Skip to content
Post Views: 3,523
அத்தியாயம் 5
“ஹலோ.. யார் பேசுறது?”
Advertisement
“ஹலோ தாத்தா… நான் தான் தாத்தா, பாரி பேசுறேன். எப்படி இருக்கீங்க தாத்தா?”
“அடடே! பேராண்டியா பேசறது? நான் நல்லா இருக்கேன் வேந்தா.. நீ நல்லா இருக்கியா? என்ன அதிசயமா நீ போனை எடுத்து பேசுற? அப்பா அம்மா வீட்ல இல்லையோ?”
Advertisement
Advertisement
“ஹா ஹா.. ஆமா தாத்தா. சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே! அம்மாவும் அப்பாவும் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போயிருக்காங்க”
ஊரில் இருந்து தர்மராஜின் தந்தை முருகானந்தம் அழைத்திருந்தார்.
Advertisement
“அப்படியா… நீ கோவிலுக்கு போகலயா? நான் எதுக்கு கூப்பிட்டேன்னா, அடுத்த வாரம் உங்க பெரியப்பா பொண்ணு மலருக்கு கல்யாணம். அதுக்கு உங்களை எல்லாம் கூப்பிட தான் போன் போட்டேன்”
“ஓ.. சரி தாத்தா.. நான் அப்பா அம்மா வந்ததும் உங்க கிட்ட பேச சொல்றேன்”
“நீயும் கட்டாயம் வரனும் வேந்தா.. உன்னை பார்க்கணும் போல இருக்கு இந்த தாத்தாக்கு”
“—————-”
“என்ன பதிலே காணும்.. தாத்தா வை பார்க்க வருவ இல்ல?”
“இல்ல தாத்தா.. அடுத்த வாரம் கல்யாணம். இப்ப தான் எங்களுக்கு சொல்லவே செய்றீங்க.. அப்ப நாங்க அவ்வளவு முக்கியமானவங்க இல்லைன்னு தானே அர்த்தம். நான் எதுக்கு தாத்தா.. நான் அப்பா கிட்ட சொல்றேன்.. நீங்க அப்பா கிட்ட பேசிக்கோங்க”
“அது.. அது அப்படி இல்ல கண்ணு.. இது திடீர்னு முடிவான கல்யாணம் வேந்தா.. காதல் கல்யாணம்.. நம்ம சொந்தத்துல தான்.. நீ சின்ன பையன்னு நான் விவரம் சொல்லல.. ஆனால் என் பேரன் பெரிய மனுசன் ஆகிட்டாரு போலவே.. பெரியவங்க பேச்சு எல்லாம் பேசுறாரே..”
“சாரி தாத்தா.. எதோ வேகத்துல கேட்டுட்டேன்”
“ஹா ஹா…. பரவாயில்லை விடு.. நீ கண்டிப்பா வரணும்.. சரியா? “
“ஓகே தாத்தா, நான் என்னோட பிரண்டையும் கூட்டிட்டு வரவா?”
“கண்டிப்பா கூட்டிட்டு வா.. ஒருத்தர் என்ன, ஒன்பது பேர வேணுனாலும் கூட்டிட்டு வா.. இது உன் வீடு வேந்தா…”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தர்மராஜும் தமயந்தியும் வந்து விட்டார்கள்.
“சரி தாத்தா… அப்பா அம்மா வந்துட்டாங்க.. அப்பா கிட்ட போனை கொடுக்கிறேன் “
“தர்மா… நம்ம மலருக்கு அடுத்த திங்கள் கிழமை கல்யாணம்.. திடீர்ன்னு தான் முடிவு ஆனது.. உங்க பெரிய அத்தை பேரன் தான் மாப்பிள்ளை. காதல்ன்னு வந்து நிக்குறாங்க.. உன் விஷயத்துல பண்ண தப்பை பண்ண கூடாதுன்னு சம்மதிச்சிட்டோம்.. அதுவும் இல்லாமல் சொந்தம் வேற.. நாள் கடத்த வேண்டாம்னு வர முதல் முஹுர்த்தத்திலேயே தேதி குறிச்சிட்டோம்.. நீ குடும்பமா வந்துடு..”
“சரி அப்பா.. நான் ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க.. இல்ல இங்க இருந்து ஏதாவது வாங்கிட்டு வரனும்னாலும் சொல்லுங்க..”
“சொல்றேன் ப்பா.. வேணும்னா சொல்றேன்.. உன் அண்ணாவும் அண்ணியும் பேசுறாங்களாம்.. இரு தரேன்.. ஆ.. ஒரு நிமிஷம்..வேந்தன் அவன் தோழன் பையனையும் கூட்டிட்டு வரலாமான்னு கேட்டான்.. அவன் தோழனையும் கூட்டிட்டு வாங்க..”
