Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 26

அத்தியாயம் 26

கனமான லக்கேஜ்ஜுகளை தூக்கிக்கொண்டு ஹர்ஷித்தாவும் வர்ஷித்தாவும் முதலில் இறங்கினார்கள்.



Advertisement

அவர்கள் பின்னே கருணாம்பிகை இறங்கினாள்.

ஒரு சிறிய ஹான்ட் பேக் எடுத்துக்கொண்டு மெதுவாக கடைசியாக இறங்கினார் ராஜி.

Advertisement

Advertisement

“ஆஹா.. இது தான் நம்ம சொந்த மண்ணோட வாசனை…” என்று ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டார்.

“லொக் லொக்” என்று இருமல் வந்துவிட்டது.

Advertisement

“மீ.. எப்ப தான் உங்களுக்கு அறிவு வளருமோ? சென்னை, டில்லி, பெங்களூரு எல்லாமே இந்தியால தான் இருக்கு. ஒரே மாதிரி எல்லா இடத்துலயும் பொல்யூஷன் தான் அதிகமா இருக்கு, சும்மா சீன் போடாம வாங்க மீ” என்றாள் ஹர்ஷித்தா கடுப்பாக.

“ஆமா, நானே அத்தை வீட்ல எப்படி சமாளிக்கப் போறோமோன்னு டென்ஷன்ல இருந்தா, சொந்த மண் சுமந்த மண்ணு டயலாக் சொல்லிக்கிட்டு “ என்றாள் வர்ஷித்தா.

“ஹே மெதுவா பேசுங்க டீ, உங்க அத்தை நம்மளை பிக்கப் பண்ண வரேன்னு சொல்லி இருக்கா, அவளுக்கு கேட்டுட போகுது” என்று சத்தமாக ரகசியம் பேசினார் ராஜி.

“நீ எப்படி போக போற கருணா? வீட்ல இருந்த யாராவது வருவாங்களா?”

“யாராவது வருவாங்க ஆன்ட்டி, உங்க கூட பேசிக்கிட்டே வந்ததுல வீட்டுக்கு கால்கூட பண்ணலை நான், இருங்க வீட்டுக்கு பேசிட்டு சொல்றேன்”, என்று தன் அலைபேசியை எடுக்கவும், “ஹாய் கருணாக்கா” என்ற அருந்ததியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

“ஹாய்..” என்று கருணா சொல்லி முடிப்பதற்குள்,

“ஹேய்ய்… சின்ன பாப்பா” என்று ராஜி கருணாவை தள்ளிவிட்டு அருந்ததியை கட்டி பிடித்து அவளை ஒரு சுற்று சுற்றி நிறுத்தினார்.

“ராஜிம்மா.. போன்ல பார்க்கிறதை விட நேர்ல இன்னும் யங்கா இருக்கீங்க” என்று அருந்ததியும் அவருடன் பேச தொடங்கிவிட்டாள்.

அப்பொழுது தான் கருணா அவினாஷை கவனித்தாள்.

“ஹாய் அவினாஷ்… நீங்க ரெண்டு பேரும் தான் வந்தீங்களா? நான் அப்பா வருவாங்கன்னு நினைச்சேன்”

“அங்கிள் தான் வராதா இருந்துச்சு. திடீர்ன்னு காலையில ஒரு முக்கியமான மீட்டிங் வந்துடுச்சுன்னு சொன்னாங்க, அதான் நான் வந்தேன், பாப்பா நானும் வரேன்னு சேர்ந்துக்கிட்டா”

பின் கருணா, ஹர்ஷித்தா வர்ஷித்தா இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“அண்ணா, இவங்க தான் ராஜிம்மா, நம்ம அண்ணாஸ் ரெண்டு பேருக்கும் பெஸ்ட் பிரண்ட்..” என்று அருந்ததி ராஜியை அறிமுகப்படுத்தினாள்.

“ஏம்ப்பா அவி, நான் திரும்ப டெல்லி போகும்போது எனக்கு ஒரு கிரைண்டர் அப்புறம் இட்லி மெஷின் பார்ஸல் ஓகேவா, அதே மாதிரி இனி செய்யப் போற எல்லா ப்ராடக்ட்ஸ்க்கும் என்னையும் டெஸ்டிங் டீம்ல சேர்த்துக்கணும்” என்றார் உற்சாகமாக.

