Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 28

 

அம்மையப்பன் 28

 

திருநாவுக்காரசும் நாகநாதனும் அவர்களின் பங்கிற்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்து, அதியை தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தனர்..



Advertisement

 

நம்ம பொண்ணு ரொம்ப சமத்து தெரியுமா பவளம்.. ரொம்ப புத்திசாலியும் கூட.. அவ்வளவு சீக்கிரம் எந்த விஷயத்தையும் மறக்க மாட்டா.. ரொம்ப கோபக்காரி.. என சிரிப்புடன் அதியை பற்றி கூற.. பவளத்தின் விழிகளில் ஹாலில் மாட்டியிருக்கும் ஐந்து வயது அதியின் புகைப்படம் தோன்றியது..

 

Advertisement

அவர் சொல்ல சொல்ல அவளும் அதியின் நினைவுகளில் மூழ்க தொடங்கினாள்.. கணவர் சொல்வதை மனதால் பார்த்தார்.. அதில் அதி தன் வயிற்றில் பிறக்கவில்லையே என ஏக்கம் பவளத்துக்கு வந்தது.. 

Advertisement

 

மதுவோட அஞ்சு வயசு வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்சு பவளம்.. உன்கிட்ட உண்மை சொல்ல முடியாத வருத்தத்தை தவிர்த்து நானும் கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்.. அப்போதான் அமிர்தம் அண்ணி கர்ப்பம் ஆனாங்க.. விதி கலையரசி மூலமா மறுபடியும் என் வாழ்க்கையில விளையாடிருச்சு.. கலையரசியோட ஆங்காரத்துக்கு நானும் என் மகளும் பலியாகிட்டோம் பவளம்..

 

Advertisement

நானே என் பொண்ண என்கூட பேசாதன்னு சொன்னேன் பவளம்.. என்னைவிட்டு போக சொன்னேன்.. என் மக அழுக அழுக அவளை மணிமேகலை கையில கொடுத்துட்டு திரும்பி பாக்காம வந்தேன் பவளம்.. அன்னைக்கு என் மக கதறுன கதறல் இருக்கே.. நான் பாவி பவளம் என தலையில் அடித்து கொண்டு திருச்செல்வம் கதறியழுக.. பவளம் துடித்து போனார்..

 

மாமா.. மாமா.. வேண்டாம் மாமா.. விடுங்க என பவளம் அவரை தடுக்க முயன்று கொண்டிருந்தாள்..

 

என்னால முடியல பவளம்.. அன்னைக்கு என் பொண்ணு என்னை பார்த்த பார்வை.. நான் உங்களுக்கு வேணாமாப்பா.. என்னை பிடிக்கலையான்னு அவ அழுதுகிட்டே கேட்டதுதான் இப்போ வரைக்கும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு பவளம்.. என அவர் அங்கு நடந்ததையெல்லாம் சொல்லி சொல்லி அழ.. பவளத்தின் மனது அதியை நினைத்து வேதனை அடைந்தது..

 

தந்தை திடீரென தன்னை வேறொரு இடம் விட்டு செல்வதையும்.. அவர் தன்னை பார்க்காதே பேசாதே என்றும் சொன்னால்.. ஐந்து வயது பெண் குழந்தையின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.. அவள் எப்படியெல்லாம் துடித்தாளோ என அதியின் இடத்திலிருந்து யோசித்த பவளத்திற்க்கு மனதே ஆறவில்லை..

 

பவளம், அதியை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.. அவளின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க எண்ணினார்.. பல வருடங்களுக்கு முன்பு பிரிந்த தந்தையையும் மகளையும் இணை சேர்க்க விரும்பினார் பவளம்..

 

மாமா கவலைப்படாதீங்க.. நம்ம மவ கண்டிப்பா உங்கள புரிஞ்சுப்பா.. மறுபடியும் அவ உங்க மேல பாசமா இருப்பா.. மாமா.. என பவளம் அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்..

 

*********************************

 

மறுநாள் வீடே சோம்பலாக இருந்தது.. வீட்டின் பெரியவர்களும் இளையவர்களும் பவளத்தை எண்ணி கவலையில் இருந்தனர்..

 

அமுதன் முகம் இறுகி போய் இருந்தான்.. அவனை நெருங்கவே குழலி பயந்தாள்..