“சரிப்பா.. “
பிறகு தர்மராஜின் அண்ணனும் அண்ணியும் அழைப்பு விடுத்தார்கள்.
—————–
உடனே பாரி வில்வாவிடம் விஷயத்தை கூற அவர்கள் வீடு நோக்கி ஓடினான்.
“நம்மளுக்கே அங்க என்ன மரியாதை கிடைக்குமோ? இதுல வில்வாவை கூட்டிட்டு போகணுமா? அதுக்குள்ள அவசரம்.. அங்கே ஓடிட்டான்” என்றார் தமயந்தி வருத்தமாக.
“நமக்கு தான் தமா வரவேற்பு இருக்காது.. அங்க எல்லாருக்கும் பாரின்னா ரொம்ப இஷ்டம் தானே.. விடு..”
அதுவும் உண்மை தான். அவர்கள் வீட்டில் அண்ணன் தம்பி அனைவருக்கும் பெண் குழந்தைகளே.. பாரி தான் ஒரே ஆண் வாரிசு. அதுவும் இல்லாமல் பாரி வேந்தன் என்பது தர்மராஜின் தாத்தா பெயர். உருவத்திலும் அவன் அவரை போலவே இருப்பான். அதனாலே அனைவருக்கும் பாரி என்றால் தனி பிரியம்.
திருமணம் திங்கள் கிழமை என்பதால், வெள்ளி அன்றே அனைவரும் புறப்படுவதாக இருந்தது. பாரி வில்வாவை மட்டும் தான் அழைத்திருந்தான். ஆனால் தர்மராஜும் தமயந்தியும் வில்வா கருணா இருவரையும் தாங்கள் அழைத்து செல்வதாக சுமதியிடமும் சங்கரனிடமும் கூறி சம்மதம் வாங்கி இருந்தார்கள்.
நண்பர்கள் அங்கே சென்று என்ன எல்லாம் செய்யலாம் என்று தங்களுக்குள் பேசிகொண்டே இருந்தார்கள். கிளம்பும் போது தான் இருவருக்கும் கருணாம்பிகை வருவதே தெரியும்.
“நீ எதுக்கு வர? உன்னை யார் கூப்பிட்டா இப்ப?” என்றான் வில்வா பட்டென்று.
கருணாவின் முகமே வாடி விட்டது. “பாருங்க ப்பா.. இந்த அண்ணாக்கு என் மேல பாசம் இல்லை…இவங்க இரண்டு பேரும் எப்பொழுதும் என்னை மட்டும் சேர்த்துக்கவே மாட்டாங்க.. நான் எங்கேயும் போகலை” என்று அழுது கொண்டே தந்தையிடம் கூறிவிட்டு உள்ளே ஓடி விட்டாள்.
அனைவரும் நண்பர்கள் இருவரையும் முறைக்கவும் திருதிருத்தனர்.
“பாப்பா வரலைன்னா, நீங்க இரண்டு பேரும் வர வேண்டாம். நானும் தமாவும் மட்டும் போயிட்டு வரோம்” என்று முடிவாக சொல்லிவிட்டார் தர்மராஜ்.
சுமதியும், “பாவம்டா உங்க கூட வரனும்ன்னு எவ்வளவு ஆசையா இருந்தா தெரியுமா? போங்க டா” என்று அமைதியாகி விட்டார்.
வேறு வழி இன்றி இருவரும் சென்று அவளை அழைத்தார்கள்.
“நான் வேணா மாமா கிட்ட பேசறேன், நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க“ என்றாள் தேம்பி கொண்டே.
பாரிக்கு குற்ற உணர்ச்சியாக போனது.
“இல்ல கருணாம்பிகை… நீ வரேன்னு முன்னமே தெரியாது. அந்த அதிர்ச்சியில் வில்வா கேட்டுட்டான். நீயும் வா, அங்க எங்க தாத்தா வீடு பேலஸ் மாதிரி இருக்கும்.. நல்லா இருக்கும்”
அண்ணனை முறைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
“சாரி கருணா.. நீயும் வா..ப்ளீஸ்..” என்றான் வில்வா.
தமயந்தி அறைக்குள் வந்து, “இவனுங்களை விடுடா.. அங்க வந்தாலும் இவனுங்க நம்மளை கண்டுக்க மாட்டாங்க.. மாமாவும் அவங்க வீட்டு ஆளுங்க கூட இருப்பாரு.. எனக்கு கம்பெனி கொடுக்க வாடா தங்கம்.. அத்தைக்காக.. ப்ளீஸ்“ என்றார்.
