Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 32

 

 

அத்தியாயம் 32:

 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

 

 

 

Advertisement

 

பெற்றவர்களின் உயிரற்ற உடலை கண்ட உமா அழக்கூடத் தோன்றாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தாள். தன் துக்கத்தைப் பகிர்ந்தகொள்ளக்கூட யாருமில்லாமல் சிலையாகச் சமைந்து நின்றாள்.

 

 

 

 

 

“யார்யார் வந்தார்கள், யார்யார் போனார்கள், யார்யார் என்ன செய்தார்கள், யார்யார் என்ன பேசினார்கள் என்று கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தாள்”.

 

 

 

 

 

 

 

தோழ்சாயத் தந்தையும் இல்லை, மடிசாய அன்னையும் இல்லை, பாசத்தையும் கண்டிப்பையும் காட்ட பெரியதந்தையும் இல்லை, கைபிடித்து நடக்க அண்ணனும் இல்லாமல் உலகையே வெறுத்தநிலையில் அமர்ந்திருந்தாள்.

 

 

 

 

 

 

மகாலட்சுமியே நீலிக்கண்ணீர் வடித்துத் தான் தான் இந்த உலகத்திலேயே உத்தமி எனநிரூபிக்கத் தனது நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

 

 

 

 

 

 

 

ராமனோ ஒரு படி மேலே சென்று உயிரற்ற தன் மாமனின் உடலை கட்டிக்கொண்டு அழுதான், அதைப் பார்த்த உறவினர்கள் நடிப்பை நம்பி அக்கா, தம்பி இருவருக்கும் ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தனர்.

 

 

 

 

 

சடங்கிற்கு வந்திருந்தவர்களில் ஒருவர், “அகாலமரணமடைந்த உடம்பு ரொம்ப நேரம் வச்சிருக்கிறது முடியாது, அதனால் எடுத்திடலாம்”.

 

 

 

 

 

 

அதற்கு மற்றொருவரோ, “அவங்க பையன் வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டு இருக்கானாமா பங்காளி, இன்னும் அரைமணி நேரம் பாக்கலாம் அதுக்குல்ல வரவில்லையினா எடுத்திடலாம்”.

 

 

 

 

 

 

 

அதற்கு மூன்றாவது நபரோ, “அதுக்குள்ள நாம செய்யவேண்டிய சாங்கியத்தைச் செஞ்சிடலாம் என்றவர் சபையினரை பார்த்து நீங்கள் எல்லாரும் என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க” என்றவரிடம்…

 

 

 

 

 

நான்காம் நபர், “நீங்க சொல்லறது மாதிரியே பண்ணீடலாம், சரி வாங்க எல்லாரும் ஆகவேண்டியதை காரியத்தைப் பார்க்கலாம்” எனக்கூறியவர் கையேடு அனைத்து வேலையையும் செய்ய ஆரம்பித்தவிட்டனர். அதன் பிறகு அனைத்து வேலைளும் மலமலவென நடைபெற்றது எந்தப் பிரச்சினையும் இல்லாமல்.

 

 

 

 

 

 

 

 

 

சாங்கியத்தை முடிந்து சிறுது நேரம் நித்தியனின் வரவுக்காகக் காத்திருந்தவர்கள் நேரமாவது உணர்ந்து அடுத்தடுத்த வேலையைச் செய்தனர்.

 

 

 

 

 

 

முதலாமவர் வந்தவர்களைப் பார்த்து, “பாருங்க விபத்தில் சொத்ததினால் அதிக நேரம் வச்சிருந்தா நாற்றமெடுத்து  போயிடும், இதுக்கு மேல உடம்பு தாங்காது… நல்லா வாழ்ந்தவர்கள் வேற, அதனால் நாம காணகாட்டுக்கு எடுத்துகிட்டுப் போய்டலாம் அதுக்குள்ள பையன்வந்தா அவனை வச்சே சம்பிரதாயத்தை முடிச்சிடலாம்; அப்படி வரலையினா உடம்பங்காளியை வச்சி பண்ணீடலாம்” என்றார்.

 

 

 

 

 

அதற்கு இரண்டாமவரோ, “நீ சொல்லறது சரிதான் ப்பா, அப்படிப் பண்ணீடலாம்” எனக்கூறினார்.

