Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 24

அம்மையப்பன் 24

 

என்னை மன்னிச்சுடும்மா.. என் குடும்ப ஆளுங்களோட சுயநலத்துக்காக உன்னோட வாழ்க்கையை பலி ஆக்கிட்டாங்க..

 



Advertisement

நீங்க மொதல்ல எழுந்திரிங்க.. நான் எதுவும் தெரியாம இதுக்கு சம்மதிக்கலையே என மணிமேகலை வெறுமையாக கூற.. திருச்செல்வம் எழுந்தார்..

 

நீங்க சொல்றதுல இருந்தே உங்க நிலைமை புரியுது.. எனக்கும் இந்த கண்ணாலத்துல விருப்பம் கிடையாது.. என் மனசு முழுக்க என்னோட பவளம் தான் நிறைஞ்சிருக்கா.. நான் என்னைக்கும் அவளுக்கு துரோகம் பண்ண மாட்டேன்..

Advertisement

 

Advertisement

எனக்கு ஒரு உதவி மட்டும் செய்ங்க.. எனக்கு உங்க மூலமா ஒரு குழந்தை வேணும் என அவர் கூறவும்.. மணிமேகலை முகம் இறுகியது..

 

அதுக்கும் ஒத்துக்கிட்டேன் தான்.. என இறுகிய குரலில் சொல்ல.. திருச்செல்வம் மறுத்தார்..

Advertisement

 

நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. எனக்கு உங்க மூலமா குழந்தை வேணும் தான்.. ஆனா அது நம்ம ரெண்டு பேரும் உறவு வைத்துக்கொண்டு தான் பொறக்கணும்ன்னு இல்ல.. வேற மாதிரியும் பிறக்கலாம் என திருச்செல்வம் கூற.. மணிமேகலை ஒன்றும் புரியாது பார்த்தார்..

 

இப்போ நம்ம நாடு மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேறிடிச்சிங்க.. குழந்தை இல்லாதவர்களுக்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலமா குழந்தை பொறக்க வைக்குறாங்க, என திருச்செல்வம் கூறவும்.. மணிமேகலை மேலும் குழம்பி போய் அவரைப் பார்த்தார்..

 

திருச்செல்வம் சொல்வது எதுவும் அவருக்கு புரியவில்லை..  குழந்தை உடலுறவில்லாமல் எப்படி பிறக்கும் என கேள்வியாக அவரை பார்த்தார்.. 

 

நாளைக்கு நாம ரெண்டு பேர் மட்டும் சென்னைக்கு போறோம், அங்க உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்திடும் என்ற திருச்செல்வத்துக்கும் இதனைப் பற்றி மணிமேகலைக்கு தெளிவாக விளக்கம் கொடுக்க முடியவில்லை.. அதோடு இம்முறை சாத்தியப்படுமா என அவருக்கும் சில சந்தேகம் இருந்தன..

 

திருமணத்திற்கு சில நாள் முன்புதான் இதுபற்றி செய்தித்தாளில் படித்தார்.. அதனால் அவருக்கும் முழுமையாக தெரியாது.. 

 

நீங்க கட்டில்ல படுத்துக்கோங்க என்றவர், பிறகு எதையும் கண்டுகொள்ளாமல் கீழே உறங்கிவிட்டார்..

 

சொன்னது போல் மறுநாள் அதிகாலையே மணிமேகலையை கூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்..

 

எங்கு கூட்டி போகிறாய் என கேட்ட திருநாவுக்கரசுவிடம்.. போயிட்டு வந்து சொல்கிறேன் என்று மட்டும் சொன்னார்..

 

அமிர்தவள்ளி கலையரசி மணிமேகலையின் அத்தை மூவரும் என்னவாக இருக்கும் என குழம்பி போயினர்..

 

சென்னை வந்தவுடன் ஒரு ஹோட்டலில் அறை பதிவு செய்து சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு ஒரு புகழ் பெற்ற மருத்துவமனைக்கு சென்றனர்..

 

உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது.. என அந்த மகப்பேறு மருத்துவர் கேட்க.. இருவரும் ஒரு நொடி அமைதியாக இருந்தார்கள்..

 

ரெண்டு வருஷம் ஆகுது என திருச்செல்வம் பதில் அளித்தார்..

