Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அந்தி நேர உதயம் 7

 7

                   குட்மார்னிங் டாடி……….   படித்துக் கொண்டிருந்தை ஹிந்துவை சற்று  தழைத்தார் திவாகரன். எதிரே ரம்யா அன்றலர்ந்த மலராக கருநீல சல்வாரில் ஒளிர்ந்தாள்.

   குட்மார்னிங் ரம்யா…….திவாகரன் பேப்பரை மடித்து டீபாயில் வைத்தார்.



Advertisement

   இன்னிக்கு எதுவும் விஷேசமான ந்யூஸ் உண்டா டாடி?

   இல்லாமலா? உங்கம்மா உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காளாம். அதான் என்னைப்  பொறுத்தவரை இன்றைய சுவாரசியமான செய்தி.

   தந்தையின் கேலியில் மகள் முகம் சிவந்து சிணுங்கினாள்

Advertisement

   போங்கப்பா. உங்களுக்கு எப்பவுமே கேலி தான். இன்னிக்கு பேப்பர்ல என்ன ந்யூஸ்?  அதைச் சொல்லுங்க.

Advertisement

   விஷேசமா எதுவுமில்லேம்மா. மும்பையில மழை. பிரதமரோட நிவாரணப்பணி. அப்புறம்  ப்ரேம்குமாரோட விருது வழங்கும் விழா பற்றிய அறிவிப்பு. நீ கூட இன்று மாலை ஏதோ விழாவுக்குப் போகனும்னு சொல்லிட்டிருந்தியே. அது இந்த ப்ரேம்குமாரோட விழா தானே?

   ஆமாப்பா. வழக்கமா இந்த மாதிரி சினிமா விழாவுக்கெல்லாம் ராவ் சார் தான் போறது  ஆனால் ப்ரேம் பர்சனலா என்னை வரச் சொல்லியிருக்கறதால எடிட்டர் கிட்ட நான் போறதா  சொல்லி அனுமதி வாங்கிட்டேன்.

   ரம்யா………..

Advertisement

திவாகரன் தயக்கத்துடன் மகளை ஏறிட்டார்.

   ஆர் யூ இன்ட்ரெஸ்ட்ட் இன் ப்ரேம்?

   ரம்யாவின் முகத்தில் குழப்பக் கோடுகள்.

   உங்க கேள்வி எனக்கு புரியலேப்பா.

   நீ ப்ரேமைக் காதலிக்கிறாயானு கேட்டேன்மா.

   ரம்யாவின் விழிகள் இப்பொழுது வியப்பில் விரிந்தன.

   ப்ரேம் ஒரு நல்ல சினேகிதர். டாடி.அவ்வளவு தான்…….

அவள் குரலில் நிறையவே அழுத்தம்.

   அப்பாவிடம் அழுத்தமாகச் சொல்லிவிட்டாலும் மாலையில் ம்யூசிக் அகாடமியில் விழாவிற்குச்  செல்லும் வரை ரம்யாவை அவருடைய கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. அகாடமியில்  நிறைந்திருந்த கூட்டம் அவளை மேலே யோசிக்க விடாமல் முன்னே தள்ளியது .ஜனக்கடலில்   நீந்தி முன்னேறியவளை பின்னாலிருந்து வந்த குரலொன்று நிறுத்தியது.

   ஹாய் ரம்யா……….

ரம்யா திரும்பினாள் .அழைத்தது தீபா. அவர்கள் வீட்டு மாடியில்

குடியிருக்கும் நாராயணனின் கடைக்குட்டிப் பெண். பரம வைதிகரான நாணா என்று  செல்லமாய் அனைவராலும் அழைக்கப்படும்  நாராயணனின்  மகள் ஒரு சினிமா நடிகனின்  விழாவிற்கு வந்திருப்பதில் ரம்யாவிற்கு எந்த ஆச்சரியமும்  இல்லை .ஏனெனில் தீபாவை அவள் நன்கறிவாள்.

   ஏய் வாலு……அப்பாவிடம் இன்னிக்கு என்ன பொய் சொல்லிட்டு வந்தே?  ரம்யா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

   உன்னுடன் டின்னர்க்கு போறதா சொன்னேன் ரம்யா. அப்பாவிற்குத் தான் உன் மீது அபார  நம்பிக்கையாச்சே. .உடனே சரினுட்டார்.

   அப்படி பொய் சொல்லியாவது ப்ரேமைப் பார்க்கனுமா? தப்பு தீபா.

   ஐயோ போதுமே. அட்வைஸ் வேண்டாம் ரம்யா. உன்னால் முடிந்தால் ஒரே ஒரு உதவி செய்.  என்னை ப்ரேம்குமாரிடம் அறிமுகப்படுத்தி விடு.  ப்ளீஸ் ப்ளீஸ்……ரம்யா.

