Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 23 3

“மாப்பிள்ளையா”என்றவர் “வணக்கம் தம்பி” என்றார் அன்புவை பார்த்து. “ஹாய் ஆன்டி”. என்றான் அன்பு..

ஹரி அன்புவை அழைத்து  “நாமா எல்லாரும்  சேர்ந்து  ஒரு போட்டோ” என்று அழைக்க அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..



Advertisement

மஞ்சு அனைவரையும் உள்ளே வாங்க என்று  அழைத்து  சென்றார்..

Advertisement

மஞ்சுவும்  ஹரியும் முதலில்  புத்தர் கோவிலின்   பக்கத்தில்  உள்ள  சிறு வீட்டில் தான் இருந்தனர்.. ஹரி படித்து டாக்டரானவுடன்  இங்கே வீடு கட்டி வந்திருந்தனர்.. நான்கு படக்கை  அறைக்  கொண்ட வீடு.. வீட்டின் முன் நிறைய பூச்செடிகள் இருக்க.. அமைதியான இடத்தில் அழகான வீடாக இருந்தது.

Advertisement

இருவர் மட்டும் இருக்கு வீட்டில் இன்று அனைவரும் வந்து இருக்க. வீடு நிறைந்தது போல் இருக்க. மஞ்சு மகளை  தன்னோடு  பக்கத்திலே  வைத்திருந்து பார்த்துக்கொண்டே கண் கலங்க..

Advertisement

அனைவரும் மஞ்சுவையே பார்த்துக்கொண்டு  இருந்தனர்..

மஞ்சு  பார்கவி பார்த்திருந்தவர்..  மனதில் நான் தப்பு பண்ணிட்டேனே.. என் பிள்ளையை இப்படி விட்டுட்டு வந்துட்டேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது,,  என் பிள்ளையை இப்படி விட்டுட்டேன் என்றவர். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் பார்கவி கையை தன் கண்ணில் வைத்துக்கொண்டு  “அம்மாவை மன்னிச்சிருடா” என்று குழுங்கி அழ..

“அம்மா, பாப்பூ, அத்தை”. என்று அனைவரும் மஞ்சுவை சமாதானம் பண்ண அழைக்க., நீண்ட நேரம் கழித்து அமைதியானவர்..

ஞாபகம் வந்தவராக, எல்லாரும் சாப்பிடுங்க, நான் வேற எல்லாரையும் உங்கார வச்சுட்டு  அழறேன் என்றவர் கிச்சன் நோக்கி செல்ல..

“மஞ்சு பேபி நாங்க சாப்பிட்டோம், நீயும் அப்பாவும் மட்டும் தான் இன்னும் சாப்பிடல,, இருக்க வர்ரேன். என்றவன்  இவர்களுக்கு அவன் ஹாட் பாக்சில் தோசை சுட்டு வைத்திருந்ததை எடுத்து வந்து கொடுத்து, இரண்டு பேரும் சாப்பிடுங்க என்றான்..

“ஏன்டா நான் வந்து செய்ய மாட்டேனா?”.

“மஞ்சு  பேபி நீங்க தான் சாம்பார் வச்சுட்டு தானே போனீங்கமா, நான் வெறும் தோசை  மட்டும் தான் சுட்டு வச்சேன்  சாப்பிடுங்க”என்றான்…

“நல்லா வளத்துருக்க நம்ம பையனை”  என்றார் ஸ்ரீஜெயம்.

“நாங்க இரண்டு பேரும் மட்டும் தானே இருக்கோம், அதனால எல்லாத்தையும் அவனுக்கு சொல்லி குடுத்திருக்கேன்” என்றார் மஞ்சு.

“மஞ்சு பேபி நான் தூங்க போறேன்,, மதியம்  சமையல் பண்ணிட்டு எழுப்புங்க” என்றவன்.

அன்புவை ஸ்ரீஜெயத்தையும் பார்த்தவன் “நீங்களும் போயி தூங்குங்க” என்றான்..

இருவரும் “சரி” என்று தலையாட்ட.

“நீ போய் தூங்கு ஸ்ரீ குட்டி”  என்றார்  மஞ்சு..

“எது ஸ்ரீ குட்டியா?.  இவர் ஸ்ரீ குட்டியா”?. என்று கேட்டான் அன்பு..

