Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 35

 

 

 

அத்தியாயம் 35: 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

 

 

 

Advertisement

 

அடுத்த வந்த ஒரு வாரமும் நித்தியன் காலையிலிருந்து மதியம் வரை உமாவுடன் சேர்ந்து அம்மு மற்றும் மல்லியின் திருமணத்திற்கான வேலைகளைச் செய்வது, மாலையிலிருந்து இரவு வரை சிறியவர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் செல்வது, கடைவீதிக்கு செல்வது, மீன்பிடிக்கச் செல்வது மற்றும் குட்டியை அழைத்துக்கொண்டு வெற்றியின் பைக்கில் நீண்ட பயணம் செல்வது என ஒரு வாரமும் அவ்வளவு அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது. 

 

 

 

 

 

 

 

இந்த தருணத்தில் தான் ஆனந்தி மற்றும் நித்தியனுக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்தது, இவ்வளவு நாள் வாழ்க்கையில் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்றும் எவ்வளவு அன்பை அனுபவிக்க முடியாமல் தனிமையில் வாடியிறுக்கறோம் என்றும் நினைத்தவர்கள் மனதில் ‘இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்களின் அன்பை மட்டும் இழக்க கூடாது’ என உருதியெடுத்துக்கொண்டனர். 

 

 

 

 

 

 

 

 

உமாவிடம் பேசியதை நித்தியன் அடுத்த நாளே பண்ணையாரின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு உமாவின் மனநிலை புரியும்படி தெளிவாகத் தெரிவித்துவிட்டான். 

 

 

 

 

 

 

 

 

 

நித்தியன் சொன்ன செய்தியில் உமாவின் மனதை தெளிவாகப் புரிந்துகொண்ட வெற்றி சிறியவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை அன்றே செய்ய ஆரம்பித்துவிட்டான்… அவனின் செய்கைக்குப் பெரியவர்களும் முழுமனதாகத் தங்களின் ஆதரவையும் கொடுத்தனர். 

 

 

 

 

 

 

 

ஜெயந்தி மதனுடன் சென்று சாரதா மற்றும் நாச்சியாரிடம் பேசி திருமணம் முடிந்த இரண்டாவது நாளே கார்த்திக் – மீனுவை தேனிலவுக்கு அனுப்பி வைத்துவிட்டானர். இங்குள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போகமாட்டேன் என்றவர்களை வற்புறுத்தி ஒரு வாரம் தங்குமாறு அனுப்பி வைத்தனர் அந்தத் தம்பதியினரை. 

 

 

 

 

 

 

 

 

ஜெயந்தி மற்றும் மதனும் உமாவிற்கு உதவியாகக் காலை முதல் மாலை வரை இருப்பவர்கள் இரவு பண்ணையாரின் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்… இவர்களின் இந்தச் செயலில் உமா மட்டுமல்லாமல் நாச்சியாரும் மகிழ்ந்துபோய்விட்டார். அதோடு தங்களுக்குப் பிறகு இந்தக் குடும்பம் இப்படியே ஒற்றுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. 

 

 

 

 

 

 

 

 

 

“அன்பு” என்ற சிறு சொல் போதும் இந்த உலகத்தையே கட்டியிலுக்கூடிய வலிமையையும் துணிவையும் தர… 

 

 

 

 

 

 

அந்த அன்பு தான் உமாவையும் இருவருக்குத் திருமணம் செய்யக்கூடிய துணிவையுந்தந்தது. 

 

 

 

 

அவளின் சுயநலமில்லாத அன்பு தான் சுற்றத்தினர் தாமாகவே முன்வந்து அவளுக்கு உதவிகளைச் செய்யக்கூடிய அளவுக்குப் பாசத்தைப் பெற்றுத்தந்தது. 

 

 

 

 

 

 

 

திருமணத்திற்கு மூன்று நாட்களே இருக்கப் பந்தக்கால் நடுவதிலிருந்து முதல் நாள் திருமணம் முடியும் வரை உடனிருந்து உதவி செய்தனர். மயிலுபாட்டியோ உமாவிற்குத் தெரியாத அத்தனையும் உடனிருந்து அவளைச் செய்யசொல்லி வழிநடத்தினார். 

 

 

 

 

 

 

ஊர் மக்கள் உமாவிற்குச் செய்த உதவியைப் பற்றி ஆனந்தி, நித்தியன் முதல் பெற்றோர்கள் வரை சொல்லிசொல்லி ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தாள். 

