Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 8

அத்தியாயம் 8

இப்பொழுது கருணாம்பிகை பத்தாம் வகுப்பிலும் பாரி வில்வா பன்னிரெண்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.



Advertisement

லேப் முடித்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் லேபிலிருந்து தங்கள் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்படி செல்லும் வழியில், வராண்டாவில் இருந்து  பார்த்தால் மைதானம் தெரியும். 

பிள்ளைகள் சலசலத்து கொண்டே சென்றார்கள்.

Advertisement

Advertisement

அப்பொழுது ஒரு பெண், “ஹே கருணா.. அங்கே பாரு டீ… உங்க அண்ணனும் அவங்க பிரண்ட்டும் மாதிரி தெரியுது” என்று மைதானத்தை நோக்கி காண்பித்தாள்.

பாரியும் வில்வாவும் தான் ஓடி கொண்டிருந்தார்கள்.

Advertisement

“என்னடி ஏதோ பனிஷ்மெண்ட்டுக்கு ஓடற மாதிரி இருக்கு” என்று வேண்டும் என்றே குரலை உயர்த்தி கேட்டாள் அந்த பெண் ரஞ்சனி.

அவளுக்கு எப்பொழுதுமே கருணா மீது ஒரு பொறாமை. அவளை மட்டம் தட்ட சமயம் பார்த்து கொண்டிருந்தவளுக்கு இது ஒரு நல்ல வாய்பாய் தெரியவும், பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்தாள்.

இவர்கள் பின்னே வந்த ஆசிரியரும் ரஞ்சனி கூறியதை கேட்டுக்கொண்டே வந்தார்.

“நல்ல பசங்களாச்சே.. என்னன்னு தெரியலையே” என்றார் கருணாவை பார்த்து.

“மிஸ், நான் ஒரு நிமிஷம் வேகமா போய் பார்த்துட்டு வரேன்.. ப்ளீஸ்” என்றாள் அவரிடம்.

“உன் ரெகார்ட் முடிச்சிட்டியா? முடிச்சிட்டா கொடுத்துட்டு போ” என்றார் அவரும்.

பத்தாம் வகுப்பில் பாரி வில்வாவிற்கும் இவர் தான் சயின்ஸ் மிஸ்.

“நம்ம எல்லாம் கேட்டா இந்த மிஸ் விடுமா? எப்பவுமே பார்ஷ்யாலிட்டி” என்று பக்கத்தில் உள்ள பெண்ணிடம் முனுமுனுத்தாள் ரஞ்சனி.

“அவ லேப் ரெகார்ட் முடிச்சிட்டா.. அதான் மிஸ் அவ கேட்டதும் பெர்மிசன் கொடுத்திட்டாங்க.. நீ ரெக்கார்ட் முடிச்சிருக்கியா?”

“இன்னும் ஒரு டாபிக் முடிக்கணும்..” இப்பொழுது ரஞ்சனி குரலில் சுருதி இறங்கி இருந்தது.

கருணா இரண்டே நிமிடத்தில் மைதானத்திற்கு விரைந்து விட்டாள்.

அங்கே ஆசிரியர்கள் யாரும் இருப்பது போல தெரியவில்லை.

ஒரு பக்கம் இரண்டு பெண்கள் மட்டும் திமிராக நின்றுகொண்டிருந்தார்கள்.

பாரியின் முகமும் வில்வாவின் முகமும் கன்றி போய் இருந்தது.

“டேய் அண்ணா.. என்னாச்சு? எதுக்கு இரண்டு பேரும் இப்படி ஓடிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் கருணா கொஞ்சம் சத்தமாக.

“நீ போ கருணாம்பிகை.. நாங்க பார்த்துகிறோம்” என்றான் பாரி.

“என்னாச்சு சொல்லு நான் போறேன்”

இவர்கள் நின்று பேசவும்,”என்ன நின்னுட்டீங்க.. நான் போய் மிஸ் கிட்ட சொல்லவா?” என்றாள் அந்த பெண்களில் ஒருத்தி தெனாவட்டாக.

“என்னென்னு சொல்லுவ?” என்று அவளிடம் எகிறி கொண்டு சண்டைக்கு சென்றாள் கருணா.

