Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக 💞32

  • சுபி நீ ஏன் இந்நேரம் எழுந்து வந்த? மருமகளை கடிந்து கொண்டார் பாப்பாத்தி.

இல்லத்தை உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு….

தரைக்கு மாப் போட்டிருக்கேன்…. வழுக்கிடப் போகுது…. கவனமா நட!

அத்தை நீங்க கோயிலுக்கு கிளம்பணும்! நான் ஏதாவது உதவி…

ஒன்னும் வேண்டாம்…. நான் பார்த்துக்கறேன் நீ போய் படு! மருமகளை விரட்டி படுக்க அனுப்பியவர் அடுத்த பத்தாவது நிமிடம் கையில் பால் டம்ளருடன் வந்து நின்றார்.



Advertisement

அத்தை எனக்கு டீ….

இனிமே பால் தான் குடிக்கணும்! நாட்டுச்சக்கரை கொஞ்சமா போட்டிருக்கேன் குடிச்சுடு.

கஷாயம் குடிப்பது போல் முகத்தை சுழித்துக் கொண்டு பாலை அன்னாத்தி ஊத்திக் கொண்டவள் மீண்டும் படுத்துவிட்டாள்.

Advertisement

சுபி எழுந்து உட்காரு!

Advertisement

என்னத்த… சலிப்பாக இருந்தது அவளுக்கு.

பால் குடிச்சுட்டு படுக்க கூடாது வாந்தி வரும். பத்து நிமிஷம் நடந்துட்டு படு!

கர்ப்பம் தறித்தால் இத்தனை பிரச்னைகள் இருக்கிறதா? அவளுக்கு படபடப்பாக இருந்தது.

Advertisement

சரி நீ ரெஸ்ட் எடு! அவர் போய்விட்டார்.

“————————-“

தேங்காய் உரிச்சு வச்சுட்டேன், வாழையிலை அறுத்து வச்சுட்டேன், மண்டை வெல்லத்தை நுணுக்கி வச்சிட்டேன். பூசை கூடைக்கு விபூதி பட்டை போட்டு வச்சுட்டேன், பொங்கல் வைக்க சுள்ளி கட்டிவச்சிட்டேன் என்று கிச்சனுக்குள் வந்தார் பூமாலை. மனைவி கொடுத்த வேலைகளை கச்சிதமாய் செய்துவிட்ட பூரிப்பு அவருக்கு.

காரசட்னிக்கு வதக்கிக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.

குமரிபொண்ணு நீ மூனு மணிக்கு எழுந்து  வேலை செய்துகிட்டு இருக்க… வயசானவங்க உன் மருமகளுங்க சுகமா தூங்குறாங்க! மன்னரு பேசுறதுல தப்பு என்ன இருக்கு சொல்லு?

கோயிலுக்கு போறோம்னு தெரியும். அப்பறம் எப்படி தூக்கம் வரும்? ஆளா ஒரு வேலையா செய்தால் தானே சீக்கிரம் கிளம்ப முடியும்?

ஷ்…சத்தம்போடாதீங்க….

அடுத்து புதிதாய் சண்டை ஏதாவது கிளம்பிவிடுமோ என்ற கவலை அவருக்கு.

சங்கீதா…. சங்கீதா… எழுந்துக்கோங்க! சீக்கிரம் எழுந்து கிளம்பி போனா தான் வெயிலுக்கு முன்ன பொங்கல் வைக்க முடியும். அறை வாசலில் நின்று குரல் கொடுத்தார் பூமாலை.

கொட்டாவி விட்டு உடலை வளைத்து நெளித்து ஒவ்வொருவராய் வெளியில் வந்தனர்.

அதிரிப்புதிரியாய் எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

மாவிளக்கு பிசைந்து கொண்டிருந்தார் பாப்பாத்தி.

அத்தை என்ன சுபி இன்னும் எழுந்துக்கலை? தலை துவட்டியபடியே வந்தாள் அஞ்சலி. டீயில் இஞ்சியை தட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா.

