Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 22

அன்பு – 22

“ஏய்!!! **** நாயே!! இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு உனக்கு?? எழுந்திருச்சு வா டி!!!” என நடுக்கூடத்தில் இருந்து கத்திக் கொண்டிருந்தார் யசோதா – ஜெயசிம்மனின் தாய்.



Advertisement

இரவெல்லாம் யசோதாவின் மகன் படுத்திய பாட்டில் எழுந்தரிக்கவே சிரமப்பட்ட உடலை, முயன்று தூக்கிக்கொண்டு அங்கே அவளை அடக்கி ஆண்டுவிட்ட கர்வத்துடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்த ஜெயசிம்மனை வெற்றுப் பார்வை பார்த்த கவி, அறையின் ஒவ்வொரு மூலையிலும் கிழித்தெறியப்பட்ட அவளின் ஆடைகளை அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

உடலெங்கும் அங்கங்கு கந்திப் போய் இருந்த காயங்கள் அவள் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சாட்சியாய் காட்சியளிக்க, எவ்வித உணர்ச்சிகளும் இல்லாமல் அதை பார்த்தவள், ஷவரைத் திறந்து விட்டு அதனடியில் போய் நின்றாள்.

Advertisement

Advertisement

பொத்துக்கொண்டு கொட்டிய அந்த குளிர்நீர் கூட காரிகையின் மனதில் இருந்த வெம்மையை சிறிதும் போக்கவில்லை!!! மாறாக உடலில் அங்கங்கு இருந்த ரத்தக்காயங்களில் நீர் பட்டதன் விளைவாக உண்டான எரிச்சல், மேலும் அவள் மனதை இறுகச் செய்தது!!

தண்ணீரோடு சேர்த்து பெண்ணவளின் கண்ணீரும் சப்தமில்லாமல் கரைந்து போக, ஒரு பெருமூச்சுடன் உடையை மாற்றிக்கொண்டு அவள் வெளியேறுவதற்குள்ளே, பல முறை தன் வெண்கலக் குரலால் அவளை வசைபாடிக் கொண்டே அழைத்திருந்தார் யசோதா.

Advertisement

“வாடியம்மா!! இதுதான் நீ எழுந்திருச்சு வர நேரமா?? மணி ஆறாகப் போகுது!! மாமியாளுக்கு காபித்தண்ணி கொடுப்போம்னு எண்ணம் இல்லாம தூக்கம் வேண்டி கிடக்குதா மகாராணிக்கு!!! போ!! போய் முத காபி கொடுத்துட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடு!!” என அவளை விரட்ட,

முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், பட்டென சமையலறைக்கு சென்றுவிட்டவளை வெறுப்புடன் நோக்கிய யசோதாவிற்கு, இன்றளவும் இவளை மருமகளாக்கிக் கொண்டது துளியும் பிடிக்கவில்லை.

எனவே, தன்னால் முடிந்தமட்டும் அவளை வதைத்துக்கொண்டே தன் கோபத்தை தீர்த்துக்கொள்வார்.

இதோ இப்போது கூட இவ்வளவு பேச்சுக்களையும் வாங்கிக்கொண்டு எவ்வித சலனமும் இல்லாமல் செல்லும் அவளின் செயல் யசோதாவிற்கு கோபத்தைக் கொடுக்க,

“இம்புட்டு பேசுறேன்.. கொஞ்சமும் அசைஞ்சு கொடுக்கிறாளா.? அம்புட்டும் அழுத்தம்.. மனசுல இன்னும் எந்த சி**கி மவனையோ நினைச்சிட்டு எம்மவன் கூட படுத்து எந்திரிக்கிறவகிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்??”

தானும் ஒரு பெண் என்பதை மறந்துவிட்டு வரம்பில்லாமல் வார்த்தைகளை கடித்துத் துப்பிய மாமியாரின் பேச்சுக்கள் உள்ளுக்குள் அருவெறுப்பைக் கொடுத்தாலும், உணர்வுகள் எல்லாம் மரத்துவிட்ட நிலைக்கு எப்போதோ சென்றிருந்த கவிக்கு, வலிக்கு மேல் வலிகளாக தாங்கிக்கொண்டே இருப்பதில், இதயம் என்றோ இறுகிவிட்டது!!!