“கொஞ்சம் கூட டீஸன்சி இல்லாம.. யார் நீ?” என்றாள் இன்னொரு பெண்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு ஆசிரியர் வந்துவிட்டார்.

“பாருங்க மிஸ்.. இந்த பொண்ணு வந்து பேசவும் இரண்டு பேரும் நின்னுட்டாங்க” என்று புகார் படித்தாள் ஒருத்தி.

“நான் வில்வாவோட சிஸ்டர் மிஸ்.. என்ன பிரச்சனை?”

“அவங்க பெற்றோர்களை வர சொல்லி இருக்கோம்.. நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன். நீ உன் கிளாஸ்சுக்கு போ” என்றார் அந்த ஆசிரியர் கடுமையான குரலில்.

“நீங்க ஓடுங்க” என்றார் பசங்களிடம்.

“அப்படி எல்லாம் போக முடியாது.. என்ன பிரச்சனை சொல்லுங்க” என்று பிடிவாதமாக நின்றாள் கருணாம்பிகை.

அந்த ஆசிரியர் பள்ளிக்கு புதிதாக சேர்ந்திருக்கிறார். அதனால் அவருக்கு கருணாவை தெரியவில்லை.

“என்ன பண்ணாங்கன்னு சொல்லுணுமா.. உன் அண்ணாவும் அவன் பிரண்டும் இந்த பொண்ணுங்களை பார்த்து அசிங்கமா கமெண்ட் அடிச்சிருக்காங்க.. இது முதல் தடவையும் இல்லை, தினமும் அசிங்கமா பேசி இருக்காங்க”

“என்ன மிஸ் கதை சொல்றீங்களா?”

“நடந்ததை தான் சொல்றேன்”

“நீங்க பார்த்தீங்களா?”

“பாதிக்கப்பட்ட பொண்ணுங்களே சொல்றாங்க..”

“கண்டிப்பா அதுக்கு வாய்ப்பே இல்லை.. நீங்க விசாரிச்சீங்களா? விசாரிக்காம எப்படி பனிஷ் பண்ணுவீங்க?”

“என்ன ம்மா.. ரொம்ப பேசுற.. நீ இங்க டீச்சரா? நான் டீச்சரா?”

“என்ன மிஸ் மிரட்டறீங்களா? நான் போய் பிரின்சிபல் மேம்  கிட்ட பேசிக்கிறேன்”

“நல்லா போய் பேசும்மா.. பொண்ணுங்களை கிண்டல் பண்ணா அவங்க  மட்டும் கொஞ்சுவாங்களா?”

“அவங்க பண்ணவே இல்லைன்னு நான் சொல்றேன்… நீங்க என்ன திருப்பி திருப்பி அதையே சொல்றீங்க?”

“அவங்க பண்ணலைன்னு உனக்கு எப்படி தெரியும்..”

“சூரியன் மேற்குல உதிக்கும்னு சொல்லுங்க.. அதை கூட நம்ப வாய்பு இருக்கு.. நிச்சயம் இவங்க இரண்டு பேரும் இதை பண்ணி இருக்க மாட்டாங்க..” 

கருணாம்பிகையின் உறுதியில் அந்த ஆசிரியருக்கு கொஞ்சம் நடுக்கமாக இருந்தது இப்பொழுது.

இருந்தாலும், “எதுவா இருந்தாலும் அவங்க பெற்றோர்கள் வரட்டும்”

“அப்ப, அவங்க வந்ததும் நீங்க பனிஷ் பண்ணுங்க.. இப்ப நிற்க சொல்லுங்க..”

“நீ சொல்றதை எல்லாம் கேக்க முடியாது..”

அதற்கு மேல் கருணா அங்கே நிற்கவில்லை. நேரே பிரின்சிபல் ரூமிற்குள் புயலென நுழைந்தாள்.

அப்பொழுது தான் ஒரு முக்கியமான மீட்டிங் முடித்து அவர் அறைக்கு வந்திருந்தார் அவர்.

“மேடம்.. மேடம் “ என்று மூச்சு வாங்க அவர் முன்பு நின்றாள்.

“என்னாச்சு கருணாம்பிகை.. ஏன் இப்படி ஓடி வர?” என்றார் பிரின்சிப்பல் மேடம்.