 

 

 

 

 

 

இப்படியே நாட்கள் அழகாகச் செல்ல மூன்றாவது நாள் முகூர்த்தக்கால் நட அன்று அம்மு மற்றும் மல்லி இருவருக்கும் தாய்மாமனாக வெற்றியும் சங்கருமே அத்தனையும் செய்தனர், அடுத்த நாள் ஊர் மக்கள் சார்பாக விருந்து செய்தனர், அடுத்த நாள் விசாலாட்சி – சங்கர் சார்பாக விருந்து செய்தனர். 

 

 

 

 

 

பண்ணையார்வீட்டிலும் அதே போல் தான் விருந்து நடைபெற்றது. 

 

 

 

 

 

 

 

அடுத்த காலை முதல் பிரம்ம முகூர்த்தத்தில் விஷ்ணு மல்லியின் கழுத்தில் உற்றார் உறவினர் முன்னிலையில் மங்களநாண் அணிவித்துத் தன்னில் சரிபாதியாக்கியவன் இரண்டாவது முறையாக அனைவரின் முன்னிலையிலும் தன் காதலை உணர்வு பூர்வமாக வெளிபடுத்தினான். 

 

 

 

 

 

 

 

 

எட்டுவருடம் காத்திருந்த மல்லியின் காதலுக்குக் கிட்டைத்த மரியாதையில்லாமல் திக்குமுக்காடி போய்விட்டாள் மல்லி, இந்த ஒரு நொடிக்காகத்தானே இத்தனைவருடத்தில் கண்ணீர், வேதனை, இந்த நொடிய அனுபவிக்கத் தானே இத்தனைவருட காத்திருப்பு, காத்திருப்பு என்பதைவிடத் தவம் என்றே சொல்லலாம். 

 

 

 

 

 

 

 

 

இத்தகைய மகிழ்ச்சியைத் தந்த உமாவைத்தான் முதலில் கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள், அதன் பின் அனைவரின் காலிலும் விழுந்து ஆசிவாங்கியவர்கள் அம்மனிடம்சென்று ஆசிவாங்கிவந்தனர். 

 

 

 

 

 

 

இவர்களின் திருமணம் முடிந்து ஒரு மணிநேரத்தில் அடுத்து வந்த முகூர்த்தில் அதே அம்மன் சன்னிதானத்தில் பெரியவர்களின் ஆசியுடன் தான் விரும்பியவளையே மனைவியாக ஏற்றுக்கொண்டான் அருண். அந்தச் சந்தோசத்துடன் அனைவரிடமும் ஆசி பெற்றவர்கள், அப்பொழுது உமா இரண்டு ஜோடிகளையும் அழைத்துக் கொண்டு அந்தக் கோயிலில் ஒரு ஓரமாக நின்றிருந்த மயிலுபாட்டியிடம் அழைத்துச்சொன்றாள். 

 

 

 

 

 

அங்குச் சென்றதும் உமா, “மயிலுபாட்டி நீ தான் எல்லாத்தையும் நான் செய்யத் துணையாக இருந்த, அதெல்லாம் செய்துவிட்டு இங்கவந்து ஒரு ஓரமாக நின்னா என்ன அர்த்தம்? வந்து ஆசிர்வாதம் பண்ணு அவங்களுக்கு” என்றவளிடம்… 

 

 

 

 

மயிலுபாட்டி, “அடி போடி இவளே… கல்யாணம் ஆன புதுப் பொண்ணு மாப்பிள்ளையை இப்படிப் பூவும் பொட்டுமில்லாத நான் எப்படி ஆசிர்வாதம் பண்ண?. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவங்ககிட்ட தான் வாங்கனும் உமா”. 

 

 

 

 

 

 

 

 

 

“அதெல்லாம் நல்ல மனசு இருக்கவங்க பண்ணினா போதும் பாட்டி, உனக்கு அந்த மனசு இருக்கு, இப்ப நீ அவங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணபோறயா இல்லையா” என்று கேள்வி கேட்டவளிடம் என்ன சொல்வது எனத் தவித்தார். 