 

ஆனால் மருத்துவர் அதனை நம்பவில்லை.. மணிமேகலையின் கழுத்தில் இருந்த புத்தம் புது மஞ்சள் சரடை அவர் கூர்மையாக பார்க்க.. மணிமேகலை தலை குனிந்து அமர்ந்திருந்தார்.. 

 

மேடம் நாங்க உண்மையிலேயே கணவன் மனைவி தான்.. எங்களுக்கு ஒரு குழந்தை வேணும்.. அது இந்த முறையில கிடைச்சா நல்லா இருக்கும் என திருச்செல்வம் அழுத்தமாக கூறினார்..

 

நீங்க கொஞ்சம் வெளிய இருங்க மிஸ்டர் திருச்செல்வம், நான் உங்க மிஸ்சஸ் கிட்ட கொஞ்சம் பேசணும்.. என மருத்துவர் கூற.. திருச்செல்வம் வேறு எதுவும் பேசாமல் வெளியேறி விட்டார்..

 

சொல்லுங்க மிஸ்சஸ் மணிமேகலை உங்கள் கணவர் சொல்றது எதுவும் உண்மையா.. நீங்க உண்மையிலேயே கணவன் மனைவி தானா, இதுல உங்களுக்கு விருப்பமா.. என மருத்துவர் கேட்க..

 

உண்மைதான் டாக்டர் நாங்க ரெண்டு பேருமே புருஷன் பொண்டாட்டி தான்.. எங்களுக்கு இந்த முறை மூலமா ஒரு குழந்தை வேணும்.. எங்களுக்கு அந்த குழந்தை ரொம்ப முக்கியம் என சிறிது கலங்கிய விழிகளுடன் மணிமேகலை கூற.. மருத்துவர் இப்பொழுதும் யோசனையாக தான் இருந்தார்..

 

சரிம்மா உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆகுது.. என கேட்கவும்..

 

ரெண்டு வருஷம் என்று மட்டும் கூறினாள்..

 

அப்போ உங்க கழுத்துல இருக்குற புது தாலி..

 

நேத்துதான் புதுக்கயிறு மாத்தினேன் மேடம்..

 

ஓஹ்.. எனக்கூறியவர் திருச்செல்வத்தை உள்ளே அழைக்க, அவன் வந்தான்..

 

இங்க பாருங்க மிஸ்டர் திருச்செல்வம் செயற்கை முறையில் குழந்தை பிறப்பு என்பது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது.. ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்.. நிறைய பணம் செலவாகும்.. அதோடு உங்க மனைவிக்கு மன உளைச்சல், மன அழுத்தம், வயிற்று வலின்னு நிறைய சிரமங்கள் இருக்கு.. இதையெல்லாம் தாண்டி தான் குழந்தை பிறக்கும்.. ஆனாலும் முதல் முயற்சிலேயே குழந்தை தங்கும்ன்னு சொல்ல முடியாது.. ஒரு முறை இல்ல இருமுறையில் வெற்றி கிடைக்கலாம்.. இல்லை கிடைக்காமலே போகலாம் இது பெண்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலைத் தரும்.. 

 

ஒவ்வொரு முறைக்கும் நீங்க பணம் செலவழிக்கணும்.. ஒரு தடவையே பல லட்சங்களை தாண்டி போகும்.. நல்லா யோசிச்சுட்டு வாங்க.. என மருத்துவர் நிறைய விஷயங்கள் சொன்னார்..

 

மணிமேகலை திருச்செல்வம் இருவரும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தார்கள்.. செயற்கை முறை குழந்தை பிறப்பை பற்றி இருவரும் நிறைய தெரிந்து கொண்டனர்.. முதலில் தகவலை மட்டும் அறிந்து கொண்ட திருச்செல்வம், மணிமேகலையை கூட்டிக்கொண்டு ஹோட்டலுக்கு வந்து விட்டார்.. 

 

டாக்டர் சொன்ன எல்லாத்தையும் கேட்டீங்க.. இப்போ நீங்க என்ன நினைக்கிறிங்கனு சொல்லுங்க.. என்னோட சுயநலம், எனக்கு இதுதான் நல்ல முடிவுன்னு சொல்லுது.. ஆனா இதுல உங்களுக்கு உடம்பு ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் வரும்னு சொல்றாங்க..