அவளுக்கு நாள் தள்ளி போயிருக்குனு நினைக்கிறேன்!

என்ன சொல்றீங்க? ஓரகத்திகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நைட் ஒரே வாந்தி…. என்ன ஏதுன்னு போய் பார்த்தா பத்து நாள் தள்ளி போயிருக்க மாதிரி தெரியுது!  அழகாய் பதில் கொடுத்து சமாளித்தார் பாப்பாத்தி.

அவளுக்கு முன்னாடியே தெரியுமா?

இல்லை…. வாந்தி எடுத்துட்டு பயந்துட்டா.

செக்கப் பண்ணாமலே நீங்களா… அஞ்சலி இழுக்க…

நான் நாலு புள்ள பெத்தவ! நறுக்காய் பதில் வந்தது.

அதுக்கில்லத்தை எதுக்கும் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டா நல்லது தானே?

அவ புருஷன் வந்து செக்கப் பண்ண கூட்டிட்டு போவான். நீங்க டீயை குடிச்சுட்டு குழந்தைகளை ரெடி பண்ணுங்க என்றார்.

கிழவிக்கு முன்னாடியே தெரியும் போலயே என்று கண்களால் பேசிக் கொண்டனர் மருமகள்கள்.

மருமகள்களுக்கு ஆளுக்கு ஒரு வேலை ஏவிவிட்டு அவசரமாய் சுபியிடம் வந்தார் பாப்பாத்தி.

கையில் போனை வைத்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுபி.

மாமியார் வரவே என்னத்தை என்றாள் சோர்வுடன்.

உனக்கு நாள் தள்ளி போயிருக்குன்னு உன் ஓரகத்திகளுக்கு லேசா சொல்லியிருக்கேன்.

வீட்டிலே டெஸ்ட் பண்ணி பார்த்தோம்னு உளறி வச்சுடாதே….

ஏன்த்தை சொல்ல வேண்டாமா? புரியாமல் கேட்டாள்.

நைட் தான் தெரியும்னு நான் சொன்னதுக்கு நம்பாத பார்வை பார்க்குறாளுங்க. என்னவோ திட்டம்போட்டு அவங்களுக்கு சொல்லாத மாதிரி.

சுபியை எச்சரித்து விட்டு அவர் போய்விட்டார்

“—————————“

மகாராணி எழுந்து வர மாட்டா…. வா சங்கிக்கா நம்ம போய் பார்த்துட்டு வருவோம் என்று  இழுத்து சென்றாள் அஞ்சலி.

ஓரகத்திகள் வரவே….. வாங்கக்கா என்று எழுந்து நின்றாள்.

சுபி எங்களை பெரியம்மா ஆக்கிட்ட வாழ்த்துக்கள் என்றாள் சங்கீதா.

வெட்கப் புன்னகையுடன் தேங்ஸ்க்கா என்றாள்.

முன்னாடியே சிம்டம்ஸ் தெரிஞ்சுதா? அது தான் ஊரில் இருந்து வந்துட்டியா? அஞ்சலி துருவி துருவி விசாரித்தாள்.

இல்லைக்கா நைட் பரோட்டா சாப்பிட்டு வந்து படுத்தேன் ஒரே வாந்தி. நான் பரோட்டா சாப்பிட்டது சேரலைன்னு நினைச்சேன். அத்தை தான் எப்போ தலைக்கு ஊத்திக்கிட்டேன்னு கேட்டாங்க!

ஓ…… என்ற அஞ்சலி மெடிக்கல் ஷாப்பில் கிட் வாங்கி பார்த்தால் ரெண்டு நிமிஷத்தில் தெரிஞ்சுடப்போகுது என்றாள்.

நீங்க கோயிலுக்கு போயிட்டு வாங்க அப்புறம் டெஸ்ட் பண்ணுவோம் என்றாள்.