அவர்கள் பள்ளியின் பொக்கிஷம் அல்லவா கருணாம்பிகை. மாநில  அளவிலான பேச்சு போட்டிகள் அனைத்திலும் முதல் பரிசை பெற்று பள்ளிக்கு பெருமை பல சேர்த்தவள் ஆயிற்றே. அதுவும் இல்லாமல், பல ஆண்டுகளாக அவர் பார்த்து வளர்ந்த குழந்தை.

கருணா சுருக்கமாக விஷயத்தை கூறினாள்.

“என்ன பாரிவேந்தன், வில்வநாதனா?”

“யாரோ  இரண்டு  பேருன்னு எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தாங்க… நான் மீட்டிங்கில் இருந்து இப்ப தான் வந்தேன்.. வா.. “ என்று கருணாவை அழைத்து கொண்டு மைதானத்திற்கு விரைந்தார்.

இப்பொழுது அந்த ஆசிரியருக்கு உண்மையிலே கொஞ்சம் பயம் வந்து விட்டது.  இந்த பொண்ணு சொன்னதும் மேடமே நேர்ல உடனே வந்துட்டாங்களே என்று.

அவர் அந்த இரண்டு பெண்களையும் ஒரு பார்வை பார்த்தார். இருவரும் திருட்டு முழி முழித்தனர். 

“பாய்ஸ் கம் ஹியர்” என்று முதலில் பாரியையும் வில்வாவையும் அழைத்தார்.

அவர்கள் வருவதற்குள், கருணா விரைந்து சென்று இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்ன மிருதுளா மிஸ்? என்ன பிரச்சனை? இந்த பசங்க அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. என்ன விசாரிச்சீங்க சொல்லுங்க?” என்றார் பிரின்சிபால் அந்த மிஸ்ஸிடம்.

“இந்த பொண்ணுங்க சரிதா, சாரு இரண்டு பேரையும் அசிங்கமா டெய்லி கிண்டல் பண்ணி இருக்காங்க மேம்?”

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? வேற யாராவது பார்த்திருக்காங்களா?”

“சரிதாவும் சாருவும் அழுதுட்டே வந்து சொன்னாங்க மேம்”

“ஓகே.. நீங்க இந்த பசங்களை என்ன விஷயம்னு கேட்டிங்களா?“

“அது வந்து.. ஒழுக்கம் இல்லைன்னா என்னால பொறுக்க முடியாது மேம். அதுவும் பொண்ணுங்களை டீஸ் பண்றதுன்னு கேட்டவுடன் நான் உடனே அவங்களை பனிஷ் பண்ணிட்டேன்”

பிரின்சிபல் அவரை கண்டமாக பார்க்கவும் அவரும் தலையை குனிந்து கொண்டார்.

“உங்க பக்கம் தப்பில்லைன்னு நீங்க சொல்லணும் இல்ல..” என்றார் பிரின்சிபல் பாரி வில்வாவிடம்.

“எங்களை பேசவே விடலை மேம்.. எங்க பெற்றோர்களுக்கு போன் பண்ணிட்டு .. அவங்க வர வரைக்கும் ஒடுங்கனு சொல்லிட்டு, இந்த பொண்ணுங்களை பார்த்துக்க சொல்லிட்டு மிஸ் போய்ட்டாங்க” என்றான் பாரி. அவன் குரலில் அடக்கப்பட்ட கோவமும் ஆற்றாமையும் இருந்தது.

“என்ன மா நீங்க இரண்டு பேரும் உண்மையை சொல்லுங்க.. நாங்க கண்டுபிடிச்சா அப்புறம் அவ்வளவு தான் … “என்றார் பிரின்சிபல்.

எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று அப்பொழுதும் அசட்டு தைரியத்தில் நாங்க உண்மையை தான் சொல்றோம் என்று நின்றார்கள்.

“சரி எல்லாரும் என் ரூமிற்கு வாங்க.. அங்கே போய் பேசிக்கலாம்”

“மேம், இந்த பொண்ணை அனுப்பிடுங்களேன்” என்றார் அந்த ஆசிரியர் கருணாவை காண்பித்து.

“இங்க நான் பிரின்சிபல்லா நீங்களா?” என்றார் அவர் பதிலுக்கு.

