அம்மையப்பன் 31
அம்மையப்பன் 31
அம்மையப்பன் தன் அசைவு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடிக்கொண்டே புத்தகம் படித்து கொண்டிருந்தார்..
Advertisement
அப்பொழுது அவரின் அருகே அமர்ந்த பேச்சியம்மை.. நீங் ஏற்கனவே அந்த ராங்கிய பார்த்துருக்கீங்களா மாமா.. என மெல்ல கேட்க. அம்மையப்பன் புத்தகத்தை வைத்துவிட்டு தன் மனைவியை பார்த்தார்..
ஷாலினி நம்ம மவள மாதிரி இருக்குறதால நீங் அதிக செல்லம் கொடுக்குறீங்ன்னு பவளம் சொல்லும் போதெல்லாம் உங்க முகம் மாறும்.. இப்போ கூட ராங்கிய மொத தடவை பாக்கும் போது அவ்வளவா நீங் அதிர்ச்சியாகல.. அதான் கேட்குறேங் மாமா.. என மெல்லிய குரலில் பேச்சியம்மை கேட்டார்..
Advertisement
Advertisement
அம்மையப்பன் பதில் ஏதும் கூறாமல் பெருமூச்சு ஒன்றை விட்டார்.. உண்மைதான் கண்ணு நம்மட பேத்திய நான் ஏற்கனவே பார்த்தேன்.. பார்த்த உடனே என்னோட உசுரு என்கிட்ட இல்ல அம்மணி.. அப்படியே நம்ம மவள உரிச்சி வெச்சு பொறந்திருக்கா..
நம்மட பேத்திய மட்டும் இல்ல அவங்க அம்மை அவர்களோட பிள்ளைகள்ன்னு எல்லாரையும் பார்த்தேன்..
Advertisement
ஒரு வருஷம் முன்னாடி ஒன்ற தங்கச்சி மவ வீட்டு பேத்தி கண்ணாலத்துக்கு சென்னை போயிருந்தோம் இல்ல அப்ப தான் நம்மட பேத்திய பார்த்தேன்.. என்று சொல்லிக் கொண்டு இருந்தவரின் நினைவுகள் அதியை சந்தித்த பொழுதை நோக்கி சென்றது..
சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலிற்கு அகத்தியன், அம்மையப்பன், மரகதம் மற்றும் மற்ற இளையவர்கள் அனைவரும் வந்திருந்தனர்..
ஏன்யா நம்ம காம்ப்ளக்ஸ்ஸ விட இது கொஞ்சம் பெருசா இருக்குல்ல என அம்மையப்பன் வியந்து கூறினார்..
அப்பாறு நீங்க என்ன சொல்றீங்க.. நம்ப மால்ல விட இது கொஞ்சம் சுமாரா இருக்கு.. எனக் குழலி மறுக்க அமுதன் அவளை பொய்யாக முறைத்தான்..
அடியே மனசாட்சி கெட்டவளே, இதை பார்த்தா சுமாருன்னு சொல்ற.. நல்லா முட்டை கண்ணை விரிச்சு பாருடி.. எவ்வளவு பெருசா பிரம்மாண்டமா இருக்கு.. என அமுதன் அவளை கேலி செய்ய குழலி முகத்தை திருப்பினாள்..
இங்க வந்தும் ஆரம்பிச்சிட்டீங்களா.. ரெண்டு பேரும் அமைதியா வாங்க என மரகதம் திட்டவும்.. அமைதியாக நடந்தனர்..
உண்மையில் மால் மிகவும் பிரம்மாண்டமாய் வித்தியாசமாகத்தான் இருந்தது..
அண்ணே மால் மட்டும் இல்ல பேரும் வித்தியாசமா தான் இருக்கு.. ப்ளூ பீனிக்ஸ்.. என ஷாலினி கூறினாள்..
அச்சோ போதும் வாங் படம் ஆரம்பிச்சுட போகுது என யாழினி கூற அனைவரும் திரையரங்கம் பகுதிக்கு சென்றனர்..
