Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 37

அத்தியாயம் 37

வில்வாவும் வர்ஷித்தாவும் எதிர் எதிரே அமர்ந்து இருந்தார்கள். டென்ஷனில் வில்வாவின் கால் நடுங்கவே ஆரம்பித்தது. அதனை மறைப்பதற்கு, டேபிள் மேலே தாளம் போடுவதும், நொடிக்கொருமுறை கைபேசியை எடுத்து பார்ப்பதும் என்று அமர்ந்திருந்தான்.



Advertisement

“சில் மேன், ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க?” என்றாள் வர்ஷித்தா.

“நான் தனியா ஒரு பொண்ணு கிட்ட பேசுறது ப்ர்ஸ்ட் டைம், அதான்..”

Advertisement

Advertisement

“சும்மா கதை விடாதீங்க.. ஏன் உங்க கிட்ட டிரீட்மெண்ட்க்கு பொண்ணுங்க வர மாட்டாங்களா?”

“அதுவும் இதுவும் ஒன்னா? சரி, சரி ஆர்டர் கொடுத்துட்டு பேசலாம், உனக்கு என்ன பிளேவர் பிடிக்கும்?” என்று சட்டென இயல்பிற்கு வந்துவிட்டான்.

Advertisement

“வெண்ணிலா… உங்களுக்கு எந்த பிளேவர் பிடிக்கும்?”

“எனக்கா, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச், ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, சாக்லேட், பிஸ்தா..”

“ஹலோ, இதுக்கு முன்ன ஐஸ் கிரீம் கடையில வேலை பார்த்தீங்களா? சொல்லிட்டே போறீங்க?” 

“நீ தானே என்ன பிடிக்கும்னு கேட்ட? இன்னும் இருக்க எல்லா பிளேவர்ஸும் எனக்கு பிடிக்கும்”

“ஹரே பாப்ரே! இப்ப ரொம்ப பிடிச்ச ஒன்ன மட்டும் சொல்லுங்க..”

“எனக்கு ஒன்னு எல்லாம் பத்தாது, மத்யானம் சாப்பிட்டது இப்ப மணி ஆறு ஆச்சு”

பின் வர்ஷித்தாவின் முறைப்பில், “சாக்லேட் சொல்லு” என்றான்.

வில்வா ஏதாவது கேட்பான், அதை வைத்து மேலே பேசலாம் என்று வர்ஷிதா காத்துக்கொண்டிருக்க, அவனோ எதையும் கூறுவது போல தெரியவில்லை.

இவர்கள் ஆர்டர் கொடுத்த ஐஸ் கிரீம்கள் வந்துவிடவே..

அடுத்த ஐந்து நிமிடங்களை அதை சாப்பிடுவதில் கடத்தினார்கள்.

“ஐஸ் கிரீம் சாப்பிடவா இங்கே வந்தோம்?” என்றாள் வர்ஷித்தா கடுப்பாக.

“என்ன வர்ஷி  நீ? இது கூட தெரியாம இருக்க? ஐஸ் கிரீம் பார்லர்ல வடையா சாப்பிட முடியும்?”

அவனது மொக்கை ஜோக்கில் வர்ஷித்தா நொந்து போய் பாவமாக பார்க்கவும்,

“சரி சரி.. சொல்லு என்ன விஷயம்?” என்றான் இறங்கி வந்து.

எப்படியும் அவன் கேட்கப்போவதில்லை என்று புரிந்து வர்ஷித்தாவே  “உங்களுக்கு என்னை பிடிக்குமா?” என்றாள் மெல்ல.

“ரொம்ப ரொம்ப பிடிக்கும் வர்ஷி.. உனக்கு பிடிக்குமான்னு தான் ஒரு டவுட்.. ஒரு டென்ஷன்.. அதான் நீயே முதல்ல ஆரம்பிச்சிட்டா அப்புறம் நான் சொல்லலாம்னு இருந்தேன்”

“அடப்பாவி, சரி சொல்லுங்க..”

“இரு வரேன்” என்று வேகமாக எழுந்து சென்று, இன்னொரு பவுல் ஐஸ் கிரீம் கொண்டு வந்தான்.