“உங்களுக்காக வரேன் அத்தை.. வாங்க போவோம்” என்று தமயந்தி கை பிடித்து முன்னே சென்று விட்டாள்.
“பாரு பாரி… வழக்கம் போல நம்மள பின்னாடி தள்ளி விட்டுட்டா”
“சரி வா போவோம்”
“பாப்பா நீ இங்க முன்னாடி உட்கார்ந்துக்கோ” என்று தர்மராஜ் அவளை தனதருகில் காரில் முன் சீட்டில் அமர்த்திக்கொண்டார்.
நண்பர்கள் இருவரும் உம்மென்று சென்று பின்னிருகையில் அமர்ந்து கொண்டார்கள்.
சிவங்கங்கை நோக்கி புறப்பட்டது வாகனம்.
——————-
“நான் பெரிய பொண்ணா ஆனதும் நம்ம மாத்தி மாத்தி டிரைவ் பண்ணிக்காலம் மாமா”
“நிச்சயம் பாப்பா, நானே உனக்கு வண்டி ஓட்ட சொல்லி தரேன்”
“அப்புறம் மாமா, அங்க உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க?”
“எங்க அப்பா முருகானந்தம்.. அப்புறம் எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணா, ஒரு தம்பி, ஒரு தங்கை.. அக்காவும் தங்கையும் வெளி ஊருல இருக்காங்க. இப்ப கல்யாணத்துக்கு அவங்களும் வந்திருப்பாங்க. அண்ணாவும் தம்பியும் சிவகங்கையில் தான் அப்பா கூட பிசினஸ் பண்றாங்க.. எல்லார் குடும்பமும் இப்ப இருப்பாங்க.. அதுவும் இல்லாமல், எங்க சித்தப்பா, அத்தை குடும்பம் எல்லாரும் சேர்ந்திருப்பாங்க”
“ஓ.. எவ்வளவு பெரிய பேமிலி….இவங்க யாரும் ஏன் சென்னைக்கு வந்தது இல்லை?”
“நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன்னு கோவம்..”
“நீங்க கூப்பிட்டீங்களா மாமா? அப்பவும் யாரும் வரலையா?”
“முதல்ல எங்க கூட பேசவே மாட்டாங்க.. அப்புறம் பாரி பிறந்ததும் கொஞ்சம் சேர்த்துக்கிட்டாங்க… இருந்தாலும் ஒரு விரிசல் வந்துடுச்சு.. நாங்க கூப்பிட்டா வருவாங்களா தெரியாது.. அதான் நாங்க கூப்பிடலை..”
“ஏன் மாமா… இப்ப தாத்தா கூப்பிட்டதும் நாம போறோமே.. அப்படி நீங்களும் கூப்பிட்டு பார்த்தா தானே தெரியும்?”
“——————-”
“நீங்க ஏன் எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி அத்தைய கல்யாணம் பண்ணிக்கல?”
“இங்க எல்லாரும் ஜாதி அந்தஸ்து எல்லாம் பார்ப்பாங்க பாப்பா. இப்ப சொன்னா உனக்கு புரியாது..”
“ஆமாம் அத்தை.. உங்க வீட்ல எத்தனை பேரு? அவங்க எல்லாம் இப்ப எங்க இருக்காங்க?”
இப்படி கிளம்பியதில் இருந்து காரில் கருணாம்பிகை பேசிக்கொண்டே இருந்தாள்.
“நாங்க ஜாலியா வெளிய போலாம்ன்னு நினைச்சா நீ என்ன இப்படி கேள்வியா கேட்டுட்டு வர.. அப்பா பாட்டு போடுங்க அப்பா “ என்றான் பாரி வேந்தன்.
பிறகு கொஞ்ச தூரம் நண்பர்கள் கேட்ட பாடல்களை ஒலிக்க விட்டார் தர்மராஜ்.
தமயந்திக்கும் அவரது குடும்பத்து நியாபகம் வந்து விட்டது.. செல்லமாக வளர்ந்த ஒற்றை பெண் அவர். அவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். குடும்ப மானம் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரே மகளின் மனதை இன்று வரை புரிந்து கொள்ளவில்லை.
எங்களை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டா, எங்களுக்கு பெண்ணே இல்லைன்னு நாங்க தலை முழுகிடுவோம் என்று கூறினார் அவரது தந்தை.
இந்த பொல்லா காதல் வந்து அவரை குடும்பத்தில் இருந்து பிரித்து விட்டது. முதலில் பயந்து, தமயந்தி அவர்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. பிறகு பாரி பிறந்ததும் ஓரிரு முறை முயற்சி செய்து பார்த்தார். எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டுமே.. பெண் இறந்து விட்டாள் என்று கூறி முடித்து விட்டார் தமயந்தியின் தந்தை.