நீங் எல்லாரும் போங்க சாமி.. நான் இங்க உள்ள புத்தக கடையில உட்கார்ந்துருக்கேன்..
ஏங்கய்யா நீங்களும் வாங்க என மரகதம் கூற அம்மையப்பன் மறுத்துவிட்டார்..
இல்ல கண்ணு என்னால ரெண்டு மூனு மணி நேரம் எல்லாம் அந்த சவுண்டுக்குள்ள இருக்க முடியாது தலை வலிச்சிரும். நான் வரலைன்னு சொன்னா நீங்களும் போக மாட்டீங்களா அதான் வந்தேன்..
நான் இந்த கடையில இருந்து புத்தகம் படிச்சிட்டு இருக்கேன் சாமி.. எனக்கு நேரம் போறதே தெரியாது.. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க என அம்மையப்பன் முடிவாக கூறவும், ஓட்டுநரை அழைத்து அவருக்கு துணைக்கு வைத்துவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர்..
ஒருமணி நேரம் கழித்து.. அருகே கேட்ட சத்தத்தில் புத்தகத்திலிருந்து பார்வையை உயர்த்தி சத்தம் வந்த திசையை பார்த்தார்.. அம்மையப்பன்..
என்னப்பா அங்க என்ன பிரச்சனை..
என்னன்னு தெரியலிங்கையா.. பாத்துட்டு வாரேங் என சென்றவர் சற்று நேரத்திலேயே திரும்பி வந்தார்..
ஐயா ஏதோ மினிஸ்டர் வீட்டு பிள்ளையாம் அங்க ஒரு பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க.. மினிஸ்டர் வீட்டு பிள்ளைங்கிறதால.. அவன் கிட்ட பேசவே எல்லாரும் பயந்துட்டு இருக்காங்க..
என்றா அநியாயமா இருக்கு.. வாடா போய் பாக்கலாம்.. அவன் யார் வீட்டு பிள்ளையா இருந்தா என்ன என கோபத்துடன் அங்கே சென்றவர்.. அப்பொழுது தான் அங்கு வந்த ஓர் நடுத்தர வயது பெண்மணியை கண்டு திகைத்தார்..
மது என்ன ஆச்சுடா..
மம்மி இந்த பொறுக்கி ராஸ்கல் என்ன பாத்து தப்பு தப்பா கமெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கான்.. என மதுமித்ரா அழுகை குரலில் கூறவும் மணிமேகலை கோபமாய் அவனை பார்த்தார்..
பாருடா மேடம் தான் இந்த அழகியோட அம்மாவாம்.. ஆனா பார்த்தா சும்மா சிக்குன்னு சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க.. கட்டனவன் கொடுத்து வச்சவன்தான் என மேலும் அசிங்கமாய் பேசி கிண்டல் செய்ய.. அப்பொழுது தான் அங்கு வந்த மித்ரன் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்..
டேய் நான் யாருன்னு தெரியுமா மினிஸ்டர் செல்லதுரையோட பையன்.. என் மேலவா கைய வைக்குற.. இப்போ உன்ன என்ன செய்றேன்னு பாரு.. டேய் அவனை பிடிங்கடா என அவன் நண்பர்களுக்கு கட்டளையிட அவர்களும் அவனை பிடித்தனர்..
தடுக்க முயன்ற மணிமேகலையையும் மதுவையும் இருவர் பிடித்து கொண்டனர்..
ஏன்டா நான் சும்மா பேசினதுக்கே ஓவரா துள்ளுன.. இப்போ உன் அம்மா தங்கச்சி மேல கை வைக்க போறேன்.. இப்ப என்னடா பண்ணுவ அவன் முகத்தின் அருகே வக்கிரமாக கேட்டவன், மணிமேகலையின் அருகே சென்று அவர் மீது கைவைக்கும் நொடி,
தன் திகைப்பிலிருந்து மீண்ட அம்மையப்பன் அவர்கள் அருகே நெருங்கும் பொழுது, ஆஆ வென சத்தத்துடன் கீழே விழுந்து அலறினான் மினிஸ்டர் மகன்..
