Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….(எபிலாக்)

அன்பில் இணைந்த இதயங்கள் (எபிலாக்)

ஐந்து வருடங்கள் கழித்து,

சத்யாவின் வீட்டில்,

“ப்பா….இப்ப தான் அமைதியா இருக்கு….”என்றவாரு கலைந்து கிடந்த வீட்டை சுத்தம் செய்ய தொடங்கினாள் கயல்விழி.



Advertisement

“பிள்ளைகங்கனா அப்படி தான் இருக்கும் கயலம்மா….இந்தா இதை குடி அப்புறம் வேலை பாரு….”என்று மருமகளின் கைகளில் பழச்சாரை திணித்தார் அமிர்தா.

“ம்ம்…நீங்க என்னைக்கு உங்க பேர பிள்ளைங்கள விட்டு கொடுத்திருக்கீங்க…”என்றவள் அவர் தந்த பழச்சாரை குடிக்க அதன் குளுமை தொண்டையில் இறங்கவும் உடலிலும் குளுமை தொற்றிக் கொண்டது.

“ப்பா…இப்ப தான் கண்ணே தெரியுது….என்னா பாடு படுத்துங்க…”என்று தன் இரட்டை வாலுகளை நினைத்தவளுக்கு முகம் முழுவதும் மகிழ்ச்சி தான்.தன் போல அவளின் நியாபகமும் அவர்களை ஈன்ற நாளை நினைத்து பார்த்தது.

Advertisement

ஏழாம் மாதம் வளைகாப்பு முடிந்தவுடன் கயலை அவளின் வீட்டில் இருந்து இரு நாட்கள் கழித்து கூட்டி வந்துவிட்டான் சத்யா.கயலின் வயிறு பெரிதாக இருப்பதால் அவளுக்கு நடக்கவே கஷ்டமாகி போனது.அவளின் ஒவ்வொரு செயலிலும் சத்யா தான் அவளின் பின்னே நின்றான் யாரையும் விடவேயில்லை.

Advertisement

“ஏன்டா நாங்க எல்லாம் அவளை பார்த்துக்க மாட்டோமா….என்ன்ன நீ மட்டும் தான் நல்லா பார்த்துக்குற மாதிரி எங்களை கிட்டேயே நெருங்க விடமாட்டேங்குற….”என்று அமிர்தா கேட்க,

“அம்மு…மீ….என் பொண்டாட்டிக்கு நான் தான் செய்வேன்….உனக்கு பொறமை….”என்று கூற,

“சத்யா சும்மா இருங்க….எதுக்கு அத்தைக்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்கீங்க….”என்று கயல் கூறினாலும் அவன் காதில் வாங்கினால் தானே அமிர்தாவை வம்பு இழுத்து கொண்டு தான் இருப்பான்.ஒருகட்டத்தில் அமிர்தாவே,

Advertisement

“டேய் போதும்டா நீயே உன் பொண்டாட்டியை பார்த்துக்க….என்னை விடு….”என்றவர் கயலிடம்,

“ஏன் கயலம்மா….நாம தான சண்டை போட்டுக்கனும்….இங்க மட்டும் ஏன் எல்லாம் மாறி மாறி நடக்குது….”என்று அவர் நொந்து கொள்ளும் அவளவிற்கு அவரை படுத்தி தான் விட்டான்.இவ்வாறு கயல்விழிக்கு குறித்த நாட்களுக்கு இரு நாட்கள் முன்பே வலி எடுக்க சத்யா செய்த அலப்பறையில் இரு குடும்பமும் பயந்து தான் போயினர்.

“என் கயலம்மா வலி தாங்கமாட்டா…வலி தாங்கமாட்டா….”என்று கயலை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு இவன் அங்கும்மிங்கும் அலைய,குடும்பத்தாருக்குமே அந்த பயம் இருந்ததால் சற்று பயத்துடன் தான் இருந்தனர்.அடுத்த அரைமணிநேரத்தில் குழந்தைகளின் குரல் கேட்க குடும்பத்தாருக்கு அப்போது தான் மூச்சே வந்தது.நர்ஸ் பூந்துவளையில் குழந்தைகளை எடுத்துவந்து சத்யாவிடம் கொடுக்க,அதனை வாங்கியவனின் முகத்தில் எத்தனை எத்தனை பாவனைகள் கைகள் நடுங்க பெற்றுக் கொண்டான் தன் பிள்ளைகளை,

“சார் ஒரு பொண்ணு,ஒரு பையன் சார்…” என்று நர்ஸ் கூற அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க,சத்யாவோ குழந்தைகளின் நெற்றியில் முத்தம் வைத்துக் கொண்டே,

“என் கயலம்மா எப்படி இருக்கா….”என்றான் பரிதவிப்புடன்,

“நல்லா இருக்காங்க சார்….இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும் அவங்களை நார்மல் வார்டுக்கு மாத்த….”என்றுவிட்டு செல்ல,சத்யாவை குடும்பம் மொத்தமும் சூழ்ந்து கொண்டது.ஒரு வாரம் ஆனது கயல்விழி மருத்துவமனையில் இருந்து வீடு வருவதற்கு.

