Skip to content
Post Views: 1,823
அத்தியாயம் 38
சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிகளையும் பயன்படுத்தி பாரியும் வில்வாவும் அனைவரையும் தங்கள் காதலுக்கு சம்மதிக்க வைத்தார்கள்.
Advertisement
உண்மையிலே பெரிதாக யாருக்கும் இதில் எதிர்ப்பு இல்லை தான். இருந்தாலும் இவர்களின் குரங்கு சேஷ்டையை பார்ப்பதற்காகவே இழுத்தடித்தார்கள் அனைவரும்.
வேதாச்சலம் தாத்தா ஒருவரை தவிர மற்ற அனைவருக்கும் பரிபூரண சம்மதம் தான்.
Advertisement
Advertisement
என்ன இருந்தாலும் காதல் கல்யாணம் என்பது அவர் வரையில் இன்றும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அவினாஷ் தான் அவரிடம் நிறைய பேசி அவரை சரி கட்டி இருந்தான்.
Advertisement
விஷயம் தெரிந்ததும் ராஜிக்கு தலைகால் புரியவில்லை.அப்போதிலிருந்து வானத்தில் தான் மிதந்து கொண்டிருக்கிறார். இவர்களை விட மகள்களுக்கு நல்ல சம்பந்தம் கிடைக்க வாய்ப்பில்லை என்பது அவரது எண்ணம்.
சீதா லட்சுமியின் பிரசவத்திற்கு பிறகு திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று ராஜியும் விக்ராந்தும் கேட்டுக்கொள்ளவே, அனைவரும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள்.
வளைகாப்பு முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்புவதற்குள் அனைத்தும் பேசி முடிவு செய்து விட்டார்கள்.
திருமணம் முருகானந்தம் தாத்தா சிவகாசியில் வைத்துக்கொள்வோம் என்றார்.
வில்வாவின் வீட்டில், திருச்சியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.
“அது எல்லாம் முடியாது, ஒரே நாள் ஒரே மண்டபத்துல தான் கல்யாணம்” என்று நண்பர்கள் முரண்டு பிடித்தனர்.
என்னதான் உறவினர்கள் போல பழகினாலும், திருமணம் என்று வருகையில் தங்கள் ஊரில் தான் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் நினைத்தார்கள்.
அனைவரும் எவ்வளவு எடுத்து கூறியும், அது எல்லாம் முடியவே முடியாது என்று அவர்கள் பிடியிலே நின்றார்கள் இருவரும்.
பிறகு வீரராகு தாத்தா,
“எல்லாம் நம்ம மனசு தான் காரணம். இரண்டு ஜோடிக்கும் ஒன்னாவே நிச்சயம் எங்க ஊர்ல வைச்சுப்போம், அதே மாதிரி கல்யாணம் முருகானந்தம் ஊர்ல வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க?” என்றார்.
“சிறப்பு, அப்படியே செஞ்சுக்கலாம். அப்படியே ரிசெப்ஷன் பொண்ணு வீட்ல எங்க சொல்றாங்களோ அங்கே வச்சுக்கலாம்” என்றார் முருகானந்தம் தாத்தா.
அனைவருக்கும் இது சரி என படவே சரி என்றார்கள்.
“சூப்பர் தாத்தா..” என்று வில்வா அவன் தாத்தாவை கட்டி பிடித்துக்கொண்டான்.
“வர்ஷ், என்ன டீ உன் ஆளு அவங்க தாத்தாவையே இன்னும் கட்டி பிடிச்சிட்டு இருக்கான், உன் பாடு திண்டாட்டம் தான் போலயே..” என்று சகோதரியை வம்பிற்கு இழுத்தாள் ஹர்ஷ்.
“வேந்தன் கல்யாணம் எங்க வீட்ல நடக்கணும்னு எனக்கு ஆசை.. நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்திட்டிருக்கிற வீடு… ரொம்ப ராசியான வீடு.. எல்லா பிள்ளைகளும் நிறைவா சந்தோசமா வாழ்வாங்க” என்றார் முருகானந்தம் தாத்தா உணர்ச்சிவசமாகி.
பாரி அவன் தாத்தாவிடம் சென்று அவரை தோளோடு கட்டி அணைத்து கொண்டான்.
“அங்கே மட்டும் என்ன வாழுதாம்?” என்றாள் வர்ஷ் இப்பொழுது சிரித்து கொண்டே.
விக்ராந்திற்கு இவர்கள் அனைவரையும் மிகவும் பிடித்திருந்தது. அவர்களின் இந்த ஒற்றுமை விட்டுக்கொடுக்கும் குணம் என்று அனைத்துமே பிடித்திருந்தது.
அனைத்தும் நல்லபடியாக உறுதி ஆகவும், இரண்டு ஜோடிகளும் காதல் கடலில் உல்லாசமாக நீந்தி கொண்டிருக்கிறார்கள்.
—————————–
“என்ன சுமி, என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்றார் தமயந்தி சுமதியிடம். இருவரும் மார்க்கெட் சென்று காய் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்ப வந்துகொண்டிருந்தார்கள்.