 

 

 

 

 

 

 

 

மூன்றாவது நபரோ, “நாமே எல்லாத்தையும் பேசிகிட்டு இருந்தா எப்படி? அந்த அம்மாவை கூப்பிட்டு ஒரு வார்த்தை கேட்கிறது தான் நல்லது, அப்பறமே அவங்க பையன் வந்து நம்மகிட்ட கேள்விகேட்டா கூடாது இல்லையா?” என்றவரிடம் ஒரு வயதான பெரியவரே, “நீ சொல்லறது சரிதான், அப்படியே பண்ணீடலாம் எனக்கூறியவர் கையேடு மகாலட்சுமி மற்றும் ராமனுடம் பேசிவிட்டு அடுத்தடுத்த காரியங்களைச் செய்ய ஆரம்பித்தனர்”.

 

 

 

 

 

 

 

 

 

அதுவரை அமைதியாக இருந்த உமா தன் பெற்றோர்களின் உடலை எடுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்தவள் அழுத அழுகையில் அங்கிருந்த அனைவருமே கலங்கிபோய்விட்டனர்.

 

 

 

 

 

 

அவளின் ஓலத்தைக் கோட்ட எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் கலங்கிபோய்வி்டுவான்.

 

 

 

 

 

 

 

உமாவின் அழுகையைத் தாங்கமுடியாத மருதாயிபாட்டி ஓடிவந்து அனைத்துக்கொண்டார், அவரிடமிருந்து திமிரியவள் அவர்களின் பின்னே ஓடிவளை நான்கைந்து பெண்கள் சேர்ந்து பிடித்துக்கொண்டனர், பெற்றோரின் இறப்பு, தனிமை, பயம் எல்லாம் சேர அதீத மனவுலைச்சலில் அந்த இடத்திலேயே மயக்கமடைந்துவிட்டாள்.

 

 

 

 

பெண்கள் அனைவரும் சேர்ந்து அவளைத் தூக்கிக்கொண்டு சென்று அவளின் அறையில் படுக்கவைத்தனர்.

 

 

 

 

 

 

 

அதன் மலமலவென அனைத்து நித்தியன் இல்லாமலேயே நடந்துமுடிந்தது.

 

 

 

 

 

 

 

 

இறுதி நேரத்தில் தன் மீது பாசம்கொண்ட மூன்று ஜீவன்களைக் கண்களால்கூடக் காணமுடியாத நிலையை நினைத்து மூவரின் மாலையிட்டு படத்தின் முன்நின்று கதறி அழுதுகொண்டிருந்தான், தன்னால் வளத்தவர் மற்றும் பெற்றவருக்கு ஒரு மகன் செய்யவேண்டிய எந்தச் சடங்கையையும் செய்ய இயலாத நிலை நினைத்து அறவே வெறுத்தான் நித்தியன்.

 

 

 

 

 

 

 

அதைவிட உமாவை பார்த்தவனின் மனதோ இரத்தக்கண்ணீர் வடித்தது… யாரும் அனாதை போல் கட்டிலில் துவண்டு போய் அமர்ந்திருந்தாள் பார்க்கபார்க்க மனதளவில் மறித்துத் தான் போன்.

 

 

 

 

 

 

 

அதன் பின் அடுத்த வந்த ஒரு மாதமும் அழுகையினுடனே செல்ல, மருதாயிபாட்டி மற்றும் நித்தியனின் ஆறுதல் வார்த்தைகளில் சற்று தெளிந்தவள் உமா.

 

 

 

 

 

ஒரு நாள் நித்தியன் உமாவிடம் சென்று, “பாப்பா எனக்குப் பரீட்சை ஆரம்பிக்குது, இந்த வாரம் கிளம்பினாதான் அங்கபோய் படிக்க நேரம் கிடைக்கும், சீக்கிரமா பரீட்சை முடித்துவிட்டு நான் இங்கேயே வந்திடறேன்”.

 

 

 

 

 

 

 

 

உமா, “எனக்குத் துணையாக மருதாயிபாட்டி இருக்காங்க அண்ணா, என்னைய பற்றி நீங்கள் கவலை படாம நல்லபடியா படிப்பை முடித்துவிட்டு வாங்க, எந்தக் காரணத்தைக் கொண்டு நீங்க படிப்பை பாதியில் விட்டுவிட்டு இங்க வரக்கூடாது, புரியுதா?” என்றவளிடம்…

 

 

 

 

 

“அதை முடிக்க ஐந்து வருடம் ஆகும் பாப்பா, அதுவரை நீ தனியா இருந்துப்பியா?” என்ற தமையனிடம் உமா, “நான் இருந்துப்பேன் அண்ணா… நீங்க படிப்பை முடித்து இங்கவரும் போது தங்கப்பதக்கத்தோடு தான் வரனும்”.

