Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 26

தன்னைக் கட்டிக் கொண்டு அயர்ந்து தூங்கும் மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகு!

அயர்ந்து தூங்காமல் என்ன செய்வாள்? அவனை சீண்டி விட்டு, வாயைக் கொடுத்து… அவன் மெல்ல சிரித்துக் கொண்டான்!

“எங்கடி இருந்த நீ? எங்கேர்ந்து வந்த? இப்படி என்னை ஒரேடியா உனக்குள் அடக்கி வச்சிருக்க!  போன வருஷம் இந்நேரம் உன்னை எனக்கு யாரேன்றுக் கூட தெரியாது!

ஆனால் இப்ப, நீ வேறே நான் வேறே இல்ல! எனக்குள் அப்படியே கலந்துட்டடி நீ!



Advertisement

நான் இப்படி மாறுவேன்னு ஒரு நாளும் நினைச்சுக் கூட பார்த்து இல்ல!”

ஆனா, தப்பானவன்  என்றாலும், பார்த்தி ரொம்ப ஸ்மார்ட் தான்!

அவன் கணிப்பு சரிதான்!

Advertisement

நான் மதுவிடம் மயங்கி போய் விடுவேன் என்று அவன் எப்படியோ கெஸ் பண்ணியிருக்கான்!

Advertisement

அதனால் தான் அவளை என் லைப்ல இருந்து விலக்கி விட எவ்வளவோ ட்ரை பண்ணியிருக்கான்!

“ச்சே ச்சே” சந்தோசமான நேரத்துல அந்த பயலோட நினைப்பு எதுக்கு!

தன்னையே திட்டிக் கொண்டவன் , மீண்டும் தூங்கும் மனைவியின் முகத்தையே ரசிக்க ஆரம்பித்தான்!

Advertisement

நேற்று என்னா பேச்சு! ம்ம். என்னா ஆட்டம்!

ஒரு முறை அவள் பீவரில் இருந்த சமயம் அவள் கழுத்தில் கை வைத்து டெம்பரேச்சர் செக் பண்றப்போ என் கைப்பட்டு கொஞ்சூண்டு அவ நைட்டி ஜிப் இறங்கிடுச்சுன்னு பேய் மாதிரி கத்தி சண்டைப் போட்டவ, இன்னிக்கு என்னன்னா சமந்தா மாதிரி குட்டி சார்ட்ஸ் போட்டுட்டு, சர்ட்ல ஒத்த பட்டனை மட்டும் போட்டுக்கிட்டு ஏக் தோ தீன் பாட்டு பாடுறா!

மது இப்படி ஆடினாள் என்று வெளியே போய் சூடம் அணைச்சு சத்யம் செய்தா கூட நம்ப மாட்டாங்க!

இது எனக்கே எனக்கான அவளின் ஸ்பெஷல் முகம்!

அவளின் செல்ல நந்துக்கான முகம்!

“நந்து கண்ணா.. “  அவளுக்கு காரியம் ஆகணும்னா நந்து கண்ணா..

இல்லன்னா “யோவ் டாக்டர்!..”

சரியான ராட்சசி! என் செல்ல ராட்சசி! அவள் கன்னத்தில் முத்தமிட்டான்!

“போதும் டாக்டரே நான் ரொம்ப டயர்டா இருக்கேன்!” அவள் சிணுங்கியபடி சொன்னாள்!

“ஏய் நான் சும்மா கிஸ் மட்டும் தான்டி  பண்ணினேன்! நீ தூங்கு!”

“நீ சாரி சொல்ல ஆரம்பிச்சா கிஸ்ல முடிப்ப! கிஸ்ல ஆரம்பிச்சா எதுல போய் முடியும்னு எனக்குத்  தெரியும்!” அவள் கண் விழிக்காமலே சொன்னாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல நீ தூங்கு!”

நாட்கள் இப்படியே ரம்யமாக சென்றன!

——-

“நந்துமா, எழுந்திரு,” மது ரகுவை எழுப்பினாள் சந்தோசமாக!

“என்னடி!” மெல்ல கண் விழித்த அவன் கண் முன் அந்த டெஸ்ட் கிட்டை காட்டினாள்!