 

அமுதனுக்கு தந்தையை விட தாய்தான் அதிக பிடித்தம்.. வீட்டில் உள்ள யாரையும் கடிந்து ஒரு வார்த்தை பேசமாட்டார்.. பிள்ளைகள் நால்வருக்கும் பாரபட்சம் பார்க்காது அன்பை காட்டுவார்.. அனைவரும் பாசத்தை பொழிவதால் பவளம் மட்டும் இளையவர்களிடம் கண்டிப்பு கலந்த அன்பை காட்டுவார்.. அதனாலேயே அமுதனால் தாயின் செயலை சற்றும் ஏற்று கொள்ள முடியவில்லை.. 

 

பவளம் திருச்செல்வத்தை தவிர்த்து அனைவரும் கூடத்தில் இருந்தார்கள்.. அமிர்தம் தவிப்பும் கவலையுமாக தன் மகனை பார்த்தார்.. ஆனால் அவன் சற்றும் அவரை கண்டுகொள்ளாமல் இருக்க.. அமிர்தம் அவனை நெருங்கினார்..

 

அமுதா ஏன்டா இப்படி இருக்க.. உனக்கு என் மேல கோபம் வந்தா திட்டுடா, சத்தம் போடு.. அத விட்டுட்டு இப்படி என் முகத்தை பார்க்காம பேசாம இருக்காதடா என்னால தாங்கிக்க முடியல.. என அவன் கரத்தை பிடித்து கெஞ்ச.. அவன் சற்றும் இளக வில்லை..

 

டேய் உனக்காகத்தான்டா நான் இவ்வளவும் பண்ணேன்.. இந்த வீட்டுக்கு வாரிசு வேணும்னு தாண்டா பண்ணேன்.. என்ற அமிர்தவல்லி கலையரசியோடு ஜோசியம் பார்க்க சென்றதையும் அங்கு அவர் கூறியதையும் சொல்லி அழ.. இளையவர்கள் அமிர்தத்தை திகைத்து பார்த்தனர்..

 

அகத்தியன் முகம் இறுக அங்கு ஓரத்தில் அமர்ந்து அனைத்தையும் கேட்டு கொண்டுதான் இருந்தான்.. ஒருவார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை.. இன்னும் பல விஷயங்கள் ஒவ்வொருவர் மனதிலும் புதைந்திருக்கிறது என அவனுக்கு புரிந்தது.. அதனால் முதலில் அனைத்தையும் கிரகிக்க விரும்பினான்.. 

 

ம்மா ஒரு ஜோசியக்கார சொன்னத நம்பியாம்மா இவ்வளவு செஞ்சீங்க என வேதனையோடு அமுதன் கேட்டான்.. அவனால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. 

 

ஆமாண்டா அவர் சொல்லித்தான் செஞ்சேன்.. ஆனா அவர் சொன்னது அத்தனையும் உண்மைதானே.. அவர் சொன்ன மாதிரி தானே இதுவரைக்கும் நடந்துட்டு இருக்கு.. நாங்க மட்டும் அப்போ உங்க சித்தப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்காம இருந்திருந்தா இன்னைக்கு நீயும் இல்ல உன் தங்கச்சிகளும் இல்ல.. என அமிர்தவல்லி கோபமாக கத்தினார்..

 

ரொம்ப நல்லதுக்கா.. இப்ப வரைக்கும் நீ உன்னோட தப்ப உணரவே இல்லை.. என்றவாறு பவளம் அங்கு வந்தார்..

 

தங்கையை கண்டு அமிர்தத்தின் மனம் சற்று குற்ற உணர்வு கொண்டாலும்.. சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டார்..

 

பவளம் இப்பவும் சொல்றேன் நான் செஞ்சது என்னை பொறுத்தவரைக்கும் சரிதான்.. என அழுத்தமாக சொன்னார்..

 

கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு இன்னும் பிள்ளையில்லையான்னு எவ்வளவு பேர் கேட்ருப்பாங்க.. என்னதான் நாம ஜமீன் குடும்பமா இருந்தாலும் நம்ம முதுகுக்கு பின்னாடி நம்ம ரெண்டு பேரையும் மலடின்னு தான் எல்லாரும் சொன்னாங்க.. அதை எல்லாம் மறந்துட்டியா.. என கேட்டார்..