அவர் கேட்ட காபியைக் கொடுத்துவிட்டு, அவ்வளவு பெரிய வீட்டையும் கூட்டி, பெருக்கி கோலமிடுவதற்குள்ளேயே ஏழு மணியைக் கடந்துவிட,

“இன்னும் சாப்பாடு செய்யலையா??” என அதற்கும் யசோதா ஒரு கச்சேரியை ஆரம்பிக்க, விரைவாக சமையலறைக்குச் சென்று காலை உணவை ஆரம்பித்தாள் கவி!!

அதற்குள் ஜெயசிம்மன் வேறு எழுந்துவிட,

“கட்டுன புருஷனை கவனிக்காம உள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்க!! இன்னும் அந்த பய நினைப்புதானா? என்ன பொம்பளையோ இவ?? ராசா மாதிரி இருக்க என் மவனுக்கு இப்படியா ஒரு கேடுகெட்டவ வந்து வாய்க்கணும்?”

என்று ஆரம்பித்தவரைக் கண்டு சலித்துப் போனது பெண்ணிற்கு!!

ஆனாலும் ஜெயசிம்மனுக்கு செய்ய வேண்டிய வேலைகளை கடமையே என செய்து முடித்தவள், காலை சமையலை முடித்து எடுத்துவந்து மேசை மீது வைக்க, அவளின் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஓய்வுக்காக கெஞ்சியது!!!

ஆனால் முடியாதே!!!

அத்தனை பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு, யசோதா மற்றும் ஜெயசிம்மனுக்கான உணவை எடுத்து வைக்க, அமைதியாய் உண்ணும் வேலையை மட்டும் பார்க்கும் ஜீவன்கள் அல்லவே அவர்கள்.

அப்போதும் உணவோடு சேர்த்து அவளையும் மென்று தின்று குரூர திருப்தி அடைய, அதற்கும் எதிர்வினையாக இருந்த பெண்ணவளின் அமைதி ஜெயசிம்மனை மேலும் சீண்டிவிட,

சிறிதும் யோசிக்காமல், கொதிக்கக் கொதிக்க இருந்த சாம்பாரை பெண்ணவளின் கைகளில் ஊற்றிவிட,

அவனின் கொடூர செயலில், “அம்மாஆஆ!!” என எரிச்சலில் தன்னை மீறி கத்தியிருந்த கவி, உடனடியாக குளிர்ந்த நீரில் சென்று கைகளைக் காட்டியும், கைகள் நன்றாய் சிவந்து போய் பெண்ணவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

அவளின் வேதனையை நிறைவுடன் பார்த்த சிம்மன்,

‘ நீ பண்ண காரியத்துக்கு உனக்கு இதெல்லாம் பத்தாது!! இன்னும் இருக்கு!!’ என்பதைப் போல் பார்த்துவிட்டுச் செல்ல,

“ஏய் !! என்ன இன்னும் அங்கேயே நின்னுகிட்டு இருக்க?? வா வந்து இந்த இடத்தை சுத்தம் பண்ணு!! வீடெல்லாம் சாம்பாரா இருக்கு!!” என யசோதா ஏவல் செய்ய,

‘ இவர்கள் இருவரும் உண்மையில் மனிதர்கள் தானா??’ என கடந்த இரண்டு மாதமாக தோன்றும் கேள்வி, இன்றும் பெண்ணவளுக்குத் தோன்றத்தான் செய்தது!!!!

கவி ஜல்பல்லி வந்து இன்றோடு இரண்டு மாதம் முடிந்துவிட்டது!!!

அன்று அந்தக்காட்டில் பிரபாவை அடித்துப்போட்டுவிட்டு, கவியை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனை சென்ற ஜெயசிம்மன், அவளின் காயங்களுக்கு மருந்திட்டு, அவள் மயக்கத்தில் இருக்கும் போதே அவளை அழைத்துக்கொண்டு ஜல்பல்லி வந்திருந்தான்.