 

 

 

 

 

 

 

 

நாச்சியார், “உமா சொல்வதும் சரிதான மயிலு; நீ தான் அவங்களுக்குத் துணையாக இருந்து எதை எப்படிச் செய்யறது, எதை எங்கே செய்யறதுனு சொல்லி செய்ய வச்ச மயிலு… நீ இல்லைனாலும் அந்தச் சின்னபிள்ளை எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தைப் பண்ணமுடியும்? உன்னோட நல்ல மனசுதான தனியா இருக்கப் பிள்ளைக்குத் துணையாக இருக்கனு நினைத்து உதவி செய்யச் சொல்லுச்சி; அந்த மனசு போதும் மயிலு, வா… வந்து பிள்ளைங்களை ஆசிர்வாதம் பண்ணு என்றவரின் கூற்றை மேலும் மறுக்காமல் நிறைந்த மனதோடு ஆசிவழங்கினார் இந்த நல்ல உள்ளம் கொண்ட பெண்மணி”. 

 

 

 

 

 

 

 

அதன் பின் மனமக்கள் முறைபடி மணமகள் இல்லத்திற்குச் சென்று பாலும் பழமும் அருந்தியவர்கள் நல்ல நேரத்தில் பண்ணையார்வீட்டிற்குச் சகலமரியாதையோடு உற்றார் உறவினர்கள் மெச்ச சீர்செனத்தியோடு புதுவாழ்க்கையைத் தொடங்க சென்றனர். 

 

 

 

 

 

 

 

 

அங்கே செய்யவேண்டிய சடங்குகளை முடித்து மனமக்கள் ஓய்வெடுக்கச் செல்லவே மாலை ஆகிவிட்டது; அன்றே நல்ல நாள் என்பதால் பெரியவர்களால் சாந்திமுகூர்த்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அதுவரை பெண்கள் இருவரும் மீனுவின் அறையில் ஓய்வெடுக்க அனுப்பிவைத்தார் சகுந்தலா. 

 

 

 

 

 

 

இரவு உணவை விரைவாக முடித்து ஆண்கள் அனைவரையும் தூங்க அனுப்பிவைத்துவிட்டார் நாச்சியார். 

 

 

 

 

 

 

மசக்கையின் காரணமாக ஜெயந்தியும் விரைவாகத் தூங்கிவிட்டாள். 

 

 

 

 

 

 

குட்டியும் கண்ணனும் இரவு உணவை முடித்ததும் உமா நித்தியனுடம் அந்த வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டாள். அவர்களும் அசதியில் எந்தக் கேள்வியும் கேட்காமல் சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

உமா, ஆனந்தி அம்மு மற்றும் மல்லிக்கு மிதமான அலங்காரம் செய்து கேலி செய்யதுகொண்டிருக்க, அதில் அவர்களின் முகமான அந்திவானம் போல் மிளிர்ந்தது. 

 

 

 

 

 

 

அப்பொழுது அங்கு வந்தனர் ஜெயா, நாச்சியார் மற்றும் சாரதா. அவர்களைக் கண்டதும் இவர்கள் இருவரும் அமைதியாகிவிட்டனர். அம்மு மற்றும் மல்லியின் முகச்சிவப்பை கண்டவர்கள் மேலும் அவர்களைச் சோதனை செய்யாமல் ஆசிவழங்கி தூக்கத்தைக் காரணம் சொல்லி சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

அவர்கள் சென்றவுடன் அங்கு வந்த காயத்ரி மற்றும் சகுந்தலாவும் அம்மு மற்றும் மல்லியின் கைகளில் பாலைகொடுத்து உமா மற்றும் ஆனந்தியிடம், “நீங்க இவங்களை அறையில் விட்டுவிடுங்க நாங்க கீழே இருக்கோம்” எனக்கூறியவர்கள் சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

அவர்கள் சென்றதும் சிறிது நேரத்தில் அவர்அவர் அறையில் விட்டுவந்தவர் கீழே காத்திருந்த சகுந்தலா மற்றும் காயத்திரியைடன் உணவை முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்புவதற்காகக் கூற சகுந்தலா, “நான் போய் அவரைக் கொண்டுத்துவிட்டு சொல்றோன் உமா; இந்த நேரத்தில் தனியா போகவேண்டாம்” என்றவரிடம்… 

 

 

 

 

 

உமா, “இந்த நேரத்தில் அவரை எழுப்ப வேண்டாம் ம்மா; இது நம்ம ஊர் தான, இந்த ஊர் என்ன எனக்குப் புதுசா ங்கம்மா? கிளம்பினார்கள் ஐந்து நிமிடத்தில் வீட்டுக்குப் போய்டலாம் ம்மா”. 

