அரசி(க்கி)யே என் அடிமையே அத்தியாயம் – 3
அத்தியாயம் – 3
ஸ்ரேயா ரிங்கு இருவரும் லீ மீங் கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டுக் கொண்டிருந்தனர் மேலும் அதில் ” மித்ரா நானும் உன்கிட்ட த்ரீ இயர்ஸ்சா மேரேஜ் பண்ணிக்கலாம்னு கேட்டுட்டே இருக்கேன் நீ தான் எனக்கு ஒரு முடிவே சொல்லாமல் இருக்க, ப்ளீஸ் மித்ரா பழசை எல்லாம் மறந்திரு, புதுசா நம்ம வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணலாம் ப்ளீஸ் என் லவ் அக்சப்ட் பண்ணிக்கோ “என்று ஆங்கிலத்தில் இருந்தது வாய்ஸ் மெசேஜ்.
Advertisement
” ஸ்ரேயா லீமிங்கு பேசுனத பத்தி நீ என்னடா நினைக்கிற “என்றாள் ரிங்கு.
” ரிங்கு, லீமிங்கு பத்தி உனக்கு நல்லா தெரியும், ஷாம் ஒர்க் பண்ற கம்பெனியோட ஓனர் லாஸ்ட் இயர் இளம் தொழிலதிபர் அவார்டு கூட வாங்கிருக்காரு, நல்ல பையன், அழகாவும் இருப்பான் முக்கியமா நம்ம ஷாம புரிஞ்சி நடந்துப்பான் பேசாம அவனுக்கே நம்ம ஷாம கல்யாணம் பண்ணி வச்சிருவோம்மா “என்றாள் ஸ்ரேயா.
Advertisement
Advertisement
” எனக்கும் நீ சொல்றது சரின்னு தான் படுது ஸ்ரே,லீமீங்கு ஷாம்க்கு கரெக்டான ஜோடி, அவள நல்லா பாத்துப்பான் ஆனால் ஷாம் ஒத்துக்கணுமே “என்றாள் ரிங்கு.
” ஷாமுக்கும் அவனை பிடிக்கும், நம்ம அவளுக்கு போன் பண்ணி பேசும் போதெல்லாம் லீமீங்கு பத்தி சொல்லிட்டே தானே இருப்பா நம்ம கிட்ட “என்றாள் ஸ்ரேயா.
Advertisement
” ஸ்ரே அவளுக்கு லீமீங்கு வா பிடிக்கும் தான் ஆன அது லவ் இல்ல, ஒரு நல்ல பிரண்ட் தான் ஷாம் அவன பாக்குற, ஷாம் மனசுல என்ன இருக்குனு உனக்கு தெரியாதடா “
” எனக்கு நல்லா தெரியும் ரிங்கு, அது நடந்து முடிஞ்சு போச்சு பழசையே நினைச்சு அவ எதிர்காலத்தை கெடுத்துக்க கூடாது, லீமீங்கு தான் ஷாம்க்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன், அவளோட கனவு லட்சியம் எல்லாத்துக்கும் லீமீங்கு துணையா இருப்பான் “என்றாள் ஸ்ரேயா முடிவாக.
“லீமீங்கு பத்தி நாளைக்கே கிராணி, அங்கிள் ஆன்ட்டி எல்லோர் கிட்டையும் பேசு ஸ்ரே, ஷாம் இதுக்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டா ஆன கிராணி சொன்னா கண்டிப்பா கேட்பாள், இனிமேலும் இந்த விஷயத்தை நம்ம தள்ளி போடக்கூடாது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கரம் ஷாம் லீமீங்கு மேரேஜை முடிக்கிறோம்” என்றாள் ரிங்கு.
தோழிகள் இருவரும் ஷாமின் வாழ்க்கைக்கு வழி கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் அவளை அழைத்து சென்று அவளுடைய அறையில் படுக்க வைத்து விட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.
ரகு பெண்கள் பேசிய அனைத்தையும் போனில் வீடியோ எடுத்து அதை விக்ரமிற்கு அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்த விக்ரம் கையில் போனை வைத்துக் கொண்டு ரகு அனுப்பும் வீடியோவிற்காக காத்திருந்தான், வீடியோ வந்ததும் அதை பிளே செய்து பாக்க ஆரம்பித்தான்.
ஷாம் குடித்துவிட்டு அழுவதை பார்த்து விக்ரம் .”ஏண்டி ஏன் நீ என் வாழ்கைல வந்த, வராமல் இருந்திருந்தால் நீயும் சந்தோஷமா இருந்திருப்ப நானும் நிம்மதியா இருந்திருப்பேன் “என்றான் கோவமாக,பின் ஷாம் பேசுவதை கேட்க கேட்க அவன் முகம் இறுக ஆரம்பித்தது.
ஷாம் திரும்ப டோக்கியோ போவதாக கூறியதைக் கேட்டு”விட மாட்டேன் டி, நீ எப்படி இங்க இருந்து போறேன்னு பாக்குறேன்,அஞ்சு வருசத்துக்கு முன்னாடி விட்டுட்டேன் இனிமேல் விட மாட்டேன் டி “என்று அந்த அறையே அதிரும் அளவுக்கு கத்தினான்.
தொடர்ந்து லீமிங்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டு “யாருக்கு யாருடா டார்லிங், நீ மட்டும் என் கைல கிடச்சா உன்ன துண்டு துண்டா வெட்டி விசிறுவேன்டா “என்றான்.