முதலில், தம்பி மகளென யசோதாவிற்கு அவள் மீது சிறிதாய் ஒட்டிக்கொண்டிருந்த பாசமும், அவள் வேறொருவன் கட்டிய தாலியை சுமந்து கொண்டு வந்து நின்றதில் வெறுப்பாய் மாறிவிட, இவளை அங்கேயே தலை முழுகிவிட்டு வராமல், இங்கு எதற்கு கூட்டிக்கொண்டு வந்தாய் மகனை கடிந்துகொள்ள,

அவனோ, “நீ தான இவ தான் என் பொண்டாட்டின்னு சொல்லி சொல்லி வளர்த்த!! இப்போ விட்டுட்டு வான்னு சொன்னா விட்டுடுவேனா??? முடியாது!! இவ எனக்குத்தான்!!” என முடிவாகச் சொல்ல,

“அப்போ அவ கழுத்துல இருக்க தாலியை அறுத்து வீசிட்டு வா!! எதுக்கு இந்தக் கருமத்தை இன்னும் வச்சிட்டு இருக்க??” என யசோதா பொரிய,

“முடியாது!!! அதைப் பார்க்கிறப்போ தான், என் இடத்தை இவ வேற ஒருத்தனுக்கு குடுத்ததுக்கான தண்டனையை அவளுக்கு குடுத்திட்டே இருக்கத் தோணும் எனக்கு.. நான் அவ கழுத்துல தாலி கட்டக்கூடாதுன்னு தான அவசர அவசரமா அவன்கிட்ட தாலி வாங்கிட்டு வந்து நிக்கிறா?? அது அவ கழுத்துலயே இருக்கட்டும்!!! அப்போ தான் அவ பண்ணின துரோகம் எனக்கு மறக்காது!!!” என்று சொன்னவனின் குரலில் இருந்த பழி வெறி யசோதாவிற்கே குளிர் எடுக்கச் செய்தது!!

ஆனாலும் மகனின் பிடிவாதம் தெரிந்த யசோதாவிற்கு, அதற்குமேல் அவனிடம் போராடப் பிடிக்கவில்லை. எனவே மகனின் வாழ்க்கையை கெடுத்துவிட்டாள் என தன் மொத்த கோபத்தையும் கவி பக்கம் திருப்பிக்கொண்டார் அவர்.

சேதுராமன் திருமணத்தைப் பற்றி கேட்டபொழுது கூட,

“என்னை மதிக்காம வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிருக்கா உங்க பொண்ணு!! அதை அவ்வளவு சுலபத்துல என்னால மன்னிக்க முடியாது!! மறக்கவும் முடியாது.. வேற ஒருத்தன் நான் இருக்க வேண்டிய இடத்துல இருந்து அவளுக்கு தாலி கட்டிருக்கான்னு நினைக்கிறப்போவே அவ்வளவு அவமானமா இருக்கு!!!”

“என்னால மறுபடியும் அவ கழுத்துல தாலி கட்ட முடியாது!! அப்படி பண்ணா அது இந்த சிம்மனுக்கு பெரிய அவமானம்!!! நான் அதை பண்ண மாட்டேன்” என அவன் முடிவாகக் கூறிவிட,

“என்ன அல்லுடு!! நீங்களே இப்படி சொன்னா எப்படி??” என சேதுராமன் மகளின் வாழ்வை நினைத்துப் பதற,

“தாலி தான் கட்ட மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ என் பார்யாவா(மனைவி) என் வீட்டுல தான் இனிமேல் இருப்பா!!” என அவன் யாரும் மீற முடியாதபடி அழுத்தமான குரலில் சொல்லிவிட்டான்.

அவனின் முடிவு சேதுராமனுக்கு நெருடலாக இருந்தாலும், மகள் தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள் என கோபத்தில் இருந்தவர், ஊரார் முன்பு சிம்மன் மனைவியாக வாழத்தானே போகிறாள், தன் கௌரவம் இதனால் குறையாது என நிம்மதிப்பட்டுக்கொண்டு ஒரு தந்தையாய் தோற்றுவிட்டார்.

