Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 1

அத்தியாயம் 1

“டேய்..பாரி சிக்ஸ்ட்டின் சிக்ஸார் எவ்வளவு டா?”



Advertisement

“நைன்ட்டி சிக்ஸ்… உன்ன நேத்தே டேபிள் படிச்சிட்டு வர சொன்னேன் தானே.. படிக்கலையா?”

“படிச்சேன் டா.. மறந்துடுச்சு..”

Advertisement

Advertisement

“சும்மா சொல்லாத வில்வா, ஒழுங்கா படிச்சா எப்படி மறக்கும்?”

“எப்படி மறக்கும்னு தெரிலையே பாரி.. சரி, உனக்கு ஆன்சர் வந்துடுச்சா?”

Advertisement

“என்ன அங்க பேச்சு.. வில்வா, பாரி ஸ்டாண்ட் அப்..” என்று ஆசிரியரின் குரலில் எழுந்து நின்றனர் இருவரும்.

எல்.கே.ஜியில் இருந்து ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள் வில்வநாதனும் பாரிவேந்தனும். ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்களை போல ஒன்றாகவே இருப்பார்கள் எப்பொழுதும்.

“சம் தான் மிஸ் போட்டுக்கிட்டு இருக்கோம்..” என்றான் பாரி.

“அதுக்கு எதுக்கு டா பேசுறீங்க.. இன்னொரு தடவை பேசுனா தனி தனியா உட்கார வச்சிடுவேன்.. சிட் டவுன்”

பிரிச்சு உட்கார வைத்தால், அழுது ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் பக்கத்திலே எப்படியும் அமர்ந்துவிடுவார்கள்.

லஞ்ச் பெல் அடிக்கவும் அனைவரும் விரைவாக சாப்பிட சென்றார்கள்.

“வில்வா இன்னிக்கு உங்க வீட்ல என்ன லஞ்ச்?” 

“ஆலூ பரோட்டா.. நீ என்ன கொண்டு வந்திருக்க?”

“சூப்பர் டா.. ஆன்ட்டி எப்பவும் சூப்பர் லஞ்ச் தான்.. நான் லெமன் ரைஸ்..” என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.

“எனக்கு லெமன் ரைஸ் பிடிக்கும்னு வச்சிருப்பாங்க … இந்தா நீ பரோட்டா  சாப்பிடு.. நான் லெமன் ரைஸ் சாப்பிடுறேன்..”

இருவரும் பேசிக்கொண்டே மதிய உணவை முடித்தார்கள்.

அப்படி என்ன தான்டா இரண்டு பேரும் பேசுவீங்க? என்று கேட்காத ஆள் பாக்கி இல்லை. இருவரும் வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

ஒருவன்  பாத்ரூம் சென்றால் கூட, மற்றொருவன்  பாத்ரூம் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்பான்.

சென்னையில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள்.

மாலை பள்ளி மணி அடித்ததும், வில்வா பரபரப்பாக எதையோ  தேடிக்கொண்டிருந்தான்.

“என்னத்தடா தேடுற.. சீக்கிரம் வா.. டைம் ஆச்சு” என்றான் பாரி.

“என் பென்சில் எங்க வச்சேன்னு தெரியலை. அதை தான் தேடிட்டு இருக்கேன்”

“அதுவே குட்டியா தான் வச்சிருந்த.. நாளைக்கு வந்து பார்த்துக்கலாம் வாடா..”

“டேய் பாரி, அது என் தங்கச்சி பென்சில் டா..”

“என்னது உன் தங்கச்சிதா? அய்யோ.. ஏன்டா அவகிட்ட வாங்கிட்டு வந்த?”

“என் பென்சில் காணும்னு, காலையில அவசரதுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்”

“ஒரு நாள் பென்சில் இல்லனா என்னடா.. நான் தர மாட்டேன்னா? லூசாடா நீ.. அவ பென்சில் வாங்கிட்டு வந்திருக்க.. வந்தது மட்டுமில்லாமல் தொலைச்சிட்டு வேற நிக்குற.. உன்ன…”

“திட்டாம பென்சில்ல தேடுடா..”