அவன் கரங்களில்ருந்து செந்நிற குருதி வழிந்து கொண்டிருக்க.. அதனை பார்த்தவாறு மேலும் அலறி கொண்டிருந்தான் அவன்..
ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது..
அப்பொழுது ஹீல்ஸ் ஒலி எழுப்ப, பிளாக் ஜீன்ஸ், சீ ப்ளூ ஷார்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு கையில் துப்பாக்கியுடன் பெண் சிங்கம் போல் அதி வர, அனைவரும் பயத்துடன் அவளை பார்த்தனர்..
அம்மையப்பன் தன் மகளின் பிரதியாய் வந்து நின்ற அதியைக் கண்டு சிலையென நின்றுவிட்டார்.. அவரின் அணைத்து புலன்களும் செயல் இழந்துவிட்டது.
அவர் மட்டுமில்லாது மணிமேகலை மித்ரன் மது கூட அவளை திகைத்து பார்த்தார்கள்..
ஏய் யாருடி நீ உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்ப என் அப்பா யாருன்னு தெரியுமா என அவன் எகிறி கொண்டு அதியின் முன்னே வர.. அவளின் பின் நின்றிருந்த விஷ்ணு அவன் ஒரு அடி எடுத்து வைக்கும் போதே அவனின் வாயையும் முட்டியையும் உடைத்து அதியின் முன்னே மண்டியிட வைத்தான்..
அதில் அவனின் நண்பர்கள் அனைவரும் பயந்து பின்வாங்க.. மினிஸ்டரின் மகன் மட்டும் இன்னும் அடங்காது துள்ளிக் கொண்டிருந்தான்..
யாருன்னு தெரியாம மேல கை வச்சுட்ட இல்ல.. எங்க அப்பா கிட்ட சொல்லி உன்ன நாஸ்தியாக்காம விட மாட்டேன்டி எனவும்,
மெல்ல அவனின் அருகே சென்ற அதி, காயம்பட்ட இடத்தில் தன் ஹீல்ஸ் கால் கொண்டு நசுக்கவும், உயிர் போகும் வழியில் அலறித் துடித்துக் கொண்டிருந்தான் அக்கயவன்..
அதி விஷ்ணுவை ஒரு பார்வை பார்க்க அவன் மினிஸ்டர் செல்லதுரைக்கு போன் செய்து ஸ்பீக்கரில் வைத்தான்..
ஹலோ விஷ்ணு சார் சொல்லுங்க.. என மிகவும் பவ்வியமாக மினிஸ்டர் பீயேவின் குரல் ஒலித்தது..
மினிஸ்டர் கிட்ட போன் கொடு.. என்று மட்டும் அவன் சொல்ல..
ஹான் இதோ கொடுக்குறேன் சார் என அவன் அங்கே பதட்டத்துடன் செல்வது புரிந்து, மினிஸ்டரின் மகன் முதற்கொண்டு அனைவரும் பயமும் அதிர்வுமாய் அதியை பார்த்தனர்.
சார் விஷ்ணு சார் பேசுறார்..
ஹலோ சார்
உன் மகன் என் இடத்துக்கு வந்து என் ஆளுங்க மேலேயே கைவைக்க பார்த்துருக்கான்.. என அதியின் குரல் அழுத்தமும் அதிகாரமுமாய் ஒலிக்க.. மினிஸ்டர் நடுநடுங்கிவிட்டார்..
எங்கப்பன் பெரிய புடுங்கி உன்னை நாஸ்தியாக்கிடுவான்னு சொல்றான்.. *** என கெட்ட வார்த்தையில் திட்டியாவாரு அவனின் காயத்தில் ஹீல்ஸ்சால் பலமாக அழுத்த அவன் அலறினான்..