பொற்கொடி தான் கடைசி வரை, ஜெயசிம்மனிடம் ஒன்று அவள் கழுத்தில் தாலி கட்டு முறையாக குடித்தனம் செய் இல்லையேல் என் பொண்ணை என்னிடமே கொடுத்துவிடு என போராடிப் பார்த்து தோல்வியடைந்தார்.

மகளின் செயலினால் தான் இவை அனைத்தும் நடக்கின்றது என மகளின் மேல் கடுங்கோபம் கொண்ட பொற்கொடி,

“உன் வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்டியே பாவி!!” என இன்னும் என்னென்னமோ சொல்லி, கவி எழுந்ததும் தன் பங்கிற்கு அவளை அடித்து தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

ஆனால், மயக்கத்தில் இருந்து கண்விழித்த கவியின் மனமெல்லாம் பிரபாவிடமே இருக்க,

“பிரபா!! பிரபாக்கு என்னாச்சு?? நான் போகணும்!! நான் போகணும் அவன்கிட்ட!!” என திமிறிக்கொண்டு வெளியே செல்லத்துடித்த கவியை பளீரென ஒரு அரைவிட்ட சேதுராமன்,

இனி அவள் இங்கு தான் ஜெயசிம்மனின் சொற்படி கேட்டு அவன் மனைவியாக வாழ வேண்டும், அதை மீறினால் உன்னோடு சேர்த்து பிரபஞ்சனையும் கொன்று புதைத்துவிடுவேன் என்று மிரட்ட,

அவர்கள் கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என கண்கூடாகவே கண்டுவிட்ட கவிக்கு, பித்துபிடிப்பதைப் போல் இருந்தது!!

மகள் எங்கே மீண்டும் குறுக்குத்தனமாய் ஏதாவது யோசித்து செய்துவைத்து, இன்னும் பிரச்சனையை பெரிது செய்துவிடுவாளோ என அஞ்சிய பொற்கொடி தான், பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொன்னார்.

“இதோ பார் அஞ்சலி!!! மறுபடியும் இங்க இருந்து தப்பிச்சுப் போறேன்னு கிறுக்குத்தனமா ஏதாவது பண்ணாத!! உன்னோட ஆசைக்காக அந்தப்பையனை ரொம்ப சோதிச்சிட்ட நீ!! உன்கிட்ட அவ்வளவு எச்சரிச்சேன் நான்.. இவங்க குடும்பத்தை பத்தி!! இருந்தும் நீ அவ்வளவு தைரியமா அந்தப்பையன் கிட்ட தாலி வாங்கிட்டு வந்து உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் குழி தோண்டி புதைச்சிட்ட!! போனது போகட்டும்!!! இனி ஒழுங்கா இவங்க சொல்றதைக்கேட்டு குடித்தனம் பண்ணு!! இல்லைனா இவங்க எல்லாம் காட்டுமிராண்டியை விட மோசமானவங்க.. நிச்சயம் அந்தப்பையனை சும்மா விடமாட்டாங்க.. உன்னையும் விட மாட்டாங்க.. ” என அவர் அறிவுறுத்த,

“அம்மா!!! பிரபா மா!! அவன் பாவம்!! அவனைப் பார்க்கணும்மா!! அவன் எந்ததப்பும் பண்ணலை மா.. என்னால அவன்.. அவனுக்கு எவ்வளவு ரத்தம்!! ” என அவனுக்கு நடந்த கொடூரத்தை எண்ணி, அவள் அழுது கரைய,

“ப்ச்!! அழுறதை நிப்பாட்டு அஞ்சலி!! அந்தப்பையனுக்கு ஒன்னும் ஆகாது.. ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு தான் வந்தோம்.. நல்லா இருக்கானாம் இப்போ.. இனிமேலும் அவன் நல்லா இருக்கணும்னா அவனை மறந்துட்டு உன் வாழ்க்கையைப் பாரு!! இல்லை அவன் தான் வேணும்னு இங்க இருந்தும் தப்பிச்சுப் போக முயற்சி செஞ்சா, அவனோடு சேர்ந்து நீயும் சாவு!!!” என மகளின் வாழ்வுக்காக, பிரபா நன்றாக இருப்பதாக பொய் உரைத்த பொற்கொடி, ‘அந்தப்பையன் எப்படியாவது பொலைச்சிடனும்’  என்று வேண்டிக்கொண்டார்.

