் இருந்தது.
இப்படி கண்ணாமூச்சி விளையாட்டாகவே சிறிது காலம் போகட்டும் என்று அவன் நினைத்திருக்க காலத்தின் கணிப்பு வேறு ஒன்றாய் இருந்தது.
அன்று காலையே தேவ ரஞ்சனாவின் தந்தை வழி சொந்தம் என்று நான்கைந்து பேர் வந்திருக்க அதில் அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு பிதற்றித் திரிபவனும் ஒருவன்.
“உனக்கு வேணா சொந்த பந்தம் வேண்டாம இருக்கலாம். எங்களுக்கு அக்கறை இல்லாம போகாது.”
“..”
“இன்னும் எத்தனை வருசம் கல்யாணமே பண்ணாம இருப்ப அதான் அவினாஷ் படிப்பை முடிக்க போறானே.
அப்பறம் அவன் பொழப்பை அவன் பார்த்துக்கட்டும். நீ உன் வாழ்க்கையை பாரு.”
“..”
“என் தம்பி உன்னை கட்டணும்னு ஆசை படுதான். பேசினால் ஏதோ போலீஸுக்கு போவேன்னு சொன்னியாமே.
சம்பாதிக்குறான் உன்னைய நல்லா பார்த்துகிடுவான். வேற என்ன வேணும் உனக்கு?”
“இப்போ எனக்கு வாழ்க்கை கொடுங்கனு நான் வந்து கேட்டேனா?”
“இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசினா என்ன அர்த்தம்ங்கிறேன்?”
“நீங்க பேசுற பேச்சு பிடிக்கலைனு அர்த்தம். எனக்கு வேலைக்கு நேரமாவுது கிளம்புங்க.”
“நாலு காசு சம்பாதிச்சா திமிரு வந்துருமோ உன் அப்பன் கடனாளியா இருந்து தான் செத்து போனான். ஏதோ சொந்தமா இந்த குடிசை வீடு வைச்சுருந்தா பெரிய ஆளா நீங்க?
இப்போ வரை நீ எப்படி படிச்ச அதுக்கு காசெல்லாம் எங்கே இருந்து வந்ததுனு யாருக்கும் தெரியாது.
ஊருக்குள்ளே அரசல் புரசலா ஆயிரம் பேசுறாக. அதையெல்லாம் காதுல வாங்காம வந்து பொண்ணு கேட்டா பெரிய மகாராணி மாதிரி பேச்சு.”, என்றதில் கோவமாய் தேவா ஏதோ கூற வர அவினாஷ் அவளது கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டான்.
இது போன்ற விஷயங்களில் அவினாஷ் மிகவும் பயந்த சுபாவம். தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என தமக்கையை நிதானப்படுத்த முயன்றான்.
வந்தவர்கள் மேலும் முடிந்த வரை பேசி விட்டு எதுவும் வேலைக்காகாது என்றவுடன் அவளைத் தூற்றி விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
தேவ ரஞ்சனா அப்படியே தலை கவிழ்ந்து இருக்கையில் அமர்ந்து விட்டிருந்தாள்.
வெளி உலகிற்கு திமிரானவளாகவும் அடங்காதவளாகவும் தெரிபவள் உண்மையில் தனக்கென யாருமே இல்லையே என்ற துக்கத்தில் துவண்டு விழும் சிறு குழந்தை.
தன்னைத் தானே எப்போதும் போல் கட்டுக்குள் கொண்டு வந்தவள் வீட்டில் வேலையை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தாள்.
ஏனோ வெகு நேரமாகியும் மனது இன்று சமன்பட மறுத்தது. அந்த நாற்பது வயது மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்க இரண்டாம் தாரமாய் இவளை கட்டி வைப்பதற்கே இந்த ஆட்டம் போடுகிறார்கள்.
திருமணத்தின் மீது கனவெல்லாம் அவளுக்கு இல்லை தான் ஆனால் அதற்காக இப்படி யார் என்னவென்றே தெரியாத எந்த நிலையில் இருப்பவரானாலும் தன்னை உரிமை கொண்டாடிக் கொள்ள வந்து விடுவார்களா என்று இருந்தது.
அந்தக் கடுப்பில் அவள் போக்கில் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க அன்றும் அதிரனைத் தேடி சிருஷ்டி வந்திருந்தாள்.
தேவா அவளை கவனிக்கும் நிலையிலெல்லாம் இல்லை. அதிரனிடம் முக்கிய கோப்புகளைக் கொடுத்து சரி பார்த்துச் செல்வதற்காக உள்ளே வர அவள் சாதாரணமாய் இல்லை என்பதை அதிரனும் உணர்ந்தான்.
அதிரன் பைல்களில் பார்வையைப் பதித்திருக்க சிருஷ்டி அவனிடம்,
“இவங்க தான் உங்க பிஏவை விட அதிகமா உங்க ரூமில் இருப்பாங்க போலேயே அதிரன்.”, என்றவள் விளையாட்டு போல் கூறினாலும் அதில் இருபொருள் இருப்பது நன்றாகவே புரிந்தது அதிரனுக்கும் தேவாவிற்கும்.
அதிரன் வாய் திறப்பதற்குள் தேவா அவளைப் பார்த்து சற்றே கடுமையாய்,
“எக்ஸ்க்யூஸ் மி பார்த்து பேசுங்க..”
