Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 22

அம்மையப்பன் 22

 

காலையில் கல்யாண வீட்டின் கலகலப்போடு சொந்த பந்தங்கள் நிறைந்த கூட்டத்தோடு இருந்த அம்மையப்பன் மாளிகை.. இப்பொழுது வெறிச்சோடி இருந்தது..

 



Advertisement

வீட்டின் மக்கள் தவிர வேறு யாரும் இல்லை.. அவர்களும் தங்கள் அறையில் முடங்கி இருந்தனர்..

 

பவளம், தன் அறையின் ஓர் மூலையில் அமர்ந்து, விட்டத்தை வெறித்து கொண்டிருந்தார்..

Advertisement

 

Advertisement

கொண்டான் கொடுத்தான் என்பது போல்..  அம்மையப்பன் வம்சத்தில் பெண்னெடுத்து பெண் கொடுப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது..

 

அமிர்தம் பவளத்திற்கும் அப்படித்தான் திருமணம் முடிவானது.. மரகதத்தின் மூத்த மகன் திருநாவுக்கரசுவிற்கு அமிர்தவல்லி என்றும், இரண்டாவது மகன் திருச்செல்வத்திற்கு பவளமல்லி என்றும், பெரியோர்கள் முடிவெடுத்து தங்கள் பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டனர்.. 

Advertisement

 

சின்னதுலேயே, இன்னார்க்கு இன்னார்தான் என பெரியவர்கள் சொல்லிவிட..

 

அச்சிறுவயதிலியே திருச்செல்வத்தை தன் கணவனாக மனதில் பதித்து வைத்துக் கொண்டார் பவளமல்லி..

 

பூப்படைந்த பிறகு தன்னவனை காணவே வெட்கம் கொண்டு மறைவார்.. திரை மறைவில் இருந்துதான் அவரை பார்ப்பார்.. நேருக்கு நேர் அவரின் முகத்தை காண பவளத்தின் நாணம் தடுத்தது..

 

திருச்செல்வமும் பவளத்தின் மேல் அலப்பரியா காதல் கொண்டவர்.. ஒரே வீட்டில் இருந்தாலும் பெரியோர்களின் கட்டுப்பாட்டில்.. அவர்களால் தனிமையாக சந்திக்கவும் முடியாது, பேசவும் முடியாது..

 

ஆனால் திருச்செல்வம் கள்ளத்தனமாக பவளத்தை சந்திப்பார்.. அத்தருணங்கள் இருவருக்கும் இப்பொழுது நினைத்தாலும் மனதை சிலிர்க்கும் பொக்கிஷ நினைவுகள்..

 

இத்தனைக்கும் திருமணமாவதற்கு முன்பு, அவரின் விரல் நகம் கூட பவளவமல்லியின் நிழலை தீண்டியதில்லை.. ஒரு கண்ணியமான இடைவெளியுடன் தன் காதலை உணர்த்திக் கொண்டிருப்பார்.. பார்வையாலே அவ்விருவரும் ஆயிரம் சங்கதிகள் பேசியிருக்கிறார்கள்.. அப்படியொரு மனமொத்து இருந்தனர்..

 

ஆனால் அவையனைத்தும் சில நொடிகளில் கானல் நீராக மாறிவிட்டது.. இத்தனை வருஷ திருமண வாழ்க்கை பொய்த்து விட்ட வேதனையில் அவரின் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது..

 

பவளம் திருச்செல்வத்தின் இரண்டாம் மனைவி என்ற சொல்லே அவரின் செவியில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது.. அதன் கணம் தாங்காது தரையில் கூனியவாறு படுத்து விட்டார்.. 

 

*******************************

 

அப்போ பவளம் உன்னோட இரண்டாவது பொண்டாட்டி.. உன்னோட முதல் கல்யாணம் எப்போ நடந்துச்சு.. ஏன் எங்களுக்கு யாரும் சொல்லல என மேற்கொண்டு விஷயத்தை வாங்க அவர் முற்படும் பொழுது.. சட்டென ஒரு பெரிய சத்தம் கேட்கவும் அனைவரும் திடுக்கிட்டு முழித்தனர்..

