Skip to content
Post Views: 373
குட் லக் சுந்தரி….5
அன்று வேதாசலத்தின் நினைவு நாள்.வசந்தி காலை எழுந்திலிருந்தே பரபரப்பாக இருந்தார்.
“சுந்தரிமா எல்லாம் ரெடி ஆகிடுச்சானு கேளு….நீ எதுக்கும் ஒரு தடவை போய் பாரு….நான் நேசன் அப்பாவோட அங்க வந்துடுறேன்….”
“சரி மீ….நான் பார்த்துக்குறேன்…நீ டென்ஷன் ஆகமா…கிளம்பி வா….”என்றுவிட்டு தன் கை பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
Advertisement
அன்னை இல்லம் என்ற பெயர் பலகை பார்த்ததும் சுந்தரியின் மனதில் பல நினைவுகள் கட்டவழிக்க தொடங்கியது.ஆம் அவள் வந்திருப்பது தான் பிறந்து வளர்ந்த அனாதை ஆசிரமத்திற்கு தான்.இன்றைய நாள் முழுவதும் தாய்,மகள் இருவரும் இங்கு தான்.வேதாசலத்தின் நினைவு நாளை இங்கு தான் கொண்டாடுவர்.குழந்தைகளுக்கு உணவு கொடுத்து அவர்களுக்கு தங்களான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு வருவார்கள்.
சுந்தரி முன்னே வந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் வந்துவிட்டனவா என்று சரி பார்த்துக் கொண்டு நிற்க அப்போது அங்கு வந்தார் மதர் சூசி அவர் தான் இப்போது இருக்கும் காப்பக பொறுப்பாளர்.
“வாம்மா…எப்போ வந்த….அம்மா வரலையா…..”என்று கேட்க,அவரை பார்த்ததும் மென் நகை புரிந்த சுந்தரி,
Advertisement
“இப்போ தான் வந்தேன் மதர்…..அம்மா பின்னாடி வந்துட்டு இருக்காங்க…..”என்று அவள் கூறும் நேரம் நேசனின் வாகனம் அந்த வளாகத்தின் உள் நுழைந்தது.அதிலிருந்து நேசன்,லட்சுமி,வசந்தி மூவரும் இறங்க,
Advertisement
“இதோ வந்துட்டாங்க மதர்…..”என்றபடி அவர்களை நோக்கி ஓடினாள் சுந்தரி.
“ஏய் எதுக்குடீ ஓடி வர….என்னமோ இப்ப தான் உன் அம்மாவை பார்த்த மாதிரி ஓடிவர…..”என்று லட்சுமி அதட்ட,
“லச்சு ரொம்ப பேசுற நீ….அப்புறம் நானும் பேச வேண்டி வரும்…..”என்று சுந்தரி மிரட்டுவது போல ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க,
Advertisement
“ஆரம்பிக்காதீங்க இரண்டு பேரும்….சுந்தரிமா எல்லாம் ரெடியா குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கலாமா….”என்று நேசன் கேட்க,
“எல்லாம் ரெடி தாத்தா….நீங்க வாங்க….”என்று அவரை அழைத்து முதல் இரண்டு குழந்தைகளுக்கு பரிமாற செய்தவள்,
“போதும் தாத்தா…நீ உட்காரு நான் பார்த்துக்குறேன்….”என்றுவிட்டு மீதி உள்ளவர்களுக்கு வசந்தியும்,சுந்தரியும் பரிமாறினார்கள்.மதியம் அங்குள்ள குழந்தைகளுடன் அவர்களும் உண்டுவிட்டு சுந்தரி குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருக்க,
“வேதா மட்டும் இருந்திருந்தா இந்த நேரம் பேத்திக்கு கல்யாணம் முடிச்சிருப்பான்….அவனோட நிலையில நின்னு என்னாலயும் செய்ய முடியாம போகிடுமோனு எனக்கு பயமா இருக்கு லட்சுமி…”என்று நேசன் சுந்தரியை பார்த்துக் கொண்டே வருத்தமாக கூற,
“என்ன பேசுறீங்க நீங்க அவளுக்கு எல்லாம் நல்லது நடக்கும்….நீங்க முன்னிருந்து எல்லாம் செய்வீங்க….இனி இப்படி பேசாதீங்க….”என்றவரின் பார்வையும் அவளின் மீது தான் இருந்தது.ஏற்கனவே மகன் தொலை தூரத்திற்கு சென்றுவிட்டான் என்ற கவலை அதோடு இன்று கணவனும் இப்படி பேச மிகவும் சோர்ந்து போனார் லட்சுமி.
