Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி…..6

குட் லக் சுந்தரி…..6
அடுத்த நாள் காலையில் லட்சுமி கண் விழித்துவிட்டார்.அவரது உடலில் ஊட்டசத்து குறைபாடு இருப்பதாக கூறிய மருத்துவர்கள் அவருக்கு சில உணவு வகைகளை கூறி அதை அதிகம் தருமாரு கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
“சாப்பிடாம இருந்து எங்க எல்லாரையும் பயமுறுத்திட்ட நீ….இனி நீ தப்பிக்கவே முடியாது….மீ இனி நாம சமைச்சு கொடுக்குறோம்…”என்று சுந்தரி வீட்டிற்கு வந்தவுடன் கூறிக் கொண்டிருக்க,
“ஏதே நீயுமா….வேண்டாமா சீனி எது உப்பு எதுனு தெரியாம எதையாவது போட்டுட்டு வந்து கொடுத்து அம்மா உயிரை வாங்கிடாத….நானே பார்த்துக்குறேன்….”என்று வசந்தி கூற,எப்போதும் இது போல் பேசினால் சிரித்துக் கொண்டே தங்களுடன் இணைந்து கொள்ளும் பெரியவர்கள் இருவரும் ஏதோ போல அமர்ந்திருக்க தாளவில்லை வசந்திக்கு,


Advertisement

“ப்பா அதான் அம்மா வந்துட்டாங்களே….இன்னும் ஏன்பா இப்படி இடிஞ்சி உட்கார்ந்திருக்கீங்க…..இனி நாம அம்மாவை நல்லா பார்த்துக்குவோம்….”என்று கூற,
“ம்ம்….”என்றவர் எழுந்து சென்றுவிட,வசந்தி பாவமாக சுந்தரியை பார்த்தார்,
“நான் பார்த்துக்குறேன்…..”என்றவள் லட்சுமியிடம் திரும்பி,

Advertisement

“லச்சு எந்த வேலையும் செய்யாத அம்மா சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க சாப்பிடு தூங்கு இது தான் உன் வேலை….”என்று அவரின் தலையை தடவி சிறு குழந்தைக்கு கூறுவது போல கூற கலங்க துடிக்கும் கண்களை கலங்க விடாமல் தலையை மட்டும் ஆட்டினார் லட்சுமி.சுந்தரிக்கு மனதுவலித்தது தன்னிடம் சரிக்கு சரி நிற்பவர் இன்று உடைந்து போனதை பார்க்க முடியாமல் வெளியில் வந்துவிட்டாள்.

Advertisement

வெளி வராண்டாவில் நேசன் சோர்ந்து அமர்ந்திருக்க அவரின் அருகில் சென்று அவரின் தோள்களை தொட,அதுக்காவே காத்துக்கிடந்தவர் போல அழ தொடங்கிவிட்டார்.அவர் அப்படி அழுவார் என்று எதிர்பாராதவள்,
“தாத்தா…..”என்று அழைக்க அவரோ எதையும் காதில் வாங்காதவர் போல் அழுக,சுந்தரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.சற்று நேரம் அவரை அழவிட்டவள் அவரின் அழுகை குறைய,
“தாத்தா….தாத்தா….”என்று அவர் தோள்களை உலுக்கி அழைக்க அதில் தன் நிலை பெற்றவருக்கு அப்போது தான் செய்து கொண்டிருக்கும் காரியம் புரிய,