 

ஹேய் சூப்பர் டார்லிங்.. வா இன்னொரு தடவை ஷூட் பண்ணலாம்.. என்ற அதி தான், தன் மடியில் இருந்த அஸியின் பிஞ்சு கரத்தை பற்றி, தன்னுடைய துப்பாக்கியால் மேலே சுட்டிருந்தாள்..

 

இதனை கண்டு அனைவரும் திகைத்து நின்றனர்.. 

 

பேப்.. டார்கெட் தப்பா செலக்ட் செய்ற என அபய் சொல்ல..

 

அப்படியா?.. என அஸியோடு எழுந்து நின்ற அதி.. அப்போ இப்ப எதை சுடலாம் என ஒவ்வொருவராக குறிவைக்க அனைவரும் வெலவெலத்து போயினர்..

 

அதி தன்னை முதலில் பேசிய பெண்மணியை குறிவைக்க.. அவர் கால்கள் நடுங்கிகொண்டிருந்தது..

 

யாரும் எதிர்பாரா நேரம், அதி அஸியின் கரத்தோடு அப்ப பெண்மணியின் கையில் உள்ள பொருளில் குறிவைத்து சுட, அது வெடித்து சிதறியது..

 

அதில் அப்பெண்மணி தன்னைத்தான் சுட்டுவிட்டாளோ என நினைத்து மயங்கி விழுந்தார்..

 

அடுத்து அவள் வேறொருவருக்கு குறிவைக்க.. சட்டென அவள் பின் நின்று தன்னோடு இறுக்கி அணைத்த அகத்தியன் அவளை செயல்பட முடியாமல் செய்தான்..

 

முதலில் அதிர்ந்த அதி.. குழந்தையை ஒரு கையில் பிடித்து கொண்டே அவனிடமிருந்து திமுற.. தன் கால்களால் அவளின் கால்களை பிணைத்து கொண்டான்.. அதியால் சிறிதும் அசைய முடியவில்லை..

 

டேய் விடு.. விடுடா என அதி கத்த..

 

ராங்கியம்மணி கொஞ்ச நேரம் சும்மாயிருங்க என பல்லைக் கடித்து அதியின் செவியில் கூறியவன்.. தன் சொந்த பந்தங்களிடம் திரும்பினான்.. 

 

இங்க நடந்ததுக்கு நான் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. இப்ப சூழ்நிலை சரியில்ல, எல்லாரும் போயிட்டு வாங்க.. இன்னொரு நாள் நானே எல்லாரையும் விருந்துக்கு கூப்பிடுறேன் என அகத்தியம் அமைதியாக சொல்ல.. அனைவரும் விட்டால் போதும் என ஓடி விட்டனர்..

 

இப்பொழுது இரு குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு யாரும் இல்லை..

 

டேய் இப்போவாவது விடு என அதி கத்த.. அஸி பொக்கை வாய் சிரிப்பில் சத்தமாக சிரித்தான்.. அங்கிருந்த அசாதாரணமான சூழ்நிலையை, மழலையின் சிரிப்பு சற்று இலகுவாக்கியது..

 

அகத்தியன் அதியை விட கோபமாக அவனை உருத்து விழித்தாள்..

 

மனிச்சுடுங்க அம்மணி நான் வேணுக்கும்னு பண்ணல என அமைதியாக சொல்ல.. 

 

அதி எதுவும் பேசாது விருவிருவென அபய் அருகே அமர்ந்துவிட்டாள்..

 

அபயின் இதழோரம் சிரிப்பில் துடிக்க, அவனையும் முறைத்தவள்.. உம்மென்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு அமர்ந்தாள்..

 

அவளின் இத்தோற்றம் சிறுவயது அதியை நியாபகம் படுத்தியதால் திருநாவுக்கரசு திருச்செல்வம் இருவரும் அதியையே வாஞ்சையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

 

அதிம்மா அப்போ நாங்களும் கிளம்புறோம் என கிருஷ்ண குமார் எழுந்து கொள்ள.. மற்றவர்களும் அவரை பின்பற்றினர்..