அளவான சிரிப்புடன் சம்மதம் தெரிவித்தான் அவினாஷ்.

“ஹே சின்னு..” என்று ராஜி அழைக்கவும்.

அருந்ததி யாரை கூப்புடுகிறார் என்று குழப்பமாக பார்க்கவும்,

“சின்ன பாப்பாவோட ஷார்ட் பார்ம்..” என்றார்.

“சொல்லுங்க ராஜிம்மா” என்றாள் மலர்ந்து.

“உங்க அண்ணா அளந்து தான் பேசுவான்னு வில்லுவும் பாருவும் சொன்னாங்க, அதுக்குன்னு இவ்வளவு அளந்தா?”

“அய்யோ ராஜிம்மா, நீங்க நிஜமா சூப்பர் போங்க.. நீங்க சொல்றது சரிதான். அண்ணா அளந்து தான் பேசுவாங்க”

“மீ, நீ விட்டா இங்கேயே கதை பேசிட்டு இருப்ப, முதல்ல அத்தைக்கு போன் போட்டு கேளு, இல்லன்னா நாம கேப் பிடிச்சு போகலாம்” என்று ஹர்ஷ் ராஜியின் கவனத்தை திருப்பினாள்.

“நீயே கால் பண்ணு ஹர்ஷ்..” என்று விட்டு ராஜி மீண்டும் அருந்ததியிடம் பேசத் தொடங்கினார்.

ஹர்ஷ் தொலைபேசியை எடுத்து கொஞ்சம் நகர்ந்து சென்று தன் அத்தைக்கு அழைத்தாள். வர்ஷும் அவளுடன் இணைந்து கொண்டாள். ஆனால் அவர்கள் அத்தை தொலைபேசியை எடுக்கவே இல்லை.

“நீங்க கேப்ல எதுக்கு போகணும், அவங்க வரலைன்னா நாங்களே ட்ராப் பண்ணிடறோம்” என்று அவினாஷ் கூறினான்.

அப்பொழுது, “ஹே.. கருணா” என்று கூவிக்கொண்டே அவளை வந்து கட்டி பிடித்துக்கொண்டார் சீதா லட்சமி மிஸ்.

“மிஸ் நீங்க எங்க இங்க? எப்படி இருக்கீங்க?”

“அதைவிடு.. நீ சொல்லு? எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்க?”

“சூப்பரா பண்ணிருக்கேன் மிஸ். இப்ப தான் முடிச்சிட்டு கிளம்பி வந்து இறங்கி இருக்கேன். ரிசெல்ட் வர செப்டம்பர் ஆகிடும்”

“ரிசல்ட் எல்லாம் சூப்பராத்தான் வரும். கருணா பத்தி தெரியாதா?”

“ஹே அவினாஷ்? எப்படி இருக்க? இவ உன் தங்கை தானே?” என்று அவினாஷை நலம் விசாரித்துவிட்டு, பின்னரே ராஜியை பார்த்தார் சீதா லட்சமி.

இவர்கள் பேசுவதை ஆங் என்று வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தார் ராஜி.

“அண்ணி நீங்க என்ன இவங்க கூட? உங்க ட்ரெயின் அதுக்குள்ள வந்துடுச்சா? என்றார் சீதாலட்சுமி ராஜியிடம்.

“எங்க ட்ரெயின் வந்து ரொம்ப நேரம் ஆச்சு சீதா?ஆமா உனக்கு இவங்களை எல்லாம் தெரியுமா?”

“தெரியுமா வா? நான் பார்க்க வளர்ந்த பசங்க” என்றார் பெருமையாக.

“நீங்க தானா இவங்க நாத்தனார்? என்ன ஒரு கோஇன்சிடென்ஸ்?” என்றாள் கருணா.

“ஹாய் அத்தை!” என்று வந்தனர் இரட்டையர்கள்.

“உங்க போன் ரிங் போய்ட்டே இருக்கு, நீங்க எடுக்கலை?

உடனே சீதா லட்சுமி மிஸ், தன் கை பையில் இருந்து அலைபேசியை எடுத்து பார்த்தார். அது சைலன்ட் மோடில் இருந்தது.

“ஹி ஹி.. சைலன்ட்ல இருக்கு..” என்று அசடு வழிய கூறினார்.

