Skip to content
Post Views: 3,065
திமிர் 1 :
அந்த மண்டபம் நிறைய ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். மேடை வர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிருந்தாவனம் போல் ஜொலித்தது.
மேடையில் தங்க வேலைபாடுகளான இரண்டு இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. ஆங்காங்கே வீட்டின் பெரியவர்கள் பொறுப்பு மொத்தமும் எங்கள் தலையில் தான் உள்ளது என்பது போல் சுற்றி திரிந்தனர்.
மேடையில் ஐயர் ஏதோ கேட்க ” விசாலாட்சி இங்க வா ஐயர் என்ன கேக்குறாரோ எடுத்து கொடு ” என்று அந்த வீட்டின் தலைவரான கண்ணாயிரம் சொல்ல அவர் சொன்னதை சிரமேற்கொண்டு நடக்கும் மனைவியாக விசாலாட்சி சென்றார்.
Advertisement
கண்ணாயிரம் வந்தவர்களை வரவேற்று கொண்டிருக்க அவரின் அருகில் வந்த பத்மாவதி ” என்ன அண்ணே இங்க நடக்கிறது உங்களுக்கே நல்லா இருக்கா ” என்று அடுத்த பிரச்சனைக்கு வழி வகுப்பது போல் பேச ” என்னமா ஆச்சு என்ன பிரச்சனை ” என்றார்.
” பின்ன என் பொண்ணுக்கு செஞ்ச மாதிரி தானே செய்யுறேன் சொன்னாங்க இங்க வந்து பார்த்தா எல்லாம் ஆடம்பரமான செலவால இருக்கு ” என்று பெரும் குறைபாட்டோடு சொல்ல கண்ணாயிரம் யோசனைக்கு உள்ளானார்.
பத்மாவதி கண்ணாயிரத்தின் ஒரே தங்கச்சி அவரின் மூத்த மகள் செம்பாவை கண்ணாயிரத்தின் மூத்த மகன் செழியனுக்கு கொடுத்திருக்கிறார்.
Advertisement
இவர்களின் பேச்சுவார்த்தையை கேட்டுக்கொண்டிருந்த ஒரு சில்வண்டு அதனை மணமகள் அறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் போய் சொல்ல தயாராகி கொண்டிருந்த அப்பெண் தனது மொபைலை எடுத்து மறுபக்கம் கால் போக ” என்னடா உங்க வீட்டுல இருந்து செய்ய சொன்னாலும் செய்ய மாட்டீங்க எங்க வீட்டுல செய்யுறதுக்கும் குறை சொல்லுவீங்களோ இன்னைக்கு மட்டும் எதுவும் நடக்கட்டும் அப்புறம் தெரியும் நா யாருனு ” என்று கிலிகிலியென கிழித்துவிட்டு வைத்துவிட்டாள்.
Advertisement
மறுபக்கம் இருந்தவனோ ” ஐயோ என்ன பண்ணி தொலைசாங்கனு தெரியலையே அவள சரிகட்டி இங்க கொண்டுவரதுக்கே அந்த பாடுபட்டேன் ” என இன்று தங்களின் விசேஷம் என்பதையும் மறந்து தந்தையை தேடி ஓடினான்.
கண்ணாயிரமோ இதை யாரிடம் கேட்கலாம் என்பதை யோசிக்க பத்மாவதி தன் அண்ணனின் எண்ணம் புரிந்த வண்ணம் ” நேரடியா சமந்தகாரங்க கிட்ட கேளு அண்ணே நமக்கு என்ன பயமா ” என்று ஏற்றிவிட கண்ணாயிரம் அவர்களை நோக்கி செல்லும் முன் அவர் முன் ஆஜரானான் அவரது கடைகுட்டி சிங்கம் விஷ்ணு பிரபஞ்சன்.
” என்ன பிரபு என்ன விஷயம் ” என்று கேட்க நேரடியாக இதனை பேசினால் நீ அவர்கள் பக்கம் பேசுகிறாய் என்று தன் அத்தை இதனை திசை திருப்ப வாய்ப்பு உள்ளது என்பதை இத்தனை நாட்களில் புரிந்து தான் இருந்தான்.
Advertisement
” அப்பா நம்ம சங்கரன் மாமா ” என்று ஆரம்பிக்க அப்போது அவர்களின் தூரத்து சொந்தகாரர் வர ” என்ன சித்தப்பு சாப்பாடலாம் எப்படி ? ” என்று கேட்க அவரோ ” கண்ணாயிரம் அசத்திபுட்டான்யா மூக்கு மேல விரல வைக்கூற மாதிரில ஒன்னு ஒன்னும் நடக்குது… ” என்று புகழ உட்சி குளிர்ந்து போனார் கண்ணாயிரம்.