 

அதில் தன்னிலை வந்த அதி.. சுவற்றில் சாய்ந்திருந்த பவளம் நோக்கி சென்றாள்..

 

ச்சூ ச்சூ எனக்கு உங்கள நினைச்சா பாவமா இருக்கு.. இவங்க எல்லாரும் வெளில உள்ளவங்கள தான் ஏமாத்துவாங்கன்னு நினைச்சேன்.. ஆனா இத்தனை வருஷமா உங்களையும் ஏமாத்திட்டு தான் இருந்திருக்காங்களா என்ன நக்கலாக அதி கேட்க.. பவளம் கன்னம் துடிக்க அவளை பார்த்தார்..

 

மெல்ல அவரின் செவியருகே குனிந்த அதி, உங்க புருஷனோட முதல் மனைவி யாருன்னு தெரியுமா..

 

அதோ அங்க இருக்காங்க இல்ல மிஸ்ஸஸ் மணிமேகலை கிருஷ்ணகுமார், அவங்க தான் உங்க புருஷனோட முதல் மனைவி..

 

உங்களுக்கு முன்னாடியே உங்க புருஷன் கூட பெட்டை ஷேர் பண்ணிகிட்டவங்க என குரூரமாக, அவருக்கு மட்டும் கேட்குமாறு கூற, உயிர் போகும் வழியில் விழியை மூடிக்கொண்டார்.. பவளம்.. 

 

அப்பொறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. இவங்கள உங்க புருஷன் வாழ்க்கைக்குள்ள நுழைச்சது யாரு தெரியுமா? உங்க ஆருயிர் அக்கா அமிர்தவல்லி தான்..

 

அவங்களோட சுயநலத்துக்காக உங்க வாழ்க்கையை பயன்படுத்தி கிட்டாங்க.. சம்மதிகாத உங்க கணவரை பிளாக் மெயில் செஞ்சு, கல்யாணம் செஞ்சு வச்சாங்க.. அதுக்கு உதவி செஞ்சது உங்களோட நாத்தனார் கலையரசி.. சொல்லப்போனா அவங்க தான் இதுக்கான ஆரம்பம்.. என கேலியாக அவள் கூற.. பவளம் அதிர்ந்து விழித்தார்..

 

பவளம் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது.. அவரின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து அதன் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதையே ஜீரணிக்க முடியாது இருந்தவர்.. அவரின் உடன் பிறந்த சகோதரியும் தோழியும் தான் அதற்கு காரணம் என அதி சொன்ன நொடியில் மொத்தமாய் உடைந்து விட்டார்..

 

அமிர்தம் அவருக்கு சகோதரி என்றால், கலையரசி அவருக்கு உறவு முறையை தாண்டி நெருங்கிய தோழி.. 

 

அப்படிப்பட்ட இருவரும் அவருக்கு உண்மையாக இல்லை.. நான் இவ்வளவு காலம் என்ன வாழ்ந்திருக்கிறேன்.. இப்பொழுதே தன் இதய துடிப்பு நின்று, தனக்கு இவற்றிலிருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்க தொடங்கினார்.. பவளம்.. 

 

ஆனால் அதி இன்னும் இருக்கிறது என மேலும் பேசினாள்.. 

 

மிஸஸ் பவளம் திருச்செல்வம் இப்போ அழுது என்ன பிரயோஜனம்.. உங்க குடும்பமே உங்க முதுகுல குத்திட்டாங்க.. உங்க அக்காக்கும் நாத்தனாருக்கும் உங்களை விட அவங்க தேவைகள் பெருசா தெரிஞ்சிருக்கு.. வாட் அ பிட்டி.. என அதி போலியாக உதடு பிதுக்கினாள்.. 

 

பவளம் மயங்கி விழுந்து விட்டார்.. ஒரே நாளில் அவருக்கு எத்தனை அதிர்ச்சிகள்.. கடைசியில் தனக்கு நெருக்கமானவர்களே, தன் முதுகில் குத்தியதை நினைத்த வேதனையில் பவளம் தன் சுயநினைவை இழந்தார்.. 

 

அதி வந்த வேலை முடிந்தது என்பது போல் எழுந்து செல்ல.. திருச்செல்வம் வேகமாக மனைவியை நோக்கி சென்றார்..

