Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….4

அன்பில் இணைந்த இதயங்கள்….4

“என்ன கயலம்மா….எப்படி இருக்குறீங்க….????என்ற சத்யாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தாள் கயல்விழி.தனது அழுத்தமான காலடிகளுடன் கயல்விழியை நெருங்கினான் சத்யா.

கயல்விழிக்கு விழியை சத்யாவிடம் இருந்து எடுக்கவே முடியவில்லை.எத்தனை வருடங்கள் ஓடிவிட்டன இவனை கண்டு.அப்போதும் இதே நிமிர்வு தான் இப்போதும் அதே நிமிர்வுடன் கூடிய கர்வமும் கலந்திருப்பது அவனது முகத்தில் அதிகமாகவே தெரிந்தது.

“சத்…சத்யா….”என்று அவளின் உதடுகள் முணுமுணுக்க,



Advertisement

“அட…என் பேரு கூட உனக்கு நியாபகம் இருக்கே….”என்று கேட்டபடி அவளின் அருகே ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன் கண்கள் தன் எதிரே கை,கால்கள் கட்டப்பட்டு இருந்தவளையே இமைக்காமல் பார்த்தது.அந்த பார்வையில் தான் எத்தனை வலிமை கயல்விழியால் அவனின் பார்வையை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை.தன்போல் அவளின் தலை குனிந்துவிட்டது.

“என்ன கயலம்மா…..குனிஞ்சிட்டீங்க….உங்களை கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்த என்னை இப்படி ஏமாத்தலாமா….பாருங்க…பாருங்க….உங்களால ஏமாற்றப்பட்டவன் எப்படி இருக்கானு உங்களுக்கு தெரிய வேண்டாம் பாரு…”என்று நக்கலாக அவன் கேட்க,கயலுக்கு அப்படியே பூமிக்குள் புதைந்து போக மாட்டோமா என்று இருந்தது.நான் செய்த தவறுகள் அனைத்தும் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக தன்னை வருத்துகிறதே என்று நினைத்தவள் கண்ணீரில் கரைந்தாள்.

“பாருடீ….என்னை பாருடீ…”என்று சத்யா கத்த,அவனின் குரல் வேறுபாட்டில் கயலின் முகம் தன் போல் நிமிர்ந்தது.கயல்விழிக்கு சத்யாவின் ஒவ்வொரு அசைவும் அத்துபடி.அவனின் கோபம்,சந்தோஷம் அனைத்தையும் அவனுடன் இருந்து அனுபவித்தவள் ஆயிற்றே.

Advertisement

“என்னை பாருடீ….எங்கேயோ பார்த்துக்கிட்டு இருக்க…..”என்று அவளது முகத்தை மூர்க்கமாக பிடித்து தன்னை பார்க்க செய்தவன்,அவளது கன்னங்களை அழுந்த பற்றியவாரே,

Advertisement

“நான் பேசி முடிக்கிற வரைக்கும் என்னை மட்டும் தான் பார்க்கனும் புரியுதா….கண்ணு ஏதாவது அலைபாஞ்சுது….”என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்,

“கொன்னுடுவ….”என்று கயல் அதை முடித்து வைத்தாள்.அவளின் பதிலில் ஒரே ஒரு நொடி சத்யாவின் கண்கள் விரிந்து பின் மீண்டும் பழைய கோப நிலைக்கே திரும்பியது.

“பரவாயில்ல…என்னை பற்றி நியாபகம் இருக்கு போலிருக்கு…சரி அதை விடு…இப்ப யாரை ஏமாத்திக்கிட்டு இருக்க…ஐடி கம்பெனியில வேற வேலை,கை நிறைய சம்பளம்….கேட்கவே வேண்டாம்……எத்தனை அப்பாவி பசங்க உன் லிஸ்டுல இருக்காங்க….”என்று வார்த்தைகளால் சத்யா கயல்விழியை கூறுபோட கயல்விழிக்கு அழுகை பீறிட்டு  வந்தது.அவளது அழுகையை கண்டவன் உதடுகள் எள்ளலாக வளைந்தது.