போனின் மறுமுனையில் இருந்த மினிஸ்டர்க்கு நாக்கு உலர்ந்து விட்டது.. எச்சில் விழுங்கி மிகுந்த நடுக்கத்துடன் மேடம் என அவர் அழைக்க.. மேலும் ஹீல்ஸை அழுத்தினாள் அதி..
ஆஆ ஆஆ அப்பா காப்பாத்துங்கப்பா.. வலிக்குதுப்பா.. அப்பா என கண்ணீர் விட்டு கதறிகொண்டிருந்தான்.. மகன்..
மேடம் அவன் என்னோட ஒரே ஆண்வாரிசு.. தயவுசெஞ்சு அவன் உயிரை மட்டும் விட்டுடுங்க.. என நடுக்கத்துடன் மினிஸ்டர் கெஞ்ச அவரின் மகன் அதிர்ந்து விட்டான்..
அதி விஷ்ணுவை பார்க்க.. அவன் போனை கட் செய்துவிட்டான்.
உங்கொப்பன் சொன்னது கேட்டுச்சுல என அவன் காயத்தில் மேற்கொண்டு அதி அழுத்த மேகலை அவள் கரத்தை பற்றினார்..
போதும் அதி.. அவனை விட்டுடு அதான் எங்களுக்கு எதுவும் ஆகலையே என மணிமேகலை கூற.. சட்டென தன் கரத்தை உதறினாள் அதி..
மிஸஸ் மணிமேகலை கிருஷ்ணகுமார்.. நான் ஒன்னும் உங்களுக்காக வரலை.. இது என்னோட மால்.. இந்த ஏகேவோட இடத்துல வேற ஒருத்தன் வந்து திமிர் காமிச்சா என்னாகும்னு தெரியவைக்க வந்தேன்.. சோ யூ ஆர் ஸ்டே அவுட் என திமிராக கூற.. மணிமேகலை முகம் மாறினார்.. மித்ரன் கோபமாக ஏதோ சொல்ல வர மேகலை வருத்தத்துடன் மறுப்பாய் தலையசைத்தார்..
அதி விஷ்ணுவை ஓர் பார்வை பார்க்கவும்.. அவன் ஒரு கண்ணாடி பாட்டிலை அதியிடம் தந்தான்..
உங்கொப்பன் சொன்னது கேட்டுச்சுல.. உன் உயிர் இருந்தா மட்டும் போதுமாம்.. அதுனால என் முகத்துக்கு எதிரா வந்த இந்த கை இனி இருக்க கூடாது.. என கண்ணாடி பாட்டிலில் இருந்த ஆசிட்டை அவன் வலது கரத்தில் ஊற்ற..
ஆஆஆ.. என்ற அவனின் அலறலை குரூரசிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த அதி.. அவனின் ஆண் உறுப்பிலும் ஊற்ற.. அவனின் மரண ஓலமே அந்த அறையெங்கும் எதிரொழித்தது..
மது இதனை காண முடியாது, தேகம் நடுங்க தன் அண்ணனின் தோளில் முகத்தை புதைத்தாள்.. அதியின் இச்செயலை கண்ட பிறகு அவளின் மீதான பயம் மேலும் கூடியது..
விஷ்ணு.. இவன் ப்ரெண்ட்ஸயும் கவனிச்சு அனுப்ப சொல்லு என கூறிய அதி கூலிங் கிளாஸ்ஸை மாட்டியவாறு சென்றாள்..
அம்மையப்பன் மூர்ச்சையாகும் நிலையில் நின்று கொண்டிருந்தார்.. முதலில் மணிமேகலையை கண்டு அதிர்ச்சியானவர்.. அது தெளிவதற்குள் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை கண்டு சிலையென சமைந்துவிட்டார்.. அதுவும் தன் மகளின் பிரதியாய் இருந்த அதியின் அலட்டலில்லாத அரக்கத்தனங்களை கண்டு அவரின் உடல் நடுங்கியது.. மெல்ல தள்ளாடியவாறு ஒரு ஓரம் அவர் அமர.. ஐந்து நிமிடத்திற்குள் அந்த இடம் மீண்டும் பழைய நிலைக்கு சென்றது.. அங்கு எதுவும் நடவாதது போல் அனைவரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்..