கவிக்கு உண்மையில் தன் குடும்பம் இவ்வளவு கொடூர குணமுடையவர்களைக் கொண்டிருக்கும் என முன்பே தெரிந்திருந்தால் பிரபாவிடம் இருந்து விலகியிருந்திருப்பாளோ???

ஆனாலும் காதல் கொண்ட மனதை அடக்கி ஆளும் வித்தையை பேதைப் பெண் இன்னும் கற்கவில்லையே, என்ன செய்தாவது என் பிரபாவுடன் மீண்டும் சேர்ந்துவிட மாட்டேனா என்று தான் இன்னும் அவளின் இதயம் ஏங்கித் துடித்தது!!!

ஆனாலும் நடந்து முடிந்த சம்பவங்கள் அவளுக்கு நிதர்சனத்தை நெற்றிப்பொட்டில் அடித்து உணர்த்த, தன்னால் இனியொரு ஆபத்து பிரபாவிற்கு வரவேண்டாம் என மனதைக் கல்லாக்கிக் கொண்டு முடிவெடுத்த கவி, பிரபாவின் நன்மைக்காக எந்த கொடுமைகளையும் தாங்க தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.

கவியின் உடல் தேறும் வரையில் மூன்று நாள் மட்டும் அவளின் பெற்றோர்கள் அவளுடன் இருக்க, அன்றே மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து, திருமணமே செய்து கொள்ளாமல் திருமண வரவேற்பு விழாவைக் கொண்டாடி, அஞ்சலியைத் தன் மனைவியாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தினான் ஜெயசிம்மன்.

அஞ்சலியைத் தனியாக சந்தித்திருந்த ஜெயசிம்மன், தற்போது பிரபா எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறான் என்பது வரை தெரிந்துவைத்துக்கொண்டு,

“என்கிட்ட இருந்து இனி எப்பயாச்சும் தப்பிச்சுப் போகணும்னு நினைச்ச!!! உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்… ஆனா !!! உன் உயிர் காதலனை!!!!!! துண்டு துண்டா வெட்டி உன் கையில கொண்டு வந்து கொடுத்துவேன்.. ஜாக்கிரதை!!! இந்த சிம்மனோட இன்னொரு முகத்தைக் காட்ட வச்சிடாத!!!” என்று எச்சரித்தவனின் குரலில் இருந்த வெறி, அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை கவிக்கு உணர்த்த, பெண்ணுக்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டு விட்டது.

எனவே, அழுது கதறும் மனதை அடக்கும் வழி தெரியாமல், பிரபாவிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டவளுக்கு, ஜெயசிம்மனின் பேச்சைக்கேட்டு நடப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

சேதுராமனும் பொற்கொடியும் வரவேற்பு முடிந்த அன்றே கிளம்பிவிட, பெண்ணவளுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்ட நிலை தான்.

உண்மையில் அனுசரணையான குடும்பமும், அன்பான துணையும் அமைந்திருந்தால், நாளடைவில் அஞ்சலியாக நடந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, இந்த வாழ்க்கைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்.

ஆனால், இங்கோ நிலைமை முற்றிலும் வேறாக இருக்க, அவள் மறக்க நினைத்தாலும் எதையும் மறக்க விடாமல் குத்திக்காண்பித்துக் கொண்டே இருக்க இரு ஜீவன்கள் இருக்கும் போது, அவளுக்கு வாழ்க்கை நரகத்தைவிட மோசமாகத் தெரிந்தது.