இன்று வரை அவர்கள் தமயந்தியை ஏற்று கொள்ளவில்லை.
“பாரி வேந்தன் அங்க விளையாட உனக்கு நிறைய கசின்ஸ் இருக்காங்களா?”
என்று பாரியிடம் கேட்டாள் கருணா.
“இருக்காங்க கருணாம்பிகை .. ஆனால் எல்லாரும் கிர்ல்ஸ் தான். அதான் நான் வில்வாவை கூப்பிட்டேன்..”
“ஆமா.. நீங்க இரண்டு பேரும் ஏன் எப்போதும் முழு பெயர் சொல்லி கூப்பிடுக்கிறீங்க?” என்றான் வில்வா.
“அவ பாரி வேந்தன்ன்னு புல் நேம் சொல்லி கூப்பிடுவா.. அதான் டா நானும் புல் நேம் சொல்லியே கூப்பிடுறேன்”
“தாத்தா தான் அண்ணா சொன்னாங்க… யார் பெயரையும் முழுசா கூப்பிட்டா தான் அந்த பெயரோடு பலன் கிடைக்குமாம். உன்னையும் தாத்தா வில்வநாதன் சொல்லி தானே கூப்பிடுவாங்க..”
“ஓ..”
“பாரி வேந்தன் எங்க தாத்தா பெயர் பாப்பா” என்றார் தர்மராஜ் இப்பொழுது.
“ஹா.. ஹா.. மாமா.. அது பாரி வள்ளல் பெயர். அவர் பெயரை தான் உங்க தாத்தாவுக்கு வச்சிருக்காங்க”
“ங்கே “ என்று விழித்தார் தர்மராஜ்.
பின்புறம் மூவரும் சிரிக்க தொடங்கினார்கள்.
“டே அண்ணா.. உனக்கு பாரி வள்ளல் கதை தெரியுமா?”
“முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.. எனக்கு தெரியும்” என்றான் வில்வா.
“நிறைய பேருக்கு அது மட்டும் தான் அண்ணா தெரியும்.. ஆனா பாரி வேந்தன் எவ்வளவு பெரிய புத்திசாலி தெரியுமா? அவரை மாதிரி புத்தி கூர்மை உள்ள ராஜாக்கள் ரொம்ப குறைவாம். மூவேந்தர்களும் சேர்ந்து போர் தொடுத்த ஒரே குறுநில மன்னன் பறம்பு நாட்டை ஆட்சி செய்த பாரி வேந்தன் தானாம். அவ்வளவு வீரத்துடன் போர் செய்தாராம். பறம்பு மலை கூட சிவகங்கை மாவட்டத்தில் தான் இருக்கு.. இல்ல மாமா“ என்று வில்வாவிடம் ஆரம்பித்து தர்மராஜிடம் முடித்தாள்.
“சூப்பர் பாப்பா.. உனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?” என்றார் தர்மராஜ் வியப்பாக.
“எங்க தாத்தா சொன்னாங்க.. இன்னும் நிறைய சொல்லி இருக்காங்க”
“சரி கருணா.. உன் பெயர் பத்தி சொல்லேன்.. கேட்போம்” என்றார் தமயந்தி.
“கருணாம்பிகை தாயார் சந்நிதி அவிநாசியில் இருக்க அவிநாசியப்பர் கோவில்ல இருக்கு அத்தை. இந்த அம்பாள் கருணையே வடிவானவங்களாம். உலக மக்கள் அனைவரையும் தன் அன்பாலும் தயாள குணத்தாலும் ரட்சிப்பாங்களாம். கருணை மட்டும் இல்லாமல் தைரியமானவங்களாம்.பார்வதி தேவி இந்த கோவில்ல தவமிருந்து ஈசனுடன் சேர்ந்ததாக வரலாறு சொல்ல படுகிறது.. அதுவும் இல்லாமல் இந்த கோவில்ல அம்பாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவங்களை முன்னிறுத்தி, தனது வலது பாகத்தை கொடுத்திருக்கார் சிவன். மதுரையில் மீனாட்சியும் அவினாசியில் கருணாம்பிகையும் மட்டுமே ஈசனின் வலது புறம் இருப்பாங்களாம். சக்தியின் ரூபமான பெண்களின் முக்கியத்துவத்தை இது எடுத்து சொல்லுது”
“டேய்.. இவளுக்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியுதோ தெரியலை பாரி.. “ என்றான் வில்வா பாரியிடம்.
“ஆமா டா..”
இப்படி பாட்டும் பேச்சும் என வந்து சேர்ந்தார்கள் சிவகங்கைக்கு.
error: Content is protected !!