இருவரும் பெஞ்சிற்கு கீழே பெஞ்சிற்கு மேலே குப்பை தொட்டி  என்று எல்லா இடத்தையும் புரட்டி பார்த்தார்கள். கிடைக்கவில்லை.

அதற்குள் அவர்கள் வகுப்பாசிரியர் வந்து, “என்ன பண்றீங்க, இன்னும் நீங்க இரண்டு பேரும் கிளம்பலையா? பஸ் போயிரும் சீக்கிரம் போங்க” என்றார்.

“இல்ல மிஸ் வில்வா பென்சிலை காணும்.. தேடிகிட்டு இருக்கோம்” என்றான் பாரி.

“நாளைக்கு வந்து பாருங்க. இப்ப கிளம்புங்க..”

“இல்ல மிஸ்.. பென்சில் என் தங்கச்சிது..” என்றான் வில்வா.

“என்னடா சொல்றா.. உன் தங்கச்சிதா? ஒழுங்கா தேடு.. சீக்கிரம்” என்று விட்டு மிஸ்ஸும் இவர்களுடன் சேர்ந்து பென்ஸில்லை தேட துவங்கினார்.

“என்ன கலர்? என்ன பென்சில்?”

“ரெட் கலர் மிஸ்… அதுல “கே”ன்னு பேர் எழுதி வச்சிருந்தா”

“டேய், அந்த போர்டு கீழே சுவற்றை ஒட்டி ஒரு பென்சில் இருக்க மாதிரி இருக்கு.. அதுவா பாரேன்” என்றான் பாரி.

வில்வா விரைந்து சென்று அதை எடுத்து பார்த்து.. “இது தாண்டா.. நண்பேன்டா” என்றான் சத்தமாக.

“கிடைச்சுச்சா.. ஓடுங்க பஸ்ஸுக்கு” என்று இருவரையும் விரட்டினார் மிஸ்.

“ஏன்டா, சுண்டு விரல் சைஸ் கூட இல்லையே டா.. இதுக்கா இந்த அக்கப்போர்..” என்றான் பாரி.

வில்வா, பாரி, மிஸ் எல்லாம் இவ்வளவு பதற்றப்படுவதற்கு காரணம் போன வரம் நடந்த சம்பவம்.

போனவாரம் வில்வா அவன் தங்கையின் ரப்பர் கொண்டு வந்திருந்தான். அதை தொலைத்து விட்டான்.

மறுநாள் இவன் வகுப்பிறகு வந்து, தனது ரப்பர் காணும் என்று புகார் அளித்து, அனைவரையும் எழுந்து தேட வைத்தாள். துணைக்கு அவள் வகுப்பாசிரியரையும் அழைத்து வந்திருந்தாள்.

இல்லை என்றாலும் யாரையும் விடவில்லை. ஒரு பொருள் காணும் என்றால் பொறுப்பு வேணும் இல்ல மிஸ்.. தொலைக்க தொலைக்க புதுசு வாங்கலாம்ன்ற எண்ணம் தப்பு இல்லயா?நீங்களே சொல்லுங்க என்று பாரி வகுப்பு ஆசிரியரிடம் நியாயம் வேறு கேட்டு நின்றாள்.

பின் அனைவராயும் பெஞ்சுகளை எல்லாம் நகற்ற சொல்லி தேடி பார்த்தாள். ஸ்கூல் பேக் அடியில் மாட்டி இருக்கா என்று பார்க்க சொல்லி, என்று அனைவரையும் பாடாய் படுத்தி வைத்தாள்.

கடைசியில் வகுப்பின் ஒரு மூலையில் இருந்து கண்டுபிடித்து விட்டாள்.

“கிடைச்சிடுச்சு.. தேடுன எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்று கூறி அவள் ரப்பரை தூக்கி காண்பித்தாள்.

