Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 34

அம்மையப்பன் 34 

நான் கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. எதுக்கு திடிர்னு இப்படியொரு முடிவு.. என மெல்லிய குரலில் கேட்டார் மணிமேகலை.. 



Advertisement

மேகலை என ஆட்சேபமாக கிருஷ்ணகுமார் அதட்ட, 

இவங்களோட அப்பா மகள் உறவு எவ்வளவு ஆழமானதுன்னும் எனக்கு தெரியும், அதி மேல இவர் வச்சிருக்க அன்பின் அளவும் தெரியும். அப்படிப்பட்டவர் இப்படி அதிய பிரியிறதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்க தான் கேட்டேன் மாமா.. வேறேதும் இல்ல.. என கணவனிடம் சொன்னவர்.. 

Advertisement

Advertisement

திருச்செல்வத்திடம், சொல்ல விருப்பம் இல்லைன்னா விட்டுடுங்க சார் என மென்மையாக சொன்னார்.. 

என் பொண்ணு என் கூட இருக்கனும்ங்குறதை விட, அவ 

Advertisement

உயிரோட இருக்கனும்.. ஒரு குடும்ப அமைப்புல இருக்கனும், அதுதான் காரணம் என விரக்தியாக திருச்செல்வம் சொல்ல.. கணவன் மனைவி இருவரும் திகைத்து போனார்கள்.. 

என்ன சார் சொல்றிங்க அதி உயிருக்கு ஆபத்தா.. என மணிமேகலை அதிர்ந்து கேட்க, திருச்செல்வம் தன் மனவேதனைகளை சொல்ல தொடங்கினார்.. 

உங்களுக்கு கல்யாணம் நடந்த மறுநாளே நான் மதுக்குட்டிய கூட்டிக்கிட்டு மேட்டுப்பாளையம் கிளம்பிட்டேன்.. என் மக இனி என்கூட தான் இருக்கனும்னு நினைச்சேன்.. எங்க வீட்டோட மூத்த வாரிசு அவள்.. அவளை எப்படி நான் தனியா விடமுடியும்.. அதுனால எங்க வீட்டுல உள்ளவங்ககிட்ட உண்மையை சொல்ல நினைச்சேன்.. அவங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருந்தேன். ஆனா விதி மறுபடியும் என் வாழ்க்கையில் விளையாண்டுருச்சு.. என பவளம் மனதினை குறித்து வேதனையாக கூறினார்.. 

இத்தனை வருஷமா மதுக்குட்டி கோயம்புத்தூர்ல, கனகா அக்கா உதவியோட தனியா தான் வளர்ந்துகிட்டு இருக்கா. நான் தினமும் போய் பார்த்துட்டு இருந்தேன்.. என திருச்செல்வம் வேதனையாக கூற, மணிமேகலை கிருஷ்ணகுமார் இருவரும் அவரை அதிர்ந்து பார்த்தார்கள்.. 

இத்தனை வருடம் அதி திருச்செல்வத்தின் குடும்பத்தில் தான் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இத்தனை நாள் அவள் தனிமையில் இருந்ததை நினைத்து, அவர்கள் மனமும் வேதனை அடைந்தது.  

என் பொண்ணு என்கிட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டா.. ஏன் பா என்கூட தினமும் இருக்க மாட்டேங்குறீங்க, கொஞ்சம் நேரம் மட்டுமே இருக்கீங்க, எனக்கு அம்மா இல்லையாப்பான்னு என் பொண்ணு கேள்வி கேட்கும் போதெல்லாம் என்னால பதிலே சொல்ல முடியல.. 

என்ன சொல்றதுன்னு தெரியாம ஏதேதோ சொல்லி சமாளிப்பேன். அப்ப என் பொண்ணு எதுவும் பேசமா ஒரு பார்வை மட்டும் பார்த்துட்டு அமைதியா இருப்பா.. என் பொண்ணு வளர்ந்துட்டு இருக்கான்னு அப்போதான் எனக்கு புரிஞ்சது.. 

சில வருஷங்கள் கழிச்சு அவளுக்கு எல்லாம் உண்மையும் சொல்லி புரிய வைக்கலாம்ன்னு நினைச்சேன்.. ஆனா என் கூட பிறந்தவ மறுபடியும் என்ன நிலைகுலைய வச்சுட்டா.. என கண்கள் கோபத்தில் சிவக்க கூறினார்.. அதனை காட்ட முடியாத இயலாமையில் சொன்னார்.. 

**********************

அம்மையப்பன் மாளிகையில் உள்ள அனைவரும் சந்தோஷத்தில் குதித்து கொண்டிருந்தனர்.. அவர்களின் பலவருட வேண்டுதல் நிறைவேறிவிட்டது..

