Skip to content
Post Views: 2,312
அத்தியாயம் 33
இவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் தர்ஷ் கல்லூரிக்கு கிளம்பிவிட்டான்.
Advertisement
“ராஜிம்மா, நாங்களும் கிளம்புறோம், ஜாக்கிரதையா இருங்க..” என்று கூறி பாரியும் வில்வாவும் கிளம்புகையில், ஸ்ரீனிவாசனிடம் இருந்து ராஜிக்கு அழைப்பு வந்தது.
“சொல்லுங்க அண்ணா.. என்ன காலையிலேயே கால் பண்ணிருக்கீங்க ?” போனை ஸ்பீக்கரில் தான் ராஜி போட்டிருந்தார்.
Advertisement
Advertisement
“அம்மா தங்கச்சி.. ஹர்ஷ் வர்ஷ் ரெண்டு பேரும் டாக்டர்கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. நான் சொன்னா, ‘சுப் ரஹோ’ன்னு சொல்லிட்டு திரும்ப சண்டை போடறாங்க… என்ன பண்றதுனே புரியல”
“சண்டையா? சும்மால்லாம் வெளி ஆளுங்க கிட்ட சண்டை போட மாட்டாங்களே அண்ணா, என்ன விஷயம், சீதா எங்கே?”
Advertisement
“அவளும் உள்ளே தான் இருக்கா. எனக்கு ஒரே படபடப்பா இருக்கும்மா”
நண்பர்கள் கிளம்பாமல் ராஜியுடன் அமர்ந்து கொண்டார்கள்.
“சார், நான் பாரி பேசுறேன். பதட்டப்படாம விஷயத்தை சொல்லுங்க, அப்ப தானே என்னன்னு பார்க்க முடியும்”
“ரெண்டு நாள்ல சர்ஜெரி இல்லையா? அதான் செக் அப்புக்கு வந்தோம். நாங்களும் வர்றோம்னு பொண்ணுங்களும் கூட வந்தாங்க.
‘கருப்பையில பைப்ராய்ட்ஸ்னா நீங்க கருப்பையை எதுக்கு எடுக்கணும்? இப்ப பைப்ராய்ட்ஸ் மட்டுமே எடுக்க டெக்னாலஜி இருக்கேன்னு’ வர்ஷ் சொன்னுச்சு..
அதுக்கு அந்த டாக்டர், ‘நீ என்ன டாக்டரா, நாங்க படிச்சுட்டு இந்த வேலை பார்க்கிறோம், சும்மா இன்டர்நெட் பார்த்துட்டு வந்து பேசாதேன்னு கோவமா சொன்னாங்க..’
‘பேஷண்ட் சைடுல கேக்குற கேள்விக்கு நல்ல டாக்டர் பதில் சொல்லித்தான் ஆகணும்னு’ ஹர்ஷ்
‘சொல்லாட்டி என்ன செய்ய முடியும்? நான் இருபது வருஷமா இவங்களை பார்க்கிறேன், அவங்க ஹெல்த் பத்தி எனக்கு தெரியும்’
‘அப்ப,அவங்க மெண்டல் ஹெல்த் பத்தியும் நீங்க பாக்கணும் தானே? அவங்க கர்ப்பப்பை எடுக்கணும்னு நீங்க சொன்னதுல இருந்து ரொம்பவே டிப்ரெஸ் ஆகி இருகாங்க’
‘அதை சரி செஞ்சிட்டு வர சொல்லி அனுப்பினேனே, கவுன்சில்லிங் போக சொல்லி சொன்னேன்? என்ன சார் நான் சொன்னேனா இல்லயா?’
‘முதல்ல, வேற என்ன ஆப்ஷன்ஸ் இருக்குன்னு சொல்லுனும் தானே, அப்புறம் அவங்க முடிவை எடுப்பாங்க’
‘சேப் ஆப்ஷன் தான் நான் சொன்னது’
‘அப்ப வேற ஆப்ஷன்ஸ் இருக்கு தானே?’