கடைசியாக பெண்கள் இருவரும் ஷாம் லீமிங்கு இருவராது திருமணத்தை பற்றி பேசியதைக் கேட்டு “இந்த கல்யாணம் நடக்காது, நடக்கவும் கூடாது,நான் நடக்க விடமாட்டேன் “என்று பைத்தியம் பிடித்தவன் போல் கத்திக் கொண்டு அந்த அறையில் இருந்த பொருட்கள் அத்தனையும் தூக்கி போட்டு உடைத்தான்.அறையில் இருந்த சரக்கு பாட்டில் ஒவ்வொன்றாக எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.
விக்ரம் அறையில் இருந்து வந்த சத்தத்தையெல்லாம் கேட்டு பயந்து அந்த அறையின் கதவை தட்டினர் வாசுகி.அவன் கதவை திறக்கவே இல்லை, வாசுகியின் குரல் கேட்க கேட்க அங்கு உடையும் சத்தம் அதிகமாகி கொண்டே சென்றது அதை கேட்ட வாசுகி தன் மகன் நிலையை நினைத்து கண்ணீர் வடித்தார்.
மறுநாள் காலை எழுந்ததும் ஷாம் முதல் நாள் இரவு நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்தாள் அதில் விக்ரமை பார்த்தது, தான் குடித்தது, அழுதது அனைத்து நினைவுக்கு வர “கூடாது கூடாது நான் அவன நெனச்சி அழ கூடாது, அவனால நான் இந்த அளவுக்கு பலவீனமா ஆகுறேன்னா இனிமேல் என் வாழ்க்கையில அவன நான் பாக்கவே கூடாது, இதுக்கு மேல நான் இங்க இருக்க கூடாது, இன்னைக்கு போய் கிராணிய பாத்துட்டு உடனே கிளம்பி டோக்கியோ போகிறனும் ” என்று மனதிற்குள் நினைத்து விட்டு உடனே கிளம்பி அவர்களுடைய தனி விமானத்தின் மூலம் உத்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மணிகர்ணிகாபுரி யை வந்தடைந்தாள் ஷாம்.
மணிகர்ணிகாபுரி சிவாலீக் மலையடிவராத்தில் பில்கங்கா நதிக் கரையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரம்.அந்த நகரம் பழமை மாறாமலும், இன்றைய காலத்துக்கு ஏற்றார் போன்று அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது உலகத் தரம் வாய்ந்த ஸ்கூல் அண்ட் காலேஜஸ் , மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் , ஷாப்பிங் மால், விமானநிலையம் என்று பெரிய நகரங்களையே பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு அனைத்து வசதிகளையும் கொடுள்ளது மணிகர்ணிகாபுரி.
இங்கு பெண்களை கடவுளாக நினைத்து மிகவும் மரியாதையாக நடத்துவார்கள், இங்கு பெண்கள் தன் குடும்பத்தை வழி நடத்துவர்கள், குடும்பதலைவி எடுக்கும் முடிவுக்கு அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
ஷாமை விமான நிலையத்திலிருந்து விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரில் அழைத்து சென்றனர் .ஷாம் சென்ற கார் பெரிய அரண்மனைக்கு முன் போய் நின்றது, அந்த அரண்மனை மிகவும் பிரமாண்டாமாகவும் அழகாகவும் இருந்தது. அங்கு வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் ஷாமை பார்த்தும் தலை குனிந்து வணக்கம் செலுத்தி ராஜ மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்றனர்.
உள்ளே சென்ற ஷாம் “ராஜமாதா எங்க இருக்காங்க” என்று கேட்க, நந்தவனத்தில் இருப்பதாக பணிப் பெண் கூற உடனே அங்கு சென்றாள் ஷாம்.
அழகிய பூக்களாலும், செடிகளாலும் சூழப்பட்ட நந்தவனத்தில் எண்பது வயதிலும் திடமாகவும் கம்பிரமாகவும் தலைமுடி நரைத்தும், பார்ப்போரை கைக்கூப்பி வணங்க செய்யும் ஒளி பொருந்தி முகத்தையும் கொண்ட ராஜமாதா கனிஷ்காராணி (கிராணி)அங்கிருந்த பூக்களை பறித்துக் கொண்டிருந்தார்.
அவரை பார்த்ததும் ஷாம் “கிராணி ” என்று அழைக்க, ஷாமின் குரலை கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த கிராணி திரும்பி “சங்கமித்ரா ராணி” என்று கூப்பிட, ஓடி சென்று கிராணியை கட்டிக் கொண்டாள்.
“செல்லம், என் தங்கம் உன்ன பாக்கமா அஞ்சு வருசமா இந்த பாட்டி எவளோ கஷ்டப் பட்டேன்னு தெரியுமாடா, இப்போவது இந்த பாட்டியா பாக்க வந்துட்டையே ” என்றார் பாட்டி.
“நானும் தான் உங்கள இந்த ஊரை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன், எனக்கு மட்டும் உங்கள பிரிஞ்சி இருக்கனுன்னு ஆசையா, என்னோட தண்டனை காலம் முடியுறதுக்கு முன்னாடி என்னால எப்படி கிராணி இங்க வர முடியும்,நான் பண்ண தப்புக்கு தண்டனைய ஏத்துக்கிட்டு தான ஆகணும் ” என்றாள் ஷாம் மிகவும் சோகமாக.