“நித்திலன்,நித்யா….”என்று குழந்தைகளுக்கு பெயிரட்டனர்.அதன் பின் ஒரு நாள் கயலின் வீட்டிற்கு அவனே அழைத்து சென்று விட,

“என்ன சத்து மாத்திரை…அதிசயமா இருக்கு…..”என்று கயல் கேட்க,

“ம்ம்ம்….நீ எங்க இருந்தாலும் நானும் அங்க இருப்பேன்….அதனால எனக்கு கவலையில்லை….”என்று கூறிவிட்டு செல்ல அவனை செல்லமாக முறைத்தாள்.குருவை கையில் பிடிக்க முடியவில்லை கயல் வீட்டிற்கு வந்தததில் இருந்து குழந்தைகளுடன் குழந்தை போல விளையாடினார்.இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அவளை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவான்்.“கயலம்மா….கயலம்மா….”என்ற அமிர்தாவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தாள் கயல்.

“ஆங் என்ன அத்தை….”

“நாளைக்கு கோவிலுக்கு போகனும்ல பூஜை சாமான் எல்லாம் வந்துடுச்சு எல்லாம் சரியா வந்திருக்கானு பாருடா….”

“ம்ம் சரி அத்தை….”என்றவளுக்கும் நாளை எப்போதடா வரும் என்ற நினைவு தான் நாளை அவர்களின் ஆறாவது திருமண நாள் அதை முன்னிட்டு அனைவரும் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அமிர்தா கூறியபடி அனைத்தையும் சரி பார்த்து வைத்தவள் தங்களின் அறைக்குள் நுழைந்து கணவனுக்காக வைத்திருந்த பரிசை எடுத்து தனது பெட்டியில் பத்திரப்படுத்தினாள்.

மாலை நான்கு மணி போல குழந்தைகள் பள்ளி விட்டு வர வீடு திரும்பவும் கலைக்கட்டியது.லிங்கமும்,கலைவாணனும் தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது பள்ளி முடிந்து அழைத்து வருவது.

வீட்டின் உள்ளே நுழையும் போதே நித்திலன்,

“தாத்தா….நாளைக்கு கோவிலுக்கு போறோமா….”என்று கேட்க,

“ஆமாடா ராஜா….”என்று கூற,

“அச்சோ கோவில் ஒரே போர்…..போ தாத்தா…”என்றது நித்யா,

“சரி அப்ப எங்க போகலாம்னு சொல்லுங்க…அங்கேயே போகலாம்…”என்றார் கலை,கண்களை உருட்டி இரண்டும் ஏதோ யோசனை செய்ய அப்போது வாயிலில் புல்லட் சத்தம் கேட்க,

“ஐஐஐஐ அப்பா….”என்று இருண்டும் ஓடிவிட்டனர்.தன்னை நோக்கி வந்த இரண்டு வாண்டுகளையும் தூக்கிக் கொண்ட சத்யா,

“பட்டூஸ்…எப்போடா வந்தீங்க….”

“இப்ப தான் ப்பா….”என்று இரண்டும் கோரஸாக பாட அவர்களின் கன்னங்களில் முத்தம் கொடுத்தவன் குழந்தைகளை அழைத்து சென்று குளிக்க வைத்து அவர்களுக்கு வேறு ஆடை அணிவித்தவன் தானும் குளித்து வந்தான்.

வரவேற்பறையில் லிங்கமும்,கலையும் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருக்க,சமையல் அறை நுழைந்தவன்,

“அம்மு மீ….எங்க என் பொண்டாட்டி….”என்று கேட்க,அவரோ தனது சேலையை உதறிவிட்டு,

“இங்க இல்லப்பா….”என்று கூற,அவரை முறைத்தவன்,

“வரவர ரொம்ப ஓவரா போறீங்க  மீ நல்லா இல்லை…”என்று அவரை ஒரு சுற்றுவிட்டு கயலை தேடினான்.அவளோ பின்பக்க தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தாள்.