தந்தையின் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு மறைந்து அவர் முகம் மலர்வதை ஓரக்கண்ணால் பார்த்த விஷ்ணு மேலும் பேச்சை தொடர விரும்பி ” பின்ன எங்க வீட்டு விஷேசம்னா சும்மாவா ஊரே அசந்து நிக்க வேணாம் எங்க அப்பாவோட மரியாதையே அதுல தான் இருக்கு ” என்று தந்தையை மேலும் குளிர வைத்து பேசவிடாமல் செய்தான்.
பத்மாவதி இங்கு நடப்பதை பாத்து புகைந்தவண்ணம் இருக்க அங்கு ஐயரோ ” செய்ய வேண்டிய சடங்கை முடிச்சுட்டா நாம ஹோமத்தை ஆரம்பிச்சுரலாம் என்ன சொல்லுறீங்கோ ” என்று கேட்க ” இதோ நா போய் கூட்டிட்டு வரேன் சாமி ” என்று அங்கிருந்து நகர்ந்தான் கண்ணாயிரத்தின் இரண்டாவது மகன் அனல் தந்திரன் .
அனல் விஷயத்தை தன் அத்தை தேவகியிடம் சொல்ல ” இதோ நா போய் அழைச்சுட்டு வரேன்பா நீங்க போய் உட்காருங்க ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சொன்னபடி உடனே அழைத்துவர அழகு பதுமையன அன்ன நடையிட்டு நிறை மாத நிலவாய் அனலின் மனைவி அக்ஷிதா வர அவள் பின் புன்னகை பூவாய் கருவை இரு கைகளில் சுமப்பது போல் பாதுகாப்பாக தாங்கி பிடித்த வண்ணம் வந்தாள் தேஜஸ்ரி விஷ்ணுவின் இல்லாள்.
அனல் தன் மகவை சுமந்துள்ள மனைவியின் வயிற்றை கண்களால் வருட அக்ஷிதா கண்களில் ஒரு ஏமாற்றம் நொடி நேரத்தில் வந்து குடிக்கொண்டது.
அதற்கு நேர் மாறாக விஷ்ணு மனைவியை பார்த்து ஜொள்ளு விட அவளோ அப்படி ஒருவன் இல்லை என்பது போல் கண்டும் காணாது நடந்து சென்றாள்.
கண்ணாயிரம் – விசாலாட்சி தம்பதியருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் பின் ஒரே ஒரு பெண் பிள்ளை.
மூத்தவன் செழியன் 35 வயது ஆகிறது தனது சொந்த அத்தையின் மகள் நித்யாவை திருமணம் செய்து தற்போது அவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தையும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. தந்தைக்கு உதவியாக அவர்களின் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடையை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இரண்டாவது மகன் அனல் தந்திரன் 30 வயது ஆகிறது எம்பிபிஎஸ் முடித்து தற்போது பீடியாட்ரிக் மேற்படிப்பிற்கு சேர்ந்துள்ளான். டாக்டர் படிச்சா டாக்டர் பெண் தான் கல்யாணம் செய்ய வேண்டும் சில அதிபுத்திசாலிகள் சொல்ல அதன் பொருட்டு பெண் தேட அவன் நேரமோ என்னமோ வெறும் எம்பிபிஎஸ் மட்டும் முடித்த பையனை எந்த டாக்டர் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை. அதனால் அவன் வயதின் பொருட்டு பக்கத்து ஊரில் காலேஜ் ப்ரொபஷராக இருந்த அக்ஷிதாவை திருமணம் பேசி முடித்தனர்.
அனலிற்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை ஏதோ அவனுக்கு பெண் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியில்லாமல் இந்த பெண்ணை திருமணம் செய்கிறான் என்று அவனுடைய சொந்தங்கள் பேசுவது நிறைய மனகசப்பை தரும் என்று எண்ணி இதனை தவிர்க்க பார்க்க கண்ணாயிரமோ கவர்ன்மென்ட் காலேஜ் ப்ரொபசர் என்பதால் இந்த பெண்ணை தான் கட்ட வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
அவர்களின் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் விசாலாட்சி அனைவரின் ஜாதகத்தையும் தனக்குத் தெரிந்த ஜோசியரிடம் காண்பிக்க அவர் விஷ்ணு பிரபஞ்சன் ஜாதகத்தில் 27 வயதிற்குள் அவனுக்கு திருமணம் ஆகாவிடில் பிறகு 35 வயதுக்கு மேல் தான் திருமணம் ஆகும் என்று சொல்லிவிட பயந்த விசாலாட்சி கண்ணாயிரத்திடம் புலம்பி தள்ளி விட்டார்.