“என்ன என் லச்சு முகம் ஏன் சோர்ந்து போச்சு….இந்தா ஜூஸ் குடி….”என்று சுந்தரி லட்சுமியின் கையில் ஒரு பழச்சாறை திணிக்க,
“உனக்கு என்னை பார்க்குறது தான் வேலையா….போய் பிள்ளைகளை கவனி…..”என்று முறைத்துக் கொண்டு கூறினாலும் அவள் கொடுத்த பழச்சாறை வாங்கி பருக தொடங்கினார் லட்சுமி.
“ம்ம்….இங்க வந்தும் இரண்டும் பேரும் சண்டை தான் போட்டுக்கிட்டு இருக்கீங்கலா….”என்று சுந்தரி கேட்க,
“ஆமா எனக்கு வேற வேலையே இல்லை பாரு…..உன் தாத்தா ஆகாத வார்த்தையெல்லாம் விட்டுக்கிட்டு இருக்காரு அவரை கேளு என்னை கேட்காத….”என்று விட்டு லட்சுமி எழுந்துவிட,
“என்ன தாத்தா….இன்னைக்கும் என்ன பண்ணீங்க என் லச்சு பேபியை….பாரு கண்ணெல்லாம் கலங்கி போகுது….”
“ஒண்ணுமில்லடா….”என்ற நேசனின் சோர்ந்த பதிலில் அவரை ஊன்றி பார்க்க,
“டேய் அதான் ஒண்ணுமில்லனு சொல்லுறேனே….நீ பாரு….”என்று கூற,
“ம்ம் ஏதோ இருக்கு….தாத்தா இப்பயும் ஒண்ணும் கெட்டு போகலை நான் போன் பண்ணி தரேன் நீ பேசுறியா அங்கிள் கிட்ட….”என்று சுந்தரி கேட்க,
“டேய் நான் அவனை பத்தியே நினைக்கலைடா….அவனுக்கு என்ன நல்ல சம்பாதிக்குறான்….அவனுக்கு பிடிச்ச வாழ்க்கை அவன் வாழுறான்….நான் உன்னை பத்தி தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்….வேதா இந்த நேரம் இருந்தா உனக்கு நல்ல படியா கல்யாணம் முடிச்சிருப்பான் என்னால தான் உனக்கு எதுவும் செய்ய முடியலை அதை சொன்னேன் உன் லச்சுக்கிட்ட சொன்னேன் அவளுக்கு கோபம் வந்துடுச்சி….”என்று கூற,
“இப்ப எனக்கே கோபம் வருது….நான் உங்க கூட இருக்குறது உனக்கு பிடிக்கலை அதான் என்னை துரத்த பார்க்குற….ஆனா பாரு உன்னோட ஆட்டத்துக்கு சில்லவண்டு சிக்கும் ஆனா இந்த சுந்தரி சிக்க மாட்டா….”என்றவள்,அவரின் சோர்ந்த முகம் கண்டு கை பற்றி,
“இது மாதிரி எல்லாம் பேசாத…..எனக்கு வேதா தாத்தாவும் நீயும் வேற வேற இல்லை….எது நடக்குனுமோ அது தான் நடக்கும் நம்ம கையில ஒண்ணுமில்ல…வா கிளம்புவோம்….”
“குழந்தைகளுக்கு ஏதோ ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் கொடுக்கனும் சொன்ன….”
“மதர் அதை எல்லாம் கிளாஸ்ல கொடுத்துக்குறேன் சொல்லிட்டாங்க….நானும் சரினு சொல்லிட்டேன்….”
“ஓ….அப்ப சரிடா நானும் போய் நம்ம வண்டியை எடுத்துட்டு வரேன்…..”என்று விட்டு நேசன் அங்கிருந்து நகர்ந்தார்.