உன் புருஷனுக்கு சொல்லிட்டியா?

அவன் தானே எனக்கு சொன்னான் என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவள். ம்ம்ம்ம்ம் நைட் மெசேஜ் போட்டேன்.

செய்தி தெரிந்த உடனே மன்னாதி மன்னரு பறந்து வந்திருப்பாரே…. அஞ்சலி கேலியாய் சிரித்தாள்.

இல்லக்கா பந்தோபஸ்துக்கு போனா லீவ் தர மாட்டாங்களாம். மாநாடு முடிந்து தான் வரமுடியுமாம்.

சரி உடம்பை பார்த்துக்கோ, பத்திரமா இரு! நாங்க கோயிலுக்கு கிளம்புறோம் என்று இருவரும் விடை பெற்று வெளியில் வந்தனர்.

“—————————“

சங்கீ,அஞ்சலி நாம விரதம் இருக்கணும் குழந்தைகளுக்கு மட்டும் டிபன் கொடுத்து கூட்டிட்டு கிளம்புங்க நாம கோயிலில் போய் பொங்கல் வைத்து தான் சாப்பிடணும்.

சரிங்க அத்தை என்றனர் பொறுப்பாய் மருமகள்கள்.

சுபி நீ டிபன் சாப்பிடு. மதியத்துக்கு சாம்பார்சாதம் செய்து வச்சிருக்கேன் சாப்பிட்டுக்கோ .மாமாவை உனக்கு துணையா விட்டுட்டு தான் போறோம். நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம்.

மன்னர் வந்து ஹாஸ்பிடல் போய் கன்ஃபார்ம் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு சொல்லிக்கலாம் அவசரப்பட்டு யாருக்கும் சொல்ல வேண்டாம் ஜாக்கிரதையா இரு!என்று மருமகளுக்கு ஆயிரம் பத்திரம் கூறிவிட்டு கணவருக்கு அத்தனை கட்டளை பிறப்பித்து விட்டே கிளம்பினார் பாப்பாத்தி.

இரண்டு கார்களிலுமாய் கிளம்பி விட்டார்கள்.

சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் மாமனாரின் வற்புறுத்தலில் இரண்டு இட்லி சாப்பிட்டு முடித்தாள்.

மீண்டும் போனை எடுத்து பார்த்தாள். எரிச்சல் அதிகமாகியது. போனை தூக்கி போட்டு உடைக்க வேண்டும் என்ற வெறி உண்டானது.

அப்படி என்ன மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன். அழைப்பை ஏற்றால் தானே மன்னிப்பு கோர முடியும்?

அழுகை ஆவேசம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து மூச்சு முட்டியது.

தோட்டத்தில் சற்று நேரம் அமரலாம் என்று சென்றவள் அங்கு கணவனுடன் பேசி சிரித்த நினைவுகள் அவளை இன்னும் வதைத்தது. அன்றொரு நாள் அவன் முத்தமிட்டு ரோஜா கொடுத்த நினைவுகள் அவளை ஏங்க வைத்தது.

பேச மாட்டிங்களா? நான் பேசினது தப்பு தான் மன்னிச்சுக்கோங்க! எத்தனை முறை கால் பண்றேன் அவ்வளவு கோபமா? சரி நீங்க பேசவேண்டாம். உங்க இஷ்டம் போல இருங்க…. அவ்வளவு தான் உங்க அக்கறை!மூக்கை உறிஞ்சியபடியே வாய்ஸ் நோட் அனுப்பினாள்.

என் கணவனை என்னிடம் பேச சொல்லுங்க என்று மாமனார் மாமியாரிடம் போய் நிற்க முடியுமா?.

இந்த பிரச்னையை மாமியாரிடம் எப்படி சொல்ல முடியும்? உங்க மகனை கேவலமா பேசிவிட்டேன் என்றா சொல்ல முடியும்? காரி துப்பிவிட மாட்டார்களா?