வர்ஷிதா கேள்வியாக பார்க்கவும்,

இங்கே பாரு வர்ஷி, “நீ சாப்பிட்ட வெண்ணிலாவும், நான் சாப்பிட்ட சாக்லேட்டும் கலந்த சாக்கோ வெண்ணிலா.. இது மாதிரி நாமளும் சேர்ந்து நம்ம வாழ்க்கையயை சில்லுன்னு அனுபவச்சி வாழனும் வர்ஷி..

 உனக்கு ஓகேன்னா இந்தா இதை சாப்பிடு” என்று அவள் முன் அதை வைத்தான்.

வர்ஷித்தாவும் பந்தா எதுவும் இல்லாமல் அதில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வாயினுள் போட்டாள். சில்லென்று மனதிற்குள்ளும் இறங்கியது அந்த ஐஸ் கிரீம்.

இன்னொரு ஸ்பூன் வைத்து வில்வாவும் அதில் இருந்து எடுத்து சாப்பிட்டான்.

“உங்களுக்கு ஏன் என்னை பிடிச்சது?” என்று கேட்டாள் வர்ஷித்தா.

“என் பெயரும் வி ல ஸ்டார்ட் ஆகுது, உன் பெயரும் வி ல ஸ்டார்ட் ஆகுது..மேட்சிங் மேட்சிங்.. அதான் ப்ர்ஸ்ட் காரணம்”

இப்படி ஒரு பதிலை அவள் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

“நிஜமா அது தான் காரணமா?” என்றாள் ஆயாசமாக.

“ஹா ஹா… எனக்கு பாரின்னா உயிர், அதுக்கு ஏன்னு காரணம் கேட்டா என்ன சொல்ல முடியும்? அது மாதிரி தான் வர்ஷி.. பிடித்தத்திற்கு எப்படி காரணம் சொல்ல முடியும். உணரத் தான் முடியும்.

முதல்ல, நீ என் கூட என் சரிபாதியா வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு.. அப்புறம் உன்னை தவிர வேறு யாரும் அந்த இடத்துக்கு வர முடியாதுன்னு தோணுச்சு.. எப்ப? எப்படி? ஏன்? அது எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது, ஆனா உணர முடியும், உன்னையும் உணர வைக்க முடியும்”

“நான் உங்க பேச்சில டோட்டல் பிளாட். 

பொதுவா என்னையும் ஹர்ஷையும் நிறைய கிண்டல் பண்ணுவாங்க, எங்க உருவத்தை பார்த்து , நடை உடை பாவனைன்னு எல்லாத்தையும் பண்ணுவாங்க, நாங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டோம். சில பேர் முகத்துக்கு முன்னாடி நல்லா பேசுவாங்க, ஆனா பின்னாடி கிண்டல் செய்வாங்க.. 

நீங்க தான் முகத்துக்கு முன்னாடியே எந்த வித தப்பான அபிப்பிராயமும் இல்லாம பயில்வான் பக்கிரி சாமின்னு எல்லாம் சொன்னீங்க. அது என்னை ஹர்ட் பண்ணவே இல்லை, ஏன்னா உங்க நோக்கம் எங்களை காயப்படுத்தனுங்கிறது இல்ல. நீங்க உண்மையாகவே எங்க திறமைகளுக்கு மதிப்பு கொடுத்தீங்க.. 

உங்க கண்ணுல நான் நேர்மையான பாராட்டைத் தான் பார்த்தேன். 

உங்க அந்த மனசு தான் என்னை ஆகர்ஷித்தது. 

நீங்க உங்க தங்கை மேல வச்சிருக்க பாசம், அவங்களை பாதுகாக்கிற விதம், சின்னுகிட்ட காட்டுற தூய்மையான பாசம், எங்க மீக்கிட்ட இருக்க உங்க அன்பு, இது எல்லாத்துக்கும்  மேல உங்க பிரண்ட்ஷிப்..

உங்க கிட்ட தேவையில்லாத ஈகோ இல்ல.. எதார்த்தமான உங்க குணம் என்னை ரொம்பவே ஈர்த்திடுச்சு..

ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச் வில்வன்… க்யூட் லவ்வபில் வில்லன் நீங்க” 

வில்வாவிற்கு எங்கேயோ பறப்பது போல இருந்தது.

“சூப்பர் சூப்பர் வர்ஷி.. அப்படியே ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து எனக்கு  போட்டு விட்டிருக்கலாம், இந்த ஸீன் கம்ப்ளீட் ஆயிருக்கும்”

“அதுவும் நானா தான் வாங்கி இருக்கணுமா?”

“ஆண் என்ன பெண் என்ன

நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓர் இனம் தான்

அட நாடென்ன வீடென்ன”

என்று மெல்லிய குரலில் பாடினான்.

வில்வாவிற்கு உண்மையிலே நல்ல குரல் வளம்.

“உங்களை எப்படி தான் சமாளிக்க போறேனோ? ஆனா நல்லா பாடுறீங்க”

“உனக்கு பிடிச்சிருக்கா? உன்கிட்ட பாட ஒரு பாட்டு யோசிச்சு வச்சிருக்கேன், பாடவா?”

“ஹ்ம்ம்..”

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் –

உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன்காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று

உனைக்கண்டதும் கண்டு கொண்டேன்

எந்தன் கழுத்து வரை

எந்தன் காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்…….

அந்த பாடல் வரிகளோடு  வில்வாவின் குரலும் அவன் பார்வையும் நேசமும் என வர்ஷித்தா முழுவதுமாக நெகிழ்ந்து விட்டாள்.

“ஏன் பாரி? உங்க நண்பர் பயப்படுவாருனு சொன்னீங்க. இங்க பார்த்தா பாட்டெல்லாம் பாடி கலக்கிட்டு இருக்காரு” என்று கூறிக்கொண்டே ஹர்ஷித்தாவும் பாரியும் இவர்களிடத்திற்கு வந்தனர்.

“ஏன் ஹர்ஷ், ஒரு போன் போட்டுட்டு வரணும்னு தெரியாதா?” என்றாள் வர்ஷித்தா ஹர்ஷிதாவிடம் சூடாக 

“மேடம், போனை எடுத்து பாரு, ரொம்ப நேரமா அடிச்சிட்டு இருக்கு, நீ காதல் மழையில நனைஞ்சிட்டு என்னை சொல்லாதே..”

“நீ மட்டும் என்ன வெய்யில்லயா காய்ஞ்சிட்டு வந்த?” இருவரும் வாக்குவாதத்தில் இறங்கி விட்டனர்.

இவர்களை கண்டுகொள்ளாமல், பாரியும் வில்வாவும் கட்டி பிடித்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

“டேய் மச்சான் ஒரு வழியா நம்ம ரெண்டு  பேருக்கும் லவ் செட் ஆயிடுச்சு டா” என்று ஆர்பரித்து கொண்டிருந்தார்கள். 

“லவ் செட் ஆகிடுச்சுன்னு, இவனுங்களே கட்டி பிடிச்சிக்கிட்டு நிக்குறானுங்களே” என்றாள் வர்ஷ் ஹர்ஷிடம்.

“நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க.. இன்னிக்கு நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்” என்று பாரி கூறினான்.

“சரி அப்ப நாங்க கிளம்புறோம், நீங்களே கொண்டாடுங்க..” என்று பெண்கள் கூறவும் உடனே,

“ஓகே பாய்” என்றார்கள் இருவரும்.

“அட பாவிங்களா, ஒரு பேச்சுக்காவது போகாதீங்கன்னு சொல்றாங்களா பாரேன்..”

“நாங்க இந்த விஷயத்தை எப்படி எல்லாருக்கும் சொல்றது யாருக்கு முதல்ல சொல்றதுன்னு யோசிக்கணும், நிறைய விஷயம் இருக்கு இல்ல டிஸ்கஸ் பண்ணி அடுத்த ஸ்டெப்புக்கு போகணும் இல்ல?”