 

அதனால உங்களோட முடிவு எனக்கு ரொம்ப முக்கியம்.. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு ஒத்துக்குறேன் என திருச்செல்வம் அமைதியாக கூறினார்..

 

மணிமேகலை இரு நிமிடங்கள் மட்டும் விழிகளை மூடி யோசித்தவர், செயற்கை முறை குழந்தை பிறப்புக்கு தன் சம்மதத்தை தெரிவித்தார்..

 

கோவையிலிருந்து மணிமேகலையும் மணிமேகலையின் அத்தையையும் சென்னைக்கு குடியமர்த்தி விட்டார் திருச்செல்வம்.. பிறகு அங்கிருந்தே சிகிச்சைக்கு இருவரும் சென்றார்கள்..

 

திருச்செல்வம் திருநாவுக்கரசுவிடம் அனைத்தையும் சொல்ல.. அரசு தன் தம்பியை பெருமையாக பார்த்தார்..

 

அமிர்தவல்லியும் கலையரசியும் முதலில் இதற்கு சம்மதிக்க வில்லை..

 

என்ன ண்ணே இது.. ஆணும் பொண்ணும் சேராம குழந்தை பெத்துக்கிறது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்.. இதெல்லாம் கேட்கவே கன்றாவியா இருக்கு.. என அருவருப்புடன் கூறினார் கலையரசி..

 

எனக்கும் இது சரி வரும்னு தோணல தம்பி.. இந்த மாதிரி பிறக்கிறது எப்படி நம்ம குடும்பத்து வாரிசாகும்.. இதுனால எனக்கு குழந்தை பிறக்காம போயிடுச்சுன்னா என்ன பண்றது.. அமிர்தவல்லி கவலை கொள்ள.. திருநாவுக்கரசு இருவரையும் அதட்டினார்.. 

 

நீங்க ரெண்டு பேரும் சும்மா இருங்க.. அவன் விருப்பம் என்னவோ அத செஞ்சுக்கட்டும்.. உங்களுக்கு என்ன அந்த பொண்ணு மூலமாகவும் அவன் மூலமாகவும் ஒரு குழந்தை வேணும் அவ்வளவு தானே.. அது எப்படி வந்தா என்ன..? என கேட்ட திருநாவுக்கரசு, 

 

என் தம்பி உடம்பாலையும், பவளத்துக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறான்.. நியாப்படி அதுக்கு நீ சந்தோஷம்தான் படனும் அமிர்தம் என மேலும் திருநாவுக்கரசு கடிந்து கொள்ள, பெண்கள் இருவரும் வேறு வழியின்றி வாயை மூடினர்..

 

சென்னையில் மருத்துவமனையின் அருகே இருவரையும் குடியமர்த்தி விட்டார் திருச்செல்வம்.. இரு அறைகள் கொண்ட வீட்டில், ஒன்றில் மணிமேகலையும் அவரின் அத்தையும் இருக்க, மற்றொன்றில் திருச்செல்வம் தங்கி கொண்டார்..

 

திருச்செல்வம் குழந்தை பிறக்கும் வரை சென்னையிலேயே இருப்பது என முடிவெடுத்தார்..

 

வீட்டில் உள்ளவர்களை சமாளித்து சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்..

 

ஏன்டா நம்மகிட்ட இல்லாத சொத்தா என்ன? நீ ஏன்டா இன்னொருத்தன்கிட்ட வேலை பார்க்கனும்.. அதுவும் வெளியூருக்கு போறேன்னு சொல்ற.. என மரகதம் கோபம் கொள்ள..

 

அம்மா எனக்கு கோயம்புத்தூர்ல பெருசா கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கணும்னு ஆசைங்ம்மா.. அதுக்கு வெளியூர்ல கொஞ்ச நாள் வேலை பார்த்தா எனக்கு இன்னும் அனுபவம் கிடைக்கும் இல்ல.. என ஏதேதோ சொல்லி வீட்டினரை சமாளித்தார்..

 

ஆனால் விழிகள் கலங்க தன்னை பார்த்து கொண்டிருந்த பவளத்தை தான் அவரால் அவ்வளவு எளிதாக சமாதானம் செய்ய முடியவில்லை.