Advertisement

“அச்சோ கயலம்மா அழறாங்களே….அவங்களுக்கு அழ வைக்க தான தெரியும்….இப்படி அழ எல்லாம் தெரியாதே….”என்று சத்யா மேலும் கயலை எள்ளலாக கேட்க,கயல்விழி தன் இரு கைகளையும் கூப்பினாள்.

“இப்ப எதுக்கு இப்படி கும்பிடு போடுற….”

“….”கயலிடம் பதில்லை.

“சொல்லு….சொல்லுடீ…..”என்று கத்தியவன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.அவன் அறைந்ததில் தரையில் விழுந்துவிட்டாள்.உதடு கிழிந்து ரத்தம் வந்தது.ஆனால் கண்கள் சத்யாவை பார்த்தபடி தான் இருந்தது.அது சத்யாவிற்கு மேலும் கோபத்தை கூட்டியது,

“என்னடி பார்வை பலமா இருக்கு…ஓ….என்ன இவன் இத்தனை நாள் கழிச்சு வந்து வஞ்சம் தீர்க்குறானேனு யோசிக்கிறியா….ஆங்….ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் பாரு….நான் யாருனு இப்ப உனக்கு தெரியுமா….”என்றவன் தன் அடையால அட்டையை எடுத்து அவளிடம் காட்டினான்.

“சத்யா காவல் ஆய்வாளர் சென்னை…”என்ற பெயரை பார்த்தவுடன் கயலின் விழிகளில் கண்ணீர் ததும்பியது.அவளுக்கு தான் அவன் காவல் துறையில் இணைய எத்தனை கனவு கண்டான் என்று நன்கு தெரியுமே.

“என்னடா…..நான் ஏமாத்துனவன்…நல்ல நிலைக்கு வந்துட்டான்னு நினைக்கிறியா….உன்னை போல இருக்குற அழுக்கு ஆளுங்களை எல்லாம் பிடிக்கனும்ல அதான்….இப்ப சொல்லு எத்தனை அப்பாவிங்க வாழ்க்கையில் விளையாடிகிட்டு இருக்க சொல்லு….”என்று அந்த அறை அதிர கத்த,கயலிற்கு உடல் உதறியது.ஏற்கனவே உடம்பில் வலுவில்லை இதில் சத்யா அடித்ததில் மயக்கம் வருவது போல் இருந்தது.அதிலிருந்து தன்னை கொஞ்சம் மீட்க அவள் முயற்சி செய்து கொண்டிருந்த சமயம் சத்யாவின் இந்த கோபம் மேலும் உடலை வலுவிழக்க செய்தது.

கயலின் கண்கள் மெல்ல சொருகுவதைக் கண்ட சத்யா வேகமாக எழுந்து சென்றான்.அவன் திரும்பி வரும் போது அவனது கையில் ஒரு தண்ணீர் குடுவை இருந்தது.அதிலிருந்த தண்ணீரை கயலின் மீது வீசினான்.ஏற்கனவே சத்யாவின் அடியில் கன்னம் எரிய மயக்கதிற்கு சென்றவள் முகத்தில் குளிர்ந்த நீர் படவும் ஒன்றும் புரியவில்லை.அவளது கண்கள் மூடுவதும் திறப்பதுமாக இருந்தது.

யாரோ அவளின் கை,கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர்.அனைத்தையும் உணர்ந்தாலும் அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை அப்படியே கண்களை மூடிக் கொண்டு படுத்துவிட்டவளின் உதடுகள் மட்டும் சத்யா என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.இதை அனைத்தையும் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.

ஒருமணிநேரம் கழித்து கயல்விழிக்கு விழிப்பு வந்தது.கண்களை மெல்ல திறக்க அறை இருட்டாக இருந்தது.யாரும் இருப்பது போல் தெரியவில்லை.அவளின் கை,கால் கட்டுகள் மட்டும் அவிழ்க்கப்பட்டு இருந்தன.மெல்ல எழுந்து அமர்ந்தவள் கண்கள் சுற்றி அலைபாய்ந்தன ஆனால் இருட்டில் எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் இருகண்கள் பார்த்துக் கொண்டு இருந்தன அந்த இருட்டில்.கயல்விழி எழுந்து அந்த அறையை நோட்டம் விட்டவள் அமர்ந்த இடத்திலேயே தன் கால்களை குறுக்கி தலைபிடித்துக் கொண்டு வெடித்து அழுதாள்.அந்த அழுகையிலேயே அவளின் உயிர் போயிவிடாதா என்று கூட அவளுக்கு தோன்றியது.