   யூ மஸ்ட் பீ க்ரேஸி…….

   யா…….க்ரேஸி ஆஃப்டர் ப்ரேம்.

   பதினெட்டு வயதில் கண்களில் ஏகப்பட்ட கனவுகளுடன் இருக்கும் இந்த விளையாட்டுப் பெண்ணை சினிமா மோகம் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்று ஆச்சரியப்பட்ட  ரம்யா கூடவே தீபாவின் போக்கை எண்ணி கவலை கொண்டாள் நாராயணன் மாமாவிடம்  தீபாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி வைக்க வேண்டும்.

   ஆசாரமான கட்டுப்பாடான  குடும்பத்தில் பிறந்த தீபாவையே இந்த அளவிற்கு அலைக்கழிக்க முடிகிறதென்றால்……

           ப்ரேம்……………….யூ மஸ்ட் பீ ரியலி த்ரெட்டனிங்……..

   எந்த ஒரு விஷயமும் அதை அறியாதவரை தான் பிரமிப்பும் ஆச்சரியமும். ஆராய்ந்து அறிந்து விட்டாலோ, பூ இவ்வளவு தானா என்ற தெளிவும் மனப்பக்குவமும் வந்து விடும்.

   ரம்யாவும் தீபாவின் ப்ரேம் மயக்கத்தை தெளிவிக்க விரும்பினாள். அறிமுகப்படுத்தி வைத்தால் ப்ரேம்குமாரும் ஒரு சாதாரண மனிதன் தான் என்ற உண்மை புரிந்து தீபா பக்குவப்படுவாள்  என்று எண்ணித் தான் அன்று அவளை ப்ரேமிற்கு ரம்யா அறிமுகப்படுத்தி வைத்தாள்

   ஆனால் விதி வேறு மாதிரி நினைத்தால், அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

           அன்று விழா முடிந்து சோழா ரெஸ்டாரண்ட்டில் பாதாம்கீரை உறிஞ்சிக்  கொண்டிருக்கையில் தீபாவின் ஆட்டோகிராப் புத்தகத்தை ரம்யா நீட்ட அதைக் கை நீட்டி  வாங்கிய ப்ரேம் சிரித்தான்.

           என் செய்தியை நான் எழுதத் துடிப்பது

           உன் இதயத்தில்

           நீ ஏன் அறிந்தும் அறியாதவள் போல்

           ஆட்டோகிராப்பை நீட்டுகிறாய்?

   கவிதையா?………ரம்யா சிரித்தாள்…….

   ஆனால் சமயங்களில் நீங்க உண்மையைப் பேசறிங்களா இல்லே விளையாட்டா  பேசறிங்களானு  புரிய மாட்டேங்குது ப்ரேம்.

   இப்போ நான் சொன்னது நூறு சதம் நிஜம் ரம்யா……..

.அவசரமாகச் சொன்ன ப்ரேமை  சற்றே யோசனையுடன் வெறித்தாள் ரம்யா .காலையில் அப்பா கேட்ட கேள்வி தப்பில்லை என்பது போல் இவன் பேசுகிறானே என்று மெலிதாக பயம் வந்தது. அவன் மனதில் இருப்பதை முளையிலேயே கிள்ளி எறியும் ஆவலில் ரம்யா யோசிக்க ப்ரேம் புத்தகத்தைப்

புரட்டினான்.

   தீபா……யார் ரம்யா இது? சற்று முன் ம்யூசிக் அகாடமியில் அறிமுகப்படுத்தினாயே அந்தப்  பெண்ணா?

   ம்…….உங்களுடைய தீவிர விசிறி. அதெப்படி ப்ரேம் எல்லாரையும் இந்த அளவிற்கு மயக்கி  வெச்சிருக்கிங்க?

   ப்ச்சு எல்லாரும் மயங்கி என்ன பிரயோஜனம்? உண்மையில் மயங்க வேண்டியவங்க  இன்னும் மயங்கலையே

   என்ன தான் பேச்சை மாற்றினாலும் ப்ரேம் தன்மனதையே பல வழிகளில்   வெளிப்படுத்தினான் இன்னும் அதிக அழுத்தத்துடன்.

   கடவுளே……..இவனுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பேன்? என் மனதில் வேர்கூட விடாத  ஒன்று இவன் மனதில் விருட்சமாக கிளை  பரப்பியிருக்கிறதே. இதை எப்படி வெட்டி. .எறிவது? ……….

ரம்யா பதட்டத்துடன் யோசிக்கத் தொடங்கினாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!