அவன் முகம் மலர்ந்தது!

“எப்படி டெஸ்ட் பண்ணுன?”

“இப்ப தான்!” அவள் முகம் வெட்கத்தோடு சந்தோஷ கலவையில் இருந்தது!

ப்ரக்னன்சி டெஸ்ட் கிட்! அதில் பாசிடிவ்!

அவன் அவளை மெல்ல கட்டிக் கொண்டான்!

“இரு வைஷு கிட்ட சொல்லலாம்.”

அவளுக்கு போன் பண்ணினான்.

“ஏய் வைஷு கிழவி! நான்தாண்டி பேசுறேன், உடனே என் ரூமுக்கு வா!”

“என்னடா என்னைப் போய் கிழவின்னு சொல்ற?”

“அதான் பெரியம்மா ஆகப் போறியே, அப்ப நீ கிழவி தானே! சீக்கிரம் வாடி!”

வைஷு வந்தாள். மதுவிடம் மேலும் சில கேள்விகள் கேட்டுவிட்டு, “இன்னும் ஒரு வாரம் போகட்டும் மது ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்!” சந்தோசத்தோடு கிளம்பினாள்!

ஒரு வாரம் கழித்து, ஸ்கேன் செய்து பார்த்து விட்டு,

“கங்க்ராட்ஸ் மது! பேபி நல்ல இருக்கு! ஹார்ட் பீட் வந்துடுச்சு!

இனிமே நீ எடுத்துக்க வேண்டிய மெடிசின், டயட் எல்லாம் சொல்றேன்!

டயட் உனக்கே தெரியும், ஸ்ட்ரிக்ட்டா பாலோ பண்ணனும்!”

அந்த வீடே அதன் பின் சந்தோசத்தில் அல்லோகலப் பட்டது!

ரகுவின் தந்தை ராமநாதன் உடனே கிளம்பி வந்து அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்.

பெரியப்பாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர் இருவரும்!

தாரிகாவுக்கும் தன்விக்கும் தலை கால் புரியவில்ல!

மதுவுக்கு கீழே ஒரு ரூமை கொடுத்து விட்டார்கள்! அவள் ஸ்கூட்டியை உடனே கொண்டு போய் அவள் வீட்டில் விட்டு விட்டு வர சொல்லிவிட்டான் ரகு!

அத்தை கிரிஜா, அக்கா ராகினி எல்லோரும் மதுவிற்கு வாழ்த்து சொன்னார்கள்!

மானு நேரில் வந்து அக்காவைக் கட்டிக் கொண்டாள்!

மாது, உடனே பட்டுப் பாட்டியை மதுவைப் பார்த்துக் கொள்ளவென்று அனுப்பி விட்டான்!

“ஏண்டா, நீ என்ன பண்ணுவ சாப்பாட்டிற்கு?” என்று மது கேட்டதுக்கு

“என் ரூம் மேட் அம்மாச்சியை விட நல்லா சமைக்கிறான் மது! அம்மாச்சிக்கு செம டப் கொடுக்கிறான் அவன்! அதனால் எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை!” என்று சொல்லி விட்டான்!

ராஜுவும் அவன் பெற்றோரும் வந்து வாழ்த்தினார்கள்!

தேவேந்திரன் “நான் தாத்தா ஆகிட்டேன்” என்று அவர் கட்சிக்காரர்களுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடினார்!

மதுவின் தாய் மாமாவும் அவர் மகன் சபரியும் கூட போனில் வாழ்த்தினார்கள்!

மறந்தும் கூட அவர்கள் இந்த விஷயத்தை மகேஸ்வரிக்கும் அவள் அம்மாவுக்கும் தெரியப்படுத்தவில்லை!

இப்படி எல்லோரின் வாழ்த்துக்களோடும் வைஷுவின் மருத்துவ கண்காணிப்புடன், மானு சொல்லித் தந்த கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சியுடனும், பட்டுப் பாட்டி மற்றும் ராஜுவின் அம்மாவின் ஊட்டமான சாப்பாடு உண்டு  மதுவின் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டிருந்தது!