வசந்தி,லட்சுமி நேசன் மூவரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.சுந்தரி தனக்கு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு சொன்றிருந்தாள்.லட்சுமி ஏதோ கேட்க அதற்கு வசந்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.நேசனோ ஏதோ சிந்தனையிலேயே இருக்க,
“ப்பா….ப்பா….”என்று வசந்தி இரண்டு முறை அழைத்த பின் தான் நிகழ்வுக்கு வந்தார் நேசன்.
“ஆங் என்னமா….”என்று கேட்க,
“வீடு வந்திருச்சு ப்பா….அதான் கூப்பிட்டேன்….”என்று கூறிவிட்டு அவர் இறங்க,
“வசந்திமா….மேல போயிடாத உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வீட்டுக்கு வா….”
“சரிப்பா…”என்றுவிட்டு அவரும் செல்ல,நேசனும் வண்டியை விட்டு இறங்கி தன் வீட்டிற்குள் நுழைந்தார்.
நேசன் உள் நுழைந்ததும்,
“என்னப்பா என்ன என் கிட்ட பேசனும்….”என்று வசந்தி கேட்க,
“சொல்லுறேன்….சுந்தரி எப்ப வருவா….”
“அவ வர நேரமாகும்… எம்பிராய்டரி நூல் தீந்து போச்சு….அதோட இன்னும் ஆரி வொர்க்கு பண்ணுறதுக்கு பொருள் எல்லாம் வாங்கனும் போயிருக்கா….”என்று கூற,
“ம்ம்…சரி…”
“என்ன புதுசா உங்க பேத்தி இல்லாம பேசனும் நினைக்கிறீங்க….”என்று லட்சுமி கேட்க,
“உன் கிட்ட தான் முதல்ல சொல்லனும்…நான் பேசறதை எல்லாம் அவ கிட்ட ஒப்பிச்சிக்கிட்டு இருக்காத….”
“எது நான் தான் ஒப்பிச்சிக்கிட்டு இருக்கேன்…..அவ…”
“அச்சோ இரண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க….அப்பா நீங்க சொல்லுங்க….”என்று வசந்தி இடை புகுந்து கூற,சற்று நேரம் அமைதி அவரிடம் அதுவே கூறியது விஷயம் பெரியது என்று,
“வசந்தி நான் உன்னோட நிலத்தை எல்லாம் உன்கிட்டே கொடுத்திடலாம்னு இருக்கேன்….”என்று கூற
“எதுக்குப்பா ஏன் திடீர்னு இப்படி சொல்லுறீங்க…..”என்றவருக்கு மனதிற்குள் பயம் பிடித்துக் கொண்டது எங்கே நேசனுக்கும் உடல் நிலை குறைவோ என்று,
“இல்லமா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…..”
“பின்ன ஏன் அப்படி சொன்னீங்கப்பா…..”என்றவருக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது.தந்தையின் இறப்பிற்கு பின் இரண்டு பெண்களும் தனியா நிற்க அவர்களுடன் நின்றவர் நேசன் மட்டுமே அவரை நம்பி தான் வேதாசலம் தன் நிலங்களை ஒப்படைத்திருக்க இப்போது அவர் இப்படி கூறவும் வசந்திக்கு என்னவோ போல் ஆனது.
“இந்த நிலங்களை என்கிட்ட நீங்க வித்துட்டதா தான் வெளில உள்ளவங்க நினைச்சிக்கிட்டு இருக்காங்க….ஆனா நான் பராமரிக்க தான் செய்யுறேன்னு யாருக்கும் தெரியாது….உங்களுக்கு சொத்து இல்லைனு தான் வரன் தட்டி போகுதோ எனக்கு சந்தேகம்…..”என்று கூற,
“ப்பா இந்த சொத்தை வச்சு தான் என் பொண்ணை ஒருத்தன் கட்டிக்கனும்னா அவன் என் பொண்ணுக்கு வேண்டாம்ப்பா….என் சுந்தரியை நல்லா பார்த்துக்குற ஒருத்தன் தான் எனக்கு வேணும்….எனக்கு நம்பிக்கை இருக்குப்பா அவளுக்கு நல்லது நடக்கும் அதுவும் நீங்க முன்னிருந்து நடத்தி வைப்பீங்க…..”என்றவர் நேசனின் கரத்தை பிடித்துக் கொண்டு,
“ப்பா என் அப்பா செத்ததுக்கு அப்புறம் எங்களுக்கு எல்லாமுமா இருந்தது நீங்க தான் நீங்க என்னைக்கும் எங்களுக்கு நல்லது மட்டும் தான் நினைப்பீங்க….நீங்களே இப்படி இடிஞ்சி போய் பேசினா நாங்க எங்க போவோம்….”என்று கேட்க,
“இல்லமா….நான் அப்படி நினைச்சு சொல்லல……”என்று நேசன் ஏதோ கூற வர,
“வேற எப்படி சொல்ல வரீங்க….அதை சொல்லுங்க….அவ தான் என்கிட்ட இருக்குற காசை பார்த்து வர மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டாள்ல அப்புறம் எதுக்கு அவளை கலங்க வைக்கிறீங்க….வரட்டும் உங்க பேத்தி வத்தி வைக்கிறேன்….”என்று லட்சுமி சத்தம் போட,
“ஏய் நீயும் புரிஞ்சிக்கமா பேசாத…..எத்தனை நாளைக்கு நானும் இருப்பேன்….எனக்கு அடுத்தது அவ தான….”