 

என்னதான் பவளத்திற்கு அவர் உடல் ரீதியாக துரோகம் செய்யவில்லை என்றாலும்.. இன்னொரு பெண்ணை மணந்தது பவளத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகமாகவே அவர் நினைத்தார்.. அவரால் முன்பு போல் பவளத்தை நேரில் கண்டு பேச முடியவில்லை..

 

ஆனால் இப்பொழுது தன் பிரிவை எண்ணி கலங்கும் தன்னவளை அப்படியே விடவும் மனதில்லாது, தனிமையில் அவரை சந்தித்து பேசினார்..

 

பவளம் அழுகாதடி.. நீ இப்படி இருந்தா நான் எப்படி நிம்மதியா வெளியூருக்கு போவேன்.. என திருச்செல்வம் கேட்க.. பவளம் மேலும் அழுதார்..

 

ஏன் போகணும் இங்க இல்லாத தொழிலா என்ன.. அங்க போய் தான் கத்துக்கணுமோ.. உங்களை பாக்காமா நான் எப்படி மாமா இருப்பேன் என அழுக.. அவளை அணைத்து ஆறுதல் செய்ய துடிக்கும் கரங்களை முயன்று அடக்கிக் கொண்டார் திருச்செல்வம்..

 

ஒரு வருஷம் தான் பவளம்.. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் இங்கதான இருக்க போறேன்.. என பலவாறு சமாதானம் செய்து சென்னைக்கு சென்றார்.. திருச்செல்வம்.. 

 

**********************************

 

நீங்க உறுதியா தான் இருக்கீங்களா.. என அந்த பெண் மருத்துவர் கேட்க.. திருச்செல்வமும் மணிமேகலையும் தலையசைத்து தங்கள் சம்மதத்தை சொன்னார்கள்..

 

சரி இதற்குமேல உங்க விருப்பம்.. இதுல ரெண்டு விதமான முறையை நாங்க செய்றோம்.. ஐவிஎஃப் மற்றும் ஐயூஐ.. ஐவிஎஃப்ன்னா வெளிச் சோதனை முறை கருக்கட்டல்..

 

இதுல கருப்பையில இருந்து முட்டையை எடுத்து உங்க கணவரோட விந்தணுவுடன் சேர்த்து கருவுற வைக்கணும்.. அதுக்கப்புறம் கருவுற்ற முட்டைய, மறுபடியும் கருப்பையில வச்சிடுவோம்.. ரெண்டு வாரத்துக்கு அப்பொறம் உங்க கருப்பையில இருக்கிற கரு வளர்ச்சி அடைந்திருந்தால், உங்களுக்கு கரு தங்கிடும்..

 

ரெண்டாவது முறை ஐயூஐ.. இது கருப்பையக கருவூட்டல்.. இது பெரும்பாலும் உடலுறவுக்குப் பதிலாக, செயற்கையான வழிமுறைகள் மூலம் பெண்ணின் உடலில் விந்தணுக்கள் நுழையும் செயல்முறை இது..

 

இதுல எது உங்களுக்கு தோதுப்படும்.. என மருத்துவர் கேட்க.. இருவருமே இரண்டாம் முறையை பற்றி கேட்டனர்..

 

ஹ்ம்ம் ஐவிஎஃப்வை விட இது உங்களுக்கு கொஞ்சம் எளிதா இருக்கும்.. 

 

உங்களுக்கு முட்டை நல்லா வளர்ச்சி அடைந்திருக்க நேரம், விந்தணுக்களை கருப்பை குழிக்குள், செயற்கையாக ஒரு வடிகுழாயின் உதவியுடன் வைக்கப்படுது, இது வழியில் கொல்லப்படாமல் நேரடியாக கருப்பையை அடைய உதவுகிறது, இதன் மூலமா முட்டையோடு விந்தணு ஒன்றிணைந்து கருத்தரித்தல் மிகவும் சாத்தியமான மற்றும் எளிதானது. என மருத்துவர் சொல்ல.. இருவரும் உன்னிப்பாக கேட்டனர்..