 

என்னோட சுயநலம் தான் பெருசுன்னு நான் நினைச்சிருந்தா.. இன்னைக்கு நீ திருவோட மனைவியா இருந்திருக்க முடியாது.. பவளம்..

 

அப்படியே நடந்திருந்தாலும் ரெண்டாவது பொண்டாட்டியா இருந்துருப்ப.. வாரிசுக்காக கண்டிப்பா நம்ம வீட்டு பெரியவங்க திருவுக்கு இன்னொரு பொண்ணை கட்டி வச்சுருப்பாங்க..

 

ஆனா நானும் கலையும் உனக்காக யோசிச்சு.. யாருக்கும் தெரியாம இந்த விஷயத்தை முடிக்கலாம்ன்னு பாத்தோம்.. என அமிர்தவல்லி தன் நிலையை சொன்னார்..

 

என் மூத்த மக அதி, அவளை ஏன் என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சிங்க.. உங்களுக்கு தேவையான குழந்தை பிறந்துடுச்சுல.. அப்பொறம் ஏன் அவரு என்கிட்ட உண்மையை சொல்ல வரும் போதெல்லாம் தடுத்தீங்க.. என் கிட்ட அவருக்கு ரெண்டு தாரம்.. அவங்க மூலமாத்தான் குழந்தை வரும்.. அதுக்கு சில பரிகாரம் இருக்கு அத செஞ்சா எல்லாம் சரியாயிடும் உனக்கும் சில வருஷங்கள்ல குழந்தை பிறக்கும்ன்னு, ஏன் என் மனச குழப்புனீங்க என ஆதங்கமாகவும் கோபமாகவும் கேட்டார் பவளம்..

 

அதில் வீட்டின் பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர்.. ஏனெனில் இது அவர்களுக்கும் தெரியாத விஷயம்..

 

என்ன சொல்ற பவளம் என திருநாவுக்கரசு தன் மனைவியை முறைத்தவாறு கேட்டார்.. அதில் அமிர்தவல்லியின் தேகம் சற்று நடுங்க தொடங்கியது..

 

ஆமா மாமா, என் புருஷனுக்கு ரெண்டு தாரம் இருக்கு.. எனக்கு குழந்தை பிறக்க சில வருஷங்கள் ஆகும்.. அவருக்கு குழந்தை சீக்கிரம் பிறந்தா, உங்களுக்கும் சீக்கிரம் பிறக்கும்னு ஏதோ ஜோசியகாரன் உங்க அப்பத்தாகிட்ட (நாகநாதனின் அம்மா) சொன்னாங்களாம்.. அதனால அவங்க மாமாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசிகிட்டு இருந்ததா அக்காவும் கலையரசியும் தான் என்கிட்ட வந்து சொன்னாங்க.. என அவர்களின் துரோகத்தை நினைத்து கதறியவாறு சொன்னார் பவளம்..

 

கலையரசி என்கிட்ட வந்து இதுக்கு சில பரிகாரம் இருக்கு.. இதை நீ பண்ணு நான் அப்பத்தா கிட்ட பேசி இன்னொரு கண்ணாலம் எல்லாம் வேணாம்னு சொல்றேன்னு சொன்னா.. அதனாலதான் நானும் அக்னி சட்டி எடுக்குறது, ஒரு மாசம் விரதம் இருக்கிறதுன்னு எல்லாம் பண்ணேன்.. ஆனா மாமா என்கிட்ட உண்மையை சொல்ல கூடாதுந்தான் இதெல்லாம் பண்ணியிருக்காங்கனு இப்போதான் புரியுது.. என தன் தமக்கையை பார்த்து வெறுப்பாக கூறினார்.. பவளம்..

 

அமிர்தம் என்ன இது..? நீயும் கலையரசியும் தான் இப்படி செய்ய சொன்னீங்களா என கோபமாக திருநாவுக்கரசு கேட்க அமிர்தவல்லி நடுங்கினார்..

 

நான் அப்படி சொல்லல மாமா கலையரசி தான் எனக்கு தெரியாம அத சொல்லி இருக்கா என அவர் அமிர்தம் போட்டுடைத்தார்..

