Skip to content
Post Views: 10,426
அத்தியாயம் 2:
மது அவனை ஆச்சரியம், ஆராய்ச்சி இரண்டும் கலந்து பார்த்தாள். கடந்த ஆறு மாத காலத்தில் அவள் கவனித்த வரையில் அந்த நாட்டில் யாரும் அநாவசியமாக அடுத்தவர்கள் ப்ரைவஸியில் தலையிடுவதில்லை.
ஆனால் இவன் என்ன ரொம்ப நாள் பழகுன மாதிரி பேசிட்ருக்கான், என்று மது நினைத்தாள்.
ஒருவேளை நம்ம ஊர் பசங்க மாதிரி கடலை போட ஆள் தேடுகிறானோ என்று பார்த்தால், அவனை அப்படி நினைக்கவும் தோன்றவில்லை.
Advertisement
நல்ல மரியாதையான தோற்றம். அணிந்திருந்த ஆடை, வாட்ச், ஷூஸ்லாம் நல்ல பிராண்டட். வேலை வெட்டி இல்லாத விடலை பையன் போலவும் தோன்றவில்லை.
அப்படியே பார்த்தாலும் அவனுக்கென்ன இந்த ஊரில் ஆளா கிடைக்காது. இந்த ஊர் பொண்ணு எதை பார்த்தாலும் எமி ஜாக்சன் மாதிரியே இருக்குங்க.
நாற்பது வயசு ஆண்ட்டிங்க கூட ஸிரோ சைஸ் மெய்ண்டைன் பண்றாங்க. அவங்களயெல்லாம் விட்டுட்டா நம்மகிட்ட கடலை போட போறான்.
Advertisement
முக்கியமா இவன் இருக்கிற லுக்குக்கு பொண்ணுங்க தானா வந்து மேல விழுங்க போல. ஏற்கனவே எதிர்த்த சீட்டில் இருந்து இரண்டு சீனா பொண்ணுங்க சைட் அடிச்சிட்டு இருக்குங்க.
Advertisement
இதுல பம்ளிமாஸ் மாதிரி இருக்கிற நம்மளையா சைட் அடிக்க போறான்? அவன் வேற பேர சொல்லி இன்ட்ரோ பண்ணிகிட்டான். நம்ம பேர் சொல்லலனா மரியாதையா இருக்காதுன்னு , அவனை பார்த்து, “ஹலோ ஐயம் மதுமிதா”, என்றாள்.
“இட்ஸ் மடுமிடா, ஆம் ஐ கரெக்ட்” என்று கேட்டான்.
ம்க்கும் விளங்கிடும் , ஏன்டா? என்று நினைத்த மது, “இட்ஸ் நாட் மடு, மதுது…” என்று ‘து’ வை மட்டும் அழுத்தி உச்சரித்து காட்டினாள்.
Advertisement
(ஆங்கில உரையாடல் தமிழில்) “மடு ஓகே,உன் பெயருக்கு அர்த்தம் என்ன”, என்றான்.
திரும்பவும் மடுவா, அடேய் கடல் கடந்து நான் ஆஸ்திரேலியா வந்தது உனக்கு தமிழ் டியூஷன் எடுக்கத்தானா. “து” வெ வரமாட்டேங்குது. இதுல மதுவுக்கு அர்த்தம் தெரிஞ்சு என்ன செய்ய போறான்.
“மது என்றால் தேன், மதுமிதா என்றால் தேனை போலவே இனிமையானவள்”, என்று விளக்கம் கூறினாள்.
உடனே அந்த நீல கண்களில் கனவு மிதக்க அவளை பார்த்து, “உண்மைதான்” என்றான்.
இவன் லுக்கே சரியில்லையே என்று நினைத்த மது, எப்பொழுது நம் ஸ்டேஷன் வரும் என்று பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் அவன் விட்டால்தானே, “மடு . உனக்கு பசிக்குதுதான, இதை எடுத்துக்கொள்”, என்று திரும்பவும் எனர்ஜி ட்ரின்க் பாட்டிலை கொடுத்தான்.