 

 

 

 

 

 

அப்போது கீழே இறங்கி வந்த வெற்றி, “இது உனக்கும் புதுசு இல்ல தான் உமா… எங்க வீட்டுக்கு வந்த சம்பந்தி அம்மா நாங்க எப்படி நடந்து போங்கனு விடமுடியும்? அதுவும் இந்த நேரத்தில்” என்றவன் சகுந்தலாவிடம், “சித்தி நான் இவங்களை விட்டுவிட்டு வறேன் நீ ரெண்டு பேரும் போய் தூங்குங்க… காலையிலிருந்து அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டே இருந்தீங்க போங்க” என்றவனிடம்… 

 

 

 

 

காயத்ரி, “நாங்கள் தூங்கிட்டா நீ எப்படி உள்ள வருவ? யார் கதவை திறந்து விடறது. 

 

 

 

 

 

 

என்கிட்ட இன்னொரு கீ இருக்கு சித்தி, நீங்கள் போய் தூங்குங்க நான் அதைவைத்து கதவை திறந்துக்கிறேன் என்றவன் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்”. 

 

 

 

 

 

 

 

 

 

கார் ஓட்டியவனின் கண்களோ உமாவையே வட்டமிட அவளே அவனைத்தவிற வேறு எங்கேயும் பார்வையைச் செலுத்தவில்லை. 

 

 

 

 

 

 

 

வீட்டின் முன் காரை நிறுத்தியவுடன் முதலில் இறங்கிய ஆனந்தி உமாவிடம், “நீ அவர்கிட்ட பேசிட்டு வா நான் உள்ளபோறேன் என்றவள் வெற்றியிடம் சொல்லிக்கொண்டு உமாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்”. 

 

 

 

 

 

 

 

அவள் செல்லும் வரை காத்திருந்த வெற்றி உமாவிடம், “இப்ப நீ சந்தோசமா இருக்கையா ம்மா? உன்னோட இடத்தில் நான் இருந்திருந்தாகூட இப்படியெல்லாம் செஞ்சிருப்பேனான் கேட்டா இல்லைனு தான் சொல்லுவேன், இவ்வளவு கஷ்டத்தையும் மனசுகுள்ளயே வச்சிகிட்டு வெளியே சிரிச்சிகிட்டே அத்தனை பொறுப்பையும் நிறைவா, முழுமனசோட செஞ்சியிருக்க உமா… நீ எனனுக்குப் பொண்டாட்டியா கிடைக்க நான்தான் ரொம்பக் கொடுத்துவச்சியிருக்கேன் உமா” என இத்தனை நாள் மனதில் அடக்கிவைத்திருந்த எண்ணம், வேதனை என அனைத்தையும் அவளிடம் கொட்டிக்கொண்டிருந்தான். 

 

 

 

 

 

“என்னேட இடத்தில் நீங்க இருந்திருந்தா இன்னும் நல்லாவே பசங்களை வளர்த்தியிருப்பீங்க வெற்றி; என்னைக்கோ அந்த மகாலட்சுமியையும் ராமன், பரமனையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கியிருப்பீங்கனு உங்களுக்கே தெரியும் சும்மா உங்களை நீங்களே குறச்சி பேசாதீங்க எனக்கு இந்தப் பேச்சி சுத்தமாபிடிக்கவில்லை எனக் கோபமாகப் பேசி முகத்தைத் திருப்பயவளின் செயலில் வெற்றியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது”. 

 

 

 

 

 

 

“நீ கோவப்படும் போது ரொம்ப அழகா இருக்க மகாம்மா”.

 

 

 

“நீங்க கூடக் காலையில் கட்டியிருந்த பட்டுவேட்டி சட்டையில் அவ்வளவு அழகாக இருந்தீங்க, கல்யாணத்திற்கு வந்த பொண்ணுங்க எல்லாம் உங்களையே சைட்டடிச்சிகிட்டு இருந்தாங்க, எனக்குத் தான் அப்படியே பத்திகிட்டு வந்துச்சி; நீங்க என்னடானா அப்பதான் சிரிச்சிசிரிச்சி பேசிகிட்டு இருந்தீங்க” எனக் கோபத்தில் உழரியவளை கண்டு வெற்றி அட்டகாசமாகச் சிரித்தான். 