“எனக்கு பசங்க லவ் எல்லாம் ஓகே தான் தமி, ஆனா நான் மாமியார் கெத்து எல்லாம் காட்டலாம்னு நிறைய பிளான் எல்லாம் வச்சிருந்தேன். இந்த பொண்ணுங்க பாக்ஸிங் எல்லாம் சூப்பரா பண்ணுவாங்கலாமே? நான் மருமகள் கிட்டயும் கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கணுமா? என் பிளான் எல்லாம் வேஸ்ட் தானா?” என்றார் சுமதி கவலையாக.
“நம்ம நிலைமை எப்பவுமே இப்படி தான் சுமி.. விடு விடு.. எனக்கு இன்னொரு டவுட் சுமி”
“என்ன தமி?”
“இவனுங்க பொண்ணு பார்க்க போட்ட கண்டிஷன் என்ன? இப்ப செலக்ட் பண்ணி இருக்க பொண்ணுங்க என்ன? சண்டையே போட்டுக்காத பொண்ணுங்க வேணும்னு சொன்னானுங்க தானே? இவங்க ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள சண்டை போட ஆரம்பிச்சிடறாங்களே!”
“ஹா ஹா.. அதைச்சொல்லு.. அவங்க சண்டை போட்டுக்கிட்டா நமக்கு நல்லா பொழுது போகும் தானே?”
“அதுவும் சரி தான். சரி, பாப்பா எப்ப ஆப்ரிக்கால்ல இருந்து கிளம்புறா?”
“வர வெள்ளிக்கிழமை அங்க இருந்து கிளம்புறதா சொன்னா. கருணா கண்ணுக்குள்ளயே நிக்குறா தமி..”
“ரெண்டு மாசம் சீக்கிரமா போயிடுச்சு. இன்னும் ஒரு வாரத்துல இங்கே வந்துடுவா, எனக்கும் தான் பிள்ளையை பார்க்கணும் போல இருக்கு”
“உடனே இங்கே வர முடியாது போல.. இன்னும் நாலு வாரம் தான் ட்ரெயினிங், அப்புறம் போஸ்டிங் போடுவாங்கன்னு சொன்னா.. அந்த கேப்ல தான் வர முடியுமாம்”
“பாப்பா வர சமயம், கல்யாணம் கரெக்ட்டா அமைஞ்சிடும்.. போஸ்டிங் சென்னைல கிடைக்கனும்னு நான் சாமிய வேண்டிக்கிட்டு இருக்கேன் சுமி”
“இல்ல தமி, மோஸ்ட்லி போஸ்டிங் டெல்லில தான் இருக்குமாம். அடுத்த போஸ்டிங் வேணா நாம சென்னை கேட்டு வாங்கிக்கலாம் போல”
“இப்ப தான் நம்ம சம்பந்தபுரம் டெல்லின்னு ஆயிடுச்சே.. அதனால நாமளும் டெல்லி போயிட்டு வந்துட்டு தானே இருப்போம். கவலையே படாதே”
“அதுவும் சரி தான்.”
—————–
கருணா பயிற்சியின் ஒரு பகுதியான ப்ராஜெக்ட்டிற்காக கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள புருண்டி என்று இடத்திற்கு சென்றுள்ளாள்.
இந்த ஆண்டு சிறந்த மாணவி என்ற முறையில் , பயிற்சி கூடம் கருணாவின் பெயரை அதற்காக பரிந்துரைத்திருந்தது.
புருண்டியில் நிலவும் நீடித்த வறுமையின் காரணங்களை ஆராய்ந்து, பொருளாதார மீட்பு உத்திகளை முன்மொழிவதற்காக, இந்திய அரசு அவளை அரசு அங்கீகாரம் பெற்ற பணிக்காக புருண்டிக்கு அனுப்பி உள்ளது. அவளுடன் ஒரு சீனியர் ஐ ஈ எஸ் அதிகாரியையும் அனுப்பி உள்ளது.
புருண்டியில் வறுமை என்பது இப்பொழுதைய நிலவரம் என்று மட்டும் கூற முடியாது. அது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது. அங்கே செல்வதற்கு முன் அங்கே பேசப்படும் கிருண்டி என்ற மொழியை தெரிந்து கொள்வதற்காக தான் பாரியிடமும் வில்வாவிடமும் உதவி கேட்டிருந்தாள் கருணா.
அவளுக்கு மற்ற விவரங்களை சேகரிப்பதில் நேரம் சரியாக இருந்ததால், இவர்களை இன்டர்நெட்டில் தேடி, அந்த மொழிகளில் உள்ள நாள்தோறும் பேசப்படும் சொற்கள், அத்தியாவசிய பேச்சு வார்த்தைகள், என எல்லாம் பேசி ரெக்கார்ட் செய்து, தனக்கு அனுப்பும்படி கூறி இருந்தாள்.
மொழி என்பது ஒருவரோடு நாம் நெருக்கமாய் பழகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் மிகவும் முக்கியம் என்பது கருணாவின் எண்ணம்.
காதல் கடலில் மூழ்கி இருந்த இருவரும், காதல் வசனங்களாக அனுப்பி வைத்து கருணாவிடம், நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது தனி கதை.