Advertisement

“சாரிடா…..உன்னை பயப்படுத்திட்டேன்…..ஆனா என்னால முடியலை….”என்று.
“என்ன தாத்தா நீயே இப்படி பயப்படலாமா…..நாங்க எல்லாம் இல்லையா உனக்கு….என்னை பேத்தினு சொல்லுறது எல்லாம் சும்மா பேருக்கு தான் இல்லை….”என்று பொய்யான கோபத்துடன் கேட்க,நேசன் பதிலின்றி எங்கோ வெறித்தபடி,
“ரவி இல்லாதது எங்களுக்கு கஷ்டமா தான் இருக்குமா….ஒரே பையன் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா….என்கூட நிலத்தை பார்த்துக்குவானு ஆனா அவன் உன் ஆசையை என் மேல திணிக்காதனு சொல்லிட்டான்….சரி எங்களோட இங்க பக்கத்துல எங்காயவது இருடானு கேட்டேன் அதுக்கும் முடியாதுனு சொல்லிட்டான்….என்ன தான் நீங்க இருந்தாலும் அவன் தான் எங்களுக்கு பிள்ளை அது தான நிதர்சனமும் அதை மாத்த முடியாதே…..”என்று மனதில் உள்ளதை மறையாமல் கூறிவியவர் சுந்தரியிடம் திரும்பி,
“உன்னை கஷ்டப்படுத்தனும்னு சொல்லலைடா…..ஆனா….”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் தாத்தா….எனக்கு புரியுது….இல்லாத ஒண்ணை தேடி போறதை விட இருக்குறதை வச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு போயிடலாம்….அதனால உனக்கும் லச்சுக்கும் வேற வழியில்லை உங்களுக்கு நாங்க தான் எங்களுக்கு நீங்க தான்….”என்று கூறி அவரின் கண்களை துடைத்துவிட்டு,
“இனி இப்படி அழவே கூடாது….எனக்கு ரொம்ப கோபம் வந்துடும்…..”என்று மிரட்ட,
“சுந்தரி டேய்…..”என்று அவளின் கைகளில் தன் முகத்தை புதைத்துக் கொண்டார் சிறு குழந்தை போல.சுந்தரிக்கு நேசனின் மனது நன்கு புரிந்து போனது அவரும் தன் மகனை தேடுகிறார் என்ன தான் மனைவியிடம் நான் அவனை தேடவில்லை என்று கூறிக் கொண்டாலும் மனது,உடலும் அவரை தேடிக் கொண்டு தான் இருந்திருக்கிறது.அதன் பின்னா நாட்களில்
“நான் அவ்வளவு திட்டியும் அந்த எருமை எதுவுமே சொல்லலை போல…..எருமை மாடு….”என்று விக்ரமை மனதிற்குள் திட்டிக் கொண்டே இருந்தாள் சுந்தரி.
“நான் மடச்சி நான் திட்டனவுடனே அவன் கிளம்பி வந்துடுவான் எப்படி நினைச்சேன்….அவனே எங்க இருக்கான் யாருக்கும் தெரியாதாம் இதுல இவன் அப்பாவையும்,அம்மாவையும் அழைச்சிக்கிட்டு வந்துட போறான்….ச்சை என்ன மனுஷ ஜென்மங்களோ….”என்று நினைத்தவளுக்கு நெஞ்சம் எரிந்தது அன்று நேசன் அழுததை நினைத்து.மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது அன்று காலை சுந்தரி எழும் போதே கீழ் வீட்டில் சத்தம் அதிகமாக கேட்டது.
“மீ….என்ன சத்தம்….”என்று கண்களை கசக்கி கொண்டே தன் அறையில் இருந்து அவள் வெளியில் வர,
“வாடீ மணி என்னகுது…..”
“மீ இன்னைக்கு சண்டே….”
“சண்டே மன்டேனு சொல்லிட்டு இருக்க….உன்னை….”என்று கையில் இருந்த கரண்டியால் அடிக்க,
“மீ அரம்பிச்சிட்டியா….என்னை அடிக்கிறதை நிறுத்து….உன் கைதான் வலிக்கும்….”
“எரும எரும….”என்று மீண்டும் அடிக்க கை ஓங்க,அவரின் கைகளை பிடித்துக் கொண்ட சுந்தரி,
“அட மீ….எதுக்கு இப்ப பவ்வல்லோவை எல்லாம் எழுப்பிக்கிட்டு இருக்க…கீழ என்ன சத்தம்னு கேட்டேன் அதுக்கு நீ பதில் சொல்லல…”என்று கேட்க,
“நேசன் அப்பாவோட பேரன் வந்திருக்கு….”
“யாரு…”
“விக்ரம்……”என்று வசந்தி கூற,
“எ…..எப்போ….அதான் சத்தம் அதிகமா இருக்கா…..”என்றவளின் குரலே உள்ளே சென்றிருந்தது.
“ஏன் உனக்கு காது கேட்கல……”
“கேட்குது…..”என்றவள் அவரின் கைகளை பிடித்தபடியே வீட்டின் வெளியில் செல்ல பார்க்க,
“ஏய் ஏய்….என் கையை விடு……”என்று வசந்தி சுந்தரியின் முதுகில் அடிக்க,