 

 

 

 

 

முதலில் அவன் சிரிப்பதை புரியாமல் முழித்தவளுக்குச் சிறிது நேரம் கழித்தே தான் உலரியது புரிய மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டவள் அவனிடம் கெத்தாக, “என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு உங்களுக்கு? நான் பொழம்புவதைப் பார்த்தா உங்களுக்கு காமெடியா இருக்கா?” எனக்குக் கோபமாக கேட்டுச் சினுங்களில் முடித்தவளை பார்த்து மேலும் சிரித்தான் வெற்றி, அதில் உமாவும் சிரித்துவிட்டாள். 

 

 

 

 

 

 

 

 

 

“சிரிச்சதெல்லா போதும் அந்தப் பரமனை என்ன பண்ணுனீங்க வெற்றி? உயிரோடு தான இருக்கான்?” எனச் சந்தேகமாகக் கேட்டவனிடம் வெற்றி, “அவனா உமா… மார்க் புண்ணியத்தில் சிறப்பான கவனிப்பில் இருக்கான், கண்டிப்பா உயிரோட தான் இருக்கான் அதுக்கு நான் உத்திரவாதம்”. 

 

 

 

 

 

 

 

“அவன் எப்படிப் போனா எனக்கென்ன? அவனுக்குத் தண்டனை கொடுக்கிறேனு நீங்க நாளுபேரும் கிளம்பி எதாவது பிரச்சனையில் மாட்டிக்காதீங்க வெற்றி, அவனை நம்பி இந்த உலகத்தில் ஒரு ஜீவன் கூட இல்ல ஆனா உங்க நாளுபேரையும் நம்பி இந்த உலகத்தில் நிறையபேர் இருக்காங்க”. 

 

 

 

 

 

 

 

 

“அதற்கு அவனை அப்படியே விடச் சொல்லறையா உமா? நான் எப்ப அவனை அப்படியே விடச் சொன்னேன் வெற்றி?”. 

 

 

 

 

 

 

“கண்டிப்பா அவன் செஞ்ச அத்தனை குற்றத்திற்கும் தண்டனை அனுபவிக்கனும்; ஆனா அது சட்டப்படி  கிடைக்கனும், அப்படிக் கிடைச்சா அவனால் பாதிக்கப்பட்டவங்க மனசு கொஞ்சமாச்சும் ஆறும் என்றவளை காதலாகப் பார்த்தான் வெற்றி”. 

 

 

 

 

 

 

அவனின் கண்களில் கண்ட காதலைகண்டவள் போல் அப்படியே நின்றுவிட்டாள் உமா, அவனின் போன் சத்தத்தில் மீண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். 

 

 

 

 

 

 

போனில் தெரிந்த நண்பரை பார்த்தவன் அதை அனைத்துவிட்டான். பின் தான் வந்து வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்த வெற்றி உமாவிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான். அவன் சென்றதும் உள்ளே சென்று இந்த இனிமையான நினைவுகளுடனே தூங்கியும்விட்டாள். 

 

 

 

 

 

 

 

 

 

போகும் வழியில் மார்க்குக்கு போன் செய்தவன் மார்க் சொன்ன செய்தியில் வெற்றியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது, அந்த மகிழ்ச்சியுடனேயே மார்க்குடன் பேசிவிட்டு வீட்டுக்கு சென்றவன் அசந்து தூங்கிவிட்டான். 

 

 

 

 

 

 

 

பக்கத்து அறையில் இருந்த விஷ்ணுவோ இவ்வளவு நாளும் மல்லியின் கோபத்திலிருந்து தப்பியவன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அறைக்குள் வந்தவள் வரவேற்றுக் கட்டிலில் அமரவைத்தவன் பாலை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, “எட்டு வருசமா எனக்கே தெரியாமல் எப்படி மல்லி என்னைய சைட்டடிச்ச? இந்தக் கொஞ்சம் நாளிலேயே உங்ககிட்ட காதலை சொல்லமுடியாது நான் நடிச்சது எனக்கு மட்டும் தான் தெரியும், உன்னை நினைத்தால் பிரம்மிப்பா இருக்கு மல்லி” எனக்கூறியவனிடம் மல்லி, “எட்டு வருசமா நான் உன்னைய சைட்டடிச்சது கூடத் தெரியாமல் யாரை சைட்டடிச்சிகிட்டு இருந்தீங்க? காதலிக்கிற பொண்ணுகிட்ட காதலை சொல்ல ஒரு பையனுக்கு என்னா பயம்?”. 