 

 

 

 

 

 

 

“உனக்கு இது தான் ஆசையின் இந்த அண்ணா எதையும் செய்வேண்டா பாப்பா”.

 

 

 

 

 

 

“நீ எனக்காக என்ன வேணும்னாலும் செய்வனு தெரியும் அண்ணா… எனக்கு நீ இந்த வரும் போது பெரியப்பா, அம்மா, அப்பா ஆசைபட்டமாதிரியே மாதிரி படிச்சி முடிச்சி நம்ப நிறுவனத்தின் அத்தனை பொறுப்பையும் எடுத்துக்கனும்னுதான் ஆசை அண்ணா, அதனால் வேற எதையும் மனதில் வச்சி குழப்பிக்காம நல்லபடியா படிப்பை முடித்து இந்தியா வாண்ணா, அந்த நாளுக்காக நான் காத்துகிட்டு இருப்பேன்… சரிவா உனக்குத் தேவையான எல்லாதையும் பேக் பண்ணலாம்” எனக்கூறி அவனைச் சமநிலைபடித்தி நித்தியனின் அறைக்கு அழைத்துச் சென்றால் உமா.

 

 

 

 

 

 

 

 

 

இவர்களின் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த ராமனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் “நித்தியன் இனி இங்கு இருக்கபோவதில்லை என்பதனால் வந்த மகிழ்ச்சி”… அந்த மகிழ்ச்சியுடனே கேட்ட விஷயங்களை மகாலட்சுமியுடன் ஒப்பித்துவிட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

ராமன் கூறிய செய்தியை கேட்ட மகாலட்சுமியின் முகமானது பழிவெறியும், வன்மமும் நிறைந்து காணப்பட்டது.

 

 

 

 

 

 

 

அடுத்தவாரத்திலேயே நித்தியன் அமெரிக்கா சென்று விட அன்றிரிலிருந்து ஆரம்பமானது உமாவிற்குச் சோதனை.

 

 

 

 

 

 

 

 

 

 

நித்தியனை விமானநிலையத்தில் விட்டுவிட்டு வீட்டிற்குள் புகுந்த உடனே மகாலட்சுமி தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்.

 

 

 

 

 

 

 

உள்ளே வந்ததும் யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் செல்ல முற்பத்தவளை தடுத்தது மகாலட்சுமியின் அதிகாரக்குரல், “அங்க எங்க டீ போற? போ போய் சமையலறையில் இருக்க வேலையைக் கவனி, இனி வீட்டில் இருக்க எல்லா வேலைகளையும் நீ தான் பார்க்கனும்… புரியுதா டீ?” என்றவரிடம்…

 

 

 

 

“நான் எதுக்குப் பெரியம்மா இந்த வேலையைப் பார்க்கனும்? பாட்டிகிட்ட சொன்னா அவங்க செய்யபோறாங்க” எனக்கூறியளை மகாலட்சுமி பளார் என விட்ட அறையில் கீழே விழுந்தாள்.

 

 

 

 

 

 

 

அவர் அடித்த அடியில் புரியாமல் இருந்தவளை குற்றி எழுப்பிய மகாலட்சுமி, “இனி நீ இந்த வீட்டிக்கு வாரிசு இல்ல, வேலைக்காரி… அதுவும் சம்பளம் இல்லாத வேலைக்காரி டீ, புரியுதா?… இனி நங்க என்ன சொல்லறமோ அதுமட்டும் தான் நீ செய்யனும், இங்க நடக்கிற ஒரு விஷயம் கூட நித்தியன் காதுக்குப் போககூடாது, அது மீறி போச்சினா உயிர் போய்டும், உன் உயிர் இல்ல அவன் உயிர் எனக்கூறி விகாரமாகச் சிரித்தவரை பார்த்தவள் சற்று பயந்துதான் போய்விட்டாள்”.

 

 

 

 

 

 

 

அவரின் மிரட்டலுக்குப் பயந்து காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுப்பதுவரை மருதாயி பாட்டியுடன் சேர்ந்து அத்தனை வேலைகளையும் செய்தால் உமா.

