Skip to content
Post Views: 2,772
அன்பு – 30
பிரபஞ்சன் கவியிடம் பேசி இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது.
Advertisement
இந்த ஒரு வாரமும், கவியே இயல்பாய் அவனுடன் வந்து பேச முயல்வதே பிரபஞ்சனுக்கு பெரிய முன்னேற்றமாகத் தெரிய, எந்நேரமும் சிரிப்புடனே சுற்றிக் கொண்டிருந்தான்.
அதைக்கண்டு, மது கூட அவனை கேலி செய்ய, அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை.
Advertisement
Advertisement
அடுத்தவாரம் மலேசியாவில் அவனை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் தேவா அவர்களின் கான்செர்ட் நடக்கவிருக்க, நிச்சயம் அதில் பிரபஞ்சன் கலந்து கொண்டு பாடியே ஆகவேண்டும் என அவர் அன்புக்கட்டளை போட்டுவிட,
தனக்கு வாழ்க்கை கொடுத்தவரின் வார்த்தையை மீற பிரபஞ்சனுக்கு முடியவில்லை.
Advertisement
எனவே அவரிடம் வருவதாக ஒப்புக்கொண்டான்.
அந்த கான்செட்டிற்காக அவனோடு சேர்த்து மற்ற பாடகர்கள் அனைவரும் மூன்று நாட்கள் முன்பே மலேசியா கிளம்புவதாக இருக்க,
கடைசி நேரத்தில் ஆதினிக்கு காய்ச்சல் கண்டுவிட, பிரபஞ்சன் குழந்தையை விட்டு இம்மியும் நகரவில்லை.
தன்னுடைய பயண தேதியை மறுநாளுக்கு ஒத்தி வைத்தவன், தேவாவிற்கு அழைத்து விவரமும் சொல்லிவிட்டான்.
“பிரபா!! நான் அவளை பார்த்துக்க மாட்டேனா?? எதுக்கு இப்போ நீ கிளம்பலை.. ரொம்ப அவளை பேம்பர் பண்ணாத!! அப்பறம் அவ எல்லாத்துக்கும் உன்னை தான் தேடுவா!! அது உங்க ரெண்டு பேருக்குமே கஷ்டம்!!” என கவி கண்டிக்க,
“என்ன கஷ்டம்?? என் அம்முவை நான் பார்த்துக்காம வேற யார் பார்த்துப்பா??” என்ற பிரபா, குழந்தைக்கு கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக பருக வைத்துக் கொண்டிருந்தான்.
“சொன்னா கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கணும்!! என்னமோ பண்ணுங்க!!” என கவி கடுப்புடன் வெளியே சென்று விட, பிரபாவின் அதரங்கள் ரகசியமாய் புன்னகைத்துக்கொண்டது.
“ஓல்ட் கவி இஸ் பேக்!!!” என தனக்குள் கூறிக்கொண்டவனுக்கு, கவியின் உரிமையான கோபம் கூட தித்திப்பாய் உள்ளே இறங்கி இனித்தது.
அன்று முழுவதும் ஆதினியுடனே இருந்து, அவளைப் பார்த்துக்கொண்டவன், குழந்தைக்கு கொஞ்சமாக உடல் தேறவும் தான் அவளை விட்டு நகர்ந்தான்.
மறுநாள் மதியம் மூன்று மணிக்கு அவனுக்கு விமானம் பதிவு செய்திருக்க, காலை பத்து மணிக்கெல்லாம் வேறொரு வேலையாகக் கிளம்பியவன்,
“ஓகே கவி!! கிளம்புறேன்.. பேபி இப்போ கொஞ்சம் பெட்டர் தான்.. திரும்ப ஃபீவர் வந்தா டிரைவர் கூட ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடு!! மதுவையும் பார்த்துக்கோ.. நீயும் பத்திரமா இரு!! நான் போயிட்டு வரட்டா!!!???” என பிரபஞ்சன் கவியிடம் சொல்லிக்கொண்டு புறப்படத் தயாராக,
கவிக்கு இன்னதென சொல்ல முடியாத பாரம் வந்து நெஞ்சைப் பிசைந்தது.