 

 

 

 

“அடியேய் நான்பாட்டுக்குப் படிப்பு வேலைனு கடிவாளம் கட்டின குதிரையாட்டம் இருந்தேன்டீ, அப்படிப் பட்ட எங்கிட்ட யாரை சைட்டடிச்சைனு கேட்கிற, அதுவும் இல்லாம பையனா தைரியமா காதலை சொல்லனும்னு எதாவது சட்டம் இருக்கா டீ? ஏன் பொண்ணுங்க நீங்க சொல்லமாட்டீங்களா?”.

 

 

 

 

 

 

“உங்களை யாரு அப்படி இருக்கச் சொன்னா?… பசங்க காதலை சொன்னா தான் கொஞ்சம் கெத்தாவும் இருக்கும், கேட்கிற என்ன மாதிரி பொண்ணுங்களுக்கும் தேவதை மாதிரி ஒரு உணர்வு ஏற்படும்; அதெல்லாம் ஒரு தனி உணர்வு உங்கள மாதிரி மரமண்டைக்குப் புரியாது”… “யாரை பார்த்து மரமண்டைனு சொன்ன?”. 

 

 

 

 

“இதவேற மறுபடியும் சொல்லுமா? உங்களைத்தான் சொன்னேன் என்றவள் கடுப்பில் நீங்க இப்படியே பேசிகிட்டே இருங்க எனக்குத் தூக்கம் வருது நான் தூங்கறேன் என்றவள் படுத்தவுடனே தூங்கியும்விட்டாள்”. 

 

 

 

 

அதைப் பார்த்த விஷ்ணுவோ வடபோச்சே பாணியில் குப்புறபடுத்து தூங்க முற்பட்டவன் வெகுநேரம் கழித்து வெற்றிகரமாக ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான். 

 

 

 

 

 

 

 

 

இவன் இப்படியென்றால் அங்கு அருணோ அம்முவின் மனதில் தன் மீது காதல் இருக்கிறது என அறிந்தும் அவளின் மனதில் எந்த அளவுக்கு இடம்பித்துள்ளேன் என்பது அறிந்த பின் தான் அவளுடனான தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தவன் அவளிடம் எப்படிக் கூறுவது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான். 

 

 

 

 

 

 

 

அப்பொழுது அறைக்குள் நுழைந்த அம்மு ஆனந்தியின் சொல்படி அருணின் காலில் விழுந்து வணங்கியவள், கொண்டு வந்த பாலை அருணிடம் கொடுத்தவள் மீதியை தானும் குடித்ததும் தன் மனதை அருணிடம் கூற ஆரம்பித்தாள். 

 

 

 

 

 

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசுனுங்க”… 

 

 

 

“சொல்லு அம்மு, என்ன பேசனும்? அதுக்கு முன்ன இந்த ங்க போட்டுப் பேசறதெல்லாம் வேண்டாம் அம்மு, பெயர் சொல்லி கூப்பிடு இல்லனா உனக்கு எப்படித்தோனுதோ அப்படிக் கூப்பிடு அம்மு”. 

 

 

 

 

 

 

“என்ன பெயர் சொல்லி கூப்பிடறதா? அதெல்லாம் முடியாது வேணா மாமானு கூப்பிடறேன்”… “சரி அப்படியே கூப்பிடு அம்மு” என்றவனிடம் அம்மு, “முதலில் நாம இன்னும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சிக்கலாம் அப்புறமா இதெல்லாம்; இப்ப இந்தச் சடங்கெல்லாம் வேண்டாம் மாமா, நானும் அதைப் பற்றித் தான் உங்கிட்ட பேசநினைத்தேன் அம்மு”… “எனக்கும் நீ சொல்லறது தான் சரினு தோனுது, சரி இப்ப படுக்கலாம் எனக்குத் தூக்கம் வருது” என்றவனிடம்… 

 

 

 

 

 