மாத்திரை அளவிற்கு இருந்தது.

“ஏம்மா, இந்த புழுக்கை ரப்பருக்கா இந்த பாடு?” என்று கடுப்பாகி மிஸ் கேட்டதற்கு, “ஒரு பொருளின் மதிப்பு அதன் அளவில் இல்லை.. அதை நம்ம பாதுகாப்பா வச்சிருக்கத்துல இருக்கு மிஸ்.. இந்த ரப்பர் இன்னும் குறைஞ்சது நாலு நாளைக்கு வரும் மிஸ். தேங்க்ஸ் மிஸ்”  என்று கூறி சென்று விட்டாள்.

அவள் தான் கருணாம்பிகை.. வில்வநாதனின் சின்ன தங்கை.. அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.

“டேய் வில்வா, இந்த பென்சிலை எப்படி டா சீவரது. ஷார்ப்பனர் சைஸ் தான்  இருக்கும் போலவே.”

“அதை ஏன்டா கேக்குற.. முதல்ல ஷார்ப்பனர் யூஸ் பண்ணுவா.. பென்சில் சின்னதாகவும், பிளேடு வச்சு சீவுவா..”

“எப்படி டா.. கை வெட்டிக்க மாட்டாளா?“

“அம்மாகிட்ட தான் சீவி தர சொல்லி கொடுப்பா.. இதுல கூர்ப் உடைஞ்சுது, அவ்வளவுதான்.. அம்மா கூர்ப் உடையாம இருக்கணும்னு சாமி கும்பிட்டுக்கிட்டே சீவி தருவாங்க..”

“ஏன்டா உனக்கு இப்படி ஒரு தங்கச்சி?”

“எல்லாம் எங்க பாட்டி வளர்ப்பு டா.. இவங்க இரண்டு பேருகிட்டயும் மாட்டிகிட்டு நானும் எங்க அம்மாவும் படர பாடு இருக்கே..”

பேசிக்கொண்டே பேருந்து அருகில் வந்து விட்டனர் இருவரும்.

“டேய்.. அண்ணா சீக்கிரம் வாங்க.. நீயும் உன் பிரண்டும் பார்த்து பல வருஷமாச்சா? இப்படி பேசிக்கிட்டே ஆடி அசைஞ்சு வரீங்க? உங்களுக்காக தான் பஸ்சை நிப்பாட்டி வச்சிருக்கேன்” என்றாள் சத்தமாக பேருந்தில் இருந்து.

“இவளோட …. ஸ்பீக்கர் முழுங்கி இருப்பா போல” என்றான் பாரி வில்வாவிடம் மெதுவாக…

இவர்கள் வீடுகள் ஒரே தெருவில் தான் இருக்கிறது.

வில்வநாதன் கருணாம்பிகை இருவரும் சங்கரன் சுமதி தம்பதியனரின் பிள்ளைகள். அவர்களது பூர்விகம் திருச்சி பக்கத்தில் உள்ள ஒரு கிராமம். தாத்தா பாட்டி என்று சேர்ந்து வாழும் கூட்டு குடும்பம் இவர்களது.

பாரி வேந்தன் தர்மராஜ் தமயந்தி தம்பதியின் ஒற்றை பிள்ளை. பூர்விகம் சிவகங்கை மாவட்டம். இவர்கள் வீட்டு பெரியவர்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள்.

சின்ன வயதில் கொலு கொலு என்று இருந்த கருணாம்பிகை என்றால் பாரிக்கு மிகவும் இஷ்டம். நம்ம வீட்லயும் அதே மாதிரி பாப்பா வேண்டும் என்று தன் அம்மாவிடம் அழுது அடம் பிடித்த நாட்கள் ஏராளம்.

வளர வளர பாரிக்கு கருணாம்பிக்கையின் குணம் சற்றும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, “நல்ல வேலை அப்படி ஒரு பாப்பா நம்ம வீட்டுக்கு வரவில்லை” என்று அடிக்கடி கூறுவான் அம்மாவிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!