இத்தனை நாளும் அருகிலே இருந்தவன், நான்கு நாட்கள் பயணமாக வெளிநாடு செல்வதாகக் கூட இருக்கலாம் என தன்னையே தேற்றிக் கொண்டவள்,
“ஓகே பிரபா!! பார்த்து போய்ட்டு வா!! ஜாக்கிரதை!!” என்று மென்புன்னகையுடனே அவனுக்கு விடை கொடுக்க,
“உன்னை விட்டுட்டு போறேன்.. ஒரு ஹக் கூட கொடுக்க மாட்டியா கவி நீ??” என்று அவன் குறும்பாகக் கேட்க,
முதலில் அதிர்ந்து, அவனின் குறும்பை உணர்ந்து முறைத்தவள்,
“சேட்டை கூடிப்போச்சு பிரபா உனக்கு!!! ஒழுங்கா கிளம்பு!!!” என அவன் தோளில் செல்லமாக அடிக்க,
அதில் முகமெல்லாம் புன்னகை பூக்க,
“சீக்கிரமே வந்துடுறேன் கவி!!!” என அவனின் கவியை மொத்தமாக தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு அவன் கிளம்பிச் சென்று விட,
அவன் சென்ற திசையையே பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டாள் கவி!!
“போதும் போதும்!! அவன் போய் ஆறு மாசம் ஆகுது!! உள்ள வா நீ..” என மது அவளைக் கண்டு கேலி செய்ய,
“அக்கா!!” என செல்லச் சிணுங்கலுடன் கவியும் உள்ளே வந்தாள்.
“என்ன ரொமான்ஸா??” என மது குறும்புடன் கண்ணடிக்க,
“அய்யோ அக்கா!! அதெல்லாம் ஒன்னும் இல்லை!!” என்ற கவிக்கு கூச்சத்தில் கழுத்தில் இருந்த பூனை முடிகள் கூட குத்திக்கொண்டு நின்றது.
“சரி சரி!! ரொம்ப நெளியாத!! இப்படியே பார்த்துட்டே இருக்காம, இரண்டுபேரும் கூடிய சீக்கிரமே குட் நியூஸ் சொன்னா சந்தோஷம் தான்..” என்ற மது,
“ஆமா பேபி எப்படி இருக்கா?? பீவர் இருக்கா??” என்று குழந்தையை விசாரிக்க,
“இப்போ பரவாயில்லை கா.. நைட் கொஞ்சம் விட்டு விட்டு வந்தது.. இப்போ டெம்பரேச்சர் நல்லாவே குறைஞ்சிடுச்சு!! தூங்குறா நல்லா”
“ஓகே ஓகே ரெஸ்ட் எடுக்கட்டும்!! சரி நீ வா நம்ம ஏதாவது விளையாடலாம்.. ரொம்ப போர் அடிக்குது!!” என்று மது அழைக்க,
பிரபஞ்சன் கிளம்பியதில் இருந்தே மனம் ஏனோ அலைக்கழிக்க, இப்படியாவது மனதை திசை திருப்பலாம் என்றெண்ணி, கவியும் மதுவுடன் சேர்ந்து கொண்டு கேரம் விளையாடத் துவங்கினாள்.
“ஹேய் கவி!! உன் கவனம் எங்க இருக்கு?? இங்க ஸ்ட்ரைட்டா வைட் இருக்கே.. அதை பாக்கெட் பண்றதை விட்டுட்டு வேற எங்கேயோ அடிச்சிட்டு இருக்க??” என்று மது உலுக்க,
“என்னன்னே தெரியலை அக்கா.. ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு!!!” என சோர்வாக மொழிந்தாள் கவி.
“இன்னும் முழுசா ரெண்டு மணி நேரம் ஆகலை!! அதுக்குள்ளேயே பசலை நோய் வாட்டுதா உன்னை.. சரிதான்!!” என மது கிண்டல் செய்ய,
கவியின் முகம் இன்னும் தெளிவில்லாமல் தான் இருந்தது.