“இன்னொரு விஷயம் உங்ககிட்ட கேட்கனும் மாமா, என்ன விஷயம் அம்மு? நான் படிக்கபோகட்டா? ரொம்பக் கஷ்டபட்டுப் படித்தேன், அக்காவும் ரொம்பக் கஷ்டப்படுத்தான் என்னைய படிக்கவச்சாங்க அவங்களளோட ஆசையை நிறைவேற்றி நல்லவேளைக்குப் போகனும் எனக் கேட்டவளிடம் அருண், நீ படிக்கனும்னு அவங்க மட்டுமல்ல அம்மை நானும் ஆசைபடறேன், நீ தாராளமா படிக்கலாம் அம்மு மேல படிக்கத் தோனுதா சொல்லு படிக்க வைக்க நான் ரெடியா இருக்கேன் என்றதும் மகிழ்ந்தவள் அந்த மகிழ்ச்சியுடனே துணி மாற்றிக்கொண்டு படுத்துவிட்டாள், மனைவியின் மலர்ந்த முகத்தைக் கண்ட அருணும் நிம்மதியாக நித்திரைக்குச் சென்றான்”. 

 

 

 

 

 

 

 

அடுத்த நாள் பொழுதானது யாருக்கும் காத்திருக்காமல் எப்பொழுதும் போலவே அழகாகவே விடிந்தது. 

 

 

 

 

 

 

காலையில் வழகத்திற்கு மாறாக ஐந்து மணிக்கே எழுந்த அம்மு குளித்துவிட்டு கீழே செல்லும் போது அவளுக்கு முன்பே மல்லி அனைவருக்கும் டீ மற்றும் காபி போட்டுக்கொண்டிருந்தாள். 

 

 

 

 

 

 

 

அவசரஅவசரமா வந்த அம்முவை பார்த்து சிரித்தவள், “என்ன டீ அதுக்குள்ள எழுந்துவிட்டியா? மணி 5.30 தான் ஆகுது அம்மு” என்றவளிடம்… 

 

 

 

 

 

 

 

“உமா அக்கா சொன்னதை மறந்துவிட்டீங்களா க்கா? நான் மட்டும் வழக்கம் போல் ஆறுமணிக்கு தான் எழுந்தேனு தெரிஞ்சா அவ்வளவு தான் நான், அதுவும் இல்லாம புதுஇடங்கிறதுனால் தூக்கமும் வரவில்லை” என்றவளிடம் போட்ட டீயை கொடுத்த மல்லி, “இது குடி கொஞ்சம் நஞ்சம் தூக்கமும் போய்டும்” எனக்கூறி இருவரும் குடித்தபின் வீட்டில் உள்ள ஒருத்தர் ஒருத்தருக்குஒருத்தர் எழுந்து வர அவர்களுக்கும் கொடுத்தவர்கள் பின் தங்கள் கனவன்களுக்குக் கொடுத்துவிட்டு பூஜை முடித்ததும் சமையலறைக்குச் சென்றனர். 

 

 

 

 

 

அங்கு வந்தவர்களைத் தடுத்த சகுந்தலா, “இன்னைக்கு நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது ஒரு வாரம் போனதுக்கப்பறம் பண்ணலாம் இப்ப அருணையும் விஷ்ணுவையும் எழுப்பிக் கோயிலுக்குப் போய்ட்டுவாங்க; வந்ததும் நித்தியனும் ஆனந்தியும் மறுவீடு அழைக்கவருவாங்க நீங்க அவங்கக்கூட அந்த வீட்டுக்கு போகனும் சீக்கிரம் கோயிலுக்குப் போய்ட்டு வாங்க என்றவர் அவர்களை அந்த இடத்தைவிட்டு கிளப்பிய பின் சமையல் வேலையில் ஆழ்ந்தனர்”. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அருண் மற்றும் விஷ்ணுவின் திருமணத்திற்கு முன்னே தேனிலவுக்குச் சென்று வந்த கார்த்திக் – மீனு இன்று காங்கேயத்திலிருந்து வருவதால் சகுந்தலா மற்றும் காயத்திரி அவர்களுக்கு விருந்தை பரபரப்பாகச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக நாச்சியார் மற்றும் சாரதாவும் வந்துவிட வேலையானது முன்பைவிடச் சுறுசுறுப்பாக நடந்தது. 

 

 

 

 

 

 

 

 

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த அருண் மற்றும் விஷ்ணுவை எழுப்பியவர்கள் கார்த்திக்கும் மீனுவும் வருவதற்கு முன்பே கோவிலுக்கு சென்றுவந்துவிட்டனர். 