——

கருணா, பிரின்சிபல் உடன் பேசிக்கொண்டே முன்னே சென்றாள். வழியில் சென்று கொண்டிருந்த சீதா லட்சுமி மிஸ்ஸயும் உடன் அழைத்துக்கொண்டார் பிரின்சிபல்.

“சரி.. நீங்க சொல்றது உண்மைன்னு வச்சுக்கலாம். மிருதுளா மிஸ் நீங்க சரிதாவை கூடிக்கொண்டு அந்த லெப்ட் சைடு ரூமிற்கு போங்க.. சீதா மிஸ் நீங்க சாருவை கூட்டிக்கொண்டு அந்த ரைட்  சைடு ரூமிற்கு போங்க. இந்தாங்க பேப்பர் பெண். பசங்க என்ன கெட்ட வார்த்தை சொல்லி கிண்டல் செஞ்சாங்கன்னு கேட்டு எழுதிட்டு வாங்க. இரண்டு பேரும் வந்து என்கிட்ட கொடுங்க.. இரண்டும் ஒண்ணா இருக்கான்னு நான் பார்க்கிறேன்” என்றார்.

இரண்டு பெண்களும் பதட்டமாகி விட்டனர்.

“கமான் சீக்கிரம்..” என்று அவர் ஒரு அதட்டலிடவும் இரண்டு ஆசிரியர்களும் ஆளுக்கொரு பெண்ணை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

“நான் பார்த்துகிறேன், கருணா.. நீ சொன்ன ஐடியா தான் பால்லொவ் பண்ணியாச்சே.. நீ கிளாஸ்சுக்கு போம்மா” என்றார் கருணாவிடம்.

“ப்ளீஸ் மேம், நான் கொஞ்ச நேரம் கழிச்சு போகவா? என்னால கிளாஸ் கவனிக்க  முடியாது”  என்றாள் வேண்டுகோலாக. 

பிரின்ஸிபல், “உங்களை எதுக்கு மாட்டி விடனும். உங்களுக்கும் அந்த பெண்களுக்கும் என்ன பிரச்சனை” என்று எவ்வளவு கேட்டும் பாரியும் வில்வாவும் வாயை திறக்கவே இல்லை.

 கருணா இப்பொழுது அவர்கள் பக்கம் வந்தாள்.

பிரின்ஸிபல் இவர்கள் பேசட்டும் என்று தன் வேலைகளை பார்க்க துவங்கினார்.

“என்னாச்சுன்னு  சொல்ல போறீங்களா இல்லையா? இப்ப” என்றாள் கருணா.

பாரி வேந்தன் சொல்ல வேண்டாம் என்று வில்வாவிற்கு சமிக்ஞை காட்டினான். அதை கருணா கவனித்து விட்டாள்.

“என்னன்னு சொல்லு பாரிவேந்தன்” என்று இப்பொழுது பாரியிடம் நேரடியாக கேட்டாள்.

அவன் அமைதியாகவே இருக்கவும், திரும்பி நாலாபுறமும் பார்த்தாள்.

இவர்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டே, நங் நங்கு என்று இருவர் தலையிலும் ஒரு கொட்டு வைத்தாள்.

இருவரும் அவளை பார்த்து முறைக்கவும், “இப்ப சொல்ல போறீங்களா இல்லையா” என்றாள் ஆவேசமாக.. அவள் முகமே சிவந்து விட்டது.

“அந்த சரிதா தான் டெய்லி வந்து பாரி கிட்ட லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தா… பாரி எனக்கு அப்படி எண்ணமே இல்லை. இந்த வயசுல லவ் பண்றது தப்பு, ஒழுங்கா படிக்கிற வேலையை பாருன்னு தான் சொன்னான்” என்றான் வில்வா.

“ஆறு மாசமா டெய்லி தொல்லை பண்ணிட்டே இருந்தா.. நான் பேசாம ஒதுங்கி தான் போனேன். அப்புறம் ஒரு நாள் நீயும் வில்வாவும் பிரண்ட்ஸ்.. நானும் சாருவும் பிரண்ட்ஸ்.. சாருக்கு வில்வாவை பிடிச்சிருக்கு நம்ம கப்பில் கப்பிலா சேர்ந்து டேட்டிங் போவோம்னு வந்து கேட்டா” என்றான் பாரி.