இந்நேரம் அவள் மனநிலை வெகுவாய் கவலை கொண்டிருந்தது.

தாய்மை எவ்வளவு சந்தோஷமான வரம்! அதை மகிழ்வுடன் சுகிக்க முடியவில்லையே….

எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது கலங்கி அமர்ந்திருந்தாள்.

அண்ணி சொன்னது போல் கோபமே வராத அவருக்கு கோபம் வந்துவிட்டதோ…. தான் அப்பா ஆகப்போவதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும்? ஆனால் அந்த மகிழ்ச்சியை கூட என்னுடன் பகிராமல் பூட்டி வைத்து கொள்கிறார் என்றால் என் மீது அவ்வளவு வெறுப்பா?

சிந்திக்க சிந்திக்க தலை சுற்றுவது போல் இருந்தது.

தீராத பிரச்னை என்று உலகத்தில் இல்லை ஆனால் அது என்று தீரும் என்பது தான் கேள்வி?

“———————-“

சுபி என்னம்மா மரத்தடியில் உட்கார்ந்துட்ட? பெரிய பலாப்பழத்துடன் வந்தான் சசிதரன்.

வாங்கண்ணா…! சும்மா காத்தாட உட்கார்ந்தேன்.

கோயிலுக்கு போனவங்க இன்னும் வரலையா?

சாயந்திரம் வந்திடுவாங்க! அத்தை போன் பண்ணாங்க!

வாங்க உட்காருங்க! காபியா? டீயா?

அதெல்லாம் வேண்டாம் நான் இப்போ தான் காலை சாப்பாடு சாப்பிட்டு வரேன்.

நீ உட்காரும்மா….. நம்ம தோட்டத்து பழம். தேன் கணக்கா இனிக்கும்! அண்ணிங்க எல்லாம் வந்திருக்காங்க நீங்க எல்லாரும் சாப்பிடுவீங்கன்னு தான் பெரிய பழமா கொண்டு வந்தேன்.

தேங்க் யூ என்று சிரித்தவள்…. அண்ணி எப்படி இருக்காங்க? குட்டி பொண்ணு எப்படி இருக்கா? நலம் விசாரித்தாள்.

நாங்க நல்லா இருக்கோம். நீ ஏன் இவ்வளவு டல்லா இருக்க? சட்டென்று கேட்டுவிட்டான்.

நானா… நான் நல்லா தான் இருக்கேன்…. சிரிக்க முயன்றாள்.

மன்னரு ஏதாவது….?

அய்யோ அதெல்லாம் இல்லை….. உடனடியாய் மறுத்தாள்

இல்லை ஏதோ முகம் வாட்டமா தெரியுது. நேத்து மன்னருகிட்ட பேசினேன் அவனும் சரியா பேசலை.

அப்படிலாம் எதுவும் இல்லைண்ணா….

இல்லைனா சந்தோஷம்!

மன்னரு ரொம்ப நல்ல டைப் சுபி. சின்னதில் இருந்தே அவன் பக்குவமா நடந்துப்பான். வம்பு தும்பு பண்ணமாட்டான். ஊதாரியா சுத்த மாட்டான். தங்கமான பிள்ளை அவன்.

கொஞ்சம் உம்முன்னு இருப்பான். ஆனா ரொம்ப யோசிப்பான். எனக்கு முடிவு எடுக்க குழப்பமா இருக்கும்போதெல்லாம் அவன்கிட்ட தான் ஐடியா கேட்பேன். அவன் சொன்னா சரியா தான் இருக்கும்.

ரொம்ப தான் மன்னர் புகழ் பாடறீங்க புலவரே…. கவலை மறந்து சிரித்துவிட்டாள்.

என் மச்சானை பெருமையா சொன்னா உனக்கு சிரிப்பா இருக்குதா? என் மச்சான் அருமை பெருமை தெரிந்து தான் DSP அவர் தங்கச்சி பொண்ணை கொடுக்க ரெடியா இருந்தார்.