 

 

 

 

 

நாள் முழுவதும் வேலைவேலை என ஓடிக்கொண்டிருந்தாளும் படிப்பில் கெட்டியாக இருந்தால், அதன் விளைவு பள்ளியில் இரண்டாம் இடம்பிடித்தாள்.

 

 

 

 

 

 

அதற்குபிறகு அடுத்தப் பிரச்சனை வந்தது கல்லூரி செல்ல ஆசையாக இருந்தவளை போகவிடாமல் தடுத்தார் மகாலட்சுமி.

 

 

 

 

 

 

“நீ பள்ளிகூடம் போனது வரை போது, இனி நீ கல்லூரி போகவேண்டிய அவசியம் இல்லை, ஒழுங்கவீட்டில் இருக்க வேலையை மட்டும் பாரு போதும்” எனக்கூறி சென்றவரை பின் தொடர்ந்து சென்றான் ராமன்.

 

 

 

 

 

 

 

 

உள்ளே சென்றதும் காதவை அடைத்த ராமன் மகாலட்சுமியிடம், “நீங்கள் என்ன லூசாக்கா? காரியத்தையே கெடுத்துடுவீங்க போல் இருக்கே”…

 

 

 

 

 

 

 

“என்னடா வாய் ரொம்ப நீலுது? சோறு போடமாட்டேன் பார்த்துக்கோ” என்றவறை முறைத்த ராமன், “இந்த விஷயம் மட்டும் நித்தியனுக்குத் தெரிஞ்சா உனக்குச் சோறு போடமாட்டான் பார்த்துக்கோங்கக்கா” என்றவனிடம்…

 

 

 

 

 

 

 

 

“என்னடா ராமா சொல்லற? எதா இருந்தாலும் எனக்குப் புரியும் படி சொல்லுடா”…

 

 

 

 

 

 

 

 

 

“அக்கா!”… “இப்ப உமா மட்டும் படிக்காம போய்ட்டா? அந்த விஷயம் நித்தியனுக்குத் தெரிஞ்சா? என்ன நடக்கும்னு கொஞ்சம் யோசனை செய்து பாருங்க க்கா” எனக்கூறியவனைப் பார்த்தவரிடம் ராமனே தொடர்ந்து பேசினான், “அவன் நம்ம ரெண்டு பேரையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்பீடுவான்… நாம ரெண்டு பேரும் சோத்துக்குச் சிங்கி அடிக்கவேண்டியது தான் க்கா”.

 

 

 

 

“ஆமாம் ராமா!”…” இந்த நித்தியன் பண்ணினாலும் பண்ணுவான் டா. அவனுக்கு என்னைவிட அவமேல தான் பாசம் அதிகம், இப்ப என்ன பண்ண ராமா?” அவனையே திரும்பக் கேட்டார் மகாலட்சுமி.

 

 

 

 

 

“அவ படிக்கட்டும் க்கா, ஆனால் அவளுடைய மூக்கணாங்கயிறு நம்ம கைகளில் தான் இருக்கனும், நாம ஆடசொன்ன மாதிரியெல்லாம் அவ ஆடனும், ஏன்? எதுக்குனு? எதிர்த்து ஒரு கேள்வி கேட்க கூடாது, மொத்தத்தில் அவ இந்த வீட்டிக்கு அடிமையா இருக்கனும்” எனக்கூறி சிரித்தவனை பார்த்து, “எனக்கு நல்லா புரிஞ்சு போச்சி ராமா, இனி நான் பாா்த்துக்கறேன்” எனக்கூறி சிரித்தார் மகாலட்சுமி.

 

 

 

 

 

சிறிது நேரத்திலேயே வெளியே வந்தவர்கள் உமாவை அழைத்து, “நீ தாராளமாகக் கல்லூரிக்குப் போகலாம் உமா, ஆனால் இந்த வீட்டில் இருக்க அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, நாங்கள் ரெண்டு பேரும் என்ன சொல்லறமோ அதுமட்டும் தான் நீ செய்யனும், இங்கே நடக்கிற ஒரு விஷயம் கூட நித்தியன் காதுக்குப் போககூடாது அப்படியினா நீ போகலாம்” எனக்கூறி மகாலட்சுமியிடம் உமா, “நீங்க என்ன சொன்னாலும் அப்படியே செய்யறேன் பெரியம்மா, இங்க நடக்கிற ஒரு விஷயமும் அண்ணனுக்குப் போகாது எனகூறியவளை ஆழ்ந்து பார்த்தவர் போ போய் வேலையைப் பாரு” எனக்கூறி அனுப்பிவைத்தார்.