ஹரி அன்புவை பார்த்து சிரித்தவன்,,  “அம்மா  எப்பையும்  என்னை  ஸ்ரீ குட்டியின்னு தானே கூப்பிடுவாங்க  அன்பு”..

“டேய் மாப்புள நீ இருக்குற சைஸ்சுக்கு உன்னை போய் குட்டின்னு சொன்னா சிரிப்பு வரதா”..

“போங்க மச்சான் எனக்கு தூக்கம் வருது, நீங்களும் போயி ரெஸ்ட் எடுக்க” என்றவன் அவன் அறைக்கு சென்று விட..

மஞ்சு மகளை அழைத்து  “போயி கொஞ்சம் நேரம் ரெஸ்ட்  எடுடா, மாப்பிள்ளையை  கூட்டிட்டு போ”  என்றார்.

இருவரும் அறைக்கு செல்ல..

ஸ்ரீ ஜெயமும்,  மஞ்சுவும் மகன் செய்து வைத்த தோசையை  உண்டனர்..

உண்டு விட்ட   பாத்திரத்தை  மஞ்சு  கலுவி விட்டு வந்தவள்..

“உங்களுக்கு   மதியம்  சாப்பிட என்ன பிடிக்கும், ஸ்ரீப்பா” என்று  ஸ்ரீ ஜெயத்திடம்    கேட்க…

“உன்னை மட்டும் தான் எப்போயும் எனக்கு பிடிக்கும்,   நீ என்ன சமச்சாலும் சாப்பிடுவேன் பாப்பூ”  என்றவரை பார்த்து சிரித்தவள்..

“சரிங்க” என்றவர் அவர் அறைக்கு சென்று, யோகா ட்ரெஸ்சை  கலட்டியவள் ஒரு காட்டன் புடவைக்கு மாறி வெளியில் வந்தவள்.. “ஸ்ரீப்பா நீங்க  என் ரூமுல கொஞ்சம் போயி தூங்கி ரெஸ்ட் எடுங்க, நான் கடைக்கு போயிட்டு வர்றேன்”..

“எந்த கடைக்கு  பாப்பூ”..

“உங்களுக்கு நான்வெஜ் பிடிக்கும் தானே ஸ்ரீபா”..

“ஊம் பிடிக்கும் டா”..

“அத வாங்க தான் போறேன், ஹரியும் நல்லா சாப்பிடுவான், மாப்பிள்ளை வேற வந்து இருக்காரு, நம்ம நல்லா கவனிக்கனுமுல்ல,  நீங்க கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கபா, நான்  போயிட்டு வந்துர்றேன்”..

“நானும் வர்றேன் பாப்பூ”..

“வேண்டாம் ஸ்ரீப்பா ரெஸ்ட் எடுங்க,  நான்  போய் வாங்கிட்டு வர்றேன்”..

“25  து வருசமா ரெஸ்டு  எடுத்தாச்சு  வா  போலாம்”  என்று மஞ்சுவுடன் கிளம்ப..

பக்கத்தில் செல்வதற்கென்று ஒரு ஸ்கூட்டி வீட்டில் இருக்க.. வண்டி சாவி ஸ்ரீஜெயத்திடம்  தந்தாள் மஞ்சு..

“எந்த பக்கம் போகனும் பாப்பூ” என்று வண்டியை இயக்க.

பின்னாடி ஏறி அமர்ந்தவரின் மனம் எத்தனை நாள் கனவிது, என்றவள் பேசாமல் இருக்க..

வண்டியை ஓட்டிக்கொண்டே, “பாப்பூ எந்த பக்கம் போகனும்”..

“நேர போயி ரைட் பக்கம்”.

இருவரும்  கடைக்கு சென்று அனைத்தையும் வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்..

வாங்கி வந்த பொருளை கிச்சனில் வைத்தவள்.

“வாங்க ஸ்ரீ” என்று அவனை தன் அறைக்கு கைபிடித்து இலுத்து வந்தவள்..

கட்டிலில்  அவரை அமர வைத்து ஏசியை  ஆன்  பண்ணியவள்.. “தூங்குங்க”என்று சொல்ல.

“எனக்கு தூக்கம் வராது மஞ்சு, நான் உன்கூடவே இருக்கேன்”  என்று எலுந்தவரை..

