Skip to content
Post Views: 2,604
அத்தியாயம் 23
அருந்ததியும் பாட்டியும் கருணாம்பிகை வீட்டில் ஒன்றாக அமர்ந்து பாக்ஸிங் மேட்ச் பார்க்க தயாராக காத்துக்கொண்டிருந்தார்கள்.
Advertisement
“அத்தைகளையும் கூப்பிடுவோமா பாட்டி?”
“வேண்டாம் அரு, ரெண்டும் ஒரே போர் டிக்கெட். அதுவும் இல்லாமல் அவங்களுக்கு பாக்ஸிங் எல்லாம் புரியுமா சொல்லு?”
Advertisement
Advertisement
“அதுவும் சரி தான் பாட்டி, அண்ணாஸ்களுக்கு அப்புறம் இங்க நீங்க தான் ஒரே ஜாலி டிக்கெட்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே இருந்து பாரி இவர்களை வீடியோ காலில் அழைத்தான்.
Advertisement
“ஹாய் பாப்பா, ஹாய் பாட்டி, பாருங்க இது தான் எங்க பாக்ஸிங் அகாடெமி. இது ரிசெப்ஷன் ஏரியா, இந்த பக்கம் நாலு பெரிய பாக்ஸிங் ரிங் இருக்கு. இங்க தான் எங்களுக்கு எல்லாம் ட்ரைனிங்”
“அதையும் காட்டுங்க அண்ணா, நான் நேர்ல பார்த்ததே இல்லை”
“இப்ப தெரியுதா?”
“ஆன் தெரியுது, சூப்பர் அண்ணா. எங்க வில்வா அண்ணா?”
“அவன் முன்னாடி இடம் பிடிக்க போய் இருக்கான். நான் உங்களுக்கு புல்லா காட்டணும்னு இங்க இருந்தே கால் போட்டேன் பாப்பா”
“சரி பாரி, இன்னிக்கு எத்தனை பேர் சண்டை போட போறாங்க?” என்றார் பாட்டி.
“அதுவா பாட்டி, இன்னிக்கு செமி பைனல். மொத்தம் நாலு பேர் செலக்ட் ஆயிருக்காங்க. இரண்டு இரண்டு பேரா முதல்ல சண்டை போடுவாங்க. அதுல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்க திரும்ப பைனல் மேட்ச்”
“ஓ, சரி சரி.. “
“நான் உள்ளே போறேன். நீங்க இரண்டு பேரும் பாருங்க.. சரியா தெரியலைன்னா சொல்லுங்க” என்று கூறி பாரி உள்ளே செல்ல திரும்பினான்.
அப்பொழுது வில்வா, “பாரி இரு நானும் வரேன்” என்று பின்னே இருந்து வந்தான்.
“என்ன டா இடம் பிடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப வெளிய இருந்து வர்ற?”
“ஸ்னாக்ஸ் வாங்க போனேன், அது எல்லாம் துண்டு போட்டு இடம் பிடிச்சு வச்சிருக்கேன் வா”
“சூப்பர் அண்ணா, நாங்களும் ஸ்னாக்ஸ் எல்லாம் வச்சு ரெடியா இருக்கோம்” என்றாள் அருந்ததி உற்சாகமாக.
“எங்க டா இடம் போட்டிருக்க?”
“அங்க பாரு டா.. நாலாவது ரோ… சிவப்பு துண்டு போட்டிருக்கேன் பாரு” இவர்கள் இருவரும் மெதுவாக உள்ளே நடந்தனர்.
வரிசையாக நான்கு இருக்கைகளில் துண்டு போடப் பட்டிருந்தது.
“எதுக்கு வில்வா நாலு சீட்?”
“நான் இரண்டு தான் போட்டேன் பாரி” என்றான் வில்வா குழப்பமாக.
“வாவ்.. இங்க பாரு தர்ஷ்.. என்ன மாதிரியே யாரோ அறிவா துண்டு போட்டு இடம் போட்டிருக்காங்க” என்று வாயெல்லாம் பல்லாக வந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
“அது நான் தான் ஆன்ட்டி , நீங்க தமிழா?” என்று அவர்களை பார்த்து புன்னகைத்தான் வில்வா.