‘ஏம்மா நாற்பத்தி மூனு வயசுல கர்ப்பப்பை எடுத்தா என்ன? இனியா அவங்களுக்கு குழந்தை பிறக்க போகுது. கஷ்டப்படாம பிரச்சனையை சரி செய்ற வழியை விட்டுட்டு..’
‘நீங்கலாம் ஒரு டாக்டரான்னு’, ரெண்டு பேரும் விட்டா அந்த டாக்டரை அடிச்சிடுவாங்க போல தங்கச்சி”
“இப்படி சண்டை போயிட்டே இருக்கும்மா”
“நீங்க உள்ள போய் போனை அவங்க கிட்ட கொடுங்கண்ணா நான் பேசுறேன்”
இவர் உள்ளே செல்லவும், அங்கே நடந்த சண்டை இவர்களுக்கு கேட்டது.
“ரொம்ப பேசாதீங்க, நான் போலீசுக்கு போக வேண்டியது வரும்”
“நல்லா போங்க.. நாங்களும் கோர்ட்டுக்கு போறோம்”
“என்ன சீதா இது?”
“அவங்க கிட்ட எதுக்கு பேசுறீங்க.. மயோமெக்டமி மூலமா பைப்ராய்ட்ஸ் மட்டும் நீக்க சாத்தியம் இருக்கு தானே.(மயோமெக்டமி என்பது கருப்பையைப் பாதுகாக்கும் அதே வேளையில் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை அகற்றுவதற்கான ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்)
“சாத்தியம் தான். அது சின்ன வயசு பொண்ணுங்களுக்கு தான் பரிந்துரைப்போம். இவங்க வயசுக்கு அது தேவை இல்லை. இப்பவும் இது தான் என் கருத்து”
“தேவையா இல்லையான்னு நாங்க தான் முடிவு பண்ணனும்”
“நீ சொல்லும்மா சீதா, இல்ல சார் நீங்க சொல்லுங்க” என்று மருத்துவர் சீதாவையும் ஸ்ரீநிவாசனையும் பார்த்தார்.
“இவங்க சொல்ற மாதிரி கர்ப்பப்பையை காப்பாத்த வாய்ப்பு இருக்கா?”
“காப்பாத்தி என்னமா செய்ய போற? அது குழந்தையை சுமக்கவா போகுது?”
அவ்வளவு தான் பெண்கள் கொதித்துப்போய் விட்டனர்.
“ஹலோ ஹலோ, குழந்தை சுமக்க முடியம் முடியாதுன்னு கடவுள் முடிவு செய்வார்… நீங்க அதை சொல்ல வேணாம். கர்ப்பப்பை என்பது ஒரு உடல் உறுப்பு மட்டும் அல்ல, அது உணர்வு சம்பந்தப்பட்டது”
“உங்க வயசு என் அனுபவம். நீங்க எனக்கு சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னும் இல்லை”
“நாங்க உங்க மேல கண்டிப்பா கேஸ் போடத் தான் போறோம். நீங்க வாங்க அத்தை நாம போலாம், அங்க டெல்லிலலாம் பொண்ணுங்க வேலைக்கு போய் செட்டில் ஆனதும் தான் கல்யாணமே பண்ணிப்பாங்க. நாப்பது வயசுல கூட கல்யாணம் பண்ணிப்பாங்க. அப்புறம் தான் குழந்தை பெத்துப்பாங்க. இவங்க கிடக்கிறாங்க” என்று சீதாவின் கையை பிடித்து வெளியே அழைத்து வந்துவிட்டாள் ஹர்ஷிதா.
பாவமாக நின்ற ஸ்ரீனிவாசன் கையை பிடித்து இழுத்து வந்தாள் வர்ஷித்தா.
“என்னம்மா இப்படி பேசிட்டிங்க? இந்த டாக்டர் கிட்ட தான் இத்தனை வருஷம் காட்டுறோம்” என்றார் அவர் கொஞ்சம் அதிருப்தியாக.