“தாத்தா…..”என்ற குரல் வீடு முழுக்க எதிரொலித்தது.மற்ற இரு பெண்களும் நேசன் கூறியதை கேட்டு கலங்கி நிற்க,பத்ர காளியாக உள்ளே வந்தாள் சுந்தரி.
“என்ன பேச்சு தாத்தா இது….உன் கிட்டேந்து இதை நான் எதிர்பார்க்குல…..அங்க பாரு லச்சு கண்ணெல்லாம் கலங்கி போச்சு…..”என்றுவிட்டு அவள் லட்சுமியிடம் போனவள்,
“இந்தா லச்சு இந்த தண்ணிய குடி….”என்று டம்பளர் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க,
“எனக்கு வேண்டாம்டீ….இந்த மனுஷன் பேசினதை கேட்டியா…..இவருக்கு எப்படி மனசு வந்துச்சு இப்படி பேச….என்னை திட்டுவாரு இன்னைக்கு இவரே எப்படி பேசுறாரு பாரு….”என்று தலையில் அடித்துக் கொண்டு அழ தொடங்க,நேசனுக்கே தான் தவறு செய்து விட்டோமோ என்று மனது தவிக்க தொடங்கியது.
“லட்சுமி….”என்று அவர் மனைவியின் அருகே வர,
“வராதீங்க…கிட்ட வராதீங்க…போங்க….போங்க நான் உங்க கூட பேசமாட்டேன்…..”என்று அவர் முறுக்கி கொள்ள,
“என்ன தாத்தா நீ….”என்று சுந்தரி,
“ம்மா இங்க வாங்க…..லச்சு கூட இருங்க….நானும் தாத்தாவும் வெளில போயிட்டு வரோம்…..”என்றுவிட்டு நேசனை தனியே அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவள் வராண்டாவில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர வைத்துவிட்டு தானும் அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரம் எதுவும் பேசவில்லை நேசனையே பார்த்துக் கொண்டிருந்தவள்,
“என்ன பேசின அங்கிள் கிட்ட….”என்று கேட்க நேசன் அதிர்ந்து சுந்தரியை பார்த்தார்.
“நீ காலையில தோட்டத்துல யாருக்கும் தெரியாம போசினதை நான் கேட்டேன்….சரி அப்பாவும் பிள்ளையும் பேசிட்டாங்க போலனு நான் நினைச்சா நீ ஏதோ சண்டை தான் போட்டிருக்க….”
“என்ன சண்டை போட்டாங்க….அவனுக்கு பணத்து மேல ஆசை அதிகாமிகிடுச்சு….அவனுக்கு அப்பாவும்,அம்மாவும் வேண்டாமாம்….என்கிட்டேயே சொல்லுறான்….”என்று மூச்சு வாங்க கூற,
“சத்தமா பேசாத தாத்தா….லச்சுக்கு கேட்டுச்சு இன்னும் அழும்….”என்ற சுந்தரிக்கே நேசனின் சிவந்த கண்களை கண்டு பயமாக தான் இருந்தது.