 

இதுலயும் உங்களுக்கு சில அசவுகரியம் இருக்கு.. உங்களுக்கு கருப்பையில் வலி வரலாம்.. உட்செலுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி வீக்கம், சொறி இதெல்லாம் வரும் என எச்சரிக்கை செய்யவும் அவர் தயங்கவில்லை.. இதற்கு திருச்செல்வம் அமைதியாக இருக்க.. மணிமேகலை சம்மதித்தார்.. 

 

இருவருக்கும் சிகிச்சைகள் ஆரம்பித்தனர்.. முதலில் மணிமேகலையின் மாதவிடாய் நாட்கள் கணக்கிடப்பட்டு.. அவருக்கு ஆரோக்கியமான முட்டை வளர்ச்சி இருக்கிறதா என சோதித்தனர்..

 

திருச்செல்வத்தின் விந்தணுவும் ஆரோக்கியமானதாக உள்ளதா என பரிசோதனை செய்தனர்..

 

திருச்செந்தத்திற்கு சில நேரம் இதனையெல்லாம் செய்ய பெரும் சங்கடமாக இருந்தது.. 

 

அவர்கள் சென்னை வந்த அடுத்த மாதத்தில் மணிமேகலையின் கரு குழிக்குள் திருச்செல்வத்தின் விந்தணு செலுத்தப்பட்டது.. 

 

முதல் முறையே வெற்றியடைய வேண்டுமென்று, மனதிற்குள் கோடி முறை இறைவனை வேண்டி விட்டார் திருச்செல்வம்.. அதோடு உருவாகப் போகிற தன் மகளிடமும் மானசீகமாக வேண்டிக் கொண்டார்.. 

 

நம்மளால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்டா செல்லம்.. அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காம முதல் தடவையே இந்த அப்பாகிட்ட வந்துடுடாம்மா என மனதின்னுள்ளே வரப் போகிற மகளிடம் வேண்டிக் கொண்டார்..

 

அவர் எதிர்பார்த்தது போல் முதல் முறையே வெற்றியடைந்து.. அதி மணிமேகலையின் வயிற்றில் கருவாக உருவாகி விட்டாள்..

 

திருச்செல்வத்தின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. திருநாவுக்கரசுவிற்கு போன் செய்து சொல்ல.. அவரும் தங்கள் குடும்பத்திற்கு வரப்போகும் வாரிசை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார்..

 

அமிர்தவல்லி கலையரசியிடம் திருநாவுக்கரசு சொல்ல.. அமிர்தம் சந்தோஷப்பட்டாலும், அது பெண் குழந்தையாக இருக்க வேண்டுமே என வேண்டுதல் வைத்தார். கலையரசியோ அப்படியா என்றதுடன் நிறுத்தி கொண்டார்.. அவருக்கு இந்த வழியில் குழந்தை வருவது பிடிக்கவில்லை.. 

 

பத்து மாதமும் தவம் போல் மணிமேகலையும் திருச்செல்வமும் இருந்தார்கள்.. அவர்களின் ஒரு சிறு செயல் கூட குழந்தையைப் பற்றியே இருக்கும்..

 

திருச்செல்வத்தின் எண்ணம் முழுக்க குழந்தையே ஆக்கிரமித்து இருந்தாள்.. ஊருக்கு கூட ஒருமுறை தான் சென்று வந்தார்..

 

மணிமேகலையின் அத்தை மகனிற்கு உடம்பு சரியில்லாததால் அவர் மும்பையிலிருந்து வந்து விட்டார்.. அதனால் பெரும்பாலும் அத்தை சென்னையில் அவர்களின் அருகே குடியிருந்த மகனின் வீட்டில் இருப்பார்.. அவரின் மகனிற்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.. 

 

அவர்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது.. பிரசவ தேதிக்கு இரு நாட்கள் முன்பே மருத்துவமனையில் வர சொல்லிவிட.. திருச்செல்வம் மணிமேகலையின் அத்தை உதவியுடன் தேவையான பொருட்களுடன் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்..

 

மணிமேகலைக்கு வலி வந்துவிட்டது.. திருச்செல்வம் வெளியில் இருந்தார்.. திருநாவுக்கரசமும் வந்துவிட்டார்.. இருவரும் ஆவலாக நின்று கொண்டிருக்க.. நான்கு மணி நேரத்திற்கு பிறகு அந்த தளத்தையே ஓர் மழலையின் சத்தம் அதிர வைத்துக் கொண்டிருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!