“நான் யாருனு தெரியுமா? என்கிட்டயே அட்டிட்டியூட் காட்ற நீ?”
“நீங்க யாரா வேணாலும் இருங்க. ஆனால் பேசினது என்னைப் பத்தி அதுக்கு நான் எப்படி அமைதியா இருக்க முடியும்?”
“மாச சம்பளம் வாங்குற உனக்கு இவ்வளவு அட்டிட்டியூட் அதிகம் தான். என்ன அதிரன் பேசிக் மேனர்ஸ் கூட இல்ல. நீங்களும் பார்த்துட்டு இருக்கீங்க.”
“இனாப் ஆஃப் திஸ் நான்சென்ஸ். என் மேனர்ஸ் என் அட்டிட்டியூட் யார்கிட்ட எப்படி இருக்கணும்னு நான் பார்த்துக்குறேன்..
முதல்ல வேலை வெட்டியை விட்டுட்டு வந்து இப்படி வெட்டிக் கதை பேசுற நீங்க அடுத்தவங்களைப் பத்தி பேசக் கூடாது.”
தேவா அவள் அளவிற்கு இறங்கிச் சென்று பேசுவதை விரும்பாதவனாய் அதிரன் சற்று அழுத்தமாய்,
“ரஞ்சனா நீங்க கிளம்புங்க.”, என்றதில் சிருஷ்டியை ஒரு பார்வை பார்த்து அவள் கோபமாய் வெளியேறியிருக்க இப்போது அதிரனின் பார்வை அழுத்தமாய் சிருஷ்டியின் மேல் விழுந்தது.
“இங்க பாருங்க சிருஷ்டி வேலை நேரத்தில் இப்படி பேசிட்டு இருக்குறதை நான் என்னைக்கும் என்கரேஜ் பண்ண மாட்டேன்.
ஆல்சோ நமக்குள்ளே பேசுறதுக்கும் முக்கியமா எதுவுமே இல்லாத அப்போ நீங்க இப்படி அடிக்கடி இங்கே வர்றது..”
“!!”
“அண்ட் என் எம்ப்ளாயியைப் பத்தி கமெண்ட் பண்றதுக்கு என்னைத் தவிர யாருக்கும் நான் ரைட்ஸ் கொடுக்குறதில்ல. இதுவே கடைசியா இருக்கட்டும்.”, என்றவன் வாசலை நோக்கி கை காட்ட கோபத்தில் முகம் சிவக்க கிளம்பியிருந்தாள்.
அதிரனுக்கு தேவாவின் இந்த பேச்சு ஏனோ அன்று கல்லூரியில் மரத்தில் அவள் ஓங்கி குத்தியதை நினைவு படுத்தியது.
ஏதோ ஒரு உந்துதலில் அவன் அறையிலிருந்து வெளியே வந்த நேரம் வசந்த் தேவாவின் அறைக்குள் நுழைய எத்தனித்ததை கவனித்தான்.
“வசந்த்!”, என்ற குரலில் அவன் அப்படியே நின்று முதலாளியை கேள்வியாய் பார்த்தான்.
“என்னாச்சு?”
“தெரில சார். ஏதோ சத்தம் கேட்டது. அதான் பார்க்கலாம்னு..”
“ஸ்டே ஹியர்.”, என்றவன் அவனிடம் பதிலை எதிர்பாராது தேவாவின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தியிருந்தான்.
அவளது மேசையிலிருந்த அனைத்து கோப்புகளும் தரையில் விசிறடிக்கப் பட்டிருக்க இரு கைகளிலும் தலையை ஏந்தியவாறு குனிந்திருந்தாள் தேவா.
“ரஞ்சனா!”, என்ற குரலில் நிமிர்ந்தவள் மரியாதைக்காக எழுந்து நிற்க தரையை கவனித்தவன்,
“என்ன இதெல்லாம்?”
“சார் நீங்க என் முதலாளி தான் அதுக்காக யார் என்ன பேசினாலும் கேட்டுட்டு இருக்க முடியாது.
அவங்க பேசினது என்ன அர்த்தத்தில்னு உங்களுக்கும் தெரியும் காசு இல்லாதவங்கனால் யார் வேணா என்ன வேணா பேசலாமா?
எங்களுக்கு மனசில்லயா?”, என்று தன் போல் அரற்றியவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய ஜன்னலோரம் நின்றிருந்தவள் அதீத மன அழுத்தத்தில் இருப்பது அதிரனுக்குத் தெளிவாய் புரிந்தது.
“ரஞ்சனா நீங்க..”
“ஆமா சார் அட்டிட்டியூட் காட்டுறேன் நான் யாருக்கும் அடங்காதவ தான் அதில் உங்களுக்கு பிரச்சனை இருந்தா வேலையை விட்டு தூக்கிக்கோங்க”, என்றவளை பின்னிருந்து இறுக அணைத்திருந்தான் அதிரன். தேவாவின் பேச்சு பட்டென நின்றிருந்தது.
“ரிலாக்ஸ். எல்லாம் சரியாகும். எப்பவுமே நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டாம். காம் டவுண்.”, என்று அதிரன் அவளது காதருகில் மெல்லிய குரலில் பேசியதைக் கேட்டவள் அப்படியே மயங்கிச் சரிய தன் மடியேந்தியிருந்தான் அதிரன்.
error: Content is protected !!