“படுங்க ஸ்ரீப்பா, ரொம்ப சோர்வா  இருக்கீங்க”.

என்னால  தூங்க முடியாது  நான் உன் கூட தான் இருப்பேன் என்றவரை. என்ன  செய்வது என்று பார்த்தவள்.. அவளும் கட்டிலில் அமர்ந்து அவன் தலையை தன் மடிமீது வைத்து  தட்டி கொடுக்க..

அவளை இடப்போடு  சேர்த்து அணைத்து கொண்டவர். மடியில் படுத்து ஐந்து நிமிடத்தில் தூங்கிவிட..

அவர் தூக்கம் கலையாத வாறு மெல்ல எழுந்து  அவர் தலைக்கு, தலையணை வைத்து விட்டவள்..

 அசந்து தூங்கம் ஸ்ரீஜெயத்தின் தலைகோதி நெத்தியில்  முத்தமிட்டு. கதவை சாற்றி விட்டு வெளியில் வர..

ஸ்ரீஜெயத்தின் போன் ஒலித்துக்கொண்டு இருக்க..

மஞ்சு போனை எடுத்து பார்த்தவள், ஆன் பண்ணலாமா வேண்டாமா என்று நினைத்து நிற்க..

மஞ்சு போன் திரையை பார்க்க நளினி காலிங் என்று பெயர் வர..

பார்கவி  போன் சத்தம் கேட்டு வெளியில் வந்தவள்,.”ஆன் பண்ணி பேசுமா” என்றாள்.

மகள் வந்தவுடன் போனை மகளிடம்  தர..

போனை பார்த்தவள்.. “அத்தை மா” என்றவள்..

“அத்தை… சொல்லுங்க”.. என்று கூறும் முன்.

“டேய் தம்பி எங்க இருக்கேடா” என்றார் நளினி..

“அத்தை கேக்குதா நான் பார்கவி”..

“மருமகளே  நீயாட, தம்பி  உன் வீட்டுக்கா வந்திருக்கான், சொல்லிட்டு போக கூடாதா, நேத்துல இருந்து இந்த பயல தேடுறேன்”..

 “அத்தை நாங்க”  என்றவள்.

நேற்றிலியிருந்து இன்று நடந்தது வரை அனைத்தை நளினிடம் சொல்ல..

“என்னாட சொல்லுற, என் தம்பியா அவனுக்கு குழந்தை  இருக்க” என்று அதிர்ச்சி ஆனவர், அனைத்தையும்  கேட்டு, “என்னால நம்ப முடியல டா, அந்த மஞ்சு பிள்ளையையா அவன் விரும்பி இருக்கான், எங்க கிட்ட சொல்லி இருக்கலாமே” என்று புலம்பியவர்..

“அந்த மஞ்சு பிள்ளை நல்லா இருக்காளாடா”..

“அம்மா நல்லா இருக்காங்க அத்தை  பேசுறீங்களா”..

“ஊம் குடுடா”..

“அம்மா அத்தை பேசுறாங்க”… என்று போனை தர..

வேண்டாம் பாரு என்பது போல் தலையாட்ட..

“அம்மா அத்தை ரொம்ப ஸ்வீட் மாதிரி பேசுங்க” என்று போனை தர..

என்ன பேச என்று புரியாமல் போனை காதில் வைக்க..

“அம்மாடி  மஞ்சு எப்படி இருக்கேடா”?.

“நல்லா  இருக்கேன்”…

“எங்க கிட்ட சொல்லி இருக்கூடாதா டா, இரண்டு பேர்ரோட வாழ்க்கை போச்சேடா”… என்று கண்கலங்கியவர். ஒத்தையில ஊரு பேர் தெரியாத ஊருல போய் பிள்ளைய பெத்து வளத்து வச்சு இருக்கேடா,  எங்க குல சாமி டா நீ”  என்று சொல்லி நளினி அழுக..

மஞ்சுவுக்கும் அவர் குழந்தையை  வைத்துக்கொண்டு  அவர் பட்ட கஷ்டமெல்லாம் அவர் கண் முன்  வர.. கண்களை  இருக மூடிக்கொண்டாள் மஞ்சு..