“ஆஆஆ…போம்மா…”என்று அவரின் கைகளை விட்டவள்,கீழே எட்டி பார்க்க அவளின் வண்டியின் பக்கத்தில் ஆடி கார் ஒன்று அந்த இடம் முழுவதையும் அடைத்துக் கொண்டு நின்றது.
“அய்யோ இவன் எதுக்கு வந்தான்….கடவுளே இவனை அன்னைக்கு என்னென்ன பேசினோம்னு கூட நியாபகத்துல இல்லையே….”என்று விரலை கடித்துக் கொண்டு நிற்க,அப்போது வீட்டைவிட்டு வெளியில் வந்த நேசன்,
“ஆமா பேரன் வந்திருக்கான் அவனுக்கு மீன் தான் ரொம்ப பிடிக்குமாம்….”என்று கைபேசியில் பேசிக் கொண்டே வர,
“தாத்தா…”என்று அழைக்க அவரோ அவளை பார்த்துவிட்டு கை அசைத்தவர்,
“ஆமா அது தான் எடுத்துட்டு வா….”என்றுவிட்டு கைபேசியை வைத்துவிட்டு,
“சுந்தரிமா….கீழவா….”என்று அழைக்க,
“நா….நான் அப்புறம் வரேன்….”
“அட வாடா….”என்று அழைத்துக் கொண்டு இருக்க,
“யாரு தாதூ…..”என்றபடி ஆண் ஒரு குரல் கேட்க,
“அய்யோ லண்டன் குரங்கு…..”என்றவள் வேகமாக உள்ளே ஓடிவிடப் பார்க்க,
“ஓய்…..”என்றவனின் குரலில் மாடியை அடைந்த நேரம் அவனும் மாடியில் இருந்தான்.
தன் முன்னே ஆறடி உயரத்தில் நின்றிருந்தவனை பார்த்தவள் ஆ என்று பார்த்தபடி இருக்க,
“ஓஓய்….”என்று அவளின் முன் கைகளை ஆட்டிவிட்டு,
“என்னை சைட் அடிச்சது போதும்….எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னை திட்டியிருப்ப….”என்று தன் இடுப்பில் கை வைத்து கேட்க,சுந்தரி அவனையும் அவன் உருவத்தையும் மேலிருந்து கீழ் வரை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.வெளிநாட்டுகாரன் போல் இருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு திராவிட ஜாடையில் பக்கா தமிழன் லுக்கில் வந்து நின்ற ஆடவனைக் கண்டதும் சொத்து என்று தான் ஆனது.
“நீ….நீங்க தான் விக்ரமா…..”என்று அவள் கேட்க,அவள் எதனால் கேட்கிறாள் என்று புரிந்தவனும் பல்லை கடித்துக் கொண்டே,
“ஏய் என்ன….”என்று நாக்கை மடித்துக் கொண்டு அவளை ஒற்றை விரலை காட்டி மிரட்ட,
“அய்யோ ஐய்யனார் போல இருக்கு….”என்று பயந்ததை போல் பின் நகர,
“அடிங்க….நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்….ரொம்ப ஓவரா தான் போற உன்னை…..”என்று எதை கொண்டு அவளை அடிக்கலாம் என்று விக்ரம் பார்த்துக் கொண்டு இருக்க,
“வாங்க தம்பி….”என்று வசந்தி வீட்டின் உள்ளிருந்து வர,
“அம்மா,அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்கலா….”என்று கேட்க,
“ம்ம்…”என்றவன் பார்வை சுந்தரியை எரித்துக் கொண்டு இருந்தது.அவளோ விரலை கடித்துக் கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு நிற்க,கோபம் தலைக்கேறியது விக்ரமிற்கு,
“உன்னைஐஐஐ…..”என்று கை ஓங்கிக் கொண்டு வர,
“விக்ரம்…..”என்று அதட்டலுடன் மேலேறிவிட்டார் நேசன்.அவரும் வந்தலிருந்து பேரனின் கோபத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.வீட்டிற்கு வந்தவுடனே தங்களை பற்றி விசாரிக்காமல் தன்னை திட்டியது யார் என்று கேட்டவன் அது சுந்தரி என்று தெரிந்ததலிருந்து அவளை திட்டிக் கொண்டு தான் இருந்தான்.நேசன் தான் அவனை கண்டித்து அமைதி படுத்தியிருந்தார்.
“என்னதிது ஒரு பொண்ணுகிட்ட இப்படி தான் பிகேவ் பன்றதா…..”என்றவர் மேலும் ஏதோ பேசும் முன்,
“விக்ரம்….எங்க கண்ணா இருக்க….”என்ற லட்சுமியின் குரல் கேட்க,
“போ உன் பாட்டி கூப்பிடுறா நீ போ…..”என்று நேசன் கூற,
“உனக்கு இருக்கு….”என்று அவளை மிரட்டிவிட்டு செல்ல,
“போடா…..”என்று வாயசைக்க,இப்போது அவளை எதுவும் செய்யமுடியாமல் முறைத்துக் கொண்டே சென்றான் விக்ரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!