இது என்ன கம்பிகட்டுற வேலை என்பது போல் அவள் நம்பாத பார்வை பார்க்க….

நிஜமா சுபி…. அவனை எவ்வளவோ கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாரு. ஏன் வீட்டுக்கே வந்து மாமா அத்தைகிட்ட பேசிட்டு போனாரு. அவன் வேண்டவே வேண்டான்னு பிடிவாதமா மறுத்துட்டான்.

ஒரே பொண்ணு எவ்வளவு சீர் வேணாலும் செய்றேன்னு சொன்னாங்க.

மன்னருக்கு உன்னை தான் பிடிச்சது!

அவ்வளவு சந்தோஷமா உன்னை கல்யாணம் பண்ணினான்.

மன்னர் பொக்கிஷம் சுபி. “போலீஸ்ன்னு பேரு பத்து பைசா யாருகிட்டேயும் கை நீட்டினதில்லை”,சிங்கிள் டீ கூட அடுத்தவங்க காசுல குடிக்க மாட்டான்.

அவன் கொஞ்சம் அழுத்தமா இருந்தாலும் நீ கொஞ்சம் அனுசரித்து நடந்துக்கோ சுபி.

சரிங்கண்ணா என்றாள் மனமுவந்து.

அவளுக்கு உண்மையில் புரிந்தது மன்னர் மாபெரும் மன்னன் தான். உயர்ந்த குணங்களை கொண்டவன் என்று.

உங்க நண்பனை பற்றி என் காதில் ரத்தம் வர வரைக்கும் பேசினீங்க! இதே மாதிரி அவர்கிட்டேயும் பேசணும் சொல்லிட்டேன்.

என்ன பேசணும்? புரியாமல் கேட்டான்.

என் தங்கச்சி நல்லவ, என் தங்கச்சி படிச்சவ, குணமான பொண்ணு,குடும்பத்துக்கு ஏத்த குத்துவிளக்குன்னு சொல்லணும்.

மன்னருக்கு ஏத்த ஜோடி தான் அவ்வளவு சிரிப்பு சசிக்கு.

“————————–“

என்ன மன்னர் ஸ்வீட் எல்லாம்? உடன் பணியில் இருக்கும் மற்ற காவலர்கள் கேட்க…. இன்னியோட நான் காவல் துறையில் சேர்ந்து ஒன்பது வருஷம் முடியுது என்றான்.

சூப்பர் என்று வாழ்த்து கூறினார்கள். தான் அப்பா ஆகப்போகிறேன் என்று சொல்வில்லை.

ஆனால் பிறரோடு இணைந்து இனிப்பு சுவைக்க அவ்வளவு மகிழ்வாக இருந்தது.

மதியம் சாப்பிட்டிருப்பாளா? அதே யோசனை அவனுக்குள்.

தந்தைக்கு அழைத்துவிட்டான்.

சொல்லுப்பா!

என்னப்பா என்ன பண்றீங்க? அம்மா சாப்பாடு செய்து வைத்துட்டு போனாங்களா? சாப்பிடீங்களா? இயல்பாய் பேசுச்சு கொடுத்தான்.

மதியத்துக்கு செய்து வைத்துட்டு தான் போனாங்க.நான் இப்போ தான் சாப்பிட்டேன்!

உங்க மருமக தூங்குறாளா?

இல்லையே டிவி பார்க்குது.

அவ சாப்பிட்டாளா?

இல்லப்பா…. பசிக்கலைன்னு சொல்லுது! காலையில் சாப்பிட்டதே நெஞ்சுக்குள்ள நிற்குதாம்.

ப்பா மணி ஒன்னே முக்கால் ஆகுது. இன்னுமா சாப்பிடாம இருக்கா….?, அவரிடம் கடிந்தான்.

ப்பா…அவளை முதலில் சாப்பிட சொல்லுங்க!