“அப்புறம் இரண்டு மாசமா சாருவும் என்னை லவ் பண்ண சொல்லி தொல்லை பண்ணுறா“ என்றான் வில்வா.

“இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு யோசிச்சு, இன்னிக்கு நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா நாங்க போய் கம்பளைண்ட் பண்ணுவோம்னு சொன்னோம்”

“பேசாம போய்ட்டு , மிருதுளா மிஸ்ஸை கூட்டிட்டு வந்துட்டாங்க”

இருவரும் சொல்லி முடிக்கவும், பிரின்சிபலை திரும்பி பார்த்தாள்  கருணா.

அவர் தானும் கேட்டுவிட்டதாக தலையை ஆட்டினார்.

கருணா அடக்கப்பட்ட கோவத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

சீதாலட்சுமி மிஸ் சாருவிடம் பேசி விஷயத்தை வாங்கிவிட்டார். அதே போல சரிதாவும்  உண்மையை ஒத்துக்கொண்டாள்.

அனைவரும் உண்மையை அறிந்து அமைதியாக நின்றார்கள் இப்பொழுது.

மிருதுளா மிஸ் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டே நின்றார்.

அப்பொழுது இரு வீட்டு பெற்றோர்களும் அடித்து பிடித்துக்கொண்டு உள்ளே வந்தனர்.

“என்ன செஞ்சு வச்சிருக்கீங்க பாருங்க” என்று மிருதுளா மிஸ்சை கண்டமாக பார்த்தார் பிரின்ஸிபல். 

அவர் தலை குணிந்து கொண்டார்.

“ஐ அம் சோ சாரி பேரன்ட்ஸ், ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்” என்று நடந்த விஷயங்களை விவரித்தார்.

பெரியவர்கள் என்னமோ ஏதோ என்று பதறி வந்ததும், எப்படியோ பிரச்சனை பசங்களை பாதிக்காது என்று சற்றே ஆசுவாசம் அடைந்தனர்.

பின் பிரின்சிபல் இரண்டு பெண்களையும் கடுமையாக எச்சரித்து, அவர்களை பாரி வில்வாவிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.

மீண்டும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அனைவரையும் செல்லுமாறு கூறினார்.

“என்ன மேம்.. நீங்க? செய்யாத தப்புக்கு எங்க பேரன்ட்ஸ் வர வச்சிருக்கீங்க.. இப்போ அவங்க பேரன்ட்ஸையும் வர சொல்லுனும் தானே?”என்றாள்  கருணாம்பிகை.

“அதானே” என்று பார்த்தனர் பெற்றோர்கள்.

“இந்த ஒரு முறை வார்னிங் கொடுத்துடலாம். நான் மீட்டிங்கில் இருந்தப்ப இந்த விஷயம்  நடந்ததுனால  உங்க பேரன்ட்ஸ்சை வர வச்சிட்டாங்க. நான் இருந்திருந்தா தேவை இல்லாமல் வர சொல்லி இருக்க மாட்டேன்”

பிரின்சிபல்லே அவ்வளவு எடுத்து கூறவும், பாரி “இட்ஸ் ஓகே மேம்” என்றான்.

“சாரி பாய்ஸ்.. கிளாஸ்சுக்கு போங்க” என்றார் பிரின்சிபல்.

“நோ மேம்.. இது எப்படி சரி?” என்றாள் கருணாம்பிகை.

அந்த மிஸ் அசந்தே விட்டார். ‘இந்த பெண் என்ன பிரின்சிபலை கூட பயமில்லாமல் என்ன சேதின்னு கேக்குது.. அம்மாடியோவ்.. நாம தான் தெரியாம வந்து மாட்டிட்டோமோ’ என்று.

“இந்த மிஸ் சொன்னாங்க.. ஒழுக்கம் என்பது ரொம்ப முக்கியம்னு”

யாரும் எதுவும் பேசவில்லை.

“ஒழுக்கம் என்பது ஆண்களுக்கு மட்டும் இருந்தா போதுமா? ஒழுக்கம் என்ன ஆண் பாலா..  இல்ல ஒழுக்கத்துக்கு பெண் பால் கிடையாதா? இதை தானே இவங்க தங்களுக்கு சாதகமா பயன் படுத்தி இருக்காங்க?”