“என் மேல தான் தப்பு….அவனை படிப்பு முடிஞ்சவுடனே கையோட இழுத்துக்கிட்டு வந்திருக்கனும்….கொஞ்சம் வெளிவுலகம் தெரியட்டுமேனு விட்டேன் பாரு என்னை சொல்லனும்….”என்று தன் தலையில் அடித்துக் கொள்ள,
“அய்யோ தாத்தா…..”என்று அவரிடம் வந்து கைகளை பற்ற அவளின் கைகளையே பற்றிக் கொண்டவர்,
“சுந்தரிமா எனக்கு பயமா இருக்கு நான் என் புள்ளையையே சரியா வளர்க்கல இதுல நான் எப்படி உன்னை…..”என்று கண்கள் கலங்க ஏதோ கூற வரும் முன்,
“உன் மேல எந்த தப்பும் இல்லை….நீ அவங்க நல்லா வரனும் தான் நினைச்ச ஆனா அவங்களுக்கு தான் மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைப்பு வந்திடுச்சு…..அதுக்கு நீ என்ன பண்ணுவ…. நீ உன்னை வருத்திக்காத தாத்தா….அப்புறம் என் லச்சுக்கு யார் பதில் சொல்லுறது…..அப்புறம் என்னை பத்தி நீ யோசிக்கவே வேண்டாம் எனக்கு நீ எது செஞ்சாலும் நல்லது தான் செய்யவ அதனால நீ கண்டதை நினைச்சு மனசை குழப்பிக்காத….”
“இல்லடா….”என்று கூற வந்த நேசனை தடுத்த சுந்தரி,
“போதும் வா அப்படியே கொஞ்ச தூரம் வரை நடந்துட்டு வருவோம்….வா….”என்று அவரை கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.
இங்கு வசந்தியோ லட்சுமியிடம்,
“ம்மா அப்பா தான் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்கன்னா அது புரியாம நீங்களும் ஏன்மா பேசுறீங்க….”
“ஆமா….நான் தான் பேசுறேன்….அவரு பேசவேயில்லை….நீயும் அவருக்கே சப்போர்ட் பண்ணாத வசந்தி…..”என்றவரின் குரல் உடைந்துவிட்டது.
“அம்மா…..”
“புள்ளையும் என்னை தனியா தவிக்கவிட்டுட்டான்….இப்ப இவரும் இப்படி பேசுனா நான் எங்க போவேன்……”என்று லட்சுமி புலம்ப,
“பேசாம என் வீட்டுக்கு வந்துடு லச்சு…..நான் உன்னை பார்த்துக்குறேன்….”என்றபடி சுந்தரி வர,பின்னோடே நேசனும் வந்தார்.
“லட்சுமிமா….சாரிடா நான் தான் தப்பு….நீ இப்படி உடையாத….நீ தான் என்னோட எல்லாம் நீயே இப்படி இருக்கலாமா….”என்று அவர் மனைவியின் காலுக்கடியில் அமர்ந்து கேட்க,
“மீ பார்த்தீயா என்னோட டிரெயினிங்க தாத்தா பின்னுறாருல்ல….”என்று வசந்தியின் காதை கடித்துவிட்டு நேசனிடம் வந்தவள் அவரின் காதில்,
“தாத்தா கரெட்டா போகுது அப்படியே பேசி லச்சுவை சமாதானபடுத்திடு….நான் கிளம்புறேன்….”என்றுவிட்டு வசந்தியை அழைத்துக் கொண்டு வெளியில் வர,
“என்ன சொல்லிட்டு போறா அந்த வாயாடீ…..அவ தான் சொல்லிக்கொடுத்தாளா…..”என்று லட்சுமி கத்துவது வெளியில் கேட்டது.
“சும்மாவே இருக்கமாட்டியாடீ…..”என்று வசந்தி அவளின் தலையில் தட்ட,
“ஆஆ….மீ….நான் நல்லது தான் செஞ்சிருக்கேன்…அடிக்கிற நீ….”என்று கூறிக் கொண்டே முன்னே ஓடினாள்.இனி நேசன் பார்த்துக் கொள்வார் என்று சுந்தரி சென்றிருக்க ஆனால் கடவுள் வேறு ஒன்றை வைத்திருந்தார்.அன்று இரவே லட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார்.