 

நீயும் அவளும் சேர்ந்து இன்னும் என்னல்லாம் பண்ணியிருக்கீங்கடி என மரகதம் கோபமாக கேட்க.. அமிர்தவல்லி தலை குனிந்தார்..

 

பல வருடங்களுக்கு முன்பு, அமிர்தவல்லிக்கு பிள்ளை இல்லை என்ற ஒன்றுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.. வீட்டில் உள்ளவர்கள் ஒரு சொல் சொல்லவில்லை என்றாலும் திருநாவுக்கரசுவின் அப்பத்தாவும் மற்ற சொந்தங்களும் அவரை மனதளவில் மிகவும் புண்படுத்திக் கொண்டு இருந்தனர்.. பதினெட்டு வயதான அவருக்கு அவ்வளவாக பக்குவமும் இல்லை..

 

அதனால் கோவில் குளம் என சுற்றிகொண்டிருந்தவரை கலையரசி தான் ஜோதிடம் பார்க்க அழைத்து சென்றார்..

 

அங்கு அவர் வேறு ஒரு குண்டை தூக்கி போட அமிர்தம் மனதளவில் உடைந்து விட்டார்.. எப்படியாவது குழந்தை வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக பதிந்து போனது.. 

 

கலையரசி, அமிர்தத்தை தேற்றி அனைத்தையும் பார்த்துக் கொள்வதாய் அவருக்கு நம்பிக்கை கொடுத்தார்.. வீட்டு பெரியவர்களிடம் இதனை சொல்ல வேண்டாம் என கலையரசி தான் அமிர்தத்திடம் கூறினார்..

 

இவர்கள் இருவரும் மட்டும் ஒரு வாரம் அலசி ஆராய்ந்து திருச்செல்வத்திற்கும் இன்னொரு பெண்ணிற்கும் திருமணம் செய்து வைப்பது என முடிவெடுத்தனர்.. 

 

ஆனால் அது ஒரு பரிகாரமாக மட்டும் இருக்கவே அவர்கள் தீர்மானித்தனர்.. அந்த ராசி நட்சத்திரம் உடைய பெண்ணை கண்டுபிடித்து திருச்செல்வத்திற்கு திருமணம் செய்து வைத்து, பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்ததும்.. அப்பெண்ணுக்கு தேவையான பணமும் கொடுத்து, முடிந்தால் வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, திருச்செல்வத்தின் வாழ்க்கையிலிருந்து அவளை விலக்கி வைக்க முடிவு செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.. அதோடு விஷயத்தை பவளத்திடம் கூற வேண்டாம் எனவும் அவர்கள் முடிவெடுத்தனர்..

 

கலையரசி தான் மணிமேகலையை கண்டுபிடித்தார்.. 

 

அவர்களின் திட்டத்தின் முதல் படியாக முதலில் திருநாவுக்கரசுவிடம் விஷயத்தை கூறி அவன் சம்மதத்துடன் திருவை சம்மதிக்க வைக்க முடிவெடுத்தனர்..  ஆனால் திருநாவுக்கரசு சம்மதிக்கவில்லை.. அவருக்கு ஜாதகம் சாமி இதன் மேல் நம்பிக்கை இருந்தாலும், இப்படி ஒரு விஷயத்தை அவரால் செய்ய முடியவில்லை.. கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு அமைதியாக இருக்கலாம் என அவர் கூற.. மனைவி அதற்கு சம்மதிக்கவில்லை

 

திருச்செல்வம் பவளம் இருவரின் அன்பும் திருநாவுக்கரசு அமிர்தம் என இருவருக்கும் தெரியும்.. ஆனால் பவளத்தை விட குழந்தை அப்பொழுது அமிர்தத்திற்கு முக்கியமாக தெரிந்தது

 

ஒரு வாரம் கணவனிடம் போராடி பார்த்த அமிர்தவல்லி அவர் வயலில் இருக்கும் போதே.. அமிர்தவல்லி கலையரசி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு தற்கொலை நாடகத்தை ஆடினர்.. அமிர்தம் தண்ணீரில் குதித்தது உண்மைதான், ஆனால் ஜாக்கிரதையாகத்தான் இருந்தார்.. பாதி படிகளில் நின்று தான் தண்ணீரில் குதித்தார்.. புடவையில் தீபற்றியதும் அப்படித்தான்.. அதனை எல்லாம் நினைத்து பார்த்த அமிர்தம் எதுவும் பேசவில்லை..