அதிலும் ஒவ்வொரு இரவும், கவியை வலுக்கட்டாயமாக தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வரும் அந்த கொடூரன், வார்த்தைகளாலும் தன் கொடூர செயல்களாலும் அவளை நித்தம் நித்தம் வதம் செய்து கொண்டிருந்தான்.

தாம்பத்தியத்தின் அழகையே சிதைத்து, கூடல் என்றால் முகத்தைச் சுழித்து பயந்து ஓடும் அளவிற்கு அந்த சிறிய பெண்ணை பாடாய் படுத்துவிட்டான் அந்த ஜெயசிம்மன்.

தினம் தினம் அந்த முரடனின் கைகளில் சிக்கிய மலராய், வாடி வதங்கிப் போய் வரும் பெண்ணுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

எங்கே இந்த வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வோமா என்று கூட அவள் சிந்தித்ததுண்டு, ஆனால் அடுத்த நொடியே அதற்கும் பிரபாவை நினைத்துக்கொண்டு தான் நான் இப்படி செய்தேன் என நினைத்து அவனைக் கொன்றுவிடும் முரட்டுத்தனமான முட்டாள் கூட்டம் இது எனப் புரிந்து, அவனின் நலனிற்காக படக்கூடாத துயரை எல்லாம் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

அதிலும், இவள் இங்கு வந்த ஒரு மாதத்திலே உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜெயசிம்மனின் தந்தை தவறவிட, அதற்கும் இவளின் ராசி தான் காரணம் என காணும் நேரமெல்லாம் அவளை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார் யசோதா.

அனைத்தையும் அசைபோட்டுக்கொண்டே மதிய உணவை சமைத்துக்கொண்டிருந்த கவிக்கு, திடீரென உடலில் ஏதோ மாற்றம் தென்பட, அவளைச் சுற்றி அனைத்தும் சுழல்வது போல் மாயை ஏற்பட, கண்ணைக் கசக்கி தெளிவடைய முயன்றவளுக்கு இருட்டிக்கொண்டு வந்தது.

பிடிமானத்திற்காக அருகில் இருந்த குடத்தைப் பற்றியவள், அப்படியே மயங்கிச் சரிய, அவளோடு சேர்த்து குடமும் கீழே விழுந்து பெருத்த ஒலி எழுப்பியது!!

அதில் யசோதா, “அடியே!! என்னத்தை கொட்டி வச்ச??” என வசைபாடிக்கொண்டே உள்ளே வர, அங்கே கவி விழுந்து கிடந்த கோலத்தைக்கண்டு பயந்து போய் மகனுக்கு அழைத்து விவரம் சொல்ல,

வீட்டின் அருகில் இருந்ததால், தெரிந்த மருத்துவர் ஒருவரை வரச்சொல்லிவிட்டு அவனும் வந்து சேர்ந்துவிட்டான்.

சற்று நேரத்திலே, மருத்துவரும் வந்து அவளை பரிசோதித்து, அவள் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்துவிட்டு, அவனை வாழ்த்திவிட்டு கிளம்பிவிட,

யசோதாவிற்குக் கூட இந்த செய்தியைக் கேட்டதும் கோபம் பின்னுக்குச் சென்றுவிட,

“பரவாயில்லையே!! கூடிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு வாரிசைக் கொண்டு வரப்போரா” என நினைத்து மகிழ,

ஜெயசிம்மன் தான் அந்த செய்தியைக் கேட்டதும் தனக்குள் மிகவும் இறுகிப்போனான்.

அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என கணிக்க முடியாத யசோதாவும், கவியை எழுப்பி விஷயத்தை சிரிப்புடன் பகிர,

கவிக்கு சட்டென ஒன்றும் புரியவில்லை!!!

இவனுடன் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா?? அதில் ஒரு குழந்தையும் வந்து இவனோடு கஷ்டப்படவேண்டுமா?? என்று தான் பெண்ணவளுக்கு முதலில் தோன்ற, அப்படி நினைத்ததற்காக தன்னையே கடிந்துகொண்டவள், தன்னை நம்பி இந்த உலகிற்கு வரவிருக்கும் அந்த உயிரை உண்மையான மகிழ்வுடன் வரவேற்க வேண்டும் என நினைத்து நிமிர,

தன் கால்களால் அவள் அடிவயிற்றில் ஓங்கி ஒரு மிதி வைத்திருந்தான் ஜெயசிம்மன்.

