Skip to content
Post Views: 5,766
“வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு
மு.வ விளக்க உரை: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.”
ஒரு நொடியில் தன்னை சுற்றியிருக்கும் உலகம் அழகாக மாறிவிட்டது போன்ற தோற்றம் தான் தேவ ரஞ்சனாவிற்கு.
அதிரனின், “ மே ஐ பி யுவர் Giving side?”, இப்போதும் காதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
Advertisement
இரவு வேலையெல்லாம் முடித்து படுத்தவளின் எண்ணிற்கு அழைப்பு வர இந்த நேரத்தில் யார் என யோசித்த வண்ணம் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ..”
“நான் தான் ரஞ்சனா.”, என்ற குரலில் தேவாவின் பேச்சு தொண்டையோடு ஒட்டிக் கொண்டது.
Advertisement
“ஹேய் ஆர் யூ தேர்?”
Advertisement
“ஆங்.. யெஸ்.. சொல்லுங்க..”
“பேசப் பிடிக்காத என்னையே நிறைய பேச வைக்குற நீ..”
“…”
Advertisement
“பொண்ணுங்கன்னா வாய் ஓயாம பேசுவாங்கனு கேள்வி பட்டுருக்கேன். அப்படியில்லையா?”
“…”
“முதல் நாள் இன்டர்வியூவில் பார்த்த தேவ ரஞ்சனா. ஐ வாண்ட் தட் கேர்ள்!”
“அது..இப்டியெல்லாம் நான்..”
“நான் மட்டும் டெய்லி ஒரு பொண்ணுக்கு கால் பண்ணி இப்படி பேசிட்டு இருந்தேனா?”
“ஐயோ அப்படியில்ல..”
“பழகிக்கோ. அதான் பெட்டர்..”, என்றதில் முகத்தின் சிவப்பு இன்னுமாய் அதிகரித்தது. அவன் குரலில் இருந்த அந்த நெருக்கம் அவளை இன்னும் அதிகமாக பதட்டப்பட வைத்தது.
“சாப்டீங்களா?”
“ம்ம் இப்போ தான்.”
“தூங்கலையா?”
“ஏன் இப்படி மொக்கை போடுற தூங்க போனு சொல்றியா?”
“அப்படியெல்லாம் இல்லங்க..”
“வேற?”
“எப்படி நீங்க இவ்வளவு சாதாரணமா பேசுறீங்க? எனக்கு..கொஞ்சம் பயம்.. இல்ல பதட்டம்..”
“இரண்டுமே என்னைப் பார்த்து தான?”
“இல்ல.. அது..”
“தெரியும் முதல் தடவை நான் கோபப்பட்டு லேசா குரல் உயர்த்தி பேசினதில் இருந்தே என்னைப் பார்த்தா உனக்கு டென்ஷன் தான். கவனிச்சுருக்கேன்.”
“ம்ம் அப்படியெல்லாம் யாரும் கோபப்பட்டு பார்த்ததில்லையா அதான். மத்தபடி..”
“கோவத்தை குறைச்சுக்கணும்னு சொல்ற?”
“இல்ல இப்போ நான் பழகிட்டேன். அதெல்லாம் பிரச்சனை இல்ல. ஆனால்..”
“..”
“என்.. என்கிட்டேயும் இப்படி தான் கோபபடுவீங்களா?”
“உன்கிட்ட என்னால கோவிச்சுக்க முடியும்னு தோணலை. மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட எனக்கு எப்பவும் கோவம் வராது.
நாளைக்கு நீ என் பொண்டாட்டி ஆனப் பிறகும் கூட..”, என்றதில் முகம் பிரகாசித்து கிடந்தது தேவாவிற்கு.
“!!”
“என்ன ஓகே தான?”
“…”
“ரஞ்சனா..”
“ம்ம்?”
“தேவையில்லாத எதையும் யோசிக்காத. ஐ அம் யுவர்ஸ். யாரும் எதுவும் இதை மாத்த போறதில்ல சரியா?”
“தேங்க்ஸ் அதிரன்.”, என்றதில் அழகான புன்னகை ஆணவனிடத்தில்.
“நாட் பேட். குட் நைட். நாளைக்கு பார்க்கலாம்.”, என்றவனுக்கு பதில் கூறி அழைப்பைத் துண்டித்தவளுக்கு மனம் சொல்ல முடியா பரவசத்தில் இருந்தது.
ஒருவித அழகான காலம் இது அல்லவா. காதலின், பிடித்தத்தின் ஆரம்ப நிலை. பெண் பெருமளவில் தன்னை தெரிவிக்க விளையாத ஒரு நிலை.
ஆண், தான் கொடுக்கும் அன்பின் மூலமும் நம்பிக்கையின் மூலமும் அவளது சிறு கூட்டைத் தாண்டி அவளை வர வைக்க வேண்டிய நிலை.
பெண்ணுக்கு அதிகமாய் தேவைப்படும் உறுதிப்படுத்துதல். இந்த உறவும் நானும் எப்போதும் எந்த நிலையிலும் உனக்காக இருக்கிறோம் என்ற உறுதிப்படுத்துதலை கொடுக்க வேண்டிய நிலை.