சரிப்பா….

என்னம்மா  மணி ரெண்டாகப் போகுது நாலுவாய் சாப்பிட்டு டிவி பார்க்கலாமே…

இல்லை மாமா பசிக்கவே இல்லை…. சாப்பிட பிடிக்கவே இல்லை என்றாள்.

உன் புருஷன் போன் பண்ணி என்கிட்ட காயறான்.

ரொம்ப தான் அக்கறை! உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள்.

இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் நான் அப்புறமா சாப்பிடறேன் என்று அனுப்பி வைத்தாள்.

சார் பேச மாட்டாராம் ஆனா அக்கறை சக்கரை மட்டும் பொங்கி வழியுமாக்கும்.

“—————————“

என்னப்பா சாப்பிட்டாளா? அடுத்த பத்தாவது நிமிடமே அழைத்துவிட்டான்.

பசிக்கலையாம்,!

அது எப்படி பசிக்காம போகும்? அம்மா இருந்திருந்தால் அதட்டி மிரட்டி சாப்பிட வச்சிருப்பாங்க!

மகனின் பேச்சில் சிரிப்பு தான் பூமாலைக்கு.

நான் இப்போ என்ன பண்ணனும்?என்றார் அப்பாவியாய்.

ஒன்னும் பண்ண வேண்டாம் மதியத்தில் ஒரு குட்டி தூக்கம் போடுவீங்களே அதை செய்யுங்க!

இருப்பு கொள்ளவில்லை…. வயிற்றில் பிள்ளையை சுமப்பவள் இப்படி வெறும் வயிறாய் காய்ந்து கிடைக்கிறாளே.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் தன் கோபத்தை கிடப்பில் போட்டுவிட்டு “சுப்பு சாப்பிடு! ” என்று மெசேஜ் போட்டிருந்தான்.

ம்கூம் கிணற்றில் போட்ட கல் தான்.

ராட்சசி வேண்டும் என்றே பழி வாங்குறா…… இவளை…. அடித்து கையை காலை உடைக்கணும்! பல்லை கடித்தான்.

சும்மாவே சாப்பாட்டுராணி இப்போ அண்டா அண்டாவா அள்ளி தின்னுட போறாளா?  கடவுளே…. தலையை பிடித்துக் கொண்டான்.

பொறுமை இழந்தவன் அழைப்பு விடுத்தான். முழு ரிங்கும் சென்று கொண்டேடேடேடே இருந்தது. அவள் வேண்டும் என்றே எடுக்கவில்லை என்று புரிந்தது.

உடனே தந்தைக்கு அழைத்தவன் அப்பா போனை கொண்டுப்போய் உங்க மருமகட்ட கொடுங்க!

சரிப்பா என்றார் சிரிப்புடன்.

இந்தாம்மா உம்புருஷன் பேசுறான்….

அவரிடம் மறுக்க முடியாமல் வாங்கி கொண்டாள்.

ஏய் என்னடி நினைச்சுட்டு இருக்க? எடுத்த எடுப்பில் எகிறிவிட்டான்.

“உங்களை இல்லை…” வெடுக்கென பதில் வந்தது.

அடிச்சு பல்லை உடைச்சுடுவேன். வேளா வேளைக்கு தின்னு தொலையறதுக்கு என்ன?

அவள் பதில் பேசவில்லை.

ஏன்டி என்னை படுத்துறது போதாதுன்னு என் பிள்ளையையும் படுத்தி எடுக்குற?

முனுக்கென்று அவள் கண்ணில் நீர் திறண்டுவிட்டது.

ஸாரி…. ஸாரி என்றாள்.

உன் ஸாரி எனக்கு வேண்டாம். ஒழுங்கா போய் சாப்பிடுற! ரொம்ப ஏடாகூடம் பண்ணின உங்கப்பன் வீட்டுல கொண்டு போய் விட்டுடுவேன்! பகிரங்க மிரட்டல் அது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!