ஐந்தாம் மாதம் மருந்து கொடுத்து மசக்கை கருப்பு புடவை எடுத்துக் கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து சடங்குகளோடு, ஏழாம் மாதம் மதுவின் வளைகாப்பு ரொம்பவே கிராண்டா கொண்டாடினார்கள்!

மதுவின் வீட்டிற்கு இது தான் முதல் பேரக்குழந்தை! அவர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்!

மதுவின் வேத விலாஸ் கேஸ் கூட இப்போது சாதகமாக போய்க் கொண்டிருப்பதாக ராஜு சொன்னான்!

“அனேகமாக உன் டெலிவரி சமயத்தில் தான் ஜட்ஜ்மெண்ட் வரும் மது!  நிச்சயம் நம்ம பக்கம் தான் தீர்ப்பு!  என் மருமகன் வரும் போதே வெற்றியை கொண்டு வரப் போறான்!” என்றான் அவன் சந்தோசமாய்!

“அது என்ன மருமகன்! எனக்கு மகள் தான் வேணும்!” என்றான் ரகு!

“அதெல்லாம் இல்ல! பையன் தான்! அவனுக்கு என் பொண்ணைக் கொடுத்து சம்பந்தியாகனும் நான்!”

“அடப்பாவி! அடியே ன்னு சொல்ல இன்னும் பொண்டாட்டியே வரல! அதுக்குள்ள சம்பந்தம் பேசுறான் பாரேன்!” மது கிண்டலடித்தாள்!

எல்லோரும்  சிரித்தார்கள்.

“மது, இங்க சிட்டி  அவுட்டர்ல பைபாஸ் ரோட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு கோவில் கட்டி இருக்காங்க!

 வளைகாப்பு அம்மன்னு பேராம்! எல்லோரும் அங்க போய் அங்க இருக்கிற ஒரு மரத்துல வளையல்கள் கட்டி வேண்டிகிட்டு வராங்க.

அப்படி செய்தா, பிரசவம் எந்த குறையும் இல்லாம நடக்கும்னு சொல்றாங்க!

நீ ஒரு நாள் வா மது! தம்பி ஒரு நாள் அவளை அங்கே கூட்டிட்டு வரீங்களா?” ராஜுவின் அம்மா கேட்டார்.

சரி என்று ஒரு நாள் முற்பகல் வேளையில் மது, ரகு, ராஜு மற்றும் அவன் அம்மா, பட்டுப் பாட்டி எல்லோரும் அந்த கோவிலுக்கு சென்று ராஜு அம்மா சொன்ன அந்த பூஜையை செய்து விட்டு காரில் ஏறிக் கொண்டு இருக்கும் போது அவர்களை கடந்து சென்ற ஒரு பைக்,  அதிலிருந்த ஒருத்தன், அவர்களைத் திரும்பி திரும்பிப் பார்த்து விட்டு கொஞ்சம் தூரம் சென்று ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி தன் ஹெல்மெட்டை கழற்றிவிட்டு நிதானமாய் அவர்களைப் பார்த்தான்!

முக்கியமாக முகம் கொள்ளாத பூரிப்புடன், கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டுக்கொண்டு தன் பெரிய வயிறைத் தள்ளிக்கொண்டு ரகுவின் கைக் கோர்த்துக்கொண்டு காரை நோக்கி நடந்து கொண்டிருந்த மதுவை வெறித்துப் பார்த்தன அந்த பொல்லாத கண்கள்!

அந்த கண்களுக்கு சொந்தக்காரன் பார்த்தி!

அவன் பார்ப்பதை அவர்கள் யாருமே கவனிக்க வில்லை!

அவன் தன் பான்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து, யாருக்கோ போன் செய்தான்!

எதிர்முனையில் “சொல்லுங்கண்ணா” என்றது ஒரு பெண்ணின் குரல்!

அவள் கலையரசி!

நர்ஸ் கலையரசி! வைஷுவின் பிரசவ வார்டில் வேலை செய்யும் பெண்!

அவளை பார்த்தி தான் ரகுவிடம் ரெகமன்ட் செய்து வேலைக்கு  சேர்த்து விட்டிருந்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!