“—-”

“ஒரு பொண்ணு சொன்னா விசாரிக்காம ஒரு பையனை பனிஷ் எப்படி செய்யலாம்? இப்ப அவங்க மேலே தப்புன்னு தெரிஞ்சும் ஏன் சும்மா விடணும்?”

“சாரி பாய்ஸ்.. நான் விசாரிச்சிருக்கணும்.. ஐ அம் ரியலி சாரி” என்று மிருதுளா  மிஸ் அவரே வந்து மன்னிப்பு கேட்டார்.

“நீங்க போய் அவங்க கிளாஸ்ல யாரை கேட்டாலும் சொல்லி இருப்பாங்களே மிஸ்.. இந்த ஸ்கூல்ல தான் நாங்க மூணு பேரும் எல்.கே.ஜில இருந்து படிக்கிறோம். எங்க ஒழுக்கம் எங்க ஸ்கூல் கிட்ட இருந்து வந்துச்சுன்னு நாங்க பெருமையா சொல்லுவோம். ஆனா அந்த ஸ்கூல்லையே எங்க ஒழுக்கத்தை பத்தி இப்படி ஒரு கேள்வி எழுபினதை என்னால ஏத்துக்கவே முடியலை”

அவளால் தாங்கவே முடியவில்லை. எந்த தப்பும் செய்யாத தன் அண்ணனும் தன் நண்பனும் ஏன் இப்படி தண்டிக்கப்படவேண்டும் என்று. அதுவும் அந்த பெண்களின் திமிர் பார்வையும் அலட்சியமும் அவள் கண் முன்னே நின்றது.

“போனது போகட்டும் விடும்மா..” என்றார் சுமதி மெதுவாக மகளிடம்.

அவள் திரும்பி தன் அம்மாவை முறைக்கவும், அவர் கணவரை பார்த்தார்.

“என் பொண்ணு சொல்றதுல தப்பில்லயே மேம்” என்றார் அவர் பிரின்சிப்பலை பார்த்து.

இது வரைக்கும் அந்த பெண்கள் முகத்தில் பெரிதாக குற்ற உணர்ச்சியோ வருத்தமோ தெரியவில்லை. அங்கிருந்த அனைவரும் அதை கவனித்து கொண்டு தான் இருந்தார்கள். அதுவே கருணாவின் கோவத்திற்கு காரணம்.

இப்பொழுது  தான் லேசாக ஒரு பயம் தெரிந்தது அவர்களிடத்தில்.

“ஒழுக்கம் எப்படி இரு பாலருக்கும் பொதுவோ, அதே மாதிரி மரியாதையும்  அனைவருக்கும் பொதுவானது  மேம். அது பரஸ்பரம் கொடுக்கப்படவேண்டிய ஒன்று” என்றாள் மீண்டும்.

அந்த மிருதுளா மிஸ் சீதாலட்சுமி மிஸ்ஸை பாவமாக பார்க்கவும், அவர் ஒன்னும் செய்ய முடியாது என்று தலை ஆட்டினார்.

“நீ சொல்றது சரி தான் ம்மா.. நான் தெரியாம அப்படி பேசிட்டேன். இவங்க இரண்டு பேரு நீலிக்கண்ணீரை பார்த்து ஏமாந்துட்டேன். இனி தீர  விசாரிக்காமல் செய்ய மாட்டேன்“ என்றார் உணர்ந்து.

கருணா இன்னும் இறுக்கமாக தான் நின்றிருந்தாள்.

“டேய்.. இவ இன்னும் மலை இறங்க மாட்டேங்கிறாளே டா.. எனக்கு காலெல்லாம் வலிக்குதே” என்றான் வில்வா பாரியிடம் மெதுவாக.

“ஒழுக்கம் சம்பந்த பட்ட தப்பு செஞ்சா பெற்றோர்களுக்கு தெரியணும்னு தானே எங்க பேரன்ட்ஸை வர சொன்னீங்க, அவங்களும் உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து எல்லா வேலையையும் விட்டுட்டு ஓடி வந்திருக்காங்க இல்ல? இப்ப சரிதா, சாரு பெற்றோர்களையும் வர சொல்லுங்க..”