“ஓய் பொண்டாட்டி….”என்று அவளை பின்னிருந்து அணைக்க,அவனின் கைகளில் ஒரு அடி போட்டவள்,

“யோவ்….போலீஸ்….தள்ளு…உன் பிள்ளைங்க வந்தாங்க….அப்பா அம்மாவை கட்டிபுடிச்சாருனு வீடு முழுக்க டமாரம் அடிச்சிடுங்க….”என்று கூற,

“ஹா….ஹா….ஹா….சொல்லட்டுமே எனக்கும் நல்லது தான்…இங்க யாரும் வரமாட்டங்கல்ல….”என்று விஷமமாக கூற,

“உன்னை….”என்று அவனின் தோள்களில் அடிக்க,

“ப்பா….”என்ற குழந்தைகளின் சத்தம் கேட்கவும் சத்யா தானாக விலக,அவனின் செயல் கண்டு வாய் பொத்தி சிரித்தாள் கயல்விழி.

மறுநாள் காலை குலதெய்வம் கோவில் சென்று கும்பிட்டுவிட்டு திரும்பினர்.சத்யாவிற்கு வேலை இருப்பதாக கூறி அவன் சென்றுவிட்டான்.மாலை வீடு திரும்பும் போது வீட்டில் கயல் மற்றும் பிள்ளைகள் தவிர அனைவரும் இருக்க,

“அம்மு….எங்க கயலம்மா…”என்று கேட்க,

“தோப்பு வீட்ல இருக்காங்கடா….நீ வந்தா உன்னையும் வர சொன்னா….இந்தா பிள்ளைக்களுக்கு நொறுக்கு தீனி….”என்று முறுக்கு,சீடை ஒரு டப்பாவில் தர,சத்யாவும் குளித்து கிளம்பினான்.இது போல் அனைவரும் செல்லவது வழக்கம் தான் அதிலும் குழந்தைகளின் விடுமுறை நாள் என்றால் அங்கு தான் அனைவரும் இருப்பர்.அவன் தோப்பின் உள்ளே நுழையும் போதே இருட்ட தொடங்கியிருந்தது.சிலுசிலுவென தென்னை வெப்ப மரத்தின் காற்று முகத்தை வருடி அதன் குளுமையை பரப்பபியது.

மரங்களின் நடுவே சிறியதாக ஒரு ஓட்டு வீடு அதன் பின்னே இன்னொரு வீடும் இருந்தது.அவர்களின் வீடு நான்கு அறைகள் கொண்டது.வீட்டின் உள்ளே நுழைய குளியல் அறையில் சத்தம் கேட்டது.

“டேய் சோப்பை வச்சிக்கிட்டு விளையாடத…”

“நிது….குளிரும் டிரஸை போடு….”என்று கயல் சத்தம் போட்டுக் கொண்டிருக்க,

“என்ன என்ன நடக்குது இங்க….ம்ம்….”என்றபடி வந்தவன் துண்டுடன் நின்ற மகளை தூக்கி உச்சி முகர்ந்து அவளுக்கு ஆடை அணிவிக்க,

“வந்துட்டீங்களா….சத்தமே இல்லை….”என்று புல்லட்ட சத்தம் கேட்கவில்லை என்று கேட்க,

“நான் கார்ல வந்தேன்….”என்றான்.

“ம்ம்ம்….சரி இவனை பிடிங்க…நான் குளிச்சிட்டு வரேன்….”

“கண்ணம்மா எங்க….”

“அவங்க இப்ப தான் போனாங்க…ஏன்…”என்று கேட்க,கண்ணம்மா அவரின் கணவன் மாணிக்கம் தான் இந்த தோப்பிற்கு காவலிற்கு இருக்கும் தம்பதியர்.அவரிகளுக்கான வீடு சற்று உள்ளே உள்ளது.

“சும்மா தான் கேட்டேன்…”என்றவன் பையனை வாங்கி அவனுக்கும் ஆடை அணிவிக்க,கயல் குளிக்க சென்றாள்.அவள் குளித்து வரும் போது வரவேற்பறையில் குழந்தைகளின் சத்தம் கேட்டது.சத்யா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க,

“ப்பா…நாங்க இன்னைக்கு மண்ணுல விளையாண்டோம்….அப்புறம் பின்னாடி ஊஞ்சல் கட்டி விளையாண்டோம்….”என்று நித்திலன் கூற,நித்யாவும் பின்பாட்டு பாடியது.