 

 

 

 

 

 

 

அவர்கள் வந்தவுடன் விருந்து பரிமாறிவிட்டு அமர்ந்திருந்ததும் அம்மு மற்றும் மல்லியை மறுவீடு அழைத்துச்சொல்ல நித்தியனும் ஆனந்தியும் வந்துவிட்டனர், வந்தவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு முறைப்படி மூன்று தம்பதிகளையும் விருந்திர்காக முறைப்படி அழைத்துச்சொன்றனர். பெரியவர்களோ சிறியவர்கள் மனம்விட்டு பேசட்டும் என நினைத்துத் தாங்கள் மாலையில் வருவதாகக் கூறிவிட்டனர். 

 

 

 

 

 

 

 

வெற்றியோ இவர்கள் வருவதற்கு முன்பே அவசரவேலையாகக் கிளம்பி காங்கேயம் சென்றுவிட்டான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நித்தியன் மற்றும் ஆனந்தி அங்குச் செல்லவதற்குள் மயிலுபாட்டி, மாரிக்கா, கனகா மற்றும் சாந்தியின் உதவியுடன் விருந்தை தடபுடலாகச் செய்ய ஆரம்பித்துவிட்டாள் உமா. 

 

 

 

 

 

கண்ணனும் குட்டியையும் சேர்ந்து குட்டி மகியுடன் ஊரையே சுற்றி வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் மகியையும் நித்தியன் மற்றும் ஆனந்தியையும் கண்ட ஊர் மக்கள், “யார்? என்ன? இத்தனை நாளாக எங்கே இருந்தனர்? என்று விசாரிக்க உமா   தங்களின் பெரியப்பா மகன் மற்றும் மருமகள்… இத்தனை நாளா அமெரிக்காவில் வேளை பார்த்ததாகக் கூறி அவர்களின் வாயை அடைத்துவிட்டாள்”. இவளின் பதிலும் ஓரளவு அவர்களுக்குத் திருப்தியாக இருக்க மேற்கொண்டு வம்பு பேசாமல் அமைதியாகிவிட்டனர். 

 

 

 

 

 

 

 

புதுமணத் தம்பதிகள் வருவதற்குள் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு அவர்களின் வரவுக்காகக் காத்திருந்தனர். 

 

 

 

 

 

 

 

 

அவர்கள் வந்ததும் முறைபடி வரவேற்று உபசரித்து விருந்து பரிமாறியவள் இவர்கள் உண்ட பின் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு மற்றவர்கள் உண்ண இறுதியாக உண்டாள் உமா. 

 

 

 

 

 

 

 

 

மாலைவிருந்திற்காக அசைவம் வாங்கிவற மாரியக்காவின் கணவனிடம் பணத்தைக் கொடுத்தவள், “அண்ணா நல்ல இளம்ஆட்டுக்கறியா பாத்து மூனு கிலோ, இன்னைக்குப் பிடிச்ச மீனு மூனு கிலோ, கோழிக்கறி ரெண்டு கிலோ வாங்கிக்கோங்க, நேரம் ஆனாலும் பரவாயில்லை பார்த்து வாங்குங்கள் அண்ணா” என்றவளிடம் அவரோ, “அதெல்லாம் நம்ம பாய்கிட்ட காலையிலேயே கடையில் சொல்லீட்டேன் உமா, ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் அவர்கிட்ட வாங்கிடலாம், நம்ம தனம் அண்ணன் ஒரு பத்து மணிக்கு தான் வலைகட்டுனான் நான் அவங்கிட்ட இருக்கானு கேட்கிறேன் உமா… அவங்கிட்ட இருந்தா அதையே வச்சிக்கலாம் இல்லைனா பாய்கடையில் வாங்கிக்கலாம்” என்றவரிடம் உமா, “அப்படியே பண்ணீடலாம் அண்ணா; நான் போய் தனத்துவீட்டில் பார்க்கிறேன் அங்க இல்லைனா நான் உங்களுக்குப் போன் பண்றேன் நீங்க கடையில வாங்கிடுங்க”. 

 

 

 

 

 

“இந்த மசாலா எல்லாம் வாங்கவேணாமா உமா?”. 

 

 

 

 

 

“வேணா அண்ணா… நான் போய் மசாலாவருத்து அரைக்கிறேன் என்றவள் கூடுதலாகச் சாய்ந்திரம் சாப்பிட வந்துடுங்க அண்ணா எனக் கூறிவிட்டு தனம் வீட்டிற்குப் புறப்பட்டாள்”. 

 

 

 

 

 

 

 

 

அன்பு தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!