“அந்த அம்மாக்கு மேனர்ஸ் கூட தெரியல.. வயசானவங்கன்னா நல்ல டாக்ட்டர்ன்னு உங்களுக்கு யார் சொன்னா?”
அப்பொழுது ”ஹலோ ஹலோ” என்று ராஜியின் குரல் ஸ்பீக்கரில் கேட்கவும்,
”மீ இங்கே…” என்று ஆரம்பித்தாள் ஹர்ஷ்.
“எல்லாம் நானும் கேட்டுட்டு தான் இருந்தேன், இப்ப என்ன செய்ய போறீங்க? வேற டாக்டர் கிட்ட உடனே காட்ட முடியுமா? ஆல்ரெடி சர்ஜெரி லேட் பண்ணிட்டா உங்க அத்தை?”
“திடீர்ன்னு இப்ப யார் கிட்ட கேக்கறது? நாங்க இவங்க ஒருத்தர் கிட்ட தான் காட்டுவோம்” என்றார் ஸ்ரீனிவாசன்.
“அம்மா உங்க அப்ரென்ட்டீஸ்கள்கிட்ட கேளுங்க, அவங்க வேலைபார்க்கிற ஹாஸ்பிடல்ல நல்ல கைனிக் இருக்காங்களான்னு?”
“அப்ரென்ட்டீஸ்களா?”
“அடப் பாவிங்களா?”
பாரியும் வில்வாவும் கோவமாக ராஜியை பார்க்கவும், அந்த சூழ்நிலையிலும் ராஜிக்கு சிரிப்பு வரும்போல இருந்தது.
“முதல்ல மூனு பேரும் ஹாஸ்ப்பிட்டல இருந்து வெளிய வாங்க, அப்படியே காருக்கு போங்க, நான் அதுக்குள்ள பாரி வில்வா கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றார் ராஜி.
பின் வில்வாவும் பாரியும் அவர்கள் மருத்துவமனையின் சிறந்த டாக்டர் பற்றிய விபரங்களை கூறி, உடனே அப்பாய்ண்ட்மெண்டும் ஏற்பாடு பண்ணி கொடுத்தனர்.
ஸ்ரீனிவாசனுக்கு விருப்பமில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.
அதை கவனித்தாலும் அதை பெண்கள் கண்டுகொள்ளவில்லை.
“ஹர்ஷ் வர்ஷ் சொல்லுவதை போல செய்யலாம். அந்த மருத்துவர் சொன்னதை போல கருப்பையை எடுப்பதிலும் தவறு இல்லை. குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு தான், ஆனா என்ன வேண்டும்னு நீங்க முடிவு எடுக்கலாம். அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கு. என்ன செய்யலாம் சொல்லுங்க?” என்று அந்த மருத்துவர் சீதா, ஸ்ரீனிவாஸனை பார்த்து கேட்டார்.
அவர் யோசிக்கும் முன்னே சீதா, “என் கருப்பையை காப்பாத்த முடியும்ன்னா, அதை செய்யுங்க.. எனக்கு குழந்தை பிறக்குது, இல்லை, எதுவானுலும் சரி.
ஒரு வேளை கடவுள் வரம் கொடுத்தால், இந்த அம்மாகிட்ட வர இடம் இல்லைன்னு நினைச்சு எங்க குழந்தை வராம போய்டக் கூடாதே” என்றார் கண்கள் கலங்கி.
சீதாலட்மியின் மனநிலை அங்கே உள்ள அனைவருக்கும் புரிந்தது.
“பயப்பட ஒன்னும் இல்லை. இப்ப மருத்துவத்துறை ரொம்ப முன்னேறி இருக்கு. இந்த சர்ஜரி ரொம்ப ரிஸ்க் எல்லாம் இல்லை.. என்ன கூடுதலா ஒரு மாசம் ஓய்வா இருக்கணும்” என்றார் மருத்துவர் ஸ்ரீனிவாசனை பார்த்து ஆறுதலாக.