“அய்யோ கடவுளே….நான் செஞ்ச பாவத்துக்கு என்னை கொன்னுடு….இப்படி வதைக்காத என்னால தாங்க முடியலை….அய்யோ…..அய்யோ…”என்று தன்னை தானே அடித்துக் கொண்டாள்.தகாத செயலை செய்துவிட்டு இன்று வருந்தி என்ன பயன்.தன்னை தானே கைகள் ஓய்ந்து விழும் வரை அடித்துக் கொண்டவள்,

“மன்னிச்சுடுனு கேட்க கூட எனக்கு அருகதை இல்லை…..நான் என்ன செய்வேன்….சத்யாஆஆஆஆஆ……நீ எங்க இருக்க என்னை கொன்னுடு….என்னை கொன்னுடு…..சத்யாஆஆஆஆஆ….”என்று கதறிக் கொண்டே மீண்டும் மயங்கி விழுந்தாள்.இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சத்யா என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.மனது கயல்விழிக்காக இரக்கப்படவில்லை ஆனால் வேதனை வேதனை மனது முழுவதும் வேதனை.மெல்ல அவளை நோக்கி தன் கால்களை போட்டவன்,அவளின் அருகே அமர்ந்து குடுவையில் இருந்த தண்ணீரை முன்பு போல் அல்லாமல் முகத்தில் மெல்ல தெளித்தான்.அதில் சுயத்திற்கு வந்தவள் கண்களை பிரித்து பார்க்க எதிரில் சத்யா அமர்ந்திருந்தான்.

அவனை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.அவனது முகத்திலிருந்து எதையும் படிக்க முடியவில்லை ஆனால் முன்பு இருந்த ரௌத்திரம் இல்லை சற்று மட்டுபட்டிருந்தது.அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க கயலிற்கு மனது சூறாவெளியில் சிக்கியதை போல் அல்லாட தொடங்கியது ஒருகட்டத்திற்கு மேல் அவனது முகத்தை பார்க்க முடியாமல்,தன் கைகளை எடுத்து கும்பிட்டு,

“சத்….சத்யா….”என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை என்பதை விட வார்த்தைகளே இல்லை என்று தான் கூற வேண்டும்.

“என்னடீ….புது நாடகமா….ஆனா சும்மா சொல்லக்கூடாது நல்லாவே நடிக்கிற…”என்று அவளின் ஒவ்வொரு அசைவையும் சத்யா குத்தலாக பேச,கயல்விழி உடையவெல்லாம் இல்லை மாறாக தனக்கு இது தேவைதான் தான் செய்த பாவத்திற்கு அனைத்தையும் தாங்கி தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாள் அதனால் தன்னை ஒரளவிற்கு தேற்றி,

“என்னை கொன்னுடு….எனக்கு மன்னிப்பை கேட்குற தகுதி கூட இல்லை…நான் செஞ்ச பாவத்துக்கு நீயே என்னை கொன்னுடு….”என்று ஈன சுரத்தில் அவள் கூற,

“ஆக உன்னோட அடுத்த பிளான் என்னை ஜெயிலுக்கு அனுப்புறது அதான…”என்று அதற்கும் எள்ளலாக கேட்க,கயல்விழி அதன் பிறகு வாயை திறக்கவில்லை.தான் என்ன கூறினாலும் அதற்கு அவன் எதிர்வாதம் தான் புரிவான் எனக்கு என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறானோ அவனே கொடுக்கட்டும் என்று அமைதியாகிவிட்டாள்.அங்கு சற்று நேரம் அமைதி மட்டுமே நிலவியது.