அதியின் செயல்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்து கொண்டிருந்தவரின் செவிக்குள், சில வருடங்களுக்கு முன்பு அவரின் குடும்ப ஜோசியர் கூறியது எல்லாம் ஒலித்து கொண்டிருந்தது..
உங்க வீட்டுல உள்ளவங்க செஞ்ச கர்மா எல்லாம் ஒரு இடத்துல மரமா பெண் ரூபத்துல வளர்ந்துகிட்டு இருக்கு.. அதுவா உங்களை தேடி வராது.. உங்க குடும்பத்துல யாரவது அதுகிட்ட போனா.. அன்னையில இருந்து உங்க குடும்பத்துக்கு கஷ்டகாலம் தான்.. உயிர் சேதம் பொருட் சேதம்ன்னு எது நடக்கும்னு சொல்ல முடியாது.. அதோட மொத்த கோபமும் நம்ம சின்னய்யா தலையில தான் விடியும்.. அவரோட உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.. என அவர் கூறியதையும் இப்போது தான் பார்த்த அதியின் செயலையும் ஒப்பிட்டு பார்த்தவர்.. சிவபெருமானே அவளிடம் என் குடும்பத்தினர் போகாமல் பார்த்து கொள்ளப்பா என அவசர வேண்டுதலை வைத்தார்..
நாம என்னதான் அழுதாலும் புரண்டாலும் நடக்க போறத நம்மளால மாத்த முடியல பாரேன் அம்மணி.. நம்ம பேத்திய பார்த்து எனக்கு மொத தோணுனது பயந்தேன்.. ஆனா போகப்போக அந்த பிள்ளைய நாம அப்போவே கூப்புட்டு வச்சுருக்கலாமோன்னு தோன ஆரம்பிச்சுடுச்சு.. அவ நம்மகிட்ட சீக்கிரம் வந்துடணும்னு ரெண்டு மனசா இருந்தேன்.. அப்பொறம் எது நடந்தாலும் பார்த்துக்கலாம்ன்னு கடவுள் மேல பாரத்தை போட்டுப்போட்டேன்.. என ஒரு பெருமூச்சுடன் அம்மையப்பன் சொல்ல பேச்சியம்மை நிலைக்குத்திய விழிகளுடன் அவரையே பார்த்து கொண்டிருந்தார்..
கேட்கும் அவராலையே அதியின் செய்கையில் உடல் நடுங்கியதென்றால்.. தன் கணவரின் நிலை என்னவாகியிருக்கும் என அவருக்கு புரிந்தது..
உங்களுக்கு ஒரு மாசம் வரை உடம்பு சுகமில்லாம போச்சே மாமா.. அது இதுனால தாங்கலா என பேச்சியம்மை நடுக்கத்துடன் கேட்க.. அம்மையப்பன் ஆமோதிப்பாய் தலையசைத்தார்..
ஆத்தாடியாத்தா.. இவ லேசுப்பட்டவ இல்ல போலயே.. நான் வேற அவளை கொஞ்சம் வம்பிழுத்துட்டேனே என அவர் பாவமாய் அமர்ந்திருக்க.. அறையின் வாயிலில் இவ்வளவு நேரம் இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த அமுதனும் அகத்தியனும் ஒருவரையொருவர் பார்த்து முழித்து கொண்டிருந்தார்கள்.. அதுவும் அமுதனின் பார்வை, எப்படி போய் சிக்கியிருக்க பார்த்தியா என்பது போல் பாவமாய் தன் மாமனை பார்த்து கொண்டிருந்து….