“ஆமா, நாங்க தமிழ் தான். துண்டு போட்டு இடம் பிடிக்கும் போதே நினைச்சேன், ஒரு தமிழரா தான் இருக்கும்னு, உட்காருங்க..” என்று மகிழ்ச்சியாக கூறிக்கொண்டே அமர்ந்தார் அந்த பெண்மணி.
‘சுத்தம்’ என்று தலையில் அடித்துக்கொண்டு அவர் அருகில் அமர்ந்தான் தர்ஷ் என்று அவரால் அழைக்கப்பட்ட இளைஞன்.
“பாரி இங்க பாரு டா, ஆன்ட்டியும் தமிழ் தானாம்” என்று நண்பனுக்கு வேறு அறிமுகப் படுத்தி வைத்தான்.
“டேய், சும்மா எவ்வளவு நேரம் டா உங்க போனயே பார்க்கிறது, எப்ப மேட்ச் ஆரம்பிக்கும்” என்று போனில் குரலை உயர்த்தினார் பாட்டி,
“இதோ இன்னும் அஞ்சு நிமிஷம்” என்றான் பாரி.
“பாட்டி, அஞ்சு நிமிஷத்துக்குள்ள நீங்க போய் நம்ம இரண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வாங்களேன்” என்றாள் அருந்ததி அங்கே.
“சின்ன பாப்பா சூப்பர் டா.. காபி குடிச்சிட்டே பார்க்க நல்லா இருக்கும்” என்று போனில் அருந்ததியிடம் கூறிக்கொண்டே,
இங்கே,” டேய் பாரி நீ போய் காபி வாங்கிட்டு வர்றீயா?” என்றான் நண்பனிடம்.
“வில்வா, ரொம்ப படுத்துனா நான் அப்படியே போய்டுவேன் பார்த்துக்கோ, வந்து உட்கார்ந்த உடனே காபி வாங்கிட்டு வர சொல்ற?” என்று கடுப்படிக்வும்,
“கூல் கூல்.. இப்ப என்ன காபி இல்லனாலும் ஓகே. மேட்ச் தான் முக்கியம்” என்று உடனே பின் வாங்கிவிட்டான்.
அந்த பெண்மணி இவர்கள் இருவரையும் குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தார்.
“போன்ல யாரு?” என்றார் மெல்ல வில்வாவிடம்.
அதன் பிறகு என்ன, இவர்கள் வாழ்க்கை வரலாற்றையே சுருக்கமாக கூறி முடித்தான் வில்வா.
“சுப் ரஹோ மீ” என்று இடை இடையே அந்த இளைஞன் கடுப்படித்தான்.
“தம்பி யாரு ஆன்ட்டி ? ரொம்ப கோவப் படராப்புல?”
“என் பையன் தான், அவங்க பப்பா மாதிரி.. சட் சட்டுன்னு கோபம் வரும்”
“சாப்பாட்டுல உப்பை குறைச்சு போடுங்க.. கொஞ்சம் கோவம் குறையும்” என்று வில்வா கூறவும், கடுமையாக வில்வாவை முறைத்தான் தர்ஷ்.
பாரி நறுக்கென்று அவன் தொடையை பிடித்து கிள்ளினான்.
“ஆ அம்மா.. ஏன்டா?”
“வாயை மூடிக்கிட்டு மேட்ச்சை பாரு, ஆரம்பிக்கப் போது”
முதல் சுற்றில் வர்ஷ் என்ற வர்ஷித்தாவும், சுரேந்தரும் களம் இறங்கினார்கள்.
“பாட்டி இது தான் நல்லா பாருங்க..”
“ஆமா டா, நீ சொன்ன மாதிரி பக்கிரிசாமி கணக்கா தான் இருக்கா”
“யாரை சொல்றாங்க அந்த பையனையா?” என்றார் அந்த பெண்மணி.
“இல்ல ஆன்ட்டி , அந்த பொண்ணை தான். இது ஒரு பார்ட் தான், இன்னும் ஒரு பொண்ணு இருக்கும் எங்கேன்னு தெரியல”
“ஓ..”