பொதுவாக ஆண்கள் பெண்களின் பிரச்சனைகளையும் கவலைகளையும் உணர்வு பூர்வமாக கையாளாமல் லாஜிக்கல் முறையில் அதற்கு பதிலோ தீர்வோ கொடுக்க விளைவது தான் பெரும் பிரச்சனைகளை விதைக்கும்.
ஆனால் அதிரன் அந்த விதத்தில் தேவாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனாய் கையாளத் தொடங்கியிருந்தான்.
எதுக்கு இப்போ இப்படி பயப்படுற நான் என்ன பண்ணிட போறேன் உன்ன?
இது போன்ற கேள்விகள் கேட்காமல் எப்போதிருந்து உன் பயம் என்பது எனக்குப் புரிகிறது.
அதற்கு அவசியம் இல்லை நான் உன்னிடத்தில் அப்படியில்லை. எந்த நிலைமையிலும் இந்த திருமணம் நிச்சயமாய் நடக்கத் தான் போகிறது என்பதான உறுதிப் படுத்தல்கள் அவளறியாமலே தேவாவுக்கு பெரும் ஆறுதலைக் கொடுத்திருந்தது.
அந்த வாரம் இப்படியாய் கடந்திருக்க அதற்கு பின் அதிரன் தேவாவை அழைத்துப் பேசியிருக்கவில்லை.
அலுவலகத்தில் பார்த்து இரண்டு வார்த்தை சிறிதான புன்னகை இப்படிதான் அந்த வாரம் கடந்திருந்தது.
அன்று அலுவலகம் முடியும் நேரம் அதிரன் தேவாவின் அறை வாசலில் நின்று கதவை பாதி திறந்த வண்ணம் அவளை அழைக்க எழுந்தவள் அவனருகில் வந்தாள்.
“இதுக்கு அப்பறம் எதுவும் ப்ளான் இருக்கா உனக்கு?”
“இல்லை..”
“ஓகே டின்னர் போலாமா?”, கதவை சற்று தள்ளிய படி அவன் நின்ற தோரணையும் அவனது பார்வையும் அதுவாய் சம்மதமாய் தலையசைக்க வைத்திருந்தது.
“ஒரு டென் மினிட்ஸில் பார்க்கிங் வந்துடு. நானும் வந்துரேன்.”
“ம்ம் சரி.”, என்றவள் அவினாஷிற்கு அழைத்து வரத் தாதமாகும் என்று கூறிவிட்டு தனது கைப் பையோடு கீழே சென்றிருந்தாள்.
பார்க்கிங்கில் ஒன்றிரண்டு பேர் இருக்க தேவாவைக் கவனித்துக் கிளம்பவில்லையா என்று கேட்க என்ன சொல்வதென தெரியாமல் வாய்க்கு வந்ததைக் கூறிய படி மின் தூக்கியைத் தான் பார்த்திருந்தாள்.
சில நொடிகளில் அதிரன் வந்து விட அவனது விழிப் பார்வையின் அழைப்பை உணர்ந்து பேசிக் கொண்டிருந்தவரிடம் விடைப் பெற்று அவன் பின் சென்று காரில் அதிரனோடு ஏறிக் கொண்டாள்.
அவளைக் கவனித்திருந்த பெண் ஆச்சரியத்தில் விழி விரிக்க அது இருவரின் கண்களிலுமே பட்டது.
கார் ஏசியின் குளுமையும் அருகில் மனதை நிறைத்தவனுமாய் தேவாவிற்கு அந்த நொடி அத்தனை பிடித்தது.
“எதாவது பேசு ரஞ்சனா! ரொம்ப ஃபார்மலா இருக்கோம். அதனால தான் வெளிலே போக நினைச்சேன்.”
“அது ஒரு மாதிரி ரஃப் அண்ட் டஃப்பா இருந்தே பழகிட்டேன். இப்போ இந்த ஃபீல் எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு. அதனால இருக்குற ஹெசிடேஷன்னு நினைக்குறேன்.”, என்றவள் ஒரு வழியாய் நீளமாய் பேசியிருந்தாள்.
“ம்ம் எனக்கு எப்பவுமே நீ அம்மாவை தான் நியாபகப் படுத்துவ. அவங்க இப்படி தான். ரொம்ப தெளிவானங்க ரொம்ப மனோதிடம் இருக்குறவங்க.
அதே நேரம் அப்பா முன்னாடி அவங்க ஏதோ எனக்கு எதுவுமே தெரியாதுங்கிற குழந்தை மாதிரி நடந்துப்பாங்க..”
“..”
“ஏதோ ஒரு வகையில் நீயும் என்கிட்ட அப்படி தான் இருக்கனு எனக்கு தோணும். அதுவும் என் கண்ணைப் பார்த்தாலே ஒரு பதட்டம்.”, என்றவனின் முகத்தில் அழகான சிறு சிரிப்பு. அதை அப்படியே தன்னுள் பத்திரபடுத்திக் கொண்டாள் தேவா.