 

 

 

 

 

 

 

சமையளறைக்குச் சென்றவள் பாட்டியிடம் விஷயத்தைக் கூறி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவரின் காலில் விழுந்து ஆசியும் வாங்கிக்கொண்டாள் உமா.

 

 

 

 

 

 

 

அவளுக்கு ஆசி வழங்கிய மருதாயி பாட்டி உமாவிடம், “நீ ரொம்ப நல்ல இருக்கனு உமா, குட்டிமா இப்ப அனுபவிக்கிற கஷ்டமெல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும், நீ என்னைக்கும் தைரியமா இருக்கனும்; இவங்க தர கஷ்டத்திற்குப் பயந்து உன்னுடைய லட்சியத்தைக் கைவிட்டிடாத உமா, சில இடங்களில் பிரச்சனையைக் கண்டு ஓடாம எதிர்த்து நின்னா போதும் அந்தக் கஷ்டம் காணாம போயிரும், சில இடங்களில் அந்தப் பிரச்சனையை விட்டு விளகிபோன நமக்கு நல்லதுனா அதைப் பண்றதுக்கு எந்தத் தவறும் இல்லை” எனக்கூறியவர் அவளுடன் சேர்ந்து சந்தோசத்தை இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

இதே மகிழ்ச்சியில் அடுத்த நாளே சென்று கல்லூரியில் சேர்ந்தவளுக்கு அதிக மதிப்பெண் எடுத்ததால் கல்விகட்டணம் இல்லாமல் எளிமையாகச் சீட்கிடைத்துவிட்டதாள் மகாலட்சுமியின் வசவுகளிலிருந்து தப்பித்தவள் நிம்மதியா அனைத்துவேலைகளையும் முடித்துவிட்டு இரவு உறகத்தைத் தொடர்ந்தாள்.

 

 

 

 

 

 

 

 

பாதி உறகத்தில் ஏதோ ஊர்வது போல் தோன்ற தடிவிட்டவள் திரும்பி படுத்துக்கொண்டால், மறுபடியும் போர்வையை யாரோ இழுப்பது போல் தோன்ற தூக்கத்திலேயே போர்வையை இழுக்க அதுவோ வருவேனோ என அடம்பிடிக்க, அப்படியே விட்டுவிட்டு தூக்கத்தை தொடர்ந்தாள், சிறிது நேரத்தில் மேலே ஏதோ அழுத்துவதுபோல் தோன்ற திடுகிட்டுவிழித்தவள் தன் மேல் படர்ந்திருந்த ராமனை தன் மொத்த பலத்தையும் ஒன்றாகூட்டி கீழே தள்ளிவிட்டால்.

 

 

 

 

 

 

கீழே விழுந்ததில் ஆவேசம் கொண்ட ராமன் அவளின் கைகளைபிடித்து இழுத்துக் கட்டிலில் தள்ளியவன், “என்னடீ ரொம்பப் பண்ற? உன்ன இங்க வச்சியிருக்கிறதே என்னுடைய தேவையைப் போக்கத்தாடீ”.

 

 

 

 

“அப்பா என்ன அழகு!”… “என்ன அழுகு!”… “அப்படியே சொர்க்கத்திலிருந்து வந்த தேவதை மாதிரி இருக்க டீ!”… பார்க்கபார்க்க அப்படியே அள்ளிக்கலாம் போல் இருக்கடீ என வெக்கம் இல்லாமல் தன் மகள் வயதுள்ள பெண்ணை வர்ணித்துக்கொண்டிருந்தான் அந்தக் காமுகன்.

 

 

 

 

‘அவனின் பிதற்றலை கேட்ட உமாவிற்கு அவனின் அசிங்கமான பிதற்றல்களைக் கேட்பதற்குப் பதிலாக நூறுமுறை அக்னி பிரவேசம் செய்தால்கூடத் தேவையிலாம் போல் மனதிற்குத் தோன்றியது’.

 

 

 

 

 

“அவளின் மூளையோ அவனையே தீ வைத்து கொளுத்திவிட்டால் என்ன?, இவன் இருந்தால் பல பெண்களுக்குப் பாதிப்புதான் எனக்கூறியது”.