வயிற்றில் ஏற்பட்ட சுளீரென்ற வலியில்,

“அம்மாஆஆ!!” என பெண்ணவள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறித் துடிக்க,

இரக்கமற்ற ஈனப்பிறவியாய் அவள் துடிப்பை ஒரு வித நிம்மதியுடன் கண்டிருந்தவன்,

“எவனோட பிள்ளைக்கு என்னை அப்பா ஆக்கப்பார்க்குற?? கொன்றுவேன்!! ஜாக்கிரதை!!!” என அவனின் உதிரத்தில் உருவான குழந்தையை வேறொருவரின் குழந்தை என மனசாட்சியே இல்லாமல் பேச,

அதுவரை மருமகளுக்காக பாவப்பட்ட யசோதா கூட, “அப்படியா சங்கதி?? அதான பார்த்தேன்.. தாலி கட்டுனவன், கையையும் காலையும் வச்சிட்டு சும்மாவா இருப்பான்?? கருமம் எந்த சாக்கடையோட வாரிசையோ என் வீட்டு வாரிசுன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுடேனே!!” என தான் ஜெயசிம்மனின் தாய் என நிரூபித்தார்.

இருவரையும் வெறித்து நோக்கிய கவிக்கு, அவள் உடம்பில் நடக்கும் மாற்றம் புரிய, கட்டுப்படுத்த முடியா பெருங்கேவல் ஒன்று கிளம்பியது!!!

“இந்த மாதிரி மனுஷங்க மத்தியில பிறக்கவே வேணாம்னு, அதுக்குள்ள போயிட்டியா பாப்பா!!??” என அவள் கால்களுக்கு இடையில் செந்நிற ஆறாய் கரைந்து போகும் அவளின் உயிரை வலியுடன் பார்த்த கவி அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

அவளுக்கென உறவாய் அவளுள் உருவாகியிருந்த உயிரின் வரவை அறிந்து ஒரு நிமிடம் முழுதாய் மகிழ்வதற்குள்ளே, அனைத்தும் கனவாய் கலைந்து போனதில், ஒரு பெண்ணாய் எந்த அளவு வலியை அவள் அனுபவித்துக்கொண்டிருந்தாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று!!!

அந்த சம்பவம், அவள் செத்தாலும் மனதில் இருந்து மறையாத தழும்பாய் ஆழமாய் பதிந்துவிட்டது!!

சேதுராமனுக்கும் பொற்கொடிக்கும் தகவல் சொல்லப்பட, அவர்கள் கூட இந்த விஷயத்தில் பெற்ற பெண்ணை நம்பாமல் போனது தான் அவளுக்கு பெருத்த அடியாக அமைந்தது!!

“நீ இவ்வளவு கீழ்த்தரமா இறங்கியிருப்பன்னு நான் நினைச்சுப் பார்க்கலை அஞ்சலி!! அம்புட்டு அலையுதா உடம்பு உனக்கு??” என பெற்ற தாயே அவளை நம்பாமல் கேட்டதில் மொத்தமாய் உடைந்து விட்டவள், அதற்கு பின்னான நாட்களில், உயிருள்ள ஜடமாக மட்டுமே அங்கு வாழ்ந்தாள்.

காதல் என கடைசி வரை கரை தாண்டாமல், நட்பெனும் எல்லைக்கோட்டிலே இத்தனை காலமும் பழகிய ஒருத்தன் மீது கண்ணை மூடிக்கொண்டு பழி சுமத்தும் தன் உறவுகளைக் காண்கையில், வாழ்க்கையை வெறுத்துவிட்டாள் பெண்!!!

“ஐந்து அறிவு கொண்ட மிருகம் காட்டும் அன்பைக் கூட 

ஆறறிவு கொண்ட மனிதனிடம் எதிர்பார்க்ககூடாது!! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!