“ஒண்ணும் ஆகாது தாத்தா…..”என்று நேசனுக்கு சுந்தரி தைரியம் அளித்தாலும் அவளின் கைகளும் நடுங்கி கொண்டிருந்தது.நேசன் தன் மகன் ரவிகுமாருக்கு அழைத்து அழைத்து தோற்று தான் போனார்.
“சுந்தரிமா அவன் போனையே எடுக்கமாட்டேங்குறான்….அவன் வந்துட்டா என் லட்சுமி வந்துடுவா….நீ கூப்பிடேன்….”என்று கைகள் நடுங்க கைபேசியை அவளிடம் நீட்டினார். அதைக் கண்ட வசந்தியோ வெடித்து அழுதேவிட்டார்.
“தாத்தா….நான் பேசுறேன்….நான் கூப்பிடுறேன்….நீ தைரியமா இரு…லச்சுக்கு ஒண்ணுமில்ல…..”என்றவளுக்கு ரவியின் மீது அளவுக்கடந்த கோபம்.என்ன மனிதர் இவர் பெற்றவர்களை பார்க்காமல் அப்படி என்ன சம்பாத்தியம் வேண்டியிருக்கிறது என்று மனதால் அவரை திட்டி கொண்டிருந்த போது அவசர பிரிவின் கதவு திறக்கப்பட்டது,
“டாக்டர்….அவங்க எப்படி இருக்காங்க….”வேகாமாக மருத்தவரிடம் சென்ற சுந்தரி கேட்க,
“பிபி இன்கிரீஸ் ஆகியிருக்கு…..நல்லவேளை சீக்கிரம் கூட்டிட்டு வந்தீங்க இல்லனா அட்டாக் ஏற்பட்டிருக்கும்…..ஒன்டே ஐசியூலே இருக்கட்டும்….பிபி நார்மல் ஆனவுடனே நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்….”என்றுவிட்டு அவர் சென்றுவிட,அப்போது தான் அங்கிருந்தவர்களுக்கு உயிரே வந்தது.
“ம்மா நீ தாத்தாவை பார்த்துக்கோ….”என்றவள் நேசனின் பேசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.நேசனின் பேசியில் இருந்து ரவிகுமாருக்கு மூன்று முறை அழைத்துவிட்டாள் ஆனால் பேசி எடுக்கபடாமல் போகவே என்ன செய்வது என்று பேசியில் கையில் வைத்துக் கொண்டு அதில் இருக்கும் எண்களை பார்த்துக் கொண்டே வர அதில் விக்ரம் என்ற எண்ணின் பின்னால் இரண்டு ஹார்ட்டுடன் பதிவாகி இருக்க அழைக்கலாமா என்று யோசித்தவளுக்கு,
“அப்பாவே எடுக்கலை இதுல புள்ளை எடுத்துடுமா….அதுவும் இது எங்க இருக்குனு யாருக்குமே தெரியாதாம்….தறுதலையா இருப்பான் போல….”என்று திட்டியவள் ஒரு முறை அழைத்து பார்த்துவிடலாம் என்று தோன்ற விக்ரமிற்கு அழைத்துவிட்டாள்.அழைப்பு போய் கொண்டே இருந்தது,
“ப்ச்….இவன் எல்லாம் எதுக்கு போன் வச்சிருக்கான்…..இடியட்….”என்றுவிட்டு பேசியை அனைக்க போகும் போது,
“ஹலோ யாரை இடியட்னு திட்டுற…..”என்று மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்க,அழைப்பு எடுக்க பட்டுவிட்டது என்றவுடன்,
“உன்னை தாண்டா உன்னை தான் திட்டுறேன்…..நீயெல்லாம் மனுஷனா……அது சரி உன் அப்பனே மனுஷன் கிடையாது நீ மட்டும் எப்படி மனுஷனா இருக்க போற….இங்க பாரு உன் அப்பா என்ன பண்ணுவாரோ ஏது பண்ணுவாரோ எனக்கு தெரியாது அவரு நாளைக்கு காலையில இங்க தஞ்சாவூர்ல இருக்கனும் இல்லை….நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…..”இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தவனின் பீபி ஏற்றி விட்டுவிட்டு அவனை பேசவிடாமல் வைத்துவிட்டாள்.ஆனால் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு தான் பாவம் யார் இவள் என்றே தெரியவில்லை.
error: Content is protected !!