“ப்ளீஸ் மேம்.. தெரியாம பண்ணிட்டோம்.. அது எல்லாம் வேண்டாம். இனிமே இப்படி பண்ண மாட்டோம்” என்று கெஞ்சத் தொடங்கினார்கள் பெண்கள்.

கருணா சொல்வதில் நியாயம் இருப்பதாகவே பட்டது பிரின்சிபல்கு. அவர் மிருதுளா மிஸ்ஸை பார்த்து “நீங்களே கால் பண்ணி வர சொல்லுங்க, நான் பேசுறேன்” என்றார்.

அவரும் உடனே யோசிக்காமல், சென்று சாரு சரிதா பெற்றோர்களுக்கு  அழைத்து விட்டார்.

“தேங்க்ஸ் மேம்” என்று கூறி உடனே கருணா தன் கிளாஸ்ஸிற்கு சென்று விட்டாள்.

பின் பாரியும் வில்வாவும் கொஞ்சம் தெளிந்த மனதுடன் அவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

“சரி மேம் நாங்க கிளம்புறோம். எங்க பசங்களுக்காக நீங்க எடுத்துகிட்ட உண்மையான அக்கரைக்கு நன்றி மேம்” என்று விடை பெற்றனர் பெரியவர்கள்.

செல்லுமுன் தமயந்தி, “கருணா பேசுவதை தப்பா நினைச்சுக்காதீங்க மேம். அவ எப்பவுமே தப்பை பொறுத்துக்க மாட்டா..” என்றார் மெதுவாக.

“நீங்க பாரியின் அம்மா தானே.. கருணாம்பிகை பத்தி எனக்கு தெரியும். நீங்க கவலை படாமல் போயிட்டு வாங்க” என்று விடை கொடுத்து அனுப்பினார்.

சரிதா சாருவின் பெற்றோர்களிடம் நடந்ததை எல்லாம் கூறி , “இது பன்னிரெண்டாம் வகுப்பு, வேற ஆக்க்ஷன் எடுத்தா அவங்க எதிர் காலம் பாதிக்கும்னு வார்னிங்கோடு விடறேன்” என்று அனுப்பி வைத்தார்.

பெற்றோர்கள் தலை குனிந்து நிற்பதை பார்த்து சரிதா சாரு இருவர் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது. 

———–

பள்ளி முடிந்து வீடு செல்லும் வழியில் பாரியும் வில்வாவும் பேசிக்கொண்டே சென்றார்கள்.

“நமக்கு ஒரு பிரச்சனைன்னா எப்படி சண்டை போடறா பார்த்தியா  கருணாம்பிகை..” என்றான் பாரி வில்வாவிடம்.

“ஆமாடா.. அது என்னமோ உண்மை.. ஆனா கிடைச்ச கேப்ல நம்மளை கொட்டிட்டு போய்ட்டா பார்த்தியா..” என்றான் வில்வா.

“நம்ம எப்பவுமே அவ கீழ தான்டா.. அவ லெவல்லே வேற” என்றான் பாரி.

“ஆனாலும் எத்தனை பேர் வந்தாலும் ஒத்த ஆளா சமாளிக்கிறா டா..”

“நம்ம பேசணும்ன்னு  நினைச்சாலும் யாரும் விடலை. அவளையும் விடலை தான், ஆனாலும் தைரியமா அவ பேசுற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகிட்டா இல்ல?”

“நல்ல வேலை வந்தாடா.. இல்ல இந்த பிரச்சனை எப்படி முடிஞ்சிருக்குமோ?”

“ஆனா வீட்டுக்கு போய் அவளால தான் நல்லபடியா பிரச்சனை முடிஞ்சுதுன்னு காமிச்சுக்க கூடாது டா..”

“சரியா சொன்ன.. அப்புறம் ஆளாளுக்கு நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க..”

பேசிகொண்டே கேட் அருகில் வந்து விட்டார்கள். வழக்கம் போல அங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

“டேய்.. எப்பவுமே வாச் மேன் கணக்கா கேட்ல நிக்கனும்னு வேண்டுதலா உங்க இரண்டு பேருக்கும்? உள்ள வந்து மிச்சத்தை பேசுங்களேன் டா” என்று எப்பொழுதும் போல வில்வாவின் பாட்டியின் குரல் கேட்டது உள்ளிருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!