பார்றா! நமக்கு பசிக்கிறது இவனுக்கு தெரியுதுனு யோசித்துவிட்டு அவனிடம், “தேங்க்ஸ், எனக்கு வேண்டாம்” என்றாள்.
ஆனால் அவன் விடவில்லை. ஏன்? என்று ஒரு கேள்வியை கேட்டான்.
இதென்னடா இவனோடு ஒரே தொல்லையாக இருக்கிறது என்று அவனை கேள்வியாக பார்த்தாள்
அதற்கு அவன், “நீ அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்த இல்லையா, அதைப்போல நானும் ஒரு சின்ன உதவிதான் செய்கிறேன் . இதை எதற்கு மறுக்கிறாய்”, என்று கேட்டான்.
இவன் நம்மள ரொம்ப நேரமா கவனிச்சிருப்பான் போலயேன்னு நினைத்த மது, “அது எல்லோரும் செய்யக்கூடிய உதவிதான். ஆனா உன்ன எனக்கு முன்ன பின்ன தெரியாது. உன்கிட்ட நான் எப்படி ட்ரின்க் வாங்கிக்க முடியும்”என்று கேட்டாள் .
அதற்கு அவன், “இருக்கை கொடுத்தது எல்லோரும் செய்றதுதான். ஆனா நீ அந்த ஸ்கூல் பசங்க, எங்க அந்த கர்ப்பிணி பெண்ணை தெரியாம ஹர்ட் பண்ணிட போறாங்கனு நினைச்சிதான, அந்த பசங்க இறங்கற வரைக்கும் அவங்க பக்கத்துலயே நின்னுட்டுருந்த”, என்று கேட்டான்.
ரைட்டு விடு. நாம நினைச்சது சரிதான். இவன் நம்மள ரொம்ப நேரமா நோட் பண்ணிருக்கானு நினைத்த மது அவனிடம், “எங்க ஊர்லயெல்லாம் ட்ரைன்ல பிஸ்கட், ட்ரின்க்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நகையெல்லாம் திருடிட்டு போய்டுவாங்க. அதனால டிரைன்ல யார் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மாட்டோம்” என்று சொல்லிவிட்டு நல்ல பிள்ளையாக அவன் முகத்தை பார்த்தாள்.
ஹேரிக்கு செம அதிர்ச்சி. கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு. என்ன சொல்கிறாள் இவள், என்று அவள் முகத்தை பார்த்தான்.
மதுவிற்கு மனசுக்குள் டண்டணக்க நக்கா நக்கானு ஒரே குத்தாட்டம். யாருகிட்ட எங்ககிட்டயேவானு நினைச்சிகிட்டே, வெளியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
சிறிது நேரம் சென்று அதிர்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹேரி மதுவிடம்,”என்னை பார்த்தா திருடன் மாதிரியா இருக்கு” என்று கேட்டுவிட்டு அமைதியாகி விட்டான்.
மது இறங்கும் கிளேட்டன் ஸ்டேஷன் வந்துவிட்டது. அவனிடம் பை சொல்லிவிட்டு எழுந்து வாயில் அருகே வந்து நின்று கொண்டு திரும்பி ஹேரியை பார்த்தாள். அவனுக்கு இவ்வளவு நேரம் ஆகியும் அதிர்ச்சி குறையவே இல்லை.
அவனை பார்த்து சிரிப்புடனே இறங்கிவிட்டாள் மது.
ஹேரி ரிச்சர்ட். அவன் ஆறு வயதுவரை அவனின் அம்மாவும், அப்பாவும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். பிறகு அவன் தந்தை விவாகரத்து செய்துகொண்டு, வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
ஹேரியின் ஒன்பதாவது வயதில் அவன் தாயும் வேறு திருமணம் செய்து கொண்டார். அடுத்தடுத்த வருடங்களில் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரு குழந்தைகள் அவன் அம்மாவுக்கு பிறந்து விட்டார்கள்.