“சரி!! நீ போய் பேபியை பாரு!! சும்மா உட்கார்ந்தா எதையாவது யோசிச்சிட்டு தான் இருப்ப.. ” என்று அவளை திசை திருப்பினாள் மது.
அதன்பின்னான நேரங்கள் ஆதினியை கவனிப்பதில் கழிந்தாலும், கவிக்கு ஏதோ தவறாக நடக்கப்போவதைப் போல் மனம் அடித்துக்கொண்டே இருந்தது.
இரண்டு மணிக்கு மேல் ஆகியிருக்க, பிரபா விமான நிலையம் சென்றுவிட்டானா என்று அறிந்து, அவனுடன் பேசி விட்டாலாவது தன் மனம் சரியாகிவிடாதா எனும் நப்பாசையில் அவனுக்கு அழைக்க, அந்தோ பரிதாபம் அவன் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
“ப்ச்!! இவன் வேற நேரம் காலம் புரியாம போனை வேற ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான்!!” என நொந்து கொண்டவள்,
ஆதினிக்கு மருந்து கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கவைத்துவிட்டு வெளியே வர,
“மணி மூணரை ஆகிடுச்சு!! இன்னும் சாப்பிடலையா நீ?? வா வந்து சாப்பிடு!!!” எனது மது அவளை இழுத்துக்கொண்டு போய் சாப்பாடு மேசையின் முன் அமர்த்த,
சரியாக அதே நேரம் மதுவின் கைபேசி அலறியது.
“இந்நேரத்துல யாரு??” என சிந்தித்துக்கொண்டே கைபேசியை எடுத்த மது,
“சொல்லு கவின்!!!” என்றாள்.
“….”
“ஆமா மூணு மணிக்கு தான் ஃப்ளைட்!!” என்று அவள் சற்று பதட்டத்துடன் பதில் சொல்லவும், கவிக்கு மனதில் உதறல் எடுத்தது.
“என்ன சொல்ற?? அவன் அப்போவே கிளம்பிட்டானே!!” என்று படபடப்பான மது, உடனடியாக தொலைக்காட்சியை இயக்க,
இங்கு கவிக்கு கலவரமானது!!
“என்னாச்சுக்கா??? அக்கா?? என்ன??” என்று அவளும் அதிகரித்த இதயத்துடிப்புடன் எழுந்து வர,
“சென்னையில் இருந்து நூற்றி ஐம்பத்தி இரண்டு பயணிகளுடன் மலேசியா சென்ற விமானம், கிளம்பிய சிறு நிமிடங்களிலே கோர விபத்தில் சிக்கியது!!! “
என்று தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியில், கவியின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டது!!!
“பிரபா!!!!” என அவளின் உடலில் உள்ள அத்தனை செல்களும் பரபரக்க, அதிகபட்ச அதிர்ச்சியை தாங்கமாட்டாமல் அவளின் மூளை சட்டென தன் செயல்திறனை நிறுத்திக்கொண்டது.
அங்கே செய்தியைக் கண்டு படபடத்த மது, பிரபாவின் எண்ணுக்கு முயற்சி செய்து, தோல்வி அடைந்தவள்,
“அய்யோ கடவுளே!!!” என அவனைப்பற்றி தகவல் கிடைக்குமா என தெரிந்தவர்கள் மூலம் முயன்று கொண்டிருக்க, அதில் கவியை கவனிக்கத் தவறிவிட்டாள்.
“பிரபஞ்சன்!!!” அந்த ஒருவனின் முகம் மட்டுமே கவியின் மனக்கண்ணில் மிளிர, அவளின் உலகம் மொத்தமாய் தான் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.
யார் யாருக்கோ அழைத்துப் பார்த்து சோர்ந்த மது, சற்று நேரம் சென்றே கவியை கவனிக்க,
பார்வை எங்கோ வெறிக்க, உயிருள்ள சிலையாய் கண்களில் ஜீவனில்லாமல் நின்றிருந்த கவியைக் கண்டு மதுவின் விழிகள் கசிந்தது.