“ஏன் அப்படி பண்ண….”என்று சத்யா திடீர் என்று கேட்கவும்,கயல்விழி அவனது முகத்தை ஏறிட்டாள்.அதில் தான் எத்தனை வலி அதைக் கண்டவளுக்கு தன் உள்ளத்தை வாள் கொண்டு அறுப்பது போன்றுதொரு வலி உணர்வு.

“சொல்லு…ஏன் அப்படி பண்ண…என்னால தூங்கவே முடியலை….இத்தனை நாள் நீ என் கண்ணுல படலை அதனால தப்பிச்ச…இப்ப என் கண்ணுல பட்டு மீண்டும் என் மனசை குத்திக் கிழிக்க ஆரம்பிச்சிட்ட…என்னால முடியலை அதான் உன்னை தூக்குனேன்….எனக்கு பதில் தெரியனும்…ஏன் அப்படி செஞ்ச சொல்லு….”என்று சத்யாவின் குரல் உடைந்து வர,கயல் தன் கைகளால் வாயை பொத்தி அழுகை அடக்கினாள்.

“என்ன சொல்ல….இல்லை…என்ன சொல்ல முடியும் அவளால்….விளையாட்டிற்கு செய்தேன் என்று கூற முடியுமா…..அய்யோ…..என்ன செய்துவிட்டேன் நான்….இப்படி ஒருவனை நிலையிழக்க வைத்துவிட்டேனே….”என்று அவளது மனது கதறியது.அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் விழிகளும் கலங்கி இருந்தது.

“என்னடா இவ்வளவு நாள் கழிச்சு நியாயம் கேட்க வந்திருக்கான்னு யோசிக்கிறியா….சத்தியமா உன்னை பழி வாங்க எல்லாம் வரலை உன்னை பழி வாங்கி எனக்கு என்ன கிடைக்கபோகுது….என் அப்பா,அம்மா என்னை அப்படி வளர்க்கவும் இல்லை…..அப்புறம் எதுக்கு உன்னை கடத்தினேனு யோசிக்கிறியா….”என்று சத்யா தன்போல பேசிக் கொண்டே இருக்க கயல்விழியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது.

“எனக்கு பதில் தெரியனும் நீ ஏன் அப்படி பண்ண….காரணத்தை சொல்லு….”என்று சத்யா கேட்க,

“அச்சோ சத்யாஆஆஆ….”என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் கயல்.

“இப்ப ஏன் இவ்வளவு எமோஷனாகுற மாதிரி நடிக்கிற….இவ்வளவு நாள் எந்த குற்றவுணர்வு இல்லாம தான சுத்துன…இன்னைக்கு என்னை பார்த்த உடனே உனக்கு குற்றவுணர்வாகிடுச்சா….என்னால நம்ப முடியலைடீ….நீ விளையாடுறதுக்கு என் வாழ்க்கை தான் கிடைச்சுதா….ஆங்….ஆங்….”என்று கேட்டுக் கொண்டே வேகமாக எழுந்தவன் பக்கத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கண்களால் துலவ பக்கத்தில் ஒரு பெரிய கட்டை கிடக்க அதை தூக்கி அவளின் தலையில் போட போனான்.

“அய்யோ….சத்யா வேணாம்….”என்று கயல் கத்த

“ஏன்டீ பயமா இருக்கா….ஆங்….பயமா இருக்கா….”என்று அகங்காரமாக கேட்க,

“நீ தானடீ….என்னை கொன்னுடு கொன்னுடுனு சொன்ன…உன்னை கொன்னுடுறேன்….எனக்கும் நிம்மதி….உன்னால எனக்கு எல்லாம் போச்சு….என்னை மொத்தமா உடைச்சிட்டு….நீ எந்த குற்றவுணர்வும் இல்லாம சுத்துற….உன்னைஐஐஐஐ…..”என்று அவளின் தலையில் போட போக,அவளோ பயத்தில் தலை கவிழிந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“ச்சை….உன்னைக் தொட்டாக் கூட எனக்கு பாவம் ஒட்டிக்கும்டீ….நீ அழுக்கு….அழுக்கு….உடம்பு முழுசும் அழுக்கு….”என்ற சத்யா கத்திக் கொண்டே கட்டையை தூக்கி விசிறியடித்தான்.அது சுவற்றில் மோதி இரண்டாக உடைந்தது.