அவன் ஸ்டெப் பாதர் அவனிடமும் நன்றாகத்தான் நடந்து கொள்வார். ஆனால் அவன் மனதில் தனிமையுணர்வு மெல்ல மெல்ல வந்துவிட்டது. அவனின் பதினாறாவது வயதில் குடும்பத்தை விட்டு வெளியில் வந்துவிட்டான்.
குழந்தையிலிருந்தே மிகுந்த புத்திசாலி. அதிலும் கணினித்துறையில் அபார திறமையுடையவன். அப்போதே சிறிய அளவில் ப்ராஜெக்ட் செய்து கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.
அதனால் செலவுகளை சமாளிப்பது பற்றி அவனுக்கு கவலை இருந்தது இல்லை. ஆனால் அவன் மனதில் இருந்த தனிமை, வெற்றிடத்தை போக்குவதற்கு என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.
அந்த வயதில் அவன் நண்பர்கள் பப், டிஸ்கொதே செல்வது, பெண்களுடன் டேட் செய்வது என்று ஜாலியாக இருந்தார்கள்.
இவனும் பப்,பார்ட்டிக்கெல்லாம் செல்வான். ஆனால் டேட்டிங்….ஒரு அளவுக்கு மேல் அவனால் பெண்களின் அருகாமையை சகித்து கொள்ள முடிவதில்லை.
அவர்களிடம் இருக்கும் அதீத ஒப்பனையா, இல்லை வாசனை திரவியத்தின் மணமா, இல்லை அவர்கள் ஆன்மாவின் செயற்கை அழகோ எதோ ஒன்று அவனுக்கு பெண்களை கண்டாலே வெறுப்படைய செய்து விடும்.
அவனின் அழகுக்காவே அவனை டேட் செய்ய கூப்பிடும் பெண்களுடன் சென்றுள்ளான். எல்லோரும் மிகவும் அழகான பெண்களே. அவர்கள் உதட்டு முத்தத்திற்காக இவனை நெருங்கும்போதே இவன் பத்தடி தள்ளி வந்துவிடுவான்.வெறுத்து போகும் அந்த பெண்கள் இவனைக் கண்டபடிப் பேசியிருக்கிறார்கள். மருத்துவரிடம் போக சொல்லியிருக்கிறார்கள்.
இவனின் நண்பர்கள் கூட, நீ ஆண்களுடன் ரிலேஷன்ஷிப் ட்ரை செய் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவனுக்கு அவனின் உணர்வுகள் புரியும் அல்லவா.
இவனும் மனநல மருத்துவரை சந்தித்திருக்கிறான், கவுன்சிலிங் சென்றிருக்கிறான். தீர்வுதான் கிடைத்ததில்லை. ஆகையால் ஹேரி தனது நேரங்கள் எல்லாவற்றையும் கணினியை சுற்றியே இருக்குமாறு பார்த்துக்கொண்டான்.
அவனின் அதீத கணினி காதலால் ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் கம்பெனி, நிறைய கிளைகளை உருவாக்கி, ஹச் ஒய் டெக் சாம்ராஜ்யமாக வளர்ந்திருக்கிறது.
ஹேரியின் HY Tech இப்பொழுது சிட்னி,பெர்த்,மெல்பர்ன்,பிரிஸ்பேர்ன் ஆகிய பெரு நகரங்களில் இன்று கிளைகள் விரித்திருக்கிறது.
இவ்வளவு ஏன் நம் மதுவின் சென்னை கம்பெனியும் ஹச் ஒய் டெக்கின் கிளைன்டே. ஆகையால் தற்போது மது ஆஸ்திரேலியாவில் வேலை பார்ப்பதும் ஹச் ஒய் டெக்கின் மெல்பெர்ன் பிராஞ்சில்தான்.