 

 

 

 

 

 

 

முயன்று தன் சிந்தனையை ஒதுக்கியவள் பயத்தை காட்டாமல், “முதலில் இங்க இருந்து வெளியே போங்க இல்ல கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன் என மிரட்டியவளை பார்த்தவன், கூப்பிடு டீ பாக்கலாம்… நீ கூப்பிடு நான் என்ன சொல்லுவேன் தெரியுமா? நீ தான் என்னை இங்கே வர சொன்னையினு சொல்லுவேன் எப்படி வசதி? இனி அடிக்கடி இந்த மாதிரி நடக்கும், எங்கங்போயிட போற பாத்துக்கிறேன் டீ” என்றவன் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.

 

 

 

 

அவன் சென்றதும் கதை அடைத்தவளைக்கு அன்று மருதாயிபாட்டி சொன்ன வார்த்தைகள் தான் நினைவிற்கு வந்தது, அந்த வார்த்தைகளைத் தாரமந்திரமாக எடுத்துக்கொண்டவள் விடியவிடிய யோசனை செய்து அதற்கான தீர்வை கண்டுபிடித்தவள் சிறிதும் கலங்கி நிற்காமல் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய வேலையைச் செய்ய ஆரம்பித்தாள் உமா.

 

 

 

 

 

 

 

 

அதற்கான சூழலை அவளின் கல்லூரி நிர்வாகமே எளிமையாக ஏற்படுத்திகொடுக்கப் போகிறது என்பதை அறியாமல் அன்று அதிகாலையிலேயே தனது வேலையை ஆரம்பித்துவிட்டாள் உமா.

 

 

 

 

 

 

உமா வந்து அரைமணி நேரம் கழித்து வந்த மருதாயி, “என்ன பாப்பா அதுக்குள்ள எழுந்துட்ட? வரவர நீ நல்லா தூங்குவதில்ல, என்ன ஆச்சி பாப்பா? எதாயிருந்தாளும் என்கிட்ட சொல்லுமா” என்றவரிடம்…

 

 

 

 

“ஆமாம் பாட்டி… உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும்”…

 

 

“சொல்லு உமா, என்ன பிரச்சனை?” “அதுவந்துபா பாட்டி… நேத்து ராத்திரி அந்த ராமன் இருக்கானில் அவன் என்ரூம்குள்ள வந்துட்டான், அதுமட்டுமல்ல ரொம்ப அசிங்கமா பேசறான், தப்பா நடந்துக்கப் பாத்தான் பாட்டி”.

 

 

 

 

 

 

 

 

 

அவளின் அருகில் வந்த மருதாயி, “உனக்கு ஒன்றும் இல்லையில்ல பாப்பா? நீ நல்லா தான இருக்க? இனி நீ தனியா படுக்கவேண்டாம், நான் வந்து இங்கே படுத்துகிறேன் உமா”.

 

 

 

 

 

 

“நானும் இதைத்தான் பாட்டி உங்ககிட்ட கேட்களாம்னு இருந்தேன்” என்றவளிடம்…

 

 

 

 

 

“இதை நான் முன்னையே பன்னியிருந்தா கண்ட நாயலெல்லாம் எம்பேத்தி அறைக்குள்ள போயிக்காது, தப்பு எம்பேரில் தான் பாப்பா… இந்தக் காட்டிய மன்னிச்சிக்கோடா” என்றவரிடம் உமா, “போங்க பாட்டி… இனிமேல் மன்னிப்பு அதுஇதுனு பேசுனீங்கனா நா உங்ககிட்ட பேசவே மாட்டேன் என மிரட்டியவளை சமாதானம் செய்து கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்”.

 

 

 

 

 

 

 

கல்லூரி என்றவளுக்கு மதியம் வரை எப்போதும் போல் தான் சென்றது, அதன் பின் உமா நினைத்தைபோல் அருமையான சலுகைகளை நிர்வாக மாணவர்களின் பாதுகாப்பிற்கு வழங்கியது, அந்தச் சலுகைதான் உமாவிற்குத் தைரியத்தைக் கொடுத்தது என்றால் மிகையல்ல.