“அச்சோ….சத்யா….நான்….நான் உன்னை பார்க்க கேட்டேன் சத்யா….உங்க மாமா தான் உன்னை பார்க்க அனுமதிக்கல…..அந்த சமயத்துல எனக்குமே பயம் உங்க மாமா வேற மிரட்டுனாங்க அதனால பயந்து தான் உன்னை பார்க்கமா போயிட்டேன்….ஆனா மனசு தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்னு சொல்லிகிட்டே தான் இருந்துச்சு….அதுக்கு அப்புறம் உன்னை பார்க்க முடியலை….நான் உண்மை தான் சொல்லுறேன்….என்னை நம்பு சத்யா…”என்று கயல் அழுது கொண்டே கூற,சத்யா அவளை வெறித்து பார்த்தான்.

“இவ்வளவு நாள் உன்னோட நியாபகம் வந்தாலும் அதை எப்படியாவது துரத்திட்டு நிம்மதியா தான் இருந்தேன்டீ…என்னைக்கு உன்னை திரும்பி பார்த்தேனோ ஆத்திரம் ஆத்திரமா வருது…உன்னை கொன்னு புதைச்சா கூட தப்பில்லைனு தோணுது….”என்றவன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டான்.

“சத்யா…”

“ஏய்ய்ய்ய்…..போதும் என்னை அப்படிக் கூப்பிடாத….நீ என் பெயரை சொல்லிக் கூப்பிடறது எனக்கு என்னவோ….”என்று கூற முடியாமல் அவன் தடுமாற கயல்விழிக்கு இந்த பூமியில் நாம் ஏன் வாழ்கிறோம் என்ற உணர்வை உண்டாக்கியது.

“போ….”என்று சத்யா கூற,கயல்விழி விழியுர்த்தி பார்த்தாள்.

“என்ன பார்க்குற….உன்னை எதுவும் செய்யுற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை….போ…இங்கிருந்து போ….நான் மீண்டும் மிருகமா ஆகுறதுகுள்ள போயிடு…..ஆனா ஒண்ணை மட்டும் நியாபகம் வச்சுக்கோ….என்னை ஏமாத்தினது போல யாரை ஏமாத்துலாம்னு சுத்துறது எனக்கு தெரிய வந்துச்சு….”என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்தான்.அப்பொழுதும் கயல்விழி எழாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“எந்திரிச்சி போடீ….ஏன் என் முகத்தை பார்க்குற….நீ சொல்லுறதை கேட்டு ஏமாறுர சத்யா என்னைக்கோ செத்து போயிட்டான்….இல்லை இல்லை நீ அவனை உன் கையாலே கொன்னுட்ட….”என்றுவிட்டு அவளின் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.ஆனால் அவள் எழும்பும் எண்ணமே இல்லாமல் அவனையே பார்த்தபடி இருக்க சற்று என்று அவளை ஒற்றை கையால் பிடித்து எழுப்பியவன் தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியில் தள்ளினான்.

“போன்னு….சொன்னா போகமாட்ட….போ….”என்று கத்த,அவளோ அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.

“உனக்கு நெஞ்ச அழுத்தம் அதிகம்னு எனக்கு தெரியும்டீ….இவ்வளவு வாங்கியும் நீ அடங்கலை உன்னை……”என்று கூறிக் கொண்டே மீண்டும் கைகளை ஓங்கிக் கொண்டு வர கயல்விழி இரண்டடி பின் நகர்ந்தாள்.

“உன்னை கண்காணிச்சிட்டு தான் இருப்பேன் போ….”என்று கூற அவளோ அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.இனி கயலின் வாழ்வு அவள் கையில் இல்லை என்பதை சத்யா மெல்ல உணர்த்த தொடங்கியிருந்தான்.ஆனால் வன்முறையால் அல்ல அவனின் மென்மையான வழியில் அதுவே அவளை மேலும் நிலைகுலைய செய்திருந்தது.அவனை விட்டு தூர செல்ல நினைத்தாலும் விதி அவளை அவனிடமே கொண்டு நிறுத்தியது அனுவின் ரூபத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!