 

அகத்தியன் முதற்கொண்டு அவ்வீட்டின் இளையவாரிசுகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்.. அதி கூறிய சில விஷயங்கள் தவிர்த்து மற்றவையை அனைவரும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.. 

 

அமுதன் அதிர்ச்சியாக தன் அன்னையை பார்க்க.. அவரோ தலை குனிந்து நின்றார்.. மகனின் முன் தனக்கு இப்படியொரு நிலை வரும் என அமிர்தம் நினைத்ததே இல்லை..

 

பலவருடங்களுக்கு முன்னால் மண்ணில் புதைத்த விஷயங்கள் மட்கி யாரும் கண்ணிற்கும் அகபடாது என அவர் நினைத்திருக்க.. அது விருட்ஷமாய் வளர்ந்து அனைவருக்கும் காட்சியளித்து விட்டது.. 

 

ஓகே நீங்க எல்லாம் போங்க.. உங்களுக்கான வேலை முடிஞ்சுடுச்சு என அதி மணிமேகலை கிருஷ்ண குமார் அருகே வந்து சாதாரணமாக சொல்ல.. மணிமேகலை அவளை முறைதார்..

 

அவங்ககிட்ட என்ன சொன்ன அதி.. என வந்ததிலிருந்து முதல் முறையாக பேசினார்.. மணிமேகலை.. 

 

அத உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. என அதி திமிராக சொல்ல.. மித்ரன் தாயை கடிந்து கொண்டான்..

 

ம்மா இவங்கள பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல, எதுக்கு தேவையில்லாம உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க.. சும்மாவே அவங்களுக்கு நாம யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டோம்.. இப்போ கேட்கவா வேணும்.. வாங்க போகலாம் என ஆத்திரமாக கத்தினான் மித்ரன்..

 

அதியோ அவனை நீ எல்லாம் ஒரு ஆளா என அலட்சியமாக பார்க்க, அவன் மேலும் கொதிப்படைந்தான்..

 

இப்போ வரீங்களா இல்லையா.. என மித்ரன் மேலும் கத்த மணிமேகலை அவளை முறைத்தவாறு வெளியேறிவிட்டார்.. கிருஷ்ணகுமார் அதியின் சிகையை அன்பாக கோதியவாறு பார்வையாலே விடைபெற்று சென்றார்.. 

 

பவளம்.. பவளம் என திருச்செல்வம் பயத்துடன் மனைவியை உலுக்க, ஷாலினி தண்ணீர் கொண்டு வந்து அன்னையின் முகத்தில் தெளித்தாள்..

 

சற்று இமை சுருக்கி.. பவளம் மெல்ல கண் திறக்கவும் தான் அனைவரும் ஆசுவாசமாகினர்..

 

மிஸ்டர் அகத்தியன் என தன் செவியில் மென்மையாக நுழைந்த குரலில், அதிர்ந்த அகத்தியன் வேகமாக திரும்பவும்.. அவனின் சிகை அதியின் முகத்தில் உரசியது.. இருவரும் நூலளவு இடைவெளியில் நின்று கொண்டிருந்தனர்.. 

 

உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கலாம்.. இதுக்கு முன்னாடி நீங்க மனைவின்னு நினைத்தா அன்பழகி உங்களுக்கு நியாபகம் வரலாம்.. அவளைதவிர வேற யாரையும் நீங்க நினைக்காம இருக்கலாம்.. ஆனா இனிமேல் அப்படி இருக்க கூடாது..

 

இந்த அகத்தியன் அம்மையப்பனோட மனைவி இனிமேல் இந்த அதிமதுராந்தகியம்மை மட்டும்தான்.. 

 

நான் ஒரு வேலையா வெளிய போறேன் வரதுக்கு டூ டேஸ் ஆகும்.. அத உங்களுக்கான டைமா எடுத்துக்கோங்க.. உங்களோட மனசையும் உடம்பையும் முழுமையா என்கிட்ட கொடுக்கிறதுக்கு தயாரா இருங்க.. என அழுத்தமாக அதி சொல்ல.. அகத்தியன் மொழி மறந்து நின்றான்..