“மிஸ், நீங்க எப்படி போவீங்க? கேப்ல வந்தீங்களா? நாங்களே உங்களை விட்டுட்டு போறோம்” என்றான் அவினாஷ்.

“இல்ல அவினாஷ், என் வீட்டுக்காரர் வந்திருக்கார். வெளியே பார்க்கிங்க்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார், நாங்க போயிடுவோம்”

“சரி அப்ப நாங்களும் கிளம்பறோம், கண்டிப்பா எங்க வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பு விடுத்து விட்டு கருணா அவினாஷ் அருந்ததியுடன் கிளம்பிவிட்டாள்.

மறுபுறம் ராஜியும் பிள்ளைகளும் சீதாலட்சமி மிஸ்ஸுடன் புறப்பட்டனர்.

——

“அப்புறம் அருந்ததி இந்த செமெஸ்டர்ல என்ன மார்க் வரும்? ஒழுங்கா எக்ஸாம் எழுதி இருக்கியா?” என்று அருந்ததியிடம் கேட்டாள் கருணா.

“நல்லா எழுதியிருக்கேன்னு தான் நினைக்கிறன் அக்கா. அப்புறம் டெல்லில என்னல்லாம் பார்த்தீங்க அதை பத்தி சொல்லுங்க?”

“நான் பெருசா எதுவும் பார்க்கல அருந்ததி, படிக்கவே நேரம் சரியா இருந்துச்சு. என்னை விட நீ தான் நிறைய பார்த்திருப்ப. உன் அண்ணாஸ் ரெண்டு பேரும் தான் வீடியோ கால் போட்டு உன்னை கூடவே கூட்டிட்டு சுத்துனாங்களே”

“ஆமா க்கா, அப்படி தான் ராஜிம்மாவும் எனக்கு பிரண்ட் ஆனாங்க”

அவினாஷ் அமைதியாக இருவர் பேசுவதை கேட்டு கொண்டே நடந்தான்.

அவினாஷ் புதிதாக கார் வாங்கி இருந்தான். அதில் தான் கருணாவை அழைத்து செல்ல வந்திருந்தார்கள். கருணா முன் சீட்டில் அவினாஷ் அருகில் அமர்ந்துகொண்டாள். அருந்ததி பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள்.

“இப்ப ரிசல்ட் வந்ததும் நெக்ஸ்ட் என்ன கருணா?”

“செப்டம்பர்ல ரிசல்ட் வரும். பாஸ் ஆயிட்டோம்னா, ட்ரைனிங் இருக்கும், பதினாறு மாசம் ட்ரைனிங் இருக்கும்”

“ஓ, அதுவும் டெல்லில தானா?”

“இல்ல அது உத்தரகண்டில் உள்ள முசோரி என்ற ஊர்ல தான் மோஸ்ட்லி இருக்கும். சில சமயம் பீல்டு ஒர்க்குன்னு வெளி ஊர் போற மாதிரியும் இருக்கும்”

“அப்ப அண்ணாஸ் உங்க கூட அங்கே வந்துடுவாங்களா?” என்றாள் அருந்ததி இடை புகுந்து.

“ஹா ஹா ஹா.. அவங்க வந்தாலும் உள்ளே விட மாட்டாங்க. அவங்களை இப்ப வேலை செய்யுற ஹாஸ்பிடல்ல இருந்தும் வெளியே விட மாட்டாங்க..”

“அப்புறம் கருணா” என்றான் அவி.

“ட்ரைனிங் முடிஞ்சதும் போஸ்டிங், அது எங்கேன்னு சொல்ல முடியாது”

“ஓ”

“அப்புறம், அவினாஷ் எப்ப பிசினஸ் எல்லாம் ஆரம்பிக்க போறதா இருக்கீங்க?”

“இன்னும் ஒரு வருஷம் ஆகும்னு நினைக்கிறன் கருணா. வீடு வாங்கினது கார் வாங்கினது இப்படி கொஞ்சம் செலவு வேற பக்கம் இழுத்திடுச்சு”

“முதல்ல வேலைக்கு போய் கிட்டே சின்ன லெவல்ல உங்க பிசினஸ் ஆரம்பிக்க முடியாதா? தாத்தாவை வச்சு பார்த்துக்கிட்டிங்கன்னா, கொஞ்சம் பிக் அப் ஆனதும் வேலையை விடலாமே?”