“ரெண்டு பேரும் பயில்வான் பக்கிரிசாமி மாதிரி இருப்பாங்கன்னு சொல்லி இருந்தேன்.. அதை தான் பாட்டி சொல்றாங்க”
“ஹா ஹா ஹா.. “தர்ஷ் வாய் விட்டு சிரித்தான் இப்பொழுது.
“தம்பி எதுக்கு சிரிக்கிறாப்புல ஆன்ட்டி?”
“அவன் போறான் லூசு பய.. நாம மேட்ச்சை பார்ப்போம்”
“ஆன்ட்டி , நிஜமாலுமே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நாம பிரண்ட்ஸ் ஆயிடலாம்” என்று இடையில் வில்வா அவரிடம் கைகுலுக்கி பிரண்ட் ஆக்கிக்கொண்டான்.
“உங்க பெயர் என்ன ஆன்ட்டி ?”
“ராஜி… ராஜேஷ்வரி”
முதல் சுற்றில் வர்ஷித்தா தான் வெற்றி பெற்றாள், கரகோஷம் காதை கிழித்தது.
அடுத்த சுற்று ஹர்ஷ் என்ற ஹர்ஷித்தாவும் திலிப்பும், களத்தில் இறங்கினார்கள்.
“பாட்டி இது இரண்டாவது பக்கிரிசாமி”
இந்த சுற்றில் ஹர்ஷித்தாவே வெற்றி பெற்றாள்.
“டேய் சும்மா சொல்லக் கூடாதுடா, ரெண்டு பக்கிரிசாமிகளும் சும்மா பிண்ணுதுங்க” என்று பாராட்டினார் பாட்டி.
“இன்னும் அரைமணி நேரம் பிரேக். அப்புறம் பைனல் மேட்ச். அதனால இப்ப கால் கட் பண்ணிட்டு அரைமணி நேரம் கழிச்சு கூப்பிடறோம்” என்று அழைப்பை துண்டித்தான் பாரி.
இவர்கள் வாங்கி வந்த ஸ்னாக்ஸுடன் ராஜி ஆன்ட்டி கொண்டு வந்திருந்த ஸ்னாக்ஸ் என்று நால்வரும் ஒரு பிடி பிடித்தனர்.
இப்பொழுது தர்ஷனும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.
“தர்ஷ், பைனல்ஸ் நினைச்சா பயமா இருக்குடா”
“எனக்கும் வயித்துல புளியை கரைக்குது மீ..”
“ஏன்?” என்றனர் பாரியும் வில்வாவும்
அதற்குள் பைனல் மேட்ச் தொடங்காக்குவதற்கான அறிவிப்பு கேட்டது. பாரி பாட்டிக்கு அழைத்து விட்டான்.
“இதுங்க ரெண்டும் சண்டை போட்டா, யார் மண்டை உடையும்னு சொல்ல முடியாது” என்றார் ராஜி கவலையாக.
“அதுவும் சரி தான் ஆன்ட்டி”
மிகவும் மும்மரமாக நடந்தது மேட்ச். இரண்டு பேரும் ஆக்ரோஷமாக சண்டை இட்டனர்.
இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காமல் பாக்ஸிங் செய்தார்கள்.
ஹர்ஷ்,,ஹர்ஷ்,ஹர்ஷ் என்று சிலரும், வர்ஷ், வர்ஷ், வர்ஷ், என்று சிலரும் கூச்சலிட்டு கொண்டே இருந்தார்கள்.
“அப்பா முருகா, ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகாம நீ தான் அய்யா பார்த்துக்கணும்” என்று முருகனிடம் சத்தமாக வேண்டுதலை வைத்து கொண்டிருந்தார் ராஜி.
“நீங்க எதுக்கு இவ்வளவு கவலை படுறீங்க?” என்றான் வில்வா குழப்பமாக.
ராஜி பதில் கூறாமல் மேட்சில் ஐயிக்கியம் ஆகி விட்டார்.
“இவங்களை பார்த்தா அக்கா தங்கச்சிங்க மாதிரி இருக்கு இல்ல பாரி” என்றான் நண்பனிடம்.
“ஆமாடா அப்படித் தான் தெரியுது.”