“ஏன் தான் இந்தப் பசங்களை சோதிச்சிட்டே இருக்க???” என கடவுளின் மீது கோபம் கோபமாய் வந்தது மதுவிற்கு.
தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட மது, கவியை நெருங்கி அவள் தோளைத்தொட்டு அசைத்தாள்.
“கவி!! கவி !! இங்க பாரும்மா!!!” என அவளின் கன்னத்தைத் தட்ட,
ம்ஹூம்!! எந்த பயனும் இல்லை..
அதில் பயந்து போன மது, சிறிதாய் தண்ணீர் எடுத்து கவியின் முகத்தில் தெளித்து,
“கவி!! இங்க பாரு!!!” என பலமாய் அவள் தோளைப்பற்றி குலுக்க,
அதில் சட்டென நினைவுக்கு வந்த கவிக்கு ஒருநொடி என்ன நடந்ததென்றே விளங்கவில்லை.
அதற்குள்ளாகவே மீண்டும் தொலைக்காட்சியில் விமான விபத்து குறித்த செய்தி அடுத்தடுத்து ஒளிபரப்பாக,
கவிக்கு நிதர்சனம் உரைக்க,
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவளுக்கு, சற்று நேரத்திற்கு முன் புன்னகை முகத்துடன் அவளிடம் விடைபெற்ற பிரபாவின் பிம்பம் கண்முன் தோன்றி மறைய,
தொண்டைக்குள் இருந்து பெரும் கேவல் ஒன்று உருவாகியது!!!
“பிரபாஆஆஆ!!!” என பெருங்குரெலெடுத்து கத்தியவளுக்கு, நெஞ்சை அழுத்திய துக்கத்தில் இதயம் பட்டென வெடித்துவிடுவது போல் இருந்தது!!
‘ இதெல்லாம் வெறும் கனவு ‘ என யாராவது தன்னை எழுப்பிவிட மாட்டார்களா என அவளின் உள்ளம் கிடந்து தவிக்க,
‘ பிரபா!!!!’ என அவள் உயிரில் கலந்தவனை, அவளின் உடலில் உள்ள அணுக்கள் அத்தனையும் தேடித் தவித்தது!!
அருகில் இருந்த போது அவனை விட்டு விலகிச்செல்ல நினைத்தவளுக்கு, அவன் இல்லாத வெற்றிடம், அவள் வாழ்க்கையே சூன்யமாக மாற்றிவிட,
“பிரபா!!! பிளீஸ் வந்திருடா!!!” என கண்ணீருடன் தரையில் அடித்துக்கொண்டு கவி அழுது கரைய,
இவளின் சப்தத்தில் அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை கூட பயந்து எழுந்து வந்துவிட்டது.
“கவி!! கவி!! கன்ட்ரோல்!! பேபி உன்னைப்பார்த்து பயப்படுறா பாரு!!” என மது கவியை அடக்க முயல,
ம்ஹூம்!! பெண்ணவளின் உலகம் அந்த ஒருவனுடனே நின்றுவிட்டது!!!
சுற்றம் எதுவும் அவளின் கருத்தில் பதியவில்லை.
எண்ணமெல்லாம் அவனின் முகமே வியாபித்திருக்க,
“பிரபா!! பிரபா!! பிரபா!!!” என அவளின் மனம் அவனைத் தாண்டி சிந்திக்க மறுத்தது!!!
நேரம் செல்லச்செல்ல கவியின் அழுகை குறைந்தாலும், பிரபா என அவளின் அதரங்கள் மட்டும் அவனின் பெயரை உச்சரிப்பதை நிறுத்தவில்லை.
மது மற்றும் ஆதினி என்னென்ன முயன்றும் அவர்களின் முகங்களைக் கூட பார்க்க மறுத்த கவியின் நடவடிக்கைகள், மதுவிற்கு கிலியூட்ட,
உடனடியாக கவினிற்கு அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னாள்.