“டீக் ஹேய், நல்லதா போச்சு, நீங்களே யோசிச்சு எங்க மீ, பப்பா கிட்டயும் சொல்லிடுங்க. எங்களுக்கு யோசிக்கிற வேலை மிச்சம், பாய்” என்று கூறி இவர்கள் பதில் கூறுவதற்குள் தங்கள் குஷ் மீது ஏறி அமர்ந்து பறந்து விட்டனர்.

“என்ன வில்வா, இப்படி கோர்த்துவிட்டு போயிடுச்சுங்க”

“நம்ம நிலைமை இனி இப்படி தான் போல பாரி, ரெண்டு பக்கிரிகளும் சேர்ந்து நம்மளை ஹிந்தி பக்கிரியா மாத்தி, மேஜர் சார் கையில கீமாவாக்க பிளான் போட்டிருக்குங்க”

“நம்ம பார்க்காததா, விடு விடு, சமாளிப்போம்”

கொஞ்ச நேரம் கிளினிக்ல போய் உக்கார்ந்து பேசுவோம் என்று இருவரும் மறுபடியும் தங்கள் கிளினிக் சென்றனர்.

“முதல்ல கருணாவுக்கு போன் போட்டு சொல்லிடுவோம்”

கருணாவிடம் இருவரும் அனைத்தையும் கூறினார்கள். 

“சூப்பர் சூப்பர், கலக்குறீங்க ரெண்டு பேரும்” 

சரி கருணாம்பிகை அடுத்து என்ன செய்றது?

“ஆளை விடுங்க.. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு, நீங்க யோசிச்சு ஏதாவது செய்யுங்க. என்ன ப்ராஜெக்ட் விஷயமா இரண்டு  மாசம் ஆப்ரிக்கா போக சொல்லி இருக்காங்க. அது சம்பந்தமா நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண வேண்டி இருக்கு. உங்க ஹெல்பும் தேவை படும், நான் அப்ப கூப்பிடுறேன், பாய்”, என்று அவசரமாக பேசி வைத்து விட்டாள்.

“பாரி, அடுத்து சின்ன பாப்பாகிட்ட சொல்லிடுவோம்”

“நேர்லயே சொல்லுவோம், இரு போன் பண்ணி இங்கே வர சொல்றேன்” என்று பாரி அருந்ததிக்கு அழைத்து கிளினிக் வருமாறு கூறினான்.

பக்கம் என்பதால் அருந்ததியும் உடனே வந்துவிட்டாள்.

“என்ன அண்ணாஸ், எப்படி போச்சு நம்ம முதல் நாள் பிசினஸ், யாரவது பேஷண்ட்ஸ் வந்தாங்களா?”

“ஒரு மூனு பேர் வந்தாங்க பாப்பா”

“சூப்பர் அண்ணாஸ்” 

“இன்னும் ஒரு சூப்பரான நியூஸ் ஒன்னு இருக்கு..”

“என்ன?” என்றாள் ஆர்வமாக.

பின் வில்வாவும் பாரியும் சுருக்கமாக தங்கள் காதல் கதையை கூறினார்கள். 

“வாவ்.. வாவ்..வாவ்வ் “

“செம செம செம செலக்ஷன் அண்ணாஸ் “ என்று ஆர்ப்பரித்தாள்.

மூவரும் சேர்ந்து ஒரு குத்து பாட்டு போட்டு டான்ஸ் வேறு ஆடி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

“ஹே சின்ன பாப்பா , நம்ம நெக்ஸ்ட் மிஷன் வீட்ல எப்படி சொல்றதுன்னு யோசிக்கணும், அவங்க வீட்லயும் பேசணும், நீ தான் ஐடியா கொடுக்கணும்”

“கண்டிப்பா அண்ணாஸ், சீக்கிரமா சொல்லிடுங்க, எனக்கு இப்பவே எல்லார்கிட்டயும் சொல்லணும் போல இருக்கே!!!”

“பாப்பா கவுத்து வுட்றாத.. கொஞ்சம் அமைதியா இரு, நாங்களே பக்குவமா சொல்லிடறோம்”

அருந்ததிக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து மூவரும் பேசிக்கொண்டு நடந்தே வீட்டிற்கு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!