“மஞ்சுமா, மஞ்சுமா பேசுடா வருத்தபடாத அதான்  எங்க  கிட்ட வந்துட்டுள, இனிமே நாங்க உன்னை பாத்துக்கிறோம்டா, நாங்க என்ன, என் தம்பி ஸ்ரீஜெயம்  உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவான், எதற்கும்  வருத்தபடாமா, நாங்க எல்லாரும்   உன்னையும், என் தம்பி மகனையும் பார்க்க  வர்ரோம்”..

“கண்டிப்பா வாங்க மா  வீட்டுக்கு”..என்றாள் மஞ்சு..

“அது என்ன வாங்க மா சொல்லுற மஞ்சு, அண்ணியின்னு கூப்பிடுடா”..

“வாங்க அண்ணி இலங்கைக்கு”.  என்று இருவரும் போனை வைத்திருந்தனர்.

நளினி நேராக  அவர் பூஜையறைக்கு சென்றவர்..  என் குலசாமி, பேச்சியம்மா, கருப்பாசாமி,  உங்க கிட்ட புலம்பி வருத்தப்பட்டது வீன் போகல, என் தம்பி குடும்பமா ஆகிட்டான்..

எந்தன நாள் உங்க கிட்ட அழுது புலம்பியிருப்பேன், நீங்க இருக்கீங்கன்னு நிருப்பிச்சீட்டீங்க, என் குலசாமிங்களா என்று மண்டியிட்டு வணங்கியவர்.. கைகூப்பி நின்றார் ஆனந்த கண்ணீரோடு.. இறைவனுக்கு நன்றி சொல்ல..

திடிர் என்று   ஆண்டவர்கனி வீட்டில் மஞ்சுவின் புகைப்படத்துக்கு  மாலை போட்டு வைத்திருந்ததை பார்த்த ஞாபகம் வர.. மனது  கேட்காமல்..

யோகாவிற்கு  போன் போட்டு மஞ்சு உயிரோட இருப்பதை சொல்லி, அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு அதற்கு என் தம்பி  ஸ்ரீஜெயம் தான் காரணம் அவனை மன்னிக்க சொல்லுங்க, என்று  பார்கவி அவரிடம் சொன்ன விசயத்தை அனைத்தையும் யோகா விடம் சொல்ல..

யோகா சாக்கடித்தது போல் சம்பித்து நின்றிருக்க, யாரு போனுல என்று மொத்தம் குடும்பமும் அவரை  கேட்க,   நிமிர்ந்து பார்த்தார் யோகா  அவர்கள் வீட்டில் இறந்து போன அத்தை, மாமா, மஞ்சுவின் புகைபடத்தை வைத்து அன்று பெரியசாமிக்கு கல்யாண பத்திரிக்கையை வைத்து பூஜை செய்ய ஏற்பாடு நடந்து கோண்டு இருக்க..

போனை வைத்த யோகா வேகமாக வந்து மாமனார், மாமியார் பக்கத்தில் இருந்த  மஞ்சுவின் போட்டோவை எடுத்தவர் அவளின் போட்டோவில் போட்டு இருந்த மாலையை தூக்கி வீச..

மொத்தம் குடும்பம் யோகா என்ன செய்கிறார் என்று பார்க்க..

கதறி அழுதார் யோகா.. தான் இந்த வீட்டுக்கு  கல்யாணம் பண்ணிவரும்  போது  பருவம் அடைந்திருத்த குட்டி பொண்ணை  சில்வண்டு என்று செல்லமாக அழைப்பார் யோகா..

அவள் இறந்த செய்தி  கேள்வி பட்டு துடித்து போனவர். இன்று  அவள் உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்டு அவள் போட்டோவை  துடைத்தவர் “சில்வண்டு” நீ இருக்கீயா என்று அழுகா..

யாருக்கும் எதுவும் தெரியாமல் அனைவரும் முழித்து நிற்க..

லட்சுமி தங்கை அருகே சென்று.. “என்னடி ஆச்சு எதுக்கு இப்போ சின்ன பாப்பா போட்டோவை  வைத்து பார்த்து அழற”..

“அக்கா… சில்வண்டு உயிரோடு இருக்கலாம்”  என்று கதறி அழ..

மொத்தம் குடும்பமும் மஞ்சுவா என்று அதிர்ச்சி ஆகி நிற்க…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!