பின் அவினாஷின் உதவியோடு சரி செய்து மீண்டும் அனுப்பி வைத்தார்கள்.
———————
சுமதியும் தமயந்தியும் மெல்ல பேசிக்கொண்டே அன்ன நடையிட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
வீட்டு வாசலிலே பாட்டி, தர்மராஜ், சங்கரன் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள்.
“ஏன்டி காய் வாங்கிட்டு வர்றேன்னு தானே போனீங்க? எவ்வளவு நேரம்?” என்றார் பாட்டி.
“இல்ல அத்தை மெதுவா பேசிக்கிட்டே வந்தோம், ஆமா நீங்க மூனு பேரும் ஏன் பரபரப்பா இருக்கீங்க? நீங்க ரெண்டு பேரும் ஆபிஸ்ல இல்லாம இந்தநேரம் இங்கே என்ன பண்றீங்க?”
“சீதாவுக்கு பிரசவ வலின்னு ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்து இருக்காங்கலாம். பாரி போன் போட்டு சொன்னான்”
“சரி அப்ப நாம போயிட்டு வருவோம்” என்றார் தமயந்தி உடனே.
“அதுக்காக தான் உங்களை பார்த்துகிட்டு இருக்கோம். போனவங்க போன் எடுத்துட்டு போகணுமா இல்லையா?” என்றார் சங்கரன்.
“எப்ப பார்த்தாலும் போனும் கையுமா இருக்கோம்னு அத்தை திட்டுனாங்க.. அதான் போனை வீட்லேயே வைச்சிட்டு போனோம்” என்று ஆரம்பித்த சுமதி,
பின் மாமியாரின் பாசப்பார்வையில் அமைதியாக நின்றுகொண்டார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வில்வாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“பாட்டி, பொண்ணு பிறந்திருக்கு பாட்டி”, என்றான் உற்சாகமாக.
“அதுக்குள்ளயா? கொஞ்ச நேரம் முன்ன தானே டா, ஹாஸ்ப்பிட்டல் போனாங்க?”
“என்ன பண்றது பாட்டி, நம்ம அப்பா தான் இத்தனை வருஷம் லேட் பண்ணிட்டாரு, நாமளாவது சுறுசுறுப்பா இருக்கலாம்ன்னு பாப்பா சீக்கிரமா வந்துடுச்சு போல பாட்டி” என்றான் வில்வா அங்கே இருந்து ஸ்ரீனிவாசன் காதில் கேட்கும் படி.
“அவரை எதுக்கு டா வம்புக்கு இழுக்குற.. சரி சரி கூட இருந்து என்ன வேணும்னு பார்த்துக்கோங்க, நாங்களும் வர்றோம்” என்று வைத்துவிட்டார் பாட்டி.
“வெள்ளிக்கிழமை அதுவுமா மஹாலட்சமி பொறந்திருக்கா..” என்றார் பாட்டி மகிழ்ச்சியாக.
இவர்கள் அனைவரும் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்கள்.
குறித்த தேதிக்கு பத்து நாட்கள் முன்னமே குழந்தை பிறந்ததால், ராஜியால் உடனே வர முடியவில்லை. “நாங்க எல்லாம் பார்த்துக்க மாட்டோமா?” என்று அன்பால் அவரை சமாதான படுத்தி, தாயையும் சேயையும் பக்குவமாக பார்த்துக்கொண்டனர் தமயந்தியும் சுமதியும்.
இதில் மருமகள்களுடன் நல்ல புரிதல் ஏற்பட்டது. இவர்களை பிக் அப், ட்ராப் செய்வது ஹர்ஷ் வர்ஷ் இருவரும் தான்.
அதிலே அவ்வளவு பெருமை மகிழ்ச்சி தமிக்கும் சுமிக்கும்..
இந்த ஒரு வாரத்தில் இவர்கள் தெரிந்து கொண்டது, மருமகள்களுக்கு பொறுப்பு மிகவும் அதிகம் என்பதே.. செய்யும் வேலைகளை சொல்லிக்காட்ட தெரியாது இருவருக்கும், அமைதியாக அத்தனை நேர்த்தியாக இருந்தது அவர்களது செயல்கள் அனைத்தும்.
சீதாவின் அம்மாவிற்கு இவர்களது துணை யானை பலத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
ராஜியும் விக்ராந்தும் வந்துவிட்டார்கள். திருமணம் வரை ராஜி இங்கேயே இருப்பதாக ஏற்பாடு. விக்ராந்த் மட்டும் திரும்ப டெல்லி சென்று, திருமண நாளிற்கு இரண்டு நாட்கள் முன்பு வருவதாக கூறி சென்றார்.
தர்ஷும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அமெரிக்காவில் இருந்து வருகிறான்.
கருணா, முசோரி வந்து சேர்ந்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த அறிக்கை மிகவும் சிறப்பாக இருப்பதாக புருண்டி அரசு பாராட்டி இந்திய அரசிற்கு கடிதம் அனுப்பி இருந்தது தனிச்சிறப்பு.
திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
————————-
error: Content is protected !!