இந்த கோணத்தில் அவன் யோசித்திருக்கவில்லை.

“தாத்தாவால எல்லாம் முடியுமா?”

“ஏன் முடியாமா?சனி ஞாயிறு உங்களுக்கு லீவ் தானே, அப்ப என்ன எல்லாம் வேலைன்னு திட்டமிட்டு குறிச்சு கொடுத்தீங்கன்னா, தாத்தா பார்த்துப்பாங்க. அவருக்கு உதவிக்கு வேணும்னா ஒரு நல்ல ஆளா பார்த்து சேர்த்துக்கலாம்.

அதுவும் இல்லாமல் ஆபீஸ் முடிச்சிட்டு நீங்களும் டெய்லி கொஞ்ச நேரம் பார்க்கலாம். படிச்சிகிட்டே பார்ட் டைம் வேலை பார்த்தது எல்லாம் எப்படி? பிளானிங் தானே? கொஞ்சம் நிலையா நின்னப்புறம் நீங்க வேலையை விட்டுடலாம், யோசிங்க”

“ஹ்ம்ம்.”

“அண்ணாஸ் ரெண்டு ரூல்ஸ் கிட்டவும் வந்து மாட்டிக்கிட்டன். ஒரே படிப்ஸ் பிஸ்னஸ்ன்னு மொக்க போட்டுட்டு வர்றாங்க” என்று இவர்கள் மூவர் இருக்கும் குரூப்பில் மெசேஜ் போட்டுக்கொண்டே வந்தாள் அருந்ததி.

“பாவம் சின்ன பாப்பா நீ”, என்று வில்வாவும் பதில் அனுப்பி கொண்டிருந்தான்.

“கருணா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றான் அவினாஷ் மெதுவாக.

இப்படி ஒரு பேச்சை கருணா எதிர்பார்க்கவில்லை அதுவும் அவினாஷிடம் இருந்து. மெதுவாக திரும்பி பார்த்தாள்.

“நாங்க சென்னைக்கு வந்ததுல இருந்து என்னோட ஒவ்வொரு முன்னேற்றத்துலயும் உன்னோட பங்கு இருக்கும். இப்ப கூட நீ பேசறதை கேட்டதும் தான் எனக்கு இன்னும் நிறைய நம்பிக்கை வந்த மாதிரி இருக்கு” என்றான் உள்ளார்ந்து.

கருணா மெல்லிய புன்னகையை பதிலாக தந்தாள்.

“ஆஃப் கோர்ஸ் இப்பவும் போன்ல பேசிக்கிட்டோம் தான். ஆனா, எப்படி சொல்றதுன்னு தெரியல. உன்னோட ப்ரெசன்ஸ்சை நான் ரொம்பவே தேடினேன்”

கருணா அமைதியாக அவன் சொல்லுவதை உள்வாங்கினாள்.

“நீயும் என்னை மிஸ் பண்ணுனியா?”

“மிஸ் பண்ணுனேன்னா இல்லையான்னு தெரியல அவினாஷ். என் முழு கவனமும் படிப்புல தான் இருந்துச்சு. ஆனா உன் கூட பேசறப்ப எல்லாம் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும், மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கும். எனக்கு காய்ச்சல் வந்தப்புறம் ஒரு நாள் நீ சொன்ன இல்ல, உன்னோட பெஸ்ட் கொடு போதும், மத்தது தன்னாலே நடக்கும்னு, அதுக்கப்பறம் தான் நான் தெளிஞ்சு படிக்க ஆரம்பிச்சேன். அப்ப யோசிச்சேன், என்னை எனக்கே மீட்டெடுத்து கொடுக்கவும் ஒரு ஆளிருக்குன்னு”

இந்த பதில் தான் எதிர்ப்பார்த்த பதிலா என்று அவினாஷிற்கும் தெரியவில்லை.

இவர்கள் இருவரும் முன்னிருக்கையில் பேசிக்கொண்டே வந்தனர். அருந்ததி போனுடன் பின்னிருக்கையில் ஐக்கியமாகி விட்டாள்.

காரை கருணாவின் வீட்டின் முன் நிறுத்தினான். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வந்திருக்கிறாள் அல்லவா.

அனைவரும் வாசல் வந்தே கருணாவை வரவேற்றனர்.