 

போதும் இனி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல மாமா.. இனி நடக்க வேண்டியதை பாக்கலாம்.. என்றார் பவளம்..

 

அதோடு, அதி எங்களோட மூத்த பொண்ணு.. இந்த வீட்டோட மூத்த வாரிசு.. உங்களோட சுயநலத்தால முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டது என் மக அதி மட்டும்தான்..

 

அதி அவளோட குழந்தை பருவத்தை இழந்திருக்கா.. விவரம் புரிய ஆரம்பிக்குற வயசுல தன் அப்பாவை பிரிஞ்சி புது இடத்துல பொருந்த முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா.. அவளோட கோபத்துல நியாயம் இருக்கு.. அவ மனசுல உள்ள கோபம் குறையற வரை நாம பொறுத்திருந்து தான் ஆகணும்.. என பவளம் சொல்ல.. பெரியவர்கள் அனைவரும் ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தனர்..

 

ஆனால் அமிர்தம் மற்றும் யாழினிக்கு இதில் உடன்பாடு இல்லை.. அவர்கள் இருவருக்கும் அதியை சுத்தமாக பிடிக்கவில்லை.. அதுவும் யாழினிக்கு அதியை நினைத்தாலே தேகம் முழுதும் பற்றி எரிந்தது.. அவளை அக்கா என ஒருநாளும் அவளால் ஏற்று கொள்ள முடியாது..

 

அமிர்தவல்லிக்கோ அதியின் ஆங்காரத்தையும் கோபத்தையும் நினைத்து உடல் நடுங்கியது.. அதுவும் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த அவள் மகனை அதி அடித்ததை நினைத்தால் கோபம் பன்மடங்காக வந்தது.. ஆனால் இருவருக்கும் இப்பொழுது பேச முடியாத சூழ்நிலை.. அதனால் கலையரசியின் வரவிற்காக காத்திருந்தார்கள்.. அவரால் தான் அதியை ஏதாவது செய்ய முடியும் என நம்பினார்கள்.. ஐயோ பாவம்..

 

*******************************

 

இருநாட்கள் முடிந்துவிட்டது.. இன்று அதி வரும் நாள்.. வீட்டினர் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள்..

 

சுவற்றில் அதியின் குழந்தை பருவ புகைப்படங்கள் யாவும் வரிசையாக மாட்டினார் திருச்செல்வம்.. ஒவ்வொரு போட்டோவிலும் பார்ப்பவர்கள் மயங்கும் வண்ணம் இருந்தாள் அதி.. திருச்செல்வம் கூடத்திற்கு வரும் போதெல்லாம் இதனை ஒரு நிமிடம் நின்று ரசிக்காமல் சென்றதில்லை.. அதனை அமுதன் குழலி ஷாலினி மூவரும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள்…

 

இளையவாரிசுகளில் ஷாலினி மட்டும் தன் தமக்கையை காண ஆவலாக இருந்தாள்..

 

ம்மா.. காலையில இருந்து தம்பிய பாக்கலையே.. தோப்புக்கு ஏதும் போயிருக்கானா என அகத்தியனை பற்றி கேட்டார் பவளம்..

 

இல்லையே கண்ணு.. நானும் அவன பாக்கலையே என்றார் வேதவல்லி..

 

குழலி உன்ற ஐயன பார்த்த..

 

இல்லீங் அத்த.. நானும் அவரைத்தான் தேடிட்டு இருக்கேன் என வருத்தமும் கவலையுமாக குழலி சொல்ல.. அனைவரும் அகத்தியன் எங்கு சென்றிருப்பான் என யோசிக்கும் வேளை.. அவனின் கார் மாளிகைக்குள் நுழைந்தது..

 

இதோ மாமா வந்துட்டாரு.. என ஷாலினி சொல்லவும் அனைவரின் கவனமும் வாயிலுக்கு சென்றது..