“இவ நார்மலா இல்லை டா கவின்… எனக்கு இவளைப் பார்க்கவே பயமா இருக்கு.. சீக்கிரம் வா” என அவனைத் துரிதப்படுத்த,
சரியாக அதே நேரம்,
“கவி!!!!!” என உயிரை உருக்கும் குரல் வாசலில் கேட்டது.
அத்தனை நேரம் மனநிலை பிழன்றது போல் பித்துப்பிடித்த நிலையில் இருந்த கவிக்கு, அந்தக்குரல் செவிக்குள் நுழைந்து மூளையை அடையவே சில நொடிகள் எடுத்துக்கொண்டது.
குரலுக்கு சொந்தக்காரனை மூளை கண்டுகொண்டதும், சட்டென அவளின் செல்கள் அனைத்தும் பரபரப்பாக,
“பிரபா!!!!” என பட்டென பார்வையை குரல் வந்த திசைக்கு அவள் திருப்ப,
அங்கே அவளை ஏமாற்றாமல், கலங்கிய கண்களும் உதட்டினில் சிரிப்புமாக அவளை எதிர்கொண்டான் அவளின் பிரபஞ்சன்.
“ஹேய் பிரபா!!!” என ஆனந்த அதிர்ச்சியில் கண்களை விரித்த மது,
“உனக்கு ஒன்னும் இல்லை தான?? ரொம்ப பயந்துட்டேன் டா!!” என அவனிடம் விரைய,
என்ன நடக்கிறதென்றே புரியாத குழப்பத்தில் இருந்த குழந்தையும், கவியின் செயலில் மிரண்டு போய் இருந்ததால், பிரபாவைக் கண்டதும்,
“பிரபு!!!” என அவனைப் போய் அணைத்துக்கொண்டது.
ஆதினியை ஆதரவாய் அணைத்துக்கொண்டு, மதுவின் கேள்விக்கு பதில் சொன்னாலும், அவனின் பார்வை இன்னும் கவியிடம் தான்.
நிச்சயம் அந்த செய்தியைக் கேட்டு, அவள் எந்த அளவிற்கு உடைந்து போயிருக்கக் கூடும் என்று அறிந்தே தான் அவசர அவசரமாக, மின்தூக்கிக்கு கூட காத்திராமல் இத்தனை மாடியும் படியிலே ஏறி ஓடி வந்திருந்தான்.
அவளை அணைத்து, “எனக்கு ஒன்னும் இல்லை கவி!! நான் நல்லா இருக்கேன்!!!” என்று சொல்ல அவன் மனம் பரபரத்தாலும், பயத்தில் தன்னுடன் ஒண்டிக்கொண்ட குழந்தையை ஆதரவாய் தட்டிக்கொடுத்து அவளை நிதானத்திற்கு கொண்டுவர முயன்றான் அவன்.
அவன் வந்தது முதல், எங்கே கண்ணைச் சிமிட்டினால் அவன் உருவம் காற்றில் கலைந்துவிடுமோ என பயந்து, உயிரைக் கண்ணில் தேக்கி வைத்து அவனையே பார்த்தபடி கவி அதே இடத்தில் இன்னும் அமர்ந்து கிடக்க,
கவியின் மனநிலை புரிந்த மதுவும், ஆதினியை தன்னுடன் அழைத்துக்கொண்டவள்,
“கவியை பாரு பிரபா!! ரொம்ப துடிச்சிட்டா!!” என்று அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு, கவினுக்கு அழைத்து பிரபாவின் நலனை தெரிவித்துக்கொண்டே குழந்தையுடன் கீழே கார்டனுக்குச் சென்றுவிட்டாள்.
இங்கே மது கிளம்பியதும், வேகமாக கவியை நெருங்கிய பிரபஞ்சன், அவளுக்கு இணையாய் கீழே மண்டியிட்டு அமர்ந்து கவியின் கரங்களைப் பற்ற,
அவன் தொடுகையில், அத்தனை நேரம் அவள் கொண்ட பயமும், கவலையும் பனியாய் உருக,
“பிரபா!!” என பட்டென அவனைத் தாவி அனைத்துக்கொண்ட கவி, தன் மன பாரங்கள் அனைத்தும் தீருமட்டும் அழுது கரைந்தாள்.