அன்று மதியம் தமயந்தி தர்மராஜ், அவினாஷ் அருந்ததி தாத்தா என்று அனைவருக்கும் இவர்கள் வீட்டில் தான் உணவு.

கருணாவிடம் அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

“இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு இங்க தானே கருணா இருப்ப?” என்றார் சுமதி ஏக்கமாக.

பாட்டி பேத்தியின் அருகிலே அமர்ந்து பார்த்து பார்த்து பரிமாறினார்.

“நான் உங்க சமையலை எல்லாம் மிஸ் பண்ணவே இல்லை. பாரிவேந்தனும் அண்ணாவும் அப்படி என்னை பார்த்துக்கிட்டாங்க தெரியுமா?” என்றாள் பெருமையாக.

அதை கேட்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.

“உன்கூட வரேன்னு சொல்லிட்டு தானே பாரியும் வில்வாவும் அங்கே வந்தாங்க, இப்ப நீயே வந்துட்ட, அவங்க வரலையே” என்றார் தமயந்தி லேசான விசும்பலுடன்.

“அவனுங்க இரண்டு வருஷம் அக்ரீமெண்ட்ல கையெழுத்து போடும்போதே அது தெரியும் இல்ல. இப்ப என்ன நீ வேணா போய் அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வாயேன், இங்க தர்மாவை நாங்க பார்த்துகிறோம்” என்றார் பாட்டி.

“பாவம் தமி மட்டும் தனியா எப்படி போவா?” என்றார் சுமதி உடனே அலெர்ட் ஆகி.

“இப்ப என்ன நீயும் போகணுமா?” என்றார் சங்கரன் உடனே, உன்னை நானறிவேன் என்ற பார்வையுடன்.

தமயந்தியும் சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்கும் ஆசை என்று பார்த்தாலே தெரிந்தது.

“நானும் வரவா? எப்ப போவீங்க, எனக்கு இன்டெர்ன்ஷிப் அங்கேயே கேப்போமா?” என்றாள் அருந்ததி ஆர்வமாக.

“இல்ல பாப்பா, அங்கே எல்லாம் வேண்டாம். உனக்கு லீவ் கிடைக்கும் போது நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என்று முடித்துவிட்டான் அவினாஷ்.

“நான் இருக்கும் பொழுது வரேன்னு சொன்னீங்களா? இப்ப மட்டும் போகனும்னு நிக்குறீங்களே?” என்று கருணா கேட்கவும்,

“அப்படி எல்லாம் நாங்க நினைக்கவே இல்லை. இப்ப கூட பாட்டி தானே இந்த ஐடியா கொடுத்தாங்க” என்றார் சுமதி.

“சரி சரி.. அங்க டெல்லில இருந்து ராஜி ஆன்ட்டி வந்து இருக்காங்க. அவங்க இன்னும் ஒரு இரண்டு வாரத்துல திரும்ப போறதா சொன்னாங்க. அவங்க கூடவே நீங்களும் போயிடலாம், ஈசியா இருக்கும்” என்றாள் கருணா.

“பாட்டி நீங்களும் போறீங்களா?”

“எல்லாரும் போய்ட்டா இங்கே யார் பார்த்துக்கிறது?”

“நான் பார்த்துக்கிறேன் பாட்டி” என்றாள் கருணா பொறுப்பாக.

“பேச சொன்னா மணிக்கணக்கா பேசுவ, ஆனா சமைக்க தெரியுமா?” என்றார் சுமதி இடக்காக.

வேதாச்சலம் தாத்தா, “சாப்பாடு பத்தி எல்லாம் கவலை படாதீங்க, நானும் அவினாஷும் இருக்கோம் தானே. நீங்களும் தான் எங்க போறீங்க? போயிட்டு வாங்க” என்றார்.

“அப்ப ராஜி ஆன்ட்டிக்கிட்ட பேசிட்டு டேட் முடிவு செய்வோம்”

“நீ பேசிட்டு சொல்லு கருணா, நான் டிக்கெட் எல்லாம் போட்டுடறேன்” என்றான் அவினாஷ்.

சுமதி, தமயந்தி, பாட்டி மூவரும் டெல்லி செல்ல முடிவு செய்து, பின் பாரி வில்வாவிற்கும் அழைத்து பேசி என்று நேரம் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!