 

அவனால் மறுமொழி கூட பேச முடியவில்லை.. ஒரு பெண்ணால் இவ்வளவு திமிராக, அழுத்தமாக, குடும்ப வாழ்க்கையையும் தாம்பத்தியத்தையும் ஒரு ஆணிடம் கேட்க முடியுமா.. என திகைத்து போனான்..

 

ஓகே, டூ டேஸ் எல்லாரும் ஜாலியா இருங்க.. என்ற அதி லெட்ஸ் கோ அபி என சொல்ல.. அபய் எழுந்தான்.. இருவரும் யாரையும் கண்டுகொள்ளாது வெளியேற.. சிற்பிகா சங்கடமாக அனைவரையும் பார்த்தாள்..

 

நாங்க கிளம்புறோம் அண்ணா.. இன்னும் ரெண்டு நாள்ல பெங்களூர் போயிடுவோம்.. அதுவரைக்கும் அதி எங்க கூடத்தான் இருக்க போறாங்க.. என்றாள்..

 

அகத்தியன் தன் அதிர்ச்சி தெளிந்து அவளுக்கு விடைக்கொடுக்க ஆரம்பித்தான்..

 

சரிம்மா பார்த்து போயிட்டு வாங்க..

 

அண்ணா அப்பொறம் ஒரு விஷயம்.. அதியக்கா நடந்துகிறத வச்சு அவங்கள யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.. அவங்க பார்க்க தான் முரட்டு தனமா இருப்பாங்க.. ஆனா அவங்களுக்குள்ள இன்னொரு அதி இருக்காங்க.. அவங்க ரொம்ப பாசமானவங்க.. மனசுக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேணாலும் செய்வாங்க..

 

என் புருஷன் அதி ரெண்டு பேருமே ஒரே மாதிரி தான்.. அவங்க அன்பு கோபமாவும் அதிகாரமாவும் தான் வெளிப்படும்.. என அகத்தியனிடம் சொன்ன சிற்பிகா, அனைவரையும் பார்த்து தலையசைத்து விட்டு சென்றாள்..

 

அகத்தியனின் நினைவு முழுவதும் அதி நிறைந்திருக்க அவன் தனிமையை தேடி தோட்டத்திற்கு சென்றுவிட்டான்..

 

அனைவரும் அவரவர் அறையில் முடங்கி போக.. திருச்செல்வம் மட்டும் புகைப்படத்தில் இருந்த அதியின் முகத்தை வருடினார்..

 

ப்பா.. என்னோத இதுங்க.. ப்பா என்ன பிதிங்க..

 

நான் தூங்க மாத்தேன்.. நான் தூங்குனா நீங்க போயிதுவீங்க.. என்ற அவரது மதுகுட்டியின் மழலை மொழிகள் இப்பொழுதும் அவர் செவியில் கேட்டு கொண்டிருக்க.. மகிழ்ச்சியும் வேதனையுமாய் விழிகளை மூடினார்..

 

அப்பொழுது திருநாவுக்கரசு அவரின் தோளை தொட.. வெறுமையாக அவரை பார்த்தார்..

 

தம்பியின் இந்நிலைக்கு தானும் ஒருவகையில் காரணம் தான் என நினைத்த, திருநாவுக்கரசுவின் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்தது..

 

திரு என்னை மன்னிச்சுடுடா.. என்னால தான உனக்கு இவ்வளவு கஷ்டம் என கண்கலங்கி கூற.. திருச்செல்வம் வேதனையாக சிரித்தார்..

 

இப்பொழுது அவர் இருக்கும் நிலையில் பேசக்கூட முடியவில்லை.. மெல்ல தலையசைத்து அண்ணனின் தோள் தட்டி, தன்னறக்கு சென்றார்..

 

அங்கு பவளம் மூலையில் சுருண்டிருப்பதைக் கண்டு அவரின் இதயத்தில் ரத்தம் வடிந்தது.. மெல்ல மனைவியின் அருகே சென்று, அவரின் பக்கத்தில் அமர்ந்தார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!