அமிர்தவல்லி கர்ப்பமாக இருக்கிறார். கூடிய சீக்கிரம் அவர்களின் வீட்டில் ஒரு மழலைச் செல்வம் வரப் போகிறது, அதனை குறித்து தான் அனைவரும் சந்தோஷத்தில் முக்குளித்துக் கொண்டிருக்க, கலையரசி மட்டும் திருச்செல்வத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..   

இனிமேல் அதி தன் குடும்பத்திற்கு தேவையில்லை என்பது கலையரசியின் எண்ணம்.. அதி திருச்செல்வத்துடன் இருப்பது தலைக்கு மேலே கத்தி தொங்குவது போல.. அதி விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் தங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அவமானம்.. 

அதுவும் ஒரு வேலைக்காரியின் வயிற்றில் பிறந்தது தங்கள் வீட்டு வாரிசாகுமா.. என மணிமேகலையை நினைத்து மேலும் கோபத்தை வளர்த்து கொண்டார் கலையரசி.. 

இப்பொழுதே தந்தை அண்ணன்கள் இருவரும் அதியை தலையில் வைத்துக் கொண்டாடுவதை அவள் விரும்பவில்லை. ஆனாலும் குடும்பத்தின் வாரிசு தேவைக்காக இதுவரை அவளை விட்டு வைத்திருந்தாள்.. இப்பொழுது வாரிசு வந்து விட்டதால், அவளை இங்கிருந்து எப்படி அனுப்புவது என யோசித்துக் கொண்டிருந்தார்..

மூத்தவர்களிடம் சொன்னால் வேலைக்காகாது என புரிந்த கலையரசி, அதியை விரட்டுவதற்காக திருச்செல்வம் இல்லாத நேரம் பார்த்து கோயம்புத்தூர் சென்றார்.. 

*********************************

கனகாவின் போதாத நேரம், சத்யன் அதி இருவரும் இல்லாத நேரம் கலையரசி வீட்டிற்கு வந்துவிட்டார்.. 

கனகா கலையரசியை பார்த்து பயத்துடன் நிற்க.. அவரை மேலிருந்து கீழ் பார்த்த கலையரசி இந்த வூட்டு மகாராணியா நீயி உன்ன கேட்டு தான் உள்ளார வரணுமோ பரதேசி நாயே என கோபமாக கத்த, கனகா முகம் கன்றி உள்ளே சென்று விட்டார். 

என்ற அண்ண உன்ன நல்லா வச்சிருக்கான் போல இருக்கு.. என வச்சுருக்கான் என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல, கனகா கண்கலங்க, கலையரசியை திகைத்து பார்த்தார்.. 

அதனை குரூரசிரிப்புடன் கண்ட கலையரசி மேலும் அவரை குத்திகிழிக்க ஆரம்பித்தார்.. 

அந்த மூதேவிய மட்டும் பாத்துக்குறியா இல்ல என்ற அண்ண படுக்கையையும் சேர்த்து பார்த்துக்குறியா என எள்ளலாக கேட்கவும் கனகா துடிதுடித்து அழ.. அதில் நிம்மதியடைந்த கலையரசி வீட்டை சுற்றி பார்வையை சுழட்டினார்.. 

அங்கு சுவற்றில் நடுநாயகமாக திருச்செல்வம் அதியை தூக்கி வைத்திருக்கும் பெரிய புகைப்படம் இருந்தது. அதனையே கோபத்துடன் வெறித்து கொண்டிருந்த கலையரசி, அந்த போட்டோவை கழட்டி வீச பார்க்க, 

அம்மா என்ன பண்றீங்க.. அத கொடுங்க என்ற கனகா விரைந்து அதனை அவரிடமிருந்து பறித்து கொண்டார்..

எடுப்பட்ட நாயே ஆறுமேலடி கையவச்ச, வேலைக்கார ****.. என கெட்ட வார்த்தையில் திட்டியவாரு அவரின் இரு கன்னத்திலும் அறைந்து தள்ளினார்.. கலையரசி. 

எவ்வளவு அடி வாங்கினாலும் அந்த போட்டோவை இறுக்கி பிடித்தவாறு கனகா நின்று கொண்டிருக்க, அதில் கலையரசியின் வெறி மேலும் அதிகரித்தது.. 

என்ற வூட்டு எச்ச சோத்த திங்குற கழுதைக்கு இத்தன திண்ணக்கமா என கனகாவின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தார்.. *** சாவுடி, என்ற முன்னயே திமிர்த்தனம் காமிக்கிற என கனகாவின் விழிகள் சொருகும் வரை கழுத்தை நெறித்தவர்.. அவர் மயங்கும் நொடி கரத்தை விலக்கவும், இருமியவாரு தொய்ந்து விழுந்தார் கனகா. 