 

அகத்தியன் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கியவன்.. மறுபக்கம் வந்து கதவை திறக்க.. பச்சை நிற பட்டுபுடவையில் வைர நகைகள் அணிந்து.. கை நிறைய வளையல்களுடன்.. பாதி முதுகு வரையிலான கூந்தலை பின்னி அதில் மல்லிப்பூ சரம் வைத்து.. கழுத்தில் மஞ்சள் தாலியும் நெற்றியில் குங்குமமாய்.. அமைதியே உருவாய் அதிமதுராந்தகியம்மை இறங்கினாள்.. 

 

அம்மையப்பன் குடும்பத்தினர் அனைவரும் ஆ வென வாய் பிளந்து நின்றார்கள்..

 

அடுத்து வந்து என்ன செய்வாளோ.. ஏது செய்வாளோ என உள்ளுக்குள் ஒரு பதட்டத்துடனேயே இருந்தவர்களுக்கு, அதியின் இப்படியொரு பரிணாமம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது..

 

அம்மா ஆரத்தி எடுங்க.. என அகத்தியன் சொல்லவும் தான் அனைவரும் தன்னிலை வந்தனர்..

 

வேதவல்லி வேகமாய் ஆரத்தி கரைக்க ஓட, பவளமும் அவர் பின்னாடி சென்றார்..

 

பவளமும் வேதவல்லியும் சேர்ந்து ஆரத்தி எடுத்தனர்..

 

இருவரும் ஒன்றாய் உள்ளே நுழைந்து.. அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.. 

 

என்னாச்சு உங்களுக்கெல்லாம்.. ஏன் இப்படியே நிக்குறீங்க.. அம்மா அடுத்தடுத்த சம்பிரதாயம் எல்லாம் செய்யணும்ல என அகத்தியன் அனைவரின் நிலை புரிந்தும் கேள்வி கேட்டான்..

 

அடியே அதான் என்ற பேரன் சொல்லுறான்ல.. உன்ற மருமவள கூட்டிட்டு போயி விளக்கேத்த வையி என பேச்சியம்மை வேதவல்லியை முடுக்கி விட்டார்..

 

வேதவல்லி அதியை பதட்டத்துடன் பார்க்க.. ம்மா அதான் அப்பத்தா சொல்றாங்கல்ல உங்க மருமகளை கூட்டிட்டு போங்க.. என அகத்தியன் சொல்ல.. வேதவல்லி மெல்ல அதியின் கரத்தை பற்றி வாம்மா.. என மெல்லிய குரலில் கூப்பிட்டவர்.. நீயும் வாய்யா.. என அகத்தியனையும் எதற்கும் இருக்கட்டும் என தன் துணைக்கு அழைத்தார்..

 

வேதவல்லி அதி விளக்கு ஏற்றுவதற்கு ஏற்ப.. திரியை தூண்டி விட்டு.. அவளிடம் தீப்பெட்டியை நீட்ட.. அதி விளக்கேற்றினாள்.. பூஜையறையிருந்து வெளியேறியதும்.. அப்பாறு அப்பத்தா இங்க வாங்க என அவர்களை அழைத்த அகத்தியன்.. அதியின் கரத்தை பற்றியவாறு இருவரின் காலிலும் விழ.. குடும்பத்தினரின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை..

 

அம்மையப்பன் பேச்சியம்மை தம்பதியர் மட்டும் இல்லாது.. சிவநேசன் வேதவல்லி.. பவளம் திருச்செல்வம்.. அமிர்தம் திருநாவுக்கரசு என அனைவரின் காலிலும், அதி அகத்தியன் இருவரும் தம்பதி சமேதிரராய் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்..

 

அதி எவ்வித மறுப்பும் இன்றி அனைவரின் காலிலும் விழுந்தாள்.. அடுத்து பால் பழம் கொடுக்கும் சம்பிரதாயமும் நல்லபடியாக நடந்தது..

 

திருமணத்தின் போதுகூட யாரின் காலிலும் விழாமல் அலட்சியமாக இருந்தவள் எப்படி இப்படி மாறினாள்..? அதியின் மாற்றத்திற்க்கு என்ன காரணமாக இருக்கும்..? அகத்தியன் சொல்வதையெல்லாம் ஏன் அதி கேட்கிறாள்..? அகத்தியனுக்கும் அவளுக்கும் இடையில் என்னதான் நடந்திருக்கும்..?? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!