“ரொம்ப நாளா எதுவுமே என்னைப் பாதிக்காதுனு ஒரு முகமுடிக்குள்ளே இருந்து டயர்ட் ஆகிட்டேன்.
இவ்வளவு தான் நான் என் தெம்பெல்லாம் முடிஞ்சு போச்சுனு இருக்குற நேரத்தில் தான் நீங்க வந்துருக்கீங்க.
அதையே நான் கொஞ்சம் கொஞ்சமா ப்ராஸஸ் பண்ணிட்டு இருக்குறதால ரொம்ப பேச மாட்றேன்.”
“இனி வாழ்க்கை உன்னை ரொம்ப வீக் ஆக்குற நேரத்தில் எல்லாம் யோசிக்காம என்கிட்ட வந்துடு.”
“!!!”
“என்ன? சரியா?”
“எப்போ வேணாலுமா?”
“ம்ம்..”
“எந்த நேரமா இருந்தாலுமா?”
“யெஸ்..”
“இப்ப கூடவா?”, என்றதில் அவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவன் தனது இடக்கரத்தை அவளிடம் நீட்ட அதை இறுகப் பற்றிக் கொண்டாள் தேவா.
அந்த பற்றுதல் அவளுக்கு எத்தனை பெரிய விஷயம் என்பது அதன் அழுத்தத்திலேயே அதிரனுக்குப் புரிந்தது.
“தட்ஸ் ஓகே ரஞ்சனா எல்லாம் சரியாகும்.”
“நீங்க அதை சொல்றதே எல்லாத்தையும் சரி பண்ணிடுச்சுங்க.”, என்ற நேரம் உணவகம் வந்திருக்க காரை நிறுத்தி விட்டு இருவருமாய் உள்ளே சென்றனர்.
இருவருக்குமான உணவை ஆர்டர் செய்து விட்டு அமைதியாகவே நிமிடங்கள் கரைய அதிரனே பேச்சைத் தொடங்கினான்.
“என்னைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“எதிர்காலம் மொத்தமும் இருக்கே. கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்குறேன்.”
“ஆனால் எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும். சொல்லு..”
“!!”
“பிடிச்சது பிடிக்காதது நீ ஷேர் பண்ண நினைக்குறது..”
“அ..”
“வெயிட் என்ன சொல்றதா இருந்தாலும் என்னைப் பார்த்து சொல்லு..”, என்றவன் இருக்கையில் நன்றாக பின் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.
அதன் பின் அவளது தடுமாற்றத்தோடு கூடிய உரையாடல் நிமிடங்களைக் கடத்திக் கொண்டிருந்தது.
தேவா எதையோ பற்றி பேசிக் கொண்டிருக்க சட்டென சம்மந்தமே இன்றி அதிரன்,
“நீ ரொம்ப அழகாயிருக்க ரஞ்சனா..”, என்றதில் விழிகளை அகல விரித்திருந்தாள்.
“சந்தனமும் குங்குமும் இன்னும் அழகாக்கும் உன்னை..”, என்றதில் என்ன சொல்வதென தெரியாமல் சிவந்து போகும் முகத்தை மறைக்க முடியாமல் தவித்தாள்.
“நான் யாரையும் இந்தளவு கவனிச்சதில்ல. பட் நீ ஆபீஸ் வந்ததில் இருந்தே உன்னை அதிகமாவே கவனிச்சுருக்கேன்.
உன்னோட உருவமும் குணமும் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பொருத்தமா இருக்குறதா தோணிருக்கு.”
“என்னோட ஸ்டேடஸ் எப்பவும் உங்களுக்கு பெரிய விஷயமா தெரியலையா?”, அதைக் கேட்டவளின் முகத்திலும் குரலிலும் சிறு தயக்கம் கூட இல்லை.
இதுதான் என் பின்புலம். அதைப் பற்றி பேசுவதில் எனக்கொன்றும் குறைவில்லை என்பதான அவளின் குணம் இன்னுமாய் அதிரனை ஈர்த்திருந்தது.
“உண்மையை ஒத்துக்குறேன். அம்மா அளவுக்கு நான் பரந்த மனப்பான்மையெல்லாம் இருக்குறவன் இல்ல.
சோ முதல்ல அதுவும் நீ ஃபோனில் அம்மாகிட்ட பேசினதைக் கேட்டப்பறம் இதெல்லாம் ஒத்து வராதுனு தான் நினைச்சேன்.
பணமில்லாதவங்களை மதிக்க மாட்டேன்னு சொல்லல ஆனால் என்னோட மனைவிக்கு பணமும் ஒரு முக்கிய தகுதியா தான் இருக்கும்ங்கிறது என்னோட எண்ணம்.
ஆனால் உன்னைப் பத்தி தெரிஞ்சுகிட்ட அப்பறம் வாழ்க்கைக்கு இந்த க்வாலிட்டீஸ் எல்லாம் முக்கியமா இல்ல பணம் முக்கியமானு கேட்டால் 100% நீ தான் சரியான சாய்ஸ்னு முடிவு பண்ணிட்டேன்.”, என்றதில் தேவாவின் முகம் தெளிவான புன்னகையில் பிரகாசித்தது.
error: Content is protected !!