அவர் தரையினில் அமர்ந்து தொண்டை வலிக்க இருமி கொண்டிருக்க, சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு அவரை திமிராக பார்த்துக் கொண்டிருந்தார்.. கலையரசி. 

உனக்கு ரெண்டு நா டைம் அந்த மூதேவி எங்கயாவது கொண்டு போய் கெடாசிட்டு வர, இல்ல உனக்கு இருக்கிற ஒரு மகனையும் காணாபொணமாக்கி போடுவேன்.. எனக்கு கலையரசி மிரட்ட கனக திடிக்கிட்டு அவரைப் பார்த்தார் 

அம்மா மதுமா உங்க வீட்டு வாரிசுங்கம்மா, உங்க அண்ணனோட பிள்ளை என கனகா பயத்துடன் கூறவும் கலையரசியின் முகம் மீண்டும் ஆங்காரமாக மாறியது. 

யாருடி என்ற வூட்டு வாரிசு, என கோபத்தில் கத்திய கலையரசி மீண்டும் அவரின் இரு கன்னத்திலும் அறைந்து தள்ளினார்..

அது ஒரு பரதேசி நாய் வையித்துல பொறந்தது, அந்த சனியன் பொறப்பே சரியில்லாத பொறப்பு, அது என்ற வூட்டுக்கு இனி தேவை கிடையாது.. ரெண்டு நாள்ல நான் சொன்னதை செய்யல அந்த மூதேவியோட உன்ற மவனையும் சேர்த்து எரிச்சிப்போடுவேன் சாக்கிரதை. என மிரட்டி விட்டு கலையரசி செல்ல, கனகா திக்பிரம்மை பிடித்தது போல் உறைந்து அமர்ந்து இருந்தார்.

மாலையில் சத்தியன் அதி பள்ளி விட்டு வரும் வரையிலும் கனகா அமர்ந்தபடியே இருக்க, சத்தியன் தாயை உலுக்கினான்.. 

அம்மா என்னாசும்மா, ஏன் உங்க முகம் இப்படி வீங்கி இருக்கு என பயத்துடன் சத்தியன் கேட்டான், 

அத்தம்மா என அதியும் பயத்துடன் அவர் கரம் பிடிக்கவும் அதில் தன்னிலை அடைந்த கனகா வேகமாய் அவளை அணைத்து கொண்டார்.. 

என்னாச்சுங்கம்மா என மீண்டும் சத்தியன் கேட்க, கனகா கீழே விழுந்துவிட்டதாக கூறி இருவரையும் சமாளித்தவர், திருச்செல்வத்தின் வரவிற்காக பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.. 

அவர் கூறியதை சத்தியன் நம்பவில்லை, அதனால் தாயை அவ்வப்போது யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான்.. 

திருச்செல்வம் ஆறு மணி போல் வந்தார்.. 

ஐயா என ஓடிவந்து அவர் மீது தாவிய அதி, கனகாவின் காயங்களை பற்றி கூறினாள்.. 

அக்கா அக்கா.. என்ன திருச்செல்வம் அழைக்கவும் கனகா வெளியே வந்தார். 

திருச்செல்வம் பார்த்தவுடனே உணர்ந்துவிட்டார் கீழே விழுகவில்லை யாரோ பலமாக அடித்திருக்கிறார் என புரிந்து, அவர் அதிர்ச்சியாக கனகாவை பார்க்க. 

அவர் குழந்தைகளை காண்பித்து மறுப்பாய் தலையசைத்தார்.. 

திருச்செல்வம் பிள்ளைகள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு கனகாவை பார்க்க, அவர் அழுது கொண்டே கலையரசி வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் சொன்னார். 

அவரின் மிரட்டல்களை மட்டும் கூறியவர், அவரின் தகாத வார்த்தைகளை மறைத்துவிட்டார். 

திருச்செல்வம் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டார். அவர் கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்துவிட்டது.. 

ஐயா மதுமாவ எதுவும் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு, ஏதாவது செய்ங்க தம்பி என கனகா கரம் கூப்பினார்.. 

திருச்செல்வம் கைகளை மடக்கி தன் கோபத்தை அடக்க முயன்றார்.. கலையரசியின் இத்தகைய செயலை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. 

தன் மகள் உரிமையாக தன் வீட்டில் இல்லாமல் இங்கிருப்பதே அவருக்கு மிகப்பெரிய வேதனை. அப்படியிருக்க அவளை ஒட்டுமொத்தமாக தன்னிடமிருந்து பிரிக்க நினைக்கும் தங்கையை நினைத்து அவரின் மனம் கொதித்து கொண்டிருந்தது.

**************************

கலையரசி தன் அறையில் அமர்ந்து அமிர்தவல்லியுடன் பேசிக்கொண்டிருக்க, வேகமாக அங்கு வந்த திருச்செல்வம் தன் அண்ணி இருப்பதையும் பொருட்படுத்தாது கலையரசியின் இரு கன்னத்திலும் அறைந்தார். 