 

 

 

 

 

 

 

 

 

மாணவ-மாணவிகளுக்குப் பேராசிரியர் பாடம் கற்பித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றொரு பேராசிரியர் கடிதத்தைப் படித்தவர் அவரை அனுப்பிவிட்டு மாணவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

 

 

 

 

 

 

“ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு அதுவும் மாணவிகளுக்கு இது ரொம்ப முக்கியமானது, அது என்னனா நம்ம கல்லூரி சார்பா தற்காப்புகலைகள் சொல்லித்தராங்க, அதுவும் பெண்களுக்கு இலவசா… கத்துக்கவிருப்பம் இருக்காங்க கத்துக்கோங்க” என்றவரிடம்…

 

 

 

 

 

மாணவி ஒருத்தி, “என்னென்ன தற்காப்பு கலைகள் சொல்லி தராங்க மேம்? எத்தனை மணிக்கு மேம்? எத்தனை நாளைக்கு மேம்?”.

 

 

 

 

 

பேராசிரியர், “இரண்டு வகைகளில் சொல்லித்தராங்க”.

 

 

அதில்,

 

 

1.வெற்றுக்கை கலைகள்:

 

வர்மக்கலை:

 

அடிதடி (Kickboxing)

 

குத்து வரிசை: (Hand and Foot Combat)

 

 

மல்யுத்தம் (Grappling)

 

களரிப்பயிற்று

 

2.ஆயுதங்கள் பயன்படுத்தும் கலைகள்:

 

சிலம்பம்:

 

முச்சாண் (Short Staff) – மூன்று சாண் கொண்ட கம்பு.

 

 

இரட்டை முழங்கோல் (Double Stick)

 

இரட்டை வாள் (Double Swords)

 

 

வாள் (Single Sword)

 

வாள், கேடயம் (Sword/ Shield)

வெட்டரிவாள் (Machete)

 

கத்தரி (Small Dagger)

 

 

பீச்சுவா (Double Edged Kris)

 

சுருள் பட்டை (Spiral Steel Whip)

 

 

சூலம் (Trident)

 

மடுவு (Deer Horns) – மான் கொம்பு

 

 

சுருள் கொம்பு (Spiral Horns)

 

வளரி

 

 

“இதெல்லாம் இருக்கு, யாருக்கு எதைக் கத்துக்க விருப்பமா அதைக் கத்துக்கலாம், நேரம் மாலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிவரை சொல்லித்தராங்க, அதற்குத் தனிச் சான்றிதழும் கொடுப்பாங்க எனக்கூறிக்கொண்டிருக்கும் போதே கல்லூரிமணி அடிக்க அவர் மாணவர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்”.

 

 

 

 

 

 

அன்று மாலையே உமா இரட்டை வாள் மற்றும் வளரி என இரண்டு வகையான தற்காப்புகலைகளிலும் சேர்ந்து கொண்டாள் உமா.

 

 

 

 

 

வீட்டிற்கு வந்ததும் மருதாயிபாட்டியை பார்த்து விஷயத்தைக் கூற அவரும் உமாவின் முடிவிற்குத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

 

 

 

 

 

கூடுதலாக, “நீ அந்தக் கலையை முழுமையாகக் கத்துக்கனுங்கிறது தான் பாப்பா என் ஆசை என்றவரிடம் உமா, அதான் மூனு வருசம் இருக்குல்ல பாட்டி, இந்த மூன்று வருடமும் கத்துக்கிறேன் எனக்கூறியவள் அதே மாதிரி மூன்று வருடமும் தற்காப்புகலையைக் கற்றுதேர்ந்தாள்”.

 

 

 

 

 

 

ஒவ்வொரு நாள் இரவு தன்னைக் காத்துக்கொள்ளவதர்காக மருதாயிபாட்டியை கூடவே படுக்கவைத்துக்கொள்வாள், அவர் இல்லாத நேரத்தில் எதாவது ஒரு பலமான பொருட்களை வைத்து கதவடைத்துகொண்டு விடியவிடிய தூங்காமல் விழுத்தேயிருப்பாள்.

 

 

 

 

 

 

 

 

நித்தியன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுதந்திர காற்றைச் சுகமாகச் சுவாத்து தமையனின் தன்னலமற்ற அன்பில் திழைத்திருப்பாள் உமா.

 

 

 

 

 

நித்தியனோடு இருக்கும் பொழுது மட்டுமே அளவாக அந்த வீட்டிலும் வெளியிலும் வழம்வருவாள்… அவளின் ஒவ்வொரு முடிவு மற்றும் துவக்கத்திலும் நித்தியன் இருந்தான், அதனாலேயே அவள் விரும்பிய படிப்பை முதுகலைவரை படித்தால் உமா.