வீட்டிலும் இந்த விஷயத்தை சொல்ல செழியன் ” இதுக்கு எதுக்குமா பயப்படுறீங்க இப்போ என்ன சொல்லிட்டாங்க அவனுக்கு கல்யாணம் பண்ண தானே சொல்லி இருக்காங்க அதுக்கான ஏற்பாடு பாருங்க அவனுக்கு தான் 27 வயசாகிடுச்சே ” என்று சொல்ல விஷ்ணுவிற்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கிவிட்டது.
விஷ்ணுவிற்கு 27 வயது முடிய இன்னும் மூன்று மாதங்கலே இருக்கிறது என்பதால் விசாலாட்சி மிகவும் பயந்து போனார்.
எங்கு தேடியும் அவனுக்கான வரன் இவ்வளவு விரைவில் அமையாததால் சொந்தத்தில் பெண்ணெடுக்க முடிவு செய்து சொந்தத்துக்குள் பார்த்தனர்.
அக்ஷிதாவுடைய அம்மாவின் சொந்த தங்கை மகள் தான் தேஜஸ்ரீ. தேஜஸ்ரீ அப்போதுதான் எம்பிபிஎஸ் முடித்து தன்னுடைய மேற்படிப்பை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அக்ஷிதாவின் யோசனையால் தேஜாவை பெண்பார்க்கு செல்ல விஷ்ணுவிற்கு தேஜஸ்ரீயை மிகவும் பிடித்து விட தேஜாவிற்கும் விஷ்ணுவை பிடித்து விட அவர்களின் திருமணம் பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் வெகு விமர்சையாக அடுத்த இரண்டு மாதத்தில் நடந்தது.
அனல் அக்ஷிதா இருவரின் அன்பிற்கு சாட்சியாக ஒன்பது மாத மகவு அவள் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
தேஜா தற்போது ஏழாம் மாதத்தில் இருப்பதால் இருவருக்கும் ஒன்றாக வளைகாப்பு வைத்தனர்.
இந்த வீட்டின் கடைக்குட்டி சிங்கம் விஷ்ணு பிரபஞ்சன் அனைவருக்கும் செல்லம் தங்கை தேவிக்கு கூட விஷ்ணு தான் செல்ல அண்ணன் . விஷ்ணு மிகவும் கலகலப்பானவன் அதனால் அனைவர் மனதையும் நொடிப் பொழுதில் கொள்ளை கொள்பவன்.
இதோ இப்போது தேஜா கோவமாக இருப்பதற்கான காரணம் சற்று முன் கண்ணாயிரம் பத்மாவதி பேச்சை கேட்டு சண்டையிட சென்றதே! அந்த வீட்டின் முடிவுகளில் அதிகம் பங்கு வகிப்பவர்கள் கண்ணாயிரம் , பத்மாவதி, நித்யா இதனைத் தவிர்த்து பார்க்க போனால் அவ்வப்போது செழியன் இதுவே தேஜாவின் கோபத்திற்கு அதி முக்கிய காரணம்.
விஷ்ணு வீட்டின் முடிவுகளில் தலையிடுவதும் இல்லை தேஜாவை தலையிட விடுவதும் இல்லை அதுவே அனைத்து கோபமும் அவன் மீது திரும்பும்.
செழியன் பொருத்தவரை மிகவும் சுயநலவாதி அனல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் விஷ்ணுவோ எதையும் கண்டுகொள்ள மாட்டான் தேவி தனது தேவைக்காக மட்டும் பேசுபவள் இவ்வாறு அந்த வீட்டின் ஒவ்வொரு வாரிசும் ஒவ்வொரு மையபுள்ளியில் இருக்க வீட்டிற்கு வந்த மருமகள் அனைவருக்கும் தான் இவர்களின் குணம் சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்துவிட்டது.
இதில் முழுவதும் சாதகமாக அமைவது நித்யாவிற்கு என்றால் முழுவதும் பாதகமாக அமைவது நியாயத்தை பேசும் தேஜாவிற்கு.
அக்ஷிதா முடிந்த அளவு பொறுமையாக போய் விடுவதனால் பெரும்பாலான பிரச்சனையை அவள் தவிர்த்து விடுவாள்.
பொறுமைக்கும் எனக்கும் காது தூரம் என்ற தேஜா தான் அடிக்கடி சிக்கி விஷ்ணுவை சின்னாபின்னமாக்குவாள்.
அழகிய தீயே அன்புள்ள திமிரே….
error: Content is protected !!