அதில் அதிர்ந்த அமிர்தவல்லி, தம்பி என்ன காரியம் பண்றீங்க என அதட்ட, கலையரசியோ அண்ணன் எதற்காக அடிக்கிறார் என தெரிந்தும் மிதப்பாக நின்று கொண்டிருந்தார்.. 

உனக்கு நான் என்னடி பாவம் பண்ணுனேன், ஏன் இப்படி என்ற வாழ்க்கையில் விளையாடுற, உன்னால நான் ஒவ்வொரு நிமிசமும் குற்றவுணர்வுல செத்துட்டு இருக்கேன்.. 

இந்த வூட்ல என் கூட உரிமையா இருக்க வேண்டிய என் மக வெளியில யாரோ கூட தங்கி இருக்கா, அது கூட உனக்கு பொறுக்கலையா.. இன்னும் என்ன கதிக்கு என்ன ஆளாக்க நினைக்கிற நான் ஒட்டுமொத்தமா குழிக்குள்ள போனாதான் அடங்குவியா.. என அவள் கழுத்தை பிடித்து நெறித்தார்.. 

தம்பி என்ன பண்றீங்க விடுங்க அவளுக்கு கண்ணு சொருகுது பாருங்.. என அமிர்தவல்லி அவன் கரத்தை இழுக்க முயற்சிக்க.. அண்ணியின் நிலையை மனதில் கொண்டு தன் கரத்தை விலக்கினார். 

ஹுக்கும் ஹக்கும் என இருமிய கலையரசி தன் அண்ணனை கோபமாக வெறித்துப் பார்த்தார்.. அந்த வேலைக்காரி பெத்த மகளுக்காக என் கழுத்தையே நெரிக்க பாக்குறியா.. 

நல்லா கேட்டுக்கோ அவ பொறப்பு நல்ல பொறப்பு கிடையாது நம்ம குடும்பத்துக்கான அவமானம் அவ, அவள பத்தின விஷயம் கொஞ்சம் கசஞ்சாலும் நம்ம குடும்பத்துக்கு ரொம்ப பெரிய கேவலம். 

அந்த நாய் வயித்துல பிறந்தது என்னைக்கும் இந்த வீட்டு வாரிசாகாது.. அவளை எங்கேயாவது கொண்டு போய் விட்டீன்னா உயிரோடவாவது இருப்பா.. இல்ல நானே கொன்னு போட்ருவேன்.. 

நீ கோயம்புத்தூரில் ஒரு வீட்ல வச்சு வளர்த்தா, அது யாருக்கும் தெரியாத.. அது அம்மா எங்க, நீங்க ஏன் என் கூடவே இருக்க மாட்டிங்கன்னு கேட்டா என்ன சொல்லுவண்ணே. விபரம் தெரிஞ்சா அவ இங்க வந்து நாட்டாம பண்ண ஆரம்பிச்சுடுவா. 

அவ என்னைக்குமே நம்ம கழுத்துக்கு மேல தொங்குற கத்தி மாதிரி.. உனக்கு ரெண்டு நாள் டைம் அவளை எங்கயாவது கொண்டு போயி விட்டுடு.. இல்ல அவ உசுருக்கு உத்திரவாதம் கிடையாது என ஆங்காரமாக ஆடிவிட்டு சென்றார் கலையரசி.. 

திருச்செல்வம் இறுகி போய் நிற்க, அமிர்தவல்லி ஒன்றும் கூறாது கலையரசியின் பின்னே சென்று விட்டார்.. 

************************

கலையரசியின் சொல்லை சாதாரணமாக கடந்து விட முடியாது என திருச்செல்வத்திற்கு தெரியும். தனக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதனை எப்படியாவது அழித்து விடுவாள். அதனால் அவர் நாகநாதன் திருநாவுக்கரசுவிடம் இப்பிரச்சினையை கொண்டு செல்ல, அவர்களையும் தன் சாதுரிய பேச்சால் குழப்பி அடித்துவிட்டார் கலையரசி.. 

அடுத்த இரண்டு நாட்கள் திருச்செல்வம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கலையரசி 

கனகா சத்தியன் அதி மூவரும் பள்ளி விட்டு வரும் வேளையில், காரைக் கொண்டு மோதுவது போல் சென்று பயமுறுத்தினார்.. 

அதில் மொத்தமாய் கலங்கி போன திருச்செல்வம் மனதை கல்லாக்கிக் கொண்டு தன் மகளை பிரியும் முடிவை எடுத்தார்.. கனகா சத்தியன் வாழ்க்கைக்கு தேவையான ஏற்பாட்டை செய்துவிட்டு அதியை கூட்டிக்கொண்டு மும்பை வந்துவிட்டார்.. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!