“ஒன்னும் இல்லை!! ஈசி!! ஈசி!!”
“நான் உன் கூடவே தான் இருக்கேன் கவி!!”
“எனக்கு ஒன்னும் இல்லை!!” என மெதுவாய் அவள் முதுகை நீவிட்டுக்கொண்டே அவன் தன் இருப்பை அவள் மனதில் பதிய வைக்க முயன்றான்.
பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கவியின் அழுகை குறையாமல் போக,
“கவி!!! இங்க பாரு!! நான் நல்லா இருக்கேன்.. அந்த பிளைட்ல நான் போகவே இல்லை.. மிஸ் பண்ணிட்டேன்.. “
“உன் பிரபாக்கு ஒன்னும் இல்லை!! உன்கிட்டேயே வந்துட்டேன் கவி!!” என அழுத்திச் சொல்ல,
இன்னமும் அவனின் இருப்பை நம்பமாட்டாமல், அவனின் கண்கள், கைகள் என ஒவ்வொன்றாய் தொட்டுப்பார்த்து அவள் உறுதிப்படுத்திக்கொள்ள முயல,
கவி படும் பாட்டை காணச் சகியாமல்,
“கவி மா!! நான் நல்லா இருக்கேன்!! இங்க பாரு!!” என அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான் பிரபா.
அதில் தான் லேசாய் சுயம் பெற்றவள்,
தன் முகத்தில் வெகு அருகில் இருந்த பிரபாவின் முகத்தை மீண்டும் மனதினுள் நிறைந்தவள்,
“பயந்துட்டேன் பிரபா!!!” என பரிதவித்த குரலில் கூறியவள், மீண்டும் அவன் மார்பிலே தஞ்சம் புக,
தன் அணைப்பை மேலும் இறுக்கிய பிரபா,
“உன்னை விட்டு இனி எங்கேயும் போக மாட்டேன் கவி!! நீயே போக சொன்னாலும்!!!” என உறுதி கொடுக்க,
“நான் இனி போக சொல்லவே மாட்டேன்!!” என பட்டென வந்தது பாவையின் பதில்!!!
அதில் பிரபஞ்சனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு தோன்ற,
“அப்போ சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக்கலாமா???” என நெஞ்சம் நிறைந்த ஆசையுடன் அவன் கேட்க,
பட்டென சம்மதம் சொல்லிவிட கூச்சம் தடுத்தாலும், அவனை விட்டு இனி பிரிவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது, என அனுபவப்பூர்வமாக இந்த சற்று நேரத்தில் உணர்ந்து கொண்டவள், தன் சம்மதத்தை வாய் வார்த்தையாக சொல்லாமல், தன் அணைப்பின் மூலம் அவனுக்கு வெளிப்படுத்தினாள்.
அது புரிந்தாலும், அவளின் வாய்மொழியாக அறிந்து கொள்ள வேண்டி,
“என்ன பதிலே காணோம்??” என்று மீண்டும் கேட்டான்.
“ப்ச்!! பிரபா!!!” என செல்லச் சிணுங்கலுடன் அவனுடன் ஒன்றியவள்,
“அம்முகிட்ட பேசணும்!!” என மறைமுகமாக தன் சம்மதத்தை வெளியிட,
அதில் பிரபஞ்சனின் மனம் சந்தோஷத்தில் விம்மித் துடித்தது!!
எத்தனை வருட தவம்!!!
அந்த தவத்திற்கு கிடைத்த வரமாய் இதோ அவனின் கனவு!! அவன் கைகளுக்குள்!!!
நெஞ்சம் நிறைந்த உவகையுடன் தன் கனவை தனக்குள் பத்திரமாய் பொத்தி வைத்துக்கொண்டான் அந்த காதல் கிறுக்கன்!!!
“கானல் நீராக போய்விடுமோ காதல் எனும் பயம்
அவனின் பல வருட காத்திருப்பை நிறைவுக்கு கொண்டு வந்தது”
error: Content is protected !!