 

 

 

 

 

 

 

இப்படியே இவளின் வாழ்க்கையின் சிறைக்கைதியை போல் சிறப்பாகவே சென்றது.

 

 

 

 

நித்தியன் படிப்பைமுடித்துத் தன் தந்தையின் நண்பனின் மகளான ஆனந்தியை மகாலட்சுமியின் சம்மதத்துடன் சம்மதத்துடனும் உமாவின் விருப்பத்தினுடனும் திருமணம் செய்து கொண்டான்.

 

 

 

 

 

ஆனந்தி – நித்தியனின் திருமணமானது வெகுவிமர்சியாகத் திருவிழாவைபோல் நடந்தது, அதுவும் உமாவின் ஆசைக்காகத்தான்.

 

 

 

 

நித்தியன் திருமணத்திற்கு முன்பே ஆனந்தியை வெளியே சந்தித்து உமாவை பற்றியும் இனி அவளுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகள் பற்றியும் தெளிவாகக் கூறி தான் திருமணம் செய்து கொண்டான்.

 

 

 

 

அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாதம் நன்றாகத்தான் சென்றது, ஒரு நாள் ராமன் யாருக்கும் தெரியாமல் உமாவிடம் தவறாக நடந்துகொண்டான், அதற்கு உமா கொடுத்த அடியில் இரண்டு வாரம் எழுந்து நடக்கமுடியாமல் இருந்ததையும் ஆனந்தி மருதாயிபாட்டியின் மூலமாக அறிந்துகொண்டாள். அவர்கூறிய கூறிய விஷயத்தைக் கேட்டு முதலில் அதிர்ந்தவள் மருதாயிபாட்டியிடம், “இனி இதை நான் பாத்துக்கிறேன் பாட்டி, இந்த விஷயம் எப்படி இவ்வளவு நாளா எங்களுக்குத் தெரியாமல் போச்சினு தெரியவில்லையே பாட்டி?”.

 

 

 

 

 

“ஏனா?… இவனும் உம்மாமியாகாரியும் கூட்டு சேர்ந்து தான் ம்மா உமாவை படாதபாடு படுத்திவைக்கிறாங்க…

 

 

 

 

சூடுவைக்கிறதும், சாப்பாடு போடாம பட்டினி போடறது, நல்ல துணிமணி போடவிடறதில்லை, வேலைக்காரியைவிட மோசமா நடத்திறது, இந்த ராமனோட நடவடிக்கை தெரிஞ்சாலும் எந்தக் கேள்வியும் அவனைக் கேட்காம அவனுக்கு ஆதரவு தரதே உம்மாமியாகாரி தான் ம்மா… அந்தப் புள்ளைய படிக்கவிடாம வேலைமேல வேலை வச்சி படுத்தியெடுப்பா ராட்சசி… சின்னதா ஏதாவது தப்பு பண்ணிட்டா நாளு முழுக்க வெறுங்காலில் வெயிலிளே நிக்கவச்சி காலெல்லாம் கொப்பளம் போட்டு பிள்ளை வலிதாங்காம அழுதாகூடத் திட்டுவா அந்தப் பொம்பளை… அப்படித்தான் பிள்ளை ஒரு நாள் காய்ச்சல் வந்து அவதிபட்டதைப் பார்த்து மருத்துவனைக்குகூடக் காசுதராம அரசுமருத்துவமணைக்கு நான் தான் கூட்டிகிட்டு போறேன்டா ம்மா, ஏதோ என்னால் முடிந்தது இதுதான் ம்மா”.

 

 

 

 

 

இனி நீதான் ம்மா இந்தப் பிள்ளைக்கு நல்லது பண்ணி கொடுக்கும் எனக்கூறி கலங்கிய கண் துடைத்துகொண்டார் மருதாயி, ஆனந்தியோ அவர் சொன்ன விஷயத்திலிருந்து மீளவே முடியாமல் தவித்துப் போய்டாள், உமா அனுபவித்த கஷ்டத்தைக் கேட்கவே முடியாமல் திணறியவளால், உமாவின் ஐந்துவருட சிறைவாழ்க்கையை நினைத்ததிற்கே ஆனந்திக்குக் கைகாலெல்லாம் வெளவெளத்துப் போய்விட்டது. இன்னும் என்னென்ன காரியங்களையெல்லாம் செய்திருப்பார்கள் என யோசனை செய்யவே பயந்தால் ஆனந்தி.

 

 

 

 

 

 

 

அன்பு தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!