“ரெண்டு பேரும் ட்வின்ஸ்” என்றார் ராஜி.
“அட பாவமே! இப்படி இரத்த காட்டேரி மாதிரி சண்டை போடுதுங்களே, இதுங்களை பெத்தவங்கள சொல்லணும். பிள்ளையை பெக்கச் சொன்ன, பிசாசுங்கள இல்ல பெத்து வளர்த்து விட்ருக்காங்க” என்றான் சீரியசாக.
ஜுஸ் குடித்து கொண்டிருந்தவருக்கு புரை ஏறி விட்டது.
தர்ஷ் மறுபடியும் இவர்களை முறைக்கவும்,
“அடிக்கடி முறைக்கிறது நல்லது இல்லை தம்பி”, என்றான் வில்வா.
“அதானே” என்றான் பாரி.
அதற்குள் மேட்ச் இறுதி கட்டத்தை நெருங்கி இருந்தது. வர்ஷ் தலைமுடியை விடாமல் இழுத்து பிடித்துக்கொண்டிருந்தாள் ஹர்ஷ். வர்ஷ் ஹர்ஷின் கால்களை கிடுக்கு பிடி பிடித்து கைகளை முறுக்கி கொண்டிருந்தாள். சினம் கொண்ட இரு சிங்கங்களாக சீறி கொண்டிருந்தனர் இருவரும்.
நேரம் முடிந்தும் இருவரும் தோற்கவே இல்லை. அதனால் மேட்ச் ட்ரா என்று அறிவித்து விட்டார்கள்.
அப்பாடா.. என்று நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் ராஜி.
“நீங்க எவ்வளவு மென்மையா இருக்கீங்க.. இவங்க சண்டையை பார்த்தே நெஞ்சை பிடிச்சுகிட்டு அமர்ந்துட்டீங்க. இந்த குட்டி பிசாசுங்க அம்மாவும் உங்களை மாதிரி இருந்தா இப்படி வளர்த்து விட்டிருப்பாங்களா? சொல்லுங்க ஆன்ட்டி” என்றான் வில்வா அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து கொண்டே.
“நான் நினைக்கிறேன்,ஒரு வேலை, இந்த பிசாசுங்க அம்மாவும் ஒரு பெரிய பிசாசா இருப்பாங்களோ?”
மீண்டும் புரை ஏறிவிட்டது ராஜிக்கு. குடித்து கொண்டிருந்த மொத்த தண்ணீரையும் முன்னே நின்றுகொண்டிருந்த தர்ஷ் மேலே துப்பிவிட்டார்.
“மீ… “ என்றான் அவன் கடுப்பாக.
“தெரியாம பட்டிருச்சு, அதுக்கு ஏன் டென்ஷன்?” என்றான் பாரி அவனிடம்.
“அதானே “ என்றான் வில்வா.
“நீங்க சொன்ன ரெண்டு குட்டி பிசாசுங்களையும் பெத்த பெரிய பிசாசு இவங்க தான். மிஸ்ஸஸ் ராஜேஷ்வரி விக்ராந்த். அவங்க பெத்த இன்னொரு பிசாசு நான்தான்“ என்றான்.
இப்பொழுது பாரிக்கும் வில்வாவிற்கும் புரை ஏறியது. அதை பார்த்துக்கொண்டிருந்த பாட்டியும் அருந்ததியும் சிரிக்க தொடங்கினார்கள்.
பாரி அவசரமாக போனை கட் செய்து விட்டான்.
நண்பர்கள் இருவரும் பாவமாக முழிக்கவும், அவர்களை பார்த்த ராஜிக்கு சிரிப்பாக இருந்தது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பெண்கள் இருவரும் இவர்களை நோக்கி வந்தார்கள்.
ராஜி பரஸ்பரம் இரு புறமும் அறிமுகம் செய்து வைத்தார்.
கண்டிப்பாக ஒரு நாள் வீட்டிற்கு வரவேண்டும் என்று நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, தொலைபேசி எண்களையும் பரிமாறிக்கொண்டு பிள்ளைகளுடன் விடை பெற்றார் ராஜி.
—————-
error: Content is protected !!