“ம்ம்…போதும் போதும் கதை பேசினது சாப்பிட்டு தூங்க போங்க….”என்று கயல் வந்து அமர,சத்யா மனைவியை பார்த்து புருவம் உயர்த்தினான்.அவனுக்கும் புரிந்தது தான் காலையில் இருந்து தன்னிடம் ஏதோ தனியாக பேச விரும்புகிறாள் என்று அதனால் தான் அவளை தன் பின்னே அலையவிட்டான்.இப்போதும் அவளை சீண்டும் பொருட்டு,

“ஏன் இப்பவே தூங்கனும் நீங்க விளையாடுங்க குட்டீஸ்….உனக்கு தூக்கம் வந்தா தூங்கு கயலம்மா…நான் பார்த்துக்குறேன்….”என்று கூற அவனை முறைத்த கயல் கோபமாக எழுந்து வெளியில் சென்றுவிட்டாள்.

“அச்சோ கோச்சிக்கிட்டாளே….ரொம்ப பண்ணிட்டோமோ….”என்று நினைத்தவன் குழந்தைகளுக்கு கதை கூறி அவர்களை தூங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைய அங்கு கயல் இல்லை.ஆனால் கட்டிலில் ஒரு கிப்ட் இருந்தது.

“ஓஓஓ….இதை கொடுக்க தான் மேடம் என் பின்னாடி அலைசாங்களா….”என்றுவிட்டு அதை பிரித்து பார்க்க,அதில் அவர்களின் திருமணம் முதல் குழந்தைகள்  பிறந்து இப்போது வரை புகைப்படங்கள் அணிவகுத்து இருந்தன.அனைத்தையும் பார்த்தவனுக்கு முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.அந்த ஆல்பத்தின் முடிவில் இது முடிவல்ல தொடக்கம் நமது வாழ்வின் அழியா பக்கங்கள் என்று எழுதியிருக்க,அதனை எடுத்துக் கொண்டு கயலை தேடினான்.அவளோ வெளியில் இருந்த திண்ணையில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி இருந்தாள்.

“ஓய்….”என்று அவன் அழைக்க திரும்பியவள்,புன்னகை முகமாக,

“திருமணநாள் வாழ்த்துக்கள் சத்து மாத்திரை….”என்று கூற,அவளை அணைத்துக் கொண்டவன்,

“ம்ம்ம்…”

“என்னாச்சு…உனக்கு என்னோட கிப்ட் பிடிக்கலையா…”என்று கேட்க,

“நீ எப்ப பார்த்த…என்னோட நோட் புக்கை…”என்று சரியாக கணித்து கேட்க,அவனின் கன்னத்தில் அதரத்தை பதித்து விலகியவள்,

“ம்ம்….பார்த்தேன்…விடேன்…பிடிச்சிருக்கா…”என்று மெல்லிய குரலில் கேட்க,

“ம்ம்ம்…. ஐ லவ் யூ….கயலம்மா…”என்று கரகரப்பாக கூற,அவனின் கன்னங்களை தன் கரத்தால் ஏந்தியவள்,

“அப்படி என்னடா என்கிட்ட இருக்கு இவ்வளவு விரும்புற….உன்னோட இந்த அன்பு தான் என்னை உன்னோட பிணைச்சிருக்கு….நான் இந்த அன்புக்கு தகுதி….”என்றவளின் அதரங்களை தன் அதரத்தால் மூடி அவனது முறையில் தண்டனை கொடுத்தவன்,

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….இது மாதிரி பேசாதனு….தப்பு செய்யுறது இயல்பு தான்…அதுக்காக அதை பிடிச்சிக்கிட்டு இருக்காத கயலம்மா…இதனால உனக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் கஷ்டம்…”என்று அவளின் நெற்றி முட்டி கூறியவனை இன்னும் இன்னுமே பிடித்து போனது கயல்விழிக்கு.

“ஒரு வேளை நான் மாறாமலே இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப சத்யா…”என்று கேட்க,

“ம்ம்…..நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணியிருப்பேன்…கயலம்மா….எனக்கு நீ எப்பவும் ஸ்பெஷல் தான்….எப்பவும்….”என்று கண்களில் காதல் போங்க சத்யா கூற அவனை இறுக அணைத்து கொண்ட கயல்விழி தன் காதலை வார்த்தைகளில் கூறவில்லை அணைப்பில் உரைத்தாள்.அதை உணர்ந்த சத்யாவும் அவளை இறுக அணைத்து கொண்டான்.அன்பில் இணைந்த இதயங்கள் என்றும் பிரியாது பிரியவும் விடாது.

(சுபம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!