சென்ற வருடம்தான் , ஹச் ஒய் டெக் பெயரில் கணினி மற்றும் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்திருந்தான்.
அவனை பார்த்துதான் நம் மது திருடன் என்று சொல்லாமல் சொல்லி வந்துவிட்டாள்.
ஹேரி ரிச்சர்ட் இன்று ட்ரைனில் ஏறும்போது என்னவென்று வரையறுக்க முடியாத மனநிலையில் இருந்தான். தனிமை, துக்கம், விரக்தி, வருத்தம் என்று எல்லாம் கலந்த மனநிலையில் இருந்தான்.
ஏன் என்றால் அவன் தாய்க்கு இன்று இறுதி சடங்கு. நெஞ்சு வழியில் இறந்து விட்டதாக அவனுக்கு செய்தி. அவனின் ஸ்டெப் பாதர்தான் அவனுக்கு கால் செய்திருந்தார்.
அவனின் தாயை உயிரோடு சென்ற வருடம் நியூ இயர் அன்று சந்தித்திருந்தான். இப்பொழுதும் கணவர் மற்றும் மகளுடன் ஒன்றாகத்தான் வசித்து வந்தார். பையன் மட்டும் தனியாக சென்று விட்டிருந்தான்.
அவன் தாயின் மகளும், இவனுக்கு தங்கையுமான அந்த பெண் ஒலிவியா வந்து இவன் தோளில் சாய்ந்துகொண்டாள். பதினாறு வயதிருக்கலாம்.
முன்பு தாயுடன் பார்த்தபோதெல்லாம் அவளிடம் பேசியதில்லை. சின்னதாக சிரித்திருப்பான் அவ்வளவுதான். அதற்கே அந்த சிறு பெண் அவளிடம் ஆறுதல் தேடுகிறாள். தாயை அடிக்கடி பார்த்திருக்க வேண்டுமோ?
என்ன செய்திருக்க வேண்டும் நான், இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் புரியாத மனநிலையில்தான் தாயின் இறுதி கூட்டத்தில் இருந்து கிளம்பியிருந்தான்.
அவன் வந்த காரை அவன் நண்பனும், அஸ்சிஸ்டன்டுமான ஜானிடம் கொடுத்துவிட்டு இவன் ட்ரைனில் ஏறிவிட்டான்.
மது ட்ரைனில் ஏறும்போதே பார்த்து விட்டான். அவனை முதலில் கவர்ந்தது அவள் உதட்டருகே இருந்த மச்சம் தான். இப்பொழுதுதான் மச்சத்தை செயற்கையாக வைத்து கொள்கிறார்களே, அவ்வாறுதான் இருக்கும் என்று கண்டு கொள்ளாமல் திரும்பிவிட்டான்.
பிறகு அவள் ஓவர்கோட்டை நீக்கும்போது தான் பார்த்தான் அவள் பின்னலை. இவ்வளவு முடியா என்று.
தொடர்ந்து அவளை கவனித்ததில் அவளின் துரு துரு கண்ணும், குண்டு கன்னங்களும் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை.
அவள் அந்த கர்ப்பிணி பெண்ணுக்காக சோர்வோடு நின்று கொண்டிருந்ததை பார்த்ததும் அவன் மனம் கனிந்துவிட்டது.
இந்தியர்கள் வாழ்வியல், கலாச்சாரம் வித்தியாசமாக இருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறான்.
நாம் நம் தாயையே ஒரு வருடமாக சென்று பார்க்கவில்லை. இவள் யாரோ ஒரு தாய்க்காக, தன் சிரமத்தையும் பார்க்காமல் நின்று கொண்டிருக்கிறாளே என்ற அக்கறையில்தான், அவளிடம் நாகரிகம் பார்க்காமல் தானாக சென்று பேசினான்.
(வருவாள்…)
error: Content is protected !!