“கவலை படாதீங்க மாமா, நாங்க பார்த்துகிறோம்” என்று இருவரும் ஆதரவாக அவருக்கு இருபுறமும் நின்று கொண்டார்கள்.
ஏற்கனவே ஏற்பாடு செய்தது போல இன்னும் இரண்டு தினங்களில் சர்ஜெரி என்று முடிவாகியது.
———————-
“டேய் நம்ம பக்கரிசாமி ரெண்டும் சூப்பர் தான் டா, பாரி “
“ஆமா வில்வா,ஆனா பாவம்டா ஸ்ரீனிவாசன் சார். இதுங்க பண்ற அலும்பல்ல மனுஷன் அல்லாடறாரு”
“இன்னும் இவங்க கிக் பாக்ஸிங்கை எல்லாம் பார்த்து இருக்க மாட்டாரு. பார்த்தா அவ்வளவுதான், மனுஷனுக்கு காய்ச்சலே வந்துடும்..”
“அதை சொல்லு.. அதுவும் இவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் மேட்ச்சை பார்க்கணும்”
“இந்த கலாட்டாவுல காலையில பாப்பா சொன்னது மறந்து போச்சு பாரேன். எதோ பிஷ்ஷின்னு சொன்னாளே?”
“காலேஜ் முடிச்சு வந்திருப்பா, இரு பாப்பாகிட்டவே கேப்போம்”
“சொல்லு சின்ன பாப்பா.. என்ன விஷயம்?”
“அண்ணாஸ் ரெண்டு ரூல்ஸ்சும், இப்ப போற ரூட்டு ஒரு மார்க்கமா இருக்கு “
“யாரு, கருணாவா?அவினாஷா?”
“ரெண்டு பேரும் சேர்ந்து …”
“நீ வேற போ பாப்பா.. அதுங்க ரெண்டும் யாரு மண்டையை எதுக்குள்ள மாட்டி விடலாம்னு யோசிப்பாங்க..”
“ஒரு தடவையே கோவிலுக்கு போக யோசிக்கிற அண்ணா, இன்னிக்கு கருணாக்கா ரிசல்ட்காக காலையிலே கோவிலுக்கு போயிட்டு வந்தாங்க.
அதுகூட ஓகே, ஆனா திரும்ப கருணாக்கா கூட கோவிலுக்கு போனாங்களே..”
“அப்படியா சொல்ற? நம்ப முடியலை.. அப்படி இருக்க வாய்ப்பு கம்மி.. எதுக்கும் அவங்களை வாட்ச் பண்ணிட்டே இரு, எதாவது ஹிண்ட் கிடைச்சா சொல்லு, பார்க்கலாம்”
“நீங்க கூட என்ன நம்ப மாட்டேங்கிறீங்க.. போங்க அண்ணாஸ்.. சரி நான் படிக்க போறேன் பை “
“வர வர சின்ன பாப்பா படிப்ஸ் ஆயிடுச்சு இல்ல பாரி..” என்று அவள் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்கள்.
“பெரிய பாப்பா கூட இருக்குல்ல, அதன் பாதிப்பு வேற எப்படி இருக்கும்?”
“அதானே “
—————-
வெற்றிகரமாக சீதா லட்சுமியின் சர்ஜெரி முடிந்தது. பாட்டியும் பேத்திகளும் சேர்ந்து அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்கள்.
ஒன்றை இழக்க போகிறோம் என்ற ஒருவித தாழ்வு மனப்பாண்மையில் இருந்தவருக்கு, அது பாதுக்காப்பாக நம்மிடமே இருக்கு, என்றதும் பழைய உற்சாகம் தொற்றிகொண்டது. குழந்தை விஷயத்தை கடவுள் முடிவு செய்யட்டும் என்று இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறார் சீதாலட்சுமி.
கருணா முசூரிக்கு சென்று ட்ரைனிங்கில் சேர்ந்து விட்டாள். பாரிக்கும் வில்வாவிற்கும் மும்முரமாக பெண் தேடும் வேலையில் சுமியும் தமியும் பிஸி.
error: Content is protected !!